Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15634
  • Joined

  • Last visited

  • Days Won

    175

Everything posted by goshan_che

  1. முள்ளிவாய்க்கால் நேரம் களத்தில் நின்று ஓரளவுக்கு நியாயமாக செயல்பட்டவர் என நினைக்கிறேன் (பிழை என்றால் திருத்தவும்). பின்னர் இதை காரணம் காட்டியே புலி என முத்திரை குத்தப்பட்டு பழிவாங்கபட போவதாக மிரட்டியதும் அப்படியே அரசின் பக்கம் சாய்ந்து விட்டார் என நினைக்கிறேன். அன்று முதல் நாய்க்கு வாழ்க்கைபட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும் என்ற நிலை என நினைக்கிறேன். தேர்தல் நடக்குமா போல தெரியவில்லை.
  2. புலிகள் வர முன்னம் அவசியம் இருந்தது. ஆலய பிரவேசம் உட்பட பல போராட்டங்களும் நடந்தன. புலிகள் சாதியத்தை அடித்து நொறுக்கியதால் அவர்கள் காலத்தில் சாதியம் தலை எடுக்காமல் இருந்தது, அல்லது வெளி நாட்டுக்கு ஓடி வந்திருதது, ஆகவே 83-2009 கால்பகுதியில் மட்டும் போராட வேண்டிய அவசியம் இருக்கவில்லை (காரணியை புலிகள் அடக்கி விட்டமையால்). நிச்சயமாக. புலிகளால் ஈழத்தில் சாதியை இலகுவில் அடக்க முடியுமாய் இருக்க அங்கே பிராமணியம் அதிகம் வேரூன்றாமையும் காரணமாகியது. அதே போல் நாராயணன்களும், சோக்களும், சுப்ரமணிய சுவாமிகளும் புலிகளை ஜென்மபகைவராக கருத - வர்ணாசிரம/சாதிய/பிரமணிய மேலாண்மை பருப்பு அவர்களிடம் வேகாது என்பதும் ஒரு பிரதான காரணியாகியது.
  3. மேலே சாதியையும் இனத்தையும் ஒன்றாக குழப்பவில்லை. ஒப்பீடு செய்துள்ளேன். செல்வா இன வெறியர் அல்ல. ஆனால் யு என் பி யில், சுதந்திர கட்சியில் இருந்து தமிழருக்கு உரிமை பெற முடியாது என உணர்ந்து தமிழருக்கு தனி கட்சி தொடங்கினார். அவர்களின் கூற்றுப்படி, ஏனைய சாதிகளின் பிடியில் இருக்கும் காங்கிரஸ், திமுக, அதிமுக, பிஜேபியில் இருந்து வன்னியருக்கும், தலித்துகளுக்கும் உரிமையை பெற முடியாது என்பதால் தனி கட்சி கண்டோம் என்கிறார்கள் இராமதாசும், திருமாவும். இங்கே இனத்துக்கும், சாதிக்கும் லாஜிக் ஒன்றுதான். ✅ ❌ இல்லை நிச்சயமாக சாதியை தமது கட்டுப்பாட்டு பகுதியில் பொது வாழ்க்கையில் கடைபிடிப்பதை முற்றாக தடை செய்தார்கள். சாதிய வசவுகள் சொல்லியோர் கூட எச்சரிக்க/தண்டிக்கப்பட்டார்கள். அவர்களின் ஆளுகைக்குள் வாழ்ந்த எவரும் இதை உண்மை என ஒத்து கொள்வார்கள்.
  4. சரி கீழே ஒரு உதாரணம் தருகிறேன். சாதி சான்றிதழ் தேவையா இல்லையா என இதை வைத்து உங்கள் முடிவை சொல்லுங்கள். பாபு - இவன் ஒரு தாழ்த்தப்பட்ட/பழங்குடி வீட்டில் பிறந்தவன். அவன் தந்தை ஒரு மலம் அள்ளும் தொழிலாளி. தாய் - விவசாய கூலி. இவர்கள் பரம்பரையில் யாரும் 8ம் வகுப்பு தாண்டவில்லை. நில உரிமை இல்லை. ஆயிரம் ஆண்டுகளாக நில, வழிபாட்டு, கல்வி உரிமை உனக்கு கொடுக்ககூடாது என வர்ணாசிரமம் சொல்கிறது என்று சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் மகன். இந்த வரலாற்று பிழையை முடிந்தளவு சரி செய்ய, இவனுக்கு உயர் கல்வியில் முன்னுரிமை (85% மார்க் எடுத்தாலே போதும்) என இந்திய சட்டங்கள் சொல்லி, அது நடைமுறையிலும் உள்ளது. கோபு - இவன் ஒரு டாக்டரின் மகன். தாய் கலெக்டர். இரு வழி பாட்டாக்களும் உயர் அரச அதிகாரிகள். கொள்ளு பாட்டா பிரிடிஸ் காலத்தில் ஜட்ஜ். அவரின் அப்பா ஒரு ராஜாவின் மந்திரி. காலாகாலமாக வருணாசிரம முறை படிக்க, படிபிக்க, இறைவனோடு ஏனையோர் சார்பில் கதைக்க, அரசருக்கு ஆலோசனை சொல்ல, இன்னும் உள்ள எல்லா உயர் தொழிலும் செய்ய வேண்டிய உயர் சாதி என கூறி வளர்த்த சாதியில் பிறந்த மகன். கோபுவுக்கு உள்ள வரலாற்று அனுகூலத்தை கணக்கில் எடுத்து, இவனுக்கு உயர் கல்வியில் முன்னுரிமை கொடுக்க தேவையில்லை (92% மார்க் எடுக்க வேண்டும்) என இந்திய சட்டங்கள் சொல்லி, அது நடைமுறையிலும் உள்ளது. இப்போ பரீட்சையில் பாபு 89% கோபு 90% எடுக்கிறார்கள். உயர் கல்வி வாய்ப்பில் ஒரு இடம்தான் உள்ளது. இந்திய சட்டபடி, சாதியின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட பாபுவுக்கு உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கவேண்டும் (இது சட்டம் இதை நீங்கள் மாற்ற முடியாது). சாதி சான்றிதழ் பார்க்காமல் எப்படி பாபு இந்த சாதிதான் என உறுதி செய்து அந்த இடத்தை பாபுக்கு கொடுப்பீர்கள்?
  5. இது என் கருத்தல்ல அவர்கள் கருத்து. சாதி சான்றிதழ் போலவே, தாம் சார்ந்த சாதி மக்களின் உரிமை நிலை நாட்டப்பட, அவர்கள் சார்பாக போராட ஒரு அமைப்பு வேண்டும் என்கிறார்கள். அதாவது தந்தை செல்வாவின் தமிழரசு கட்சி இனவாத கட்சி அல்ல, ஆனால் தம் இன உரிமைக்காக போராடிய கட்சி. அதே போல் இராமதாஸ், திருமா நடத்துவது சாதிவாதி கட்சிகள் இல்லையாம். தத்தம் சாதி மக்களின் உரிமைக்காக போராடும் கட்சிகளாம். பிகு சாதி அடையாளம் தமிழ் நாட்டில் இல்லை என நான் சொல்லவில்லை. 75 வருடத்தில் வட இந்தியாவுடனும் ஒப்பிட்டு என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை பெயர்களை உதாரணமாக எடுத்து விளக்கியுள்ளேன். சாதி அடையாளமே இப்போ இல்லை என்பது என் நிலைப்பாடு என்றால் - சான்றிதழும் தேவையில்லை என்றல்லவா கூறி இருப்பேன்? தமிழ்நாட்டில் சாதி 600-1000 வருட புற்று நோய். அதை 75 வருடத்தில் குணப்படுத்த முடியாது.
  6. தமிழ் நாட்டில் எண்ணை மசாஜை மாலிஷ் (அரபிக்?) என்பார்கள். பொலிஸ்…மாலிஷ் போய்…அங்க இழுத்த இழுவையில்…போலீஸ் ஆகீட்டு🤣.
  7. என்ன நீங்க இப்படிச் சொல்றேள், அது அப்டி இல்லண்ணா, நீங்க ஆல்ரெடி இவா, அவான்னு தெரிஞ்சுண்டு படிக்கறச்சே உங்க மனசில அப்படி தோண்றதுண்ணா. வேற வேற மனுசாளும் சீதாராமன், சுப்ரமணியன் எண்டு பேர் வச்சுண்டுதானே இருக்காள்?
  8. இது கடந்த 75 வருடத்தில் தமிழக்கதில் பெருமளவு மாறி விட்டது. வ. உ. சிதம்பரம் பிள்ளை, காம்ராஜ் நாடார், வ. வே. சு ஐயர், ஜி. கே நாயுடு, மூப்பனார், ராமசாமி படையாட்சி, முத்துராமலிங்க தேவர், இவ்வாறு ஒரு காலத்தில் தலைவர்கள், சாமான்யர்கள் பெயர்களில் எல்லாம் சாதி மிக சாதாரணமாக ஒட்டி கொண்டிருந்தது. ஆனால் இன்று, இராமதாஸ், திருமாவளவன், அன்புமணி, முருகன், ஸ்டாலின், வாசன், அண்ணாமலை, ராஜா, சீமான், வைகோ, என எந்த தலைவர் பெயரின் பின்னாலும் சாதி அடையாளம் இல்லை. மக்கள் மத்தியிலும் அதிகம் இல்லை. ஆனால் வட இந்தியாவில் ஏன் கேரளாவில் கூட இன்னும் இந்த வழக்கம் உள்ளது. கீழே இந்தியன் ஒன்றிய அரசின் அமைச்சரவை லிஸ்ட் உள்ளது. இதில் சாதியை ஊகிக்க முடியாத பெயர்களாக இருப்பவை, நிர்மலா சீதாராமனும், சுப்ரமண்யன் ஜெய்சங்கரும்தான். https://en.m.wikipedia.org/wiki/Union_Council_of_Ministers
  9. தேடிப்பாப்பம் எண்டு சொல்லி போட்டு…மறந்துவிட்டேன்🤣
  10. இதற்கான காரணத்தை தம்பி ஏராளன் விளக்கி இருக்கிறார் உங்களுக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறேன். சாதியை சான்றிதழில் அழிப்பதால் மட்டும் சாதி அழிந்துவிடாது. நடைமுறையில், மனங்களில் சாதி(தீ)ய எண்ணம் இருக்கும் வரை சாதி இருக்கும். சாதி இருக்கும் வரை - அதனால் பாதிக்கப்பட்டவனை சமநிலை படுத்தி தூக்கி விட, சமூக நீதி செய்ய சாதி சான்றிதழில் இருக்க வேண்டும். இதைத்தான் வெற்றிமாறனும் சொல்கிறார். ஒரு உயர்ந்த நிலைக்கு வந்து விட்ட தனக்கு, சுயவிருப்பில் சாதி இல்லை என்று சான்றிதழ் வழங்க வேண்டும், ஆனால் சாதியால் ஒதுக்கப்பட்ட, சமூக நீதி இட ஒதுக்கீடு தேவையுள்ள ஒருவருக்கு அது வழங்கபடவேண்டும். 👆🏼👇 வெற்றிமாறன் சொல்வதில் தப்பில்லை ஆனால் இப்படி சாதியற்றோர் சான்றிதழ் பெறுபவர்களும் அவர்கள் சந்ததியும் சமூக நீதி இட ஒதுக்கீட்டில் பின்னர் இடம் கோர கூடாது. இல்லாவிடில் உயர்த்தபட்ட சாதியை சேர்ந்தோர் இதை ஒரு தந்திரமாக பாவித்து - இட ஒதுக்கீட்டை பெறுவர். அதே போல் வெற்றிமாறன் என்ற தனி மனிதன் முடிவை, அவர் சந்ததி, பிள்ளைகள் மீது திணிக்க முடியுமா? நாளைக்கு 18 வயதான பின், அவரின் பிள்ளை எனக்கு என் சாதி அடிப்படையில் சமூக நீதி இட ஒதுக்கீட்டில் இடம் வேண்டும் என கேட்கலாம் அல்லவா? ஆகவே இதை கண்மூடித்தனமா எடுத்தாளமுடியாது. இங்கே ஏராளன் நிவாரணம் என சொன்னது - வரலாற்று அடக்கு முறைக்கு எதிரான - மறுவினையாக வழங்கப்படும் - இட ஒதுக்கீட்டை. அதாவது ஆங்கிலத்தில் சொன்னால் quota/ reservation system. இந்தியாவிலும் இயற்கை பேரிடரின் போது நிவாரணம் சாதி பார்க்காமல்தான் கொடுப்பார்கள். 👆🏼இதை நீங்கள் மிக முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டும்.
  11. அவர் ஜேர்மன் பெட்டையை பேட்டி எடுக்க முடியாத சோகத்தில் இதை கவனிபாரோ தெரியாது🤣 உண்மைதான். நன்றி அண்ணை.
  12. தொடர்ந்து எழுதும் போது எனிக்மா இயந்திரம் பற்றியும், அலன் டூரின் பற்றியும் தொட்டு செல்வீர்கள் என நம்புகிறேன். ஓரின சேர்க்கயாளரை (தன் உள்ளக ஓரின சேர்க்கை உந்தலால் என்கிறனர்) வெறுத்த, அழித்த ஹிட்லரின் கோட்டை என்கிற யானையின் காதில் புகுந்த (ஓரின சேர்க்கையாளர்) எலி டூரின். ஹிட்லரின் கோட்டை சரிய டூரின் ஆற்றிய பங்கு poetic justice. ஆனால் அதே டூரினை, தற்கொலை வரை தள்ளிய அன்றைய பிரிதானிய அமைப்பு - இந்த நூற்றாண்ட்டின் வெட்கக்கேடு. முன்பும் டூரின் பற்றி எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.
  13. இதெல்லாம் தொழில் நேக்கு தெரியுமா. அங்கால ஒருத்தர் ஒரே ஒரு அப்பாவி ஜேர்மன் பையனை வைத்து பக்கம் பக்கமா இழுக்கிறார் - நான் அதுக்கு பரவாயில்லை 🤣. நன்றி நொச்சி. நீங்கள் முற்றிலும் புதிய ஒரு கோணத்தை திறக்குறீகள்👏🏾. நீங்கள் சொல்லும் கோணத்தில் கதையை வாசித்தால் 12பி படம் மாரி இன்னொரு கதை எழுதலாம் போல இருக்கு😎.
  14. நன்றி அண்ணா. ஜேர்மன் தம்பி கிட்டதட்ட என்னை போலவே சிந்தித்து இருக்கு. ஊருக்கு போகும் எண்ணம் பார்த்திருக்க கரைந்து போகுது. இப்போ இருக்கும் பாதுகாப்பின்மை (எல்லா வழியிலும்) யுத்த காலத்தில் கூட இருந்ததாக உணரவில்லை. ஆனால் நான் கொவிட்டுக்கு பிறகு போகவில்லை. போனால் மனம் மாறக்கூடும்.
  15. நன்றி வருகைக்கும் கருத்துக்கும். நீங்கள் கூறியதுதான் முதன்மை அர்த்தம். அதாவது நரிக்கு வடை கிடைத்தது, காகம் கோபப்பட்டது, வடையை இழந்து விட்டு போனது. ஜஸ்டின் அண்ணா, ஈழப்பிரியன் அண்ணா, நாதம், நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு வகையில் சொல்ல நினைப்பது இதைத்தான், என நான் நினைக்கிறேன். ஆனால் வாழ்க்கையில் சில சமயம் less is more. இந்த கதையில் நரிக்கும், காகத்துக்கும் முக்கியமானது வடை அல்ல. வடை, நரி சாப்பிடும் உணவல்ல. நரியே நினைக்கிறது வடை ஒரு மேட்டரே இல்லை என. காகம் கூட கோபப்படவில்லை. தலையை அங்கும் இங்குமாக்கி, கண்ணை மூடி யோசித்து ஒரு முடிவுக்கு வந்தது. நரிக்கும், காகத்துக்கும் வடையை விட வேறு ஏதோ ஒன்று முக்கியமாக உள்ளது. காகம் வடையை இழந்தது. உண்மை. நரி எதை இழந்தது? 🤣 சிரிச்சு வயிறு புண்ணா போச்சு🤣
  16. நன்றி அண்ணா. இரெண்டுமே தந்திரத்தில் வல்லது என்பது உண்மையே. நீங்கள் சொன்ன கருத்து என் கதையை விட அர்த்தம் பல பொதிந்தது🙏🏾.
  17. நம்பவே மாட்டம் வாலி🤣 🤣 வடிவா இன்னொருக்காவும் செக் பண்ணி பார்த்தனான், எல்லா இடத்திலும் நரி எண்டுதான் எழுதியிருக்கிறன் நாதம் 🤪
  18. 🤣. அதுவும் சரிதான். இப்படி பாத்தா நரிக்கு வெற்றிதான். நானே இப்படி யோசிக்கவில்லை 👏🏾. தனியே சீண்டலை விலக்கல், தந்திரத்துக்கு பலியாகாமல் இருத்தல் என்றே அணுகினேன். இப்போ நீங்கள் நிலாமதி அக்கா சொல்லத்தான் இந்த கோணமும் தெரிகிறது🙏🏾. சரி..சரி…இனி அதுவும் கதையின் ஒரு கோணம் என்றுதான் எழுதினேன் எண்டு மெயிண்டேன் பண்ணுவம்🤣
  19. நன்றி அண்ணா. அனுபவங்களின் அடிப்படையில் ஆக்கம் இருந்தால் நல்லம் என்றது நிர்வாகம். அப்படியே எழுதிவிட்டேன் 😎. பகிர்வுக்கு நன்றி தம்பி. இதே போல் வடையை தன் காலில் குத்தியபடி “இலங்கை காகம் நான்” என காக்கா பாடி நரிக்கு பல்பு கொடுத்தது என்று பொப்பிசை சக்ரவர்த்தி ஏ.ஈ மனோகரன் பாடியுள்ளார். நன்றி. 🤣 நரிக்கும் பசிக்கும்தானே. ஒம். அத்தோடு இனி அந்த வடையை நரி சாப்பிட்டால்…நரியின் மரியாதை போயே போச்சு…
  20. கருத்தான கவிதை அண்ணை. மெய்நிகர் காதல் மலிந்து விட்ட உலகில் மெய்தீண்டா காதல் கவிதையிலாவது வாழ்கிறதே. சிறப்பு🙏🏾.
  21. காக்கா நரிக் கதை I ain’t playin பொறுப்பு துறப்பு கதைமாந்தர்கள், சம்பவங்கள் யாரையும் குறிப்பன அல்ல. கதை சொல்லி, தானே தன் வாழ்க்கையில் நரியாகவும், காக்காவாகவும் இருந்துள்ளார், இருக்கிறார், இருப்பார் என்பதை ஏற்று கொள்கிறார். ——————-//////————//////——————— நரிக்கு மனம் பக்…பக்… என்று அடித்துக்கொண்டது. இன்னும் ஒரு அரை வினாடி மட்டும்தான்…. பாடுகிறேன் பேர்வழி என்று இந்த அண்டங்காக்காய் மட்டும் வாயை திறக்கட்டும்… வடையை ஒரே லபக்கில் முழுங்கி விட வேண்டியதுதான். இந்த ஒரு வடைக்காக எத்தனை பாடு? எத்தனை பிரயத்தனம்? எத்தனை அவமானம்? காகத்தின் இந்த கர்ணகடூர ஓசையை கூட இசை என்று பொய்யாக புகழும் படி ஆயிற்றே…. அதுவெல்லாம் கூட பரவாயில்லை, என் சுயத்தை மறைத்து, நல்லவன் போல அல்லவா நடிக்கும் படி ஆயிற்று ? எத்தனை பெரிய ஒறுப்பு அது? பாட வாய் எடுத்தது போல் இருந்த காகத்தின் வாயில் நரியின் ஒட்டு மொத்த கவனமும் குவிந்திருந்தது. ஆனால் காகமோ பாடுவதாகக் காணோம். கால்களில் வடையை பற்றி கொண்டு, தலையை ஸ்லோமோசனில் இடமும், வலமுமாக திருப்பியது. இடையிடையே கண்களை திறந்து மூடிக்கொண்டது. பிறகு தலையை கீழே குனிந்து வடையை சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்து கொண்டிருந்தது. நரிக்கு இருப்பு கொள்ளவில்லை. வடை எல்லாம் பெரிய மேட்டரே இல்லை. சொல்லப்போனால் நரிக்கு வடை மேல் அதிக இஸ்டம் கூட இல்லை. இந்த காகத்தோடு வீணடித்த நேரத்தை, ஒரு ஆட்டு மந்தையில் செலவழித்திருந்தால் ஒரு கறி விருந்தேசாப்பிட்டு இருக்கலாம். ஆனால் அதுவல்ல முக்கியம். இது ஒரு விளையாட்டு, காகத்தின் வடையை கவர வேண்டும். அவ்வளவுதான். இந்த காகத்தை ஏமாற்றி விட்டேன் என என் சக நரிகளுக்கு நிரூபிக்க வேண்டும். அனைவர் முன்னிலையிலும் காகத்தை கேலிக்குள்ளாக்க வேண்டும். முக்கியமாக காகத்துக்கு ஒன்றும் தெரியாது என்று நிறுவ வேண்டும். அப்போதான் காகம் சொல்வது எதையும் இனி இந்த காடு நம்பாது. நரி சொல்லே மந்திரம் என இந்த காடு கட்டுப்படவேண்டும். அதற்கு என்ன தியாகமும் செய்யலாம். காகம் இப்போ பாடத்தயாராவது போல தெரிகிறது. ஆனால் வடையோ இன்னமும் காகத்தின்கால்களில்டையேதான் சிக்கிகொண்டுள்ளது. என்னது ஒரு அற்ப காகம் நம்மை விட குறுக்குப்புத்தி உடையதாக இருக்குமோ? நரிக்கு சந்தேம் சற்றே எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது. காகம் மெதுவாக குனிந்து வடையை வாயில் கவ்வி…. தொப் … என்று நரியின் முகத்தில் விட்டெறிந்தது…. காகம் பாட மட்டும் இல்லை, நரியோடு பேசக்கூட செய்யவில்லை. பறந்தே போயிற்று.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.