Everything posted by goshan_che
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
இல்லை இதை இப்படி பாருங்கள்: 1. இந்த தாயை ஏன் அழைத்தனர்? 3 மாவீரரின் தாய் என்பதால் 2. அப்போ கெளரவம் யாருக்கு? தாய்கா அல்லது அந்த 3 மாவீரருக்கா? 3 மாவீரருக்கானது, அவர்கள் சார்பில் அந்த கெளரவத்தை தாய் பெறுகிறார். 3. அப்போ அவரை தக்க முறையில் விளக்கம் கொடுக்காமல் திருப்பி அனுப்பினால், இன்னும் மன்னிப்பு கேட்காமல் தெனாவெட்டாக இருந்தால் யாரின் தியாகம் உதாசீனப்படுத்த படுகிறது? அந்த 3 மாவீரரின் தியாகம். 4. இது மாவீரர் தியாகத்தை எப்படி சுயநலமாக கிள்ளு கீரை போல் சிறி பாவிக்கிறார் என்பதை காட்டி நிற்கிறது. இதுதான் கண்டிக்கப்படவேண்டியது. 5. டி டே நினைவு நிகழ்வுகளில் பிரான்சில் இருந்து அரைநாளில் ரிசி சுனாக் திரும்பினார். ஒட்டு மொத்த நாடும் அவரை போட்டு தாக்கி விட்டார்கள். மன்னிப்பு கேட்டும், தேர்தலில் தோற்க இதுவும் ஒரு காரணம் ஆகியது. தமக்காக அதி உட்ச தியாகத்தை செய்தோரை இப்படித்தான் ஒரு நாடு/இனம் நடத்த வேண்டும். இதில் மன்னிப்பே கேட்காமல் இருக்கும் சிறியின் தெனாவெட்டை வைத்து - மாவீரர் தியாகத்தை இவர் எப்படி நோக்குகிறார் என்பது புரிகிறது.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
உண்மையிலே உங்கள் நிலைப்பாட்டை புரிய முடியவில்லை. லைட்டரில் இருந்து வந்தாலும், நெருப்பு பெட்டியில் இருந்து வந்தாலும் - நெருப்பு, நெருப்புத்தான். இதை நெருப்பு (இனவாதம்) என நீங்களும் ஏற்கிறீர்கள். ஆனால் நெருப்பு சுடும் என எழுதினால் ஆரூடம் என்கிறீர்கள்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஜேவிபி…. இலங்கையின் பெளத்த-சிங்கள மனோநிலை பற்றி புரிந்த எவருக்கும் இது மிக இலகுவாக புரியும். இது ஆரூடம் இல்லை. பட்டறிவு. நெருப்பு சுடும் என கூறுவது ஆரூடம் அல்ல தமிழர்கள் எண்டாலே பயங்கரவாதிகள் என்ற போக்கை அவர்கள்தான் கைவிடவேண்டும். இதற்காக நீங்கள் என்ன குமாரதெவியோ என பெயரையா மாற்ற முடியும். அடையாளத்தை துறக்கும் படி வற்புறுத்துவதை விட மிக கொடிய அடக்குமுறை எதுவுமில்லை.
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
And likewise Goshan is also not opposing Chandrasekaran’s appointment on the basis that he is an outsider. The opposition stems from the fact that he is not someone who is directly elected by the people of the said district. Therefore he is being imposed upon the people of Jaffna by the Sinhala-Buddhist hegemony, in other words - the oppressors, against whom Mr Pirabakaran fought valiantly. எனக்கும் பிரதேசவாதம் எது, உள்ளூரியல், பிரதிநிதிதுவ ஜனநாயகம், அதிகார பரவலாக்கம், சுய நிர்ணயம் என்பன எவை, இவற்றுக்கிடையான வேறுபாடுகள் பற்றி சீரிய தெளிவு உள்ளது. இணைந்திருங்கள். பதில் எழுதும் போது நானும் எழுதுகிறேன். அவர்களே அவசரகால நிலையை தந்தார்கள். அவர்கள் அவசரகால நிலையை மாற்றவே மாட்டார்கள். முடிவு? மக்களுக்கு இது எப்போதும் வேண்டாம்?
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அருமையான கேள்வி. ஜே வி பி மனதார இந்த சட்டம் மோசமானது என காணில், 2/3 கூட தேவையில்லை, சாதாரண பெரும்பான்மையோடு ஒரு நாளில் சட்டத்தை ரத்து செய்யலாம். போர் முடிந்து 15 ஆண்டுகள் கழித்தும் இதை வைத்திருப்பது தமிழர்களின் சுயநிர்ணய குரல்களை மேலே செய்தது போல் நசுக்கவே. The most radical revolutionary will become a reactionary, the day after the revolution. மிகவும் முற்போக்கான புரட்சிவாதி, புரட்சியின் மறுநாள் பிற்போக்குவாதி ஆகிவிடுவான் என்கிறார் ஹனா அரெண்ட். ஜேவிபி புரட்சிக்கு முன்பே பக்கா இனவாதிகள், இவர்களாவது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாவது.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
பதில் சொல்ல முடியாத கேள்விகள். மக்கள் விடுதலை முண்ணனி (JVP), மக்கள் போராட்ட முண்ணனி வேறு வேறு அமைபுகள் என நினக்கிறேன். பொது எதிரியான கோட்ட வை எதிர்க்கும் போது ஒன்றாக வேலை செய்தனர்.
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
அவர் கட்சியில் என்னவாகவும் இருக்கட்டும். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு என்பது கட்சி குழு அல்ல. அதில் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர் வருவதுதான் ஜனநாயகம். You clearly don’t know the difference between xenophobia and a demand for self determination. Demanding that your elected representatives should be the ones deciding your fate is not xenophobia, it is the very essence of representative democracy. The clue is the the word “representative”. By your incorrect definition - Ghandi, Mandela and Pirabakaran will all be xenophobes which they clearly are not.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
காலத்துக்கு தேவையான கட்டுரை ரஞ்சித். இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் உங்கள் கேள்விக்கான பதில். இல்லை. அதை விட பன்மடங்கு கூடிய கண்ணை குருடாக்கி கொண்டு நம்பும் நம்பிக்கையை அனுர மீது வைக்கிறார்கள். குறிப்பாக புலம்பெயர் தமிழர்.
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
முஸ்லிம்கள், வடக்கு-கிழக்கு மாகாண தமிழர் மீது மிக மோசமான இன ஒதுக்கலை கடைப்பிடிக்கிறது இந்த அரசு. இதை கேள்வி கேட்டால்- கேட்க்கும் வாய்களை பிரதேசவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் என வாயை மூடப்பண்ணும் முயற்சி. ————- எங்கள் மாவீரகள் - இளமை நாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்… போர்களம் புகுந்து தமிழ் இனத்தின் கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்… இந்த நெருப்பை ஈரசாக்குகள் அணைக்க முடியாது.👇
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
அந்த மண்ணில் பிறந்தவர் என நான் எங்கும் எழுதவில்லை. அந்த மாவட்ட மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர். சந்திரசேகரன் இந்த தேர்தலிலும் யாழில் நின்று வென்றிருந்தால் - அப்போ இந்த கேள்வியே எழுந்திராது. இதை பிரதேசவாதம் என்று நீங்கள் கூறினால், நம்மை நாமே நிர்வகிக்க வேண்டும் என இந்த உலகில் ஒலிக்கும் அத்தனை குரல்களும் பிரதேசவாதம் என்றாகிவிடும்.
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
உங்களுக்கு எப்படியோ தெரியாது… கூப்பிட்டு விட்டு முகத்திலடிப்பது போல் திருப்பி அனுப்பினால் அநேக தமிழர்கள் அதை ஒரு அவமானமாகவே கருதுவர். மூன்று பிள்ளைகளை கொடுத்தவர் நாம் அட்வைஸ் எடுக்கும் அளவுக்கு இருக்கமாட்டார்தானே? ஆனால் என்ன செய்வது, பிள்ளைகளை போலவே கொஞ்சம் ரோசம் உள்ளவர் இந்த அம்மா என நினைக்கிறேன். ஏற்பாட்டில் பிழை என்பதல்ல தவறு…. அழைப்பை வழங்கியவர்தான்…தான் அந்த அழைப்புக்கு பொறுப்பு. கூப்பிட முதல் சரிபார்த்திருக்க வேணும், அல்லது இந்த அம்மா வரும் போது சிறி வாசலில் நின்று வரவேற்று , நடந்ததை விளக்கி அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அவருக்கு வேறு ஒரு கெளரவத்தை கொடுத்திருக்கலாம். எதையும் செய்யாமல் இவர் கூப்பிடுவாராம்…போனால் யாரோ திருப்பி அனுப்புவார்களாம்…இவர் எம் பி தோரணையில் அதை கண்டுகொள்ளாமல் ராஜபார்ட்டில் இருபாராம்…. இந்த டாம்பீகத்தையிம், சொறி சேட்டைகளையும் யாரும் வேலை தேடி வருவோர் பொறுத்து கொள்ளலாம்…. எல்லாரும் அப்படி இல்லை.
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு… ஊத்தி கொடுக்குறவன் பேச்சு இரவே போச்சு🤣
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
நான் ஒரு தொப்பி கடை வைத்திருக்கிறேன். வாடிக்கையாளர் தொப்பியை அளவுபார்த்து, அதை சரியான தொப்பி என வாசகர் இனம் கண்டால் நான் பொறுப்பல்ல. (வடையை சுட்ட காகம் உங்களை போல் அல்ல, அது சிரிப்புகுறிமட்டும் போட்டு விட்டு பறந்து விடும், மலை விழுங்கி காகம்).
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
சுமா, தயவு செய்து இந்த பொய் பித்தலாட்ட கதைகள் வேண்டாம். 1. மட்டகளப்புக்கு ஒரு யாழ் எம்பியை ஒருங்கிணைப்பாளராக போடுவதும், 2. நுவரலியாவுக்கு ஒரு மட்டகளப்பு எம்பியை ஒருங்கிணைப்பாளராக போடுவதும் எவ்வளவு பிழையோ அதை ஒத்த பிழைதான் இதுவும். இது அதிகாரபரவலாக்கம், localism சம்பந்தமானது. மாகாண அதிகாரம், மாநில சுயாட்சி கூட கொடுக்க வேண்டாம்….அந்த மாவட்ட மக்களின் மாவட்ட ஒருங்கிணைப்பை அந்த மாவட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மேற்கொள்வதே முறை. இது ஜனநாயகத்தின் அடிப்படை. டக்ளஸ், அங்கயன், விஜயகலா எல்லோரும் அந்த மாவட்ட மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள். சந்திரசேகரன் அப்படியல்ல. இது குறித்து எழுதுவது பிரதேசவாதம் அல்ல - குறித்த மாவட்ட மக்களை மட்டம் தட்டி, மலையக மக்களோடு அவர்களை கோத்து விடும் கீழான பேரினவாத அரசியலை வெளிக்காட்டுகிறோம் அவ்வளவே. முஸ்லிம்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை ஏன்? ஏன் என்றால் தகுதியான முஸ்லிம் எம்பிகள் என் பிப்பியில் இல்லை. அதே போல் யாழிலும் ஒரு தகுதியான என் பி பி எம்பி இல்லை? யாழ்மாவட்டத்தில் ஒரு முன்னாள் MS இருக்கிறார். அவரோடு ஒப்பீடு செய்தால் சந்திரசேகரனின் நிர்வாக அனுபவம் என்ன? ஏன் அவரை போட முடியாது? இதுதான் கேள்வி. எனக்கு தெரியும் பல வெள்ளை இனத்தவர் அனுரவை விட ஜனாதிபதியாக தகுதி உள்ளவர்கள் - ஏன் அவர்களை இலங்கை ஜனாதிபதியாக்குவதுதானே? டக்லஸ் வச்சிருந்த அதே சொப்பன சுந்தரி கடற்தொழில் அமைச்சுத்தான் இவருக்கும். யார் குற்றியாவது அரிசியாகட்டும் என்றால் துரையப்பாவையே குத்த விட்டிருக்கலாம் இல்லையா? நாம் ஒவ்வொருவரும் நாட்டிலும், வெளிநாட்டிலும் அரிசி முக்கியமா, அபிலாசை முக்கியமா என முடிவுக்கு வரவேண்டும். பெரும்பான்மையின் முடிவு அரிசிதான் எண்டால் சரி ஏற்கலாம். உண்மையிலேயே மேலே சந்திரசேகரனை நியமித்ததன் பின்னால் உள்ள பிரித்தாளும் தந்திரம் உங்களுக்கு விளங்கவில்லையா? நாளைக்கு ஹிஸ்புல்லாவை யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆக்கினால் அதையும் வரவேற்று, எதிர்ப்போரை மதவாதிகள் என்பீர்களா?
-
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற 'ஃபெங்கல்' புயல் - எங்கு மழை பெய்யக்கூடும்?
ஈழத்தாய் போல ஹெலிகாப்டரில் இருந்து யாரும் பார்த்தார்களா?
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
கட்டாயம் ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சராக இருக்க வேண்டும் என்பது நியதி இல்லை என நினைக்கிறேன். யாழில் 3 எம்பிகள் என்பிபிக்கு இருக்கும் போது தலைவராக தெற்கில் இருந்து ஒருவரை போடுவதன் பிண்ணனி வெளிப்படையானது.
-
திருப்பத்தை சந்திக்க உள்ளது சீமானின் அரசியல்!
அடிப்பதற்கு ஒரே ஒருவன் இருந்தால் அடித்து விடலாம்…. வெளுப்பதற்கு ஒரே ஒருவன் இருந்தால் வெளுத்து விடலாம்…. ஆனால் இருப்பதோ சீமானும்…சாராய சிறியும் 🤣 நான் என்ன செய்வேன்…
-
தேர்தல் முடிவினை வைத்து தமிழ் மக்களை கணிப்பிடாதீர்கள் ; சீன தூதுவருக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் பதில்
பல்கலை கழகங்கள் ஒரு சமூகத்தின் ஆய்வுகூடங்கள். தனியே அறிக்கை அரசியல் செய்யாமல் - இதில் இருந்து ஒரு காத்திரமான தலைமையை உருவாக்க இந்த மாணவர்கள் முன்வர வேண்டும். அது தீபச்செல்வன், கஜேந்திரன் போல அல்லாமல் இருக்க வேண்டும்.
-
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய செல்வந்தர் காலமானார்
இதே போல் இலங்கையின் கடைசி தேசாதிபதியான மகாபிரபு (Viscount) சோல்பெரியின் மகனும் அவருக்கு பின் சோல்பெரி பிரபு பட்டத்தை பெற்றவருமான 2ம் சோல்பெரி பிரபு -யோகர்சாமியின் சீடராகி துறவறம் பூண்டார். 1986 வரை கைதடி ஆசிரமத்தில் வாழ்ந்தார் என்கிறது விக்கி.
-
மாவீரர் தினத்திற்கு அனுமதி அளித்த ஜனாதிபதிக்கு நன்றி!- செல்வம் அடைக்கலநாதன்
ஏன் தம்பி மீதான விசாரணையை அடித்து நூக்க அனுர உதவி தேவையோ? பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதான மனிதருக்கு இவரின் பதில் என்ன?
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
மாவீரர் நாளை கொண்டாட அனுமதித்ததாக கூறி அனுரவுக்கு ஏன் சாராயக்கடை சிறி மாவீரர் நாள் நடக்க முன்பே அவசரப்பட்டு நன்றி நக்கினார்? மேலே குசா அண்ணை கூறியது போல இனவாதம் அப்படியேதான் இருக்கிறது. தாம் ஊழல் வழக்குகளில் இருந்து தப்ப - அனுரவுக்கு வெள்ளை அடிக்கிறனர் சாராய சிறி போன்றோர். இது 2ஜி வழக்கில் இருந்து தப்ப கருணாநிதி ஆடிய நாடகத்தின் சின்ன வேர்ஷன்.
-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
இஞ்ச ஏதோ பெருசா நடந்திருக்கு…நான் தான் மிஸ் பண்ணிட்டன்🤣
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
நான் என்ன கனகபுரத்தில் இருந்தா எழுதுகிறேன்? முதலாவது செய்தி - 3மாவீரர்களின் தாயாரை மேற்கோள் காட்டி இருந்தது. அந்த மாவீரரின் தாயாரிடம் இன்னும் சாராயக்கடை சிறி மன்னிப்பு கேட்டதாக தகவல் இல்லை. அந்த அடிப்படையிலும், சாராய சிறி எப்படி பட்ட கோக்குமாக்கு அரசியல்வாதி, ஊழல் மன்னன், என நான் அறிந்து கொண்டதன் அடிப்படையிலும் என் முதலாவது கருத்து இருந்தது. அதன் பின் நீங்கள் வந்து இதில் ஏற்பாட்டு குழு சிறியை தலையிடவே விடவில்லை என்றீர்கள். நீங்களும் கனகபுரத்தில் இருந்து எழுதவில்லை என தெரியும். ஆனாலும் சிறியின் அரசியலுக்கு நெருங்கியவர், அவர்க்ளின் உள்விடயங்கள் தெரிந்தவர் என்ற வகையில் நீங்கள் கூறியதை வைத்து அடுத்த கருத்தை எழுதினேன். நான் என்ன சிறியின் அடிப்பொடியா உள்வீட்டு விபரங்கள் தெரிய? நீங்கள் சொல்வது உண்மையாகினும் சிறி இந்த தாயிடம் மன்னிப்பு கோராதது அவர் இவர்களை எப்படி மதிக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது. ஒரு தமிழ் தாய் ரணில் காலில் விழ சம்-சும் பார்த்துகொண்டிருந்ததை போன்ற செயல் இது. #அண்டக்காக்கயா சொன்னா, சாதா காக்காய்கு கோவத்தை பாரேன்🤣 ம்ம்ம்ம்…. சாராய சிறி என்னிடம் வேலை கேட்டு வருகிறார் என்றா நான் எழுதினேன்? 10 ம் ஆண்டு தமிழ் இலக்கணம் புத்தகத்தில் படித்திருப்பீர்கள்? ஆல் விகுதி. என்னிடம் ஒரு நிறுவனம் இருந்தால்… சாராய சிறி ஓய்வுபெற்ற அதிபர்தான்… இப்போ இலங்கையில் சில மாவட்ட அரச அதிபர்களே…ஒரு மண்ணுக்கும் பிரயோசனமில்லாத ஆட்கள். செயல்திறன் கிலோ என்னவிலை என கேட்பவர்கள். சிறி பா உ ஆக இருந்து இந்த இனத்தின் மீட்சிக்கு உழைத்து கிழித்ததை, தமிழரசு கட்சி தலைவராக கிழித்ததை வைத்துத்தான் என் கருத்து இருந்தது.
-
வெள்ள அனர்த்தம்; யாழ்ப்பாணத்திற்கு முதற்கட்டமாக 12 மில்லியன் ரூபாய் நிதி
மூன்று எம்பிகளுக்கு தலா நாற்பது லட்சம்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அனுர பிரிகேட் எங்கே?