Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அண்ணாவின் மிக சிறப்பான மாநில சுயாட்சி தத்துவம் பற்றிய ஆங்கில பேச்சுகள் ராஜ்ய சபா எம்பியாக இருக்கும் போதே நிகழ்தப்பட்டன. ப. சி, மற்றும் முரசொலி மாறன் போன்றோரும் ராஜ்யசாபா எம்பிகளாக இருந்துகொண்டேன் அரசியலில் முக்கிய வகிபாகத்தை வகித்தனர். அன்புமணி ஒன்றிய சுகாதாரதுறை அமைசாராக பல எதிர்புகளை தாண்டி சீர்திருத்தங்களை அமல் செய்தபோதும் ராஜசபா எம்பிதான் என நினைக்கிறேன். ஆனால் அநேகர் இதை ஒரு கவுரவபதவிபோலவே நடத்துகிறனர்.
  2. பிகு மனவருத்தம் ஆனால் இதை பெருசுபடுத்தபோவதில்லை என வைகோ கூறியுள்ளாராம்.
  3. திமுக மகனுக்கு எம்பி சீட் கொடுத்து வென்றும் விட்டார். கட்சியில் பழைய பெரும்புள்ளிகள் எல்லோரும் போய் சேர்ந்து விட்டார்கள், அல்லது போய்விட்டார்கள். இருக்கும் ஒரே ஆள் மல்லை சத்யா - அவருடன் துரை பகிரங்கமாக மோதி வைகோ இருவரையும் சமாதானம் செய்தார். 82 வயதாகிறது - பழைய கம்பீரம் அடியோடு போய்விட்டது. அடிக்கடி கோபம் வருகிறது. வார்த்தை தவறுகிறது. ஓய்வு கட்டாயம். வைகோவுக்கு பின் கட்சியை துரை மீண்டும் திமுகவில் சேர்க்கலாம். லெட்டர்பாட் செலவாவது மிஞ்சும். இப்போதே செய்யாலம் - ஆனால் வைகோ பிரிந்த நேரம் உயிர்நீர்த்தோர் நினைவு அதை தடுக்கும். வைகோ இறந்தபின் அப்படி ஒரு நெருடலும் இராது. திமுக திட்டமிட்டு காயடித்த ஒரு அருமையான ஆளுமை வைகோ. அவரின் அரசியல் தகிடுதத்தங்களும் வீழ்ச்சிக்கு துணை போயின. அரசியலில் தரவுகளை விரல் நுனியில் வைத்து கொண்டு, அரங்கத்தை கட்டிபோடும் பேச்சாற்றல் கொண்டிருப்பது மட்டும் தலைவனாக வெல்ல போதுமானதாக இராது, துண்டு சீட்டை வைத்து பேசும் ஆட்களிடம் கூட தோற்று போக வேண்டி வரும் என்பதன் வாழும் உதாரணம் வைகோ. அமெரிக்காவில் அல் கோரை the President we never had என்பார்கள். அதேபோல் தமிழ் நாட்டில் வைகோ the CM they never had. ஈழத்தமிழரின் நன்றி வைகோவுக்கு எப்போதும் உண்டு.
  4. புகார் கொடுத்தவர் சு.சா. திமுக ஆட்சியில் இருக்கும் போது வழக்கு போடப்பட்டு, பின் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அரசியல்தலையீட்டை தவிர்க்க, திமுக போட்ட மனுவின் அடிப்படையில் பங்களூருக்கு மாற்றப்பட்டது வழக்கின் நீதி விசாரணை (trial). ஆனால் நான் சொல்ல வந்தது அது அல்ல. நீதி விசாரணை ஜெ வை குற்றம் தீத்தது. கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெவை விடுதலை செய்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை, தண்டனையை உறுதி செய்தது. நான் சொல்வது, எப்படி நாக்பூர் ஆசியினால் சீமான் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் போய் தப்பிக்க முடிந்ததோ, அப்படி ஜெயாலும் முடிந்திருக்கும், நாக்பூரின் மிரட்டலுக்கு அடி பணிந்திருந்தால்.
  5. ஜெயாலிதா கட்சி வைத்திருந்தவர்தானே தம்பி? லேடியா, மோடியா எண்டு கேட்டிருக்காவிட்டால் பார்பன அக்ரகாராத்து பெண்ணை பார்பாஹன அக்ரகஹாராவுக்கு அனுப்பி இருப்பார்களா?
  6. பிகு அந்த சார் ஆளுனர் ரவி என்றும்… அவரை காப்பாற்ற திமுக, பிஜேபி, நீதிதுறை கூட்டு நாடகம் ஆடுவதாகவும் கூட சொல்லப்படுகிறது. ஆளுனரின் வேந்தர் நியமன பறிப்பு, ரவியின் அண்மைய மெளனம் யோசிக்க வைக்கிறது.
  7. ஆனால் வாயை வாடகைக்கு விடுபவர் மேல் மட்டும் இன்னும் கஞ்சா, புலிப்பல், NIA எதுவும் பாயவில்லை. ஏன்? ஏன்னா வாயை நாக்பூருக்கு வாடகைக்கு விட்டிருக்கு.
  8. இதுவும் அவர்களிடமும் அபரிமிதமாகவே உள்ளது ஐலண்ட். எஸ் கிளாசில், இந்தியாவில், 1998 இல் டிரைவர் வைத்து ஓடிய பால் தினகரன் செத்த பின்பு, அவரது மகன் செத்த வீடு செய்ய காசில்லை என கூறியதும் அள்ளி அள்ளி கொடுத்தார்கள். நைஜீரியாவில் எல்லாம் பெரிய எடுப்பில் நடக்கிறது. இவை ஏன், யாழ்ப்பாணத்தில் இன்றுவரை ஒரு கன்னியர் மடத்தில் கிறீஸ்தவர் அல்லாத பிள்ளை தலைமை ஹெட் பிரிவெக்ட் ஆகவில்லை என எண்ணுகிறேன். சிஸ்டர்மாரும், பாடசாலையில் அதிகம் இருக்கும் பெற்றாரும், முன்னாள் மாணவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என அடம்பிடிப்பார்கள்.
  9. உனக்கென்ன ஆண்டவா நீ பேசுவ, ராஜ்ஜசபா வேற போக போறே… ஆனால் சிம்பு பட கலக்சன்ல மண்ணவாரி வுட்டியே ஆண்டவா🤣
  10. உங்களுக்கு ராகு கேது மாற்றம் சரியில்லை போல கிடக்கு. #புரிஞ்சவன் பிஸ்தா எடிட் பண்றதுகுள்ள பதிலும் போட்டாச்சா🤣
  11. சூப்பர்…. இப்போ கொஞ்சம் மூளையால் யோசிப்போமா ? (இந்த கருத்து பாஞ் ஐயாவுக்கு அல்ல, வீடியோவை மட்டுமே மேற்கோள் காட்டுகிறேன்). இணுவில் கோவிலில் மச்சம் ஆக்குகிறார்கள். ஆகவே இந்த கோவிலில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் அல்லது முழு இணுவிலிலும் இனி யாரும் சைவ சாப்பாட்டு கடை போடப்படாது என கூறினால் எப்படி இருக்கும்🤣. இதை ஒத்த மொக்குதனம்தான் வேலனும், மொக்கராசுகளும் நல்லூரில் கேட்பதும். மத அனுஸ்டானம் என்பதை அமல் செய்யும் உரிமை கோவில் எல்லைக்குள் மட்டுமே. கோவில் சுவர் அல்லது வெளிவீதிக்கு அப்பால் - அது அனைவரும் வாழும் பொதுவான நாடு. இந்த அந்நியோனயமும், சகிப்புத்தன்மையும் - யாருக்கோ கண்ணை குத்துகிறது. ஆகவேதான் வேலன், சச்சி, உமாகரன் இராசைய்யா தரவழி ஓசி சோறுகளை இறக்கி விட்டுள்ளார்கள்.
  12. மன்னிக்கவும். வெள்ளை பாவாடை கட்டி கொண்டு, இறைவனை நாடி வரும் சின்னம் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்யும் பாதிரிகளை கடைசி வரை ஒரு அமைப்பாக பாதுகாத்தவர்கள் யார் ? பல பத்து வருடங்களின் பின் போப்பாண்டவர் பிரான்சிஸ் மன்னிப்புகேட்டார். பாவடை எல்லாம் ஒண்டுதான், வெள்ளையோ, காவியோ. மலேசியாவிலும். அப்போ ஒரு கண்டி மலே முஸ்லிம், கைதடியில் உங்கள் பக்கத்து வீட்டில் வந்து குடியேறினால் அவர் உங்கள் ஊரவரா? இல்லை ஆனால் ஒரே நாடுதானே. வந்தான் வரத்தான் என்றால் - ஒரு இடத்தில் பரம்பரையாக இன்றி, அண்மையில் குடி வந்தவர்கள். நாடு அல்ல, இடம் அதாவது ஊர்.
  13. அவர்களும் சேர்ச்சை தாண்டி தலையிட முடிந்தால், வாய்ப்பு இருப்பின் கலையிடுவார்காள்…அண்மையில் கூட சில தனிமனித சுதந்திர விடயங்களில் இலங்கையில் பிக்குகளும், மெளலவிகளும், மல்கம் ரஞ்சித்தும் ஒரே குரலாக ஒலித்ததை கண்டோம். மதம் என்பதே by definition தனிமனித சுதந்திரத்துக்கு எதிரான ஒரு பிற்போக்குவாத கட்டமைப்பே. ஆகவேதான் அவரவர் மதங்களின் பிற்போக்கை அவரவர் எதிர்ப்பதும், அதற்கு ஏனையோர் துணை நிற்பதும் அவசியமாகிறது. குறிப்பாக இல்லாத ஒன்றை உருவாக்கி, அதை ஊர் வழமை என காதில் பூவைக்க முனைந்தால் - அந்த பின்னோக்கி செல்லும் முயற்சியை, அல்லது தமிழ் சங்கி மயப்படுத்தலை, அல்லது தமிழ் தாலிபான்களின் செய்கையை எதிர்க்க வேண்டியது நாகரீகம் அடைந்து விட்ட ஒவ்வொரு தமிழனதும் கடமை.
  14. கூட்டி கழித்து எல்லாம் பார்க்கத்தேவையில்லை - நேரடியாக பார்த்தாலே உலக வரலாற்றில் மதத்தின் பெயரால் நடந்த மனிதகுல விரோத நடவடிக்கைகளில் பாரிய பங்கு வத்திகானுக்கும் உள்ளது. எமது ஊரில் நல்லூர் ஏன் அதன் பூர்வீக அமைவிடத்தில் அல்லாமல் புதிய இடத்தில் உள்ளது, கேதீஸ்வரம், கோணேஸ்வரம் என்ன ஆகின. சந்திரசேகர ஈச்சரம் எங்கே? மாத்தறையில் இருந்த விஷ்ணுகோவில் எங்கே? தென்னமரிக்க சுதேச மொழி, கலாச்சாரம், இனங்கள் எங்கே? இப்படி பலதில் இதை காணலாம். இதுகூட கொஞ்சம்தான், இன்னும் சிலுவையுத்தம், ஐரோப்பாவில் பேகன் குடிகளின் அழிப்பு என பலது உள்ளது. இது உலகபோர்களில் ஜேமனிக்கு கண்டும் காணாத ஆதரவு வரை தொடர்ந்தது. ஆனால் இன்றைய உலகில் வத்திகான் காலமாற்றப்படி அடக்கியே வாசிக்கிறது. ஆனால் தாலிபான்ஸ், சங்கிகள் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னுக்கே நிற்கிறார்கள். நிற்க, தாலிபான்ஸ், வத்திகான்ஸ் அப்படி என்பதால்….நாமும் தமிழ் தாலிபான்கள் போல் நடக்க வேண்டுமா?
  15. நான் நல்லூரில் இருக்கும் தீவக மக்கள் அங்கே அரசியல் செய்ய கூடாது என சொல்லி இருந்தால் - நீங்கள் சொல்வது சரி. ஆனால் தமிழகத்தை பற்றி 50 வருடம் முன் குடி பெயர்ந்த வட இந்தியருக்கோ, தெலுங்கருக்கோ அதிகம் தெரியாது இருக்க வாய்புண்டா என கேட்பின் என்பதில் உண்டு என்பதே. இதை முன்பே பியூஸ் மானுஷ் விடயத்தில், பாண்டே விடயத்தில் கூறி உள்ளேன். இருவரும் அண்மையை குடியேறிகள். ஆகவே அவர்களுக்கு மண்சார்ந்த புரிதல் குறைவு என. அடிக்கடி மொழிவழி மாநில பிரிப்புக்கு முன், பின் என நான் வகுப்பதை நீங்கள் முன்னர் அவதானித்திருக்க கூடும். இதே காரணம் தான். ஆனால் இதே காரணத்தை வைத்து தமிழில் பேசி, 600 வருடமாக தமிழ் நாட்டில் வாழ்வோர் மீது நாம் பயன்படுத்த கூடாது. ஏன் என்றால் அவர்கள் வந்தான் வரத்தான் அல்ல. தமிழர்கள். இன்னும் 100 வருடத்தில் தீவகத்தோடு தொடர்பே அற்று போய், தம்மை நல்லூரான்களாக அவர்கள் உணரும் போது உங்கள் உறவினரின் சந்ததியும் வந்தான் வரத்தானாக இருக்காது. அவர்களுக்கு அப்போ நல்லூரின் வழமை அல்லது வழமை என ஏற்கபட்டவை பற்றி தெளிவு இருக்கும்.
  16. அரசியலில் தோற்றப்பாடு முக்கியம். நீங்கள் சொல்வது போல் நாட்டின் முதன் மகனுக்கு இப்படி நிகழ்வது என்ன இருந்தாலும் அவரின் இமேஜை பாதிக்கும்.
  17. அதுதான் அவர்களை தாலிபான்ஸ் என்றும் … அதே மடைமையை நாமும் பின் பற்ற வேண்டும் எனும் தமிழர்களை தமிழ் தாலிபான்ஸ் என்றும் அழைக்கிறோம். பொய்களை உருட்டியது வேலைக்கு ஆகவில்லை என்பதால் - அர்த்தமே இல்லாமல் சீமானை இழுத்து இரெண்டு வரியை சொல்லி விட்டு …. உண்மையின் உக்கிரம் தாங்காமல் டொட் வைத்துள்ளீர்கள். இப்போதும் சொல்கிறேன் … நல்லூருக்கு தீவக பகுதியில் இருந்து 50 வருடத்தில் வாழ வந்தவர்கள் வந்தான் வரத்தான்களே…. எப்படி நான் இலண்டனில் ஒரு வந்தான்வரத்தானோ அப்படி… ஆகவே இவர்களுக்கு நல்லூரின் நடைமுறை தெரியாமல் இருந்தால் அது ஆச்சரியமான விடயம் அல்ல.
  18. இந்தியா புதிய வீரர்களோடு இறங்குகிறது. கேப்டன் உட்பட அனைவருக்கும் தம்மை டீமில் நிலை நிறுத்த சாதித்து காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. இது இந்தியாவுக்கு பாரிய அனுகூலமாக இருக்கும். அதேபோல் இந்த வசந்த காலம் வரலாற்றில் இல்லாத வரட்சியான வசந்த காலம். இதுவும் இந்திய ஸ்பின்னர்களுக்கு வசதியாக இருக்கும். இங்கிலாந்தில் சொகைப், லீ இருவரும் இந்த அனுகூலத்தை எந்தளவு சாதமகா பயன்படுத்துவார்கள் என்பதும் சந்தேகமே. இங்கிலாந்து டங் , க்ரோலி போன்ற கவுண்டி தரத்துக்கு மேல் எழும்பி சர்வதேச தரத்தில் ஆட முடியாத இருவரை உள்வாங்கி உள்ளனர். அண்மைய சிம்பாப்வே போட்டியை கண்டு களித்தேன். பென் ஸ்டோக்ஸ் அற்புதமாக பந்து வீசினார். 1981 Botham Ashes, 2005 Flintoff Ashes போல இந்த தொடரில் ஸ்டோக்ஸ் தனி ஆளாக பிரகாசிப்பார் என நினைக்கிறேன். சிம்பாவ்வேயில் பென்னட் எனும் ஒரு 21 வயது பையன் விளையாடுகிறார். அருமையான மட்டை அடி. ஆனால் பவுண்சருக்கு தடுமாறுவது போல படுகிறது.
  19. பள்ளிகூடத்துக்கு சுற்று மதில் கட்டி உள்ளார்கள். நாலு கால் பிராணிகளுக்கு தாக சாந்தி குட்டைகள் கட்டி உள்ளார்கள். அவர்கள் இடம் பெயர்வதை பற்றி எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. அதே போல் ஏனைய ஊர்கள் போலத்தான் அவர்களும் கோயில், அலங்கார வளளவு என வேலை திட்டங்களை செய்கிறார்கள். இவை எதையும் நான் சொல்லவில்லை. நான் சொன்னது நல்லூரும், தீவகமும் அயல் அல்ல. ஆகவே புதிதாக வருபவர்களுக்கு அதாவது வந்தான் வரத்தானுகளுக்கு நல்லூரின் வழமை தெரியாது இருப்பது ஆச்சரியமல்ல. குட்டி 16 அடி பாய்ந்து அப்பாவின் பெயரை நிலைநாட்ட வேண்டும். அப்படி செய்தால் கிடா விருந்தை ஒரு பிடி பிடித்து விட்டு… இவன் தந்தை என்நோற்றான் கொல் என்று சொல்லுவோம்🤣.
  20. 100% சரியான கருத்து. அதாவது மத நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கை. ஆகவே அது அந்த நம்பிக்கைக்குரியவர்களை மட்டும்தான், அதன் எல்லைக்குள் மட்டும்தான் கட்டுப்படுத்த வேண்டும். எனவே எந்த மதத்தின் வணக்க தலத்தின் எல்லைக்கு அப்பால் நடப்பவை எதிலும் எந்த மதமும் தலையிட கூடாது. கேம் ஓவர்.
  21. நீங்க வேற, இதை அறிந்ததில் இருந்து எனக்கு கந்தையா அண்ணை மேல் உள்ள மதிப்பு பலமடங்கு எகிறி உள்ளது. மேளகாரருக்கே இந்த உபசரிப்பு எண்டால் நாங்கள் விருந்தினராக போனால் தடல்புடல் பண்ணி விடுவார் என நினைக்கவே வாயூறுது🤣. உண்மையிலேயே கிடுக்கு பிடி கேள்வி. இரெண்டு பேரும் எங்களுக்கு விருந்து வையுங்கோ, சாப்பிட்டு பார்த்து ஆர் பெரிய கிடா வெட்டி எண்டு நாங்கள் சொல்லுறம்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.