Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. குரங்கு ஏற்றுமதியை அரசு பரிசீலிக்கும்… அமைச்சர் லால் காந்த. https://www.dailymirror.lk/breaking-news/Govt-ready-to-resume-discussion-on-exporting-Toque-monkeys-Minister/108-297900 பிகு அடுத்த முறை ஊருக்கு வலு அவதானமா போகவேணும். பிடிச்சு சைனாவுக்கு ஏத்தி போடுவாங்கள்🤣.
  2. 1. போலி டாக்டர் சபாநாயகர் 2. யூனிபோர்மை தச்சு கொடுக்கும் கல்வி அமைச்சர் 3. 12 வயதுக்கு கீழ் விளம்பரபடத்தில் நடிக்க தடை போடும் கலாச்சார அமைச்சர் இந்த வகையில் முன்னாள் அமைச்சர் பேச்சை கேட்டு குரங்கு ஏற்றுமதியில் இறங்கினாலும் ஆச்சரியமில்லை🤣
  3. வழிமொழிகிறேன்
  4. @Kandiah57 அண்ணைக்கு நன்றி. உங்களுடன் கருத்து பரிமாறும் போது ஏற்பட்ட சந்தேகம் - இலவசம் என்பது வடமொழிதானாம். கோராவில் யாழில் எழுதும் பேராசிரியர்கள் உட்பட பலர் எழுதியுள்ளார்கள். https://ta.quora.com/இலவசம்-என்பதற்குத்#:~:text=இலவயம்%2Fஇலவசம் என்றால் பொருளற்ற%2C ஆதாரமற்ற%2C விலையற்ற என்று பொருள். ஆனால் அதே குவோராவில் அது தமிழ் சொல்லே என இன்னும் சிலர் சொல்லுவதும் லொஜிக்கலாக உள்ளது.
  5. வீடியோவின் தலையங்கம் (அமெரிக்க) குடியுரிமை ரத்து—-பகீர் கிளப்பிய டிரம்ப். ரத்து என்றால் இப்போ இருக்கும் குடியுரிமையை இல்லாது செய்வது. இங்கே எந்த குடியுரிமையும் ரத்து செய்யபடவில்லை. வரும் காலத்தில் - தானியங்கி குடியுரிமை பெறும் முறையை ரத்து செய்வேன் என்பதும் குடியுரிமை ரத்து என்பதும் ஒன்றல்ல. இதனால்தான் இந்த தலையங்கம் தவறாக உள்ளது என்றேன். ——— உங்கள் கேள்விக்கும் நான் சொன்னதுக்கும் சம்பந்தமில்லை.
  6. உலக முதல் மொழியா என்று தெரியவில்லை…ஆனால் இன்று வாழும் மொழிகளில் பழமையானது என வாதாட கூடிய அளவுக்கு பழமையான மொழிதான். ஆனால் நாம் எந்த மொழியில் இருந்தும் எடுத்து அதை தமிழில் கையாள வேண்டும். இப்படி ஒரு விசாலமான அணுகுமுறை இருந்த படியால்தான் ஐரோப்பாவின் மேற்கு மூலையில் உள்ள ஒரு தீவில், 1/3 மக்களின் மொழியாக, காலத்தால் மிக பிந்திய மொழியாக இருந்தும் ஆங்கிலம் உலக பொது மொழியாகியது. ஆங்கிலத்தில் மிக அதிகமான சொற்கள் பிரென்சு,ஜேர்மானிக், ஸ்கெண்டிநேவிய சொற்கள்தான். ஆகவே இலவசம் என்ற சொல் பொருத்தம் இல்லாத போது (இதுவே வடசொல் என நினைக்கிறேன்) ஆங்கிலத்தில் பாவிக்கும் முறையை தமிழ்படுத்துவதில் தவறில்லையே. “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை” 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்“ சுப்ரமணிய பாரதியார் (இன்று அவர் பிறந்த நாள்).
  7. இன்று நல்ல form இல் உள்ளீர்கள் போலும். உங்கள் உவமான உவமேயங்கள் பிறிதொரு படிநிலை🤣
  8. செய்தியின் தலைப்பு நிச்சயம் தவறாகவே இருக்கிறது. இது ஒரு கிளிக் பேயிட் தனமான வீடியோ தலைப்பு என நினைக்கிறேன். செய்தியை தெரிவிப்பது மட்டும் அல்ல, அதன் தலைப்பு உண்மையானதா என்பதும் முக்கியம். அப்படி இல்லாதவிடத்து ஒரு டிஸ்கி போடலாம். ஏன் என்றால் இவ்வாறான தவறான தலைப்புகள் தலைப்பை மட்டும் வாசிப்போரை தவறாக வழிநடத்தி விடும். பிகு டிரம் என்ன சொன்னார் என்பதை அறிய அவர் பேசிய வீடியோவையே பார்க்க முடியும் போது - அதை பற்றிய தமிழ் நாட்டு சென்சேசனல் வீடியோவை பார்த்து என் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. ஆனல் பின்னூட்டங்கள் இந்த வீடியோ தவறான செய்தியை பரப்புவதை கண்ட பின்பே எழுதினேன்.
  9. தகவலுக்கும், பிழை திருத்ததுக்கும் நன்றி. இது அரசியலமைப்பில் உள்ளதா? அல்லது சாதாரண சட்டமா?
  10. அதான் போட்டு தள்ளீடாங்களே🥲. செவிப்புலனறோர் காதில் நான் சங்கூதுவதில்லை. நீங்கள் விதிவிலக்கு🤣
  11. 🤣 ஆனால் தமிழை முடிந்தளவு எழுத்து பிழை விடாமல் யாழில் தட்டச்சு செய்யத்தெரியும்🤣.
  12. நானும் வீடியோவை பார்க்கவில்லை. இணைத்த @valavan பார்தாரோ அல்லது கவர்சிகரமான தலைப்பை பார்த்து விட்டு பார்காமலே இணைத்தரோ தெரியவில்லை. @குமாரசாமிகு -சா அண்ணை போன கிழமை எனக்கு சொன்னவர் வீடியோவை பார்க்காமல் கருத்து சொல்ல கூடாது என. நான் வீடியோவை ஒட்டி கருத்து சொன்னேன். அதற்கு வீடியோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் பெரிய மனுசன் சொன்னதால் 30 நிமிட வீடியோவை பார்த்து பின் கருத்து எழுதினேன். ஆகவே அவர் கட்டாயம் வீடியோவை ஒரு செக்கனும் விடாமல் பார்த்து விட்டுத்தான் கருத்து எழுதி இருப்பார். ஆனால் நீங்கள் எல்லாரும் ஒரு பெரிய பொயிண்டை மிஸ் பண்ணுவதாக எனக்கு படுகிறது. அது…. டிரம்ப் சொன்னது - அமெரிக்காவில் பிறந்தாலே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்ற சட்டத்தை மாற்றப் போவதாக. அமெரிக்காவில் பெற்றாருக்கு வதிவிட அனுமதி இருந்தாலும், இல்லாத போதும் பிள்ளை அமேரிக்காவில் பிறப்பின் அது அமேரிக்க குடி என்பது சட்டம். அநேக ( வேறு எந்த -பிழை திருத்தம், கீழே @நிழலி சொன்னதை பார்க்கவும்) மேற்கு நாடுகளில் இப்படி இல்லை. சட்டவிரோத குடியேறிகளின் பிள்ளைகளும் இமிகிராசனை பொறுத்தமட்டில் சட்டவிரோத குடியேறிகளே. அண்மைகாலம் வரை அயர்லாந்திலும் அமெரிக்காவை போல சட்டம் இருந்தது ஆனால் இதை 2005 இல் நீக்கினர். இதைத்தான் டிரம்ப் நீக்குவதாக கூறினார். ஏலவே naturalisation மூலம் அமெரிக்க குடிமக்கள் ஆகிவிட்ட, சுந்தர், நாதெல்லா, போன்ரோரை அல்ல. அவர்கள் சட்டபூர்வமாக அமெரிக்கர்களாக மாறிய தற்போதைய அமேரிக்க பிரசைகள்.விவேக் பிறக்கும் போதே அமெரிக்க பிரசை. இவர்கள் பிரசாஉரிமையை பறிப்பதாக டிரம்ப் கூறவில்லை. அதே போல் இவர்கள் பிள்ளைகளும் பிறக்கும் போதே அமேரிக்கர்தான். இப்போ அமேரிக்காவில் இருக்கும் இந்தியர் கூட, போதுமான வருடங்களை அங்கே சட்டபூர்வமாக கழிக்கின் அவர்களுக் அமேரிக்க பிரசா உரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இவை எதையும் டிரம் நிறுத்தபோவதாக சொல்லவில்லை. அவர் சொன்னது அமேரிக்காவில் பிறக்கும் குழந்தை எல்லாம் தானியங்கியாக அமேரிக்கன் பிரசை ஆகும் என்ற சட்டத்தை மாற்றுவேன் என்பதை மட்டுமே. ஆனால் இதுக்கு கூட அரசியலமைப்பை மாற்ற வேண்டி வரும். https://oklahomavoice.com/2024/12/10/dc/despite-doubts-on-legality-trump-pledges-to-sign-order-revoking-birthright-citizenship/
  13. இது மேற்குலகின் வெற்றி அல்ல. இது முழுக்க முழுக்க துருக்கியின் வெற்றி. புட்டின், ஆசாத்தின் தோல்வி. இஸ்ரேல் வெளுத்து வாங்குவது, இந்த புதிய சிரிய அரசின் கைக்கு கனரக ஆயுதம் போனால் பின்னாடி தனக்கு அது ஆபத்தை தரும் என்பதால். ஈராக்கில் அமேரிக்க படைகள் புதிய இடைக்கால அரசை உருவாக்கின. இங்கே வெளியார் இல்லாமல் அவர்களே உருவாக்குகிறனர். ஆகவே லிபியாவுடனான ஒப்பீடே அதிக பொருத்தம். உங்களை போலவே, ஈராக், லிபியா போல் சிரியாவும் சின்னாபின்னமாகும் (இப்போதும் ஒன்றும் சிறப்பாக இல்லை) என்பதே என் எதிர்வுகூறலும்.
  14. அதான் சொன்னேனே free at the point of delivery ஐ சுருக்கி free என்கிறார்கள். நிச்சயமாக இது பிழை. வேணும் என்றால் இன்னொரு பகுதிக்கு ரோடு போடாமல் என் அதிகாரத்தை பாவித்து அந்த பணத்தை உங்கள் பகுதிக்கு ரோட்டு போட பாவித்தேன் என சொல்லலாம். இவை எவையும் சரியான பதங்கள் அல்ல. ஆங்கிலத்தில் state-funded என்பார்கள். அரச-செலவில் கல்வி, அரச-செலவில் மருத்துவம் என்பது சரியாக இருக்கும். இப்ப உங்களுக்கு என்ன அண்ணை பிரச்சனை🤣? ஆரம்பத்தில் இவ்வாறான பணம் அறவிடா திட்டங்களே கூடாது என்றீர்கள். இப்போ திட்டம் இருக்கலாம் அதை இலவசம் என்பதுதான் பிழை என்பது போல் எழுதுகிறீர்கள்.
  15. அண்ணை…நாங்களும் national insurance என்று கட்டுகிறோம். ஜேர்மனியில் பிறப்பில் இரெண்டு காலும், கையும் இல்லாத ஒருவரை நீ காப்புறுதி கட்டவில்லை எனவே தெருவில் நில் என்றா விடுவார்கள். இல்லை - உங்களை போன்றோர் கட்டும் காசை வைத்து அவருக்கும் உங்களுக்கும் சேவை வழங்குவார்கள். இங்கே பென்சனுக்கும் வரி அடிப்பார்கள். உழைக்கும் போது வருமான வரி + மேலே சொன்ன காப்புறுதி. உங்கள் boomer generation கட்டியது குறைவு. எங்கள் தலைமுறை எடுக்கும் வருமானத்தில் 30-40 45 வீதம் வரை வரியாக கட்டுகிறோம். மாச கடைசியில் வயிறு ஏரிந்தாலும் ஒரு மேம்பட்ட சமூகத்தில் வாழ கொடுக்கும் விலை என சமாதானம் அடைவதை தவிர வேறு வழியில்லை. பிகு ஜேர்மனியிலும், யூகேயிலும் சோசல் காசில் உழைக்காமல், கொடுப்பனவு, இலவச வீட்டில் வாழ்ந்தவர்களை எனக்கு தெரியும் - ஆகவே இந்த நாடுகளில் இலவசம் இல்லை என்பது சரி அல்ல. வரி கட்டும் எமக்கு இலவசம் இல்லை. நாம் பாவிப்பதை விட அதிகமாக கொடுக்கிறோம். ஆனால் வரி கட்டாதவர்கு இலவசம்.
  16. ஏனைய இலங்கையர் போலவே அவர்களுக்கு கல்வி, மருத்துவம் வழங்கபடுகிறது. இலங்கையில் குடியேற்ற திட்டங்கள், சேரி மாற்று திட்டங்கள் தவிர இலவச வாழிடம் அல்லது வாழிட கொடுப்பனவு எவருக்கும் இல்லை (housing benefit). தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பலர் இருப்பதே தோட்டத்துக்கு சொந்தமான லயன் வீடுகளில். ஆகவே இது ஒருவகை இலவசம்தான். அவர்களுக்கு சம்பளம் போதாது, வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்பது மிக நியாயமான அடிப்படை கோரிக்கை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இது இலவசங்களை அதிகரிக்க வேண்டும் என்போர் சொல்ல வேண்டியது. நீங்கள் அல்ல.
  17. கடனை நாடுதான் அடைக்க வேண்டும். ஆகவே மக்களுக்கு தொடர்பு உள்ளது. கடன் இல்லாத நாடுதான் தன் மக்களுக்கு நலத்திட்டங்களை கொடுக்க வேண்டும் என்றால் - ஜேர்மனி உட்பட உலகில் எந்த நாடும் நலதிட்டங்களை செயல்படுத்த முடியாது. உங்களுக்கு வீட்டு, வாகன கடன் இருப்பதால் பிள்ளையளுக்கு நல்ல உடுப்பு வாங்கி கொடாமல் விடுவதில்லைத்தானே? வரியிறுப்பாளருக்கும், வரிகட்டும் வசதி இல்லாதவருக்கும் இலவசம். இல்லாதவருக்கும் சேர்த்து இருப்பவர் வரியாக கட்டுவார். இதுதான் வரி வகுப்பின் அடிப்படையே. மேலே சொன்னது போல் இது இலவசம் அல்ல, சேவை பெறும் தறுவாயில் இலவசம்.
  18. இதை ஆங்கிலத்தில் free at the point of delivery என்பார்கள். அதாவது சேவை வழங்கும் தறுவாயில் இலவசம். ஜேர்மனியிலும், யூகேயிலும் அரச மருத்துவ சேவை இந்த அடிப்படையில்தான் நடக்கிறது. அதாவது தனிமனிதர்களி வரி அல்லது காப்புறுதிவாங்கி, அதை வைத்து தேவைப்படும் சகலருக்கும், சேவை வழங்கும் போது (at the point of delivery) இலவசமாக வழங்கப்படும். இலங்கையிலும் இப்படித்தான். வரிப்பணம்+கடன்+உதவிகள் கொண்டு, at the point of delivery கல்வியும், மருத்துவமும் இலவசமாக கொடுக்கப்படுகிறன.
  19. இல்லை. உங்களுக்கு வாழ்க்கை சுட்டெண் பற்றி தெரிந்திருக்கும். இப்போ இதை மனித முன்னேற்ற சுட்டெண் என்பார்கள். Human Development Index. இதில் முன்னுக்கு நிற்பது பின்லாந்து போன்ற நாடுகள். இலங்கை ஒப்பீட்டளவில் பராவாயில்லை. காரணம்? இலவச கல்வி, இலவச மருத்துவம், இத்யாதிகள். இவை இல்லாவிட்டால் பாகிஸ்தான் போல இருந்திருக்கும் இலங்கை. சுட்டெண் பற்றிய தகவல் கீழே. இதில் தெற்காசியாவில் பச்சை நிறத்தில் உள்ள ஒரே நாடு இலங்கை. மற்றும் மாலதீவு. https://en.m.wikipedia.org/wiki/List_of_countries_by_Human_Development_Index
  20. நீங்கள் இங்கே சொல்வதும் நான் அதற்கு மேலே சொன்னதும் இரெண்டுமே ஜேர்மனி முன்னேறியதன் பின்னால் உள்ள சூழமைவுதான். அதே போல் இலங்கை பின்னடைந்தமைக்கு அரசியல்வாதிகள் பெரும் காரணம். ஆனால் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையை சின்னாபின்ன படுத்தியமை போல அமெரிக்கா ஜேர்மனியை சின்னாபின்ன படுத்தவில்லை. 2ம் உலக யுத்தத்தின் பின் மேற்கு ஜேர்மனியை நல்வழி படுத்துவதில், தூக்கி விட்டதில் அமெரிக்காவின் பங்கு கணிசமானது. துரதிஸ்டவசமாக அப்படி ஒரு உதவி இலங்கைக்கு கிடைக்கவில்லை. இலங்கை சீரழிந்தமைக்கு இதுவும் ஒரு காரணம். உங்கள் முன்னைய கருத்துக்கு திரும்பி வந்தால் - “இலவசங்கள்” அல்லது “நலத்திட்டங்கள்” வளர்ந்த, வளர்முக நாடுகள் அனைவரும் செய்வதுதான். இதை செய்யும் பணம் எங்கே இருந்து வருகிறது என்பதை வைத்து இந்த திட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என கூறமுடியாது🙏.
  21. இன்னொரு விசயம் @குமாரசாமி அண்ணை, நீங்கள் மேற்கை போல அல்ல, ரஸ்யா கூட்டாளிகளை கைவிடாது என்ற தொனிப்பட எழுதினீர்கள். 1989 இல் ஆப்கானிஸ்தானில் ரஸ்யா என்ன செய்தது என்பதை மறந்துவிட்டு. ஆனால் இப்போ?
  22. ராணியோ, கூனியோ யூதருக்கு எவரும் பொருட்டல்ல. அவர்களின் இருப்பை தக்க வைப்பதே முதன்மையான கொள்கை. மீதி எல்லாம் இரெண்டாம்பட்சமே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.