Everything posted by goshan_che
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஒரு காலத்தில் வடக்கு கிழக்கு தமிழர் பகுதி, கண்டிய சிங்கள பகுதி, எஞ்சிய சிங்கள கரையோர பகுதி என இலங்கை மூன்று சம்ஸ்டிகளாக பிரிக்கப்பட வேண்டும், ஒரு கொன்பெடரேசன் ஆக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த பண்டாரநாயக்க, பின்னர் பெளத்த சிங்கள மேலாண்மைவாதத்தை ஏற்றதால் மன்னித்து ஏற்று கொள்ளப்பட்டு, தலைவரும் ஆகினார்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
நீங்கள் மேலோட்டமாக தெரிவதை பிடித்து தொங்கி கொண்டிருந்தால் இதற்கு மேல் கதைக்க ஒண்டும் இல்லத்தான். புலிகள் 1/3 ஐ பிரிக்க போராடினார்கள். ஜேவிபி 3/3 ஐயுமே பிடித்து கம்யூனிச நாடாக்க போராடியது. ஆகவே ஆபத்து ஒன்றேதான். வித்தியாசம் - ஜேவிபி பெளத்த சிங்கள மேலாண்மையை ஏற்றதும் புலிகள் ஏற்காததும்தான். புலிகள் பெளத்த சிங்களவர்களாக இருந்து தனிநாடு கோரி இருந்தாலும் ஜேவிபி போல் மீள ஏற்று கொள்ளப்டிருப்பார்கள். நான் செய்யலாம், செய்யவேண்டியது என சொல்லுவது எதுவுமே நாம் இருக்கும் நாடுகளில் சட்டத்துக்கு புறம்பானது அல்ல. ஏன் உருவாக்க முடியாது - நாம் இருக்கு நாடுகளில் இருந்து ஆரம்பிக்கலாம். மேற்கில் இலங்கையின் இந்த நட்புவட்டம் ரஜீவ் கொலை, 1994 இல் கதிர்காமர் வருகையோடுதான் கட்டி எழுப்பபட்டது. ஏன் நம்மால் மட்டும் முடியாது.
-
புலம் பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு
எங்கே, எந்த துறையில் கல்லா நிதி பட்டம் எடுத்தார் என தெரியவில்லை. அருஸ் இவர் புனைபெயர் என நினைக்கிறேன். போர்க் காலத்தில்….வேல்சில் இருந்து அரூஸ் என்ற பீடிகையோடு…. ஏதோ இரணமடு பண்டில் ஏறி நிண்டு பார்த்தவர் போல இக்பால் அத்தாஸ் முதல் கிழமை சண்டே டைம்சில் எழுதியதை + தன் கற்பனை சேர்த்து அள்ளி விட்ட வாய்வாளர் இவர்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
அட ஏன் அங்கே எல்லாம் போகிறீர்கள்…பலர் யாழில் மானசீக தேர்தலில் சைக்கிளுக்கு போட்டு விட்டு, இப்போ அனுரவுக்கு அவகாசம் கொடுக்கலாம் என எழுதுகிறனர். ஆனால் இதுவரை அழிவை தரும் தேர்வுகளை (கோட்டா 2019 நியாபகம் இருக்கலாம்) தேடி, தேடி ஆதரித்த இவர்கள், இப்போ அனுரவை தேர்தலின் பின் ஆதரிப்பது, ஒரு வழியாக சைக்கிள் கோஸ்டி டைப், கிடைக்கவே முடியாத வன் தமிழ் தேசியத்தில் இருந்து இவர்கள் விடுபடுவதற்கான அறிகுறி என்றே நான் கருதுகிறேன். ஆனால் என்ன வன்-தமிழ் தேசியத்தில் இருந்து நேராக இண்டர் சிட்டியை பிடித்து பிக்கு காலில் போய் விழப்பார்கிறார்கள். இடையில் ரயில நிப்பாட்டி இவர்களை மென்- தமிழ் தேசிய பஸ்சில் ஏற்றலாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இது யாழ்களத்தில் மட்டும் அல்ல, வெளியிலும்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
உங்களை போல் சாதாரண கருத்தாளர் இல்லை சுமந்திரன். அவர் தன் மனைவியிடம் கூட ஒரு அரசியல் விடயத்தை பொதுவெளியில் வைத்து கூறினால் - அது எல்லோரு காதுக்கும் போகும். சுமந்திரன் பல பொதுவெளிகளில் இப்படியான பேய்கதைகளை கதைத்துள்ளமைக்கு போதிய ஆதராம் உள்ளது. யாழில் திரிகளே ஓடியுள்ளது. வேறொன்றும் இல்லை - சுமந்திரனுக்கு தான் ஒரு player, commentator அல்ல என்பது கடைசிவரை புரியவில்லை. கொமெண்டேட்டர் போல் வாயைவிட்டு தன் டீமுக்கு ஆப்பை செருகிகொண்டார்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
இல்லை நீங்கள் யாழில் தமிழரிடையே எழுதுவதால் அதை வெளியார் காண்பார்கள் என நான் எழுதவில்லை. ஆனால் குறைந்தது 60% எமது மக்கள் புலிகளின் ஆதரவாளர்கள். புலிகளின் தவறுகளை மீள, மீள உரைப்பது அவர்களோடு நீங்கள் சேர்ந்தியங்கும் வாய்ப்பை பாதிக்கும். இது அடிப்படை மனித மனோவியல். 60% இன் உதவி இல்லாமல் தீர்வை அடைய முடியாது. இந்தவகையில் இந்த மீள, மீள, மீள உரைத்தல், இந்த இனத்தின் ஒற்றுமைக்கு, தீர்வுக்கு ஒரு இடைஞ்சல்தான். ஜெனிவாவில் புலிக்கொடியோடு போகாமல் விடலாம் என 2017 வாக்கில் நான் எழுதி, நெடுக்ஸ் தலைமையில் என்னை பலர் சேர்ந்து மொங்கியது நினைவிருக்கலாம். ஆனால் அப்போ என்னை மொங்கிய பலர்…இப்போ அனுர அனுதாபிகள். இவர்களை அனுரவால் தம்பக்கம் இழுக்க முடியும் எனில், எம்மாலும் முடியும். இவர்கள் உணர்ச்சி பிழம்புகள். வைத்தால் குடுமி, வழித்தால் மொட்டை அப்ரோச் எடுப்பவர்கள். இப்போ சொல்லி பாருங்கள்…ஜெனிவா போன்ற இடங்களில் தடை செய்யபட்ட விடயங்களை தூக்கி பிடியாமல் - நாம் ஒரு சிவில் அமைப்பாக இதை அணுக வேண்டும் என - அப்போ என்னை வெளுத்த பலர் இப்போ இதை ஏற்பார்கள்.
-
கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடியில் ஈடுபட்டவரால் யாழில் பரபரப்பு!
மாற்றியது கட்சியையா, கச்சையையா🤣
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
ரஜனி இறப்பின் பின் உருட்டபடகூடிய கம்பி கட்டும் கதைகள்…. ஒரு முன்னோட்டம்….: முள்ளும் மலரும் படத்தை என்னை ரிமேக் பண்ண சொல்லி ரஜனி கெஞ்சினார்… பாஷா படத்தில் அவர் வேடத்தில் நான் நடித்திருந்தால் இன்னும் நன்றாக போயிருக்கும் என்றார்…. என்னை சந்தித்த பின்பே ரஜனியை தமிழக மக்கள் அறிந்துகொண்டனர்… ரஜனி எனக்கு ஓரங்குட்டான் ஊத்தப்பம் சுட்டு தந்தார்…. ஒரங்குட்டான் ஊத்தப்பத்தில் …நான் முடியை நீக்கி விட்டு சாப்பிட்டதை ரவிந்திரன் துரைசாமி குறிபெடுத்து ரஜனியிடம் சொன்னார். என் போயஸ்கார்டன் வீடு, பண்ணை வீடு, சகல சொத்துக்களையும் இனி நீங்கள்தான் உங்கள் சொத்து போல நிர்வகிக்க வேண்டும் என சாகும் தறுவாயில் ரஜனி எனக்கு வாய்ஸ்மெயில் வைத்தார்.
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
இது நியாயமான விமர்சனம். தனியே ஆன்லைனில் அரசியல் செய்தால் அண்ணன் சீமான் போல் டிவிட்டரில்தான் மந்திரி சபை கூட்ட வேண்டி வரும் என்பதை விஜை உணரவேண்டும். அதிமுக விஜை விழுங்கி விடுவார் என பயப்படுகிறது. ஆனால் கூட்டணி தேவை. அதிமுக+விஜை கூட்டணி உருவானால், வாக்கை பிரித்து திமுகவுக்கு உதவாமால் அண்ணன் சீமான் போட்டியில் இருந்து விலகி, (ஆடை) நெய்தல் படையை ரஸ்யா, சீனா, அமேரிக்கன் நேவிகளுக்கு சவால் விடும் படையாக வளர்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் 🤣.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஜேவிபி நாட்டை ஒட்டு மொத்தமாக கியூபா போல், ஜனநாயகமற்ற ஒரு கம்யூனிச நாடாக்க போராடினார்கள். புலிகள் நாட்டின் ஒரு பகுதியை தமிழீழ குடியரசாக்க போராடினார்கள். சோசலிச ஜனநாயக இலங்கை குடியரசின் இருப்புக்கு இரெண்டு போராட்டங்களும் ஏற்படுத்திய ஆபத்து ஒரே மாதிரியானதே. ஆனால் வேறுபாடு ஒன்று பெளத்த சிங்கள மேலாண்மையை பேணும், மற்றையது நாட்டின் வட-கிழக்கில் இந்த மேலாண்மைக்கு சாவு மணி அடிக்கும். இந்த வேறுபாடுதான், இருவரையும் வேறு விதமாக கையாள அடிப்படை காரணம். புலிகளை போல, ருகுணு தனிராச்சியம் கோரி தெற்கில் ஒரு சிங்கள் குழு போராடி இருந்தால் -அதுவும் கூட ஜேவிபி போல் மன்னிக்கப்பட்டிருக்கும்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
@Kandiah57 @ரசோதரன் புலிகள் ஆயுதத்தை மெளனித்த போது…. புலம் பெயர் மக்களே எம் கொடியை தூக்கி செல்லுங்கள்…. என்றோ… புலம்பெயர் மக்களே எம்மை உலக அரங்கில் புனிதர்களாக்குங்கள் என்றோ கேட்டகவில்லை. அவர்கள் தாம் உலக அளவில் ஒரு toxic brand ஆக வந்து விட்டோம் என்று தெரிந்தே…அத்தோடு நிறுத்தினார்கள். தொடர்ந்து புலம்பெயர் சமூகம் ஒரு பொறுப்பான சிவில் கட்டமைப்பை நிறுவி, அதில் 2009 மே யிற்கு முற்பட்ட எதையும் கலக்காமல் - தாயக அரசியலையும் கூட்டிணைத்து பயணித்து இருந்தால் 15 வருடத்தில் பலதை சாதித்திருக்கலாம். ஆனால் நடந்தது இதற்கு நேர் எதிரானது. இனியும் திருந்தவாய்ப்புள்ளது. வாய்ப்பை பிடிப்பதும் விடுவதும் நம் கையில்தான் உண்டு.
-
கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடியில் ஈடுபட்டவரால் யாழில் பரபரப்பு!
இங்கே எழுதப்படும் பிரதேசவாத பின்னூட்டங்கள் கண்டிக்கப்பட வேண்டியன. டக்லஸ் இருந்த போது போடாத பூட்டா? இப்போ சந்திரசேகரன் பூட்டு போட்டதும் கோவம் வருகிறதா? இது வெறும் சந்திரசேகரோபோபியா🤣 இவ்வண், -முந்தநாள் அனுரவுக்கு மாறியோர் சங்கம்-
-
உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
ஆபத்தில் உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். தனி - பத்திரம்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
காத்திரமான கேள்விகள் @island. இரவு பதில் போடுகிறேன்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
புலம்பெயர் தேசத்தில் என்ன ஹைகோர்டையா அகற்றுகிறீர்கள்? இதற்கான விடை 2008 மாவீரர் நாள் உரையில் உள்ளது. புலம்பெயர் தேசத்தில் எஞ்சியோர் அந்த உரையில் சொன்னதுக்கு விசுவாசமாக இருந்தாலே, நடந்தாலே - பாதி கிணறு தாண்டிய மாதிரித்தான். எந்த வேலையும் கூடாத வேலை இல்லை? ஆனால் உங்கள் பிள்ளைகள் எவரையும் படிக்காதே, மாடு மேய் என நீங்கள் வழிநடத்தவில்லைத்தானே அண்ணை? அப்படித்தான் இதுவும்… மாடு மேய்தால் (இலங்கை தேசியம்), தினமும் சாணியோடு வாழ்க்கை போகும்🤣. படித்து ஒரு வேலை எடுத்தால் (தமிழ் தேசிய சுயநிர்ணயம்) கொஞ்சம் ரிலாக்ஸ்டா வாழலாம்.
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
திமுக நான் இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை. ஆனால் இப்போ தவெக பக்கம் மனசு அலைபாய்வது உண்மை. நான் விரும்பும் சகல கொள்கை நிலைப்பாடும் அங்கே இருப்பதால்… ஒரு சின்ன ப்ரோ-மான்ஸ்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
புலிகளை போலவே அதே வன்முறையை அவர்களை விட கொஞ்சம் அதிகமாகவே செய்த அமைப்பு ஜேவிபி. ஆனால் விஜேவீர இறந்த பின் அவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படலாம் என அவர்கள் மேல் வைத்த நம்பிக்கையை, புலிகளின் உறுப்பினர் மீது இன்னும் வைக்க முடியவில்லை. ஏன்? இனவாதம் பார்வை. ஜேவிபி ஜனநாயகம் மூலமும் வென்றாலும் பெளத்த-சிங்கள வாதத்தைதான் தூக்கி பிடிக்கும். ஆகவே அவர்களை ஏற்கலாம். ஆனால் புலிகள் ஜனநாயகத்தில் வென்றால் அது மாநில சுயாட்சி உடைய ஒரு தமிழ் அரசில் போய் முடியும் - அது ஒட்டு மொத்த இலங்கையும் பெளத்த சிங்களத்துக்கு உரிய தீவு என்ற பேரினவாதத்துக்கு உகந்ததத்தல்ல. ஆகவே ஜேவிபிக்கு ரிப்பீட்டு, புலிகளுக்கு அப்பீட்டு. இலங்கையில் ஒவ்வொரு துகளும் நகர்வது பெளத்த-சிங்கள மேலாண்மைவாத அடிப்படையில்தான். 75 வருடம் கழித்து இலங்கை தமிழருக்கு இதை எழுதி விளங்கவைக்க வேண்டி இருப்பதே காலக்கொடுமை. நெருப்பை தொட்டுத்தான் சுடும் என அறிய வேண்டும் என அடம்பிடித்தால் உங்கள் இஸ்டம். ஆனால் @குமாரசாமி அண்ணை இனிமேல் தயவு செய்து பொன்னம்பலம் இராமாநாதன் பிழை விட்டார் என எழுத வேண்டாம் அந்த தார்மீக உரிமை உங்களுக்கு இல்லை. இத்தனைக்கும் பின் அனுரவை நீங்கள் நம்பி நாலு, ஒரு வருடம் கொடுக்க தயார் எனில், புதிய சுதந்திர நாடான இலங்கையில் எல்லோரும் சமமாக வாழலாம் என அவர் சிங்களவர்களை நம்பியது தப்பே அல்ல.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஆகவே சிந்திக்க வேண்டியது எப்படி அளுத்தம் கொடுக்கும் அரசியலாக எமது அரசியலை மாற்றுவது என்பதே. நல்லா படிச்சாத்தான் சோதனை பாஸ்பண்ணலாம் எண்டு சொன்னால், அது நம்மாள முடியாதே எண்டு விட்டு மாடு மேய்க்க போகலாம்… அல்லது முயன்று படித்து பாஸ் பண்ணலாம். நீங்கள் நாம் இனி மாடு மேய்க்கத்தான் இலாயக்கு என்கிறீர்கள். நான் இல்லை படிக்க இன்னும் அவகாசம் இருக்கிறது என்கிறேன். நன்மை செய்யமாட்டர் என சொல்லவில்லை. நமக்கு அதிகாரத்தை பரவலாக்க மாட்டார் என்றே சொல்கிறேன்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
அவர்கள் எல்லாரையும் துரோகி பைக்குள் போட்டு வெளுத்தது உண்மை. தனிநாடே தீர்வு என நாண்டு கொண்டு நிண்டதும் உண்மை. ஆனால் இவர்கள்தான் இப்போ….பொறுப்பம்…பாப்பம் என்கிறவர்களாக அதிகம் இருக்கிறார்கள். சிலர் அடுத்த படிக்கு போய்…ஜனாதிபதி தேர்தலின் பின் என் பி பிக்கு ஆதரவு வீடியோ செய்திகள் கூட வெளியிடுகிறார்கள். நீங்கள் வேறு ஏதும் யாழ்களத்தை பார்கிறீர்களோ தெரியாது அண்ணா, நான், வாத்தியார் அண்ணா, ஓணாண்டி போல நடைமுறை சாத்தியமான தமிழ் தேசியம் பேசியோரே இன்று அனுரவை எதிர்கிறோம். மற்றைய பக்கம் பார்த்தீர்களானால் அனுர பிரிகேட்டில் நிற்பவர்கள் எல்லாம் 24 கரட் தமிழ் தேசியவாதிகள் என தம்மை சொல்லிகொண்டோர். இதில் விசுகு அண்ணா, புலவர் இருவர் மட்டுமே விதிவிலக்குகள். இதில் ஆக சிறந்த நகைசுவை என்னவென்றால் ….இந்த பார்ப்போம், பொறுப்போம் மறைமுக அனுர ஆதரவாளரும், நேரடியாக அனுரவை ஆதரிப்போரும் - பலர் மானசீக யாழ்கள தேர்தலில் சாத்தியமே இல்லாத ஒரு நாடு, இரு தேசத்தை கோரும் சைக்கிளுக்கு வாக்கு போட்டவர்கள். முடியை பிச்சு கொள்ளாத குறைதான்🤣. இன்னுமொரு விடயம். அவர்கள் எல்லோரையும் துரோகி பைக்குள் போட்டு வெளுத்ததை போலவே, அனுரவை எதிர்க்கும், இது அதே பழைய இனவாதம் தான் என கூறும் அனைவரையும், நீங்களும் “தமது இருப்புக்கு குந்தகம் விளைகிறது என அஞ்சும் தரப்பு” என்ற பைக்குள் போட்டு அடிக்க முனைவதாக எனக்குப்படுகிறது. நிச்சயம் இப்படி பயப்படும் சுயநலமிகள் இருக்கவே செய்வார்கள். ஆனால் பெரும்பாலானோரின் அனுர மீதான சந்தேகம் - கொள்கையின் பால்பட்டதே.
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
அல்வா அல்ல, நல்ல மாத்தறை தொதோல் கிண்டி கொண்டு இருக்கிறார் அனுர… கொஞ்சம் காலம் எடுத்தாலும் சுடச் சுட கிடைக்கும்🤣.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இதுதான் பொயிட்ன். ரோகண விஜவீரவை சுட்டு கொன்றாலும் குடும்பத்தை திரிகோண மலை நேவி காம்பில் பல பத்து வருடங்களாக பேணினார்கள். ஆனால் பாலச்சந்திரனை? ஏன்? இனவாதம். இந்த இனத்துக்கு ஒரு துரும்பும் கிடைக்க கூடாது. ஜேவிபியை 1987 இல் மீள தடை செய்தார்கள். ஆனால் 1990 இல் இருந்து தடை நீக்கி ஜனநாயக நீரோட்டத்தில் இணைய விட்டார்கள். இதையேதான், நடேசன், புலித்தேவன் மூலம் புலிகள் செய்ய முயன்றார்கள். அதாவது ஆயுத மெளனிப்புக்கு பின், சில காலம் முகாமில் இருந்து விட்டு, பின் வெளியே வந்து, புலிகளை ஜனநாயக நீரோட்டத்தில் இணைக்கும் பணியை மேற்கொள்வது. ஆனால் சோமவன்ச போல, நடேசன் உயிருடன் வாழ அனுமதிக்க படவில்லை. ஏன்? இனவாதம். மறுபடியும் சுயநிர்ணய கோரிக்கை எழும்ப விட கூடாது. 89 க்கு பின் ஜேவிபியை கையாண்டது போல் 2009 க்கு பின்னாக புலிகளை கையாளவில்லை இலங்கை அரசு. ஒரே காரணம் இனவாதம். அப்படி கையாண்டிருந்தால் - புலிகள் இப்போ ஜனநாயக நீரோட்டத்தில் இருப்பார்கள், இலங்கையே தடை செய்யவில்லை எனும் போது உலக நாடுகளும் தடையை விலக்கி இருக்கும். விஜேவீர போல, தலைவர் படத்தை தரவேற்றுவதும் ஒரு குற்றமாக கருதப்பட்டிருக்காது. முழு நாட்டையுமே ஆயுத புரட்சிமூலம் கைபற்ற முயன்று பல அப்பாவி சிங்களாவரை கொலை செய்த ஜேவிபிக்கு 3 வருடத்தில் புனர்வாழ்வு, ஆனால் 15 வருடம் கழிந்தும், நாட்டின் 1/3 பகுதிகை மட்டுமெ கைப்பற்ற முனைந்த புலிகளுக்கு இன்றும் தடை. ஒரு குழு சிங்களவர், மற்றையது தமிழர். இதுதான் இனவாதம்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
சிங்களவர் அனுர செய்வதை எல்லாம் எதிர்க்க வேண்டியதில்லை. ஆனால் அவர் முன்னர் என்ன செய்தார், இப்போ என்ன செய்கிறார் என பார்த்தால் - இது பழைய அதே இனவாதக்கள்ளு, புதிய மொந்தையில் என்பது விளங்கும். அதுவே எதிர்ப்பதன் அடிப்படை. லிங்கன் பற்றி சொல்லி இருந்தீர்கள் (ஆண்டு பிழையான தரவு) - தனிப்பட்ட ரீதியாக அவர் அடிமைதனத்தை வெறுத்தாலும், அரசியலில் அவர் கூட ஆரம்பத்தில் அடிமை ஒழிப்பை (emancipation ) தன் கொள்கையாக கொள்ளவில்லை, அடிமைத்தனத்தை தொடராது அழிப்பதே அவர் விரும்பிய நகர்வாக இருந்தது, ஆனால் சிவில் யுத்த கால புறச்சூழல் இதை சாத்தியமாக்கியது. அதன் பின் அடிமை ஒழிப்பு 13 வது சரத்தும் யுத்தத்தின் பின் நிறைவேறியது. அடக்குமுறையாளன் ஒரு போதும் தானாக அடக்கபடுவனுக்கு உரிமையை தரமாட்டான். அழுதால்தால் தாயே பிள்ளைக்கு பால் கொடுப்பாள். அடக்கபடுபவன் போராட வேண்டும், புறச்சூழலை தனக்கு ஏற்ப வளைக்க வேண்டும், அப்போ வேறு வழியின்றி அடக்குமுறையாளன் இறங்கி வருவான். உலக வரலாறு எங்கும் இதுவே நடந்தது, நடக்கும். ஆனால் அப்படி ஒரு புறச்சூழல் இப்போ இலங்கையில் இல்லை. இலங்கையில் நடப்பது அடக்குமுறையாளன் தன் அடக்குமுறையை நிறுவனமயப்படுத்தும் வேலை. அதாவது ஈரச்சாக்கு இலங்கை தேசியம் என்ற பெயரில் எம் உரிமைகளை அடித்து நூப்பது.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இது @island ஐலண்ட் எடுக்கும் நிலைக்கு நேர் எதிரான நிலை. ஆனால் நீங்கள் இருவரும் வந்து சேர்ந்துள்ள final destination ஒன்றேதான். அவர் எமது சுயநிர்ணயத்துக்கான போராட்டம் தோற்றதன் முழு அல்லது பாரிய பழியை புலிகள்+ஏனைய 75 வருட தலைவர்கள் மீது போட்டு, இனி மடிப்பிச்சைதான் (இலங்கை தேசியம்) ஒரே வழி என்கிறார். நீங்கள் அதே பழியை சர்வதேசம் (மேற்கு ரஸ்யாவை சொன்னால் உங்களுக்கு கோவம் வரும்) + புலிகள் தவிர் தலைமைகள் மேல் போட்டு, இப்போ மடிப்பிச்சைதான் ஒரே வழி என்கிறீர்கள். நீங்களும் ஐலன்டும் ஒரே இடத்தில் இருப்பது அபூர்வம், gentleman please enjoy each other’s company 🤣. ஆனால் இன்னும் முன்நோக்கி பார்க்க அவகாசம் இருக்கிறது. மடிப்பிச்சைக்கு மேலேயும் பெற வாய்புண்டு. இப்போதும் ஜனநாயக வழியில், முஸ்லிம்களுக்கு அவர்கள் மறுக்க முடியாத ஒரு offer ஐ கொடுத்து, புலம்பெயர் சமூகம், சகல புலத்து சக்திகளும் ஒன்றுபட்டால் - ஒரு காத்திரமான அதிகார பகிர்வு நோக்கி பேரினவாதத்தை தள்ள முடியும். ஆனால் அதற்கு பழசை மறந்து எல்லோரும் ஒரு அணியில் வரவேண்டும்.
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
அமித்ஷா பிளான் பத்து நாட்களுக்குள் நமுத்து போய்விட்டதால்…. இப்போதைக்கு சங்கி-மங்கி இணைப்பு தள்ளி வைக்கைப்படுகிறது. -இவ்வண்- அண்ணாமலை
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
அனுர மீட்பர் வந்துள்ளார் எனவே இனி இலங்கையிம் யூகே போல் ஒரு சட்டத்தின் ஆளுமைக்கு உட்பட்ட தேசம் என நம்பி போனார் போலுள்ளது. எனக்கு ஒரே ஒரு பயம்தான். இப்ப @kandiah அண்ணை வந்து, இவர் பயங்கரவாதிதானே - இவரை உள்ளே போட்டது சரிதானே என எழுதப்போகிறார் என்பதே🤣.