Everything posted by goshan_che
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
அது அப்படியில்லை… சீமானிற்கு சேதம் அதிகம் ஆகாமல் தடுக்க….பையன் தன்னைத்தானே தியாகம் செய்துள்ளார்😀. நானும் விளங்கி, விலகியுள்ளேன். Fact-check இல்லாட்டில் எந்த கண்றாவியையாவது யாழில் கொணர்ந்து கூவி விற்கலாம்…. என்ன செய்வது….அறுவார்…பொல்லும் கையுமா ஒவ்வொரு முடக்கிலேம் நிக்கிறானுவ. #மைண்ட்வாய்ஸ்
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
அங்கே கூடி நிற்பவர்களை பாருங்கள் - வருடத்தில் ஒரு நாள் உடுப்பு எடுப்பவகள் போலவா அவர்கள் இப்போ போட்டிருக்கும் உடுப்பு உள்ளது? வறுமையில் வாடுவோர் இப்படியான பெயர்போன கடைகளிலா வாங்குவாகள்? உண்மையில் நீங்கள்தான் செல்வச்செழிப்பில் மிதக்க்கிறீர்கள் என நினைக்கிறேன். உங்களுக்கு வறுமை எப்படி இருக்கும் என்பதே மறந்து விட்டது போல் உள்ளது. அதனால்தான் வார இறுதிக்கு காத்திருந்து, பெரிய கடைகளில் துணி எடுப்போரை வறுமையில் உழழ்வதாக எழுத முடிகிறது உங்களால். அடுத்து என்ன? சிம்ரன், இலியானா போன்றோர் இடுப்பு மெலிய காரணம் சோத்துக்கு வழி இல்லை?🤣 இன்னும் ஒரே ஒரு பக்கம்தான்… உங்களால் முடியும்…. நம்பிக்கையோடு எழுதுங்கள்🤣 விளங்கினாலும், விலக விடாது…. #தொழில் ரகசியம்😝
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
படம் பார் பாடம் படி நான் கண்டு வந்து சொன்னதை கோஷான் முதலைகளோடு கும்மாளம் அடித்து விட்டு, பாண் இல்லாவிட்டில் என்ன கேக் சாப்பிடுங்கள் என சொல்கிறார் என கூறியவர்கள் கவனத்துக்கு. மேலே நீர்கொழும்பு, மாத்தறை பகுதிகளில், சிஙக்ளவர்களால் நடத்தப்படும் துணிக்கடைகளில் இன்று பொருட்கள் வாங்கி விட்டு, காசு கட்ட காத்து நின்ற கூட்டம். இவர்கள் வெளிநாட்டு காசில் வாழும் தமிழர்கள் அல்ல, பெருநாளுக்கு உடுப்பு எடுக்கும் முஸ்லிம்களும் அல்ல. தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு உடுப்பு எடுக்கும் சராசரி, சிறு நகர்ப்புற சிங்கள மக்கள். மாத்தறையில் காசு கட்டி முடிக்க ஒரு மணத்தியாலம் ஆகியது என ஒருவர் கூறியுள்ளார்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
உண்மைதான்… வேற லெவல்… சட்டப்படி இருக்கு…. செட் ஆகுவம்… இப்படி சிலது ஒட்டி கொண்டு வந்துட்டுது 🤣
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
உண்மையில் இப்போ கொஞ்சம் பிசியாக நிற்கிறேன். சீமான் திரியில் வழமை போல் இறங்கி அடிக்கவில்லை. வேறு திரிகளை பார்க்கவே நேரம் இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனது பயண கட்டுரை திரியில் செலவழிக்கிறேன். அப்படி இருந்தும்….என்னடா பெரிய தலையள் எல்லாம் இந்த திரியில் மினக்கெடுதே எண்டு ஆர்வம் மேலிட எட்டிப்பார்த்தேன். பெரும்ஸ்…. @பெருமாள்சும்மா சொல்லக்கூடாது…சார் … சும்மா கிண்டி கிழெங்கெடுக்கிறீங்க😂… அதுவும் அந்த மன்னிப்பு கேட்ட பாணி…ஈயம் பூசியும், பூசாமலும்…. வேற லெவல், வேற லெவல் பாஸ்😁
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
படங்கள் I காங்கேசந்துறை கடற்கரை, கலங்கரை விளக்கு படம் 1 - நுழைவு வாயில். 2- நடைபயிலும் பாதை (இராணுவ பயிற்ச்சியும் நடக்கும் அடையாளங்களுடன்). 3 - முழுக் கடற்கரையின் தோற்றம். தொலைவில் மக்கள் காணியில் நேவி நடத்தும் தல செவன ரிசார்ட். 4 - இன்னும் அடைப்புக்குள் இருக்கும் காங்கேசந்துறை கலங்கரைவிளக்கு. 5 - பாவனையில் இல்லாத, உடைந்த நிலையில் உள்ள காங்கேசந்துறை இறங்குதுறை (ஜெட்டி).
- IMG_5923.jpeg
- IMG_5951.jpeg
- IMG_5943.jpeg
- IMG_5941.jpeg
- IMG_5904.jpeg
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
உங்கள் இணைப்புக்கள் திரியை சுவாரசியமாக்குவதோடு இல்லாமல் - நான் எழுதாமல் விட்ட அனுபவங்கள் சிலதை எழுதவும் ஊக்கியாக அமைகிறது. ஆகவே நான்தான் நன்றி சொல்ல வேண்டும். அதே போல்தான் ஏனையோர் வைத்த கருத்துக்கள், கேட்ட குறுக்கு கேள்விகள், சவால்கள், நக்கல்கள் கூட. யாழுக்கு மீள, மீள வருவதும், எழுதுவதும் இந்த உறவுக்காகவே.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
🤣🤣🤣 இதென்ன…நான் பத்து வருசம் முதல் தனி திரி திறந்து சொன்னதை இப்ப கேட்டு ஷாக் ஆகிறியள்🤣. #இந்திராகாந்தி செத்துட்டாவா😝 ஓமா…ஓமா… அடுத்த முறையும் போட்டு வந்துதான் சொல்லுவன்🤣. இப்பவே புளுகொடியல், கோப்பி, இறால் கருவாடு, மிக்சர், சித்தாலேப, மா, பனங்கட்டி, எள்ளுருண்டை, நைஸ், லெமன்பப், கண்டோஸ் எண்டு ஒரு சரக்கு லொறி மாரித்தான் திரும்பி வந்தது😝.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வந்த களை ஆறவில்லை அதற்குள் மறுபடியும் ஆவலை தூண்டுகிறீர்களே ஐலண்ட் ஐயா. அடுத்த முறை கட்டாயம் போய் பாருங்கள். வீடியோ இன்னமும் பார்க்கவில்லை. நான் எப்போபோனாலும் போய் பார்க்கும் இடம். அருகே சர்வதேச மைதானமும் உண்டு. கோட்டை சுவரில் நின்று போட்டிகளை காணலாம். திருகோணமலை, காலி இவை இரெண்டும்தான் கோட்டைக்குள் குடியிருப்புகள், ஒரு சின்ன ஊரே இருக்கும் வகையில் அமைந்த கோட்டைகள் என நினைக்கிறேன். 2010 இல் டச்சு அரச உதவியுடன் பல கட்டிடங்கள், ஒட்டு மொத்தமான வீதிகள், புராதனம் கெடாமல் பெரும் செலவில் புனரமைக்கப்பட்டன. Rampart Hotel இல் கடலோர அறையில் நின்றால், அறையில் இருந்தபடியே சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம். கொழும்புக்கு சவால் விடும் பல high end மேற்கத்திய உணவங்கள் உள்ளன. Peddlers Inn பரிந்துரைக்க கூடியது. Indian Hut உம் நல்லது. காலியில் இருந்து கொழும்பு நோக்கி போகும் நாளின் கடைசி ரயிலை எடுத்து, கடற்கரை பக்க சீட்டில் அல்லது புட்போர்ட்டில் இடம் பிடித்துக்கொண்டால், மாலை மங்கும் வேளை - தென்மேற்கு இலங்கையின் வனப்பை பருகியபடியே பயணிக்கலாம். போகும் போது விரைவுச்சாலை வழி போனால் - சர்வீஸ் செண்டரில் நிறுத்தி ஒரு கட்டு கட்டலாம். சொதி, சம்பல், கிரிபத், அம்பரல்ல தொக்கு, KFC, pizza, burger என வகை வகையாக கிடைக்கும். போகும் போது தகவல் தேவைப்படின் கேட்கவும்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
யாழில் ஒரு முறை ஈழபிரியன் அண்ணா மாட்டுப்பண்ணைகள் பற்றிய ஒரு செய்தியில், இப்படியான பண்ணைகள் எங்கே உள்ளன என கேட்ட போது….அம்பேவல, நியூசிலாந்து பண்ணைகள் பற்றி எழுதினேன். அருமையான இடம். வேலையாட்கள் பலரும் மலையக மக்களே. நான் டிக்கெட் எடுத்து பார்த்ததை நீங்கள் சம்பளம்+கொத்துடன் பார்த்துள்ளீர்கள்😀. ஹோர்ட்டன் சமவெளிக்குள் இருப்பது பேக்கேர்ஸ் நீர்வீழ்ச்சி என நினைக்கிறேன். தண்ணீர் ஒரு curtain போல பரந்து விழும். பம்பரகந்த இரத்திரபுரி, நுவெரெலியாவின் பின்புறத்தில் இடையே உள்ளது. நெடிய “பாகுபலி டைப்” நீர் வீழ்ச்சி. குளிக்கலாம். தலையில் நீர் விழும். நேர் எதிரே ஒரு சிங்கள அம்மாவின் தேனீர் கடை. நீர்வீழ்ச்சியை பார்த்தபடியே தேனீர் அருந்தலாம்.
-
பராமரிப்பில்லாது மூக்கைப் பொத்தவைக்கும் நாவாந்துறை சந்தை! பொதுமக்கள், வியாபாரிகள் அசௌகரியம்
🤣 ஓம்…ஓம்….1995 க்கு முன் நாவாந்துறையில் சந்தணமும், ஜவ்வாதும் எல்லே மணத்தது🤣.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வருகைக்கும், கருத்துக்கும், அழகிய வீடியோவுக்கும் நன்றி ஐலண்ட். நீங்கள் இணைத்த வீடியோவில் வரும் இடங்களில் எனக்கு 10/10😎. எல்லே, நுவர-எலிய சிறு வயதிலும், வெளிநாடு வந்த பின்பும், சில தடவைகள் போயுள்ளேன். இந்த முறை போகவில்லை. எல்லே கேப், அழகிய ரயில் பாலம் viaduct, என மனதை கொள்ளை கொள்ளும் ஊர் எல்லே. கொழும்பில் இருந்து பதுளை செல்லும் உடரட்ட மினிகே யின் கடைசி பெட்டியில் ஒப்சவேர்சன் சலூன் என பெரிய கண்ணாடி களால் ஆன பெட்டியை இணைப்பார்கள். 1st class டிக்கெட் விலைதான். ஆனால் கடைசி நான்கு இருக்கைகள் கிடைப்பது முயல்கொம்பு. பெட்டியில் எங்கோ ஒரு இருக்கை கிடைத்தாலே போதும். ரயில் பாதை எங்கும் பொல்கஹாவலவில் இருந்து பதுளை வரை கண்பூத்து போகும் அளவுக்கு இயற்கை அழகு தித்திக்கும். இந்த வீடியோவில் வரும் ஹோர்ட்டன் பிளைன்சில்தான் வேர்ல்ஸ் எண்ட், எனும் அழகிய இடம் உள்ளது.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
மிக உன்னிப்பாக கூட்டங்களை அவதானித்து எழுதியுள்ளீர்கள். பசித்திருப்பவன் பார்த்திருக்க உண்ண கூடாது என்பது அடிப்படை விதி, ஆனால் தங்கச்சங்கிலிகள் தக தகக்க, கடன் வாங்கி கலர் காட்டும் ஆட்கள் நிறையவே உள்ளார்கள். இதில் படித்தவர் படிக்காதவர் வேறு பாடில்லை. ஒரு டாக்டர் எப்பவும் இலங்கை போகின் பஸ்ட் கிளாஸ்தான். ஆனால் தவறாமல் அந்த இருக்கையில் சாய்ந்து இருந்து ஒரு போட்டோ கட்டாயம் போடுவார். முட்டி வலிக்க cattle class இல் குந்தி இருந்து போகும் எம்மை பற்றி சிறிதும் யோசிக்காமல்🤣. நான் ஊரில் திருவிழா சீசனுக்கு முதல் திரும்பி வந்தமைக்கும் ஒரு காரணம் டிக்கெட் மலிவு🤣, இன்னொரு காரணம் இந்த அலப்பறைகளை தவிர்க்க விரும்பியமை.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நீங்கள் மேலே சொல்வதில் எனக்கு மாற்றுகருத்து இல்லை. ஆனால் சாமத்திய வீடு, கலியாண வீடு, செத்தவீடு, கொடை, விடுமுறை என்று எங்கேயும் எதிலேயும் படம் தான் பிரதானம் என்ற நிலைக்கு ஈழத்தமிழர் வந்து பலகாலமாகி விட்டது என்பதும் உண்மை. ஊர்பக்கம் இன்னும் கொஞ்சம் பேய்க்காட்டலாம் போலும், ஆனால் இலண்டன் வண்டவாளங்களை நகர்புறங்களில் பலர் தெரிந்தே வைத்துள்ளனர். நான் யாழில் ஒரு உறவினர் பெண்மணியை போய்பார்தேன். அருகில் கடையில் நல்ல பழங்களை வாங்கிப்போனேன். ”நீர் பழம் கொண்டு வந்தது நல்ல விசயம், பொதுவா இலண்டன் காரர் poundland சொக்கிலேட்தான் கொண்டுவருவினம், ஒரே பிராண்ட் ஆனால் டேஸ்ட் ஒரு சதத்துக்கு உதவாது” என்று ஒரே போடாய் போட்டு விட்டார்🤣.