-
Posts
15634 -
Joined
-
Last visited
-
Days Won
175
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
இலங்கையில் தெலுங்கு பேசும் அதிசய கிராமம்...!
goshan_che replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
ஆரப்பா ஜிலேபிய பிச்சு போட்டது 🤣 நான் என்ன நினைக்கிறன் எண்டா, யாழ்பாணத்தை போலல்லாது, அம்பாறையில் வந்தேறிய தெலுங்கர் தம் மொழியை மறக்காமல் இருக்கினம் 🤣. -
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
goshan_che replied to தமிழ் சிறி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
https://pdf.tnrecruitment.in/2021/01/vandhargal-vendrargal-by-madhan.html?m=1 வந்தார்கள் வென்றார்கள் என்ற மொகாலயர் பற்றிய புத்தகம் இங்கே. எங்காவது புத்தக கடை போனால் ஹாய் மதன் கேள்வி பதில் வாங்கி வாசியுங்கள். மேலே சொன்ன பாணியில் நகைச்சுவை+தரவு+சமூக சிந்தனை சேர்த்து எழுதி இருப்பார். -
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
goshan_che replied to தமிழ் சிறி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
இதெல்லாம் எம்மாத்திரம் நான் சுற்றுலாவை ஒரு இராணுவ நடவடிக்கை போல் திட்டமிடுவேன் தெரியுமா🤣. வேலையை ரிலாக்ஸ்டாகவும், சுற்றுலாவை வேலை போல் ஸ்டிரிக்டாகவும் செய்வேன் என வீட்டில் அலுத்துக்கொள்வார்கள்🤣 -
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
goshan_che replied to தமிழ் சிறி's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
அருமையான ஆக்கம் @தமிழ் சிறி அண்ணா. வாசிக்க எழுத்தாளர் மதனின் சாயல் அடித்தது. பெடியனிட்ட எனக்கு ஒரே கேள்விதான்….. ஜேர்மனியில் கிடைக்கும் அதே சம்பளம், உறவுகள், நட்புகள் எல்லாம் அப்படியே கிடைக்கும் என்றால், அவரின் தெரிவு ஜேர்மனியா? இலங்கையா? -
அபாரம்…. காலத்துக்கு தேவையான எழுத்து…. பட்டுக்கோட்டை எழுதி இருப்பார்… உப்புகல்லை வைரம் என்று சொன்னால்… நம்பி ஒப்பு கொள்ளும் மூடருக்கு முன்னால்… நாம் கதறி என்ன? குழறி என்ன ஒன்றுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா…. உங்களுக்கும் பல இடங்களில் இது பொருந்தும் 🤣. ஆனால் கதறுவதை கை விட வேண்டாம்👏🏾.
-
நிச்சயமாக. இங்கே கூட ஆதாரம் எண்டு ஒரு புரட்டு எடுத்து விடப்பட்டுள்ளது. அதாவது, போரின் 2ம் நாள் செலன்ஸ்கி வெளியில் வந்து பேசினார். போரின் 12ம் நாளும் வெளியில் வந்து பேசினார். மேலே இரு பேச்சுக்களுக்கும் உள்ள பொருளடக்க வித்தியாசம் ஆங்கிலம் தெரிந்தோருக்கு புரியும். அதே போல் 2ம் நாள் சொன்ன சிலதை, 12ம் நாளும் சொல்லி உள்ளார். (எப்படி பல மாவீரர் உரைகளில் தலைவர் ஒரு விடயத்தை மீள பிரஸ்தாபித்தாரோ அப்படி). இதை எடுத்து கொண்டு, 2ம் நாள் உரையை, வீடியோவை முழுவதுமாக மறைத்து - அல்லது அது உண்மையில் 12ம் நாள்தான் நடந்தது என திரித்து…ஒரு கதை பின்னப்படுகிறது. இது உண்மையிலேயே ஆங்கில பரிச்சயம் குறைவான உறவுகளின் தலையில் மிளகாய் அரைக்கும் முயற்சி. நீங்கள் சொல்வது போல், ரஸ்யா விடயத்தில் அவர்களை இவ்வாறு “பதப்படுத்தி” விட்டால், ஏனைய விடயங்களில் அவர்களை ரோவின் முகவரிக்கு மாற்றி விடுவது இலகுவாக இருக்கும் என்பதே திட்டம்.
-
புரிகிறது வாலி. உண்மையிலேயே சில நேரம் பாக்க பாவமாய்த்தான் கிடக்கும். இதை இப்படியே விட்டு விடலாம்தான். ஆனாலும் மேலோட்டமாக செய்தியை வாசிப்பவர்கள், இந்த சாம்பிராணி புகையில் மாட்டகூடாது என்பதால் தரவுகளை மட்டும் கொடுக்கிறேன். செலன்ஸ்கி 25/02/22 இலேயே கியவின் ரோட்டில் வந்து நிண்டு வீடியோ போட்டு, நான் எங்கும் ஓடவில்லை என சொல்லி விட்டார். பென்னெட் மாஸ்கோ போனது 05/03/22 - அதற்கு முன்னும், பின்னும் செலன்ஸ்கி கியவ்வில் இருந்திருக்கிறார். வெளியில் வந்திருக்கிறார், இரவு நேரம் வீடியோ வெளியிட்டும் இருக்கிறார். கீழே எழுதியுள்ளது அடிப்படை புரிதலாவது உள்ளவர்களுக்கு மட்டும். மேலே மிக தெளிவாக பெப் 25ம் திகதி டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் செலனஸ்கி கியவ்வில் நிண்டு வீடியோ போட்ட செய்தியை போட்டுள்ளது. மார்ச் 5, புட்டின் உத்தரவாதம் தரும் வரை செலன்ஸ்கி பதுங்கி கிடந்தார் எண்டால், பெப்ரவரி 25இல் இந்த செய்தி எப்படி அச்சேறியது? சிம்பிள் லாஜிக்.
-
24/02/22 வியாழன் - ரஸ்ய படை எடுப்பு ஆரம்பம் 25/02/22 வெள்ளி - கியவ்வின் மத்தியில், கட்டிடங்களுக்கு வெளியே வந்து செலன்ஸ்கியும், அவரின் பிரதமரும் இந்த வீடியோவை வெளியிட்டார்கள். இதன் சாரம்சம், நானும், அமைச்சர்களும் இங்கேதான் இருக்கிறோம். எங்கும் ஓடவில்லை. 05/03/22 - இஸ்ரேலிய பிரதமர் பென்னேட் மஸ்கோ போய் புட்டினை சந்தித்தார்.
-
பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 100 பேர், சிரியாவில் 111 பேர் பலி
goshan_che replied to கிருபன்'s topic in உலக நடப்பு
இறப்பு எண்ணிக்கை 1000 ஐ தாண்டுகிறதாம். 2வது பூகம்பம் சற்று முன் துருக்கியை தாக்கியுள்ளது. -
ஓம் இணையுங்கோ… நான் நினைத்தது சரியாத்தான் இருக்கு. மனிதர்கள் தமக்கு நேர்ந்ததை வைத்து உலகை எடை போடுவது சகஜம்தான். இதன் எதிர் வாதமாக பெண்ணின் பக்கத்தில் இருந்தும் யாழில் முன்பு பதிவுகள் வந்திருக்கு. அதே போல் incel சிந்தனை உலக அளவில் டிரெண்ட் ஆக முதலே யாழில் பல அண்ணைகள் இப்படி எழுதி உள்ளார்கள். ஆனால் இதை வாசிச்சு, இன்னும் கல்யாணம் முடியாத பெடியள் கிறுக்காகதவரை ஓக்கே🤣.
-
ஓம் அப்படி சொன்ன ஜே ஆர் ஜனாதிபதியாக இருக்கும் போதே தான் விரும்பாத பிரேமதாச அடுத்த ஜனாதிபதியாவதை, யூ என் பி தலைவராவதை தடுக்க முடியவில்லை என்பதும் தெரியும். நான் நினைக்கிறேன் உச்சரிப்பை Sri-Shri என மாற்றும்படி மறைமுக அளுத்தம் அரச அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நாட்டின் உத்யோகபூர்வ பெயர் Democratic Socialist Republic of Sri Lanka என்றே 1972 யாப்பில் இருந்து இருக்கிறது. ஓம் நாட்டின் நேர வலயம் (time zone) எது என்பது குறித்து அரசியல்சட்டம் எதுவும் சொல்லவில்லை என்பதால் - சந்திரிக்காவால் இதை ஒரு ஜனாதிபதி ஆணை + அமைச்சரவை & பாராளுமன்ற ஒப்புதலோடு மட்டும் செய்ய முடிந்தது.
-
வலி வடக்கில் 33 வருடங்களின் பின் 108 ஏக்கர் காணி விடுவிப்பு!
goshan_che replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
இந்த கண்துடைப்புக்குத்தான் வெள்ளையும் சொள்ளையுமா போய் மேடையில் உக்காந்துள்ளார் சுமந்திரன் மாமா. பிகு மாமா என்றதும் தப்பாக நினைக்க வேண்டாம். நேரு மாமா போலவே சும் மாமாவும் பாவனை செய்வதால் உருவான மரியாதை வழக்கு இது. -
கிம் - நான் மட்டும்தான் யாழில் அங்கீகரிக்கப்ட்ட ஒரே ஒரு கிம் ஆதரவாளன். வேறு யாரையும் இவ்வாறு அழைத்தால், அல்லது அழைக்க தூண்டினால் சட்ட நடவடிக்க எடுக்கப்படும். புட்லர் - பாவத்தை அடிச்சும் பார்த்தாச்சு, அவிழ்த்தும் பார்த்தாச்சு எண்டு இப்ப கொஞ்சம் லீவுல விட்டிருக்கு. ஹிட்லர் - இது சும்மா குதர்கத்துக்காக எழுதுவது #கு(தர்க)மாரசாமி அண்ணை 🤣
-
வத்திக்கானை நீங்கள் என்ன யேசுவின் போதனை படி நடக்கும் அமைப்பு என்றா நினைக்கிறீர்கள். இந்து மடாலயங்கள், சைவ ஆதீனங்கள் போல் வத்திகானும் ஒரு அதிகார மையமே. அது வரலாறில் தானாகவே முன்னின்று நடாத்திய அநியாயங்களும், கண்டுகொள்ளாமல் விட்ட அநியாயங்களும் ஏராளம். நிற்க - இது இந்து, சைவ, பெளத்த, யூத, எல்லா மடாலயங்களுக்கும் மேல் வைக்கப்பட கூடிய குற்றச்சாட்டுத்தான். வத்திக்கான் எமக்கு குரல் கொடுக்க வேண்டுமாயின், நமது கத்தோலிக்கர்கள் கொழும்பின் பிடியில் இருக்கும் சிங்கள கர்தினாலிடம் இருந்து விலகி, நமக்கென ஒரு தமிழ் கருதினாலை பெற்று கொள்ள வேண்டும். அப்போது நமது சொல்லும் வத்திகானில் அம்பலம் ஏறும்.
-
2009 க்கு பின்னாக தமிழர் இடையே சாதி வாதங்களும், மதவாதங்களும் உருவேற்றி வளர்க்கப்பட்டமை ஒன்றும் தற்செயலானதும் அல்ல, விபத்தும் அல்ல. இப்படி ஒரு கட்டம் வரும் போது … இதை காரணம் காட்டி பொலிஸ், காணி அதிகாரங்களை தருவதை தவிர்க்கலாம் என்பது பேரினவாதிகளின் நீண்ட காலத்திட்டம். கிழக்கில்…அதிகாரங்களை பகிர்வது தமிழ்-முஸ்லீம் கலவரத்தை தூண்டும். வடக்கில்…அது சாதி கலவரத்தை தூண்டும். இப்படித்தான் இந்தியா, மேற்க்குக்கு சொல்லி, 13 ஐ யானை தின்ற விளாம்பழம் ஆக்க போகிறார் நரி.