Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. வந்திருப்பது சகோதரயாக்களின் ஆட்சி… அவர்களுக்கு market forces என்றாலே நவதுவாரங்களிலும் “எரியுதடி மாலா”தான். ஆகவே இது கொஞ்சம் சிக்கலாக போகும் போலத்தான் இருக்கு. பாடசாலை சீருடையை தைத்து வழங்கல்…. 12 வயதுக்கு கீழ் விளம்பர படங்களில் நடித்தல் ஆகாது என கொஞ்சம் கொஞ்சமாக தம் நனைத்துச் சுமக்கும் பொருளாதார அணுமுறையை புகுத்துகிறார்கள்.
  2. இவை எல்லாம் யாழில் பல வருடங்கள் முன்பே எதிரும் புதிருமாக பலமுறை விவாதிக்கப்பட்ட விடயங்கள் வல்லவன். உங்களை விட யாழில் வீரியமாக எழுதிய பலர் - இப்போ அனுரவிற்கு கொஞ்ச காலம் கொடுப்போம், எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதிருப்போம், இனவாதத்தை கட்டுப்படுத்த பயங்கரவாத சட்டம் வேண்டும் என்ற அளவிற்கு இறங்கி வந்து விட்டார்கள். இதுதான் 87 இல் எடுத்த சாதுரியமற்ற முடிவுகள் இலங்கையில் தமிழ் தேசிய அரசியலை, திம்பு கோட்பாட்டை கொண்டு வந்து விட்டுள்ள இடம். 2009 இன் பின் வந்த, வருகின்ற ஒவ்வொரு வருடமும், 87 இல் ஒரு இனமாக நாம் எந்தளவு பெரிய தவறை இழைத்தோம் என்பதை ஒவ்வொரு படி அதிகரித்தே காட்டி போகிறது. மண்டியிடாத வீரமும், விட்டு கொடாத கொள்கை பற்றும், குடும்பத்தையும் காவு கொடுத்த வீரமும் இன்ன பிற செயற்கரிய பண்புகளும் எவ்வளவு உண்மையோ அதே போலத்தான், நண்பர்கள் யாருமற்ற ஒரு சின்னம் சிறிய இனத்தின் தலைவருக்கு அத்தியாவசியமான நெகிழ்வுபோக்கு இல்லாமல் இருந்தது என்ற உண்மையும். இதை சொல்லும் பாங்கில் முரண்படலாம். செய்தியில் அல்ல.
  3. ஐலண்ட் தனக்கான வக்காலத்தை வாங்குவார். வாங்காது விடுவார். அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் இங்கே மாவீரர்களோ, போராளிகளோ அவமானப்படுத்தபட்டதாக எனக்கு தெரியவில்லை. 87 இலும் அதன் பின்னும்….இந்திய வல்லாதிக்கத்தை நாம் கையாண்ட முறை நையாண்டிக்கு ஆளாகியது. அது கூட கையாண்ட தலைவர் மீதான நையாண்டி அல்ல. அணுகுமுறை மீதான நையாண்டியே.
  4. கச்சதீவில் இரு பகுதி மீனவரும் வலை உலர்த்த அனுமதி உள்ளது. அதே போல் திருவிழாவுக்கு வழமையான விசா நடைமுறைகள் இன்றி அனுமதிக்கும் முறையும் இருக்கிறது. இந்தியன் பாஸ்போர்ட் மற்றும் இலங்கை வீசா இல்லாமல் இந்தியர்கள் கச்சதீவுக்கு வந்து போகலாம். இவை எல்லாம் கச்சதீவு உடன்படிக்கையின் அங்கங்கள். ஏலவே இருக்கும் இந்த உடன்படிக்கையின் பிரகாரம், இந்திய மீனவர்களை இலங்கை நேவி, கச்சதீவில் வைத்து இந்திய நேவியிடம் கையளிக்கலாம். முன்னர் இப்படி கையளித்த சம்பவங்கள் நடந்துள்ளது என நியாபகம்.
  5. என்ன நியாயம் இது, சுமந்திரனோட கோவிச்சு கொண்டு கால் கழுவாமல் இருப்பதா🤣. நமக்குத்தானே மணக்கும்🤣. சொறி வரும்🤣. மாகாணசபை தேர்தல் வேண்டும். சுமன் தன் அடிப்பொடிகளை பாவித்து அதில் கேட்க முனைந்தால் - சிறி அதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர் என்ன தமிழரசு கட்சி தலைவரா இல்லை மிக்சர் மாமாவா எண்ட கேள்வி எழும். அதுவும் முடியாவிட்டால்….சிறி, கஜேஸ், செல்வம், விக்கி அணி இணைந்து ஒரு பலமான தேர்தல் கூட்டை அமைத்து, சுமன், அனுர இருவரையும் தோற்கடிக்க வேண்டும். சுமனை சாட்டி கொண்டு இவர்கள் காலம் தாழ்துவதை, பிரிந்து நிற்பதை இனியும் ஏற்க முடியாது.
  6. டக்கிளஸ் பஸ்சை கடலுக்குள் இறக்கினதுக்கு என்ன பலன் கிடைத்தது என யாருக்கும் தெரியுமா? ———— இலங்கை நேவியை பாரிய எடுப்பில் வடக்கு கடலில் இறக்கி வரும் ஒவ்வொரு டிரோரலையும் எல்லையில் வைத்து திருப்பி அனுப்பலாம். உள்ளே வந்தவற்றை கைப்பற்றி ஏலம் விடலாம். ஆட்களை ஒரு தீங்கும் செய்யாமல் கச்சதீவில் இரு நாட்களுக்கான உலர் உணவுடன் இறக்கி விட்டு விட்டு, வந்து கூட்டி போகும் படி இந்தியன் நேவிக்கு அறிவிக்க வேண்டும். 15 வருடம் சும்மா தண்டமா சோறு போட்டு வளக்கும் இலங்கை நேவிக்கு இது ஒரு ஆக்கபூர்வமான வேலையாக இருக்கும்.
  7. கடவுள் பற்றி கமல் சொன்னதுதான். இல்லை எண்டு சொல்லவில்லை…. இருந்தா நல்லா இருக்கும் எண்டுதான் சொல்றேன்…. ஆனா இதுவரைக்கும் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
  8. இது ஏற்க கூடியதே ஆயினும், இதனால் மிகவும் ஏழ்மையில் உள்ள ஊர்களில் உள்ள டெயிலர்களின் வருமானம் பாதிக்கும். ஆனால் தைப்பதற்க்கான செலவை அரசு பெரிய நிறுவனங்களுக்கு (சீருடை சப்ளையர்) கொடுக்கும். இது ஏழை டெயிலரிடம் எடுத்து பணக்கார கம்பெனியிடம் கொடுக்கும் வேலை. இதை விட தைப்பதற்குரிய காசை பெற்றாரிடம் வவுச்சர் முறையில் கொடுக்கலாம். மிக முக்கியமாக எல்லோருக்கும் ஏன் இலவசமாக கொடுக்க வேண்டும் ? இலங்கையில் கொழும்பில் 10 வீடு வாடகைக்கு விடும் செல்வந்தரின் பிள்ளையும் இலவசமாக சீருடை எடுக்கும். இதை means test அடிப்படையில் கொடுக்கலாம். ஏலவே மஹாபொல இப்படிதான் கொடுக்கப்படுகிறது.
  9. இந்த முறைதான் என நான் முன்பு நினைத்தேன் (என் முதலாம் பதிவு)… ஆனால் @குமாரசாமி அண்ணை அப்படி இல்லை என்கிறார். இந்த முறையும் வினை திறனானது அல்ல - ஏன் என்பதை என் முதல் கருத்தில் எழுதியுள்ளேன். ஜனவரி 1 முதல் - 12 வயதுக்கு கீழானவர்கள் விளம்பரத்தில் நடிக்க அடியோடு தடையாம். ஆபாசமாக உடுத்த கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை - ஒட்டு மொத்த தடை! இனிமேல் பேபி ஷெரமி, பம்பர்ஸ் விளம்பரங்களில் எல்லாம் அனுர வைத்தான் நடிக்க வைக்க வேண்டும் 🤣. https://colombotimes.lk/SRI-LANKA-BANS-CHILDREN-UNDER-12-IN-ADS.html
  10. 1. உள்ளே இருந்தபடியே பிள்ளையான் வென்றார். முன்னர் சந்திரசேகரனும் சிறையில் இருந்தே பாராளுமன்றம் போனார், வருடக்கணக்கில். ஆகவே பிள்ளையானை விசாரணைக்கு அழைத்ததெல்லாம் ஒரு காரணமில்லை. 2. ஜேவிபியில் கேட்டவர்கள் தமிழரும் இருந்தனர். ஒருவர் வென்று எம்பி ஆகி உள்ளார். ஆகவே இங்கே இன்னொரு தமிழரை தேர்த்திருக்கலாம் (விருப்பு வாக்கு) 3. அல்லது சஜித் அணியில் ஒரு தமிழருக்கு போட்டிருக்கலாம். 4. மட்டகளப்பில் மக்கள் சாணக்கியனின் செயல்பாட்டின் அடிப்படையில், தமிழ் தேசிய கொள்கை அடிப்படையில் தமிழரசுக்கு போட்டனர். இதுதான் உண்மை. உங்கள் அண்ணர் தம்பியின் பொழப்பில் மண் விழும் என்பதால் மக்கள் தீர்ப்பை தவறாக வியாக்கியானம் செய்ய வேண்டாம்.
  11. ஆனுர பிரிகேட் அப்போ எதிர்த்த “சுமந்திரன் வரைபின்” அடிப்படையில்தான் அனுரவும் தீர்வை அணுகுவார்? @satan போன்ற சுமன் எதிர்ப்பு ஆனால் ஆனுர ஆதரவு ஆட்களுக்கு டெலிக்கேட் பொசிசன்🤣. அதில் இருந்த கொஞ்ச நஞ்ச அதிகார பகிர்வும் கந்தல்? ஒட்டு மொத்த சிங்கள மக்களும் ஏற்கும் தீர்வு - இதில் காணி பொலிஸ் அதிகாரம் தமிழருக்கு பகிரபடின் - நானே என்பிபி ஆதரவுக்கு மாறுவேன்🤣 வெறும் வார்த்தை ஜாலம். தமிழ் மக்கள், சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள், மூவரதும் எதிர்பார்ப்பும் ஒன்றல்ல. இவர் ஒன்றே என நடிக்கிறார். அனுரவுக்கு அவகாசம் கேட்கும் குரூப்பில் நீங்கள் இல்லையா? உங்கட தோஸ்த்து - பயங்கரவாத தடை சட்டம் அவசியம் எண்ட ரேஞ்சுக்கு இறங்கீட்டார்.
  12. அப்படி அடிச்சி கொண்டு சாகாமல் ஒற்றுமையாக இருந்துவிட்டால்…. என்ற நப்பாசை எனக்கு…. பயம்…..யாருக்கு என்பதை வாசகளிடம் விட்டு விடுகிறேன்🤣 ரேணுக எந்த சட்டத்தில் கைதானார்?
  13. பயங்கரவாத தடைசட்டம் நீங்கள் சொல்வது போல் எந்த இனவாதி மேல் அனுர அரசால் பாவிக்க பட்டது என்பதை சொல்ல முடியுமா?
  14. அவசரப்பட்டு ஆரூடம் கூறுகிறீர்கள். அரிசி, வெங்காயம் இல்லாமல் ஒரு ஐந்து வருடம் பொறுத்து கொள்ள முடியாதா உங்களால்?
  15. புத்தரின் போதி மரம் போல ஜனாதிபதி மாளிகையில் புதிதாக ஏதும் முளைத்திருக்க கூடும், அதன் கீழ் இருந்தபடியால்… நேற்றுவரை இனவாதியாக இருந்தவர் இன்று இனவாதத்தை துறந்து விட வாய்புள்ளது. அப்படியா?
  16. @putthan ஏன் அவசரம்? கள்வனின் மனித உரிமையையும் மதிக்கும் மனு நீதி கண்ட அனுரனின் ஆட்சி இது. ஒரு ஐந்து வருடம் பொறுங்கள்…பெயர் வெளியிடப்படும்.
  17. அதாவது இனவாதிகளிடம் இருந்து தமிழர்களை பாதுகாக்க பயங்கரவாத தடை சட்டம் அவசியமாகிறது🤣🤣🤣. சாத்ஸ் உங்கள் அக்கவுண்டை யாரேனும் ஹேக் செய்து விட்டார்களா🤣. ப.வா.த.ச வுக்கு இப்படி ஒரு முட்டு கொடுப்பை சரத் வீரசேகரா கூட கொடுத்ததில்லை🤣.
  18. அண்ணை, இப்போ இருக்கிற சிஸ்டம் - குறித்த அளவு துணி எல்லோருக்கும் வழங்கப்படும். அதை அவர்கள் தேவைக்கேற்ப தைத்து போடுவார்கள். ஒரு பாடசாலையில் 100 மாணவர் என்றால். அதற்குரிய துணியை விநியோகஸ்தர் டிலிவர் பண்ணி விட்டு போய்கிட்டே இருப்பார். மாணவர்கள் இதை பெற்று வீட்டில் கொடுக்க, அங்கே அவர்களோ, அருகில் இருக்கும் டெயிலரோ தைப்பார்கள். இது மிகவும் வினைதிறானன முறை. இதில் ஊழல் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அப்படி ஊழல் செய்தாலும் மிக இலகுவாக நிறுத்த முடியும். சரி நான் மேலே சொன்ன விதமாக அன்றி நீங்கள் சொன்ன கடைகளில் விற்கும் முறையை பின்பறினாலும்.. இனி சத்தோச போன்ற கடைகளில் இதை போய் தகுந்த அளவுக்கு பெற்று கொள்ளலாம்? தனியார் கடைகளில் இப்படி பெற முடியாது ஏனினெல் அங்கே ஊழல் மீண்டும் எழும். கூடவே இலாபம் இல்லாமல் அவர்கள் இதை தம் கடையில் வைக்கப்போவதில்லை. இல்லை என்றால் இதை விற்பதற்கு அரசு தனியார் கடைகளுக்கு காசு கொடுக்க வேண்டும். மேலும்…யாழ்மாவட்டத்தில் எத்தனை சத்தோசக உள்ளன? அங்கே உள்ள பொருட்களின் தரம் என்ன? அங்கே பொருட்களின் கையொருப்பு (stock) எப்படி இருக்கும் என நீங்கள் கேட்டறிந்தால் - இது ஏன் சரியான செயல் அல்ல என விளங்கும். ஒரு நெடுந்தீவு மாணவன் சீருடை வாங்க, பெற்றார் சகிதம் யாழ் டவுணுக்கு போக வேண்டும். முன்பு என்றால் துணி பாடசாலைக்கு வரும். அங்கேயே உள்ள டெயிலர் தைத்து கொடுப்பார். வெளிநாட்டை பற்றி சொல்லி இருந்தீர்கள். நாம் இங்கே கடைக்கு போய் உடுப்போ அல்லது எமது பிள்ளைகளின் சீருடையோ வாங்குவது முழுக்க முழுக்க சந்தை பொருளாதார அடிப்படையில். ஒரு வெள்ளை பள்ளிகூட சேர்ட் இலண்டனில் 5 பவுண்ஸ் எனில் ஸ்கொடலாந்தின் தீவு ஒன்றில் அது 8 பவுண்ஸ்சாக இருக்கும். ஆனால் இலங்கையில் சீருடைகளை அரசு மானியமாக கொடுக்கிறது. ஆகவே விலையை கூட்டி, விநியோகத்தை விரிவாக முடியாது. அல்லது ஆமி பொலிஸ் போல அரசே விநியோகத்தை நடத்த வேண்டும். அப்படி என்றால் கல்வி திணைக்களம் இதற்கென ஒரு தனி யுனிட்டையே உருவாக்க வேணும். அதற்கு ஆள் அம்பு சேனை என பலமடங்கு செலவாகும். பிகு சிலசமயம் சிறைக்குள் இருந்து பார்த்தால் வெளியில் இருப்பவர்கள் சிறையிருப்பது போல தோன்றுமாம். #நாலு சுவர்🤣
  19. இருந்தால் குடைய மாட்டனா🤣. பாப்பம் @zuma போல் யாரும் சிங்களம் வாசிக்க முடிந்தவர்கள் விடயத்தை தெளிவுபடுத்தக்கூடும்.
  20. இது நடைமுறைச்சாத்தியமா? ஒவ்வொரு பிள்ளை ஒவ்வொரு சைசில் இருக்கும். யார் அளவு எடுப்பார்கள். ஆசிரியர்கள்? அளவு எடுத்து அதை துணி விநியோகிஸ்தருக்கு அனுப்பி… அதை அவர் வெட்டி… மாணவரிடம் வந்து சேர மாணவன் ஒரு சுற்று பெருத்திருப்பான்🤣. கொஞ்சம் கொஞ்சமாக கம்போடியாவின் பொல்பொட் வகை பனிகுணங்களை ஜேவிபி காட்டத்தொடங்கிறது போல தெரிகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.