Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. 1993 என நினைக்கிறேன். இவரும் சிறீகாந்தாவும் சேர்ந்து தினமுரசுக்கு போட்டியாக ஒரு பத்திரிகை ஆரம்பித்தனர். அது சம்பந்தமாக வீட்டுக்கு வந்தார். எனது வேலை தேனீர் போட்டு கொடுப்பது மட்டும்தான். அப்போ இவர்கள் அரசாங்கத்தோடு என்பதால் நான் இவர் மேல் செம கடுப்பில் இருந்தேன். ஏனோதானோ என சீனியை அள்ளி போட்டு ஒரு டீ போட்டு கொடுத்துவிட்டு வீதிக்கு கிரிகெட் விளையாட போய்விட்டேன். போகும் போது, தம்பி தேத்தண்ணி நல்ல இனிப்பா இருந்தது எனக்கு டயபிடீஸ் ஆனாலும் குடித்து முடித்துவிட்டேன் என்பதாக சொல்லி சென்றார். பின்நாட்களில் செய்தியில் சில தடவை டயபிடிசால் ஆஸ்பத்திரியில் அனுமதி என செய்திகள் வரும் போது இதை நினைத்து கொள்வேன்.
  2. முப்படை தளபதி ஒரு பெக்கோ என்கிறீர்களா?
  3. மக்கள் போராட இல்லை, பல வருடம் முன்னர் இராணுவ புலானாய்வு போராடியதாக சொன்னார்கள். ஆவா குழு ஆட்டம் போட்ட நேரம்.
  4. நரி….தமக்கு வருமானத்தை பெருக்க தமிழர் பகுதியில் சாராயக்கடைகளை திறந்துள்ளது. எங்கயடள் கூட்டு. ரணில் வென்றிருந்தால் தாய்லாந்து மாடல் ஆட்சிதான்🤣
  5. அனுர பிரிகேட் எந்தவகையில் இதற்கு முட்டு கொடுக்கும்?🤔 இதோ…இப்படி
  6. இங்கே சிலர் சுமனை எதிர்ப்பது அவரை கும்மினால், சிறிதரன் தப்பிக்கலாம் என்பதாலேயே. ஆகவேதான் சிறி ஆதரவு பிரச்சார மேடை போல் யாழ் மாறிவிட்டது. உதாரணமாக இந்த பார் லைசன்ஸ் ஊழல் ரணில் ஆட்சிக்கு வந்த பின் நடந்த ஊழல். ஆனால் சுமந்திரன் 2021 இல் guest house ஒன்று அதனுடன் கூடிய ரெஸ்டுரன் அதில் பார் வசதி உள்ளது - அதை திறந்ததை படமாக போட்டு - அங்கே விபச்சாரம் நடக்கிறது - என்றது வரை @தமிழ் சிறி அண்ணை இங்கே பகிர்ந்தார். இந்த பார் விடயத்தில் மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் - இவர் கிளிநொச்சியில் 16 பார் திறந்ததையிட்டு சிறிதரன் மீது ஒரு சின்ன கேள்வியாவது வைப்பார் என நீங்கள் எதிர்பார்த்தால்…. கிளிநொச்சியில் பார் வைத்ததில் சிறிக்கு தொடர்பில்லையாம். ஆதாரம் ஏதும் இல்லையாம் என சொல்லி விட்டார் என முழு பூசணிக்காயை சோத்தில் அமுக்குகிறார். உண்மையை ஓணாண்டி எழுதினால் அவரை பொய்யன் என்கிறார். மிக தெளிவாக தெரிகிறது… இங்கே சிறிதரன் ஆதரவு பிரச்சாரம், damage control நடக்கிறது. யாழ்கள வாசகர்கள் முட்டாள்கள் என நினைத்தபடி. இதை @தமிழ் சிறி அண்ணை சுயலாபத்துக்கு அன்றி அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் செய்வதாகவே நான் இன்னும் நம்புகிறேன். பிகு இன்னொருவர் சிறிதரனின் இலண்டன் வாகனச்சாரதி. அவரின் உறவினர் பெயரில் இவரே வன்னியில் ஒரு லைசன்சை வைத்துள்ளார் என வதந்தி.
  7. நீங்கள் பாவிக்கும் வஸ்து எது என்பதை அறியத்தந்தால் நானும் இந்த சுகானுபவத்தை பெறலாம் 🤣
  8. இப்போ ஏன் ப.வா.த.ச வில் கைதாகவில்லை? அப்போ சிங்கள இனவாதிகள் மீது இந்த சட்டம் பாயும் என்றதல்லாம் பொய்யா சாத்ஸ்?
  9. சிங்களமக்கள் காணி, பொலிஸ் அதிகாரத்தை லாபாய், லாபாய், தாயட்ட ஹத்தராய் என கூவி கூவி விற்பதாகத்தான் கேள்விபடுகிறேன். இனி எல்லாரும் சகோதரயா…தையிட்டி, கந்தரோடை, வெடுக்குநாறி, பு….பூநாறி எல்லாம் இனி நாறி அல்ல, மாறி🤣. பாவங்கள் முக்காவாசி சிங்கள சனத்துக்கு கண்தெரியாது, காதும் கேட்காது. முகநூலில் போய் ஒரு பக்கம் திறந்து எழுதுங்கோ சாத்ஸ் - சிங்களவர் வந்து தாம் யார் என்பதை காட்டுவார்கள் 🤣.
  10. நீங்கள் இன்னொரு திரியில் ஆடு அறுக்கப்படாது என்பதை ஏற்று கொண்டீர்கள். அப்போ எதுக்கு காத்து கிடக்கிறீர்கள்? அது தானாக அறுந்து விழும் தூக்கி கொண்டு போகலாம் எண்டா🤣 நான் நினைக்கிரன் அருணும் அனுரவும் சேர்ந்து தமிழ் ஈழம் தர பிளான் போடுறார்கள் என 🤣 அந்த நியாயமான கோரிக்கை - இணைந்த வடக்கு கிழக்கில், தமிழருக்கு காணி பொலிஸ் அதிகாரம் உள்ள மாகாணசபையை கொடுக்க கூடாது.
  11. பதிலுக்கு நன்றி. நானும் உங்களை போலவே அனுர எமக்கு காணி, பொலிஸ் அதிகாரம் உள்ள தீர்வை தரமாட்டார் என்றே நம்புகிறேன். இதன் பின் இவருக்கு நான் ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும்? 4 வருடத்தை வீணடிக்கவா? ஆகவேதான் அவரின் இனவாத பின்புலத்தை சுட்டி காட்டி, இவரிலும் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதை கூறி, எமது மக்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை பெற போராடும் தமிழ் தேசிய அரசியலை முந்தள்ளுகிறேன்.
  12. அப்படி ஒன்றும் கடினமான கேள்வி இல்லை அண்ணை. அனுரவுக்கு சும்மா கால அவகாசம் கொடுக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள்தானே. ஆகவே கால அவகாசம் கொடுக்க சொல்வது ஏன்? அவர் காணி, பொலிஸ் அதிகாரம் உள்ள ஒரு தீர்வை தமிழருக்கு 4 வருடத்தில் தரக்கூடும் என நீங்கள் நினைப்பதாலா? இதற்கு ஆம் இல்லை என இலகுவாக பதில் சொல்லலாம்.
  13. நிச்சயமாக இதை நீங்கள் கேள்வி யாக கேட்பதே அதிசயமாக இருக்கிறது. போராளிகள், மாவீரர்கள் = படை வீரர்கள். அவர்கள் தலைமைக்கு கட்டுபட்டவர்க்ள். அவர்கள் எந்த அரசியல் முடிவையும் எடுக்கவில்லை. ஆகவே அவர்கள் எந்த அரசியல் முடிவுக்கும் பொறுப்பு அல்ல. தலைமையின் அரசியல் முடிவு விமர்சிக்கபட்டால் அது அந்த முடிவின் மீதான விமர்சனமே. தனிப்பட்டு அந்த தலைவர் மீதான விமர்சனம் கூட இல்லை. இதில் என்னளவில் எந்த முரண்பாடும் இல்லை. திருகோணமலை நகரில், குடியேற்ற ஊர்களில், மணலாறில், வவுனியா தெற்கில் எமது நிலம் பறிக்கும் எதிரி எந்தளவு பயத்துடன் இருந்தான் என்பதை 87 யூலை-அக்டோபரில் நேரில் கண்டவன் நான். எமது எதிரி அப்படி பயந்து அதன் பின் நான் கண்டதே இல்லை. இன்று வரை இந்த ஊர்கள் எல்லாம் சிங்களமயப்பட்டு தாண்டி போகும் போது - “தலைவர் ஒரு அப்பழுக்கற்ற போராளியாக அன்றி ஒரு சராசரி அரசியல்வாதியாக இருந்திருக்கலாம்” என எண்ணி மருகாத நாட்கள் இல்லை.
  14. 87 ஐ பற்றி இப்பொ கதைப்பாதால் ஏதும் பலன் உண்டா என என்னை கேட்டால்? 2024 முடியும் இந்த நேரத்தில் இல்லை என்பேன். புலிகள் பிழையே விட்டாலும் - இப்போ அவர்கள் இல்லை. அதை இட்டு கதைத்து இனி ஒன்றும் ஆக போவதில்லை. 2009 ற்கு பின்னான 10 வருடம் நாம் சுயபரிசோதனைக்கான review காலம் - அதில் கதைத்தது சரி. வாழ்க்கை முழுவதும் ரிவியூவில் வாழ முடியாது. இனி முன்னோக்கி பார்க்கும் காலம், இப்போ இதை உடைந்த ரெக்கோர்ட் போல மீள மீள சொல்வது தேவையில்லை. அதே போல், பிழையே விடவில்லை, தலைமையை விமர்சித்தால் மாவீரரை அவமரியாதை செய்தது போல என உணர்சி பிழம்பாவதும் வெறும் மாய்மாலம். Move on guys …. புலிகள் மெளனித்து 15 வருடங்கள். இன்னுமா அவர்களை வைத்து வால் தலை என ஆடுவீர்கள்.
  15. உங்களுக்கு பிரெக்சிற், கியூபெக், ஈன்ச் தீமோர், ஸ்கொட்லாந்து இன்ன பல சர்வஜன வாக்கெடுப்புகள் கட்டாயம் தெரிந்து இருக்கும். ஆனால் இது புலிகளின் பிழை அல்ல. இந்த தீர்வை இப்படி திணித்தது இந்தியாதான். ஆனால் எமது தலைமையாக இந்த திணிப்பை புலிகள் எதிர்கொண்ட விதம் பிழை என்பதே என் நிலைப்பாடு.
  16. நாம் மைத்திரியை, சந்திரிகாவை, ரணிலை, கோட்டவை நிராகரித்த போது அப்படி யாரும் சிரிக்கவில்லையே? உங்களுக்குத்தான் மறந்து விட்டது, உலகத்துக்கு தெரியும் அனுரவும் ஜேவிபியிம் எப்படி பட்ட இனவாதிகள் என. ஆகவே செயல் இல்லாமல் அவர்களை தமிழர்கள் நம்ப தயாரில்லை என்பதை யாரும் வித்தியாசமாக பார்க்க மாட்டார்கள். அவர் மாவீரர்களை அர்த்தபடுத்தியதாக எனக்கு படவில்லை என்றே கூறினேன். அவர் நிச்சயம் புலிகள் அமைப்பின் தலைமையைத்தான் கூறினார். நான் மிக நேரடியாகவே தலைவர் என கூறினேனே?
  17. நான் நெகிழ்வு போக்கு காட்டவில்லை என கூறியது அருகே இருக்கும் பிராந்திய வல்லூறுடன். எமது எதிரியுடன் அல்ல. மாற்று கருத்தில்லை. ஆனால் புலிகளின் தலைமையின் கொள்கை முடிவை விமர்சிப்பது, ஏன் நையாண்டி செய்வது கூட - மாவீரரை நையாண்டி செய்வதாகாது. சர்சிலை விமர்சித்தால், பிரித்தானிய படைகளை விமர்சிப்பதாக அர்த்தம் இல்லையே.
  18. அந்த முயற்சியை “காணாது” என புறம்தள்ளிய தலைமைகளை. அதை வரவேற்ற commentariat ஐ. இதில் என்ன சமூகத்தை குறிக்க இருக்கிறது? தமிழர்கள் எம்மிடம் யாராவது நேரடியாக கேட்டார்களா என்ன? உங்களுக்கு 87 ஒப்பந்தம் ஓகேயா, இல்லையா என்று. இல்லைத்தானே.
  19. @குமாரசாமி இப்போ உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் அனுர 1 அல்லது 4 வருடத்தில், இணைந்தோ அல்லது தனி தனியாகவோ வடக்கு, கிழக்குக்கு மாகாண மட்டத்தில் காணி, பொலிஸ் அதிகாரம் உள்ள தீர்வை தருவார் என நீங்கள் நம்புகிறீர்களா? ஆம் அல்லது இல்லை என மட்டும் பதில் தரவும்.
  20. மந்தைதனமாக அனுரவை நம்பி, தமிழ் தேசியத்தை கைவிடாமல் காப்பாற்றலாம். எமக்கான காணி உரிமையை தராதவரை இவரும் இனவாதிதான் என்பதை நினைவூட்டலாம். நாம் பிரிந்து நின்றதாலே இவர் எமது பகுதியில் வெல்ல முடிந்தது என்பதை விளங்கபடுத்தி - எதிர்கால ஒற்றுமையை வலியுறுத்தலாம். மிக முக்கியமாக - இந்த அனுர பேய்க்காட்டல் பண்டா-செல்வா, டட்லி-செல்வா, 87 ஒப்பந்தம், இடைக்கால நிர்வாக சபை போன்ற இன்னுமொரு பேரினவாத பேய்காட்டல் என்பதை புரிய வைத்து - தமிழ் தேசிய அரசியலே நிரந்ததர தீர்வை தரும் என்பதை உணர்த்தலாம். இவர்கள் இருவரும் இனவாதிகள். இவர்கள் ஒரு போதும் எமக்கு காணி, பொலிஸ் அதிகாரம் தாமாக தரபோவதில்லை. இருக்கும் 13 ஐயும் உருவ கூடியவர்கள். எனவே மக்கள் விழிப்புடன் இருந்து இவற்றை பெற போராட வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.