Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15765
  • Joined

  • Last visited

  • Days Won

    177

Everything posted by goshan_che

  1. உண்மைதான். அது சேர்பிய மண்தான். ஆனால் சில நூறு ஆண்டுகளாக நடந்த அல்பேனிய குடியேற்றம் அதன் சனதொகையை 90% கிட்ட அல்பேனியர் ஆக்கி விட்டிருந்தது. இந்த அல்பேனியர் வருகை 2ம் உலக யுத்ததின் பின் மட்டுமே என நீங்கள் எழுதி, நான் இல்லை சில நூற்றாண்டுகளாக நடந்தது என ஆதராம் காட்டி எழுதினேன். பிறிதொரு திரியில்.
  2. https://tamil.oneindia.com/amphtml/news/chennai/legal-action-should-be-taken-against-annamalai-congress-mp-manickam-tagore-501786.html சீமானுக்கு 6 நாள் முதல் அண்ணாமலை மேல் வழக்கு போடப்பட்டு விட்டது.
  3. 🙏 “ஈழத்தமிழரின்” மரபுவழி தாயகம் இந்தியாவில் இல்லை. அங்கே இருப்பது இந்திய தமிழர்களின் மரபுவழித்தாயகம். இந்திய தமிழரின் மரபு வழிதாயகம் ஈழத்தில் இல்லை. இதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? நாளைக்கு பூமி தட்டை இல்லை என்று உருத்திரகுமார் நாசாவுக்கு அறிக்கை அனுப்புவார் போலுள்ளது. பிகு நாம் இருவரும் ஒரே தேசிய இனமாக இருந்தாலும் இரு வேறுபட்ட மரபுவழி தாயகம் உடையோர். ஆகவே நாளைக்கு இரு நாடுகள் ஆனாலும், தமிழ் நாடும், தமிழ் ஈழமும் இரு வேறு நாடுகளாகவே அமையும். மீண்டும் அல்பேனியா, கொசொவோ உதாரணமாகிறது.
  4. இது ஒரு உள்-இன முரண். இந்தியாவில் கூட ஒரு சாதியினர், இன்னொரு சாதியினரை இப்படி நடத்துவார்கள். இலங்கையில் கூட வடக்கு-கிழக்கு மக்களிடமும் இந்த அந்நியபடல் உண்டு. ஒரு தேசிய இனம் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனவழி நாடுகளை கொண்டிருக்கலாம். அல்பேனியா, கொசோவோ. வள பகிர்வுக்கு அப்பால் - தன் நிலையாக உணர்தல் முக்கியம். பல வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் ஒரே இனம் என்ற உணர்வு, உலகெங்கும் வாழும் “தமிழராக உணர்வோர்” அனைவரிடமும் உண்டு என்பதே என் அனுபவம். மேலே @ராசவன்னியன் கேள்வி கூட இதைத்தான் நிறுவுகிறது. ஆகவே நாம் ஒரே தேசிய இனம்தான். உலகும் அப்படியே ஏற்கிறது.
  5. இல்லை இருவரும் ஒரே தேசிய இனமே. எப்படி? எப்படி என்றால் தம் ethnic identity (சிற்றின இன அடையாளம்) தமிழ் என்றே இருவரும் உணர்கிறார்கள். வேல்ஸ், ஸ்காட்டிஷ், ஐரிஷ், ஆங்கிலேயர் அப்படி அல்ல. அவர்கள் வெல்ஷ், ஸ்கொடிஷ் கேலிக், ஐரிஷ் கேலிக், ஆங்கிலம் ஆகிய வேறு, வேறு மொழிகளை பேசி வந்த, ஆங்கில ஆக்கிரமிப்பால் அந்த மொழிகளை இழந்த (முற்றாக அல்ல) சிற்றினங்கள். நாமும் தமிழக தமிழரும் அப்படி அல்ல. நாம் ஒரே நிலப்பரப்பில் (கடல் பிரித்த) , பெருமளவு ஒத்த கலை பண்பாட்டுடன், ஒரே கூட்டம் என தம் வசமாக உணர்ந்து (subjective) வாழ்கிறோம். ஆகவே நாம் இருவரும் ஒரு தேசிய இனத்தின் கூறுகளே. மேலும் எல்லா நாடுகளும் தேசிய இனவழி அமைந்தவை அல்ல. குறிப்பாக அவுஸ்ரேலியா, அமெரிக்கா, கனடா போன்ற குடியேற்ற நாடுகளும், இந்தியா போன்ற கூட்டுகலவை நாடுகளும். இந்தியா பல தேசிய இனங்களின் கூட்டு. இங்கே பல தேசிய இனங்கள் சேர்ந்து இந்தியா என்ற தேசிய அடையாளத்தை உருவாக்கி உள்ளன. ஆனால் இந்தியன் என்பது தேசிய இனம் அல்ல. அதேபோல் அவுஸ்ரேலியர், அமரிக்கர் ஆங்கிலதேசிய இனத்தவர் அல்ல. அங்கே ஆங்கிலம் பேசும் பல குடியேறிகள் சேர்ந்து அமெரிக்கன், அவுஸ்ரேலியன் என்ற தேசிய அடையாளத்தை உருவாக்கி உள்ளன. இவையும் தேசிய இனங்கள் அல்ல. ஒரு அமெரிக்கனுக்கு, பிரஜா உரிமை (citizenship) - அமெரிக்கன். தேசியம் (nationality) - அமரிக்கன் தேசிய இனம் - இல்லை ஒரு இந்திய தமிழனுக்கு, பிரஜா உரிமை (citizenship) - இந்தியன் தேசியம் (nationality) - இந்தியன், தமிழன் தேசிய இனம் - தமிழ். ஒரு இலங்கை தமிழனுக்கு, பிரஜா உரிமை (citizenship) - இலங்கை. தேசியம் (nationality) - இலங்கையர், தமிழ் தேசிய இனம் - தமிழ். ஒரு இங்கிலாந்தில் பிறந்த தமிழனுக்கு, பிரஜா உரிமை (citizenship) - பிரித்தானியன். தேசியம் (nationality) - பிரிட்டிஷ், இங்கிலிஷ், (உணர்ந்தால்)-தமிழ் தேசிய இனம் - தமிழ் (காலப்போக்கில் இன உணர்வு அற்றால் - இவர்களும் தேசிய இனமற்றோர் ஆவார்கள் - கயானாவில் இருக்கும் “தமிழர்கள்” போல். எல்லாவறுக்கும் அடிப்படை தற்சார்ப்பு பார்வைதான் (subjective view). தமிழக, ஈழ தமிழர் தாம் ஒரே இனத்தின் வாரிசுகள் என உணரும் வரை நாம் ஒரே தேசிய இனமே. பிகு அவரவர் அரசியலில் பக்கம்சார்ந்து தலையிட கூடாது என்பது சரி. ஆனால் பொதுவாக ஒரு பகுதிக்கு, மறு பகுதியின் ஆதரவை கோருவதில், தெரிவிப்பதில் ஒரு தவறும் இல்லை. அது தேவையும் கூட.
  6. நாங்கள் மட்டும் என்ன, ரஸ்யா, சீனா, வடகொரிய, சிரியா, ஈரான், ஹிட்லர் எண்டால்…. மக்கள் மாட்டு மந்தை மாரி, சர்வாதிகாரம் தான் கட்டுப்பாட்டை கொண்டு வரும். ஒரு ஒழுங்கு இருக்கும் எண்டு எழுதுவோம் (எழுதினோமா இல்லையா?). ஏதாவது ஒரு குற்றசெயல் மேற்கில் நடந்தால் கட்டுப்பாடான நாட்டில் இப்படி நடக்குமா எண்டு எழுதுவோம். மக்கள் புரட்சி நேரம் ஈரானுக்கு ஆதவாக எழுதி போட்டு, நீங்கள் மாணவிகள் பக்கமா? முல்லாக்கள் பக்கமா எண்டு கேள்வி கேட்டால் பதிலே எழுதாமல் எஸ் ஆவோம். ஆனால் அதுவே சவுதி எண்டால் கழுவி, கழுவி ஊத்துவோம்.
  7. @தமிழ் சிறி அண்ணா @பெருமாள் உங்கட பர்னிச்சரை உடைக்கிறார். என்னெண்டு பாருங்கோ🤣
  8. 🤣🤣🤣 வெஸ்டோ-போபியா, புட்ஸ்சோ-பீலியா, இரெண்டுக்கும் சிங்களவனின் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உப்பு-சோடா போல் அருமருந்து இல்லை மகனே என்கிறார் உடான்ஸ்சாமியார்.
  9. சிங்களவன்…சிங்களவந்தான்…. தமிழனை ஓட…ஓட விரட்டினமாரி….இப்ப டொலரை விரட்டிறான்….🤣 தமிழன் சிங்களவனிட்ட உப்பு சோடா வாங்கி குடித்து தனது கெட்டிதனத்தை வளர்க்க வேணும்🤣. ஜய வேவா, ஜய வேவா! 🇱🇰🇱🇰🇱🇰 இவ்வண் - இன்று முதல் இலங்கைக்கு(ம்) கழுவுவோர் சம்மேளனம்-
  10. நான் என் அளவில்தான் பதில் சொல்ல முடியும். அதே போல் நீங்கள் எவரும் முகாபே பற்றி கதைக்கவில்லை என பொதுபடையாக கூறவும் முடியாது. 1ம் ஈராக் யுத்தம் தேவையானது. 2ம் ஈராக் யுத்தம் தேவையற்றது என முன்பே எழுதி உள்ளேன். அதை எதிர்த்து லண்டனில் ஊர்வலம் போன 1 மில்லியனில் நானும் இணைந்திருந்தேன். நான் போர்களில் என் ஆதரவு நிலைப்பட்டை எப்போதும் மேற்கின் பக்கம் கண்மூடிதனமாக வைப்பவன் அல்ல, தரப்புகளின் தார்மீக நியாயம், என் தனி மனித நலன், இன நலன் என பலதை ஆலோசித்தே முடிவு செய்வேன். இங்கே கருத்து எழுதும் பலரும் அப்படித்தான் என்றே நினைக்கிறேன். மேற்கு எமக்கு செய்ததை மறந்து மேற்குக்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கும் அடிமை புத்தி உள்ள ஈனர்கள் என எந்த யாழ் கள உறவையும் நான் குறை மதிப்பிடு செய்யவில்லை.
  11. முகாபே பற்றிய திரிகளில் அவரை பற்றி எழுதி உள்ளேன். பிரித்தானிய அரச வம்சத்தை யாழில் நாறடித்து எழுதியது மட்டும் இல்லாமல் காலத்துக்கு ஒவ்வாத இந்த முறையை பிரிட்டனும் பொது நலவாயநாடுகளும் தூக்கி எறிய வேண்டும் என்றும் எழுதி உள்ளேன். தேடிப்பார்த்தால் புரியும். அண்ணா யூனிவர்சிட்டி டாக்டர் பட்டம் தவிர வேறு எந்த பட்டம் தந்தாலும் எனக்கு சந்தோசமே. ஆனால் இங்கே குழுநிலை வாத அணுகுமுறையை யார் தொடங்கினார்கள் என்பதை பற்றியே சொல்லியுள்ளேன். எவரும் இல்லை. ஊரில் போராடப்போகாமல் போரை சகித்தவனும், வெளிநாட்டில் இருந்து காசு அனுப்பினவரும் கூட போராட போனவர்கள் முன் தூசிக்கு சமம். ஆனால் இங்கே சொன்னது - பொது நன்மைக்காக பொருளாதார இழப்பை சகிப்பது புதிதல்ல என்பதை.
  12. எனக்கும் ஜெகோவாவினர் மீது எந்த நல்ல அபிபிராயமும் இல்லை. இருப்பதெல்லாம் கடுப்பும், நக்கலும்தான். உங்கள் தனிப்பட்ட காரணத்தை புரிந்து கொள்கிறேன். ஆனால் ஒரு செய்தி திரியில் (துயர் பகிர்வோம் திரியில் அல்ல) பூகம்ப செய்திக்கு மறந்து போய் அனுதாபம் தெரிவிக்காதோர் எல்லாம் மனித நேயம் அற்றோர் என எழுதுவது சரி என்றால் - தனிபட்ட காரணம் இருந்தாலும் ஒரு மனித இழப்பை இட்டு அனுதாபம் கூட தெரிவிக்க முடியாமல் இருப்பவரையும் அதே சட்டியில் வறுக்கலாம்.
  13. அவை பொது நோக்குக்காகவா? அல்லது தனி மனித முன்னேற்றதுக்காகவா? தமிழினம் உய்ய நீங்கள் வெளிநாடு வரவில்லைதானே அண்ணை. ஆனால் என் போன்றோர், யுத்த வடுவை, பொருளாதார சுமையை, அவை தந்த மனச்சிதைவை - இனம் விடுதலை பெற வேண்டும் என்ற பொது நோக்கில் சகித்து கொண்டோம். அந்த ஓர்மம் - இன்னும் அப்படியேதான் இருக்கிறது. பொருள்விலை ஏற்றம் எல்லாம் ஜுஜுபி. 2ம் உலக யுத்த வடுவை தாங்கி நின்ற ஐரோப்பிய மக்களிடமும், அதே ஓர்மம் தலைமுறைதாண்டியும் நிற்கிறது.
  14. அண்ணை இன்னும் அந்த அனுதாப செய்தி வரவில்லை. அல்லது செத்தவர்கள் ஜெகோவா என்றால் அனுதாபம் தேவையில்லை என நினைக்கிறீர்களோ? இல்லை இப்ப எங்க அடி விழுந்தாலும் காலை உக்ரேனில் தூக்குவதுதானே டிரெண்ட். அது போல இருக்கும் என நினைத்தேன். இல்லை என்றால் ஓகே.
  15. உக்கல் உக்ரேனை பிடிக்க ஒரு வருடமாய் முக்கி, கீவ் வரை வந்து அடிவாங்கி ஓடி, பிடித்த ஒரே பெரு நகர் கெசோனையும் விட்டு ஓடி, இப்போ ஒரு பட்டினத்தை பிடித்து விட்டு …வடிவேலு ஸ்டைலில் கலர்ஸ் காட்டும் போதே தெரிகிறதே மரபு வழி போரில் ரஸ்யா பிஸ்கோத்து என்பது. ஆனால் உக்ரேனில் வச்சு இந்த அடியை கொடுக்காமல் விட்டால் அடுத்த பத்து ஆண்டில் போலந்தை சொறிந்து பார்க்கும் ஆர்வம், வல்லமை ரஸ்யாவுக்கு வரும்.
  16. பொருளாதார தடையை ஜேர்மனியில் இருந்து ஒளிவீச்சில் பார்த்தவன் இல்லை. பஞ்சில் லாம்பெண்ணை தோய்த்து வந்த வெளிச்சத்தில் படித்தவன். ஒரு காரியம் நடக்க சில சுமைகளை தாங்கி கொள்ளத்தான் வேண்டும் என்பதை நாம் சிறுவர்களாகவே கற்று கொண்டுள்ளோம். பல ஐரோப்பிய நாட்டினரும் அப்படியே. அதனால்தான் பல மில்லியன் சனதொகை கொண்ட ஜேர்மனி போன்ற நாடுகளில் சில ஆயிரம் பேர் ரஸ்யாவுக்கு ஆதரவாக போராடுகிறார்கள். நாளைக்கு எனது மகன் போலந்து எல்லையில் துவக்கோடு நிற்பதா? இல்லை இப்போ சாமன்விலையை பொறுத்துகொள்வதா என்பதுதான் கேள்வி எனும் போது - விடை மிக இலகுவானது.
  17. ஒரு நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிராக எத்தனை எதிர்க்கட்சிகள் இருக்கும். இருக்கணும். அது போல் தான் நானும் நான் சார்ந்தவர்களும். ஆளும் கட்சியில் இருப்பதினால் செய்வதெல்லாம் சரியாகி விடாது. அது போல் ஜேர்மனியில் கேடு கெட்ட ஆளும் கட்சியின் நடவடிக்கைக்கு எதிராக பிற கட்சிகளும் உள்ளன. எனவே. சரி பிழைகளுக்கு இங்கே நீங்கள் குறிப்பிடும் யாரும் மேற்கை எப்போதும் ஒரேயடியாக ஆதரித்தவர்கள் அல்ல. கியூபா, ஈராக், ஈழம், என பல இடங்களில் மேற்கை விமர்சித்து எழுதியோர். அது மட்டும் அல்ல - உக்ரேன் விடயத்தில் எடுத்த நிலைப்பாட்ட்டை இவர்கள் யாரும் தாய்வான் விடயத்தில் எடுக்கவில்லை. இவை எல்லாமுமே உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் குதர்க்கம், குழு நிலைவாதம் தலைக்கேறி - உங்களுக்கு மாற்று கருத்தை சொல்பவர்களை மேற்கின் அடிமைகள், வெள்ளைதோல் விசுவாசிகள் என கீழ்தரமாக முதலில் எழுத தொடங்கியது யார் என யோசித்து பாருங்கள்.
  18. இப்ப மேற்கை கரிச்சு கொட்டி கொண்டு இருக்கும், புட்டினை மாண்புமிகு என்று புகழும் பேராசான்கள் வீட்டில் எல்லாம் லாடா வாகனம் இல்லைத்தானே பி எம் டபிள்யூ தானே. டிவி? ஜப்பான் ? போன் ? அமெரிக்கன் அல்லது தென் கொரியன் ? பந்தயம் கட்டலாம் ரஸ்யாவில் உருவான ஒரு குண்டுமணி கூட வீட்டில் இராது. முந்தி எரிவாயுவாவது ரஸ்யன் இப்ப அதுவும் இல்லை. இவ்வாறுதான் எல்லாரும் - வக்கணையா கதைக்க மட்டும் ரெடி, ஆனால் செயல் நேர்மாறு.
  19. அல்லது திண்ணையில் குருசேத்திர அர்ஜூனன் வயனத்தை எடுத்து விடுவார்கள் 🤣.
  20. நினைவூட்டலுக்கு நன்றி. இத்தோடு இந்த திரியில் இருந்து விலகி விடுவதே எண்ணம். ஆனால்… உங்களுக்கு தெரிந்த பழமொழிதான்…குனிய, குனிய குட்டுறவனும் மடையன், குனியுறவனும் மடையன். நெடுக ஒரு தலைபட்ச போர் நிறுத்தம் செய்ய போர் நிறுத்தம் சரிவராது தானே அண்ணை. ஆகவே பரஸ்பர நினைவூட்டல்கள் எல்லாருக்கும் நல்லதே. நன்றி. வணக்கம்.
  21. ரொபெர்ட் முகாபே வெள்ளையர் என்பதால் இருக்குமோ🤣. முகாபேயை நான் இங்கே இப்படி எழுதிய போது - இதே நபர்கள்தான் அவர் கறுப்பின நாயகன் என்றும், வெள்ளையரை விரட்டுவதால் நான் அடிமை புத்தியில் எழுதுகிறேன் என்றும் எழுதினார்கள். அதே மனிதர்கள்தான் அமீத்ஷாவும், மோடியும் கஸ்மீரி தேசிய இனத்தின் உரிமையை பறித்த போது அதை வரவேற்று எழுதி, எதிர்த்து எழுதிய எனக்கு முஸ்லிம் நேசன் பட்டமும் தந்தார்கள். குழுவாதம் தலைக்கேறினால் முன்பு என்ன எழுதினோம் என்பதும் மறந்து விடுமா? இன்ப நிதிக்கு அடுத்து துன்ப நிதி வந்தாலும் அது தேர்தல் மூலம் என்றால் ஒன்றும் செய்ய முடியாது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.