Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அனுர மீட்பர் வந்துள்ளார் எனவே இனி இலங்கையிம் யூகே போல் ஒரு சட்டத்தின் ஆளுமைக்கு உட்பட்ட தேசம் என நம்பி போனார் போலுள்ளது. எனக்கு ஒரே ஒரு பயம்தான். இப்ப @kandiah அண்ணை வந்து, இவர் பயங்கரவாதிதானே - இவரை உள்ளே போட்டது சரிதானே என எழுதப்போகிறார் என்பதே🤣.
  2. மீட்பர் அனுரவுக்கு தூரப்பார்வை. அருகே இருப்பவை எதுவும் தெரியாது, சில ஆயிரம் மைலுக்கு அப்பால் எண்டால் கொதித்திடுவார், கொதித்து🤣
  3. இதை நான் தேர்தலுக்கு முன் நடக்கும் என கூறிய போது நீங்கள் சங்தேகப்பட்டீர்கள். ஒரு அனுரசார்பு வீடியோவுக்கு 2.5 இலட்சம் என சொல்லிகிறனர். ஆனால் நான் நம்பவில்லை. இவர்கள் லைக்ஸ் மூலம் உழைக்கவே இப்படி நட்ச்க்கிறனர்.
  4. எல்லாரும் “வடமராட்சி அங்கிள்” கொடுத்த மயக்க மருத்து தடவிய இனிப்பில் மதிமயங்கி விட்டார்கள்🤣. அருமை.
  5. மேலே உள்ள தீ கக்காத தமிழ் தேசியவாதியில் என்னையும் அடக்கலாம் என நினைக்கிறேன். ஏற்றுகொள்கிறேன் வடமாகாணத்தில் 5 சீட் என் பி பி க்கு போனது முதல் எனக்கு palpable fear தான். இது என் எம்பி சீட் போய்விடும் என்றோ, அல்லது என் வருவாய் பாதிக்கும் என்றோ வரும் பயம் அல்ல. பிரிந்து போன வாக்குகளை கூட்டினால் எமது மக்கள் இன்னும் சுயநிர்ணயம் வேண்டியே நிற்கிறனர். கிழக்கில் சந்தேகமே இல்லை 4 சீட் எடுக்க வேண்டிய இடத்தில் 5 சீட்டை தமிழரசுக்கு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் அவர்களை அனுர தன் மனங்களை வெல்லும் அதாவது ஈரச்சாக்கு அரசியல் மூலம் ஒற்றை இலங்கைக்குள் அமிழ்த்தி விடுவாரா என்ற பயம் எனக்கு தொற்றியுள்ளது கண்கூடு. ஆனால் வடமராட்சி அங்கிள் போல, அனுரவும் ஒரு temporary relief ஐ மட்டுமே தருவார். அதுவும் ஒரு அளவில்தான். அங்கிள் நாளைக்கு ரிடையர் ஆகி போனபின் வரும் அடுத்த ஆள் நம்மை அடிமை செய்வார் என்கிறது நம் பட்டறிவு. எனது மட்டும் அல்ல பலரின் பயமும் இதுதான். இது எமது சுயநலம் சம்பந்தபட்டது அல்ல. யாழ்பாணம், மட்டகளப்பு, கொழும்பை போல் சிங்களமகமாகினால் எனக்கு அது தனிப்பட்டு வசதியாகவே இருக்கும். ஆனால் நம் சுயநிர்ணய கோரிக்கை அறம் மிக்கது, நியாயமானது, இதற்க்காக நாம் கொடுத்த விலை அதிகம். வெற்று தற்காலிக சலுகைகள், அனுர என்ற ஒருவரின் இமேஜை வைத்து எம்மை காலாகாலத்துக்கும் சுய உரிமை அற்றவர்களா மாற்றப்போகிறார்கள் என்பதே நீங்கள் காணும் palpable fear. ———- தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரை கண்ணீரால் காத்தோம், கருக திருவுளமோ. இதுதான் மேலே ஜஸ்டின் அண்ணா சொன்ன மனங்களை வெல்லும் “வடமராட்சி அங்கிள் பொலிடிக்ஸ்” , நான் எழுதிய 75 வருட யுத்தத்தின் 3ம் அத்தியாயம்.
  6. யூகே யில் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு பிட்காயின் தருவோம் என யாரும் கூறினால் (அது நம்பும்படியாக இருந்தால்) ஸ்டாமரும் இல்லை, லேபரும் இல்லை, கன்சேவேடிவும் இல்லை. உலகமும் முழுதும் இதுதான் நியதி.
  7. இங்கேதான் நீங்களும் சுமந்திரனும் பிழை விட்டீர்கள். நீங்களோ, நானோ, சுமந்திரனோ புலிகளின் பிரதிநிதிகள் அல்ல. நாம் எம்மக்களின் பிரதிநிதிகள். நாம் கோருவது எம் மக்களுக்கு இலங்கை அரசு இழைத்த அநீதிக்கான விசராணையை. அதை நாம் கோருவது அதனை ஒரு துரும்பாக பாவித்து ஒரு நியாயமான தீர்வை எட்ட. புலிகள் செய்தவை பற்றி எமக்கு கவலை இல்லை. அதை பாவித்து இப்போ எம் மக்களுக்கு நாம் ஒரு தீர்வை பெற முடியாது. ஆகவே அதை பற்றி நாம் கதைக்க வேண்டியதில்லை (நமக்குள் வரலாற்றில் இருந்து கற்று கொள்வதற்காக கதைப்பது அல்ல). இலங்கை அதை பேச விரும்பினால் போய், புலிகள் இருந்தால் அவர்களுடன், அல்லது அவர்களின் பிரதிநிதிகள் என யாரும் இருந்தால் அவர்களுடன் பேசட்டும், விசாரிக்கட்டும். நாம் புலிகள் அல்ல. தமிழர். புலிகள் செய்தவற்றுக்கு பொதுமக்களாகிய நாம் ஒரு போதும் பொறுப்பு கூற வேண்டியதில்லை. ஆனால் இலங்கை படைகள் செய்தமைக்கு, யார் ஆட்சிக்கு வந்தால் இலங்கை அரசே பொறுப்பு. நாம் கோருவது எமக்கான நியாயமான விசாரணையை. இதில் சுமந்திரன் தன் வகிபாகத்தை மீறி, எமது மக்களின் பிரதிநிதியாக அல்லாமல் - தானே ஐ சி சி நீதிபதிபோல் கதைக்க வெளிகிட்டுத்தான், சகலதையும் கவிழ்த்து கொட்டினார்.
  8. இதில் ஆச்சரியமான விடயம் ஏதும் இல்லை. ஆனால் இதை நாம் ஏற்று கொள்ளாமல் போராட வேண்டும். அரசியல் என்றால் அதுதானே? அதுவும் விடுதலை அரசியல். விசாரணையால் நமக்கு என்ன நட்ட ஈடா வரப்போகிறது, இல்லை? அதை பயன்படுத்தி - நமக்கு ஒரு தீர்வை அடைய இப்போதும் வழி இருக்கிறது. நாம் ஒற்றுமையாக செயல்பட்டால்.
  9. அது கொள்கையை மக்கள் நிராகதித்தமை அல்ல. ஜனாதிபதி தேர்தலில் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பது புத்திசாலித்தனம் அல்ல என மக்கள் நினைக்கவில்லை. அத்தோடு தமிழரசு கட்சி அதை ஆதரிக்கவில்லை. இப்படியான நிலையில் இந்த மாதிரி ஒரு வேட்பாளரை நிறுத்துவது சரியா, பிழையா என யாழில் நான் கேள்வி எழுப்பி - அப்படி நிறுத்தின் எல்லோரும் உடன்பட்டு நிறுத்த வேண்டும் என்று எழுதினேன். அதன் பின் வரவில்லை, ஆனால் @நிழலி தொடர்ந்து இது எதிர்மறையான விழைவைதரும் என எழுதினார். அதுதான் நடந்தது. சின்ன வயதில் படித்த ஒற்றுமை அற்ற எருதுகளின் கதைதான். நாம் ஒற்றுமையாக ஒரே அணியில் திரளாதவரை, வாக்குப்பலமும், செயல்பலமும், சிதறிக்கொண்டே இருக்கும்.
  10. இதில் முரண்பட முடியாது. ஆனால்…. இது உண்மையிலேயே தந்திரோபாயம் அல்ல. எழுதுபவகளின் குறைகளை விடுத்து விட்டு, அவர்களின் cherry picking ஐ தவிர்த்து விட்டு, அவர்கள் சொல்லும் விடயத்தினை மட்டும் அணுகுவதே நாம் செய்ய கூடியது என நினைக்கிறேன். அந்த விடயம் யாதெனில்… எல்லோரும் பிழை விட்டுள்ளார்கள், விட்டுள்ளோம். இதில் புலிகள் பிழை விட்டார்கள் என இவர்கள் சாகும் வரை ஏற்கப்போவதில்லை, அதை மீள, மீள சொல்லிக்கொண்டிருந்தால் எல்லோரும் ஒரே இடத்தில் நிண்டு சுத்த வேண்டியதே. ஆகவேதான் அதை அப்படியே விட்டு விட்டு, ஒத்த கருத்துக்கள் மீது கவனம் வைக்கிறேன். நம்மை வேறுபடுத்தும் கருத்துக்களை மீள, மீள உரைக்கும் போது ஒன்றாக முன்பே போவது இயலாத காரியமாகிறது. யாழ் ஒரு சிறுதுளி. எம் இனத்தின் அரசியல் அதன் பெரிய ஸ்கேல்.
  11. எது பயங்கரவாத தடை சட்டம்தானே? அதைத்தான் எதிர்கட்சியில் இருக்கும் போது மோசமான நீக்கப்படவேண்டிய சட்டம் என்றீர்களே? அதை நீக்கிவிட்டால் பிரச்சனை பலதுதானாக தீருமே?
  12. இப்போ இருக்கும் சட்டத்தை வைத்து, இப்போ பேசியதற்க்காக, விமல், சரத், உதயவை இன்றே கைது செய்யலாம். ஐ ஆம் வெயிட்டிங் அனுர.
  13. நீங்கள் என்னை நோக்கி எழுதவில்லை என்பதை ஊகித்தே இருந்தேன். ஆனால் 75 வருடமாக சுயநிர்ண கோரிக்கையை போட்டடித்த படியால் இனி அதை கேட்ட கூடாது என்பது தர்க ரீதியான நிலைப்பாடாக எனக்கு தெரியவில்லை. ஒரு காலம் இருந்தது 2009 இன் பின்னர் கூட பல புலம்பெயர் ஆட்கள் தனி நாட்டு கனவில் இருந்தார்கள். ஆனால் இப்போ அவர்களே எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு, அனுர சரணம் கச்சாமி என்று பாடுகிறார்கள். ஆனால் 2024 தேர்தலிலும், எமது மக்கள் சுயநிர்ணயம் கோரும் கட்சிகளுக்கே வடக்கு கிழக்கில் பெரும்பான்மை வாக்கை அளித்துள்ளனர். வாக்குகள் சிதறின என்பதுதான் உண்மை. மக்கள், நீங்கள் இப்போ உந்திதள்ளும், அனுரவின் ஈரச்சாக்கு இலங்கை தேசியம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்ந்தே வாக்களித்துள்ளனர். இதைதான் மேலே கட்டுரை சொல்கிறது. நிலமை இப்படி இருக்க, உங்கள் நிலைப்பாடு ஊரில் உள்ள மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாகவும், ஜனநாயக கேடானாதாகவும் எனக்கு படுகிறது.
  14. மிகச்சரியான கூற்று வசி. கீழே இருப்பது 2019 மாவீரர்நாள். கோட்ட அபய பதவிக்கு வந்த 10 நாளில் மக்கள் நினைவேந்தியது. எம் உறவுகளை நினைவுகூற எவரின் அனுமதிக்கும் எம் மக்கள் காத்து நின்றதில்லை. இதை அனுர அனுமதிக்கவும் இல்லை. அனுமதிக்காவிடினும் நடந்திருக்கும். இது ஏதோ புதுவிடயம் போல் சிலர் அனுரவுக்கு காவடி எடுக்கிறனர்.
  15. 1. சிங்களவர்கள் இருவரும் பழைய புலிகளின் சின்னம் பொறித்த நிகழ்வுகளை வீடியோவை பகிர்ந்து - இப்போ நடக்கிறது என பொய் வதந்தி பரப்பி உள்ளனர். 2. சுன்னாக ஆள் பற்றி தெரியவில்லை, ஆனால் மற்றையவர் நினைவுகூரும் விதமாக தலைவர் படத்தை ஏற்றியுள்ளார். 3. இரெண்டும் ஒன்றல்ல. ஆனால் அனுர ஆதரவாளர்கள் அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்கி, அரசு நடுநிலையாக நடப்பது போல் காட்டவிழைகிறார்கள்.
  16. மிக மோசமாக இலங்கையின் கட்டமைக்கப்பட்ட இனவாதத்துக்கு நன்றாக முட்டு கொடுக்கிறீர்கள் அண்ணை. பிரித்தானியாவில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து போகலாம் மக்கள் ஆதரவு இருப்பின். கியூபெக்கிலும் இதுவே நிலமை. ஆனால் இலங்கையில் ஒரு பா உ, பாராளுமன்ற சிறப்புரிமையை பாவித்து பாராளுமன்றின் உள்ளே கூட இதை பேச முடியாது. முடிந்தால் 6 ம் திருத்தத்தை நீக்கி விட்டு வரச்சொல்லுங்கள் பார்க்கலாம். பிரிந்து போகும் உரிமை கூட அல்ல, எமது மண்ணில் எம்மை நாமே ஆளவேண்டும் என்பதில், 13 ஐ முற்றாக அமல்படுத்துங்கள் என கோருவதில் எந்த உணர்சி அரசியலும் இல்லை. அதே போல் அரசியல் தலைவரின் படத்தை தரவேற்றுவது உணர்சி அரசியல் என்றால் - ரோகண விஜேவீரா படத்தை ஏற்றுவோரும் கைதால வேண்டும்.
  17. மேலே நீங்கள் இல்லை, ஒரு போதும் இல்லை என கூறியவற்றை விட அறவே வாய்ப்பில்லை சிங்களவர் எமக்கு சுயாட்சி தர.
  18. இங்கே யார் இப்போ ஊரில் உள்ள மக்களை ஆயுதம் ஏந்தி போராடும் படி அறைகூவல் விடுத்தது? ஏன் நடக்காத ஒன்றை நடப்பதாக சொல்கிறீர்கள்?
  19. அதுதான் போர் முடிந்து விட்டதே. மக்கள் என் பி பிக்கு யாழ் தேர்தல் மாவட்டத்தையே தந்து விட்டார்களே. எல்லாரும் ஒன்று பட்ட இலங்கையர் எனும் போது போர் அபாயம் எங்கே இருந்து வருகிறது? சீனா, இந்தியா, சார்க நாடுகள் எல்லாவற்றுடனும் நட்புறவுதானே? ஏன் மீட்பர் அனுரவின் அரசு இராணுவத்தை 75% ஆல் குறைக்க முடியாது. முடியாது? ஏன் என்றால் அடக்கி, இராணுவ பூட்சில் மிதித்து வைத்துள்ள தமிழரின் சுயநிர்ணய வேட்கை மீள கிளம்பி விடும்.
  20. இல்லை இதை இப்படி பாருங்கள்: 1. இந்த தாயை ஏன் அழைத்தனர்? 3 மாவீரரின் தாய் என்பதால் 2. அப்போ கெளரவம் யாருக்கு? தாய்கா அல்லது அந்த 3 மாவீரருக்கா? 3 மாவீரருக்கானது, அவர்கள் சார்பில் அந்த கெளரவத்தை தாய் பெறுகிறார். 3. அப்போ அவரை தக்க முறையில் விளக்கம் கொடுக்காமல் திருப்பி அனுப்பினால், இன்னும் மன்னிப்பு கேட்காமல் தெனாவெட்டாக இருந்தால் யாரின் தியாகம் உதாசீனப்படுத்த படுகிறது? அந்த 3 மாவீரரின் தியாகம். 4. இது மாவீரர் தியாகத்தை எப்படி சுயநலமாக கிள்ளு கீரை போல் சிறி பாவிக்கிறார் என்பதை காட்டி நிற்கிறது. இதுதான் கண்டிக்கப்படவேண்டியது. 5. டி டே நினைவு நிகழ்வுகளில் பிரான்சில் இருந்து அரைநாளில் ரிசி சுனாக் திரும்பினார். ஒட்டு மொத்த நாடும் அவரை போட்டு தாக்கி விட்டார்கள். மன்னிப்பு கேட்டும், தேர்தலில் தோற்க இதுவும் ஒரு காரணம் ஆகியது. தமக்காக அதி உட்ச தியாகத்தை செய்தோரை இப்படித்தான் ஒரு நாடு/இனம் நடத்த வேண்டும். இதில் மன்னிப்பே கேட்காமல் இருக்கும் சிறியின் தெனாவெட்டை வைத்து - மாவீரர் தியாகத்தை இவர் எப்படி நோக்குகிறார் என்பது புரிகிறது.
  21. உண்மையிலே உங்கள் நிலைப்பாட்டை புரிய முடியவில்லை. லைட்டரில் இருந்து வந்தாலும், நெருப்பு பெட்டியில் இருந்து வந்தாலும் - நெருப்பு, நெருப்புத்தான். இதை நெருப்பு (இனவாதம்) என நீங்களும் ஏற்கிறீர்கள். ஆனால் நெருப்பு சுடும் என எழுதினால் ஆரூடம் என்கிறீர்கள்.
  22. ஜேவிபி…. இலங்கையின் பெளத்த-சிங்கள மனோநிலை பற்றி புரிந்த எவருக்கும் இது மிக இலகுவாக புரியும். இது ஆரூடம் இல்லை. பட்டறிவு. நெருப்பு சுடும் என கூறுவது ஆரூடம் அல்ல தமிழர்கள் எண்டாலே பயங்கரவாதிகள் என்ற போக்கை அவர்கள்தான் கைவிடவேண்டும். இதற்காக நீங்கள் என்ன குமாரதெவியோ என பெயரையா மாற்ற முடியும். அடையாளத்தை துறக்கும் படி வற்புறுத்துவதை விட மிக கொடிய அடக்குமுறை எதுவுமில்லை.
  23. And likewise Goshan is also not opposing Chandrasekaran’s appointment on the basis that he is an outsider. The opposition stems from the fact that he is not someone who is directly elected by the people of the said district. Therefore he is being imposed upon the people of Jaffna by the Sinhala-Buddhist hegemony, in other words - the oppressors, against whom Mr Pirabakaran fought valiantly. எனக்கும் பிரதேசவாதம் எது, உள்ளூரியல், பிரதிநிதிதுவ ஜனநாயகம், அதிகார பரவலாக்கம், சுய நிர்ணயம் என்பன எவை, இவற்றுக்கிடையான வேறுபாடுகள் பற்றி சீரிய தெளிவு உள்ளது. இணைந்திருங்கள். பதில் எழுதும் போது நானும் எழுதுகிறேன். அவர்களே அவசரகால நிலையை தந்தார்கள். அவர்கள் அவசரகால நிலையை மாற்றவே மாட்டார்கள். முடிவு? மக்களுக்கு இது எப்போதும் வேண்டாம்?
  24. அருமையான கேள்வி. ஜே வி பி மனதார இந்த சட்டம் மோசமானது என காணில், 2/3 கூட தேவையில்லை, சாதாரண பெரும்பான்மையோடு ஒரு நாளில் சட்டத்தை ரத்து செய்யலாம். போர் முடிந்து 15 ஆண்டுகள் கழித்தும் இதை வைத்திருப்பது தமிழர்களின் சுயநிர்ணய குரல்களை மேலே செய்தது போல் நசுக்கவே. The most radical revolutionary will become a reactionary, the day after the revolution. மிகவும் முற்போக்கான புரட்சிவாதி, புரட்சியின் மறுநாள் பிற்போக்குவாதி ஆகிவிடுவான் என்கிறார் ஹனா அரெண்ட். ஜேவிபி புரட்சிக்கு முன்பே பக்கா இனவாதிகள், இவர்களாவது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாவது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.