Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. மிக சரியான பார்வை. மாவாட்டும் சபை….மன்னிக்கவும் மாவட்ட சபைதான் கிடைக்கப்போகிறது. அதையே டில்வின் போன்றோர் எதிர்க்க எதிர்க்க, மீட்பர் அனுர பிரான் பெரும் பிரயத்தனப்பட்டு வழங்கினார் என முடிப்பார்கள். எங்க பிரிகேட்டுகளும்…மாவட்டம் தந்த மஹா பிரபு என அனுர காலில் விழுந்து பிரளுவார்கள். தேசிய இனம் என்பதோ, காணி உரிமை என்பதோ எவரும் கேட்காதபடி, ஒரே இலங்கையர் கோசம் காதை பிளக்கும். இப்படி எம்மை மட்டகளப்பு, யாழ்பாணம் தேர்தல் தொகுதிக்குள் அடக்கிய பின், குடியேற்றம் அரச, தனியார் முறைகளில் துரிதப்படுத்த பட்டு, இந்த மாவட்டங்களுக்குள் நாம் முடக்கப்படுவோம். யாரும் எதிர்த்து கேட்டால், இனவாதி, பிரதேசவாதி, Xenophobe .
  2. ஓம் அண்ணா நீங்கள் சொல்வதில் மாற்று கருத்து இல்லை. யாழ்கள அனுர படையணி தளபதியின் கருத்தை அறியவே அந்த கேள்வி.
  3. 🤣 இதுவாவது பரவாயில்லை. அங்கால அண்ணன் சீமானை, துரைமுருகனை எல்லாம் தம்பிகளே விமர்சிக்க வெளிக்கிட்டார்கள். இனி யாழில் வந்து “காசி யாத்திரை போகும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்” என்ற வகையில் எழுதினால்தான் பொழைக்க முடியும் போல இருக்கு🤣. 🤣 எல்லாரும் நாட்டாமை எல்லோ…அப்படித்தான் இருக்கும்🤣 ஓம் அண்ணை. இதில் ரணில் போன்ற இனவாதிகளுக்கு இரெட்டை இலாபம். 1. இலஞ்சம் கொடுத்து ஆதரவையும் பெற்றாயிற்று. 2. இனி நாம் பையில் போட்ட எலிகள் போல இதைவைத்தே அடிபடுவோம். கவனித்தேன். ——— நன்றி
  4. 🤣. நாளைக்கு வந்து கட்டாயம் பச்சை குத்துவேன் ஐயா. வேற லெவல் கார்ட்டூன். மாட்டினால் சந்தோசம். அப்போதும் எம்பிகள் பொய்குற்றசாட்டு, வழக்கு போடுவேன் என சொல்லிவிட்டு கடந்து போய்விடுவார்கள். ஏலவே எம்பி ஒருத்தர் இப்படி ஒரு அறிக்கை விட்டு, அதை யாழிலும் ஒருவர் காவித்திரிகிறார். பணபரிமாற்றம் அல்லது குறுஞ்செய்திகள் என தக்க ஆதாரத்தோடு மாட்டினால்தான் உண்டு. இல்லை என்றால் ஆதாரம் இருக்கா? என பழைய டிவி விளம்பரம் மாதிரி எம்மையே திருப்பி கேட்பார்கள்🤣.
  5. மாவீரர் நாளுக்காக பயங்கரவாத சட்டத்தில் கைதாகிய இரு தமிழர்கள் மற்றும் இலண்டனில் இருந்து போய் விமான நிலையத்தில் கைதான தமிழர் திரியில் உங்கள் தலை கறுப்பையும் காணவில்லை. இவற்றில் உங்கள் நிலைப்பாடு என்ன?
  6. செய்யலாம்…ஆனால் பார் உரிமையாளர்கள் ஏன் எம்பியை மாட்டி விட போகிறார்கள்? சிபாரிசு மூலம்தான் பெற்றேன் என சொன்னால் இலஞ்சம் கொடுத்த வகையில் அவர்களுக்கு பிரச்சனை. அதே போல் லைசன்சும் காலியாகும். ஆகவே நான் வழமை போல அப்பிளை பண்ணினேன் கிடைத்தது என்று சொல்வதே அவர்களுக்கு சேப்டி. ஓம்…. இதில் செய்தவன் செய்யாதவன் எல்லாரையும் அடிக்கலாம். அடிக்க முடியாத ஒரே ஆட்கள் முந்தைய 3 ஜேவிபி எம்பிகள் மட்டுமே. ஆகவே இதை ஜேவிபி நல்லா இழுத்து இழுத்து படம் காட்டும். அதே போல் நாமும் எமக்கு விருப்பமில்லாத எம்பியை குற்றம்சாட்டியபடியே எமக்கு விருப்பமான எம்பி, ஆதாரம் கேட்டார் இல்லையாம் என பபா மாதிரி யாழில் எழுதி இன்பம் அடையலாம் 🤣.
  7. ஆங்கில சொல் salary - லத்தின் சொல்லான salarium த்தில் இருந்து வருகிறது. இந்த லத்தின் சொல்லின் அர்த்தம் மாதாந்த கொடுப்பனவு. Salarium என்பது லத்தின் சொல்லான Sal இல் இருந்து வருகிறது. Sal இன் அர்த்தம் உப்பு. ஒரு காலத்தில் மாதசம்பளமக பணமன்றி உப்பே கொடுக்கப்பட்டதா நம்பபடுகிறது. இதே போல் Sal இற்கு வேலை செய்த வீரகள்தான் Soldiers எனவும் சொல்லப்படுகிறது. உப்பு மனித ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். உப்பு அளவாக இல்லாதவிடத்து தசை பிடிப்பு ஏற்படும். இதை பேச்சு வழக்கில் குறண்டல் என்போம், எனக்கு விளையாடும் போது அடிக்கடி வரும். அதே போல் குறை இரத்த அழுத்தம் வந்து ஆளை கவிட்டும் விடும். எல்லாமும் அளவோடு தேவை. உப்பிட்டவரை உள்ளவரை நினை🤣
  8. கிளிநொச்சி பகுதி பிந்தங்கிய பகுதி என்பதால் 16 பெர்மிட்டை போராடி பெற்றுள்னர் என நினைக்கிறேன்.
  9. இதுதான் குற்றச்சாட்டின் சாராம்சம். ரணில் அரசை மகிந்தவின் ஆட்கள் கவிழ்க்க முயன்றாலும், கவிழாதபடி ஏந்தி பிடிக்க என கடந்த பாராளுமன்றத்தில் எதிர் கட்சி வரிசையில் இருந்த எம்பிகளுக்கு ஒரு அட்வான்ஸ் இலஞ்சம் வழங்கப்பட்டதாம். இதற்கு கடிதமோ வேறு எந்த ஆதாரபூர்வ சிபாரிசுமோ தேவை இல்லையாம். குறித்த எம்பிகள் கைகாட்டும் ஆள், வழமை போல் அனுமதியை கோர வேண்டும், அவருக்கு தடங்கல் இன்றி அனுமதி கிடைக்கும். அனுமதிக்கான இலஞ்சத்தை பார் உரிமையாளர் எம்பிக்கு செட்டில் செய்வார். எம்பி ரணிலுக்கு விசுவாசமாக இருப்பார். எங்கோ ஒரு லேப்டப்பில் ஏதோ ஒரு ஸ்பிரெட்ஷீட்டில் யார் யாருக்கு சிபாரிசு செய்தார் என்ற தகவல் இருக்கலாம். ஆனால் அது அனுர அரசின் கையில் கிட்டுமா? கிட்டினாலும் அதுதான் உண்மையான லிஸ்ட் என எப்படி நம்புவது? ஆகவே இதில் எந்த எம்பியையும் கையும் களவுமாக பிடிப்பது கஸ்டம். ஒன்றில் ரணில், அல்லது அவர் சார்பில் சிபாரிகளை டீல் செய்தவர் சொல்ல வேண்டும், அல்லது சிபாரிசு கொடுத்த எம்பிகள் சொல்ல வேண்டும். விக்கி ஒரு சிபாரிசு செய்ததை ஏற்றுகொண்டுள்ளார்.
  10. நீ முந்தினா நோக்கு, நான் முந்தினா நேக்கு எண்டு பாரதியார் சும்மாவா சொன்னாரு🤣.
  11. இது நான் நினைக்கிறேன் சுய பாஷாவினால் ஏற்பட்ட குறை என. கொழும்பு, பேரா தவிர ஏனைய பல்கலைகழக மருத்துவ, பொறியல் மாணவர்கள் கூட இப்படி பேச்சு ஆங்கிலத்தில் தடுமாறுவதை கண்டுள்ளேன். ஆனால் ஒரு சில வருடம் வெளிநாட்டில் இருந்த பின் நல்ல முன்னேற்றமாக இருக்கும். அதே போல் சுயபாசவுக்கு முந்திய தலைமுறையில் ஒரு லிகிதரிடம் இருந்த ஆங்கில திறனும், நிர்வாக இயலுமையும் இப்போ ஒரு மாவட்ட அரச அதிபரிடம் கூட இல்லை. இதில் இவர்களை பிழை சொல்ல முடியாது. கல்வி கொள்கை வகுப்பாளர் விட்ட பிழை. ஒரு காலத்தில் மலேசியா, நைஜீரியாவுக்கு ஆங்கில ஆசிரியர்களை ஏற்றுமதி செய்த நாடு. இப்போ மறுபடியும் ஆங்கிலத்துக்கு முக்கியம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
  12. அண்ணை நீலன் தனியே எழுதவில்லை, எழுதுவதில் முதன்மையாய் இருந்தவர் பேரா ஜி எல் பீரிஸ். இதன் முதலாவது வரைபு ஒரு உன்னதமான வரைபு. ஆனால் அது வந்ததுமே பெளத்த இனவாதிகள் தாம் தூம் என குத்தித்து, அதை எதிர்த்தார்கள். அதன் பின் உப்பு சப்பில்லாத இன்னொரு வரைபு வந்தது. அதை அப்போ புலிகளின் ஹிட் லிஸ்டில் இருந்த கூட்டணி கூட ஏற்கவில்லை. பின்னர் ஜீ எல் பீரிசும் பக்கா அரசியல்வாதியாகி இனவாதம் பேச தொடங்கி விட்டார். —— சுமந்திரனின் வரைபும் ஜெயம்பதி விக்ரமரட்ன என்ற சிங்களவர், இணைந்து, ரணில், சந்திரிகா, சம்பந்தர், ஆனுர போன்றோரின் ஆசியுடந்தான் எழுதப்பட்டது. ஆக இங்கே எழுதுபவர்கள் யாராக இருந்தாலும் - அதிகாரம் தமிழருக்கு பகிரபடுவதே பிரச்சனையாகிறது. 13ம் திருத்தம், எழுதி, சட்டமாகி உள்ளது. அதை அமல்படுத்த வேண்டியது தன் கடமை என்ற அளவுக்கு ரணில் வாயால் வடை சுட்டார். ஆனால் யாரும் அமல்படுத்தவில்லை. பாராளுமன்ற தேர்தல் நேரம் @ஈழப்பிரியன் அண்ணாவுக்கு ஒரு பின்னூட்டத்தில் இதை சொன்னேன். இதுதான் ஜேவிபியின் நகர்வாக இருக்க போகிறது.
  13. என்னையா நடக்குது இங்க 🤣
  14. 21 வயசுக்கு மேல் எவனும் கம்யூனிஸ்ட் இல்லை. 31 வயசுக்கு மேல் எவனும் நாம் தமிழர் உறுப்பினர் இல்லை என்பது சரி வரும் போல இருக்கே? ஆனால் நீங்கள் pass out ஆகி வெளியே வந்தாலும், அண்ணனுக்கு அடுத்த intake தயார். பையன் வெளியே, ராஜன் அம்மான் உள்ளே 🤣.
  15. நீங்களே இப்படி எழுதினா நான் லைக்சுக்கு எங்கே போவேன் பையா🤣 வைகோ… இத்தாலிய புரட்சியாளன் கரிபால்டி….பாலைவன சிங்கம் ஓமர் முக்தார் என தரவு பிசகாமல் period film ஓட்டுவார்… அண்ணன் சிம்பிளா….ஆமை ஓட்டில் Finding Nemo காட்டி மக்களை கவர்ந்து விடுவார்🤣.
  16. நிலாந்தன் போன்ற வாய்வாளர்களை, தமிழ் அரசியல்வாதிகள், புலம்பெயர் புள்ளிகள் எல்லோரையும் விட அருட்தந்தைக்கு சீரிய அரசியல் பார்வை இருக்கிறது.
  17. எனது அவதானிப்புகள் 1. அருச்சுனா பேசியதில் எந்த வித பிழையையும் என்னால் காண முடியவில்லை. எழுதிய உரை மிக நேர்த்தியாகவே உள்ளது. 2. அதிகாரப்கிர்வு, மாகாணசபை போன்றவற்றை பேசவில்லை. இனி வரும் காலங்களில் பேச வேண்டும். 3. பேசும் போது ஆங்கில உச்சரிப்பு ரொம்பவே டல்லடிக்கிறது. ஆனால் உரையை அவரே எழுதி இருப்பார் போலவே உள்ளது. எழுதிய உரையில் இலக்கண பிழைகள் இல்லை, பொருத்தமான, கனதியான சொற்களை அவற்றின் பொருள் அறிந்து பொருத்தமான இடங்களில் பாவிக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் - இந்த உரையை இவரே எழுதி இருந்தால் - ஆளிடம் விசயம் இருக்கிறது, presentation இடறுகிறது என்பதை சுட்ட. யாரும் எழுதி கொடுத்து இருந்தால் தக்கவர்களிடம் ஆலோசனை எடுக்கிறார். அதுவும் நல்லதே. 4. தலைவரை பெயர்சொல்லாமலும், விஜயவீரவை பெயர் சொல்லியும் - இருவரையும் நினைவு கூர்ந்தது சிறப்பான சம்பவம். One man’s terrorist is another’s freedom fighter என்பதை மிக தெளிவாக சொல்லி உள்ளார். 5. காணாமல் போனோர் பற்றி கூறும் போது என் தந்தையே காணாமல் போனார் என்பது பர்சனல் டச். அதுவும் இலங்கை பொலிஸான அவர், 83 இல் இருந்து எப்படி காவல்துறை ஆளாகினார் என்பதையும் சொல்லி சென்றார். 6. புலம்பெயர் மக்களை உள்வாங்க வேண்டும், காணிகள் மீள கையளிக்கபட வேண்டும் என அவர் பல உடனடி விடயங்களை பேசினார். 7. வடமாகாண மக்களின் வீழ்ந்துவிடாதன்மையை தன் மருத்துவ பீட வழக்கோடு சேர்த்து - நாம் தோற்றவர்கள் அல்ல என கூறிச்சென்றார். இந்த வழக்கில் சுமந்திரன் உதவியதை நினைவு கூர்ந்தது வழமையான நன்றி மறக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் இருந்து வேறு பட்டு காட்டியது. 8. 65% கொடுக்கலாம். 9. ஒரு எம்பியாக தூதுவராலயங்கள் பார்ட்டிகள், இதர இடங்களில் இதே செய்தியை எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக நான் கட்சி சார்ந்தவன் அல்ல, தனி மனிதன். மக்களின் குரல் என்ற ரீதியில்.
  18. புஞ்சி அம்மேக்களின் கண்களுக்கு சகோதரயா என்றும் அழகந்தான் போலும்🤣. ப்ரோ வாட் இஸ் திஸ்? 🤣 ரதி அன்ரி எப்பவும் தரவு பிழை விடுவா…நீங்களுமா🤣
  19. இன்னும் உரையை பார்க்கவில்லை. வீட்டில் பனடோல் கையிருப்பில் இல்லை. இனி போய் வாங்கி வந்து 2 போட்டபிந்தான் பார்ப்பேன்🤣.
  20. ஆப்பு சொருக மாட்டோம் என நான் கூறவில்லை, வசிலீன் பூசும்வரை சொருகமாட்டோம் என்றே கூறினேன். இது சம்பந்தர் ஐயா தீபாவளிக்கு கொண்டு வந்த தீர்வை விட பெரியதாக இருக்கும் என நினைக்கிறேன். தூக்க நல்ல திடகாத்திரமான ஆட்கள் தேவைபடக்கூடும்.
  21. பார் புகழும் வள்ளலை… நான் புகழ முடியாமல்… நாவை கட்டிப்போட்டதே.. நான் செய்த சத்தியம்…..🤣 பார்…இறைவா…பார்…பார். இந்த அநீதியை பார். இது ஒரு போதும் வராது அதானே
  22. அவர்கள் முன்னாள் போராளிகள் முன்னால் தலைவர்கள் அல்ல. வெளிநாட்டில் கூட கொடி பிடிப்பது எதிர்மறை விழைவை தரும்போது, ஊரில் விபுமமு வை மீள உயிர்பிப்பது எல்லாம் தேவையா என்ன. என்னை கேட்டால், 1990 இற்கு பின் பிறந்தவர்கள்தான் இனி முன்னுக்கு வர வேண்டும். அவர்கள் தேசியத்தை விட்டுகொடாதவர்களாயும், இலங்கைக்குள் வாழ இஸ்டப்படுபவர்களாயும் இருக்க வேண்டும்.
  23. கூரையை பிரித்து பதவி விலக வைக்கப்பட்டவர் இராசநாயகம் என நினைக்கிறேன். ஈழவேந்தனுக்கு பொட்டம்மான் அடித்த ஆப்பை இந்த கட்டுரை தெளிவாக சொல்கிறது. மிக அரிதாக, பக்கம் சாரா, தரவு நேர்தியான கட்டுரை தமிழில். போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு குப்புற படுப்பதில் எல்லோருக்கும் முன்னோடி ஐயா ஈழவேந்தந்தான்🤣. இதற்கு அவர் தயாராக இல்லை என நினைக்கிறேன். ஆனால் என் கணிப்பில் அவர் ஒரு good backroom staffer ஆக இருப்பார் என்றே நினைக்கிறேன். Shop floor ற்கு வராமலே விட்டிருந்தால்… பட்டாசுகளுக்கு அவரை பற்றி பெரிய கவலை எழுந்திராது, அவரும் வாயால் கெட்டிருக்க தேவையில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.