Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நீங்கள் என்ன சொல்வது உங்களை போல அனுரகாவடிகளை அடையாளம்காட்டுபவர் என்ற தொப்பியை நான் விரும்பி எடுத்து அணிகிறேன். அருச்சுனாவுக்கு வழி இல்லாமல் போட்ட என்னை பார்த்து சிரிக்கும் உரிமை அனுர காவடிகளுக்கு இல்லை.
  2. அதே போல் இது ரஸ்யா கைவிட்ட கடற்படைதளத்தை இஸ்ரேல் தாக்கி அழிக்கும் காட்சியாம். ரிக்டரில் 3.0 அளவு பதிவானதாம்.
  3. ரஸ்யா கைவிட்ட இரு படைதளங்களை சில நாட்கள் கழித்து அமேரிக்கா எடுத்து கொண்டதாம்.
  4. இந்த பேட்டியின் நகலை அல்லது வீடியோவை இணைத்தால் - தொடர்ந்து அது ஆதாரமா இல்லையா என அனைவரும் பேட்டியை வாசித்து விட்டு அல்லது பார்த்து விட்டு கருத்து எழுதலாம். இப்படி மொட்டையாக எழுதினால் -செல்லாது…செல்லாது.
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்🛐
  6. நீங்கள் சொல்வதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. நானும் சுமார் 2 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்துள்ளேன். ஆனால் நான் சொன்னது இலங்கை, இந்திய சராசரி மனிதர்களின் வாழ்க்கையை பற்றி. வாழ்க்கை சுட்டெண், கூடியது இலங்கை, ஆனால் பொருளாதார வாய்புகள் கூடியது இந்தியா. இது கிட்டதட்ட சுவிஸ்சில் வாழ்தல், அமேரிக்காவில் வாழ்தல் இடையான வித்தியாசம் போன்றது. தனி மனித அபிலாசைகள் வேறுபடும். பல இந்தியர்களும் இலங்கையில் சட்டவிரோதமாக வந்து இருக்கிறார்கள். ஆனால் எது வாழ சிறந்த இடம் என்றால் - இலங்கைதான் என்பார்கள் பெரும்பான்மையான இலங்கையர்.
  7. இதைதான் நானும் மேலே சொன்னேன் - நீங்கள் சரத்பொன்சேக்கா உதாரணம் காட்டிய போது. ஆனால் அப்போது அப்படி செய்ய புலிகளுக்கு சில தந்திரோபாய தேவைகள் இருந்தன. காங்கிரஸ்காரர் அதுவும் சீமானின் பிறப்பையே கேவலமாக பேசியவர், ஒரு குழந்தையின் கொலையை கொண்டாடியவர் - இவர் செத்த வீட்டுக்கு நேரில் போய் அஞ்சலி செலுத்தி அப்படி என்ன உலக மகா தந்திரோபாயத்தை சீமான் அடையப்போறார் என சொன்னால் நாமும் அறியலாம். உங்களில் பலரது நிலமை இவ்வளவு கவலைகிடம் என்பது தெரிந்ததுதான். நாளைக்கு காங்கிரஸ் அமைச்சரவையில் சீமான் இணைந்தாலும் கவலைபட மாட்டேன் என்பீர்கள். தலைக்கு மேல் வெள்ளம் போன பின் சாண் ஏறினால் என்ன முழம் ஏறினால் என்ன.
  8. இளங்கோவன் யார்? காங்கிரஸ்காரர். புலிகளின் பரம எதிரி. சோனியா பக்தர். தெலுங்கு வம்சாவழியினர். இவரும் சீமானும் எந்த இனத்தின் அல்லது எந்த கொள்கையின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபட முடியும்? வேண்டு? அதுவும் உயிரோடு இருக்கும் போது போய் சந்தித்தால் கூட பரவாயில்லை. செத்த பின் இளக்கோவன் பிணத்தோடு என்ன அரசியலை செய்யப்போகிறார் சீமான்? இப்படி எழுதும் போது உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா? தமிழ் நாட்டில் இளங்கோவனை மிஞ்சிய ஒரு காந்தி-நேரு குடும்ப அடிமையை காட்ட முடியாது. பாலச்சந்திரன் பற்றி இளங்கோவன் கூறிய மோசமான கருத்துக்கு காரணமே புலிகள் ரஜீவை கொண்டதுதான். அந்தளவு புலிகள் எதிர்பாளர் அவர். அவரின் செத்த வீட்டுக்கு போபவரைத்தான் நீங்கள் காங்கிரசை எதிர்க்கும் போர்வாள் என்கிறீர்கள்.
  9. இந்த விபத்து நடந்த அன்று என் தந்தை ஹட்டனில் இருந்தாராம். மீட்புப் பணியின் இரெண்டாம் அடுக்கில் தாம் இணைந்து கொண்டதாக சொல்லியுள்ளார். பின்னர் ஒரு பயணத்தின் போது வாகனத்தை இந்த வழியாக விட்டு, இடங்களையும் காட்டினார். அந்த காலத்தில் இலங்கையின் ரெக்கோர்ர்ட்டில் அதிக அளவான மக்கள் இறந்த நிகழ்வுகளில் ஒன்று இதுவென சொன்னார்.
  10. புலிகளை மட்டும் அல்ல, ஆதரவாளர் குடும்பங்களை தேடி, தேடி வேட்டையாடிய பிரேமச்சந்திரனை கூட்டமைப்பில் சேர்த்து, எம்பியாக்கி, அருகில் நின்று போட்டோவும் எடுத்தார் தலைவர்! ஏன்….இன ஒற்றுமைக்காக இந்த கயவர்களையும் மூக்கை பிடித்த படி அணைக்க வேண்டி இருந்தது. சாணாக்ஸ்சினை பற்றிய எமது மக்களின் நிலைப்பாடும் இதுவே. ஆனால் சீமானுக்கு இனத்தின் ஒற்றுமைக்காக இப்படி இளங்கோவனை அணைக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை. 🤣
  11. ஏன்….புலிகள் கூட அமிர்தலிங்க்கத்தை சுட்டு விட்டு அதன் போது அதிஸ்டவசமாக தப்பிய சிவசிதம்பரத்தை புனர்வாழ்வுக்கு பின் புலிக்கொடி போட்டு இறுதியாத்திரை அனுப்பி வைத்தனர் இல்லையா? நீங்கள் மேலே சொன்னவை எல்லாம் - உள்ளதில் நல்ல கெட்ட தெரிவு எது என்பதை கையறு நிலையில் இருந்த மக்கள் எடுத்த முடிவு. சீமானுக்கு அப்படி அல்ல. அவர் இளங்கோவன் மரணத்தை கண்டுகொள்ளாமல் போயிருந்தால் கட்சிக்கோ, கொள்கைக்கோ, மக்களுக்கோ எந்த சேதாரமும் வந்திராது.
  12. என்ன கேப்பில கொண்டெயினர் லொரி ஓட்டுறியள்? நான் விமர்சித்தது - உங்களை போல அனுரவுக்கு காவடி தூக்கும் ஆட்களை. அருச்சுனாவுக்கு நானே மானசீக தேர்தலில் வாக்கு போட்டேன். அனுரவுக்கு வாக்கு போட்டவர்களையும் விமர்சிக்கவில்லை. அருச்சுனா அணியில் மயூரன் போல நம்பிக்கையானவருக்கு போட்டிருக்கலாம் என்றே எழுதினேன்.
  13. மிக்க நன்றி ரஞ்சித். யாழில் நீண்ட விளக்கம் கொடுக்க கூடிய மிக அரிதான கருத்தாளர்களில் நீங்களும் வழவனும் அடக்கம். உங்களை ஏன் @ பண்ணினேன் என்பதை வழவனுக்கான பதிலில் காண்க🙏. நான் போட்ட ஜெய்ஹிந்தின் அர்த்தம் அநேகமாக அனைவரும்கும் விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். அதுதான் முழு நேர மேற்கு எதிர்ப்பு பிரச்சாரகர்களின் உண்மையான கபட நோக்கம். ஏனையவர்களின் பிரச்சனை வேற. அவர்கள் நல்லவர்கள். ஆனால் எமக்கு நடந்த பிழைக்கு மேற்கு மட்டுமே தவறு என்பது போல் அவர்களை புல் டைம் காரர் மூளை சலவை செய்கிறார்கள். அதுதான் நீங்கள் சுட்டிய அளவுக்கு கொள்கை பிறழ்வு ஏற்பட காரணம். அதே போல் எப்போதும் ஒரு hero worship இல் இருந்து இவர்களுக்கு பழகிவிட்டது. அதனால்தான் தலைவருக்கு பின், சீமான், புட்டின் என அலைகிறார்கள். உப்பு கல்லும் வைரமும் ஒன்றென கருதி. இவர்களை போலவே முழு புலம்பெயர் சமூகத்தையும் மந்தைகள் ஆக்கி விடலாம் என்பதுதான் புல்டைம் காரர்களின் திட்டம். பார்க்கலாம்…. We are fighting a good fight, keep at it👍 இது எம்போன்றோருக்கு சரி… ஆனால் சம்பளத்து வேலை செய்பவர்கள் சதா அதே விடயத்தை எழுதி கொண்டே இருக்க வேண்டும்… அல்லது டெல்லியில் இருந்து கோல் வரும்🤣
  14. ரைட்டு….உங்களுக்கும் வெம்புது ஆனால் வலிக்காத மாதிரியே நடிக்கிறீர்கள்… பார்ப்போம் எத்தனை வருடங்களுக்கு இப்படி…. உள்ள அழுகிறேன்….வெளிய சிரிக்கிறேன்…நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்கிறேன் என்று இருக்கப்போகிறீர்கள் என. ———- கடந்து போயிருக்கலாம்…. செய்தே ஆக வேண்டும் என்றால்…. இரங்கலை சுருக்கமாக ஒரு டிவீட்டுடன் முடித்திருக்கலாம்…. எவன் செத்தாலும் அதை வைத்து பிண-அரசியல் செய்யும் அண்ணனுக்கு - இறந்தது இந்த இனத்தின் வஞ்சகன் என்பது கூடவா தெரியவில்லை.
  15. இலண்டன் ல அக்கவுண்டன் வேற
  16. உங்கள் இருவருக்கும் மனம் வெம்புகிறது… ஆனால் அதை பொது வெளியில் ஒத்து கொள்ள ஈகோ விடுகுதில்லை என்பது உங்கள் கருத்துக்களிலேயே தெரிகிறது… @புலவர் மனநிலையும் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். @வீரப் பையன்26 என்ன புதிய, அரிய வகை முட்டுடன் வரப்போகிறார் என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன்🤣. ————- கவுன்சிலிங் உதவி தேவை எனில் நான் தயார். முன்பு சம்-சும்-விக்கி யை ஆதாரித்து பின் நிலைமாறிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாம்🤣. பிகு சீமானின் இந்த செயல் அவர் எப்படிபட்ட பச்சோந்தி என அறிந்தோருக்கு எந்த வியப்பையும் தராது.
  17. அப்படி பெரிய அழகனா @Nathamuni நாதம்ஸ்?🤣
  18. என்னையா இது? ********* தன் தலைவனை பில்டப் பண்ணி ஒரு செய்தியை போட்டால் - அதற்கு அடுத்த பின்னூட்டத்தில் வந்து இப்படி ஒரு ஓவியத்தால் அத்தனையையும் கிழித்து தொங்க விடுவீர்கள்களா 🤣. இது முறையா? தர்மம்தானா?🤣 பார்ப்போம் இவரும் சும் சாணக்ஸ் போல போய் பாலிமெண்ட்டுக்கு வெளிய நிண்டு போட்டோ எடுத்து போடுறாரா என. சந்திப்பு நடந்தால் இருதரப்பு அறிக்கை, படம் வரும்.
  19. இரு மருங்கிலும் காணியை விடவில்லை, 600 யார் வீதியை மட்டும் விட்டார்கள். அப்போதும் காணி உரிமையாளர் அனுரவுக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் வரவில்லை என்பதையும் எழுதினேன். என்ன குதி குதித்தீர்கள்… வோட்டு போட்ட மக்களை திட்ட வேண்டாம்…. அனுர இப்போதான் வந்துள்ளார்… நல்லெண்ண சமிக்ஞை….தேங்காய் என்ணை சமிக்ஞை என….. இதுதான் அவர்கள் எப்போதும்.
  20. ஏன் எவராவது ஒரு சிங்கள இனவாதியை தூக்கி பிடிக்காட்டி உங்களுக்கு இரவில் நித்திரை வராதா? எவரையும் இல்லை. ஓம். ஆனால் அவர் அதிகாரத்தில் இல்லை. சாணாக்ஸ் குரல் கொடுக்கத்தான் வேண்டும். முன்பு பலதுக்கு போராடியும் உள்ளார். ஆனால் அவர் போராடமட்டுமே முடியும். அதிகாரத்தில் உள்ள அனுரவும் என் பி பி யும் ஒரு நொடியில் இதை முடிவுக்கு கொண்டுவரலாம். நான் எங்கே இதை வேண்டாம் என்றேன்? அனுரவை கேள்வி கேட்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, யாழ் போன்ற இடங்களில் அவரை தூக்கி தலையில் வைத்து ஏன் ஆடுகிறீர்கள் எண்டுதான் கேட்கிறேன்.
  21. இதுவரை இந்தியாவை புறம் தள்ளுவோம் என கூறி கொண்டிருந்த முண்ணனியினர் இப்போ ஆக்கபூர்வ பங்களிப்பை கோருவது நல்ல நிலை மாற்றம். வரவேற்கிறேன். தமிழ் தேசிய கட்சிகளிடம் பொது நிலைப்பாட்டு எட்டப்பட இப்படியான நெகிழ்வு போக்கு அவசியமாகிறது.
  22. இதை கொஞ்ச காலம் தொழிலில் இருந்தால்தான் அறியமுடியும். சிலமயம் தொழில் செய்யும் இடத்தில் ஆட்கள் கூட்டமாக வந்து…ஏய்…வாய்யா வெளியே…என கூச்சல் போடுவார்கள்… அப்போ எதுவும் நடக்காத மாதிரி மிக்சர் சாப்பிடவேண்டும். அதேபோல்…எப்போ யார் என்ன சொன்னார் என்ற வரவு செலவு ரெக்கோர்ட்டை மறக்காது மெயிண்டேயின் பண்ண வேண்டும்🤣.
  23. சின்மயி சர்ச்சை நேரம் தாங்களும், நாதமும் டயமண்ட் பேர்ளை என்னமா தாங்கினீர்கள் என எண்ணிப்பார்த்தேன்… கண்கள் வியர்த்து விட்டன 🤣
  24. இருவர் தான் முழு நேரம். நீங்களும் @தமிழ் சிறி அண்ணாவும் பார்ட் டைம்🤣. தமிழ் சிறி அண்ணா முந்தி புல் டைம், பிறகு சுமந்திரனையும் அடிக்கும் வேலை இருப்பதால் இரெண்டையிம் பார்டைமா செய்றார்🤣. எதை வைத்து சொல்கிறேன்? யாழுக்கு வந்தால் யார் உலக நடப்பு திரியையே வளைய வருகிறார்கள், மற்றும் எழுதும் கருத்துகளில் மேற்கை எதிர்த்து எழும் கருத்துக்களின் அண்ணளவான சதவீதம் என்பவற்றை வைத்து. இது எல்லோரும் செய்வதுதான். எனக்கு சீமானை அடிப்பது முழு நேரத்தொழில். ஓவர் டைம் பேசிசில் அனுரவையும் அடிக்கிறேன்🤣. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அஜெண்டாவோடுதான் எழுதுகிறோம். சிலது நேர்மறை அஜெண்டா, சிலது எதிர்மறை அஜெண்டா என்பது என் பார்வை. என் பார்வையோடு நீங்கள் உடன் படவேண்டிய அவசியம் இல்லை. நான் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். உங்களுக்கு அது அதீத கற்பனையாக படலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.