Everything posted by goshan_che
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதை இஸ்ரேல் ஏற்காது. சில சமயம் விடும் வரை ஓம் எண்டு சொல்லிப்போட்டு பிறகு இன்னொரு சாட்டை வைத்து உட்புகும். கந்தகாரில் விமானத்தை கடத்தி வைத்ததும் வெளிநாட்டு அமைச்சரே போய் கேட்டதை கொடுத்து விமானத்தை மீட்டு வந்த இந்தியா போல அல்ல இஸ்ரேல். அவர்களுக்கு அரசியல், இராணுவ இலக்குத்தான் முக்கியம். பணயகைதிகள் உயிர் இரெண்டாம் பட்சமே. அதே போல் ஹமாசும் ரொக்கேட்டை எல்லாம் பேரீச்சம் பழத்துக்கு விற்று விட்டு சும்மாவா இருக்கப்போகிறது? எப்படியும் இஸ்ரேல் மீது தாக்கத்தான் போகிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
குத்தி அல்ல சுட்டு கொலை, இருவரை என்கிறார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இறை கோசத்தை எழுப்பிய படி பிரசள்சில் ஒருவரை குத்தி கொலை செய்த நபர், பிரெஞ்சு எல்லையை நோக்கி நகர்வதால், இரு நாட்டிலும் பாதுகாப்பு உசார் நிலையில்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேற்கில் இருக்கும் முஸ்லிம்களில் பலர் மேற்கின ஜனநாயக நடைமுறைக்கு இசைவானவர்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். முஸ்லிம்களில் என்ன பிரச்சனை என்றால் அடிப்படைவாதிகள் மதத்தை முன்னிறுத்தி அநியாயங்களை செய்யும் போது அதை எதிர்க்கும் திராணி ஏனையவர்க்கு வருவதில்லை. அப்படி வருவோரையிம் முனாபிக் என கூறி ஒடுக்கி விடுவார்கள். இது ஒரு காலத்தில் மத அடிப்படையிலான உலக யுத்தத்தை கொடுத்தே தீரும். யூகேயில், அமெரிக்காவில் முஸ்லிம்கள் 30% வரும் போது இப்போ அனுப்புவது போல் இஸ்ரேலுக்கு கப்பல் அனுப்ப முடியாது. இது எமக்கே விளங்கும் போது மேற்கிற்க்கும், குறிப்பாக மேற்கில் வாழும், மேற்கை மறைமுகமாக அளுத்தும், அல்லது கட்டுப்படுத்தும் யூதருக்கு கட்டாயம் விளங்கும். இப்படி விளங்கியதன் ஒரு அங்கமே - குறிப்பாக அந்த இடத்தில் இஸ்ரேலை மீள உருவாக்கிய காரணம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
முள்ளிவாய்க்கால் நேரம் கிரிபத் கொடுத்து கொண்டாடியோர், காஸாவுக்கு மூக்கால் அழுகிறார்களாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
குழந்தைகள், பெண்கள் உட்பட 199 பேரை ஹமாஸ் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு. இவர்களை பார்வையிட அனுமதிக்குமாறு செஞ்சிலுவைச்சங்கம் ஹமாசிடம் கோரிக்கை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எங்கே.ம் வெளியேற விடுகிறார்கள்? ஒரே எல்லையை சக அரபு/முஸ்லிம் நாடான எகிப்து இறுக்க மூடி வைத்துள்ளது. மக்கள் காத்து கிடக்கிறார்கள்? காரணம்? எப்படி சும்மா இருந்த லெபனானை பலஸ்தீன அகதிகளின் வருகை உள்நாட்டு போரை உருவாக்கி சீரழிச்சதோ அப்படி தமக்கும் நடக்கும் என்ற பயம். இந்த மக்களை, ஹமாசை போசித்த ஈரான் பொறுப்பெடுப்பதே முறை. அவர்கள் ஹமாசை பொறுப்பெடுப்பார்களா என்பதே சந்தேகம். இஸ்ரேல் என்ற தேன் கூட்டுக்கு ஹமாசும், ஈரானும் கல் எறிந்துள்ளார்கள். கொத்து வாங்குவது அப்பாவி பலஸ்தீனர்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இப்படி இல்லை என இஸ்ரேல் மறுப்பு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நானும் அப்படியே நினைக்கிறேன். அண்மை வரை கூட ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கடும் தொனியில் கதைத்தார். அத்தோடு இஸ்ரேல் டமாஸ்கஸ், அலெப்போ விமான தளங்களை குண்டு வீசி தாக்கியதால், இப்போ ஈரான் வழியாகவே சிரிய-இஸ்ரேல் எல்லை க்கு விநியோகம் நடக்கிறதாக சொல்கிறார்கள். ——— காஸாவின் வைத்தியசாலைகளில் எரி பொருட்கையிருப்பு இன்னும் 24 மணி நேரத்துக்கு மட்டுமே. -ஐ நா-
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாசை கைவிட்டதா ஈரான்? ஈரானை, ஈரானின் நலன்களை, குடிகளை, இஸ்ரேல் தாக்காது விடின், இஸ்ரேலுடன் நாம் மோதலுக்கு போக போவதில்லை என ஐநாவில் இயங்கும் ஈரான் தூதரகம் அறிவித்துள்ளதாம். இது ஈரான் ஹமாஸை கைவிட்டு விலகுவதை காட்டுகிறதா அல்லது பதுங்கி பாயும் உத்தியா எனத் தெரியவில்லை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உங்கள் வியாக்கியானம் எந்தளவு தூரம் பொருத்தமானது என தெரியவில்லை. ஹமாஸ் எப்போதும் இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கை செய்யவில்லை. எப்போதும் இஸ்ரேலை வரைபடத்தில் இருந்தே தூக்குவதே அதன் கொள்கையாக இருந்தது. இஸ்ரேல் கூட மதச்சார்பற்ற ஃப்ட்டாவை நியாயமாக நடத்தி ஒரு அதிகாரம், போதிய நிலம் உள்ள பலஸ்தீன அதிகாரசபையை கொடுக்கவில்லை. மாறாக காலத்தை இழுத்தடித்து, முடிந்தளவு மதச்சார்பற்ற, ஆயுத வழியை கைவிட்ட தரப்புகள் மீது பலஸ்தீன மக்கள் நம்பிக்கை இழக்கும் விதமாகவே இஸ்ரேல் நடந்து கொண்டது. காஸாவில் படை பிரசன்னம், குடியேற்றம், பொருளாதார முற்றுக்கை என காஸா மக்களை அமைதி பேச்சில் முற்றாக நம்பிக்கை இழக்க செய்தபின், தன்னிச்சையாக இஸ்ரேல் காஸாவில் இருந்து விலகியது. கமாஸ் தேர்தலில் வென்று, காஸாவில் இருந்து ஃபெட்டவை திரத்தியடித்தது. பலஸ்தீன தரப்பில் சமாதானத்துக்கு தயாராக இருந்தோரை இஸ்ரேல் முடிந்தளவு பலவீனப்படுத்தி, அந்த வெற்றிடத்தை ஹமாஸும் பலஸ்தீனிய ஜிகாதும் நிரப்புவதை மறைமுகமாக ஊக்குவித்தது. இந்த பிண்ணனியில்தான் காஸா நிலப்பரப்பு கமாஸின் கைக்கு போனதும் அங்கே யுத்த தயாரிப்புகள் மேற்கொள்ள பட்டதும் நிகழ்ந்தது. பிகு 1. கமாஸ் காஸாவை கைப்பற்றியதும் எகிப்து எல்லையை அடித்து மூடியது. இடையில் அங்கே முஸ்லீம் பிரதர்ஹுட் ஆட்சி அமைத்த போது (இவர்களின் பலஸ்தீன பிரிவே ஹமாஸ் என்றாகியது) உறவுகள் மேம்பட்டன. 2. எப்படி இஸ்ரேலை மேப்பில் இருந்து அழிக்க வேண்டும் என்பது ஹமாஸ் நிலைப்பாடோ அதே போல், தமக்கு சமனான ஒரு பலஸ்தீன நாடு அமையவே கூடாது என்பது நெத்தன்யாகு போன்ற கடும்போக்கு இஸ்ரேலியரின் நிலைப்பாடும் ஆகும். #ஜாடிக்கேத்த மூடி இன்னும் ஒரு விடயம் இஸ்ரேலின் நரித்தனத்தை விளக்க: 2007 இல் விலகிய பின் ஹமாசின் பிடியில் இருந்த காஸாவில் ஒரு துண்டு நிலத்தைதானும் இஸ்ரேல் எடுக்கவில்லை. ஆனால் மிதவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு கரையை மிக வேகமாக கபளீகரம் செய்தது. இதுவும் கூட ஹமாஸ் அல்லது அழித்தொழிப்பு என்ற இரு மோசமான தெரிவுகளை மட்டும் பலஸ்தீனருக்கு கொடுக்கும் இஸ்ரேலின் நகர்வின் ஒரங்கமே.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
@island
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதை நான் பார்க்கவில்லை. ஆனால் காஸாவினுள் ஒரு நெடிய சுரங்க கட்டமைப்பு உள்ளதும் அது இஸ்ரேலுக்குள்குள்ளும், எகிப்துள்ளும் முன்னர் ஊடுருவியுள்ளதும் உண்மைதான். இப்படியான சுரங்கங்களை தவிர்க்க எல்லையில் இஸ்ரேல் பத்தடி ஆழத்தில் காங்ரீட் சுவர்களை அமைப்பதும் உண்டு. அதேபோல் காசா-எகிப்து இடையான எல்லையில் பிலடெல்பியா கோடு என ஒரு சிறு பகுதியை இஸ்ரேல் கண்காணிக்கும் (எகிப்து-இஸ்ரேல் அமைதி ஒப்பந்த படி). இந்த எல்லை வழியாக ஆட்கள் மட்டும் போகவே அனுமதி (பொருட்கள் இஸ்ரேல் பக்கம் உள்ள சாவடி வழியாகவே போகலாம்). இதற்கு கீழாலும் சுரங்கம் அமைத்து எகிப்தில் இருந்து பொருட்கள் கடத்தப்பட்டதாக கூறி இஸ்ரேல் நடவடிக்கை எடுப்பதுண்டு. இந்த சுரங்கங்களில் சிலது இஸ்ரேல் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது அமைத்தவை. ————- லெபனான்-இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேல் காவல் அரணில் ஹிஸ்புல்லா கொடி பறக்கிறாதாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலிய தரை நகர்வு இந்த வார இறுதியில் அல்லாமல், வரும் வார நடு அல்லது கடைசி பகுதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாம். வானிலை காரணமாக காட்டப்பட்டுள்ளது. டெல் அவிவில் நேற்று வெள்ளமாம். ஆனால் இல்லை - இஸ்ரேல் பயப்படுகிறது அல்லது முஸ்லிம் உலக எதிர்ப்பை கண்டு அமெரிக்கா தடுக்கிறது என வேறு வகையிலும் பலர் வியாக்கியானம் கொடுக்கிறார்கள். ஹமாஸ் குழந்தைகளின் தலையை கொய்யவில்லை, சுட்டுத்தான் கொன்றது என பக்கம் பக்கமாக எழுதி விவாதிக்கிறீர்கள் என்றால் - உங்கள் தார்மீக திசை காட்டி திருத்த முடியாதளவுக்கு பழுதாகி விட்டது என்றே அர்த்தம். (உங்கள் - பொது பன்மையாக பாவிக்கப்பட்டுள்ளது).
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஈரானிய அரச ஊடகம் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட முன்வருமாறு ஆட்சேர்ப்பு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தரவு-சரி பார்தலுக்கு (fact checking) நன்றி தம்பி. நான் பகிர்ந்த பின்னர் X உம் context சேர்த்துள்ளது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
——- வெள்ளை பொஸ்பரஸ் என ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் வெளியிட்ட ஆதாரம் - உண்மையில் புகை குண்டுகள் என இஸ்ரேலிய படைத்துறை மறுத்து -இதை பற்றி X தளத்தில் ஒரு சர்ச்சை ஓடுகிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
யுத்தம் சம்பந்தமான தகவல்களை பகிர்வதும். Fog of war ற்கு மத்தியில் உண்மையை தேடுவதும், அதை விவாதிப்பதும், பொப்கோன் கொறித்தல் அல்ல என்பதை நீங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன். முள்ளிவாய்க்கால் சமயம், இப்படி ஒரு யூத தளமோ, அரபு தளமோ எம்மை பற்றி கதைக்கவில்லை. வெஸ்மினிஸ்டர் சதுக்கத்தில் நாம் மட்டுமே தனியே நின்றோம் இல்லையா? 10 நிமிட தூரத்தில் Edgeware Road இல் அரபிகளும், 20 நிமிட தூரத்தில் Golders Green இல் யூதர்களும் - எதுவுமே நடவாதது போல் தம் வாழ்வை தொடர்ந்தார்கள் இல்லையா? ஆகவே இதையிட்டு சஞ்சலப்படும், அக்கறைப்படும் நாம் இப்போதும் moral high ground இல் தான் நிற்கிறோம். அடிவாங்கிய இனம் என்பாதால் - அதிக ஒப்புவமைகள் இருப்பது காரணமாகலாம். 👆🏼👍 ———— ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹமாஸ் தலைவரை கட்டாரில் வைத்து சந்தித்தார்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆமென்(கிறேன்) 🙏
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஐ நா வழியாக ஈரான் இஸ்ரேலுக்கு ஒரு செய்தியை அனுப்பி உள்ளதாம். நாம் இந்த பிணக்கு மேலும் தீவிரமடைவதை விரும்பவில்லை. ஆனால் காஸா நடவடிக்கை தொடர்ந்தால் தாம் தலையிட நேரும் என்பதே அச்செய்தியாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். இந்த மனித பேரவலதிலும் நக இயலுமா? பார்த்து விட்டு சொல்லுங்கள்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அகதிகள் தொடரணி தாக்குதல் பற்றி மேற்கில் இருந்து இராணுவ விடயங்களை எழுதும் ஒரு கணக்கின் பார்வை. முழு நூல் (thread) ஐயும் வாசிக்கவும் (X ஐ ஏனைய மொழிகளிலும் மொழிமாற்றிப்பார்க்கலாம்). சண்டையின் ஆரம்பத்தில் நிகழ்ந்த இஸ்ரேல்-ஹமாஸ் கடற்சண்டை. ஹாமாசின் படகு ஏரிகிறது. கடலில் குதித்தோர் மீது இஸ்ரேலிய படையினர் தாக்குகிறனர்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள சிரிய பகுதியான கோலான் குன்றுகள் மீது சிரியாவில் இருந்து ஒரு வான்வெளி ஆயுதம் ஏவப்பட்டதாம். காஸா எல்லையில் காத்து நிற்கும் மருந்து, உணவு இதர நிவாரணங்கள். இஸ்ரேல் உள்நுழைய அனுமதி மறுப்பு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதுதான் பலஸ்தீன அகதிகள் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலாம். இஸ்ரேலிய ஆதரவு கணக்குகள் இது வான்வழித் தாக்குதல் அல்ல - தரையில் இருந்து வெடித்துள்ளது, ஹமாஸ் சொந்த மக்களையே தாக்கியது என்கிறனர். பிகு இந்த X கணக்கு மொசாட் என்ற பெயரில் இயங்கினாலும் அது உண்மையான மொசாடின் கணக்கு அல்ல. அதன் அருகில் satirical என போடப்பட்டுள்ளதை காண்க. கடந்த சனியன்று நடந்த தாக்குதலுக்கு முன் இது இஸ்ரேல் பற்றிய சுய நையாண்டிகளையே பகிர்ந்து வந்தது. தாக்குதல் நடந்த தினத்தில் இருந்து, Iron Dome தாக்குதல் முடியும் வரை இஸ்ரேல் சார்பாக நையாண்டி அற்ற தகவல்களை வெளியிடுகிறது. இது இஸ்ரேலியரின் கணக்கு, ஆனால் மொசாட்டின் கணக்கு அல்ல.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கழுகு கண் என்பது போல் வெளவ்வால் காதைய்யா உங்களுக்கு😂. ஆனால் இதை கொப்பி அல்லாமல் inspiration எண்டு தான் சொல்லோணும் என இளையராஜா, ரெஹ்மான், தேவா எல்லாரும் சொல்லி இருக்கினம். அவையே அப்படி எனும் போது, அடிப்படை உபகரணங்களை வைத்து இசையமைச்ச நாமும் ஓகேதான்😎.