Everything posted by goshan_che
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நான் நிகழ்தகவை கேட்கவில்லை. மக்கள் பற்றியும் கேட்கவில்லை. சரி அதை விடுவோம். என்னை பொறுத்தவரை இந்த ஆறும்தான் இன்று தமிழ் தேசிய அடிப்படையின் தூண்கள். இதில் 6 ஐயும் விட்டு கொடுக்கும் அரசியலை மக்கள் விரும்புகிறாகள் என வெறும் யாழ்பாண மாவட்ட முடிவை வைத்து தீர்மானிக்க முடியாது. இதை நோக்கி அவரை, அவர் குழாமில் உள்ள ஏனையோரை இந்த வேணும். ஒரு கட்சியாகி, உள்ளூராட்சி தேர்தலில் இறங்க வேண்டும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இல்லை என்ற போதும் இன்றியமையாது… தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது. யாழில் 3/6, வன்னியில் 2/3, திருமலையில் 1/1, மட்டகளப்பில் 3/2, அம்பாறையில் 1/1 - எமது மக்களின் பெரும்பான்மை தெரிவு இன்றும் உரிமை அரசியல்தான். அதை ஆதரிக்க வேண்டியது எம் கடன்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ப்ரோ, இந்த அருச்சுனா குரூப்பை தேத்தண்ணியோ கோப்பியோ வாங்கி கொடுத்து ஒரு யதார்தமான, ஊழலற்ற, மக்கள் நலன் பேணும் grass roots தமிழ் தேசிய சக்தியாக யாழில் வளர்தெடுக்க முடியாதா? யாழில் இப்போ தமிழ் தேசிய எம்பி எவருமில்லை. சிறி, பொன்னா போன்ற போலிகளும், என் பி பி யும்தான். There is a gap in the market.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எல்லாத்தையும் விடுங்கோ பின்வருவனவற்றில் உங்கள் நிலைப்பாடு பற்றி சொல்லுங்கோ. 1. காணாமல் போனோர் விடயம். 2. போர் குற்ற விசாரணை 3. மாகாண சபைக்கு காணி அதிகாரம் 4. மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் 5. மாகாண சாபைக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டை இணைக்க கூடிய நிதியம் (இலங்கை திறைசேரி கண்காணிப்பில்). 6. தமிழர் நிலத்தில் புத்த கோவில் இந்த 6 இல் எதை நீங்கள் இப்போ கை விட்டு விட்டீர்கள்? இந்த 6 இல் எதை ஐ அனுர தருவார் என நினைக்கிறீர்கள்?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சட்டம் படித்தாலே அறிஞர் தானா? இல்லாட்டில் அந்த துறையில் ஏதும் சாதித்திருக்க வேண்டுமா? ஒரு ஜெனரல் நாலேஜுக்கு கேட்டேன்🤣. பாராளுமன்ற கதிரையை 20 வருடமாக சூடாக்கியது போல் தொடர்ந்தும் நல்ல வேலைகள் செய்வார் 🤣. அரசியலமைப்பு விடயத்தில் என் பி பி தமிழ் எம்பிகள் உட்பட எவரையும் அனுரா பைல் தூக்கவும் விடுவாரா என்பது சந்தேகமே. ஆனால் மாகாணசபையை விட மட்டமான ஒரு கடும் ஒற்றையாட்சி முறையை கொண்டு வந்து அதை தமிழரும் ஏற்கிறார்கள் என யாழின் 50% எம்பிகளை கொண்டு சாதிக்கப்பார்ப்பார். ஓம்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இத்தனை வீராப்புக்கும் பிறகு மக்கள் நிராகரித்த பின் சும் வந்தால் அவர் ஈன, மான, ரோசம் இல்லாத ஒரு பிறவி என்பதை உறுதி செய்வது ஆகும். அதே போல் சிறியும் சும் வந்தால் தனக்கு ஏச்சு விழுவது குறையும் என அவரை உள்ளே எடுக்க கூடும். சாணக்ஸ்சும் சும் வருவதை விரும்பகூடும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஐயா, இப்படி ஜனாதிபதி கட்சி வோட்டு போட்டுத்தான் காரியம் சாதிக்க வேணும் என்டா அதை 1977 இல் அதி உத்தமர் ஜேஆர், அல்லது 2010 இல் புனிதர் மகிந்தர், அல்லது 2019 இல் கோமான் கோட்டவுடன் சேர்ந்து செய்யச்சொல்லி ஏன் நீங்கள் மக்களை கேட்கவில்லை? அனுர என்ன வானில் இருந்தது வந்த மீட்பரா? முள்ளிவாய்க்கால் நேரம் காலம் தாழ்த்தாது போரை முடியுங்கள் என மகிந்தவை அழுத்திய கட்சியில் அப்போதே இவர்தான் தலைவர். அனுரவுக்கு நீங்கள் வாக்களிப்பதாயின்…போர்குற்ற விசாரணை, காணாமல் போனோர், காணி, பொலிஸ் அதிகாரம், அதிகர பகிர்வு இவை எதுவும் தமிழருக்கு தேவை இல்லை என நீங்கள் கருதுவதாகவே அர்த்தம். அப்படித்தான் இலங்கை அரசு இதை விளம்பரப்படுத்தும். உலகமும் ஏற்கும். இந்த நிலைப்பாட்டை எடுத்த மக்களை நான் தூற்றவில்லை, ஆனால் இத்தனை கால இழப்பை மறந்து இப்படி செய்தத்து, சுயநலத்தின் அடிப்படையிலே ஒழிய கொள்கைக்காக அல்ல. அதைத்தான் நான் சொல்கிறேன். அத்தோடு எதிர்கால பின் விளைவுகளை சீர்தூக்கி பார்க்காத ஒரு முடிவும் கூட. அருச்சுனா குழு இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்காவிட்டால் நான் மக்களுக்கு வேறு வழி இல்லை என்பதை ஏற்றிருப்பேன். ஆனால் இங்கே அவர் ஒரு மாற்றாக இருந்தார். அவரை விட அவர் குழுவில் நம்பிக்கை தரும் புதியோர் இருந்தனர். ஆனால் நேரடியாக அனுரவிடம் சலுகை பெறும் எண்ணமே என் பி பி க்கு போட வைத்தது. நான் எனது பயண கட்டுரையில் எழுதியதையும், அதற்கு நீங்கள் கொடுத்த பதிலையும் மீள வாசியுங்கள். அதே👏
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அது அனுரவை பொறுத்த வரை வரலாறு..அதை உங்களை தடையின்றி அனுஸ்டிக்க அனுமதிப்பார். ஆனால் திம்பு, கிம்பு என கிளம்பினால் தும்பு போக வெளுப்பார். அவனுகள நட்டாற்றில விட்டதும் இல்லாம நக்கல் வேற🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஆனால் என் பி பி யின் 3 பேரை இப்பவே பாரட்ட தயார்? அனைவரும் புதுமுகங்களே. இதில் அருச்சுனாவுக்கு கொஞ்சம் சமூக அக்கறை இருப்பதாவது முன்பே தெரிந்தது. ஏனையோர் தெற்கின் கட்சி தலைமை சொல்லுவதற்கு தலை ஆட்டும் பூம் பூம் மாடுகள்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பார்க்கலாம்.. ராஜபக்சவோடு சாணக்ஸ் மேடை ஏறியதை, வாக்கு கேட்டதை சுட்டும் நீங்கள், கருணாவிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்தவர். எனவே உங்களை போலவே அவரும் ஒரு ரகசிய தமிழ் தேசிய ஆர்வலராக இருக்கலாம்தானே🤣. பார்ப்போம் என்ன செய்கிறார் என. அப்போ அரசியல் வாதிகள் தென்னிலங்கையில் அடகு வைக்கிறார்கள் என மக்கள் தாமே நேரடியாக அடகு வைத்த்தது சரியா? என் பி பிக்கு யாழில் போட்டவர்கள் சுயநலமிகள்தான். மேலே சொன்னபடி அருச்சுனாவுக்கு போட்டிருக்கலாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
விமர்சனம் எப்போதும் தேவை. ஆனால் - கிழக்குமையவாத அரசியல் என்ற குறுகிய வட்டத்தை - கிழக்கில் மையம் கொள்ளும் தமிழ் தேசிய அரசியல் - என பெருபித்தவர் சாணாக்கியனே. சுமன் பெட்டி கட்ட வேண்டும். சொந்த கட்சியையே கட்டுபடுத்த முடியாத சிறி ஒதுங்க வேண்டும். கிடைக்கும் தேசிய பட்டியலை வன்னிக்கு கொடுக்க வேண்டும். சாணாக்ஸ் தலைமையில் தமிழரசு நிமிரவேண்டும். நான் சகல இடத்தில் சகலதையும் வாங்கி குடித்துள்ளேன். யாழ் மையவாதம், கிழக்கின் பிரதேசவாதம், சாதி வாதம்…. உள்ளே தமிழ் தேசிய, பெரியாரிய வக்சீன் ஓடுவதால் இவை என்னை ஒண்டும் செய்வதில்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
முந்தி நான் ஒழுங்கா படிக்காவிட்டால்….வகுப்பில் முதல் மார்க் எடுக்கும் மாணவரின் பெயரை சொல்லி….. அவனின் ***** வாங்கி குடி என்பார்கள். இந்த படத்தை பார்த்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது🤣. இது புரளி அல்ல. உண்மை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
துரோகிகள் இல்லை ஆனால் சுயநலமிகள். இதே போன்ற அரசியல்வாதிகள்தான் கிழக்கிலும் அவர்கள் மூக்கை பொத்தி கொண்டு வாக்கு போடவில்லையா? 98.5% தமிழர் உள்ள மாவட்டம் 3/6 சீட்டை அப்படியே தூக்கி தீர்வே தரமாட்டம் என சொல்லும் கட்சிக்கு கொடுத்தால் - அது எப்படி சர்வதேச அளவு வரை தெற்கால் பாவிக்கப்படும் என்பதை அறிந்தும் அவர்களுக்கு வாக்கு போட்டதை சுயநலம் என்று மட்டுமே சொல்ல முடியும். தமிழ் தேசிய கோமாளிகளை பிடிக்கவில்லை எனில் அருச்சுனாவுக்கு இன்னும் 1 சீட்டையும் போனசையும் கொடுத்திருக்கலாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஓம்…மேலே பதிலை எடிட் பண்ணி உள்ளேன். #lack of sleep 🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மன்னிகவும். ரிசாட்டின் மக்கள் காங்கிரசை தமிழ் காங்கிரஸ் என எண்ணி விட்டேன்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இந்த ஒரு சீட்டுக்காகத்தானே இத்தனை பிளவுவாத அரசியலும். சுமந்திரனை போல இந்த பரம்பரை வடுவையும் யாழ் மக்கள் தூக்கி போட்டிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இது கிழக்கின் மைந்தர்கள் தமிழ் தேசிய அரசிகலின் தலைமைக்கு வரும் நேரம். தமிழரசின் 5/7 எம்பிகள் கிழக்கு மாகாணத்தவர்களே. இனிமேலும் உழுத்து போன யாழ் அரசியல்வாதிகளை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. அம்பாறையில் 2 சீட் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
👆உண்மையை உரக்க சொல்ல என்றும் பின்னின்றதில்லை. உங்கள் கெத்து அர்த்தமானதுதான். வாழ்த்துக்கள். நிற்க…. இபோதும் பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் போட்டோர் பிரதேசவாதிகளே. ஆனால் இங்கே நீங்கள் கழுவி ஊத்திய தமிழ் தேசியம் குறிப்பாக சாணாக்ஸ் - - - மக்களால் அதி விசேட சித்தி கொடுத்து அனுப்பப்பட்டுள்ளனர். யாழ்பாணத்திலும் வன்னியிலும் கூட என் பி பி ஒரு சீட்தான் எடுத்திருக்க வேண்டும் ஆனால் அரசியல்வாதிகளின் கோமாளளித்தனம் - அதை அதிகரிக்க செய்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கட்சிகளின் சீட் நான் சொன்ன மாதிரித்தான். ஆனால் தமிழரசில் வென்றது சுமனா சிறியா, சைக்கிளில் வென்றது பொன்னரா, சுகாசா என்பது நாளைக்குத்தான் தெரிய வரும். அது வரைக்கும் வாலிக்கு விளையாட்டு, அண்ணைமாருக்கு சீவன் போகுது எண்ட நிலைதான்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2/3 கிட்டதட்ட உறுதியாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இது வாலி அண்ணைமாருக்கு போடும் சக்கை🤣.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இல்லை என நினைக்கிறேன். வன்னியில் 1 தமிழ் சீட் தான் ஆனால் முஸ்லிம்கள் 2 சீட்டையும் தக்கவைத்துள்ளனர் என நினைக்கிறேன். திருமலையில், மட்டில் எதிர்பார்தபடி தலா 1. அம்பாறையில் எப்படியிம் 3 வரும். என் பி பி அலையில் கிழக்கு முஸ்லி எம்பிகள் அளவு அதிகம் பாதிக்கப்பட்டாதா தெரியவில்ல்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஆனால் திசை காட்டி முன்னுக்கு நிக்குது
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஓம் உத்தியோக பூர்வ முடிவு 👇
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாப்பனேய சந்த டிஸ்திரிக்துவ. என் பி பி - 3 வீடு -1 சைக்கிள் -1 ஊசி -1