Everything posted by goshan_che
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இதுக்கே டென்சன் ஆனா எப்படி… அனுர ப்ரோ தரப்போவது இதுக்கும் மேலே இருக்கும்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அவர்தான் தைரியமான ஆளேச்சே…யாருக்கும் எதிர்க்க திராணியில்லையே… எல்லாரையும் வேண்டாம் ஒரு ஒற்றை சிப்பாய் மீது, வெறும் token gesture ஆக போர்கால அத்து மீறலுக்கு ஒரு வழக்கை போடட்டுமே.. ஒரே ஒரு அடி மட்ட சிப்பாய் மீது மட்டும். அதே போல் 75 வருடம் கட்டி எழுப்பிய இனவாதத்தை 2/3, நிறைவேற்று அதிகாரத்தை வைத்து ஒரு நொடியில் அழிக்கலாமே?
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
கிழக்கு மாகாணத்தில் வாய்ப்பு 4 சீட்டுக்கே ஆனால் 5 தமிழ் தேசிய கட்சிகளுக்கு. இவர்களை எந்த பஸ்சில் ஏத்தி விட உத்தேசம்? எமக்காக கடைசிவரை போராடிய ஒரு மனிதனை பற்றி இப்படி எழுத உறுத்தவில்லை. அன்றும் கூட வர்க அடிப்படையில் கூட ஒன்று சேராமல் அவரை இனவாதம் பேசி காயடித்த கட்சி ஜேவிபி. அதில் மிக முக்கிய புள்ளி அனுர, அப்போதும். அப்ப தமிழ் ஈழம் கொடுப்போம் என சொல்ல சொல்லி பார்க்கலாமே…. சரி அது கொஞ்சம் ஓவர்… 13 + கூட வேண்டாம்…. காணி அதிகாரத்தை முழுமையாக மாகாண சபைக்கு கொடுக்கிறோம் என சொல்ல சொல்லுங்களேன் பார்ப்போம்? அனுர எதிர் க்கும் படி எதையும் சொல்லமாட்டார், அவர் பல்கலைகழகத்தில் பெளத்த சங்க தலைவர்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
நான் சுமன் பற்றி எதுவும் கேட்கவில்லை. என் கேள்வியை மீள வாசிக்கவும். நீங்கள் ஒரு இடத்தில் “நல்லாட்ட்சி கால வரைபை நிறைவேற்றுவேன்” என அனுர சொன்னார் என்கிறீர்கள். பின்னர் அதே பந்தியில் அந்த நல்லாட்ட்சி கால வரைபு “தமிழ் தேசியத்துக்கு ஆப்பு” என்று உங்கள் கருத்தை சொல்கிறீர்கள். நான் உங்களிடம் கேட்பது, அனுர தமிழருக்கு ஆப்பு அடிக்கும் தீர்வை அமல்படுத்துவேன் என சொல்லும் போது, நீங்கள் ஏன் அனுரவை ஆதரிக்கிறீர்கள் என்பதே. அவர்கள் துரோக அரசியல் செய்தார்கள் என்பதில் எனக்கும் உடன்பாடே. அதுக்காக நாம் ஏன் ஒரு கொள்கையாக தமிழ் தேசியத்தை, திம்புவை கைவிட வேண்டும்? நீங்கள் டிசுவோடு கோவித்து கொண்டு, சுத்தம் செய்யாமல் விடும் ஆளா? யார் 25% யாழ் வாக்காளர். அங்கே மொத்தமாக கூட்டினால் மிகுதி 60% க்கு மேல் தமிழ் தேசிய கொள்கைக்கு விழுந்ததை மறைத்து, வாக்களிப்பு வீதமே 55% என்பதையும் மறைத்து ….25% இன் அடிப்படையில் ஏன் எல்லோரையும் அனுரவின் பஸ்சில் ஏத்தி விட அந்தர படுகிறீர்கள்?
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
கோஷான் சொல்றான்…சிவிகே செய்றார்🤣. 👆👇
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
தமிழ் காங்கிரஸ் என்ன குத்தி முறிந்தாலும் கனடாவுக்கான இலங்கை தூதர் பதவி எங்கள் யாழ்கள அனுரவின் உத்தியோகபூர்வ cheer leaderக்குத்தான். கருணையே உருவான, முள்ளிவாய்க்காலில் மக்களை பாதுகாக்க அரசு மேற்கொண்ட யுத்தத்தை வெளிநாடுகள் பேச்சை கேட்டு தாமதிக்காமல் விரைந்து முடிக்கும் படி மகிந்தவை நெருக்கிய மானிட நேயன் அனுரவின் அரசு தமிழருக்கு போதும், போதும் என்று கதறும் அளவுக்கு ஒரு தீர்வை தரப்போகிறது. அந்த தீர்வு பொதி மிக கனமானது. அதை தூக்கி அலுங்காமல் குலுங்காமல் தமிழ் மக்கள் தலையில் அரைக்கும், மன்னிக்கவும் வைக்கும் இயலுமை அவருக்கு மட்டும்தான் உள்ளது.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
மல்வத்து, அஸ்கிரிய, ரமாண, அமரபுர மஹாநாயக்கர்களின் மனங்கள் துண்டு துண்டாக உடைந்து விட்டதாம்…அதை ஒட்டுவதற்கு பெருமளவு பெவிகோல் தேவை என இலங்கை அரசு அறிவித்துள்ளதாம். எம்மை கொத்து கொத்தாக சகல பார்வையாளர்களையும் வெளியேற்றி விட்டு கொன்றொழித்த போது, வதை முகாம்களில் இட்டு வாட்டிய போது, பால்மா ஈறாக தடை செய்து கொன்றபோது, உடையாத மனங்கள் 5 எம்பி சீட்டில் துண்டு துண்டாக சிதறி விட்டதாம். சேர் பொன் இராமநாதன் இன்னும் வாழ்கிறார்🤣.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
👆👇 சாத்ஸ் ப்ரோ, அனுர நிறைவேற்றுவேன் என சொன்ன அதே தீர்வைத்தான், நீங்கள் தேசியத்துக்கு ஆப்பு தரும் ஏக்க ராஜ்ய தீர்வு என்கிறீர்கள். அப்போ ஏன் அனுரவுக்கு காவடி எடுக்கிறீர்கள்? அனுரவுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பம் என்பதன் மூலம் - நீங்களும் சுமந்திரன் போல் “தேசியத்துக்கு ஆப்பு” தரும் தீர்வை அல்லவா ஆதரிக்கிறீர்கள். மறுபடியும் “வச்சு” என்ற சொல் மிஸ்ஸிங்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இப்படி ஒரு அணி தேர்தலில் போட்டியிட்டதா? யார் முதன்மை வேட்பாளர்.
-
'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?
விலகும் நிர்வாகிள் மனநிலை; கனி (விஜை) இருப்பக் காய் (சீமான்)கவர்ந் தற்று.
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
ஆடிட்டிங் இனிய முடிவுடன் அமைந்திருக்கும் போலயே.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இந்த மானசீக வாக்கெடுப்பு யாழ், வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகளை பெரிதும் ஒத்திருக்கிறது. உண்மையில் யாழ் களம் போல இதுவரை கடும் தமிழ் தேசியம் பேசியவர்கள், வடமாகாணத்தவர் அநேகர் இருக்கும் ஒரு தளத்தில் கூட என் பி பி 27.4% எனும் போது - அது யாழ் வன்னி மாவட்டங்களில் வரவிருக்கும் நிஜ தேர்தல் முடிவை ஆரூடம் கூறியது என்பதே உண்மை (யாழ் மாவட்டத்தில் என் பி பி 25%). அத்தோடு புலம்பெயர் தேசத்தில் த.தே.ம.மு வுக்கு இருக்கும் அதீத ஆதரவு, நாட்டில் இல்லை என்பதை கருத்த்தில் எடுத்து பார்க்கும் போது….இந்த “புலம்பெயர் எப்பெக்ட்” ஐ கழித்து விட்டு பார்த்தால் வரவிருந்த முடிவுக்கான க்ளூக்களை இந்த மானசீக தேர்தல் கொடுத்திருந்தது, ஆனால் நாம் (நிச்சயமாக நான்) அதை அப்போது உணரவில்லை என நினைக்கிறேன். அருச்சுனாவுக்கு 1 சீட் (13.5%) அப்படியே நிஜத்தேர்தலில் பலித்துள்ளது. —/—— ஆனால் கிழக்கின் 3 மாவட்ட மக்களின் எண்ண ஓட்டத்தில் இருந்து மானசீக தேர்தல் முடிவுகள் பெரிதும் வேறுபட்டு நிற்கிறது. இதற்கு பிரதான காரணம் சிறிய மாதிரி அளவு (சாம்பிள் சைஸ்) என நினைக்கிறேன். வாக்களிப்பில் பங்கு கொண்டோரில் மிக சிறிய அளவிலானோரே கிழக்கு மாகாண பூர்வீகத்தினர் என நினைக்கிறேன். கலந்து கொண்டும், திரியில் எழுதியும் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இல்லை அவிழ்ந்துதான். @நிழலி விளக்கம் தருவார்🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஒருவேளை நாம் பனியில் கிடந்து உழல, எம்மை விட சின்ன பெடியன் ஒரளவு அழகான பிள்ளையோட சேந்து அரசியல் செய்து எம்பி வேற ஆயிட்டான் எண்ட அழலா இருக்குமோ🤣
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
மீரா ப்ரோ … அது பகிடி ப்ரோ …. என்னை பொறுத்தவரை சும், ஶ்ரீ, இவர்கள் அனைவரும் பாவித்த டாய்லெட் டிசு போல பயனுள்ளோர்தான். அரசியலமைப்பு என்பது அனுரா இனவாத நிகழ்ச்சி நிரலில் தயாரித்து எல்லோருக்கும் தீத்த போகும் கிரிபத் என்றே நான் நினைக்கிறேன். இதில் சும், ஶ்ரீ யார் போனாலும் ஒரு ஹைகோர்ட்டையும் புடுங்க முடியாது. உங்களுக்கு கேள்வி விளங்கி இருந்தால் என் பதிலும் விளங்கி இருக்கும். விளங்கியதா? அப்படியாயின் நான் சிறி விட்டு கொடுக்க வேணும் என்று சொன்னதன் அர்த்தம் விளங்கி இருக்கும்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இவர்கள் ஊரில் இருந்தால் பியதாசவுக்கு போட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அது பகிடி. @vasee கேட்ட கேள்வி - திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? என்பதுதான். இது ஒரு எதிர்வுகூறல். உங்கள் விருப்பம் அவர் போக வேண்டுமா இல்லையா? என்பதல்ல கேள்வி. நான் பரிட்சையில் கேட்ட கேள்விக்கு ஆம் என என் எதிர்வு கூறலை கூறி உள்ளேன். எனது விருப்பம்? அவர் அரசியலை விட்டு விலக வேண்டும். திரிசா கோசானை திருமணம் செய்வாரா என்பது கேள்வி. இவர்கள் திரிசா கோசானை கலியாணம் முடிப்பது சரியா பிழையா என தம் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் எழுதி விட்டு…. ஒழுங்கா கேள்வியை வாசித்து. கிரகித்து பதில் எழுதியனவை பிராண்டுகிறார்கள்.
-
அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
ரணிலுக்கு சுமன்… அனுரவுக்கு சாத்ஸ் என்பது தெரிந்த விடயம்தானே. புஞ்சி அம்மே நவே, தங் புஞ்சி அங்கிள்🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நாதாயோ… நாதாயோ…. அபி லங்கா பெள ழே நாதாயோ 🤣 ————- @Nathamuni எங்க சாமி போய்டீங்க… யாழில் 90% ஆட்கள் உங்கள் வழிக்கு வந்து விட்ட இந்த அரிய காட்சியை வந்து பாருங்க தெய்வமே. ——— சிறு வயதில் பைபிளை பிரட்டும் போது வாசித்த ஒரு விடயம் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்தது. தனது கைதுக்கு முன் யேசு தன் 12 சீடரையும் பார்த்து சொல்வாராம்… நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்து வரும் நாட்களில் என்னை 3 தரம் மறுதலிப்பீர்கள் என. இது தமிழ்தேசியத்தின் மறுதலிப்பு காலம் போலும். இதுவும் கடந்து போகும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
@satan நீங்கள் ஏன் அனுரவுக்கு ஆலவட்டம் பிடிக்கிறீர்கள் என்பது எனக்கு தெளிவாக விளங்குகிறது. நீங்கள் எப்போதும் ஏழை, பணக்காரன் என்ற வர்க்க பார்வையோடு பல விடயங்களை அணுகியதை பல தடவை யாழில் கண்டுள்ளேன். இப்போ உங்கள் உழைப்பாளிகள் கட்சி, நாயகன் ஆட்சியில். ஆகவே தமிழ் தேசியத்தை பிடரியை சுத்தி எறிந்து விட்டு, முள்ளிவாய்க்கால் போரை விரைந்து முடியுங்கள் என மகிந்தவை அளுத்திய அனுரவுக்கு ஆலவட்டம் பிடிக்கிறீர்கள். பச்சோந்திதனத்தில் நீங்கள் சுமன் படித்த பள்ளியில் ஹெட்மாஸ்டர். அது கூட அவர்கள் நல்லதை அடைய முயல்வோம் என கூறியதை நம்பித்தான் கூவினேன். அவர்கள் புரள ஆரம்பித்ததும், அப்படி என் மனதுக்கு பட்டதும், என் முந்தைய நிலைக்கு மன்னிப்பு கேட்டு அவர்களை விமர்சிக்க ஆரம்பித்தேன். ஆனால் காணியை கூட விடவில்லை, 50 நாளில், 600 மீட்டர் பலாலி ரோட்டை மட்டும் விட்ட அனுரவுக்கு இவர்கள் கூவும் கூவல் இருக்கிறதே…. லிபிங்ஸ்டன் பாசையில்…. கொடுத்த காசுக்கு மேலாலயே கூவுறாண்டா கொய்யால🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நான் ஜனாதிபதி தேர்தல் நேரம் யாழுக்கு வரவே இல்லை. அரைக்கிறுக்குத்தனமாக நான் சொல்லாததை எல்லாம் சொன்னது போல் எழுதிவிட்டு, நான் வெதும்புகிறேனாம்🤣.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஆதாரம் காட்டவும். இல்லை என்றால் மன்னிப்பு கேட்கவும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
என்ன செவிட்டு பிரச்சனையா? மானசீக திரியில், இந்த திரியில் மீண்டும் மீண்டும் எழுதி இருக்கிறேனே? அருச்சுனா அணிக்கு. அவர் மீது பிடிப்பு இல்லாவிட்டால் அந்த அணியில் ஏனையோருக்கு.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நான் எள்ளி நகையாடவில்லை. தவறான முடிவு என்ற என் கருத்தை எழுதுகிறேன். வாக்காளரை எள்ளி நகையாடினேன் என்பதற்கு ஆதாரம் தரவும் அல்லது மன்னிப்பு கேட்கவும். நான் சுமந்திரனை தூக்கி எறிய வேண்டும் என யாழில் கடந்த தேர்தலுக்கு முன் இருந்தே எழுதுகிறேன். ஆனால் உங்கள் கொள்கை வங்குரோத்தை பார்க்க சிரிப்பாக உள்ளது. தமிழர் உரிமையை வெல்லவில்லை என சுமனை கழுவி ஊத்திய நீங்கள், எதுவுமே தரமாட்டோம் என வெளிப்படையாக சொல்லும் அனுரவின் காலில் நெடுஞ்சாண்டையாக கிடக்கிறீர்கள்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அனுரவின் மனைவியின் படத்தை வீடியோவை இங்கே பதியவும். வாசகர் பார்த்து ஒரு முடிவுக்கு வரட்டும். முறைபாட்டை விசாரிக்க நான் மனு நீதி சோழனும் இல்லை… நீங்கள் கோமாதாவும் இல்லை🤣. ஆனால் ஒரு காலத்தில் நான் சம், சும், விக்கிக்கு கூவியதை விட ஒரு மடங்கு அதிகமாகவே அனுரவுக்கு கூவுகிறீர்கள்… காத்திருக்கிறேன்….🤣