Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15634
  • Joined

  • Last visited

  • Days Won

    175

Everything posted by goshan_che

  1. இதுதான் உண்மை. அண்மையில் திண்ணையில் இங்கிலாந்து, ஜேர்மன் மக்கள் தமக்கிடையே பிரதேசவாதம் பார்ப்பதை பற்றி பலரும் கதைத்திருந்தோம். அதில் கூட…ஒரு அளவுக்கு மேல் இந்த மக்கள் இந்த பிரிவினைகளை இறுக்கி பிடிக்கமாட்டார்கள் என கதைத்தோம். சிங்களவரின் மேல்/கீழ் நாட்டு சிங்களவர், சாதிய பிரிவினைகளும் இப்படித்தான். குறிப்பாக அநகாரிக தர்மபாலவின் வருகையின் பின் அவர்கள் மத்தியில் இந்த பிரிவினைகள் எம்மளவுக்கு தீவிரமில்லை என்பதே உண்மை. எம்மிடையே 83-2009 வரை தணிந்திருந்தது.
  2. தமிழ் கத்தோலிக்க சமூகத்தின் மீதான அத்தனை வன்முறையின் பின்னும் மகிந்தவை நேரில் அழைத்து ஆசீர்வதிதவர் போப்பாண்டவர். இதன் முக்கிய காரணம் - கர்தினால் என்ற வகையில் கொழும்பு பேராயர் சொல்வதன் படி வத்கிக்கான் ஒழுகுவதே. முன்பே சொன்னதுதான். தமிழர் அல்லாதோர் எம்மை தமிழராக மட்டுமே பார்கிறனர். இதில் வத்திகனும், கொழும்பின் பேராயரும் (கர்தினாலும்) அடங்குகிறனர். நாம்தான் சைவன், கத்தோலிக்கன், புரடஸ்தாந்து என நமக்குள் பார்க்கிறோம். இந்த மாற்றாந்தாய் அணுகுமுறையை இப்போதாவது சுட்டி காட்டி, பரிகாரமாக தமிழ் பேசும் இரு மாகாணங்களுக்கும் ஒரு கர்தினாலை நியமிக்க அருட்தந்தை பத்திநாதர் கோருவது நியாயமானது, காலத்தின் தேவை. இதை சமய வேறுபாடுகளை மறந்து ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் கடமை.
  3. ஒரு காலத்தில் இதே தொகை ஒரு மில்லியன் ஈரோவை நெருங்கும்…. #பிரெக்சிற் அனுகூலங்கள்🤣
  4. உங்களுக்கு விளங்குது எசமான்… இந்த ஊருக்கு விளங்கலியே…🤣 பேனைகாரார் = கருணாநிதிதானே🤣
  5. ஆ எந்தா மோனே ஓணாண்டி சுகந்தன்னே… ஈ பெண்குட்டி முக்தி நன்னாயிட்டு இருக்குமோ ?🤣. பிகு சும்மா திண்ணையில்லாவது வந்து குதியன் போட்ட்டால் குறைஞ்சா போவியள்🤣
  6. கனகாலமாக யாழில் குதியன் குத்தும் எங்கள் குல கொழுந்து @பாலபத்ர ஓணாண்டியை காணவில்லை. இந்த வீடியோவாவது இழுத்து வரட்டும்🤣.
  7. இப்போ எவ்வளவு சதுர கிமி காணி ஊ.பா.வலயம் என காட்டும் வரைபடங்கள் ஏதும் உள்ளதா? 2009 பகுதியில் இருந்தது. இப்போ கூகிள் வரைபட கருவிகளை கொண்டு இலகுவாக செய்யலாம் என நினைக்கிறேன். இது 2014 வரைக்குமானது. https://www.aaas.org/resources/monitoring-change-sri-lankas-valikamam-high-security-zone-2009-2014#_ftnref1
  8. பலூன் தங்களின் வானிலை அறியும் பலூன் காற்றுக்கு மாறி பறந்து விட்டது என்கிறது சீனா. https://www.aljazeera.com/amp/news/2023/2/3/china-says-balloon-over-us-airspace-is-civilian-airship
  9. 3 பேச்சுக்கு (after dinner speech) - கிட்டதட்ட எண்ணூராயிரத்து நாற்பதினாயிரம் ஈரோக்கள்.
  10. கிம்முதான் பெஸ்ட்டு மற்றவன்லாம் புஸ்கு🤣 உங்கள் கருத்துக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்🤣 பிகு டிவிட்டரில் பலூனை விட பலூன் பற்றிய சதி கோட்பாடுகள் அதிகம் பறக்கிறது. யாழில் இன்னும் காணவில்லை.
  11. ஜோன்சன் அடிப்படையில் ஒரு வாடகை மேளம். யார் காசு கொடுத்தாலும், எங்கே தான் பதவியை அடையலாம் என்றாலும் அங்கே சமா வைப்பார். பிரித்தானிய பிரதமராக இருந்த போது - சிலதை அதிகாரிகள் சொல்லவிடாமல் கட்டுபடுத்தி இருப்பார்கள். இந்த விடயத்தில் நான் உண்மையில், பெஸ்கோ சொன்னதுடன் ரஸ்யாவுடன் உடன்படுகிறேன். எனது பார்வையில், புட்டின் இப்படி சொல்லி இருக்க வாய்ப்பில்லை. பெஸ்கோ சொல்வதை போல் ஒன்றில் புட்டின் சொன்னதை ஜோன்சன் பிழையாக விளங்கி கொண்டார், அல்லது கவனத்தை ஈர்பதற்க்காக வேணும் எண்டே பொய் சொல்கிறார். பொரிசை பொறுத்தவரை இரண்டுக்கும் 50:50 வாய்ப்பு உண்டு. பிகு பொரிஸ் தன்னை சர்சிலாக கற்பனை செய்பவர். சேர்சிலை போல தானும் 2ம் இனிங்ஸ் ஆடலாம் என கனவில் மிதப்பவர். 2ம் இனிங்ஸ்சுக்காகன இலகு வழியாக உக்ரேனை எடுத்துள்ளார். கிட்டதட்ட உக்ரேனின் தூதர் போலவே அண்மைய 2 நாளில் ஆளின் பேச்சு. இடையில் கொஞ்சம் காசும் பார்க்கலாம், நேட்டோ பதவி கிடைத்தால் சந்தோசாம். ஆனால் பொரிஸ் போல ஒரு வெறும் பயலை நேட்டோ எடுக்கும் என நான் நினைக்கவில்லை. பொரிஸ் சொன்னதுக்கு இலகுவில் உணர்சிவசபடும் ஊடகங்கள்தான் (sensationalist media) அதிகம் எதிர்வினை காட்டின. ரஸ்யா, அமெரிக்கா, யூகே அரசுகள் பெரிதாக எதிர்வினை காட்டவில்லை.
  12. ஓம். ரிசைக்கிளிங் நல்லதுதான். ஆனால் ரிசைக்கிளிங் என்ற போர்வையில் ஐரோப்பிய கழிவுகளை இலங்கையில் கொட்டுவதை, குறிப்பாக தமிழர் பகுதியில் கொட்டுவதை ஏற்க முடியாது என அந்த மக்கள் சொல்ல கூடும்🤣. பிகு ஜேர்மனியில் முடியாது ஆனல் கென்யாவில் வடலி வளர்த்து கள்ளும் குடிக்கலாம், வேலியும் பாயலாம் 🤪
  13. அது 13 ஐ தராமல் விட்டால். ஆனால் காணி, பொலிஸ் அதிகாரத்தை மத்தியின் கையில் வைத்திருக்கும் ஆணை குழுவை அமைத்து விட்டு, லெட்டர்பேட்டில் மட்டும் மாகாண காணி அமைச்சர், மாகாண பொலிஸ் அமைச்சர் என்ற பெயர்களை உடைய அலங்கார பதவிகளை கொடுத்து, அதை “பொதி” என சம்+சும் உம் ஏற்று கொண்டால்? அதாவது 13 மைனஸ், மைனஸ். ஆனால் பெயர் 13. அப்போ இந்தியாவுக்கும் திருப்தி. மேற்கும் தாம் தமிழருக்கு எதையோ கொடுத்து விட்டதாக பீத்தி கொள்ளலாம். தமிழரை தவிர மிச்சம் எல்லாருக்கும் win-win solution. தமிழருக்கு வழமைபோல் சுத்தமான மாத்தறை தொதோல் அல்லது இந்தியன் அல்வா 🤣
  14. அங்கே இருந்து வெள்ளையளை வெளியேற்றினால் அநேகம் பேர் ஜேர்மனிக்கும், நெதர்லாந்துக்கும்தான் வருவார்கள்🤣. பிறகு ஜேர்மனியில் இருந்து பழுப்புதோலரை ஆசியா, துருக்கிக்கு அனுப்பலாம் 🤣. Recycling is good for the environment 🤣
  15. 13 பிளஸ் நியாபகம் இருக்கா? சமஸ்டி? எல்லாத்திலையும் இருந்து இழுத்து கொண்டு கீழே வந்து - சட்டத்தில் இருக்கும் 13 ஐயே நீக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். சர்வதேச உத்தரவாதம் (தனியே இந்தியா மட்டும் அல்ல) இல்லாத எந்த தீர்வும், எழுதிய மை காயமுன்னம் கிழித்து வீசப்படும். ஆகவே நாங்கள் இதில் உத்தரவாதிகளாக மேற்கை இழுத்து வருவதே சிறப்பு. அவர்களுக்கும் அதற்கான தேவை உண்டு. இந்தியா + ஈயூ + கனடா+ யூகே இதில் சம்பந்த பட்டால் மட்டுமே நாம் புலம்பெயர் சக்தியை பாவித்து கொஞ்ச அளுத்தமாவது கொடுக்கலாம். கஜன் தரப்பு சீனாவுடன் ஒரு தொடர்பாடல் வழியை திறக்ககலாம்.
  16. நியாயமான அலுப்புத்தான். எல்லாருக்கும் மறுபடியும் ஏமாற்றப்படுகிறோம் என்பது உறைக்கிறது என நினைக்கிறேன்.
  17. தமிழந்தான் இனம் மாறி கட்டினால் அத்தோடு அந்த நபரை தூய தமிழன் இல்லை என்றாக்கி விடுவானே. மிலிந்த 13 ஐ பற்றி பெரிய அபிபிராயம் இல்லாத மனிதர். உண்மையில் ஒரு உயர் நிலை தரகர். கூலியை பொறுத்து நிலைப்பாட்டை மாற்றுவார். இவரை 13 எதிர் நிலை எடுக்க வைத்து, இந்திய தூதராயும் நியமித்தது நரி 🦊. இந்த நரிதான் 13 ஐ அமல்படுத்துவேன் என ஊளையும் இட்டது🤣
  18. இதை விட அப்பனான பிளானை எல்லாம் முன்னர் அடித்து நூத்திருக்கு இந்த நரி. 1. இவர்கள் ஆடுவதே ரணில் சொல்லித்தான். ஆளுநரை இப்போ ரணில் தூக்கி எறியலாம். இதைவிட ராஜபக்சக்கள் விரும்பாத பலதை, ஜனாதிபதி ஆனபின் செய்துள்ளார் நரியார். 2. இவர்களை வைத்து ஒரு அளவுக்கு மேல் போனால் தெற்கில் பூகம்பம் வெடிக்கும், இன கலவரம் வெடிக்கும் என சொல்லி, மேற்கை ஒரு வழிக்கு கொண்டு வந்து விடுவார். 3. பின்னர் இந்தியா, மேற்குக்கு, புலம்பெயர் தமிழருக்கு நான் 13 ஐ தருகிறேன் என விபூதி அடிப்பார். இப்போ வீரசேகர பகுதி கூச்சல் உச்ச ஸ்தாயியை அடையும். 4. இதை காரணம் காட்டி, 13 கொடுத்த கொஞ்ச நஞ்ச காணி, பொலிஸ் அதிகாரத்தையும், தேசிய ஆணைகுழுக்கள் மூலம் மீண்டும் பறித்து கொள்வார். 5. பிறகு என்ன 13 என்ற பெயரில், யானை தின்ற விளாம்பழமாக சதை எதுவும் இல்லாத ஒரு கோதை தமிழர் தலையில் கட்டி விட்டு, நோபல் பரிசையும் தட்டி செல்வார் நரியார். 6. அதிகார துஸ்பிரயோகம், காணி உரிமை, கல்வி கொள்கை, என நாம் இத்தனை காலம் போராடிய அத்தனை உரிமைகளும் பெயரளவில் உள்ள, ஆனால் எந்த நிஜ அதிகாரமும் அற்ற ஒரு மாகாணசபையை நாம் கட்டி அழுவோம். அரச காணி மறுபங்கீடு என்ற முகமூடியில் குடியேற்றம், தமிழர் நிலத்தை தமிழர் நிலமல்லாதது ஆக்கும் செயல்திட்டம் வேகம் பெறும். இது என் கணிப்பு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.