Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15634
  • Joined

  • Last visited

  • Days Won

    175

Everything posted by goshan_che

  1. சக்சஸ்! இந்த குழப்பத்தை எதிர்பார்த்தே எழுதுகிறேன். நன்றி பிரபா. நன்றி அண்ணா. ஓம்…என்ன பெயர் என்பதில் ஒரு குழப்பம்தான் எனக்கும். இது நிமிடக்கதை, சிறுகதை இல்லை. நவீனம்/ நாவலும் இல்லை. நெடுங்கதை என்றால் நாவலின் இன்னொரு பெயர்?
  2. ஓம் @Nathamuniசொல்லும் தூ. பிக்கு இவர்தான். பவித்திரா வன்னியாராச்சி பயன்படுத்தும் பலவித தந்திரங்கள், உத்திகள் பற்றி முன்னர் ஒரு முறை பிரஸ்தாபித்திருந்தார்🤣 பிகு தமிழருக்கு பொலிஸ் அதிகாரம் கிடைத்தால் பிக்குமாரின் நிலை வடக்குகிழக்கில் இதுதான் என்பதை சிங்கள மக்களுக்கு விளக்கும் விழிப்புணர்வு நாடகம் இது 🤣
  3. பைத்தியம் U mad bro பாகம் I நதியே…நதியே காதல் நதியே நீயும் பெண்தானே…. அடி நீயும் பெண்தானே …. நிசப்தமான இரவை குலைத்தபடி சங்கர் மகாதேவன் போனில் பாடத்தொடங்கி இருந்தார். சை…இந்த அலாம் டோனை மாத்த வேணும். பழைய நொக்கியா மாரி இல்லை, இந்த போனில் புதிதா ஒரு டோன் போடுறதுகுள்ளா போதும் போதும் எண்டாயீடும். நினைத்து கொண்டே கட்டிலில் இருந்து பிரண்டு, போனின் அலார்மை அணைத்தான் அவன். அலாம் அடிக்கிறது என்றால் அது ஒரு கிழமை நாள், காலை ஆறரை மணியாக இருக்க வேண்டும். அவன்……. அப்படி ஒன்றும் கதாநாயகன் களை எல்லாம் இல்லாவிடிலும் இந்த கதையின் நாயகர்களில் ஒருவன். ஒரு பெண்ணின் கணவன். ஒரு மகனின் தந்தை. கட்டிலில் திரும்பி பிரண்டபோதுதான் அருகில் மனைவி இல்லை என்பது உறைத்தது. நேற்றே சொல்லி இருந்தாள் “நாளைக்கு காலமை அப்பாவுக்கு ஹொஸ்பிட்டல் அப்பொயிண்ட்மெண்ட், ஸ்கூல் ரன் உங்கள் பாடு”. கட்டிலால் எழுந்து பல்லை விளக்கி விட்டு வந்து மகனை எழுப்பி, மகனுடன் பள்ளிக்கு வெளிக்கிடசொல்லி தேவாரம் பாடி, இடையில் உணவும் தயார் செய்து, அதை உண்ணவும் வைத்து, வெளியே ரத்தம் உறையும் குளிரில் நிண்டபடி காரில் படிந்திருக்கும் பனியை சுரண்டி……. நினைக்கவே அலுப்பாக இருந்தது அவனுக்கு. ஆனாலும் செய்யதான் வேண்டும். சோம்பலாய் எழுந்து போனை பார்த்தால் - இவன் மிஸ்டுகால் என காட்டியது. இவன்…….. இந்த கதையின் இன்னுமொரு நாயகன். கொழும்பில் நல்ல வசதியாக வாழும் ஒருவன். மூன்று மாடியில் ஏழு அறை வீடு, டிரரைவர், சமமையல்காரன், தோட்டகாரன் என சகல செளபாக்கியமுமான வாழ்க்கை வாழ்பவன். சரி ஏதோ ஸ்கூல் விசயமாக்கும். பிறகு அடிப்பம். என நினைத்தபடி வேலையில் மூழ்கிப்போனான் அவன். காரில் இருந்து மகன் இறங்கி போகும் போது, urgent. Plz call…..plz அவனின் போனில் இவன் அனுப்பிய குறுஞ்செய்தி மின்னியது. (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-
  4. ஐ…நான் என்ன எழுதி இருக்கிறன் நீங்கள் என்ன பதில் போட்டிருக்கிறியள்🤣. நான் காணியை வாங்கி போட்டேன் எண்டு எங்கே எழுதினேன்🤣. ஓணாண்டி என்னிடம் பணம் இல்லை என்கிறார். நீங்கள் பணத்திமிர் என்கிறீர்கள்🤣. என்னை யாரும் தங்க தாம்பாளம் வைத்து அழைக்கவில்லை, எனக்கு மனதுக்கு பிடித்ததாக இருந்ததால் போய் எனக்கு ஏலவே இருந்த இடத்தில், அதன் ஏனைய பங்குதாரர் அதை வித்து தொலைப்போம் என்பதை தடுத்து, ஒரு திட்டத்தை செய்ய முனைந்தேன். அப்புறம் நான் ஒரு போதும் தனி நாடு கேட்டவன் அல்ல. யாழில் பலருடன் மோதுபட்டுள்ளேன், எனது பதினமவயதிலேயே தனிநாடு சரிவராது என நான் அறிந்து கொண்டேன் என்பதை எழுதி. சுயாட்சி இப்போ எனக்கு தேவையில்லை. ஆனால் இலங்கையில் இருக்கும் போது தேவைபட்டது. அந்த மக்கள் இன்னும் தமிழ் தேசியத்தை ஆதரிப்பதால் எனக்கு தேவையில்லை எனிலும் அவர்கள் கோரிக்கையை நான் ஆதரிப்பேன். நான் இலவசகல்விக்கு நன்றி கடனுடன் இருக்க தேவையில்லை என்பதை என் நிலைகொண்டு விளக்கியுள்ளேன். அதில் திமிர் ஏதும் இல்லை. அடேங்கப்பா பியர், பிராண்டி எல்லாம் இல்லை விஸ்கி எண்டு எப்படி கண்டு பிடிச்சனிங்கள்? ஊத்தி கொடுப்பவர்களுக்குதான் இந்த விபரம் எல்லாம் நினைவில் இருக்கும். எனக்கு கல்யாணம் பல கட்டி வைத்தது போதாது என்று இதை வேறு செய்கிறீர்கள். நன்றி 🤣. பிகு சாணாக்கியனை நீங்கள் மத ரீதியில் எதிர்க்க என்ன காரணம் என்பதை இன்னொரு திரியில் புட்டு, புட்டு வைத்ததால் இனிமேல் என்னை மேற்கோள் காட்டி எழுதவேண்டாம் என்று கோபப்பட்டவர் நீங்கள். இப்போ அதற்கு அரிவரி பிள்ளையள் மாரி கணக்கு தீர்கிறீர்கள் என்பது எனக்கும் வாசிப்போருக்கும் புரியும். ஆனால் இன்னொருவரின் 25 ம் ஆண்டு திரியை நாம் சந்தை போல் ஆக்ககூடாது என்பதால் அமைகிறேன்
  5. சைக்கிளில் போகும் போது துரத்தும் சொறி நாய் என அசட்டையாக இருக்க கூடாது. பார்தீர்களா ஒரு உயிர் அநியாயமாக பலியாகியுள்ளது. இதுகளையும் போய், மணி, அன்பு, செல்வம், ராஜா, மகாராஜா என பெயர்வைத்து கொண்டாடும் மக்களை என்ன சொல்வது.
  6. அடப்பாவி பொன்ஸ்….அந்தாள் 30 வருடத்துக்கும் மேலாய் தபுதாரன். காலமான அவரின் ஒரே மனைவி தமிழ்தான்.
  7. இதுவும் உண்மைதான். எதையும் நோய் என பார்க்காமல் எல்லாவற்றையும் போர்த்து மூடல் Vs தொட்டதுக்கும் நோய் சொல்லல். இரெண்டு extreme உம் கூடாது.
  8. இல்லை அவை எல்லாம் கிட்ட போகும் ஆனால் தாண்டி போவது 134 மட்டும்தான். இப்ப வன் வே வந்த பின் எப்படியோ தெரியாது.
  9. தேவையான ஒரு தலைப்பு. மன நிலை சமநிலை குழம்புவதை இன்னும் ஒரு இழுக்காக stigma பார்க்கும் நிலையில்தான் எம் சமூகமும், ஏனைய சமூகங்களும் உள்ளன. இதனடிப்படையில் ஒரு கதை எழுதிகொண்டிருக்கிறேன். உங்கள் பதிவு வருகிறது. Great minds think alike 🤣 பிகு 134 பஸ்சுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அது கொழும்பு லேடிஸ் காலீஜை தாண்டி போகும் ஒரே பஸ் 🤣
  10. மிக தெளிவான பார்வை. ஒரு பிரச்சனை வரும் வரைக்கும் எல்லாம் சுவர்க்கம் போலத்தான் இருக்கும். இலங்கை திரும்பி போனவர்கள் யாராவது G7 + Aus+ NZ கடவுச்சீட்டை, அல்லது நிரந்தர வதிவிட உரிமையை விட்டெறிந்து விட்டு போனார்களா? இல்லவே இல்லை. ஏன்? சொர்க்கத்தில் போய் இருப்பவர்களுக்கு ஏன் நரகத்துக்கு மீண்டும் வரும் வழி தேவைபடுகிறது🤣. அங்கே இறுகினால் இங்கே ஓடி வந்து சோசலிடம் கையை தூக்கலாம். இதுதான் நான் சொல்லும் பாதுகாப்பு.
  11. நாங்கள் எல்லாரும் எங்களை போலவே ஏனையோரையும் நினைக்கிறோம் அதுதான் பிரச்சனை. இப்ப பாருங்கோ…கொவிட் வரைக்கும் ஊருக்கு அடிக்கடி போன, அங்கே நேரத்தையும், பணத்தையும் முதலிட்ட, திரும்பி அங்கே வரவேண்டும், பிரயோசனமாய் ஏதாவது செய்ய வேண்டும் என முனைந்து, அதன் பின் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்து யோசித்து கொண்டிருக்கும் எனது அனுபவமும், பட்டறிவும் 2009 க்கு பின் நாட்டுக்கு ஒரு தடவை (என நினைக்கிறேன்) சுற்றுலா போய் வந்த உங்கள் அனுபவமும் வேறு வேறாகத்தான் இருக்கும். எனது முதலாவது கருத்திலேயே சொல்லி உள்ளேன், போர், குண்டு வெடிப்பு போல அல்ல, பொருளாதார சிக்கல் - இங்கே இருக்கத்தான் முடியுமா என்ற நிலைக்கு பெரும் பண வசதி படைத்தவர்களியே கொண்டு வந்து விட்டுள்ளது. Trend இல் ஆளை ஆள் பார்த்து வெளியேற இவங்கள் அன்றாடம் காய்சிகளோ அல்லது உழைக்கும் வர்கமோ, மத்திய வர்கமோ கூட இல்லை(இதுவும் நடக்கிறது) . வெளிநாட்டில் வந்து படித்து விட்டு கொழும்பு திரும்பிய, உயர் தட்டு மக்கள். பலருக்கு யூகேயில் நிரந்தர வதிவிட உரிமை ஏலவே உண்டு, ஆனால் வியாபாரம், சொத்து இலங்கையில் என்பதால் திரும்பியவர்கள். பிள்ளைகளை பின்பு மேற்படிப்பு படிக்க அனுப்பும் எண்ணத்தில் கொழும்பில் சர்வதேச பாடசாலையில் யூகே கல்விமுறையை பின்பற்ற வைத்தவர்கள். இப்போ குடும்பமாக கிளம்பி வந்துள்ளார்கள். பிகு முன்பே சொல்லியுள்ளேன் - சிறிலங்கா என்ற தேசத்தின் மீது - தமிழருக்கு சுயயாட்ட்சி வழங்கும் வரை எனக்கு எந்த விசுவாசமும் வராது. நான் இலங்கையில் இருக்கும் போதே என் மனநிலை அப்படித்தான். இலவச கல்வி - அது எல்லாருக்கும் இலவசம் இல்லை. பெற்றார் வரி கட்டும் வேலையில் இருந்து, நியாயமான, தொழில், காணி உட்பட்ட வரிகளை செலுத்தி, அந்நிய செலாவணியையும் ஈட்டி தந்த குடும்பத்தின் பிள்ளைகளுக்கு - இலவச கல்வி கிட்டவில்லை. சொல்லப்போனால் இலவச கல்விக்கும் மேலதிகாமாகவே, ஏனையோருக்கு சேர்த்தே அவர்கள் செலவழித்துள்ளார்கள். Don’t judge others with your own yardstick
  12. 4 நாளைக்கு முதல் திண்ணையில் இந்த லிங்க பகிரப்பட்டு. விபரமும் சுருக்கமாக தமிழில் கொடுக்கப்பட்டது.
  13. பிச்சை ஏடுத்துதாம் பெருமாளு அதை புடுங்கி திண்டதாம் அனுமாரு 🤣. நம் இருவர் சார்பில் நண்பர் @பாலபத்ர ஓணாண்டி110, தன்சார்பில் 1001. மொத்தமாக £1111 ஐ வழங்குவார் என என் நண்பர் சபைக்கு அறிவிக்கும் படி கேட்டுள்ளார்.
  14. 🤣 ம்ம்ம்… பொதுபடையாக கூறப்போய் அசிங்கப்பட்டு விட்டேன்🤣. என் பழைய நேர்ஸ் - இலங்கை என்றதும் என்னை பிலுபிலு என பிடித்துக்கொண்டார். அவருக்கு அப்போ 60 இருக்கும். அவரின் 30 வயதுகளில் இருந்த போது, வேலை நீக்க காசை எடுத்து கொண்டு இலங்கையில் 3 வருடம் வாழ்ந்தாவாம். மவுண்ட்லேவனியாவில் ஒரு வீட்டில் ரூம் எடுத்து, ஹோட்டலில் ஒவ்வொரு நாளும் குளியலாம், கும்மாளமாம். அருமையான நாடு என்றார். நானும் ஓமோம் சிறிலங்கா சொர்க்கம் என சொல்லிகொண்டே மனதுக்குள் நினைத்தேன் - அதே காலகட்டத்தில்தான் அந்த “நரகத்தில்” இருந்து தலை தெறிக்க என் மக்கள் ஓடி கொண்டிருந்தார்கள் என. ஒரே ஒரு உதாரணம். கொவிட் நேரம் இப்படி உலகம் முழுவதும் போன ஐரோப்பியருக்கு என்ன நடந்தது. அடிச்சு பிடிச்சு தத்தம் நாடுகள் அனுப்பிய பிளேனில் ஏறி நாடு திரும்பிவிட்டார்கள். எங்கே போனாலும் பாஸ்போர்ட்டை மாத்தவே மாட்டர்க🤣. இதுதான் நான் சொன்ன “பாதுகாப்பு”. ரொனி பிரிக்ஸ் என ஒரு கொள்ளையன் கதை உண்டு. 25ம் ஆண்டு பதிவாக போடுகிறேன்.
  15. ஐயோ பாவமே. தாய்லாந்தில் குடியேற வேற காரணங்கள் 🤣. வாழ்க்கை செலவு குறைய, பேத்தி வயதான பெண் - இதுதான் பல வெள்ளைகள் தாய்லாந்து போக காரணம். இந்த வெள்ளைகளை firangi (பரங்கி) என அழைப்பார்கள். கல்லூரியில் படிக்கும் பெண்கள் கூட, short term, long term என எழுதாத ஒப்பந்தங்கள் போட்டு, கணவன் மனைவியாக வாழ்வார்கள். ஆனால் எத்தனை 20-45 வயதானவர்கள் இப்படி போகிறார்கள். மிக சிலரே. அப்படி போபவர்கள் கூட digital nomad என வேலை மேற்கில் இருக்கும் வாழ்க்கை கிழக்கில் இருக்கும் வேலைகளோடுதான் போகிறார்கள். மேற்கின் சுக வாழ்வை அனுபவித்து விட்டு, பென்சன் காசை எடுத்து கொண்டு வாழ்வின் கால் இறுதியை வெப்பவலய நாடுகளில் வாழப்போவது - வேறு. இங்கே பலர் ஸ்பெயினுக்கு போவார்கள்.
  16. நன்றி. நான் ஊரில் ஒரு கணிசமான முதலீட்டையும் போட்டு, போயிருக்கும் போது பிராக்காக செய்ய என ஒரு திட்டத்தையும் அமல்படுத்தியும் ஆகி விட்டது. ஆனால் இப்போ அதை போய் செய்யத்தான் வேணுமா என்றாகி விட்டது. அண்மையில் என் முஸ்லிம் நண்பன் ஒருவன் சொன்னது யோசிக்க வைத்தது. அவரின் அப்பாவுக்கு ஒரு மருந்து கட்டாயம் தேவை. என்ன விலை கொடுத்தும் வாங்க முடியும். வசதி அப்படி. ஆனால் எங்கும் மருந்து இல்லை. ஒரு பாமசியில் நம்பரை வாங்கி கொண்டு பிறகு கூப்பிடுகிறோம் என்றுள்ளார்கள். பின் ஒரு அழைப்பு வந்துள்ளது சாதாரண விலையை விட 3 மடங்கு அதிகம், அத்தோடு நாம் தரும் மருந்தில் எந்த நிறுவன, மருந்து பெயரும் இராது என்றுள்ளார்கள். ஆரோ ஒரு அநாமேதய நபர் தரும் பெயர் இல்லாத மருந்தை வாங்கி போட வேண்டும் அல்லது மருந்து போடாமல் இருக்க வேண்டும். எப்படி இருக்கு? இப்போ கொஞ்சம் நிலமை சீராகியுள்ளது. ஆனாலும் முன்னரே கான்சர் என போய் அப்பலோவில் படுத்தால் - மஹரகமவுக்கு கொண்டு போங்கோ என்பதே பதில். எனக்கு தெரிய சிறுநீரக பிரச்சனைக்கே நவலோக்கா - பல மில்லியனை புடிங்கி விட்டு, கடைசியில் தேசிய ஆஸ்பத்திரிக்கு போங்கோ எண்டு சொல்லி உள்ளது. எல்லாம் ஒப்பீட்டளவில்தான் அண்ணை. அந்த நோக்கியாவை புடிங்கி விட்டால் அவர்களும் சோகம் ஆகி விடுவார்கள்.
  17. என்னட்ட காசில்லை. இதை சொல்ல நான் ஒரு போதும் வெட்கப்பட்டதில்லை. பசித்திருபவன் முன் ஒப்பீட்டளவில் பகட்டாய் வாழ்வதை இட்டு வெட்கப்பட்டிருக்கிறேன். ஊரில் பஞ்சபராரிகளாக நிற்கும் குழந்தைகளோடு ஒரு திருவிழாவிலோ அல்லது கூட்டத்திலோ லண்டன் புஷ்டியோடு என் மகன் நிற்பதை பார்த்து வெட்கப்பட்டிருக்கிறேன். கால்கள் இல்லாமல் வீதியில் நின்று ஐஸ்கிரீம் வித்த முன்னாள் போராளியிடம் நைக் சூ போட்டபடி ஓடிவந்த நான் ஐஸ்கிரீம் வாங்கி குடித்த போது வெட்கத்தால் கூனி குறுகி போயிருக்கிறேன். ஆனால் என்றும் என் பொருளாதாரத்தை, இல்லாமையை எண்ணி வெட்கப்பட்டதில்லை. நான் எப்போதுமே மத்திய தர வாழ்க்கையே. இலங்கையிலும், வெளிநாட்டிலும். ஆனால் நீங்கள் சொல்லுவது மிக சரி. வெளிநாட்டில் மத்திய தர வாழ்க்கை வாழ்வோர் டிரைவர், வேலையாள் வைத்து வாழ முடியாது. ஆனால் ஒன்று தெரியுமா ? இலங்கையில் ஒரு டிரைவர், ஒரு வேலையாள் வைக்கும் காசுக்கு சென்ட்ரல் ஆபிரிகன் ரிபப்ளிக்கில் இருபது பேரை வேலைக்கு வைக்கலாம். டிரைவருக்கு டிரைவரும் வைக்கலாம். அதற்காக சென்ரல் ஆபிரிக்கன் ரிபளிக் இலங்கையை விட சொர்க்கம் என்றா சொல்வீர்கள். நீங்கள் தினேஷ் ஷாப்ரடை விட பெரிய பணக்காரரா ஓணாண்டி? அவரின் அப்பா என்ன சொல்லியுள்ளார் என பாருங்கள் - குடும்பத்தை லண்டனுக்கு கொண்டு வந்து செட்டில் ஆக்க, கொலையாகிய இரவு புறப்பட இருந்துள்ளார். கொவிட்டுக்கு பின் மட்டும் என் தெரிந்த வட்டத்தில் இருந்து 10 பேர் அளவில் என்னிடம் வெளிநாடு போவது பற்றி கேட்டிருப்பார்கள். அதில் பலர் பவுண்ஸ்கணக்கில் மல்டி மில்லியனர்கள். ஆள், அம்பு, சேனை, நிறைவேற்று அதிகாரி, கொழும்பு 7 மாளிகை, எல்லாவறையும் விட்டு விட்டு, மனைவியை ஸ்டூடன் விசாவில் அனுப்பி விட்டு, தாமும் பிள்ளைகளும் அவரில் தங்கியவர்களாக வந்து இறங்கியுள்ளார்கள். ஒருவர் இருவர் அல்ல. பலர். இதுதான் இலங்கையில் பணக்காரரின் நிலை. நீங்கள் சொல்வதை போல் அப்போலோவில் மருந்து பார்க்கலாம் - என் நெருங்கிய உறவை வைத்து பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன் - கையிருப்பு இருக்கும் வரை, சொத்தை வித்தும் செலவழிக்கலாம் - அதன் பின்? முன்பும் சொல்லி இருக்கிறேன். நிச்சயமாக நான் ஒரு போதும் (கொவிட்டுக்கு முன் கூட) இலங்கைக்கு முற்றாக போக மாட்டேன். ஒரு 10 வருடம் வெள்ளன ஓய்வை எடுத்து விட்டு, 6 மாதம் அங்கே, 6 மாதம் இங்கே என இருப்பதே என் ஐடியாவாக இருந்தது. வாழ்க்கை பூராக இங்கே வரியை கட்டி விட்டு, பாழும் வயதில் இலங்கை போய், சொத்தை வித்தோ, அல்லது சொந்த காசிலோ வைத்தியம் பார்க்க நான் மடையன் இல்லை. அதே போல் உங்களுக்கு நேரடியாகவே சொல்லி உள்ளேன், வாழ வேண்டிய பிள்ளைகை, வாய்புக்கள் நிறைந்த வெளிநாட்டில் இருந்து கூட்டிப் போய் சிங்களவனுக்கு பின்பக்கம் கழுவும் நிலைக்கு உள்ளாக்குவதை போல் ஒரு சுயநலம் வேறு எதுவும் இல்லை. என்னை பொறுத்தவரை என்ன பொருளாதார வளம் நாளை எனக்கு கிடைத்தாலும், மகனின் படிப்பு ஏ எல் தாண்டும் வரை நான் அவரை விட்டு அகல போவதுமில்லை, அவரை யூகேயை விட்டு அகற்ற போவதும் இல்லை ( பள்ளி படிப்பை யூகேயில் படியாததால் நான் கண்ட பிரதிகூலங்களை வைத்து) . அதன் பின் விருப்ப ஓய்வை எடுத்து, 6 மாதம் 6 மாதம் யுகேயிலும் இன்னொரு நாட்டிலும் இருப்பதுதான் திட்டம். அந்த இன்னொரு நாட்டு லிஸ்டில் இலங்கை முதலாம் இடத்தில் முன்பு இருந்தது. இப்போ யோசிக்க வேண்டி உள்ளது. ஓம்… மிக சரியான தகவல்.
  18. எமது மக்கள் அதிகம் குடியேற விரும்புவது G7 + Au+NZ இல் தான் என நான் நினைக்கிறேன். இந்த 9 நாட்டில் எங்கே போவது என்பதில் பலருக்கு அதிகம் தெரிவு இருப்பதில்லை. எங்கே மாணவ, வேலை வீசா கிடைக்கிறதோ, எங்கே மனைவி/கணவன் அமைகிறாரோ, எங்கே ஏஜென்ட் கொண்டுபோய் விடுகிறாரோ, அல்லது எங்கே குடும்பத்தினர், ஊர்காரார் ஏலவே உள்ளார்களோ - அதுவே தெரிவாகிறது. இது முடியாதவர்கள்தான் அடுத்த தெரிவாக எனைய வெப்ப வலய நாடுகளில் குடியேறுகிறனர். அதிலும் சிங்கபூர் போவோர் மட்டுமே நிரந்தரமாக தங்குகிறனர். மேலோட்டமாக பார்த்தால் இது முழுக்க முழுக்க பொருளாதார அடிப்படையான முடிவாக தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல. இந்த பொருளாதார முன்னேற்றம் கட்டி எழுப்பபட்டுள்ளது இந்த நாடுகளில் இருக்கும் ஓப்பீட்டளவு மேம்பட்ட ஜனநாயகத்தில், வியாபாரம் செய்வது உட்பட்ட மனித சுதந்திரம் மதிக்கப்படுவதிலும், சட்டத்தின் மேலாண்மையிலுமே. உதாரணமாக, ஒரு தமிழர் அம்பாந்தோட்டையிலோ, அபுதாபியிலோ கடை திறந்தால் - அது எந்த நேரமும் பறிக்கப்படலாம் என்ற பாதுகாப்பற்ற/நிச்சயமற்ற தன்மையை உணர்வார். ஆனால் அடிலேடில் கடை திறந்தால் அப்படி பறிக்கப்படுவதில் இருந்து அவுஸ்ரேலிய சட்டம் தன்னை பாதுகாக்கும் என உணர்கிறார். அதனால் முதலையும், உழைப்பையும் முதலிடுகிறார். இதில் உள்ளூர்காரர் (native) என்பதை விட அந்த நாட்டின் ஜனநாயக சுட்டி எங்கே உள்ளது என்பதே பிரதானமாகிறது. தமிழர்கள் G7+ ANZ ஐ தேடி வரும் காரணம் - பாதுகாப்பு - அதில் பெளதீக, பொருளாதார, சிந்தனை, கலாச்சார, மத, கல்வி பாதுகாப்பு+சுதந்திரம் அடங்கியுள்ளது.
  19. ஓம். இதைதான் வெற்றிமாறனும் சொல்கிறார். இதை நானும் ஏற்கிறேன். கூடவே சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் கூட, ஆணும் பெண்ணும் சாதியாவது ஹைகோர்ட்டாவது என சொல்லி மணம் முடித்த பின், பிறக்கும் பிள்ளைக்கு இருவரில் ஒருவர் சாதியை போடுங்கள் என சொல்லுவார்கள். எவ்வளவு அநியாயம் இது! நிச்சயம் - சாதி அற்றோர் என சுயவிருப்பில், அதிக தடங்கல் இன்றி போடப்படும் நடைமுறை வர வேண்டும். ஆனால் இப்படி போடுபவர்களும், சந்ததியினரும் இட ஒதுக்கீட்டு நடைமுறையில் இருந்து சுயமாக விடுப்பு எடுத்தோராக கருதப்பட வேண்டும். ஆனால் சாதி மறுப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் முகமாக - ஒரு உயர்த்தப்பட்ட+தாழ்தப்பட்ட தம்பதியின் பிள்ளைகள் சாதி அற்றோர் என வழங்க்ப்பட்டாலும், அவர்களுக்கு தாழ்தப்பட்ட சாதியினருக்குரிய சலுகைகை வழங்கலாம். எப்படி பார்த்தாலும் ஏதோ ஒரு வகை அடையாளப்படுத்தல், சான்றிதழ் தேவையே.
  20. ஏமீஷ் இனத்தினரா? ஏன் கொழும்பான் நீங்கள்தான் சட்டபடி இவரை விட ஒண்டு கூட போகலாமே. பிறகென்னா? ஹோர் பனேகா குரோர்பதி! நீங்களும் ஆகலாம் அதிஸ்டசாலி!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.