Everything posted by goshan_che
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
முன்னரும் யாழில் இதை நான் எழுதினேன். அடுத்த உலக யுத்தம் மத அடிப்படையில்தான் அமையும். அதாவது இஸ்லாமியர் எதிர் ஏனையோர் என்பதாக. அண்மையில் பேகம் வழக்கில் இங்கே பிறந்து வளர்ந்த ஒரு பங்களாதேச பெண்ணை - இந்த நாட்டின் குடி இல்லை என ஆக்கினார்கள். ஐசில் உடன் போய் சேர்ந்தார் என. ஹை கோர்ட்டும் கை விரித்து விட்டது. இப்படியான நிலை எல்லாம் 10 வருடம் முன்பு கூட நினைத்து பார்க்கவியலாதது. கொஞ்சம் கொஞ்சமாக மேற்கில் இஸ்லாமியரின் மீதான பிடி இறுகிறது. சட்டம் என்பது பாராளுமன்று நினைப்பதுதான். மிக இலகுவாக மாற்றலாம். பாராளுமன்றும், பெரும்பான்மையும் விரும்பினால். எமது வாழ்நாளில் இந்த போரை நாம் சிலவேளை காணாமல் போகலாம்…ஆனால் மேற்கை பொறுத்தவரை இந்த நிலை எடுப்புக்கு மாறான ஆட்கள் இந்த நாடுகளில் இருந்து வெளியேற்றபடுவது கட்டம் கட்டமாக ஆரம்பித்து விட்டது. ஒரு கட்டம் வரை சட்டப்படி இது நடக்கும். போர் காலம் நெருங்க இது சட்டத்துக்கு புறம்பான வழிகளிலும் நடக்கும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
முழு அளவிலான தரை வழி படை எடுப்புக்கு முன்னோட்டமாக இஸ்ரேலின் விசேட படைகள் காஸாவில் நுழைந்துள்ளனவாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சீமட்டிக் மக்கள்-எதிர் நடவடிக்கையில் ஈடுபடும், அல்லது ஹமாசை புகழும் வெளிநாட்டவர் (மாணவர், வேலையாட்கள், அறிவுசார் சமூகத்தினர்) நாட்டில் இருந்து வெளித்தள்ளப்படுவார்கள் என்பதாக சட்டத்தை மாற்றும் திட்டம் யூகேயில் தயாராகிறதாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தமிழர்கள் யூதர்கள் மட்டும் இல்லை. பலஸ்தீனியர்களும் கூட இல்லை. அவர்களுக்கு ஆபத்து என்றவுடன் அல்ஜசீரா ஓவர் டைம் பாக்குது… ஐநா? இலங்கை சொன்னவுடன் பெட்டி கட்டி கிளம்பிய ஆட்கள்…இப்போ வெளியேறும் உத்தரவை மீளப்பெற இஸ்ரேலை நெருக்குகிறது. ஐ சீ ஆர் சி… முஸ்லிம் நாடுகள்… வத்திகான்… HRW… Amnesty International …. எல்லாரும் மற்ற பக்கம் திரும்பி நிண்ட ஆக்கள்தான். யூதன்/ பஸ்தீனியன் என்றால் உயிர், தமிழன் என்றால் ம**. இதை சொல்வதால் இந்த பிணக்குகளில் அவலம் வர வேண்டும் என்பதல்ல. நாம் எல்லாராலும் வஞ்சிக்கப்பட்டோம் என்பதை நினைவு படுத்தவே. இதில் அவன் பெரிது இவன் சிறிது என்று எதுவும் இல்லை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஓம். அப்போ இதையும் நான் சொன்னேன். சரி நேரம் கிடைத்தால் அந்த திரி வருகிறதா என தேடிப்பார்க்கிறேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஓம் இது சரி. இதைத்தான் நான் அப்போதே சொன்னேன். ஆனால் நீங்களோ இல்லவே இல்லை இதன் பெயர் லிபரேசன் ஒப்பரேசன் என்றீர்கள். ஆகவேதான் உங்களிடமே கேட்கிறேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நெடுக்ஸ், அந்த நடவடிக்கையின் பெயர் “ஒப்பரேசன் லிபரேசன்” ஆ, அல்லது “லிபரேசன் ஒப்பரேசன்” ஆ? ஏன் கேட்கிறேன் என்றால் முன்பு ஒரு திரியில் இதன் பெயர்…. லிபரேசன் ஒப்பரேசன் என நீங்களும்… இல்லை ஒப்பரேசன் லிபரேசன் என நானும் விவாதித்தோம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தாம் எப்படி பொதுமக்களை கொன்றோம், பாலியல் வன்கொடுமை செய்தோம் என விபரிக்கும் ஹமாஸ் ஆயுததாரியின் வாக்குமூலமாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நாலு சரணடைந்த ஹமாஸ் ஆயுததாரிகளை இஸ்ரேல் சுட்டு கொண்டதாக, கடும் பிரயத்தனம் செய்து ஒரு காணொளியை அல்ஜசீரா வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய IDF இன் X கணக்கு இதை பற்றி எழுதியுள்ளது. இடம், நேரம்தான் சரியாக தெரியவில்லை. ஆனால் கடஞ்சா சொன்னது சரியாகவே படுகிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எண்ட பே படமும் யூடியூப்பில் இருக்கிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இது நடந்த இடம் இஸ்ரேல் உள்ளயா? அல்லது காஸாவிலா? ஏன் என்றால் காஸாவுக்குள்ளும் பலர் கொண்டு போக பட்டார்கள் என நினைக்கிறேன். ஓம். நான் எப்போதும் இஸ்ரேல் இதை பாவித்தது என்பதை மறுக்கவில்லை. ரஸ்யாவும் பஹ்மூத் போன்ற மக்கள் வாழும் நகரங்களில் இதை பாவித்தது என்பதே என் கூற்று. HRW மட்டும் அல்ல, ஆம்னெஸ்டி இண்டெர்னேசனலும் இதை உறுதி செய்துள்ளது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உங்கள் நோக்கம் இது என நானும் கருதவில்லை. ஆனால் நான் அசெளகரியமாக உணர்தேன்.🙏
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலில் உர்சுலா. காஸா போகவில்லை என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சற்று முன் இஸ்ரேலினுள் வீழ்ந்த ஹமாஸ் ரொக்கேட்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அதே…. அரபாத் காலத்தில் மதச்சார்பற்ற பலஸ்தீன கோரிக்கையை கையாண்டதை விட ஐசில் தனமாக நடக்கும் ஹமாஸ் அதன் வெளிநாட்டு வால்களை கையாள்வது இஸ்ரேலுக்கு இலகு. அதுவும் சீனாவில் போய் செய்துள்ளார்கள் பாருங்கோ. புத்திசாலித்தனத்தின் உச்ச கட்டம். அமெரிக்க செனேட்டர் ரொன் போல் இஸ்ரேல்தான் ஹமாசை உருவாக்கியது என்று பேசியுள்ளார். அப்படியாயின் அவர்கள் கணக்கு நன்றாகவே பலிக்கிறது. பேசியது2009 இல்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் தூதர ஊழியர் பீஜிங்கில் தாக்கப்பட்டார். இலண்டனில் யூத பள்ளிகள் சில இன்று மூடல். https://x.com/MarioNawfal/status/1712792965314166941?s=20 👆🏼வீடியோ. இளகியமனமிருப்போர் தவிர்க்கவும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அராஸ் எனும் பிரெஞ் நக்ரில் இறை கோசத்தை எழுப்பிய படி பள்ளிகூடம் ஒன்றில் ஆசிரியரை குத்து கொன்றுளாராம் ஒருவர். மேலும் இருவர் காயமாம். இன்று வெள்ளி கிழமை ஜும்மாவின் பின் போராட்டங்கள் வலுவாகும் என நம்புகிறேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
1. வட காஸாவை விட்டு மக்களை வெளியேற அறிவிக்குமாறு ஐ நா வுக்கு இஸ்ரேல் அறிவிப்பு 2. இந்த அறிவிப்பை மீளப் பெறுமாறு இஸ்ரேலிடம் ஐ நா கோரிக்கை 3. இந்த அறிவிப்பின் படி வெளியேற வேண்டாம் என மக்களுக்கு ஹமாஸ் அறிவிப்பு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இரானிய வெளிவிவகார அமைச்சர் லெபனானில் வைத்து ஹிஸ்புலாவை சந்தித்தார்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இது ஹமாசின் பிரச்சார வீடியோவாம். இதில் எப்படி வெளிநாட்டு நிதி உதவியில் பதிக்கப்பட்ட தண்ணீர் குழாய்களை புடுங்கி அதில் இருந்து ஹமாஸ் ராக்கெட் செய்தது என்பது விபரிக்கப்படுகிறதாம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ISIS இன் மீது சராசரியாக ஒரு மாதத்தில் வீசிய குண்டுகளை காட்டிலும் அதிக குண்டுகள் ஏலவே ஆறு நாட்களில் காஸா மீது போடப்பட்டுள்ளதாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உண்மையில் ஒரு கருத்தாளரை பலர் சேர்ந்து ரவுண் கட்டி அடிப்பதும், அத்தோடு என்னை இழுத்து, இழுத்து விடுவதும் கொஞ்சம் அசெளகரியமாகவே இருக்கிறது. பேசாமல் திரியின் தலைப்பை “இஸ்ரேல் கமாஸ் மோதலில் நன்னியின் வகிபாகம்” என மாற்றிவிடுமாறு கோரலாம் என நினைக்கிறேன்🤣. நீங்கள் எல்லாம் நன்னியை ஏதோ யேசு, புத்தர் ரேஞ்சில் விம்பம் கட்டி வைத்திருந்தீர்கள் போல் உள்ளது. எனக்கு அவர் மேல் இருந்த/இருக்கும் விம்பம் ஒன்றேதான். இந்த தளத்திலேயே இளையவர், எமது போராட்டத்தின் வரலாற்றை மிகுந்த சிரத்தை எடுத்து, தன்னளவில் நேர்மையாக தொகுக்கிறார். 2009 இன் பின் “நீ என்ன செய்தாய்” என ஆளை ஆள் கேட்டு வாயால் வடை சுட்டு கொண்டிருந்த நம் மத்தியில் இந்த தளத்தை உருப்படியான வகையில் பயன்படுத்தியுள்ளார். இன்னும் 50 வருடத்தில் வந்து பார்த்தால் இங்கே அவர் பதிவுகள் மட்டுமே பிரயோசனமானவையாக இருக்கும். இது மட்டுமே நான் நன்னியின் மீது வைத்திருக்கும் விம்பம். இது அப்படியேதான் இருக்கிறது. இதை தவிர அவர் நல்லவர், வல்லவர், முஸ்லிம்களை வெறுக்கமாட்டார், சிகெரட், தண்ணி அடிக்கமாட்டார், ஜல்சா படம் பார்க்கமட்டார், பீடா போட மாட்டார் ….இப்படி எந்த விம்பமும் அவர் மேல் எனக்கு இருந்ததில்லை. இனியும் இராது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
என்ன ஜோக்கா? கிரிகெட் போட்டி திறந்தா தெரியும், நானும் @Eppothum Thamizhanஎப்படி பட்ட தோஸ்து எண்டு. உக்ரேன், இஸ்ரேல் விடயத்தில் கருத்து முரண். ஆனால் வேறு பலதில் அவருடன் கருத்தொற்றுமையுடனும் எழுதியுள்ளேன். இதென்ன இவ்வளவு சின்ன புள்ளைத்தனமாக யோசிக்கிறீங்க. அதே போலத்தான் @நியாயத்தை கதைப்போம். உடனும். அண்மையில் கூட அந்த 55+18 திரியில் நானும் நி.க வும் மட்டும் ஒரு நிலைப்பாட்டை எடுத்தோம். உண்மையில் ஒரே சூழலில், சிந்தனை புலத்தில் இருந்து வரும் இங்கே எழுதும் பலரின் கருத்தை விட அவரின் கருத்துக்கு ஒரு vale added கனம் இருப்பதாக கருதுகிறேன். மறுபடியும். ஆதரவும் எதிர்ப்பும் கருத்துக்கே ஒழிய கருத்தாளருக்கு இல்லை.