Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. ஓம்… நானும் யோசிச்சனான். எத்தனை வீரர் 5 wickets எடுப்பார்கள், முதல் இனிங்சை ஏதாவது அணி டிக்லேர் பண்ணுமா? இப்படியும் கேள்விகளை யோசித்தேன். ஆனால் 5 நாள் போட்டிக்கு 8 கேள்வி காணும் என விட்டு விட்டேன்🤣.
  2. போட்டியில் கலந்து கொண்ட கிருபன் ஜி, புலவர், நுணா, சுவி, ஈழப்பிரியன் அண்ணாக்களுக்கு வாழ்த்து. வாங்கோ…வாங்கோ… செம்பா…எகிறி குதிச்சு ஓட வேண்டும்😎. பையன் தட்டி தூக்குவார் எண்டுறியள்? முதல் ஆளாக வந்ததில் ஒரு அனுகூலம் இருக்கு - ஆனால் கடைசி நேரத்தில் காயம் ஏதும் ஏற்பட்டால் - அணி தெரிவு மாறினால் அதுவே பிரதிகூலமாகவும் போக கூடும்.
  3. ஓம்… மேலே பையன் சொல்லி இருப்பது போல் அதிஸ்டம் மட்டும் அல்ல, மாறிகளையும் (variables) கணிக்க கஸ்டமான விளையாட்டு அல்லவா டெஸ்ட்? ஆகவே நீங்கள் சொன்ன உதாரணத்தின் படி, வெல்லும் அணிக்கு அன்றி தோற்கும் அணியை தேர்வு செய்தோருக்கே புள்ளி போகும். போட்டியில் இதுவரை கலந்து கொண்ட, வீரப்பையன், ஏராளனுக்கு வாழ்த்து. ஈழபிரியன் அண்ணனுக்கு தகவல்களை கொடுத்தனைக்கு நன்றியும்🙏.
  4. Ecstasy என்ற போதைபொருளினைதான் (MDMA என்றும் சொல்வார்கள்) இப்படி நேரடியாக மொழிபெயர்த்துள்ளார்கள் 🤣. அதையும் எக்ஸ்டசி என்றே எழுதியிருக்கலாம். (ecstasy என்ற ஆங்கில சொல்லின் அர்த்தம் பரவசம்). போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களை அள்ளுங்கள். பிகு பரிசில் என்ன? ஆறுதல் மட்டுமே🤣
  5. இதென்ன இந்த ஐ பி எல்லை இன்னும் வச்சு ஜவ்வு மாரி இழுத்துகொண்டு நிக்கிறியள்🤣. அங்கால ஒரு இரெண்டு நிமிச போட்டி தொடங்கீட்டு…. ஓடுங்கோ…ஓடுங்கோ🤣
  6. வீரப்பையன், தமிழ் சிறி அண்ணா, ஈழப்பிரியன் அண்ணா, போட்டியை தண்டோரா போட்டு அறிவிக்கும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன் 🙏. பிகு இப்போ என்னால் @ போட முடிவதில்லை.
  7. ஒரு டெஸ்ட் கிண்ணத்துக்கான கணிப்பு போட்டி, வெறும் 8 கேள்விகளுடன் 5 ஓவர் போட்டி போல அமைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான கேள்விகளை வெறும் 2 நிமிடத்தில் பதிந்து விடலாம். மேகி நூடில்ஸ் துரித உணவு போல, இது துரித கணிப்பு போட்டி. வெறும் இரெண்டே நிமிடத்தில் வெற்றியை தட்டிச்செல்லுங்கள். போட்டி முடிவு - ஜூன் மாதம் 10ம் திகதி ஐக்கியராச்சிய நேரம் 23:59. பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம். யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள் நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)
  8. யாழ்கள கணிப்பு போட்டி… இன்னும் சில நொடிகளில்… ஆவலோடு காத்திருங்கள்!!!
  9. அண்மையில் பிரிதானியாவில் பீட்டர் சலவன் எனும் ஒருவர் 38 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். இப்போ 70 வயதை நெருங்கி உள்ள இவர், அவரின் இருபதுகளில் ஒரு 19 வயது பென்ணை, வன்புணர்ந்து, சித்திரவதை செய்து கொலைசெய்தார் என சிறைக்கு அனுப்பப்பட்டார். 38 வருடம் கடந்து டின் என் ஏ சாட்சி இதை செய்தது இன்னொருவர் என நிறுவியாதால் வெளியே வந்துள்ளார். நினைத்துப்பாருங்கள் இது எந்த பெரிய அநியாயம்? 38 வாழ்வின் முக்கியமான வருடங்களை சிறையில் அநியாயமாக வீணடித்துள்ளார். ஆனால்….. இவருக்கு மரண தண்டனை கொடுத்திருந்தால்? இப்போ அவரை மீள கொண்டுவந்திருக்கவா முடியும்? அல்லது ஆண்மை பறிப்பு போல மீட்க முடியாத தண்டனையை கொடுத்திருந்தால்? உலகின் முதல்தர குற்றவியல் நீதி அமைப்பு உள்ள இங்கிலாந்திலேயே இப்படியான தவறுகள் நடக்கும் போது, இந்தியா இலங்கையில் ? ஆகவேதான் இப்படியான தண்டனைகளை பெரும்பாலும் கொடுப்பதில்லை. இன்னும் பல காரணங்கள் உள்ளன. https://uk.news.yahoo.com/peter-sullivan-victim-longest-running-141720495.html?guccounter=1&guce_referrer=aHR0cHM6Ly93d3cuZ29vZ2xlLmNvbS8&guce_referrer_sig=AQAAAMrP_qR2PangmUiNQwTTlrAfP9x-Twx44jpSfe4VwxyNorqNopkznGLj8N8pFWH8ZtNqL5PCM2ovuQBKQHDhp0odXPju-dEuYCQid6StxlOb3oyzYi0cDf7g3ZOTqbn7V7o-YYeH6dpX9PRyjSYgi_RXV14sHoKAob5eRbjz_d1-
  10. அநேகமா நாலாவது ஐடி மாறும் நிலை விரைவில் உருவாகும் என நினைக்கிறேன்🤣.
  11. Slow release medicine என கேள்விபட்டிருப்பீர்கள். அதைபோல்ல ஸ்லோ ரிலீஸ் முறையில் உண்மையை தம் நாட்டு மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பருக்கும் இந்திய ஊடகங்கள்👇😂. இது கூட தென்னிந்தியாவில்தான், பானி-பூரி பெல்ட்டில்…மோடி ஜி அடித்து நிமித்தி விட்டார் என்றே இன்னும் நம்புகிறார்கள்🤣. எதிர்பார்த்ததை விட ஆழம்.. இந்தியா - பாகிஸ்தான் போரில்.. சீனா ஆடிய சீக்ரெட் ஆட்டம்.. ஷாக் பின்னணி Shyamsundar IUpdated: Friday, May 16, 2025, 10:53 [IST] பாகிஸ்தான் ராணுவத்திடம் சீனாவின் ஜே ரக போர் விமானங்கள், PL-15 வகை ஏவுகணைகள் என்று பல உள்ளன. பாகிஸ்தானின் 80 சதவிகித போர் உபகரணங்கள் சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டது. இதெல்லாம் இந்திய ராணுவத்திற்கு தெரிந்ததுதான். இதில் அதிர்ச்சி தரும் தகவல் இந்தியா பாகிஸ்தான் போரில் Chinese PL-15 வகை ஏவுகணைகளை சீனர்களே இயக்கியதாக கூறப்படுகிறது. அதாவது சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டெக்னீஷியன்களை களமிறக்கி பணிகளை செய்துள்ளனர். அதாவது இந்தியாவிற்கு எதிராக ஏவப்பட்ட ஏவுகணைகளை பாகிஸ்தானில் இருந்து இயக்கத்து சீனர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனாவின் சாட்டிலைட் இமேஜ்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. அதேபோல் சீனா சார்பாக பாகிஸ்தானுக்கு நிறைய உளவு தகவல்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. அதாவது சீனா ஆயுதங்களை அனுப்பி, அதை இயக்க சாட்டிலைட்டை இமேஜ்களை அனுப்பி.. அதை சரியாக பயன்படுத்த உளவு தகவல்களை அனுப்பி கூடுதலாக இடத்தி எல்லாமே இயக்க ஆட்களையும் அனுப்பியதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. அதாவது இந்தியா பாகிஸ்தான் போரில் எதிர்பார்த்ததை விட ஆழமாக சீனா தலையிட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிப்பதாக தகவல்கள் வருகின்றன. சீனா நிழல் யுத்தம் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த போரை வைத்து சீனா போர் பயிற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வருகின்றன. அதாவது சில ஆயுதங்களை சீனா சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த போர் விவகாரத்தில் உலக நாடுகளின் தீவிரமான சப்போர்ட் பாகிஸ்தானுக்கு இருந்தது. உதாரணமாக துருக்கி , சீனா ஆகியவை பாகிஸ்தானை நேரடியாக ஆதரித்தது. ராணுவ ரீதியாக அரசியல் ரீதியாக பாகிஸ்தானை சப்போர்ட் செய்தது. வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது. இதிலேயே பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா ஆதரவு இருப்பது உறுதியானது. பாகிஸ்தான் தனது தாக்குதலில் சீன ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட நிலையில், சீன ட்ரோன்களுடன் சேர்த்து துருக்கி ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியது. 36 இடங்களைக் குறிவைத்து சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தியப் பாதுகாப்புப் படை கைனடிக் (kinetic) மற்றும் நான் கைனடிக் (non-kinetic) முறையில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவை துருக்கி மற்றும் சீனாவின் டிரோன்கள், என்று இந்திய ராணுவம் தெரிவித்தது. இந்த டிரோன்களை பாகிஸ்தானிடம் தந்து சீனா சோதனை செய்ததாகவும், சீனாவின் சில ஏவுகணைகளையும் சீனா பாகிஸ்தான் வழியாக சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது. எக்ஸ் பக்கம் இந்த போருக்கு சில நாட்களுக்கு முன்பே பாகிஸ்தானில் எக்ஸ் பக்கம் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு காரணம் சீனா என்கிறார்கள். அதாவது இந்தியாவிற்கு எதிராக போடப்பட்ட போஸ்டுகள் எல்லாம் பாகிஸ்தான் வழியாக சீனர்கள் செய்த போஸ்ட் என்று கூறப்படுகிறது. அதாவது இந்தியாவின் இமேஜை அழிக்க சீனர்கள் களமிறக்கப்பட்டு ஆன்லைன் போரை சீனா நிழல் யுத்தமாக நடத்தி இருக்கலாம். எதிர்காலத்தில் போர் வந்தால் ஆன்லைனில் எப்படி narrative உருவாக்குவது என்பதை பாகிஸ்தான் வழியாக சீனா இந்த முறை கற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த போரை எதிர்கால போருக்கான பயிற்சியாக மேற்கொண்டு இருக்கலாம் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. https://tamil.oneindia.com/news/chennai/role-of-china-in-the-india-vs-pakistan-war-might-be-deeper-than-we-think-704557.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards#google_vignette
  12. இப்படி பட்ட கொடுமைகளை, தூத்துகுடி கொலையை செய்த எடப்பாடியை அவரின் பிறந்த தினத்தில் வல்லவர், நல்லவர் என புகழ்ந்தார் அண்ணன் சீமான். அதிமுக, நாதக கட்சிகள் கருத்து எங்கே?
  13. நான் ஆதாரபூர்வமாக, அல்லது லொஜிக்கலாக வாதாடும் எவரையும் கடந்து செல்ல விரும்புவதில்லை. ஆனால் கவுண்டமணி வாழைப்பழ ஜோக் போல எழுதுபவர்களோடு விவாதித்தால் அயர்ச்சிதான் மிஞ்சும்.
  14. அரைநிர்வாண பக்கிரி என அழைத்த காந்தியை, பயங்கரவாதி என அழைத்த மண்டேலாவை பங்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைக்கவில்லையா? அதுபோலத்தான் இதுவும். அநேகமாக சகல “தீவிரவாதிகளுக்கும்” வாழ்வில் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே மிகுதி அமையும்.
  15. கஞ்சா கப்ஸா கதைகளை ஏனைய உறுப்பினர்களும் இனம் கண்டு கேள்வி கேட்ப்பதால் கொஞ்சம் அமைதியாக இருக்க எண்ணுகிறேன். ஆனால் வழமை போல் ஆதாரம் எதையும் கொடுக்காமல், நான் வாசித்த அறிவின் படி, அல்லது நீங்களே வாசித்து அறியுங்கள் போன்ற பதில்களும், அதை சுற்றி கருத்தாளரின் கற்பனையில் உருவாக்கிய பத்திகளும், கதைகளும் நீட்டி வளத்தபடுவது கண்கூடு. # விக்கிராமாதித்தன் போல் முயலும் கருத்தளர்களுக்கு வாழ்த்துக்களும், அனுதாபங்களும் ஒரு சேர🤣.
  16. ஏன் தமிழ்நாடு அனைத்திலும் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது தெரியுமா? – வைரலாகும் எக்ஸ் பதிவு.. Devika ManivannanUpdated: Wednesday, May 14, 2025, 17:54 [IST] 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் வாயிலாகவே அவர்களுக்கு தேவையான ஜாதி சான்றிதழ், குடியிருப்புச் சான்றிதழ் ,வருமானச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர மலை பாங்கான பகுதிகளில் வசிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஸ்வெட்டர்கள், பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி ஆகியவை கல்வித்துறையில் வழங்கப்படுகிறது என கூறியுள்ளார். போக்குவரத்தை பொருத்தவரை இந்தியாவிலேயே சிறந்த போக்குவரத்து வசதி கொண்ட மாநிலமாக இருக்கிறது. 1971 ஆம் ஆண்டிலேயே அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு ,1990 இலே அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. பொதுவாக பெண் குழந்தைகளை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்ப தயங்கிய காலகட்டத்தில் அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு பள்ளிகளில் காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தது . இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், இலவசமாக சைக்கிள் வழங்கும் திட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டது. அதேபோல மூவலூர் ராமாமிர்தம் அம்மா நினைவு திட்டத்தின் கீழ் 1989 ஆம் ஆண்டிலேயே மணமகள் எட்டாம் வகுப்பு முடித்தவராக இருந்தால் திருமணத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இது 1996 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த மணமகள் என்றால் பத்தாயிரம் ரூபாயாகவும் 2010 ஆம் ஆண்டில் இருபத்தைந்தாயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1973 ஆம் ஆண்டு இந்தியாவிலே முதன்முறையாக பெண்கள் காவல்துறையில் இணைக்கப்பட்டது தமிழ்நாட்டில் தான். 1990இல் அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு இங்கு தான் வழங்கப்பட்டது. பெண்களுக்கு பள்ளிகளில் நாப்கின் வழங்கும் திட்டம், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டன. 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர் . பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், சுய உதவி குழுக்களை மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்டவையும் தமிழ்நாட்டில் தான் வெற்றிகரமாக கொண்டுவரப்பட்டது பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கிய முதல் மாநிலமும் தமிழ்நாடு தான் என தமிழ்நாட்டின் முன்னோடியான திட்டங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது எக்ஸ் தள பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையையும் லைக்கையும் பெற்றுள்ளது. https://tamil.goodreturns.in/news/why-tamilnadu-is-growing-so-fast-a-doctor-s-x-post-063905.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards&_gl=1*1avjvjz*_ga*OTY4NDU2NDEyLjE3NDU1MzE4MTQ.*_ga_09Y63T23W1*czE3NDcyMzc5MzMkbzEwMiRnMSR0MTc0NzIzODEyNiRqMCRsMCRoMA..
  17. மன்னிக்க வேண்டும். நான் பிழையாக விளங்கி கொண்டுள்ளேன். நீங்கள் மேலே எழுதியை வாசித்து…புலிகள் முஸ்லீம்களை யாழ்பாணத்தில், வடமாகாணத்தில் இருந்து 1990இல் இனசுத்தீகரிப்பு செய்தபோது, கொலையும் செய்து அடித்து விரட்டினார் என கூறுகிறீர்கள் என பிழையாக புரிந்து கொண்டேன். புலிகள் அப்பாவி, அப்பாவி-அல்லாத முஸ்லீம்களை கொன்றார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதுவும் இந்த மக்பூல் படுகொலை - யாழ்பாணத்தை சேர்ந்த ஒரு வங்கி அதிகாரி கிழக்கில் முஸ்லிம் காடையர்களால் கொல்லப்பட்டதற்கு பதிலாக நிகழ்ந்தது. அதற்கும் மக்பூலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இக்கொலைகள் நிகழ்ந்த போது, கொல்லப்பட்ட தமிழ் வங்கி அதிகாரி மகளும், மக்பூலின் மகளும் யாழில் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் படித்தனர் என்பது துன்பியலின் உச்சகட்டம். பிகு விரிவான பதிலுக்கு நன்றி.
  18. சீனாக்காரன் recycled plastic ல பத்து ரூபாய் இருபது என டம்மி டிரோன்களை பாக்குக்கு கொடுத்திருப்பான். அதை எதிர்க்க பலகோடி செலவழிச்சு பிரம்மோஸ்சை பஸ்பமாக்கி உள்ளார்கள் போலும்🤣.
  19. உறவே… இந்தியாவுக்கு எதிராக மகிந்த, கோட்டாவை கூட ஆதரிக்கும் அளவுக்கு இருக்கிறது தற்போது ஈழத்தமிழர் மத்தியில் இந்திய வெறுப்பு உறவே.
  20. அப்போ பாகிஸ்தானிகள் சிலர் லாகூர்.கொம்மில் எனக்கு பயங்கரவாதிகள் என்றாலே நினைவுக்கு வருவது ஈழத்தமிழர்கள்தான் என எழுதுவார்களோ என்னமோ😎.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.