Everything posted by goshan_che
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பையா…. சும்மா ஜாமாய்ங்கோ….🎁💐❤️
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
தகவலுக்கு நன்றி. பிரதி வெளிவிவகார அமைச்சராக சர்வதேச விசாரணைகளை நானும் தமிழந்தான் என்ற போர்வையில் அடித்து நூத்து, அடுத்த முறை வெளிவிவகார அமைச்சர் ஆவார் என நினைக்கிறேன்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
தனிப்பட்ட ரீதியில் அனைவரையும் இலங்கை தமிழர் என அழைப்பதே எனக்கு விருப்பமான தெரிவு - ஆனால் இப்படி செய்தால் மலையக/மேலக தமிழர்களின் நலனை யாழ் மையவாதத்துள் போட்டு அமுக்கவும் வாய்ப்புகள் உண்டு. வடக்கு-கிழக்கு தமிழர் ஒற்றுமையை தக்க வைக்க, யாழ் மையவாதத்திடம் கிழக்கு தமிழர் இழந்தது அதிகம். இதே போல் ஒரு நிலை உங்களுக்கு தேவையா? வடக்கு, கிழக்கு தமிழருக்கு ஒரே அணியாக தமிழ் தேசியத்தின் கீழ் அணி திரள்வதுதான் - அவர்கள் தேசிய இன இருப்பை தக்க வைக்க ஒரே வழி. ஆனால் மலையக, மேலக தமிழர்களின் அரசியல் அபிலாசை - ஒரு சிறுபான்மை இனக்குழுவாக இலங்கைக்குள் சம உரிமை கோருவது - இவர்களோடு உங்களை சேர்த்து கொள்வது - உங்களுக்கு இருப்பதையும் கெடுக்கும் வேலையாய் முடியும். செளமியமூர்த்தி தொண்டமான் தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து விலகி ஆனால் தொடர்ந்தும் வடக்கு-கிழக்கு அரசியல் கட்சிகளோடு நல்லுறவில் இருந்தார். புலிகளை ஒரு போதும் எதிர்த்ததில்லை, புலிகளும் எதிர்த்ததில்லை. மனோவும் அப்படியே. இதெல்லாம் இவ்விரு மக்களின் அபிலாசைகள், தேவைகள் வேறுபட்டவை என்பதாலேயே. செளமியமூர்த்தி, சந்திரசேகரன், இப்போ ஜீவன், 2ம் சந்திரசேகரன், மனோ - உண்மையில் கடந்த 75 ஆண்டில் வடக்கு-கிழக்கு தமிழ் தலைவர்களை விட, தம் மக்களுக்கு இவர்கள் சாதித்தது மிக அதிகம். இப்போதைக்கு நீங்கள் உங்கள் தனிதன்மையை பேணுவதே உங்கள் நலனுக்கு நல்லது என நான் நினைக்கிறேன். பிகு 1. உங்கள் பிறப்பு சான்றிதழ் உங்கள் பெற்றார் சொன்ன தகவல் அடிப்படையில்தான் பதியப்படும். நான் கூட என் மகனை இந்திய வம்சாவழி என பதிய முடியும் என நினைக்கிறேன். 2. அண்மையில் முஸ்லிம்களின் சதவீதத்தை குறைத்து காட்ட, இரு தமிழரையும் ஒன்றாக காட்டும் முஸ்தீபுகள் சிங்கள தரப்பால மேற்கொள்ள படுவதாக கேள்விப்பட்டேன். ஒரு காலத்தில் தமிழரை குறைக்க -மலையக தமிழரை நாடு கடத்தியோர், இப்போ இப்படி செய்கிறார்கள். எல்லாம் அவர்கள் இன நலனின் அடிப்படையிலேயே.
-
அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு
🤣 நடந்தது புரிகிறதா? சபாநாயகர் சரத்து 6 தூக்கி கொண்டு போக - நான் சொன்னது சத்திய பிரமாணத்துக்கு முன் என அருச்சுனா சொல்ல, சபா வாயடைத்து நின்றுள்ளார்🤣. அருச்சுனா காரிய விசரன். கோமாளித்தனமாக தெரிந்தாலும்…இல்லை கோமாளித்தனமாக இருந்தாலும்….எல்லோரும் இலங்கையர் ஈரச்சாக்கை எதிர்க இது பயன்படுகிறது. இருகிற இடம் தெரியாமல் இருக்கும் சாராயக்கடை சிறி, என் பி பி தமிழ் எம்பிகள் மத்தியில் - அருச்சுனா இப்போ தேவையான தெனாலி இராமன்.
-
தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்கு தயார் என்கிறார் கஜேந்திரகுமார்
ஆங்கிலத்தில் closing the stable door after the horse has bolted என்பார்கள். குதிரை ஓடிய பின் இலாயத்தின் கதவை பூட்டுவது போன்ற செயல் இது. பிக்குகள் விரும்பும் தீர்வுத் திட்டம் - என் பி பி தமிழ் எம்பிகள் ஆதரவோடு, தமிழரும் ஏற்கிறனர் என்ற பீடிகையோடு நிறைவேறப்போகிறது. வழமை போல் நடைமுறை சாத்தியமே அற்ற ஒரு நாடு இரு தேச பைதியக்கார கோரிக்கையை நீங்கள் முன்வைத்தால் - அதை தமிழ் மக்களே சீரியசாக எடுக்க மாட்டார்கள். எது எப்படியோ, இப்போதாவது ஒன்றாக வரும் யோசனை வந்தது நல்லதுதான்.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை
மேலே உள்ளது உண்மை எனில்…. வழக்கு டக்கிளஸ் மீது அல்ல…மனோகரன் மீதுதான். டக்கிளஸ் இதில் முறைப்பாட்டாளர்? இப்போ ஒரு கூட்டம் கோஷன் டக்கிளஸ் ஆள் என வாளியோட வரும்… எஸ்கேப்பு….🤣
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
அநுர மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சுமந்திரன் தொடர்பான முடிவு
உதாவாக்கரை தலைவர், சாராய கடை சிறி, பாராளுமன்ற கதிரையை சூடாக்குவதை தவிர எதையும் செய்ய முடியாதவர், கையாலாகாதவர் என்பதை மக்கள் கண்டு கொள்ள கூடாது என்பதற்காக - தேர்தலில் தோற்று போன சுமந்திரனை பற்றி தாமாக கற்பனை செய்திகளை வெளியிடுகிறன புலம்பெயர் டாய்லெட் ஊடகங்கள். இதுவரை சுமனை பாவித்து இந்த புலம்பெயர் அடிப்பொடிகள், சாரயக்கடை சிறிக்கு கவர் எடுத்தார்கள், இப்போ சுமன் இல்லை என்றதும் தமது டீலர், மன்னிக்கவும் லீடர்ரை எப்படி கவர் எடுக்கலாம் என வழி தெரியாது, தெற்கில் அதிர்ச்சி, மேற்கில் பேதி எண்டு கதை காவுகிறார்கள்.
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
பேட்டியை முழுமையாக பார்த்தேன். 1. நான் சொன்னது போலவே - தமிழர்களின் அடிப்படை அபிலாசையை பற்றி கதைக்கும் போது - அதை சிறுபான்மை குழு ஒன்றின் கோரிக்கைகள் என்ற அளவில்தான் இங்கே அனுர அணுகுகிறார். 2. இதில் அவர் அதிகம் பேசிய இந்தியாவின் வகிபாகம், புவிசார் அரசியல் நாம் அனைவரும் அறிந்ததே. 3. எதிர்கட்சியில் இருக்கும் சமயம் மிக உருக்கமாக, காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், இராணுவ பிரசன்னம் இட்டு கதைக்கிறார். ஆனால் இவர் ஜனாதிபதியாகி மூன்று மாதம் ஆகிறது. 2/3 பெரும்பான்மை அரசு அமைந்து விட்டது. ஹிரிணிக்கும், டில்வினுக்கும் மவுண்ட்லவேனியா ஓட்டலில் ABBA Tribute நிகழ்ச்சிக்கு போக நேரம் இருக்கிறது. பலாலி வீதியில் 800 மீட்டர் தூரத்தை (இரு மருங்கிலும் உள்ள நிலத்தை அல்ல) விட்டமை மட்டுமே இப்போதைக்கு சாதனைகள். நேற்று அமைச்சர் ஒருவர் காணாமல் போனோர் எல்லாம் இறந்தோர்தான் என போகிற போக்கில் சொல்லி விட்டு போகிறார். குறைந்த பட்சம் - அந்த பட்டியலில் உள்ள பெயர்களை வாங்கி, அரசிடம் கைதியாக இருப்போர் அந்த லிஸ்டில் உள்ளனரா என பார்த்து, இல்லை என சொல்லி, அவர்கள் மரணித்தவர்கள் என கருதப்படுவோர் (presumed dead) - என குடும்பங்களுக்கு கண்ணியமாக அறிவிக்க கூட இவர்களால் முடியவில்லை.
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
🤣 வார இறுதியில் பார்ப்பதாக இருக்கிறேன். ஆனால் AKD, JVP யின் நிலைப்பாடு இதுதானே? பேட்டியில் அதற்கு மாற்றாக சொல்லி இருப்பார் எம நினைக்கவில்லை.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
எனக்கென்னமோ…நீங்கள் என்னை கலாய்ப்பது என்ற போர்வையில், பையனின் அரசியல் அறிவை மட்டம் தட்டுவதாக படுகிறது 🤣. #எங்க வந்து யாருகிட்ட🤣
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
இந்த பேட்டியை முழுமையாக பார்க்கவில்லை, நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன். ஆனால் இதில் தொடக்கத்தில் அனுர சொல்வதில் ஒரு தர்க்க உண்மை உள்ளது. இதே விடயத்தை 1995/6 காலத்தில் TNL டீவி நிகழ்சிகளில் குமார் பொன்னம்பலம், எஸ் எல் குணசேகர, லசந்த விக்ரமதுங்க விவாதித்துள்ளனர். அந்த தர்க்கம் இதுதான். 1. தமிழர்கள் 1948 இல் ஒற்றையாட்ச்சிக்கு உடன்பட்டார்கள். 2. தனி சிங்களம், சிறீ, தொடர் இன வன்முறைகள், இன ஒதுக்கல், குடியேற்றம் போன்றவையே - தமிழரை திம்பு நோக்கித்தள்ளியது. 3. மேலே 2 இல் சொன்னவற்றை இல்லாமல் ஆக்கினால் - தமிழர்கள் திம்புவை கைவிடுவது நியாயமாக இருக்கும். அனுர அரசின் நிலைப்பாடும் கிட்டதட்ட இதுதான். மேலே சொன்ன லிஸ்டில் கடந்த 30 வருடத்தில் மொழி, இன வன்முறை பிரச்சனைகள் இல்லாது ஆகி விட்டன (மீள வரலாம்). காணி/குடியேற்ற விடயத்தல்தில் - தமிழருக்கு சுய உரிமையதராவிடிலும், ஒரு நியாயமான காணிப் பங்கீடு பொறிமுறையை முன்வைத்தால் - திம்புவுக்க்கான தேவை இனி இல்லை என்ற நிலைப்பாட்டை நோக்கி தமிழரை உந்த ஜேவிபி முனையலாம். ஆனால் - காணி விடயத்தில் இம்மியளவும் நகர மஹா சங்கம் அனுமதிக்காது என்றே நினைக்கிறேன். திம்புவை கைவிடுவது, நாம் தேசிய இனமில்லை, நாம் ஒரு சிறுபான்மை இன குழு என நாமே ஏற்பதற்க்குச் சமன். தமிழ் கட்சிகளை தவிர்த்து, ஜேவிபி நேரடியாக தமிழ் வாக்காளர் மத்தியில் பிரபல்யம் ஆவது….இந்த நிலையை விரைந்து உருவாக்க கூடும்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
@வீரப் பையன்26 நோடு நான் ஊர் அரசியலில் அதிகம் முரண்படுவதில்லை என்பதால் இதை பெரிசு பண்ண வேண்டாம் என உங்களை மன்றாட்டமாக கேட்கிறேன்🤣.
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
வணக்கம் ராஜன் அம்மான். நல்வரவு. விரைவில் பதிவுகளை போட்டு தமிழக செய்தி பகுதிக்கு அனுமதி எடுக்கவும்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
எனக்கும்தான்…🤣
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பிரபா, வாதவூரான் ,வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். கந்தப்பு அண்ணைக்கு பாராட்டுக்கள். தமிழ் சிறி அண்ணைக்கும் நன்றி. ஊர் அரசியலே நக்கிகிட்டு போய்ட்டாம்…இதுல ஐபில் வேற🤣 இதில மிகவும் கஸ்டமான விசயம் என்னெவெண்டால்…. மார்ச் மாதமே ஊருக்கு போய்ட்டு வந்து யாழ்பாணத்தில் என் பி பி க்கு ஆதரவு பெருகுவதை எழுதினேன். ஜனாதிபதி தேர்தலில் கணிசமாக என் பி பிக்கு போடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அதில் மக்கள் வாக்களித்த முறை என்னை மாற்றி யோசிக்க வைத்து விட்டது. முதலில் பாராளுமன்ற தேர்தல் நடந்திருந்தால் கொஞ்சம் புள்ளிகள் கூடி இருக்கும். சனம் இப்படி ரைட் சிக்னல் போட்டு, லெப்ட் கட் பண்ணும் எண்டு யார் கண்டது 🤣.
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
ஒரு காலத்தில் வைரவன் போல் இருந்த நான் இப்போ கொஞ்சம், கொஞ்சமாக பேசா மடந்தை ஆகிகொண்டு வருகிறேன்🤣. யாழ் கற்றுத்தந்த அனுபவப் பாடமே இது. இப்போ என்னுடன் கருத்து பரிமாறும் போது மட்டும் இந்த வாதங்கள் தலையை தூக்கினால் இவற்றை சுட்டி காட்டுவது என்ற கொள்கை முடிவுக்கு வந்துள்ளேன். காரணம்? மிக எளிமையானது. இங்கே விரல் விட்டு எண்ண கூடிய சிலரை தவிர, அநேகர் ஏதோ ஒரு அல்லது பல வாத நோயால் பீடிக்கப்பட்டவர்கள்தான். சிலருக்கு முத்திய நோய். பலருக்கு unconscious bias. கூடவே இனிமேல் நாம் எழுதி எவரும் மாறப்போவதில்லை என்பதும் கண்கூடு.
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
அதுக்கு ரஜனி மரணமடைய வேண்டும்.
-
சங்கி என்றால் நண்பன் என்று பொருள் -செந்தமிழன் சீமான்-
யார்ரா இது….. நமக்கே நம்ம பாணியில் டப் கொடுக்கும் ஒரு புதுமுகம்🤣. ஆனால் அண்ணனை கண்ணன் என்பது சரிதான் செவ்வியன். தீராத விளையாட்டுப்பிள்ளை…அவன் தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை…🤣. இணைந்திருங்கள். பிகு தெளிவடைய முயல்கிறேன்🤣
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
ஓம் அவர் கண்டிக்கப்படவேண்டியவர் இல்லை. எனது தமிழில் ஒரு பொருள் மயக்கம் உள்ளது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
மிக்க நன்றி. நீங்கள் எழுதியதை மூன்று நாலு தரம் வாசித்த்தால்தான் எனக்கு விளங்கும். ஓரளவுக்கு விளங்கியதும் தொடந்து எழுதுகிறேன்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அரைச்சதம் அடிப்பாரா அலப்பறை கோஷான்?
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
இதுதான் உங்கள் பக்க நியாயம் எனும் போது அதை என்னை, சிறி அண்ணையை போலவே கொழும்பானும், வைரவனும் ஏற்பார்கள் என்றே நினைக்கிறேன். இணந்திருங்கள். இந்தியா வெல்லப்போகுது காலம் காத்தால ஒரு கடுப்பான செய்தி.
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
இந்த களேபரத்தில் ஒன்றை எல்லாரும் கவனிக்க மறந்து விட்டோம். இதில் வன்மையாக கண்டிக்கபட வேண்டியவர் அமைசர் சந்திரசேகரன் அல்ல, எதும் செய்யாமல் அப்செண்ட் ஆகி இருக்கும் யாழின் ஒரே தமிழரசு எம்பி சாராயக்கடை சிறி. ஆனால் அவரை பற்றி எழுதாமல் - பதவியில் இல்லாத சுமந்திரனை பற்றி எழுதப்படுகிறது. ஏனையோரும் அதன் பின்னால் ஓடுகிறனர். இதுதான் யாழில் சில வருடங்களாகவே சாராயக்கடை சிறியின் அடிப்பொடிகள் மிக திறமையாக கைக்கொள்ளும் மடைமாற்றும் உத்தி.
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
நீங்களும் காலம் காலமாக யாழில் நீங்கள் ஒரு மலையக தமிழன் என்றே சொல்கிறீர்கள். நானும் அப்படியே நம்புகிறேன். ஆனாலும் யாழில் உங்களை முஸ்லிம் என்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால் ஒரு மலையக தமிழனாக அல்லது அந்த போர்வையில் (எப்படி இருப்பினும் காரியமில்லை) நீங்கள் கேட்ட கேள்வி மிக நியாயமானது.