Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. @நன்னிச் சோழன் நேச நாடுகள் கூட்டு ஏலவே உருவாகி விட்டன, அச்சு நாடுகளின் கூட்டு இப்போதான் மெல்ல மெல்ல உருவாகிறது.
  2. இது காஸாவின் மத்திய பகுதி இல்லையாம். காஸா-இஸ்ரேல் வடக்கு எல்லையில் இருந்து 3 கி.மி காஸாவுக்கு உள்ளே இருக்கும் ஒரு கடற்கரை பகுதியாம்.
  3. அப்படிப்பார்த்தால் உலகில் பல நாடுகள் பயங்கரவாதிகள்தானே (சங்கிலியன் உட்பட). நவீன துருக்கி திறம் எண்டு இல்லாவிடினும் இஸ்லாமிய நாடுகளில் மிக முற்போக்கான நாடு. எர்டஹோன் கொஞ்சம் மதவாதமாக மாற்றி வைத்துள்ளார். காஸாவின் மத்தியில் இஸ்ரேலிய கொடியாம்.
  4. இது நழுவல் போக்கு அல்ல. நீங்கள் மேலே சொல்லி இருப்பது ஒரு ஊகம். மேற்கு நாடுகள், ரஸ்யா, இந்தியா மேற்கொள்ளும் வெளிவிவகார தகிடுதத்தங்கள் மிக அரிதாகவே உள்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஈராக் ஆக்கிரமிப்பு, வியட்நாம் போல அரிதாக சிலதை தவிர்த்து ஏனையவற்றை இந்த நாட்டின் மக்கள் - மெளனம் சம்மதம் என்பதாக அங்கீகரித்தே உள்ளார்கள். இப்போ காஸாவை எடுங்கள், யூகேயில் உள்ள அத்தனை கட்சிகளும், ஏறக்குறைய ரிசியின் நிலைப்பாட்டில்தான் உள்ளன. கான், யூசூப் போல சிலர் தசை ஆடினாலும், அரசியல் கட்சிகள் மத்தியில் அணுகுமுறையில் பெரிய மாற்றம் இல்லை. மக்கள் நிலைப்பாடு கூட ரிசியின் நிலைப்பாட்டை அணுகியே. இல்லாமல் மக்கள் மத்தியில் ஒரு நிலைப்பாட்டு மாற்றம் வந்திருப்பின், ஏதாவது ஒரு கட்சி தன் நிலைப்பாட்டை அதை நோக்கி நகர்த்தி இருக்கும். இதை நான் - மக்கள் பெரும்பாலான சமயங்களில் உள்நாட்டு விவகாரங்களையே கவனத்தில் எடுக்கிறார்கள், வியட்நாம், ஈராக் போல ஒரு யுத்தத்தில் நாட்டை கொண்டு போய் மாட்டாதவரை - அவர்களின் தேர்தல் தீர்மானத்தில் வெளிவிவகாரம் பெரிய பாதிப்பை தருவதில்லை என்கிறேன். இதை நான் உலக அரசியல் சுய நலன் சார்ந்தது, அதில் யாரும் நியாயமாக நடக்க முடியாது என்பதை உணர்ந்த வாக்காளரின் சிந்தனை தெளிவினால் அவர்கள் எடுக்கும் முடிவு என நம்புகிறேன் (யூகே தேர்தலில் நான் வாக்களிக்கும் போது வெளிவிவகாரத்தை கணக்கில் எடுப்பதே இல்லை) . நீங்களோ இல்லை, பணபலமும், அரசியல் மிரட்டலும், கொலையும் வாக்காளரை இப்படி நடக்க வைக்கிறன என்கிறீர்கள். இவை இரெண்டுமே உண்மைதான். உதாரணமாக பிரெக்சிற்றை ஒப்பேற்ற, அந்த வாக்கெடுப்பில் வெல்ல, ஒரு எம்பியை கொன்றார்கள், துருக்கி இணைய போகிறது என அரசியல் பயம் காட்டினார்கள், தேர்தல் விதிமுறையை மீறி பணத்தை சமூகதளங்களில் செலவழித்தார்கள். ஆகவேதான் - வெளிவிவகாரங்களில் மக்கள் அதிகம் தலையிடாமல் அதை அரசுகளை நடத்த விடுவதற்க்கும் நீங்கள் சொல்வது, அல்லது நான் சொல்வது இரெண்டுமே காரணமாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். நம் இருவரின் வியாக்கியானமும் ஊகத்தின் பால்பட்டதே. இரண்டையும் நிறுவ முடியாது.
  5. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ————- இன்னொரு விமானம் தாங்கி தாக்குதல் அணியான ட்வைட் ஐசின்கோவர் ஜிப்ரால்டர் நீரிணைய தாண்டி மத்திய தரை கடலினுள் உள்ளிட்டது.
  6. இப்படி போராடுபவர்களும் கூட தத்தம் சுய நலத்துடனே போராடுவர். ஈராக் சம்பந்தமாக போராடியோர், இலங்கைக்கு போராடவில்லை, இலங்கைக்கு போராடியோர், காஸாவிற்கு போராடவில்லை. மிக சொற்பமானவர்களே போராடுவர். மிகுதி தம்பாட்டை பார்க்கும். ஏன் என்றால் இதுதான் நியதி என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரியும். இல்லை என்றால் மேற்கில் எப்போதோ இஸ்ரேலை, இலங்கையை ஆதரிக்காத கட்சிகள் பதவிக்கு வந்திருக்கும்.
  7. நீங்கள் மேற்கை பற்றி அதீத எதிர்பார்ப்போடு உள்ளீர்கள். தமது இராணுவத்தின் அழிப்பை குறைக்க, இரெண்டு ஜப்பானிய நகரங்களை தவிடு பொடியாக்கியவர்கள் மேற்கு. இதை விட ஒரு யுத்த குற்றம் உலகில் இருக்க முடியுமா? இன்று வரை அதுக்கு ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. சர்வதேச ஒழுங்கில், நீதி, நியாயம், மனித உரிமை, ஜனநாயக விழுமியம், லொட்டு, லொசுக்கு எல்லாம் இரெண்டாம் பட்சம். இதே போலத்தான் இனங்களின் சுய நிர்ணய உரிமையும். பங்களாதேசில் சுய நிர்ணயத்தை ஆதரித்த இந்தியா, கஸ்மீரிலும், இலங்கையிலும் அதை முடக்க்கியது. அதே போலத்தான் ரஸ்யாவும். அபகாசியா, தென் ஒசெசியாவின் சுய நிர்ணயத்தை அங்கீகரிக்கும், ஆனால் எம்மை அங்கீகரிக்காது. நாடுகள் இந்த தத்துவங்களை தம் சுய நலனுக்கு ஏற்ப கையில் எடுக்கும், கைவிடும். இந்த கள யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் ஈழத்தமிழர் ஒரு அடி கூட முன் நகர முடியாது. # வல்லான் வகுப்பதே (சர்வதேச) சட்டம், நடைமுறை.
  8. ஸ்டார் லிங்கை இவ்வாறு பயன்படுத்துவதை முடிந்தளவு எம்மிடம் உள்ள வளங்களை கொண்டு தடுப்போம் என்கிறது இஸ்ரேல்.
  9. ஹமாஸ் பயங்கரவாதிகள் அல்லர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர். இன்றைய பாலஸ்தீன ஆதரவு பேரணியில் துருக்கிய ஜனாதிபதி பேச்சு.
  10. 👆🏼திட்டமிட்டு இஸ்ரேலிய படைகள் மீது, மருத்துவ நிலைய பெயர்பலகை அருகே நின்று கவிண் மூலம் கல்லடித்து, அதை பத்திரிகையாளரை கொண்டு படம் பிடித்து, ஏலவே தயாராக உள்ள மருத்துவ உதவியாளர்களிடம் சிகிச்சை எடுக்கும் பலஸ்தீன இளைஞன் என்கிறது ஒரு இஸ்ரேல் சார்ப்பு கணக்கு.
  11. காஸாவிற்கான இண்டெர்நெட்டை இஸ்ரேல் முற்றாக துண்டித்த நிலையில், ஐ நா உடபட்ட உதவி அமைபுக்களிற்கு ஸ்டார்லிங் சட்டிலைட் மூலம் இண்டெர்நேட் வழங்க ஈலோன் மஸ்க் முடிவு.
  12. @நன்னிச் சோழன் 👇. இதுதான் லெபனான் டிரெயினிங்கில் சொல்லி கொடுத்துள்ளார்கள் போல இருக்கிறது. ஈபி, ஈரோஸ் ஏன் ஒரு தபால் பெட்டியை கூட ஒழுங்காக தகர்கவில்லை என்பது இப்போ விளங்குது🤣.
  13. க்ரெட்டு. மேலே குறை “டோரா, பைபிள்” யூதரின் நூல்கள் என எழுதியுள்ளார். இதை நானும் யோசித்தேன். ஆனால் டோராவுக்கும் பைபிளுக்கும் இடையில் ஒரு காற்புள்ளியை அவர் இட்டதால், டோராவை மட்டுமே யூதரின் புனித நூலாக அவர் கூறியுள்ளார் என கருதினேன். கிறிஸ்தவம் பற்றிய உங்கள் கூற்று மிக சரியே. உண்மையில் கிறிஸ்தவத்தை நிறுவியர் கிறீஸ்து அல்ல - போல்தான். சிலர் கிறிஸ்தவத்தை, போலினிசம் எனவும் கூறுவர்.
  14. மேற்கு கரை நோக்கி இஸ்ரேல் படை நகர்வாம். சண்டையில் செத்ததாக நான் அறியவில்லை. ஆனால் போனவர்களில் ஓரிருவர் அங்கே இறந்தார்கள் எனவும் வேறு சிலர் அப்படியே ஐரோப்பாவுக்கு கிளம்பினார்கள் எனவும் கேள்விப்பட்டேன்.
  15. இவர்கள் பலஸ்தீன் போனார்களா என்பதே சந்தேகம். இவர்கள் லெபனானில்தான் இறக்கப்பட்டர்கள் எனவும் அங்கே முஸ்லிம்களுடன் இருந்து, கிறிஸ்தவ குழுக்களுக்கு எதிரான போரில் அடிப்படை பயிற்ச்சியை எடுத்தார்கள் என்பதே நான் அறிந்தது. இவர்கள் இலங்கை வந்து கொக்கு கூட சுடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் சக தமிழர்களை சுட்டார்கள்.
  16. ஒரு மணத்தியாலம் முன்னதாக இஸ்ரேல் நோக்கி கடும் ராக்கெட் தாக்குதலாம். அதில் சில ராக்கெட்டுகளை இஸ்ரேலின் அயர்ன் டோம் தடுக்க முடியவில்லையாம்.
  17. ஹமாஸ் பிரதிநிதிகள் மொஸ்கோ வந்துள்ளனர். ரஸ்ய துணை வெளிவிவகார அமைச்சருடன் பேசுவார்களாம். ஈரான் குழு ஒன்றும் மொஸ்கோவில் நிற்கிறதாம்.
  18. இந்த சோடா புட்டி கண்ணாடிய மாட்டி கொண்டு, சிவப்பு அரசியல் பேசிய ஈபி, ஈரோஸ் வகையறாக்கள்தான் முதன் முதலில் ஈழத்தமிழர் நம் நட்பு சக்தி இல்லை என்ற கருத்தை மேற்கில் ஆழ ஊண்ட காரணமானவர்கள். அது மட்டும் இல்லாமல் மேற்குக்கு உவப்பல்லாதா குழுக்களோடு தொடர்புகளை வைத்து, சோசலிச தனி நாட்டை அமைப்போம் என அறை கூவி, முதன் முதலில் இலங்கையின் பால் மேற்கை திருப்பிய புண்ணியவான்களும் இவர்களே. முதல் கோணல் முற்றும் கோணல் என்பதாக கடைசி வரை தமிழர் போராட்டதின் மீது மேற்கு கொண்ட இந்த சந்தேகம் அகலவே இல்லை.
  19. ஆம் ஆராய்ச்சி பட்டம் சினிமா சம்பந்த பட்ட ஆராய்சியில்தான் எடுத்துள்ளார். தமிழ், ஏனைய சினிமாக்களின் பண்பாட்டியல் வளர்ச்சி என ஆராய்ச்சி தலைப்பை மொழிபெயர்க்கலாம் என நினைக்கிறேன். ஏனை வெளியீடுகளும் அதிகம் அப்படித்தான், சினிமா சார்ந்தே. அந்திரபோலொஜி எனப்படும் மானிடவியலில், மனித குமுகாயங்களின் பண்பாட்டு வளர்ச்சி பற்றிய துறையில் சினிமாவை சிறப்பு தேர்ச்சியாக கை கொண்டுள்ளார். இந்த துறையில் இவர் வல்லுனராக இருக்க கூடும் என்றே நினைக்கிறேன். இஸ்ரேல்-பலஸ்தீன் விடயத்தில் கூட, விடய அறிவு இருக்கிறது, இல்லை என்பதை தாண்டி, இவர் கட்டுரைகள் ஒரு செயற்பாட்டாளர் எழுதுவதை போல, தரவுகளை cherry pick பணனுவதும், தனக்கு உகந்ததை மட்டும் எழுதுவதும், சில இடங்களில் பொய்யாகவே இட்டு கட்டுவதும் என நகர்கிறது. முதலாவது கட்டுரையிலேயே இதை சுட்டினேன். இந்த கட்டுரை அதை விட மோசம். சங்கி எதிர்பாளர், திராவிட சிந்தாந்த பிடிப்புள்ளவர் என இருந்த நன்மதிப்பை, இரு கட்டுரைகள் மூலம் சுக்கலாக்கி விட்டார். எந்த எல்லைக்கும் போய் இந்துதுவாவை எதிர்பவர்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் இப்படி பொய் சொல்லி, அவர்கள் ஆதரிப்பவர் எல்லாம் எமது எதிரி என்ற நிலைப்பாடு அறிவார்ந்த நிலை அல்ல. ஒரு academic இற்கு நம்பகதன்மை கன்னிமை மாதிரி. போனால் போனதுதான்.
  20. இதே போல் இங்கே private eye என ஒரு சஞ்சிகை வரும். இப்படி தமிழில் ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.
  21. பலஸ்தீன மனங்களை தலைமுறை தலைமுறையாக இறுகிப் போகும்படி ஆக்காதீர்கள். இஸ்ரேலின் அணுகுமுறையை மிதமாக கண்டிக்கிறார் ஒபாமா. https://www.breitbart.com/middle-east/2023/10/23/obama-criticizes-israel-over-gaza-dont-harden-palestinian-attitudes-for-generations/ (இது ஒரு மோசமான அதி தீவிர வலதுசாரி தளம் என்பதை கருத்தில் கொள்க).
  22. இவர் மீள தொழிலுக்கு திரும்பி கடமையை செய்ய தொடங்கியுள்ளார். நினைத்துபார்க்க முடியாத சோகம், நெஞ்சுரம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.