Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நீங்களும் காலம் காலமாக யாழில் நீங்கள் ஒரு மலையக தமிழன் என்றே சொல்கிறீர்கள். நானும் அப்படியே நம்புகிறேன். ஆனாலும் யாழில் உங்களை முஸ்லிம் என்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால் ஒரு மலையக தமிழனாக அல்லது அந்த போர்வையில் (எப்படி இருப்பினும் காரியமில்லை) நீங்கள் கேட்ட கேள்வி மிக நியாயமானது.
  2. அய்யா, என்னை பைரவனோடு கோத்து விடாதேங்கோ பிச்சி மேய்ந்து போடுவார்🤣. —————- குறை விழங்க வேண்டாம், நீங்க என்னை குவோட் பண்ணி கேட்டதால் என் மனதில் படுவதை சொல்கிறேன். உங்கள் கருத்தில் நீங்கள் அறியாமலே ஒரு மையவாத தொனி எனக்கும் உணரகூடியதாகவே இருந்தது. சந்திரசேகரன் ஒரு அமைச்சர், அவர் வந்தது அந்த வகையில்தான். அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும். ரணில் வரும் போது கொழும்பில் ஆயிரம் பிரச்சனை இருக்கும் போது, அல்லது டேவிட் கமரன் வந்த போது இலண்டனில் ஆயிரம் பிரச்சனை இருக்கும் போது இவர்கள் இங்கே ஏன் வரவேண்டும் என நாம் எழுதவில்லைதானே. உங்களிடம் உரையாடிய வகையில் நீங்கள் மையவாத கருத்துடையவர் என நான் நினைக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு தோற்றப்பாடு எழுந்தது என்பது உண்மை.
  3. ஒரு வீடியோவில், அருச்சுனா எங்கோ ஒரு கட்டிடத்தில் இருந்து வெளியே வருவார்…வரும் போது கூட வந்த கெளசல்யாவை காணவில்லை என்றவுடன், அருகே நிற்கும், வீடியோ எடுக்கும் ஆட்களிடம், எங்கடா தங்கத்தை காணோம் என கேட்டு தேடுவார். பின்னர் தங்கம் வந்து சேர, இருவரும் ஏதோ புதிசா கட்டிகிட்ட ஜோடி போல தங்கம் என அழைத்ததை இட்டு சிரித்தபடி போவார்கள். நாடாளுமன்றில் இருந்து போட்ட வீடியோவிலும், தங்கத்தை கலரியில் விட்டு விட்டு வந்தேன் ஆளை காணவில்லை என தேடுவார்.
  4. எழுதும் போதே இந்த எதிர்வினையை எதிர்பார்தே எழுதினேன். அதனால்தான் நெடிய பீடிகையோடு அந்த கருத்தை எழுதினேன். சீமானை இந்த திரியில்தான் அடிக்க வேண்டும் என்பதில்லை எனக்கு. அதற்கு போதிய அளவு யாழில் திரிகள் உள்ளன. இது இந்த ஒப்பீட்டை தெளிவுபடுத்த தகுந்த இடமாக தெரிந்தது. இல்லை இது வாளி காவல்தான் என நீங்கள் நினைத்தால் - அதையிட்டு அதிகம் அலட்டி கொள்ளாமல் அப்படியே விட்டு விடலாம் என நினைக்கிறேன்.
  5. சாய்ரா அறிக்கை விட்டதும் பின் ஆடியோ விட்டதும் தவிர்த்திருக்க வேண்டியவையே. நான் இதை அவர் மன அளுத்தத்தில் இருக்கிறார் என்ற கோணத்தில் அணுகுவதால் - அவரின் செயலை கடந்து போக முடியுமாய் இருக்கிறது. அதே போல் தொழிலில் அதிகம் ஈடுபடுவோர் குடும்பத்தை புறக்கணிப்பதும் உண்மையே. விஞ்ஞானி நியூட்டன் போன்றோர் கூட இப்படித்தான் என முன்னர் படித்திருக்கிறோம். ஆனால் எமக்கு அதிக விடயங்கள் தெரியாது. உதாரணமாக 1999 காலத்தில் ரஹ்மான் இலண்டனுக்கு வசிக்க வந்தபோது அவருக்கு வாகனம் ஓட்டியவரின் பேச்சு படி, அவர் தன் முழு குடும்பத்தையும் இங்கே கூட்டி வந்து வாழ்ந்தார் என்றும் பிள்ளைகள் விடயத்தில் அக்கறைகோடு இருந்தார் என்றும் அறிகிறேன் (அப்போ கேள்விப்பட்டது). அதே போல் ஏனைய மணமுறிவுகள் போல் இதில் பாலியலோ, பணமோ அதிக தாக்கம் செலுத்தியதாக நான் நினைக்கவில்லை. கெளதம புத்தரின் மனைவிக்கு ஏற்பட்ட நிலைதான் சாராவுக்கு என. நினைக்கிறேன்.
  6. 2009 இல் இருந்தே சம்பந்தனை எதிர்ப்பது என்பது - உங்கள் முன்பே ஏற்று கைகொண்ட (preconceived) அரசியல் நிலைப்பாட்டின் படியே மட்டுமே. 2009 இன் பின்னர்தான் அவர்கள் பிழைகளை விட ஆரம்பித்தனர். அதுவரை 2009 மே இல் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு இருந்தனர் என்ற புலம்பெயர் புலி காசை ஆட்டையை போட்டவர்களின் குற்றசாட்டு மட்டுமே அவர்கள் மீது இருந்தது. ஆகவே அவர்கள் பிழை விட முன்னமே அவர்களை பிழை விடுவார்கள் என அனுமானித்து, எதிர்ப்பது, குறிப்பாக அவர்கள் மக்களின் வாக்குகளை எடுக்கும் போது எதிர்ப்பது, சுத்த முட்டாள்தனம். அவசரகுடுக்க்கைத்தனம். அல்லது புலிகளின் காசை ஆட்டையை போட்ட புலம்பெயர் கள்ளருக்கு கவர் எடுக்கும் முயற்சி. இதில் நீங்கள் எவ்வகை? உங்கள் பரந்த அரசியல் ஞானத்தையும், உங்கள் எதிர்வுகூறும் ஆற்றலையும், மக்கள் மனங்களை புரிந்து கொள்ளும் உங்கள் அளப்பரிய ஆற்றலையும், யாழ் தேர்தல் போட்டியில் புள்ளிபட்டியலில் நீங்கள் நிற்கும் இடம் ஐயம் திரிபற காட்டி நிற்கிறது என்பது என் தாழ்மையான கருத்து 🤣. பதில் போடுவதும், போடாடதும் உங்கள் இஸ்டம். பதில் போட்டால், பதில் வரும். நன்றி. வணக்கம்.
  7. என்ன செய்வது தமிழன்பன், உங்களை போல் முக்காலமும் உணர்ந்த ஞானிகள் யாழுக்கு அடிக்கடி வருவதில்லை. வந்து எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என அருள்வாக்குத்தருவதில்லை. ஆகவே நாங்கள் கத்து குட்டிகள், இங்கே இருக்கும் சக கத்து குட்டிகளுடன் நமக்கு அறிவுக்கு எட்டியதைத்தான் பேச முடிகிறது. நான் நினைக்கிறேன் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில், சொல்லவருவதை ஒழுங்காக சொல்லி முடிப்பதில் குறைபாடு இருக்கும் என. ஒப்பீடு என்றால் அதை ஒப்பீடு என சொல்லவேண்டும்.
  8. பார் சிறிதரன் இந்த வீடியோவை பார்த்து விட்டு ஓட்டை சிரட்டையில் குதித்து தற்கொலை செய்யலாம். தமிழரசு கட்சியின் ஒரே யாழ்ப்பாண எம்பி, தமிழரசு கட்சியின் தலைவர் எங்கே ஆள்? பார் லைசன்ஸ் கேசை அமுக்குவதில் பிசியோ? பார் சிறியை போல ஒண்டுக்கும் உதவா உதாவாக்கரை தலைவரை தமிழினம் இதுவரை கண்டதே இல்லை.
  9. என்ன புலவர் இது…. சங்கி இல்லை எண்டு ஒரு பிறவி சங்கி ரங்கராஜ் பாண்டே சொல்லியதை தூக்கி கொண்டு வர வேண்டிய அளவுக்கு நம்மளை ஆக்கி விட்டதே காலம்.
  10. ————— தலைப்பிற்கு அறவே சம்பந்தம் இல்லாதது…ஆனால் சூழமைவு ஒத்துள்ளதால் இங்கே இதை எழுதுகிறேன். என் பாசமலர் @பாலபத்ர ஓணாண்டி விஜி அண்ணி விடயம் பரபாக ஓடிய காலத்தில், நானும் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பிரிந்துள்ளேன், எனக்கும் மகன்கள் உளர், எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது என எழுதினார். அப்போதே அவரிடம் கூறினேன், உறவு சேர்தல் போலவே உறவு பிரிதலும் இயல்பானது…ஆனால் நாம் உறவில் இருக்கும் சமயம் ஒரு பெண்ணை நடத்தும் விதத்தில் தங்கி இருக்கிறது, பிரிவில் அவள் நம்மை நடத்தும் முறை என்று. இந்த ஆடியோ நான் சொன்னதுக்கு ஒரு நல்ல உதாரணம். பிரிவின் பின் அவர்கள் வெளியிடும் ஆடியோ, விஜி அண்ணி டைப் ஆடியோவா, சாய்ரா டைப் ஆடியோவா என்பது நாம் அவர்களை உறவில், பிரிவில் நடத்திய விதத்தில் உள்ளது.
  11. அவர்கள் எங்கே உங்களை முட்டாள் ஆக்கினார்கள் அண்ணை? முதலாவது அறிக்கையே மிக தெளிவாக “பரஸ்பர காதல் இருந்தும் இடைவெளி விழுந்து விட்டது”. என்பதை மட்டுமே சொன்னது. நீங்களாகவே கண்ட கண்ட ஊத்தை கதைகளை எல்லாம் நம்பி விட்டு, இப்போ அது பொய் என்றவுடன் ஏன் அவர்கள் மேல் பாய்கிறீர்கள். அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே பிரிவுக்கு ஒரு காரணத்தை மட்டுமே சொன்னார்கள். சில வேளைகளில் மண/ன முறிவுக்கு, இடைவெளி மட்டுமே போதும். மேலதிகமாக கசமுசா, அஜால் குஜால் காரணங்கள் தேவையில்லை.
  12. இங்கே கருத்து எழுதும் பலர் depression வராதவர்கள் அல்லது depression வந்தவர்களோடு டீல் பண்ணாதவர்கள் என நினைக்கிறேன். சாய்ரா பானு கணவர், பிள்ளைகள் அவரவர் வாழ்க்கையில் பிசியாக இருக்க, தனிமை மூச்சு முட்டி, அதுவே மன அளுத்தமாகி, ஒரு முடிவுக்கு வந்துள்ளார் என்பதே வரும் தகவல்களை வைத்து நான் ஊகிப்பது. இப்போ தன் முடிவு ரஹ்மானின் பெயரை கெடுக்க அவரின் எதிர்பாளர்களால் பயன்படுவது கண்டு தானாகவோ அல்லது பிள்ளைகள் வேண்டியோ இந்த ஓடியோவை வெளியிட்டுள்ளார். இந்த மன அளுத்தமே அவர் கூறும் மும்பை சிகிச்சைக்கு காரணமாக இருக்கலாம். எல்லாம் ஊகமே. ஆனால்…. அவரே ரஹ்மான் மனிதருள் மாணிக்கம், அவர் மீது அவதூறு சொல்ல வேண்டாம் என சொன்னபின், நாம் இதில் மினகெடுவது தேவையில்லாதது. போய் பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்கள், அவர்கள் படித்து முடிந்தது என்றால் பேரப்பிள்ளைகளை கொஞ்சுகள்🤣.
  13. அதே வெக்கம் கெட்ட, சொராணை அற்ற நிலாந்தனேதான். உண்மையில் அப்போ எழுதியவைக்கு தார்மீக பொறுப்பு ஏற்று இவர் போன்றோர் வாழ்நாள் மெளன விரதம் இருக்க வேண்டும். இப்போதும் சங்கு, பங்கு என மொக்கு கூத்தாடியவர் இவர்தான். தன்னைதானே அன்ரன் பாலசிங்கம் போல் நினைத்துகொள்ளும் இவர்தான் நம்பர் வன் மிஸ்டர் பீன்.
  14. நீங்கள் அக்யூஸ்ட் நம்பர் 2 வை சந்தித்து விட்டு, பத்திரிகையாளரை சந்திக்க துணிவில்லாமல் பின் கதவால் ஓடியது…. தேர்தலில் வென்றதும் ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதி போட்டோ முன் கை கட்டி பவ்வியமாக நின்றது…. போல இதுவும் ஒரு டகால்டி வேலைதான் ப்ரோ🤣 Zombies என செல்லமாக அழைக்கப்படும் நா.த.க தம்பிகளை அண்ணன் மெல்ல மெல்ல நாக்பூர் நோக்கி வளைக்கும் உளவியல் இது. யாழில் மேலும் சிலர் சீமானை டைவோர்ஸ் செய்யும் காலம் கனிகிறது என நினைக்கிறேன். ஆனால் இன்னும் சிலர் அப்போதும் முரட்டு முட்டு கொடுப்பார்கள்.
  15. தேர்தலுக்கு முன் சரளமாக ஆதவனுக்கு தமிழில் பேட்டி கொடுத்த சரோ அக்கா, பதவி ஏற்றதும் சிங்களத்தில்தான். அவரை குறை சொல்ல முடியாது, தென்னிலங்கை வாழ்க்கை, கொழும்பு எச் எப் சி படிப்பு, அசித்த எனும் சிங்கள கணவர். அவர் கதிர்காமரை போல் தனது எசமானாருக்கு தேவைப்படும் போது தன் பெயரை பாவிக்கும் ஒரு தமிழர்.
  16. சாணாக்ஸ் இந்த கூட்டத்துக்கு சுமனை பைல் தூக்கவாவது கூட்டிப்போயிருக்கலாம்🤣. செல்வம், அரியம் ஐயா, சித்தர் இல்லாததால் மிக்சர் டன் கணக்கில் வாங்கும் செலவு இந்திய தூதரகத்துக்கு மிச்சம்🤣.
  17. ரணில் போன்றோருக்கு இனம் எவ்வளவு முக்கியமோ அதே போல் வர்க்கமும் முக்கியம். வழமையாக சிங்கள அரசியல்வாதிகள் வெளியாரிடம் ஆளை ஆள் விட்டு கொடார். மைத்திரி ரணிலை நீக்கி, மகிந்தவை பிரதமராக்கிய குழப்பநாட்களில் கூட, இதில் சீனா/இந்தியா சமனிலையை ரணில் பேணியமையை கண்டோம். இப்போ அனுரவை போட்டு கொடுப்பது போல் படுகிறது. வர்க்க நலனுக்ககா இன நலனை விட்டு கொடுக்கும் செயலா?
  18. நன்றி இவர் ஜனவரி 20 பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
  19. இதை ஒரு ஆரம்ப அறிகுறி என காட்டவே இவர்கள் விழ வைக்கப்பட்டார்கள். ஈரானில் இப்போதும் இதுதான். Theocracy என்பார்கள். என்ன ஈரான் நேரடி தியோக்ரசி, இலங்கை மறைமுக தியோக்ரசி. நல்லது. ஆனால் நம்மில் பலர் பெரும்பாலும் பெற்றார் காலில் விழுந்து கும்பிடுவதை ஏற்பார்கள் என நினைக்கிறேன். தத்தம் பண்ணிய பின் பெற்றார் காலில் விழுந்து ஆசி பெறுவது பல காலமாக நான் கண்டுள்ளேன். ஆக இதன் பின்னால் நுண் அரசியல் இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.