Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. சாராயக்கடை சிறியிடமும் அவரின் அடிப்பொடிகளிடமும் வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம்.
  2. அமிரை கண்டால் ஜீப்பை காணோம், ஜீப்பை கண்டால் அமிரை காணோம்🤣
  3. நன்றி. நான் பஜேரோக்களை கண்டது 1987 க்கு பிந்தான். பெட்டி போல இருக்கும் இந்த மொடல் பஜேரோக்களுக்கு சிங்கள பகுதியில் பெயர் “பலாத்சபா”. மாகாண சபை உறுப்பினருக்கு கொடுக்கப்பட்டதால். அமிருக்கு என்ன வகை ஜீப் கொடுத்தார்கள் என அறிய ஆவலாக உள்ளது. அப்போ அரச அதிகாரிகள் பாவித்தது போல பச்சை நிற ஜீப்போ அல்லது நிசான் பட் ரோல், டொயோட்டா லாண்ட் குருசர்? அல்லது பஜேரோ? தெரிந்தவர் கூறவும்
  4. 77 இல் கோஷான் மகான் இன்னும் இப்பூவுலகில் அவதரித்திருக்கவில்லை🤣. ஆகவே நியாபகம் எல்லாம் இல்லை🤣, ஆனால் “கேட்டது தமிழ் ஈழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்” என விமர்சிக்கப்பட்டதாக வாசித்துள்ளேன். அது பஜரோ வகை ஜீப்பா? ஆங்கிலத்தில் epitaph என்பார்கள். ஒருவரின் கல்லறையில் அவர் வாழ்வை அல்லது பேர்சலல்னாலிட்டியை ஓரிரு வார்த்தையில் எழுதுவது. சிறி சேர் கல்லறையில் இதை எழுதலாம்🤣
  5. சிவாஜி லிங்கம் இந்த விடயத்தில், பார்வதி அம்மா விடயத்தில் (மட்டும்) போற்றுதலுகுரியவரே. ஓரிரு நிறைகளை வைத்து பல குறைகளை காணாமல் விடுவதும் தப்பே.
  6. உங்களுக்கு சம்பந்தன், சுமந்திரன் விடயங்கள் தெரிந்தது போல, எனக்கு ஜேவிபி, பெளத்த இனவாதம் பற்றி கொஞ்சம் தெரியும். இலங்கையில் தமிழர் தேசிய இனமாக அன்றி இனகுழுவாக மாற்றப்படும் விடயத்தில் இவர்கள் மகிந்தவை விட மோசமான அணைத்து அழிக்கும் அணுக்குமுறையை கையில் எடுப்பார்கள், எடுக்கிறார்கள். ஆகவே இதில் பொறுத்துப் பார்க்க ஏதும் இல்லை என்பது என் நிலைப்பாடு.
  7. இதை இன்றும் சந்தர்ப்ப சாட்சியங்களின் கோர்வையாகவே நான் பார்க்கிறேன். இதில் சம்பந்தன் மட்டும் அல்ல, கஜேஸ், ஜெயானந்தமூர்த்தி, பத்மினி, ஈழவேந்தன் என பலரும் ஒண்டும் செய்யவில்லைத்தான். அப்படிபார்த்தால் 2009 மே யிற்கு பின் நாம் புதிய தலைவர்களைதான் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் மக்கள் ஆணை இவர்களுக்கே கிடைத்தது. ஆகவே சம்பந்தன் இப்படி கெட்ட எண்ணத்தில் செயல்பட்டாரா என்பது இன்றுவரை வெறும் ஊகம்தான். ஆனால் அவர் அதன் பின் பிழை விட்டது ஊகம் அல்ல, உண்மை, தரவு. ஆகவே என் ஆதரவும், எதிர்ப்பும் தரவு அடிப்படையிலானது. எனக்கு அவரை அப்படித்தெரியாது. ஆகவே அவர் சம்பந்தமான முடிவும் அவரின் நடத்தையை வைத்தே எட்டப்பட்டது.
  8. நடமாடுவதே பாதுகாப்பில்லை என்ற புயல் சூழலில் மக்கள் அலை என எழும்பி வந்தது ….எல்லாமும் முடிந்து போய்விடவில்லை என்ற நம்பிக்கையை தருகிறது.
  9. கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள 522வது கட்டளை தலைமையகம் முன்னே சிவப்பு மஞ்சள் கொடிகளும், விடுதலை கீதங்களும்.
  10. தாயக கனவுடன் தன்னலமின்றி தம்முயிர் ஈந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
  11. கிழக்குமாகாணம் அம்பாறையில் இருப்பதுதான் இப்போ காரைதீவு. யாழ்ப்பாண காரைதீவை பாலம் போட்டதுடன் காரைநகர் ஆக்கிவிட்டார்கள். இப்போ நீங்கள் காரைதீவா என அவர்களிடம் கேட்டால் - எதோ கெட்டவார்த்தை பேசியது போல் ரியாக்ட் பண்ணுவார்கள்🤣. தகவலுக்கு நன்றி. காரைதீவில் மதரசா பாடசாலை என்றதும் ஒரு தரம் ஜெர்க் ஆகி விட்டேன். அனைவரும் உயிருடன் திரும்ப வேண்டும்🙏.
  12. இருக்கலாம்…ஆனால் அதற்கு தவறு நடக்கும் இடங்களில் விசாரணை அல்லவா செய்ய வேண்டும். ஒட்டுமொத்தமாக அதுவும் பாடசாலைகளை ஏன் குறிவைக்க வேண்டும்? முதலில் பெளத்த விகாரைகளில் தொடங்கி, இந்து கோவில்கள், சர்ச்சுகள் என வரலாமே.
  13. நெற்றியில் அடித்தது போன்ற கேள்வி. அடக்குமுறையின் மத்தியில் நாம் மெழுகுவர்த்தியை மட்டும் ஏற்றுவது ஒன்று. அடக்குமுறையே இல்லை ஆனால் மெழுகுவர்த்தி ஏற்ற மட்டுமே அனுமதி என்பது பம்மாத்து. இன்னொரு விடயம் இன்று கேள்விப்பட்டேன். ஊர் பாடசாலைகள் வெளிநாட்டில் சேகரிக்கும் பணம் இனி அரசின் ஊடாகவே கையாளப்படும் என்ற வகையில் ஏதோ சுற்று நிருபம் - வடக்கு ஆளுனர் அனுப்பவுள்ளாராம். புலம்பெயர்ந்தோர் பணம் எமது பள்ளிகளை மேம்படுத்துவது கண்ணை குத்தி விட்டதாக்கும்.
  14. ஓம்… அப்போ ஈபி ஆர் எல் எப், டெலோ, புளொட்டின் ஒரு பகுதி இந்தியன் ஆமியோடு சேர்ந்தியங்கினர். இவர்களை திரீ ஸ்டார் என்றோம். இவர்களில் இருந்த உறுப்பினரை கொண்டு அதே சமயத்தில் உருவான அமைப்புத்தான் ஈ என் டி எல் எப். யாழில் பல ஊர்களில் ஈ பி தான் ஆதிக்கம், அராஜகம் கூட. ஆனால் டவுனில் ஈ என் டி எல் எவ் வதை முகாம் ஒன்று இருந்தது. டெலோ மன்னரிலும், வன்னியின் A9 இன் இருமருங்கிலும் ஈ என் டி எல் எவ் ஆதிக்கம். வவுனியாவில் புளொட். 1988 மாகாண சபை தேர்தலுக்கு பின், இவர்கள் மூவரும் இந்தியா உருவாக்கிய TNA எனும் துணை இராணுவத்துக்கு ஆள் பிடிக்க தொடங்கினார்கள். யாழில் ஈபி யிடம் தப்பினால், கிளிநொச்சியில் ஈ என் டி எல் எவ், பஸ்சால் /ரயிலால் இறக்கி கூட்டி போவார்கள், அதிலும் தப்பினால் வவுனியாவில் புளொட் இறக்கும். பணம் இருந்தோர் பலாலி-ரத்மலானை என ஓடி தப்பினார்கள். கிழக்கு மாகாணத்திலும் இதே போல் ஒரு நிலைதான். படுவான்கரை பக்கம் போய் கேட்டு கேள்வி இன்றி அள்ளிப்போனார்கள். ——————— அது புலிகள் திரும்பி வரமாட்டார்களா என மக்கள் தவமிருந்த காலம். இப்படி ஒரு ஆள் பிடிப்பை புலிகளும் செய்வார்கள் என நான் உட்பட பலர் கனவிலும் நினைத்திராத நாட்கள் அவை. நான் ஊரில் இருக்கும் வரை அப்படி ஏதுவும் நடந்ததாக நான் அறியவில்லை. ஆனால் பாஸ் நடைமுறை 1990 இல் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த உடன்படிக்கையின் பின் கருணா மட்டகளப்பில் வலுக்கட்டாயமாக பிடிக்கிறார் என கதை வந்த போது, முதலில் நம்ப கடினமாக இருந்தது. பின்னர் தலைவருக்கு தெரியாமல் பிடிக்கிறார் என நம்மை நாமே தேத்தும் நிலை வந்தது. 2006 இன் பின் - எனது தம்பி முறையானவர்கள், ஆட்சேர்ப்பில் இருந்து தப்பிக்க, முல்லைதீவில் இருந்து நாயாற்று, மணலாறு காட்டு வழியாக புல்மோடை போய் அங்கிருந்து திருமலை நகரம் போனபோது, அதில் ஒரு குடும்பத்தில், மகன் திரும்பி வரும் வரை பெற்றாரில் ஒருவரை இயக்கம் கூட்டிப்போன போது - அதற்கு மேலும் நடக்கும் உண்மையை மறுக்கும் நிலை அற்றுப்போனது. இது யார் மீதான குற்றப்பத்திரிக்கையும் அல்ல. ஈபி யின் ஆட்சேர்ப்பு அவர்கள் இருப்பை பேண, புலிகளின் ஆட்சேர்ப்பு இனத்தின் இருப்பை பேண. இது மிக முக்கியமான வேறுபாடு. ஆனால் கட்டாய ஆட்சேர்புக்கு உள்ளானோருக்கு அதன் நோக்கம் இரெண்டாம் பட்சமாகவே இருக்கும். ஒரு மண்மீட்பு யுத்தம் நிகழும் போது - அதன் ஒப்பற்ற தலைமைக்கு ஆள் சேர்ப்பதில் பிரச்சனையே வந்திருக்க கூடாது. அப்படி அவர்களுக்கு ஆட்பற்றாக்குறை வரும் அளவுக்கு நிலமை மோசம் அடைய இரெண்டு காரணங்களை நான் காண்கிறேன். 1. ஓடி வந்த, இயக்கத்துக்கு போகாத என் போன்ற( இங்கே எழுதும் அனைவரினதும், அப்போ சிறுவாராக இருந்தோர் தவிர) சுய நலன் 2. கட்டாய ஆட் சேர்பின் மூலம் ஒரு விடுதலை போரை வெல்லலாம் என நினைத்த இயக்கத்தின் நிலைப்பாடு இனி இதை கதைத்து எந்த பலனுமில்லை. ஆனால் இனியும் போத்து மூடுவதிலும் ஒரு பலனுமில்லை என்ற வகையில் - என் வாழ்ந்த அனுபவமாக இதை எழுதுகிறேன். அவ்வளவுதான். இரு பக்க பிரச்சாரங்களுக்கு அப்பால் வரலாறு இந்த உண்மையை எழுதும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஸ்யாவின் ஆட்சேர்புக்கும், உக்ரேனின் ஆட்சேர்புக்கும் உள்ள வித்தியாசம் போன்றது இது.
  15. வாழ்விலும், இறப்பிலும் தன்னலமற்ற தலைமைக்கு உதாரணமாக திகழ்ந்த தலைவர் பிரபாகரனை அவரின் பிறந்த நாளில் நினைவுகூருகிறேன்.
  16. நீங்கள் ஈபிடிபி எண்டு எழுதினால் என்ன ஈபிஆர் எல் எப் எண்டு எழுதினா என்ன - அது எல்லாம் தரவு உண்மையாக இருக்க வேண்டும் என நினைப்போர் கவலை படும் விடயம் 🤣. எமக்கு என்ன கவலை எண்டால் - நீங்கள் அவசரத்தில் பெயர் சொல்லாமல் “இயக்கம்கள்” என எழுதிப்போட்டியள். அது புலிகளையும், மேலே வில்லவன் எழுதிய 2006 க்கு பின் நடந்த உண்மைகளையும் குறிப்பதாகவும் அமைந்து விடலாம். ஆகவேதான் உங்களை மிரட்டும் தொனியில் விளக்கம் கேட்க வேண்டியதாயிற்று. ஏன் எங்களுக்கு புலிகள் நற்பெயர் மீது, உண்மையை மறைக்கும் அளவுக்கு பற்று என நீங்கள் நினைக்கலாம். அப்படி பற்று ஒன்றும் இல்லை - நாம் இலங்கையில் ஒரு தமிழ் அரசியல்வாதியின் தீவிர ஆதரவாளர்கள். அவரின் கையாலாகததனத்தை மறைப்பதே எங்கள் பிரதான தொழில். அதற்கு நாம் பல முகமூடிகளை போட்டு கொள்வோம் அதில் ஒன்று புலிகளின் மீது அபரிமிதமான பற்று என காட்டி கொள்வது. இருபாலையை வடக்கு நோக்கி நகர்த்தி விட்டார்களா? அல்லது வல்வெட்டித்துறையை தெற்கு நோக்கி நகர்த்தி விட்டார்களா🤣
  17. அருச்சுனா மைண்ட் வாய்ஸ் ரைட் நவ்👇
  18. அனுர பிரிகேட், மற்றும் சாராய சிறியின் அடிப்பொடிகளுக்கு, இது மைத்திரி அரசு காலத்தில் இருந்த அதே நடைமுறை. அப்போ அனுர வந்தால் மாற்றம் வரும் என பிரிகேட்டினர் எழுதியதும், சாராய சிறி அனுரவை ஆதரித்து அறிக்கை விட்டதும் பொய்யா கோபால்?
  19. ஒரு வீதி விபத்து சம்பந்தமாக கோர்ட்டில் ஆஜர் ஆகாத அருச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை கொடுத்துள்ளதாம். நீயுஸ் ஃபர்ஸ்டை மேற்கோள் காட்டி ஶ்ரீலங்கா டிவீட் செய்தி.
  20. இதுதான் ஜேவிபி அனுமதிக்கும், சாராயக்கடை சிறி வரவேற்ற மாவீரர் வார அனுஸ்டிப்புக்கான அனுமதி. தலைவரின் கொள்கைக்கு அல்ல, படத்துக்கே அனுமதி இல்லை.
  21. இணைப்புக்கு நன்றி. இதை ஹேரத் சொன்ன சிங்கள பேட்டியை பார்த்தேன். தமிழ் வடிவம் கிடைக்கவில்லை இணைக்க.
  22. 🤣….அப்ப சரி….யாழ்களத்தில் சில விசயங்களை எழுதுவது….ரஸ்யா கள்ள போடர் பாய்வதை விட ரிஸ்க்கான விடயம். தெரிந்துதான் இறங்கியுள்ளீர்கள் எனில் வாழ்த்துக்களும், அனுதாபங்களும்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.