Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. எனது அவதானிப்புகள் 1. அருச்சுனா பேசியதில் எந்த வித பிழையையும் என்னால் காண முடியவில்லை. எழுதிய உரை மிக நேர்த்தியாகவே உள்ளது. 2. அதிகாரப்கிர்வு, மாகாணசபை போன்றவற்றை பேசவில்லை. இனி வரும் காலங்களில் பேச வேண்டும். 3. பேசும் போது ஆங்கில உச்சரிப்பு ரொம்பவே டல்லடிக்கிறது. ஆனால் உரையை அவரே எழுதி இருப்பார் போலவே உள்ளது. எழுதிய உரையில் இலக்கண பிழைகள் இல்லை, பொருத்தமான, கனதியான சொற்களை அவற்றின் பொருள் அறிந்து பொருத்தமான இடங்களில் பாவிக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் - இந்த உரையை இவரே எழுதி இருந்தால் - ஆளிடம் விசயம் இருக்கிறது, presentation இடறுகிறது என்பதை சுட்ட. யாரும் எழுதி கொடுத்து இருந்தால் தக்கவர்களிடம் ஆலோசனை எடுக்கிறார். அதுவும் நல்லதே. 4. தலைவரை பெயர்சொல்லாமலும், விஜயவீரவை பெயர் சொல்லியும் - இருவரையும் நினைவு கூர்ந்தது சிறப்பான சம்பவம். One man’s terrorist is another’s freedom fighter என்பதை மிக தெளிவாக சொல்லி உள்ளார். 5. காணாமல் போனோர் பற்றி கூறும் போது என் தந்தையே காணாமல் போனார் என்பது பர்சனல் டச். அதுவும் இலங்கை பொலிஸான அவர், 83 இல் இருந்து எப்படி காவல்துறை ஆளாகினார் என்பதையும் சொல்லி சென்றார். 6. புலம்பெயர் மக்களை உள்வாங்க வேண்டும், காணிகள் மீள கையளிக்கபட வேண்டும் என அவர் பல உடனடி விடயங்களை பேசினார். 7. வடமாகாண மக்களின் வீழ்ந்துவிடாதன்மையை தன் மருத்துவ பீட வழக்கோடு சேர்த்து - நாம் தோற்றவர்கள் அல்ல என கூறிச்சென்றார். இந்த வழக்கில் சுமந்திரன் உதவியதை நினைவு கூர்ந்தது வழமையான நன்றி மறக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் இருந்து வேறு பட்டு காட்டியது. 8. 65% கொடுக்கலாம். 9. ஒரு எம்பியாக தூதுவராலயங்கள் பார்ட்டிகள், இதர இடங்களில் இதே செய்தியை எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக நான் கட்சி சார்ந்தவன் அல்ல, தனி மனிதன். மக்களின் குரல் என்ற ரீதியில்.
  2. புஞ்சி அம்மேக்களின் கண்களுக்கு சகோதரயா என்றும் அழகந்தான் போலும்🤣. ப்ரோ வாட் இஸ் திஸ்? 🤣 ரதி அன்ரி எப்பவும் தரவு பிழை விடுவா…நீங்களுமா🤣
  3. இன்னும் உரையை பார்க்கவில்லை. வீட்டில் பனடோல் கையிருப்பில் இல்லை. இனி போய் வாங்கி வந்து 2 போட்டபிந்தான் பார்ப்பேன்🤣.
  4. ஆப்பு சொருக மாட்டோம் என நான் கூறவில்லை, வசிலீன் பூசும்வரை சொருகமாட்டோம் என்றே கூறினேன். இது சம்பந்தர் ஐயா தீபாவளிக்கு கொண்டு வந்த தீர்வை விட பெரியதாக இருக்கும் என நினைக்கிறேன். தூக்க நல்ல திடகாத்திரமான ஆட்கள் தேவைபடக்கூடும்.
  5. பார் புகழும் வள்ளலை… நான் புகழ முடியாமல்… நாவை கட்டிப்போட்டதே.. நான் செய்த சத்தியம்…..🤣 பார்…இறைவா…பார்…பார். இந்த அநீதியை பார். இது ஒரு போதும் வராது அதானே
  6. அவர்கள் முன்னாள் போராளிகள் முன்னால் தலைவர்கள் அல்ல. வெளிநாட்டில் கூட கொடி பிடிப்பது எதிர்மறை விழைவை தரும்போது, ஊரில் விபுமமு வை மீள உயிர்பிப்பது எல்லாம் தேவையா என்ன. என்னை கேட்டால், 1990 இற்கு பின் பிறந்தவர்கள்தான் இனி முன்னுக்கு வர வேண்டும். அவர்கள் தேசியத்தை விட்டுகொடாதவர்களாயும், இலங்கைக்குள் வாழ இஸ்டப்படுபவர்களாயும் இருக்க வேண்டும்.
  7. கூரையை பிரித்து பதவி விலக வைக்கப்பட்டவர் இராசநாயகம் என நினைக்கிறேன். ஈழவேந்தனுக்கு பொட்டம்மான் அடித்த ஆப்பை இந்த கட்டுரை தெளிவாக சொல்கிறது. மிக அரிதாக, பக்கம் சாரா, தரவு நேர்தியான கட்டுரை தமிழில். போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு குப்புற படுப்பதில் எல்லோருக்கும் முன்னோடி ஐயா ஈழவேந்தந்தான்🤣. இதற்கு அவர் தயாராக இல்லை என நினைக்கிறேன். ஆனால் என் கணிப்பில் அவர் ஒரு good backroom staffer ஆக இருப்பார் என்றே நினைக்கிறேன். Shop floor ற்கு வராமலே விட்டிருந்தால்… பட்டாசுகளுக்கு அவரை பற்றி பெரிய கவலை எழுந்திராது, அவரும் வாயால் கெட்டிருக்க தேவையில்லை.
  8. புலிகள் பலமாக இருக்கும் போது அவர்களையும்… பிள்ளையான் பலமாக இருக்கும் போது அவரையும்…. அனுர பலமாகும் போது அவரையும்…. ஆதரிக்கும்… நேக்கு தெரிந்து இருந்தால் எந்த நாட்டிலும், அக்கினியை என்ன அணுகுண்டையே பெயரில் ஏத்தி கொண்டு பிதுங்காமால் வாழலாம்🤣. பகிடிதான் ரென்சன் வேண்டாம்.
  9. சரி…நம்புவது உங்கள் இஸ்டம். ஆனால்….. எமக்கு எதிரான யுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றியதில்லை. என்பதும்… எமக்கு எதிரான யுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றினாலும் இப்போ நல்லவர்களாக மாறிவிட்டனர் என நான் நம்புகிறேன் என்பதும் ஒன்றல்ல. இதை சுட்டுவது மிகமுக்கியம். ஏன் எண்டால் 2009 க்கு பிந்திய தலைமுறை இப்படியான கதைகளை உண்மை என நம்புகிறது.
  10. ஓம் நீங்கள் சொல்வதுதான் சரியாக இருக்கலாம் என நினைக்கிறேன். தேடிப்பார்க்க வேண்டும். வடிவாக நியாபகம் இல்லை, ஆனால் தீர்வு திட்டம் வரையும் போது தான் இனத்தின் பிரதிநிதி அல்ல என்ற நிலைப்பாட்டில் அவர் இருந்தார் என நியாபகம். இதனால்தான் பதவியை இராஜினாமா செய்தாரோ? ஓம்…சுமந்திரன் இதோடு நின்று அந்த வேலையை மட்டும் செய்திருக்கலாம் என்பதையே நான் சொல்கிறேன். தேவையில்லாமல் வாக்கு அரசியலில் இறங்காமல். ஆனால் பின்கதவு விமர்சனத்துக்கு தொடர்ந்தும் ஆளாகி இருப்பார்.
  11. எப்போதும் இருந்ததில்லை. புலிகள் மட்டுமே அதற்கு தடையாக இருந்தனர் எனில்: புலிகள் அழிந்த பின் அப்படி ஒரு தீர்வை சிங்களவர் தட்டில் வைத்து சம்பந்தன் போன்ற ஏக்கிய இலங்கை தலைவரிடம் கொடுத்திருப்பார்கள். இன்று அதை அனுரா தரலாம். With or without tigers, பேரினவாதம் ஒரு போதும் ஒரு தலைமுடியளவு அதிகாரத்தை கூட உங்களுக்கு தராது. இதுதான் யதார்த்தம். போராடுவதே ஒரே வழி. எந்த வகையான போராட்டம் என்பதே கேள்வி.
  12. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாமே ஐலண்ட் 🤣. புலிகள் காணாது என்றும்… பிக்குகள் ரொம்பவே ஒவர் எண்டும்… அந்த திட்டத்தை பப்படம் ஆக்கி இருப்பார்கள். சாகும் தறுவாயில் நீலன் இந்த கசப்பான உண்மையை ஏற்கும் மனநிலைக்கு வந்து இருந்தார் என அறிகிறேன்.
  13. நான் 👆இதை பற்றி எதையும் கதைக்கவில்லையே? எம்மீதான போருக்குக்கும் இன்றைய ஜேவிபிக்கும் சம்பந்தமில்லை என ஒரு உலக மகா உருட்டை தட்டி விட்டீர்கள், அதுதான் சில ஆதரங்களை தூக்கி போட்டேன்.
  14. அந்த ஜேவிபியின் பொது செயலாலர் யார் ? மேலே நான் தந்த கட்டுரையில் உள்ள லால்காந்த அப்போ ஜேவிபியில் என்ன பதவியில் இருந்தார்? அப்போ அனுர என்ன பதவியில் இருந்தார்? அவர்களை இயக்கியது ரோ…
  15. நானும் எல்லாத்தையும் மறக்க தயார்…ஆனால் 13 ஐயாவது முழுமையாக அமல்படுத்த வேண்டும். செய்வார்களா? மேலே உங்களுக்கு ஐ ஆர் ஏ, சின்பெயின் உதாரணம் தந்தது இதை விளக்கவே. புலிகளின் முடிவின் பின் புதிய ஒரு புலிகள் சம்பந்தபடா சிவில் அமைப்பை ஸ்தாபித்து இருக்கலாம். ஒரு காலத்தில் புலிக்கொடி பிடித்தார்கள் என்பதல்லாம் பெரிய விடயமல்ல.
  16. https://www.tamilguardian.com/content/end-ceasefire-kick-norway-out-jvp-tells-rajapakse Senior Janatha Vimukthi Party (JVP) member K D Lalkantha said only his party and one other led by extremist Sinhala monks are responsible for defeating “separatist terrorism” as he boasted of “ending” the island’s conflict “through war,” a day after Tamil Genocide Remembrance Day. https://www.tamilguardian.com/content/jvp-boasts-ending-separatist-terrorism-tamils-commemorate-genocide
  17. ரோகண விஜே வீரவின் இலங்கை போல்பொட்டின் கம்போடியா போலவே இருந்திருக்க வாய்புகள் அதிகம். இரெண்டு வருடத்தில் அவர்கள் ஆட்சியில் இல்லாமல் ஆனால் அதிகாரம் படைத்து இருந்த காலத்திலேயே, அவர்களால் மேலே போன, மேற்குக்கு போன சிங்கள புத்திசீவிகள் எண்ணிக்கை மிக அதிகம். ஆட்சிக்கு வந்திருதால்… ஓம் வந்தது துவாரகாவேதான். ரோ நாடகம் ஆடவில்லை🤣 என்னிடம் காலயந்திரம் இல்லை. ஆனால் அவர்கள் ஒரு அரசியலை முன்னெடுக்க சொல்லித்தான் சரணடைய அனுப்பபட்டார்கள்.
  18. பார்க்கலாம்….பாலா அண்ணையை தவிர உலக ராஜதந்திரிகளிடம் பெரிய பெயர் எடுத்தவர் எண்டு எவரும் இல்லை. சுமந்திரன் தன் இராஜதந்திர தொடர்பை அப்படி வெளிகாட்டி இருந்தால் - நம் இனம் ஒரு படியாவது முன் நோக்கி போயிருக்கும். ஓட்டாவா பாராளுமன்றத்துக்கு வெளியே நிண்டு போட்டோ போட்டதெல்லாம் நினைவில் இருக்கிறது. அடிக்கடி போனதால் முகம் தெரிந்திருக்கும்தான். ஆனால் தேர்தலில் தோற்றால் அதை இன்னொருவர் பிரதியிடுவார் என்பது இராஜதந்திரிகள் வழமையாக எதிர்பார்ப்பதுதான். நமது நிலைப்பாட்டை ஆங்கிலத்தில் எடுத்து சொல்ல, கஜனும், சாணாக்ஸும் போதும்.
  19. நீலன், சுமந்திரன் ஒப்பீடு ஒரு அளவுக்கு மேல் சரிவராது. நீலன் தன்னை தமிழர் பிரதிநிதி என அடையாளம் காட்டவில்லை. அமெரிக்க ராஜாங்க அமைச்சின் ஆசியோடு, சந்திரிக்கா கேட்டு, அரச எம்பியாகி ஒரு தீர்வை வரைய முயன்றார். நீலன் விடயத்தில் கூட, நீலனைத்தான் புலிகள் விவேகமின்றி சாவடித்தானர், ஆனால் அவரின் தீர்வு திட்டத்தை சாவடித்தது பிக்குகள். ஆனால் சுமந்திரன் அப்படி அல்ல. அவர் தமிழர் பிரதிநிதி என தன்னை முந்தள்ளியவர். இவருக்கான கடமை, பொறுப்பு வேறு. மக்கள் பிரதிநிதிக்கும், தொழில்நுட்ப வல்லுனருக்கும் உள்ள இடைவெளி இது. சிலவேளை இப்படி ஒரு தொழில்நுட்ப வல்லுனராக இருப்பதுதான் சுமந்திரனின் calling ஆக இருக்க கூடும், பிழையாக தேர்தல் அரசியலுக்குள், கட்சி தலைமைதுவத்துக்குள் வந்துவிட்டார்.
  20. இதில் சங்கடம் எதுவும் இல்லை. அரசியல் என்பதே இவ்வாறான விடயங்கள் நிறைந்து இருக்கும் களம்தான். சுமந்திரன் கூட ஒரு தேர்தல் (அவர் முதற்தடவை வென்ற தேர்தல் என நினைக்கிறேன்) வர இரு நாட்களுக்கு முன் பிரபாகரன் மாவீரன் என ஸ்டண்ட் அடித்தவர்தான். அது மட்டுமா, விதைத்த வயலை உழுதது, நல்லாடட்ட்சி நேரம் அனுர என்னை பிரதமர் ஆக முன்மொழிந்தார் என சொல்லி ஜேவிபியிடம் மூக்குடைந்தது, இப்படி ஒரு வழமையான நாலாம் தர அரசியல்வாதி போலவே சுமந்திரனின் 2019 பின்னான அநேக நடவடிக்கைகள் இருந்தன. ஆகவே சுமந்திரன் எப்போதும் வெள்ளந்தியாக பேசும் மனிதர் அல்ல. ஒரு வக்கீல் அப்படியானவராக இருப்பார் என நினைக்கும் நாம்தான் வெள்ளந்தி மனிதர்களாக இருக்கிறோம். என்னை பொறுத்தவரை சுமந்திரன் - இரு காரணிகளால் தோத்தார். ஒன்று நான் மேலே சொன்ன வாக்களாரிடம் நம்பிக்கை இழந்தது. யாழில் தமிழரசுக்கு விழுந்த வாக்கில் கணிசாமனதை கூட விருப்பு வாக்கில் அவரால் பெறமுடியவில்லை. உதாரணமாக என்னை அல்லது @கிருபன் ஜி யை எடுங்கள். நாம் புலம்பெயர் மொக்கு கூட்டத்தை அடியோடு வெறுப்போர். அவர்களின் கஞ்சா, கப்ஸா கதைகளை ஒரு போதும் நம்பாதோர். நாம்தான் சுமந்திரனின் prime target base, மானசீக வாக்கெடுப்பில் எம்மையே அவரால் தக்க வைக்க முடியவில்லை. இதுதான் ஊரிலும் நடந்தது. இரெண்டாவது - வழமையாக சுமந்திரனை தேர்வு செய்த கணிசமான வாக்காளர் இம்முறை என்பிபி, டாக்டர் சிறிபவாநந்தராஜா என போய்விட, அதை செய்ய முடியாதவர்கள், அருச்சுனாவுக்கு போட்டுள்ளனர்.
  21. உண்மைதான்…. என்ன செய்வது ஐலண்ட் …..இனி போய் நீலனை கூட்டி வர முடியாது. தலைவரையும் கூட்டி வந்து செய்தது பிழை என ஏற்றுகொள்ளவைக்கம்முடியாது…. இப்படியே எவ்வளவு காலம்தான் மாறி மாறி பழைய கறள் கதைகளை கதைச்சு கொண்டே இருக்க போறம்.
  22. நிச்சயம் முன்னேறலாம்…. நான் இப்போ இந்த முறையில் முன்னேற முடியாது என்று எங்கும் எழுதவில்லை. 1970, 80களில் ஜேவிபி உருவாக்க முனைந்த நாடு இந்தவகை நாடு இல்லை என்றே சொன்னேன்.
  23. சீனாவில் இப்போ இருப்பது கம்யூனிச ஆட்சி அல்ல. மாவோ தொடங்கி- தியன்மென் படுகொலை நடந்த 1988 வரை அங்கே நடந்தது தான் கம்யூனிச ஆட்சி. அதன் பின் அங்கே நடப்பது, ஒரு கட்சி, அதிதீவிர முதளாலிதுவ ஆட்சி. 1988 க்கு பின்புதான் சீனா பொருளாதாரத்தில், வர்த்தகத்தில் பெருமளவில் முன்னேற தொடங்கியது. இலங்கை சனநாயக, சோசலிச குடியரசு என்பது பெயர் ஆனால் அங்கே சனநாயகமும் இல்லை, சோசலிசமும் இல்லை, அது குடியரசு கூட இல்லை அது ஒரு மறைமுக பெளத்த தியோகரசி. இதே போலத்தான் இப்போ சீன கம்யூனிச கட்சியும். பெயரில் மட்டுமே கம்யூனிஸ்ட்.
  24. நீங்கள் கல்வியை பற்றி எழுதியதால். அருச்சுனா Medical Admin - masters படித்துள்ளார், அதற்கு முன் அடிப்படை வைத்தியர் படிப்பை படித்துள்ளார் என நினைக்கிறேன். சுமந்திரன் மட்டும் என்னவாம்? இலங்கையில் பல்கலைகழக சட்ட பீடம் செல்லும் வகையில் ஏ எல் சோதனையில் அதி கூடிய வெட்டு புள்ளி எடுத்தவரா? இல்லை. அவர் திருச்சபையின் தயவில் இந்தியாவில் ஒரு சாதாரண பி எஸ் சி யாகத்தான் ஆரம்பித்தார். பின்னர் இலங்கை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பு, பின்னர் மொனாஷில் ஒரு வருடம் மாஸ்டர்ஸ் (நினைவில் உள்ளதை வைத்து எழுதுகிறேன்). ஆக அவரும் ஒன்றும் பிறவி ஜீனியஸ் இல்லை. அது தேவையுமில்லை. உண்மையிலேயே நீங்கள் நினைப்பது போல் அவருக்கு அரசியல் அமைப்பில் அப்படி ஒரு சட்ட தேர்ச்சியும் இல்லை. ஷிராணி பண்டாரநாயக்க, வடக்கு கிழக்கு இணைப்பு இப்படி அவர் பங்குகொண்ட அரசியலமைப்பு வழக்குகளில் எனக்கு தெரிய எல்லாமுமே தோல்விதான். கஜனோடு ஒப்பிடும் போது அவர் ஒரு நல்ல லோயர் என்பது சரியே. ஆனால் இவரை விட்டால் வேறு வழியில்லை என்ற அளவுக்கு அவர் ஒன்றும் ராம் ஜெத்மலானி இல்லை. ராம்ஜெத்மலானியோ, எந்த தனி மனிதனோ அப்படி பெரிய அப்பாடக்கர் இல்லை. தவிரவும் அரசியல் அமைப்பு அறிஞர்கள் கட்டாயம் எம் எம்பிகளாக இருக்க வேண்டுமா? ஜெரி அடம்ஸ், நெல்சன் மண்டேலா, காந்தி, இவர்கள் எவருமே புகழ் பூத்த வக்கீல்கள் இல்லை. அரசியலமைப்பு நிபுணர்களும் இல்லை. ஆனால் எதிர் துருவ அரசியலில் இருந்தாலும், காந்தி/நேரு அம்பேத்கரின் சேவையை பெற்று கொண்டனர். இதுதான் சரியான அணுகுமுறை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.