Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. ஏன் இலங்கையின் மண்டேலா 2020 தேர்தலை சிறையில் இருந்து கொண்டே வென்ற செம்மல் அல்லவா? அப்படி பட்டவரின் வெற்றியை விசாரணைக்கு கூப்பிட்டது பாதிச்சதாக்கும். தம்பி தோத்துபோனார் எண்ட கவலையில் எமோசனலா எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்🤣. என்னது பழி தீர்ந்ததா🤣🤣🤣. ரணில்தான் இந்த ஊழல் வழக்கில் அக்யூஸ்ட் 1. அவர் சொன்ன மறுப்பை அப்படியே விழுங்கி விட்டீர்கள் நீங்கள்🤣. என்ன எதிர்பார்தீர்கள்? எம்பிகளுக்கு இலஞ்சமாக பார் அனுமதியை கொடுத்தேன் என ரணில் ஓப்புதல் வாக்கு மூலம் கொடுப்பார் என்றா? தமிழருக்குள் ஒற்றுமை தேவை என்பாதால் எல்லாவற்றையும் போத்து மூடினால் என்ன நடக்கும் என்பதை கடந்த காலம் உணர்தியும்?
  2. என்னை பொறுத்த வரை….நான் மேலே சொன்ன காரணங்கள் ஏனைய சிங்கள தலைவர்கள் போலவே அனுர என்பதை காட்டி நிற்கிறது. இதுதான் அனுர பற்றிய தமிழரின் starting point ஆக இருக்க முடியும். அவர் நாட்டில் சட்டதின் ஆளுமையை உருவாக்குவார், ஊழலை ஒழிப்பார், நல்லாட்ட்சி செய்வார் என்பதல்லாம் நல்ல விடயங்களே ஆனால் இவை இலங்கை தேசியம் சம்பந்தபட்டது. தமிழரை பொறுத்தமட்டில் 13 ஐ முழுமையாக அமல் செய்வதே ஆக குறைந்த படி. காணி அதிகாரத்தை தமிழருக்கு பகிர மறுக்கு எந்த சிங்கள தலைவரும் அடிப்படையில் இனவாதிதான். அடுத்த நாலு வருடத்தில் அனுர காணி அதிகாரத்தை தமிழருக்கு பகிர்ந்தால் - அவரை வரவேற்க நானும் தயார். அதுவரை அவரின் கடந்தகால நடவடிக்கை அடிப்படையில் அவரை அணுகுவதே அறிவார்ந்த செயல். Talk is cheap, actions speak louder than words. தன்னை ஒரு இனவாதி என காட்டி கொண்ட அனுரவை அவர் செயலால் இதை மறுதலிக்கும் வரை வெள்ளை அடிக்க, காவடி தூக்க நான் தயார் இல்லை.
  3. உங்களை போல்….. அனுர முள்ளிவாய்க்கால் போரை விரைந்து முடிக்க சொன்ன ஜேவிபியின் தூணாக இருந்தார்…. சமாதான பேச்சை குழப்பிய ஜேவியின் தூணாக இருந்தார்… சந்திரிக்கா அரசில் கபினெட் அமைச்சராக இருந்து தமிழருக்கு ரணில் ஒரு இஞ்சியும் கொடுக்க விடக்கூடாது என வலியுறுத்தினார்…. வடக்கு-கிழக்கை வழக்கு போட்டு பிரித்த ஜேவிபியின் தூணாக இருந்தார் … இதுவரை இந்த பிழைகள் எதற்கும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை, பிழை எனவும் ஏற்கவில்லை, என தெரிந்தும் அனுரவுக்கு காவடி எடுக்கும், வெள்ளை அடிக்கும் ஆள் அல்ல நான். @satan
  4. கிழிஞ்சுது கிருஸ்ணகிரி…. 1. நான் புலிகள் சாரா அமைப்பை உருவாக்கி இருக்க வேண்டும் என சொன்னது எஞ்சிய தமிழர்களை. நாம் ஒரு நெடிய வரலாற்றை கொண்ட இனம். எமக்கு ஒரு இனமாக எமக்கு சுயநிர்ணய அபிலாசை இருக்கிறது. அதை அடையும் எம் முயற்சி புலிகள் கண்டு பிடித்ததல்ல. புலிகளுக்கு 30 வருடம் முன்பே இதற்கான குரல் எழும்பி விட்டது. புலிகள் இடையில் வந்தார்கள், தமக்கு தெரிந்த வகையில் முயன்றார்கள். அவர்கள் முடியும் போது - அவர்கள் முறையையோ, பெயரையோ இனி தொடரமுடியாத அளவுக்கு ஆகி விட்டிருந்தது. ஆனால் அவர்களின் பின்னும் நாம் ஒரு இனமாக இருக்கிறோம். எமது சுயநிர்ணயத்துக்கான தேவை அப்படியே இருக்கிறது. ஆகவே நாம் ஒரு புலிகள் சாரா அமைப்பை நிறுவி இருக்க வேண்டும். இது புலிகளை மறுதலிப்பதோ, அவமதிப்பதோ அல்ல…நாம் இருக்கும் நிலை பற்றிய யதார்த்தத்தை உணர்ந்து செயல்படல் மட்டுமே. இதுநான் 2013 இல் யாழில் எழுத தொடங்கியதில் இருந்து எழுதி வருவது. 2. அரசு புலிகளை அழித்த போது என்ன சொன்னது? அமிரை கொண்டார்கள், நீலனை கொண்டார்கள் - இவர்கள்தான் தீர்வுக்கு தடை. இவர்களை அழிக்க சர்வதேசமும் தமிழ் மக்களும் உதவினால் - நாம் ஒன்றுபட்ட இலங்கைக்கு 13 plus plus ஐ தருவோம். இது மன்மோகனை வைத்து கொண்டு மகிந்த சொன்னது. நான் இப்போ கேட்பது 13 ++ வர 15 வருடம் ஆகியும் முடியவில்லையா? என்பதையே. ஆகவே இது வழமைபோல ஏமாற்று என்பதையே. எத்தனை காலம் எடுத்தேன்? இந்த நிலைப்பாட்டை நான் அவர் இதை சொன்னார் என செய்தி வந்த திரியிலேயே எழுதினேன். 2015 என நினைக்கிறேன். அப்போ நான் இவரின் அரசியலை ஆதரித்தாலும் - இந்த விடயத்தை இவர் இப்படி பேசி இருக்க கூடாது, சட்ட வரைவிலக்கணப்படி சுமந்திரன் சொல்வது சரி என்றே வைத்தாலும், எமது பிரதிநிதியாக இவர் இப்படி சொன்னது அதிகபிரச்ங்கிதனம் என எழுதினேன். அதன் பின் படிப்படியாக இவரின் போக்கை, இவரோடு வேலை செய்து வெறுத்துப்போனவர்களின் அனுபவங்களை கேட்டு, குறிப்பாக இவரும் விக்கியும் ஆடிய ஈகோ ஆட்டம் என்பவற்றை பார்த்து, இவர் மீதான ஆதரவை 2017 இல் இருந்து விலக்கிகொண்டேன்.
  5. இலண்டனுக்கு சிறி வந்த போது சாரதி போல் வளைந்து நெழிந்து சேவை செய்த, வன்னியில் வசித்த, ஆனால் யாழை பூர்வீகமாக கொண்ட ஒருவரின் உறவினர்களின் பெயரில் ஒரு பார் அனுமதி பத்திரம் கிளிநொச்சியில் வழங்கப்பட்டதாக ஊகம் ரெட்டை கட்டி பறக்கிறது. யார் அந்த பெரு…ச்சாளி பிகு சுமனை போட்டு அடிப்பது, எமனுக்கு கவர் எடுக்கவே🤣
  6. நன்றி சுமா. சிறிதரனின் அடிப்பொடிகளுக்கு பேதி ஆரம்பமாகி விட்டது, யாழ்களத்தில் உங்கள் மொழிபெயர்ப்பு லிஸ்ட் வந்ததுமே🤣. இனி நிக்காம போகும் என நினைக்கிறேன்🤣. பல பெயர்கள் இரெண்டு தரம் எடுத்துள்ளார்கள். விக்கி கடிதம் கொடுத்தது போல ஏனைய எம்பிகளும் கடிதம் கொடுத்திருந்தால் மாட்டுவார்கள் என நினைக்கிறேன்.
  7. ஓம் தகப்பன் பண்டாவுக்கு சிங்களம் பெரிதாக எழுத வாசிக்க தெரியாதாம். புனித தோமையர், பின் ஆக்ஸ்போர்ட், அதன் பின் இன்னர் டெம்பிளில் பாரிஸ்டர் என சிங்களத்தில் சொல்லும் களு சுட்த்தா (கறுப்பு-வெள்ளைகாரன்) அவர். ஆக்ஸ்போர்ட்டின் முதல் ஆசிய மாணவர் சங்க செயலாளர் என நினைக்கிறேன். அதே போல் அத்துலத் முதலி முதலாவது ஆசிய மாணவர் சங்க தலைவர் என நினைக்கிறேன். அனுர கொஞ்சம் மந்த புத்திதான். அஜால் குஜாலிலுல் ஆர்வம் அதிகம். அவர் ஒரு கட்சிக்கு போனால் அது சிலமாதங்களில் எதிர்கட்சியாகும் யோகமும் இருந்தது🤣. தொண்டா, அஷ்ரப், டக்லஸ் அநேக காலம் ஆளும்கட்சி. அதேபோல் அனுர அநேக காலம் எதிர்கட்சி🤣. 78க்கு பின் சிறிமாவின் வாக்குரிமை பறிக்கப்பட்ட பின் சு க வை முழுவதும் அழிந்து விடாமல் காப்பாற்றினார். சந்திரிகா விஜே குமாரதுங்கவை முடித்து, குடும்பம், கட்சி சகலதையும் விட்டு வெளியேறிய பின் தாய்க்கும், கட்சிக்கும் பலமாக இருந்தார். குமாரதுங்க, பிரேமதாச மறைய 1993 இல் சந்திரிக்கா நாடு திரும்பி அரசியலில் இறங்கினார். சிறிமா, சந்திரிகாவை ஏற்க, சில காலத்தில் அனுர யூ என்பிபக்கம் தாவினார். பின்னர் மாறி மாறி தாவினார். தந்தையின் கட்சியை, ஆட்சியை அவருக்கு விசுவாசமான அடிப்பொடியாக இருந்த டி ஏ ராஜபக்சவின் மகன்கள் கைப்பறிய காட்சியையும் கண்டு கண்மூடினார். ஆனால் கடைசிவரை மகிந்த இவரை “லொக்கா” (பெரியவர்) என்றே அழைத்தார்.
  8. இருக்கலாம்…எமக்கு முள்ளிவாய்க்காலால் மகிந்த மீது கோவம். ஜேவிபிக்கு பட்டலந்த வால் ரணில் மீது கோவம்.
  9. இதன் மூலம் தமிழரசு இந்த இருவரிடமும் இருந்து விடுபட்டால், ரணில் எமக்கு செய்த ஒரே நல்ல விசயமாக அது இருக்கும்🤣
  10. கொட்டாப்பட்டி போட்டிருக்காரோ என்னமோ🤣 @valavan இவர்களுக்கு குற்றவியல் தண்டனை கொடுக்க, நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் குற்றம் நிரூபிக்க படல் வேண்டும். இது மிக கடினம். அப்படி என்றாலும் இலஞ்சமாக அனுமதி கொடுத்த ரணில்தான் முதலில் உள்ளே போவார். மகிந்த, ரணிலை உள்ளே போட்டால் அனுரவுக்கு தில் என்பதை நானும் ஏற்பேன். எம் அரசியல்வாதிகளை பொறுத்தமட்டில் ஓரளவு மக்கள் நம்பும் படி ஆதாரம் வந்தால் - அடுத்த தேர்தலில் வாக்குகள் குறையும். தோற்பார்கள் என சொல்லமுடியாது.
  11. கிழக்கு மாகாணம் எண்டால் மட்டு நகர் மட்டும் அல்ல….கருணாவை ஒவ்வொரு தேர்தலிலும் ஓட ஓட விரட்டும் பட்டிருப்பு, கல்குடா தொகுதிகளும், பிள்ளையானையும் கருணாவையும் ஒன்று சேர விரட்டும் அம்பாறை, திருகோணமலை தேர்தல் மாவட்டங்களும்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ மட்டகளப்பு தொகுதியில் மட்டும் தோத்த மாரி எல்லோ கதை அளக்கப்படுகுது. பட்டிருப்பில் எப்பவும் அண்ணனுக்கும் தம்பிக்கும் வெளுவைதானே கிடைத்தது🤣.
  12. ஒருமுறை ஒரு இலங்கையர், தென்னாபிரிக்கர், பிரித்தானியர் இடையே யாரின் நாடு பெரியது என்ற சர்ச்சை எழுந்து விட்டதாம். பிரித்தானியர் : ஒரு விழிப்புலனற்ற பிள்ளையை நாம் கற்பித்து எம் நாட்டின் உள்ளக அமைச்சர் ஆக்கினோம் என்றாராம். தென்னாபிரிக்கர்: ஒரு கால் இல்லாதவரை நாம் ஒலிம்பிக்கில் ஓட வைத்தோம் என்றாராம். இலங்கையர்: இதென்ன பிரமாதம்…76 வருடமாக மூளை இல்லாதவர்களை நாம் எம் நாட்டின் தலைவர் நிலைக்கு உயர்த்தி வைத்துள்ளோம் என்றாராம். 76 வருடத்தில் ஒரு தேசியபட்டியல் சீட் கூட கொடுக்கவில்லை.
  13. பாம்பு சாணாக்ஸ்? முதலை சுமன்? ——— விக்கியர் 1 (மேல் மாகாணத்திலும் இன்னொன்றாம் என கதை ஆனால் அவர் இன்னும் ஒத்து கொள்ளவில்லை) 16 எண்டால் எப்படி ஒத்து கொள்வது? கொஞ்சமாவது மானம் ஈனம் இருக்கும்தானே?
  14. இப்படி எல்லாம் நீங்கள் ஆரூடம் கூறப்படாது. அனுரவுக்கு ஒரு நாலு வருடம் கொடுத்தால் என்ன குறைந்தா போய் விடுவீர்கள்? மேலும்…. சிங்களவர் எப்போதாவது தமிழர்களை ஒதுக்கி இருக்கிறார்களா, இப்போ ஒதுக்க? எப்போதும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என பாராது - தகுதி அடிப்படையில் பதவி வழங்கும் மனு நீதிச் சோழர்கள் அல்லவா அவர்கள்? நீங்கள் ஏன் இப்படி இனவாதமாக எழுதுகிறீர்கள்? இப்போ இதை நாம் (கருணா, பிள்ளையான், அவர்களின் அடிப்பொடிகள்) எப்படி பயன்படுத்துவோம் என்பதை இருந்து பாருங்கள்👇. நாம் இனி எப்படி எழுதுவோம் என்றால்…யாழ்பாணத்தவர்/ வடக்கு மக்கள் கெட்டிகாரர் என் பி பிக்கு போட்டு தப்பி கொண்டார்கள், ஆனால் கிழக்கு மக்கள் ஒட்டு மொத்தமாக தமிழரசுக்கு போட்டது முஸ்லிம்களுக்கு கிழக்கில் முதன்மை நிலையை உருவாக்கி விட்டது. இந்த ஆபத்தை தவிர்க்க அடுத்த முறை கிழக்கு மக்கள் பிள்ளையான் கருணாவுக்கு போட வேண்டும். எப்படி இருக்கு இந்த தில்லாலங்கடி அரசியல்?
  15. அதற்கு மாகாணசபை தேர்தல் நடக்க வேண்டுமே. ——— ஒரு தமிழ் செயலாளர் கூட இல்லை? 1. தமக்கு வாக்களிக்காத கிழக்கு தமிழரை ஜேவிபி பழி தீர்கிறது. 2. அடுத்த முறையாவது வாக்கு போட்டால்தான் சலுகை என மிரட்டுகிறது. 3. முஸ்லிம்களுக்கு பதவி கொடுத்து, தமிழரை புறக்கணித்து இனமுறுகலை வலுப்படுத்தி புள்ளி 2 ஐ மேலும் நிறுவுகிறது. 4. சகோதரயாட்ட ஜெயவேவா
  16. 1. மேற்கு நாடுகளில் வீதியோர சாராய கடைகள் ரொம்ப சாதாரணம் என்பது உண்மைதான். யூகேயில் தமிழ் வியாபாரிகளில், 90% க்கு மேல் கடை வைத்திருப்போர்தான். இந்த கடைகளில் 90% க்குமேல் off licence எனும் சாராயக்கடைகாரார்தான். அதாவது வாங்கி வீட்டில் போய் குடிப்பவருக்கு விற்பவர்கள். கடையில் வைத்து குடிக்க அனுமதிக்க கூடாது. சாராயத்தை விட கெடுதலான சிகெரெட்டையும் கிட்டதட்ட 100% தமிழர் கடைகளில் விற்பார்கள். 2. நீங்கள் சொன்னது போல் கசிப்பு என்று பாம்பு பல்லி பட்டரியை காய்சி குடிச்சு சாகாமல் - இதை குடிச்சு கொஞ்சம் லேட்டாக சாகலாம்தான். 3. மேலே உள்ள காரணங்கள் ஊரிலும் பார் வைப்பது ஏன் கூடாது என சிந்திக்க வைக்கலாம். ஆனால்… 4. ஊரில் இங்கே போல் அளவாக குடிக்கும் கலாச்சாரம் இல்லை (இதிலும் யூகே, ஐரோப்பிய நாடுகளை விட மோசம்). ஊரில் குடி என்றால், வெறிக்க வெறிக்க குடித்து விட்டு, மனுசியை போட்டு அடிப்பது, குடிக்கு அடிமையாகி பிள்ளைகளை நடுத்தெருவில் விடுவது என்பதே குடிமக்கள் கலாச்சாரம் (அநேகர்). ஆகவே டீச்ச்ண்டாக குடியை அணுகாத ஒரு இடத்தில் கண்டமாதிரி கடையை திறப்பது ஆபத்தே. 5. போதைக்கு தமிழ் இளஞர்களை அடிமைபடுத்தும் ஒரு நூதன யுத்தம் எம்மேல் திணிக்கப்படுவதாக பலர் உணர்கிறனர். இதற்கு குறைந்தது சந்தர்ப சாட்சியமாவது உள்ளது, இந்நிலையில் - போதையை எதிர்த்து வேலை செய்ய வேண்டிய அரசியல்வாதிகளே பார் திறக்க உதவி செய்வது - மிக மோசமான வேலை. 6. தலைவரின் படத்தை பேஸ்புக்கில் போட்டாலே கதவை தட்டும் பொலிஸ், நிச்சயம் கசிப்பை கட்டுப்படுத்த முடியும். 7. நான் மது ஒழிப்பு ஆதரவாளன் அல்ல. அது முடியாதவிடயம். ஆனால் தேவையில்லாமல் மது பாவனையை கூட்டும் வேலைகளை அரசியல் தலைவர்கள் செய்ய கூடாது. அது வியாபாரிகளின் வேலை.
  17. அரசியலமைப்பு குழு - புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில், இருக்கும் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதில் ஈடுபடாது என நினைக்கிறேன். இது சில உயர் அரச பதவிகளை (ஐஜி, பிரதமநீதியரசர்) மேற்கொள்ளும் குழு. https://en.m.wikipedia.org/wiki/Constitutional_Council_(Sri_Lanka) சுமந்திரன் ஒரு போதும் இதன் உறுப்பினராக இருக்கவில்லையாம். ஆனால் கொழும்பு சட்ட பீட முன்னாள் பேரா செல்வகுமாரன் நியமன உறுப்பினராக இருந்துள்ளார். அதுக்கு முதலில் பாரிஸ்டர் ஆகோணுமே🤣. https://www.barcouncil.org.uk
  18. 🤣 இந்தியாவில் அரிய வகை ஏழைகள், போல் இலங்கையில் அரிய வகை அபலைகள் உள்ளார்கள் போலும்🤣. அபலைகளை முன்னேற்ற ஆயிரம் வழிகளுண்டு…இன்னொரு பெண்ணின் தாலி அறுக்கும் பார்தான் தேவை எண்டில்லை. இதை பற்றிய என் பார்வையை விரிவாக இரவு எழுதுகிறேன். உங்கள் கருத்தில் உடன்பாடுதான்…ஆனால் வட கிழக்கு சூழமைவு வேற என நினைக்கிறேன்.
  19. இது இப்போ வெடித்து கிளம்பி இருந்தாலும் - பலகாலமாக நடப்பதுதான். சந்திரிகா காலத்தில் சுரேஷ் மட்டகளப்பில் ஒரு பார் அனுமதியை வாங்கி கொடுத்தார். அதே போல் எரி பொருள் நிலைய அனுமதிகளிலும் இது நடக்கும். உங்களை போலவே நானும் சிவாஜி ரஜனிகாந்த் போல சில “முதலாளிதுவ நடவடிக்கைகள் மூலம் ஒரு சிலரின் வாழ்வையாவது உயர்த்தலாம் என நம்பி போய், பின் நொந்த ஆள்தான்”. எனது முயற்சிக்கு பார் லைசன்ஸ் தேவைப்படவில்லை, ஆனால் பிரதேச சபை அனுமதி தேவைப்பட்டது. அதை எடுக்கும் சமயம் - குடிவைகளை குடிக்க (எடுத்துப்போக அல்ல) உள்ள லைசன்ஸ் எடுத்து தரலாம் என சிலர் அணுகினர். ஆர்வம் காட்டவில்லை ஆனால் விடயங்களை கேட்டறிந்து கொண்டேன். இதைத்தான் விக்கி தன் நியாயமாக சொல்கிறார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொடுத்ததாக. ஆனால் இதில் ஒத்துகொள்ள மறுத்ததை விட பாரிய பிழைகள் உள்ளன. குறிப்பாக வலிந்து எமது சமூகத்தை போதைக்குள் தள்ளும் சூழலில்.
  20. ஓம் புலம்பெயர் இலங்கை தமிழர்களிடம் உறைப்பு சாப்பிடுவதை ஏதோ சாதனை போல் நினைக்கும் பழக்கம் உள்ளது. சிலர் உறைப்பு குறைவாக சாப்பிட்டால் தமிழ் தன்மை குறைந்து விட்டது போல் ஒரு லுக்கும் விடுவார்கள். உறைப்பு கூட கூட உப்பும் கூடும். யாழ்ப்பாணதில் கே எவ் சி திறந்த நேரம் அங்கே சிலரை அழைத்துப்போனேன். எனக்கு சிக்கன் கருவாடு சாப்பிட்டத்தை போல அந்தளவு வாயில் வைக்க முடியாத உப்பாக இருந்தது. கூட வந்தவர்கள் உப்பு அளவாக இருப்பதாக கூறினர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.