Everything posted by goshan_che
-
தமிழகத்தின் திரையரங்குக்கு பெட்ரோல் குண்டு வீச்சு - சர்ச்சையை கிளப்பிய “அமரன்”
இந்திய இராணுவம் பற்றிய படம் என்றால்—படம்முழுக்க பாலியல் வன்கொடுமையாக அல்லவா இருக்க வேண்டும்.
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
தெலுங்கர்களை பற்றி தப்பா பேசீட்டு ஹைதரபாத்தில் போய் ஒளிவதெல்லாம் வேற லெவல் ராஜதந்திரம்🤣. அம்மணி இதுநாள் வரை தெலுங்கு சீரியல்களின் பிசியான நடிகையாம். இனி?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கனடா ஹைகொமிசனர் உங்கள் தோழருக்கு கிட்டதட்ட உறுதி. உங்களுக்கு லாங்காஸ்டர் ரோட்டில் வாழ அதிஸ்டம் உள்ளதோ யார் கண்டார்?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
என் நிலைப்பாடு 1. இதில் தலைவர் பற்றிய எழுச்சி இயக்கப்பாடல் பாடி வெற்றியை கொண்டாடுகிறார்கள். 2. செல்வம் = பிரபாகரன் என யாரும் சொல்லவில்லை. ஆனால் செல்வத்துக்கு பக்கதில் நிற்கும் கோமாளியின் அங்க சேட்டை அப்படி ஒரு தொனியை கொடுக்கிறது. செல்வம் அவரை தடுத்திருக்க வேண்டும். 3. ஆனால் செல்வத்துக்கு அருகில் நிற்கும் கோமாளியின் செயலுக்காக தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்காமல் விட முடியாது. பிகு தலைவர் இருக்கும் போதே அவரை துதிக்கு பாடுவதில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
காலம் கட்டாயம் பதில் சொல்லும். சதுரங்க்க ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் வைத்த பொறியில் நாம் கச்சிதமாக வீழ்ந்தோம் என.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இங்கே பலர் 28 தமிழ் எம்பிக்கள் போகிறார்கள் என குதூகலிக்க்கிறார்கள். இன்னும் சிலர் வாய்ப்பளித்த என் பி பி, வாக்களித்த சிங்கள மக்கள் நெஞ்சை நக்காத குறை…. ஆனால் இதில் 14 எம் பி க்கள் தவிர மிச்சம் எல்லாம் ஒவ்வொரு கதிர்காமர், டமாரா குணநாயகம் என்பது போக போக விளங்கும். திட்டமிட்டே தெற்கில் கூட என் பி பி தமிழ் எம்பிக்களை இறக்கி வென்றுள்ளது. பிஸ்கோத்து திட்டத்தை திணிக்கும் போது -பார்தீர்களா எத்தனை மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ் எம்பிகள் இதை ஆதரிக்கிறனர் என பிரசாரம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும். Sorry to say this, சிங்களவன் எப்பவும் உங்களை விட ஒரு அடி முன்னால் யோசிப்பவன். இப்போதும் இதுதான் நடக்கிறது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அது உள்ளூராட்சி சபையாகவும் இருக்கலாம், அதை தமிழ் மக்களால் தெரிவு செய்த எம்பிகள், மாகாண சபை ஆதரிக்கும் என்றால் ஐ எம் எவ் அல்ல ஆண்டவனே எதுவும் செய்ய முடியாது. புலிகள் மிகவும் முயன்று பாதியளவு வெற்றியடைந்த விடயம் எமது பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது. நாமே என் பி பி எம்பிகளை தேர்ந்து அனுப்புவது - அதை அப்படியே ரிவர்ஸ் ஆக்கி விடும்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தனி தனியா கூட்டம் போட்டு கதைக்காமல் கஜேஸ், அருச்சுனா, மான், மீன், பாம்பு, பல்லி என தமிழரசு தவிர் அனைத்து தமிழ் தேசிய சக்திகளையும் ஒரு அணியில் திரட்டும் வேலையில் இறங்குங்கோ. மயூரன் போல புதிய முகங்களை முதல்வர் வேட்பாளர் ஆக்குங்கோ. 60 க்கு மேல் ஒருத்தருக்கும் சீட் கொடாதேங்கோ. மக்கள் மீள வருவர்கள்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
நன்றி இது ஒரு பிரபலமான ஆங்கில சொலவடைத்தான். நான் சுமனின் பெயரை மட்டும் சொருகினேன்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதுதான் இனி இலங்கை அரசின் சர்வதேச பிரச்சாரத்தொனி…. அதாவது தமிழர் 1948 இல் இருந்து கேட்டது இனவாத கோரிக்கை… இப்போ மனம் திருந்தி நல் வழிக்கு வந்து விட்டார்கள்…. இனி எமக்குள் பிரச்சனை இல்லை… நீங்கள் (வெளிநாடுகள், புலம்பெயர் தமிழர்) இதில் தலையிட தேவையில்லை. இதை பாவித்து எமது சகல கோரிக்கைகள், விசாரணைகளை எப்படி அடுத்த 5 வருடத்தில் அடித்து நூத்து ஒன்றும் இல்லாமல் ஆக்குகிறார்கள் என்பதை உக்காந்து பாருங்கள். இதற்கு முன் பல தமிழ் பெண் எம்பிக்கள் இருந்துள்ளார்கள். அனந்திக்கு மா.சபை தேர்தலில் கிடத்க வெற்றி நியாபகம் இருக்கும். இப்போது கூட பல பழுத்த தலைவர்களை விட கெளசல்யா வாங்கிய விருப்பு வாக்கு அதிகம். சுமந்திரன், கஜன், ஶ்ரீ போன்றோர் தமக்கு போட்டியாக வந்து விடக்கூடாது என்பதால் ஒண்டுக்கும் உதவா பெண்களை போட்டியில் இறக்கினர் ஆகவே மக்கள் வாக்களிக்கவில்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அவர் பெயரவில்தான் தமிழர். மற்றும்படி அவர் ஒரு முழு நேர இடது சாரி. அவருக்கு விழுந்த வாக்குகள் இதற்காக விழுந்தவையே தவிர வேறெதூக்கும் அல்ல. தமது தமிழ் அடையாளத்தை விடுத்து இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்கும் எந்த தமிழரையும் சிங்களவர் எப்போதும் தம்மில் ஒருவராக ஏற்று கொண்டே வந்துள்ளனர். கதிர்காமர் மாத்தறையில் கேட்டிருந்தால் முதலாவதாக வந்திருப்பார்.🤣 தமிழகத்தில் அண்ணன் காட்டிய வழியில், இலங்கையில் அப்புகாத்துகள்🤣. #மூன்றாம் பெரிய கட்சி #யாழ்பாணத்தில் ஒத்தை ரோசா 🤣
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இந்த மனநிலைக்கு நம்மை கொண்டு வரத்தான் அத்தியாயஙங்கள் 1, 2 இல் அத்தனை அநியாயங்களையும் செய்தார்கள். 1. நாம் நியாயமான உரிமையை கேட்டோம் 2. நாயை அவிழ்த்து விட்டு குதறினார்கள் 3. இப்போ நாயை கட்டி போடுவோம் என்கிறார்கள். நாம் அவர்களை மீட்பர்கள் என்கிறோம்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இதில் பாதிப்பேர் அனுரவின் பஸ்சில் ஏறி பைலா போட ஆரம்பித்து விட்டார்கள். மீதி பாதிக்கு subscription expired ஆகிய கேபிள் டீவி நேயர்கள் நிலைதான். சுமன் அரசியலை விட்டு முற்றாக நீங்க வேண்டும் என நான் நினைக்க 2 காரணங்கள். 1. அவரின் சுத்து மாத்துக்கள் இராது 2. சுமனை சாட்டி, ஶ்ரீக்கும் அனுரவிற்கும் ஆள் பிடிக்கும் பார்த்தசாரதிகளால் அப்படி செய்ய முடியாமல் போகும். சுமன் இலண்டன் வந்தால் நிச்சயம் பார்த்தசாரதி அடிப்பார். ஆனால் பார் லைசன்ஸ் ஶ்ரீ வந்தால் ஏர் போர்ட்டில் இறங்கி மீள ஏறும் வரை அவருக்கு சாரதி வேலை பார்ப்பார். துடைத்து விடாத குறைதான். (சாப்பிட்ட பின் வாயை சொன்னேன்).
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இதை கட்டாயம் செய்வார். தமிழ் தேசியத்துக்கெதிரான 76 வருட 3 அத்தியாய போரின், 3 வது அத்தியாயத்தை வெல்லும் பெளத்த சிங்கள மேலாண்மைவாதத்தின் தந்திரோபாயம் இதுதான்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
1. இது உங்கள் நிலைப்பாடு என தெரியும். 2. ஆனால் வடக்கு கிழக்கில் இன்னமும் அறுதி பெரும்பான்னையான எம் மக்கள் இந்த முடிவுக்கு வரவில்லை. 3. சில புலம்பெயர் தேசிய தூண்கள், முறிந்த பனை என்ற ஒரு புத்தகத்தை வெளியிடுவதை கூட தேசியத்துக்கு எதிரான செயல் என கருதி யாழில் அதை அழித்தவர்கள், யாழ் ஒரு தமிழ் தேசிய ஊடகம் அதன் agenda எப்போதும் அதுதான் என என் நீண்ட ஒரு ஆக்கத்தை அழித்து விட்டு எனக்கு வகுப்பெடுத்தோர் எல்லாம் - இப்போ ஒரு ஒத்தை மாத்தறை எம்பியில் சுருண்டு போய் விட்டார்கள். 89-2015 வரை ஜேவிபியை வழி நடத்தியது குமார் குணரட்ணம் என்ற தமிழர் என்பதும் அப்போதுதான் ஜேவிபி மோசமாக இனவாதம் கக்கியது என்பதும் இவர்களுக்கு மறந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாள் போக, ஒரு தமிழரான கதிர்காமரை வெளிநாட்டமைச்சர் ஆக்கிய சிங்களவர் எவ்வளவு பெருந்தன்மையானோர் - நாம்தான் தவறாக விளங்கி கொண்டோம் என எழுதினாலும் ஆச்சரியமில்லை.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
நீங்கள் என்னவாகவும் இருந்து விட்டு போங்கள். ஆனால் உங்கள் Stockholm Syndrome பால் எழும் மாய நம்பிக்கைகளை இங்கே பிரசாரம் பண்ண வெளிக்கிட்டால் பதில் எழுதத்தான் வேணும். சுமந்திரன் கள்ளன், சுமந்திரன் கள்ளன் என கூவியவாறு எல்லோரையும் கொண்டு போய் அனுரவின் பஸ்சில் ஏற்றி விடும் வேலையள் கேள்விக்குள்ளாகும்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இல்லை எனது அபிப்பிராயம் அனுரவின் கடந்த கால நடவடிக்கை சார்ந்து எழுவது. நான் அவர் போக்கு மாறுகிறது என்பதை காணும் வரை இப்படி எழுதலாம். நீங்கள்தான் 5 வருடம் பொறுத்து, அவர் நல்லது செய்தால் அதன் பின் அவரை துதிபாட வேண்டும். அனுர எதுவும் செய்ய முன்பே அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், ஒரே ஒரு மாவட்டத்திக் 25% மக்களின் வாக்கை மட்டும் கொண்டு தமிழ் தேசியத்துக்கு மரண சாசனம் எழுத விழைவதும் நீங்கள்தான். இது அவசரகுடுக்கை தனமானதும் ஆபத்தானதும்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
Sumanthiran is living rent-free in your mind 🤣. நான் சுமன் பற்றி உங்களிடம் கதைக்கவே இல்லை. தமிழருக்கு மிக மோசமான தீர்வு என நீங்கள் கூறும் ஏக்கிய ராஜ்ஜிய தீர்வை கூட தருவதாக சொல்லாத அனுரவுக்கு ஏன் நீங்கள் cheer leader ஆக வேலை செய்கிறீர்கள் என்பதே என் கேள்வி. எனது கேள்வி அனுர, சாத்தான் பற்றியது. சுமன் பற்றியது அல்ல. நாம் எந்த தீர்வு தராத தென்னிலங்கை கட்சியையும் தேர வேண்டியதில்லை. இதுவரை தேர்ந்ததும் இல்லை. அந்த அணியின் தலைவரில் குறைகள் இருந்தாலும், மயூரன் போன்ற தேசிய வழி நின்ற நல்ல மாற்றுக்கள் இருந்தன.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
வாழ்துக்கள் ஐலண்ட், தமிழ் தேசிய கொள்கையின் ஆதரவாளர் போல காட்டி கொள்ளும் பச்சோந்திகளுக்கு மத்தியில் நேர்மையாக அதை எதிர்க்கும் நீங்கள் எவ்வளவோ திறம். தேர்தலுக்கு முதல் நாள் “உங்கள் அரசியல் வெல்லும் நாள் கனிகிறது என்றேன்”. அது இதைத்தான். அனுரவில் ஒரு மிக சிறந்த தந்திரமான தலைவரும் உங்களுக்கு கிடைத்துள்ளார். 2009 க்கு பின் பிறந்த தமிழர்களின் எண்ணிக்கை கூட, கூட உங்கள் கொள்கை அவர்கள் மத்தியில் அடையும் வெற்றியும் கூடும். இல்லை அவர் புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள விரும்புவதால் ஜேர்மனிதான் சரிபட்டு வரும்🤣.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அனுர இப்படி எல்லாம் மரம் வெட்டுவார் என்பது உங்கள் அதீத கற்பனை. அவர் செய்யப்போவது அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துள் எமது தமிழ் தேசிய அடையாளத்தை இனி எழ முடியாதவாறு புதைக்கும் அரசியல். இதை சிங்கள மக்கள் நிச்சய வரவேற்பார்கள். தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்கும் வரை அவர் காட்டில் மழைதான்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தவறு… அவர் இனவாதமற்ற கொள்கையில் உறுதியாக நிண்டது அதனால் சாதிக்க முடியாமல் போனது அவரின் பிழை என்ற தொனியில் எழுதியது. பிழை அவரது அல்ல, அவரை. அவரின் கொள்கைகளை சிங்கள மக்களுக்கு “சிங்கள கொட்டி” என பிழையாக எடுத்து போன ஜேவிபி உட்பட இனவாத கட்சிகளும் அதன் அனுர போன்ற தலைவர்களிலும்தான் பிழை. ஒரு காலத்தில் வீரவன்ச ஜேவிபி பேச்சாளராக கக்கிய அத்தனை இனவாத விசத்தையும் ஆமோதித்து அருகில் இருந்தவர்தான் உங்கள் ஆபத்தாண்டவர் அனுர. புலிகள் கேட்ட இடைக்கால நிர்வாக அலகு உட்பட சகலதையும் மூர்க்கமாக எதிர்த்தவர் - பேச்சு வார்த்தைகளில் ஒரு இம்மி தன்னும் சிங்கள தரப்பு விட்டு கொடாமல் பார்த்து கொண்டவர்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ஏன் என்றால் அவர்கள் எதுவும் தரமாட்டார்கள் என முழு தமிழ் இனத்துக்கும் தெரிந்திருந்தது. ஆனால் இவரைத்தான் உங்கள் போன்றோர் ஏதோ தரப்போறார் என விம்பம் எழுப்பி மக்களையும் இவருக்கு போட வைத்துள்ளீர்கள். 1948 இல் இருந்து இதுவரை வந்த அத்தனை ஜனாதிபதிகளிலும், திம்பு அடிப்படையான உரிமை கோரலுக்கு மிகவும் ஆபத்தானவர் அனுர. ஏதாவது ஒரு கோயில் கொமிட்டியில சேர்த்து விடுவம் - வச்சு செய்யட்டும்🤣.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ஏன் என்றால் அந்த ஏக்க ராஜ்ஜிய வரைபை கூட தர ரணிலோ கடந்த பாராளுமன்றோ தரத்தயாரில்லை. ஏக்க ராஜ்ய வரைபு காணாது என குதிக்கும் உங்களுக்கு அனுர அதை கூட தரமாட்டார் என்பது ஏன் விளங்குது இல்லை? மிக நல்ல முடிவு…. யாராவது சுமனை வெளிநாட்டுக்கு எடுத்து விடுங்கப்பா… கட்சியும், இனமும் தப்பட்டும். இதெல்லாம் உங்கள் கற்பனை இப்படி மாற்றங்கள் எதையும் செய்யும் எண்ணம் அனுரவிற்கோ கட்சிக்கோ துளியும் இல்லை. அவர் இராணுவத்தை எதுவும் செய்யப்போவதே இல்லை. நீங்களும் அடுத்த 5 வருடம் ஆக்க ஆற என கதைவிட்டு காலத்தை ஓட்டுவீர்கள்.
-
தமிழ்த் தேசியக் கட்சிகளை மீண்டும் ஒன்றுபடுத்த முயற்சி: சிவகரன் அறிவிப்பு
செய்ய வேண்டிய வேலை… ஆனால் இவரால் முடியுமா? இப்போ இருக்கும் ஆட்களை சேர்த்து மினக்கெட்டு அவர்கள் மீண்டும் ஒரு சீட்டுக்காக பிய்த்து கொண்டு போவதை விட. அருச்சுனாவின் அணியை பலபிக்க உண்மையான எண்ணம் கொண்டோர் இணையலாம். அந்த அணியில் அருச்சுனா தவிர்ந்த ஏனையோர் சரியாக வழிநடந்தால், உத்வேக படுத்தப்பட்டால் மீளலாம்.
-
எதிர்வரும் 21 ஆம் திகதி கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி அநுர நிகழ்த்தவுள்ளதாக தகவல்
உடான்ஸ் லீக்ஸ் இணையதளம் அதிரடியாக அனுரவின் கொள்கை பிரகடனத்தை லீக் செய்துள்ளது, இதன் முக்கிய விபரங்கள்: 1. மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் 2. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் 3. தமது பிரதேசங்களில் மத ஸ்தலங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இதில் தொல்பொருட்கள் உட்பட எந்த அரச திணைக்களமும் மாகாண சபையை மீறி செயல்பட முடியாது. 4. கடந்த 5 வருடத்தில் கட்டப்பட்ட அனுமதியில்லா மததலங்கள் இடிக்கப்படும். 5. போர் இல்லை, இப்போ மூவின மக்களும் ஒண்டுக்கு இருக்கிறார்கள், எனவே முப்பட்டைகள் 1/3 ஆல் குறைக்கப்படும். இந்த பணம் வைத்திய, கல்வி துறைக்கு நேரடியாக ஒதுக்கப்படும். முப்படை முகாம்கள் 1983 க்கு முந்திய நிலைக்கு போகும். 6. 1948 இல் இருந்து இலங்கை அரசுகள் கடைபிடித்த இன ஒதுக்கலுக்கு அரசு சார்பாக சிறுபான்மையினரிடம் மன்னிப்பு கேட்கிறோம். 7. இலங்கைக்கு உழைத்த, இங்கே பிறந்து இந்தியாவுக்கு அனுப்பபட்டவகளிடம் மன்னிப்பு கேட்கிறோம். 8. மாகாண சபைகளுக்கு வரி விதிக்கும், வெலிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கும் அதிகாரம் கொடுக்கப்படும். (யாவும் கற்பனை)