Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. உங்கள் இருவருக்கும் மனம் வெம்புகிறது… ஆனால் அதை பொது வெளியில் ஒத்து கொள்ள ஈகோ விடுகுதில்லை என்பது உங்கள் கருத்துக்களிலேயே தெரிகிறது… @புலவர் மனநிலையும் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். @வீரப் பையன்26 என்ன புதிய, அரிய வகை முட்டுடன் வரப்போகிறார் என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன்🤣. ————- கவுன்சிலிங் உதவி தேவை எனில் நான் தயார். முன்பு சம்-சும்-விக்கி யை ஆதாரித்து பின் நிலைமாறிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாம்🤣. பிகு சீமானின் இந்த செயல் அவர் எப்படிபட்ட பச்சோந்தி என அறிந்தோருக்கு எந்த வியப்பையும் தராது.
  2. அப்படி பெரிய அழகனா @Nathamuni நாதம்ஸ்?🤣
  3. என்னையா இது? ********* தன் தலைவனை பில்டப் பண்ணி ஒரு செய்தியை போட்டால் - அதற்கு அடுத்த பின்னூட்டத்தில் வந்து இப்படி ஒரு ஓவியத்தால் அத்தனையையும் கிழித்து தொங்க விடுவீர்கள்களா 🤣. இது முறையா? தர்மம்தானா?🤣 பார்ப்போம் இவரும் சும் சாணக்ஸ் போல போய் பாலிமெண்ட்டுக்கு வெளிய நிண்டு போட்டோ எடுத்து போடுறாரா என. சந்திப்பு நடந்தால் இருதரப்பு அறிக்கை, படம் வரும்.
  4. இரு மருங்கிலும் காணியை விடவில்லை, 600 யார் வீதியை மட்டும் விட்டார்கள். அப்போதும் காணி உரிமையாளர் அனுரவுக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் வரவில்லை என்பதையும் எழுதினேன். என்ன குதி குதித்தீர்கள்… வோட்டு போட்ட மக்களை திட்ட வேண்டாம்…. அனுர இப்போதான் வந்துள்ளார்… நல்லெண்ண சமிக்ஞை….தேங்காய் என்ணை சமிக்ஞை என….. இதுதான் அவர்கள் எப்போதும்.
  5. ஏன் எவராவது ஒரு சிங்கள இனவாதியை தூக்கி பிடிக்காட்டி உங்களுக்கு இரவில் நித்திரை வராதா? எவரையும் இல்லை. ஓம். ஆனால் அவர் அதிகாரத்தில் இல்லை. சாணாக்ஸ் குரல் கொடுக்கத்தான் வேண்டும். முன்பு பலதுக்கு போராடியும் உள்ளார். ஆனால் அவர் போராடமட்டுமே முடியும். அதிகாரத்தில் உள்ள அனுரவும் என் பி பி யும் ஒரு நொடியில் இதை முடிவுக்கு கொண்டுவரலாம். நான் எங்கே இதை வேண்டாம் என்றேன்? அனுரவை கேள்வி கேட்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, யாழ் போன்ற இடங்களில் அவரை தூக்கி தலையில் வைத்து ஏன் ஆடுகிறீர்கள் எண்டுதான் கேட்கிறேன்.
  6. இதுவரை இந்தியாவை புறம் தள்ளுவோம் என கூறி கொண்டிருந்த முண்ணனியினர் இப்போ ஆக்கபூர்வ பங்களிப்பை கோருவது நல்ல நிலை மாற்றம். வரவேற்கிறேன். தமிழ் தேசிய கட்சிகளிடம் பொது நிலைப்பாட்டு எட்டப்பட இப்படியான நெகிழ்வு போக்கு அவசியமாகிறது.
  7. இதை கொஞ்ச காலம் தொழிலில் இருந்தால்தான் அறியமுடியும். சிலமயம் தொழில் செய்யும் இடத்தில் ஆட்கள் கூட்டமாக வந்து…ஏய்…வாய்யா வெளியே…என கூச்சல் போடுவார்கள்… அப்போ எதுவும் நடக்காத மாதிரி மிக்சர் சாப்பிடவேண்டும். அதேபோல்…எப்போ யார் என்ன சொன்னார் என்ற வரவு செலவு ரெக்கோர்ட்டை மறக்காது மெயிண்டேயின் பண்ண வேண்டும்🤣.
  8. சின்மயி சர்ச்சை நேரம் தாங்களும், நாதமும் டயமண்ட் பேர்ளை என்னமா தாங்கினீர்கள் என எண்ணிப்பார்த்தேன்… கண்கள் வியர்த்து விட்டன 🤣
  9. இருவர் தான் முழு நேரம். நீங்களும் @தமிழ் சிறி அண்ணாவும் பார்ட் டைம்🤣. தமிழ் சிறி அண்ணா முந்தி புல் டைம், பிறகு சுமந்திரனையும் அடிக்கும் வேலை இருப்பதால் இரெண்டையிம் பார்டைமா செய்றார்🤣. எதை வைத்து சொல்கிறேன்? யாழுக்கு வந்தால் யார் உலக நடப்பு திரியையே வளைய வருகிறார்கள், மற்றும் எழுதும் கருத்துகளில் மேற்கை எதிர்த்து எழும் கருத்துக்களின் அண்ணளவான சதவீதம் என்பவற்றை வைத்து. இது எல்லோரும் செய்வதுதான். எனக்கு சீமானை அடிப்பது முழு நேரத்தொழில். ஓவர் டைம் பேசிசில் அனுரவையும் அடிக்கிறேன்🤣. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அஜெண்டாவோடுதான் எழுதுகிறோம். சிலது நேர்மறை அஜெண்டா, சிலது எதிர்மறை அஜெண்டா என்பது என் பார்வை. என் பார்வையோடு நீங்கள் உடன் படவேண்டிய அவசியம் இல்லை. நான் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். உங்களுக்கு அது அதீத கற்பனையாக படலாம்.
  10. அப்படியா…மாண்பு மிகு அனுர.. என்பது வரை எழுதப்பட்டது. அண்ணை அண்டைக்கு லீவு போல.
  11. ஏன் இதுவரை இப்படியானவற்றிகு சாணக்கியன் போராடவில்லையா? யார் போராடினாலும் தடுத்து நிறுத்த ஒரு தமிழ் எம்பியால் முடியாது. தடுத்து நிறுத்த கூடிய இயலுமை ஆட்சியாளரிடம்தான் உண்டு. அனுர அரசு நீங்கள் சொல்வது போல் இனவாதமற்ற அரசு எனில் வந்தவுடனேயே இப்படி தமிழ் இடங்களில் பெளத்த சின்னங்களை நிறுவுவதை தடுத்திருக்க வேண்டும். செய்தார்களா? இல்லை. ஆகவே அனுரவும் அவர் அரசும் கூட முன்னையோர் போல் இனவாதிகளே என்பது தெளிவாகிறது. இதை மறைக்க, அனுர அனுதாபியான நீங்கள் சாணக்ஸ் மீது கையை காட்டுகிறீர்கள்.
  12. ஓம்…அது பாருங்கோ…உங்களுக்கும் எனக்கும் கதியால் சண்டை…. அதுதான்…உங்களோடு பொருதுகிறேன்….🤣 என்னை பொறுத்தமட்டில் அனுரவை யாழில் தூக்கி பிடிப்பதில் முதன்மையானவர் நீங்கள். அந்த அரசியலினை விமர்சிக்கும் போது நீங்கள் collateral damage. அதுக்காககதானா யாழில் கிடந்து முக்குகிறீர்கள்.
  13. பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன். இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.
  14. உஷ்….உப்பிடி எல்லாம் கதையாதேங்கோ…. அப்புறம் அனுர தெய்யோ கண்ணை குத்தி போடும்…. வேணும் எண்டால் - அனுரவின் கீழும் இனவாத நடவடிக்கை அப்படியே தொடர்கிறது என்பதை மறைக்க சாணக்கியன் போன்ற சோப்பிளாங்கிகளை போட்டு வறுக்கலாம்🤣
  15. இது இலங்கையை விட வாழுவதற்கு இந்தியா பொதுவாகவே திறம் என்ற அடிப்படையில் அல்ல. இப்போதும் இலங்கையில் இருக்கும் தமிழரை - இந்திய குடியுரிமை வேண்டுமா, ஆனால் இலங்கை குடியுரிமையை துறக்க வேண்டும் என கேட்டால் - மிக பெரும்பான்மை இல்லை என்றே சொல்லும் என நினைக்கிறேன். இவர்கள் இந்திய குடியுரிமை கோருவது…அங்கே செட்டில் ஆகி விட்டனர். பிள்ளைகள் பிறந்து அங்கே படிக்கிறனர். சுருக்கமாக இவர்கள் இந்தியர்களாக மாறி விட்டார்கள் என்பதால். பலருக்கு சட்டம் அனுமதிக்காக வீடுகளும் உண்டு (முகாமில் இருப்போருக்கு அல்ல). இந்த கோரிக்கை மிக நியாயமானது. ஆனால் இதைவைத்து பொதுப்படையாக இலங்கையை விட வாழ இந்திய தகுந்த இடம் என சொல்லமுடியாது.
  16. இப்போ எல்லாரும் திருந்தி விட்டார்கள்🤣. ஒரே அனுர புராணம்தான். காது ஜவ்வு கிழியாத குறை.
  17. Some people are going to leave a mark on this world while others will leave a stain. Fleonor Bookerell சிலர் வரலாற்றில் தம் முத்திரையை பதித்துச் செல்வார்கள். இன்னும் சிலர் வரலாற்றில் ஒரு அழுக்காக படிந்துவிடுவார்கள்.
  18. அனுர அல்லவோ ஜனாதிபதி. இனவாதம் களைய பிறந்த மீட்பர். அவரைத்தான் கேட்கவேண்டும்.
  19. செத்து…செத்து…விளையாட இது என்ன தமிழ் நகைச்சுவை படமா?🤣 இது கட்சி யாப்பு என்ன சொல்கிறது என்பதை பொறுத்தது. 1. இராஜினாமா செய்ததன் பின் - அதை மத்திய குழு அல்லது வேறு எவரும் ஏற்பபின்பே அது செல்லும் - என யாப்பு கூறின், அவ்வாறு நடக்க முன் மாவை ராஜைனாமாவை வாபஸ் பெறலாம். 2. அப்படி இல்லாமல் ராஜினாமா செய்யாலே - அந்த நொடி முதல் அது செல்லும் என யாப்பு கூறின். வாபஸ் வாங்க முடியாது. 3. நடக்கும் இழுபறியை பார்த்தால் - யாப்பு இதில் எதுவும் கூறாமல் silent ஆக உள்ளது போல் உள்ளது. அதுதான் ஆளாளுக்கு ஒவ்வொரு வியாக்கியானம். செல்வா, அமிர், பெரிய பெரிய சட்டத் தூண்கள், சுமன் எல்லாரினதும் யாப்பு எழுதும் இலட்சணம் இதுதான்🤣.
  20. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்த முன்னாள் ஜிகாதிகள் கையில் ஒட்டு மொத்த சிரியாவும் விழவில்லை. முன்னாள் ஜிகாதிகள் என்பதில் பல ஐஎஸ் ஆட்களும் உண்டு. இவர்களுக்கு பெயர்தான் முன்னாள் ஜிகாதிகளே தவிர இவர்கள் ஐஎஸ் போல மிலேச்சர்கள்தான். IKR எனப்படும் ஈராக்கி கேர்டிஸ்தான் போல சிரியாவில் வடக்கே பல நிலத்தொடர்புள்ள இடங்கள் குர்தி இன போராளிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. முன்னாள் ஜிகாதிகள் எஞ்சிய இடத்தை Free Syrian Army உட்பட்ட ஏனைய குழுக்களுடன் பங்கிடுகிறார்கள். முன்னாள் ஜிகாதிகள் இப்போ துருக்கியின் நண்பர்கள். ரஸ்யா தன் வான், கடற் படை தளங்களை இன்னும் அகற்றவில்லை. அசாத்தை கைவிட்டு விட்டு, இப்போ முன்னாள் கிளரையாளர்களுடன் ரஸ்யா பேச்சுவார்த்தை நடத்துகிறதாம். இனி சிரியாவில் ஒரு நிழல் யுத்தம் உள்நாட்டு போர் என்ற பெயரில் அரங்கேறும் என்றே நான் நினைக்கிறேன். இதில் முக்கிய பாத்திரம் துருக்கி, ரச்யாவுக்குத்தான் இருக்கும், ஆனால் பலவீனப்பட்டு வடகொரியாவிடம் படைகளை யாசிக்கும் நிலையில் உள்ள ரஸ்யாவால் பெரிதாக எதையும் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை - மேற்கு FSA, குர்தீக்களை போசிக்க முனையலாம் - டிரம்ப் இதில் தலையிடேன் என அறிவித்து விட்டார். உண்மையில் இதில் ஆர்வம் உள்ள எல்லோரும் James Barr எழுதிய The Line in the Sand புத்தகத்தை வாசிக்க வேண்டும். வரைபடத்தை பார்த்தால் தெரியும் சிரியா, ஈராக் பகுதியில் எல்லை ஒரு ரூலரை வைத்து நேர் கோடு அடித்தது போல் இருக்கும். உண்மையில் நடந்ததும் அதுவே. இவை இயற்கையாக அமைந்த இனவழி தேசிய நாடுகள் அல்ல. அசாத், சதாம், கடாபி போன்ற கொடுங்கோலர்களின் இரும்புபிடி உடைய - நாடுகள் இன, மத உட்பிரிவு அடிப்படையில் உடைவது தவிர்க்கவியலாதத்து. மார்ஷல் டிட்டோவுக்கு பின் யூகோஸ்லாவியாவில் நடந்ததும் இதுவே.
  21. இதில் ஜோக் என்ன தெரியுமா… நான் புலிகள் தடை செய்த இயக்கங்களில் உயர், மத்திய, கீழ் மட்டத்தில் இருந்த பலருடன் இதை பற்றி கதைத்துள்ளேன், விவாதித்துள்ளேன். அர்ஜூன் அண்ணா போன்ற வாழும் சாட்சிகள் யாழில் எழுதியுள்ளனர். பல வகையான இணையதளங்களில், புத்தகங்களில் பாதிக்கபட்டவர்களே தமக்கு நேர்ந்ததை எழுதியுள்ளனர். அவர்கள் நிலைப்பாட்டில் இருந்து இந்த எழுத்துக்கள் பல இடங்களில் மிகைபடுத்தலாகவும் இருப்பதை கண்டும் உள்ளேன். ஆனால் இங்கே சொல்லப்படும் கதைக்கு இவற்றில் இருந்து கூட ஆதாரம் தருவதாக தெரியவில்லை. கட்டபிராயில் கண்டேன், உரும்பிராயில் கேள்விப்பட்டேன். என்ற அளவில்தான் கதை போகுது. வழமையாக யாழில் மேற்கை எதிர்ப்பதை முழு நேர வேலையாக கொண்டோரை தவிர வேறு எவரும் இதை ஆமோதித்தும் கருத்து எழுதவில்லை.
  22. பிறகென்ன…நேரில் சந்திக்கும் அளவு பழக்கம் எண்டால் போன் நம்பரும் இருக்கும்…. ஒரு கோலை போட்டு வாய்யா என கேட்பதுதானே? உண்மையில் அவருக்கு ஏதும் இடர்பாடோ என்னமோ என நான் கவலைபடுவதும் உண்டு. தொடர்புகள் இருந்தால் ஒருக்கா சுகம் விசாரிக்கவும். கோஷானும் மிஸ் பண்ணுகிறார் வாங்கோ எண்டும் சொல்லி விடவும். பிகு அப்ப நாதம் பற்றிய என் “பாய்” சந்தேகம் பிழை எண்டுறியள்?🤣
  23. உங்கள் கருத்தை கவனித்தில் எடுக்கிறேன். எனக்கு அருச்சுனா மீது காழ்புணர்ச்சி ஏதும் இல்லை. ஆனால் ஆஸ்பத்திரி தமிழ் செக்கூரிட்டியை சி ஐ டி யிடம் பிடித்து கொடுப்பேன் என அவர் மிரட்டிய வீடியோ பார்த்தேன். அதில் அகங்காரத்தை தவிர வேறு எதையும் என்னால் காண முடியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.