Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. ம்ம்ம்…வெளி வீதிக்கு அப்பால் என்றால்…அங்கே மாமிச உணவகம் வைக்க கூடாது என்பது கொஞ்சம் “சங்கி” தனமாக எனக்குப்படுகிறது. இந்த கடைக்கு அருகில் உள்ள வீடுகளில் மச்சம் சமைப்பாகள்தானே? அத்தோடு தனியே நல்லூர் மட்டும் அல்ல அனைத்து கோவில்களும் புனிதமானதுதான். யாழில் மூலைக்கு ஒரு கோவில் இருக்கும் போது, எப்படி பார்த்தாலும் இப்போ இருக்கும் பல மாமிச உணவு கடைகள் ஒரு கோவிலில் இருந்து 400 மீட்டருக்குள் வரும். அவற்றையும் அல்லவா நீக்க வேண்டும்? பிகு கடைக்காரர் சும்மின் கூட்டாளி என்பதை நான் கருத்தில் எடுக்கவில்லை🤣
  2. பிச்சகாரன் சத்தி எடுத்தால் முதல் வீட்டு இட்லி, இரெண்டாம் வீட்டு ஆட்டு பாயா, ஐந்தாம் வீட்டு பிரியாணி, 9ம் வீட்டு தயிர்சாதம், கோவில் பிரசாதம் எல்லாம் சம்பந்தமே இல்லாமல் அடுத்தடுத்து வருமாம். கண்ட, கண்ட இடங்களில் நுனிப்புல் மேய்ந்து விட்டு சத்தி எடுத்தால் அப்படித்தான் வரும்🤣. ஆனால் இலங்கையில் மொரட்டுவ E1 உங்களுக்கு இதை விளங்கி கொள்ளும் ஆற்றல் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து🤣🤣🤣.
  3. நானும் நல்லூரில் எங்காவது தெரு ஒன்றிலாக்கும் என நினைத்தேன். ஆனால் வெளிவீதியிலேயே அமைத்துள்ளார்கள் போல இருக்கு. கடையின் அமைவிடம் எங்கே என யாருக்காவது சரியாக தெரியுமா?
  4. 👆 சரியான தரவுகள் 👆நியாயமான கேள்வியும், சரியான முடிவும் (conclusion). நீங்கள் மேலே சொன்னதிலேயே இதற்கான பதில் உள்ளது. அதாவது ஒரு அரசுக்கு நிகராக செயல்பட முடியாத நிலையில் மட்டும் அல்ல, ஒரு அரச அதிகாரமில்லாத இனம் செயற்படும் அளவில் கூட நாம் இல்லை. ஆக எனக்கு 2 தெரிவுதான் புலப்படுகிறது. இதை பற்றி நாம் அலட்டி கொள்ளகூடாது. அந்த மக்கள் சந்ததி சந்ததியாக எந்த உரிமையும் அற்ற ஏதிலிகளாகவே இருப்பது அவர்கள் தலைவிதி என விட்டு விடுவதை தவிர வேறு வழியில்லை. தமிழ் நாட்டு கட்சிகளை லாபி பண்ணி, CAA யில் இவர்களை சேர்க்க கோரிக்கை வைக்க சொல்லலாம்.
  5. இந்திய உதவியில் நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவதாம்.
  6. இஸ்லாமிய பயங்கர, பிரிவினைவாதத்தை தூண்டும் பேச்சு. ஹன்சார்ட்டில் இருந்து நீக்கி, பாராளுமன்றத்துக்கு வெளியே இப்படி பேசினால் தூக்கி பத்து வருடம் உள்ளே வைக்க வேண்டும்? அது சரி ரிசாத் வீட்டில் கொல்லப்பட்ட வீட்டு வேலைக்கார சிறுமிக்கு நியாயம் கிடைத்துவிட்டதா?
  7. இப்போதுதான் கேள்விபடுகிறேன். அறிமுகத்துக்கு நன்றி.
  8. மேலதிக தகவல். இந்தியாவில் 12 வருடம் வாழ்ந்தால் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் சட்டவிரோத குடியேறிகள் எத்தனை வருடம் வாழ்ந்தாலும் விண்ணப்பிக்க தகுதியற்றவர் ஆவர். ஆனால் விண்ணப்பதாரி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்காலாதேசை சேர்ந்த மத சிறுபான்மை எனில், சட்டவிரோத குடியேறி எனிலும், 6 வருடத்தில் விண்ணப்பிக்கலாம். எந்த நாடுமே பயங்கரவதா குற்ற பிண்ணனி உள்ளவருக்கு அவர் சட்டபூர்வ குடியேறி ஆகினும் கூட குடியுரிமை விண்ணப்பத்தை ஏற்காது. இதை புரிந்து கொண்டால் ஏன் நீதிபதி அப்படி தீர்ப்பு கூறினார் என புரிந்து கொள்ளலாம்.
  9. இங்கே பலர் நீதிபதியை திட்டுவது எய்தவன் இருக்க அம்பை நோகும் செயல். நீதிபதியின் வார்த்தை பிரயோகம் தவறானது ஆனால் தீர்ப்பல்ல. வழக்கு போட்டவர் இந்திய சட்டப்படி பயங்கரவாதிகளுக்கு துணையானவர். அதற்காக சிறையிடப்பட்டவர். இப்படியானவர்களை மேற்கில் இருந்து கூட நாடு கடத்துவர் (1951 அகதிகள் சாசனம் இவர்களுக்கு செல்லாது, ஆனால் ஐரோப்பிய மனித உரிமை சாசனம் செல்லும்). இந்திய CAB சட்டம் மிக தெளிவாக வெளிநாட்டவர் ஆகினும், யாருக்கு குடி உரிமை வழங்காலாம் என சொல்கிறது. அதில் இலங்க தமிழர் இல்லை. அண்டை நாடுகளில் இருக்கும் முஸ்லிம்களும் இல்லை. இதை இந்திய நாடாளுமன்றம் மிக தூர நோக்குடன், இந்தியாவை சூழ உள்ள ஆப்கானிஸ்தான், பங்களதேஷ், பாகிஸ்தான் நாடுகளில் இருக்கும் இந்துக்கள், சீக்கியர், ஜைனர் போன்றோர் மத ஒதுக்க்கலுக்கு உள்ளாகும் போது அனுமதிக்கலாம் என்றே சட்டம் ஆக்கியுள்ளது (இதுவும் இன்னுமொரு ஆர் எஸ் எஸ் கொள்கை). ஆகவே இந்த சட்டத்தைத்தான் நீதிபதி நடைமுறைபடுத்தி உள்ளார். இதற்கு ஒரே வழிதான் உள்ளது. தமிழ்நாட்டில் - திமுக அல்லது அதிமுக வில் மத்திய அரசு தங்கி இருக்கும் ஒரு நிலை மீள வரும் போது, இந்த சட்டத்தில் 2009 ற்கு முன் பதிந்த இலங்கை அகதிகளையும் சேர்க்க வேண்டும் என்பதை ஆட்சிக்கு ஆதரவு தர ஒரு நிபந்தனையாக முன்வைக்கலாம். அதற்கு முதல்படியாக நாம் இவ்விரு திராவிட கட்சிகளையும் இப்போ சீண்டாமல் இருக்க வேண்டும். நடக்கிற காரியாமா…
  10. சரி 5000 கூட என்றால் 2500£. இந்தியாவில் இருப்பது 20,000 குடும்பங்கள். அதில் அரைவாசி திரும்பி வந்து, அவர்களை நாட்டில் நிலை நிறுத்த தலா £2500 கொடுத்தால் - மொத்த செலவு £25 000 000. இதை உலகளாவிய தமிழ் அமைப்புகள், மாணவர் மன்றங்கள், தொழிலதிபர்கள், கோவில்கள் ஒரு வருடத்தில் திரட்ட முடியும். சரியான செயன்முறை இருப்பின், அகதி அமைப்புகள், மேற்குநாட்டு மீள்குடியேற்ற அமைச்சுகளை கூட அணுகலாம். தனியே காசாக கொடுக்காமல் - கல்வி அல்லது தொழில் முயற்சி அல்லது ஒரு தொழில் பழக எனும் வகையில் கொடுக்கலாம். IOM என்ற அமைப்பு செய்வது போல. பெரிய எடுப்பில் முடியாவிட்டால் - புலம்பெயர் ஊர் ஒன்றியங்கள் தமது ஊரில் இருந்து இப்படி போனவர்களையாவது மீள் அழைக்க முயலலாம். இஸ்ரேல் ஒரு தேசமாக உருவாக முன்னர், கிபுட்ஸ் எனும் பண்ணைகளை உருவாக்கி, அங்கே யூதர்கள் பல நாடுகளில் இருந்தும் மீள் குடியேறினார்கள். இந்த நிலங்கள் அரபிகளிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்டன. இந்த விலையை “நீலப்பெட்டிகள்” என்ற மக்கள் நிதிசேகரிப்பின் மூலமும் ஏனைய வழிகளிலும் ஒரு இனமாக அவர்களால் திரட்ட முடியுமாய் இருந்தது.
  11. பிகு என்னை பொறுத்தமட்டில் இந்த மக்கள் இலங்கை திரும்பவேண்டும். அதற்கு புலம்பெயர் அமைபுகள் குடும்பதுக்கு £5000 வரையில் உதவி தொகை வழங்கவேண்டும்.
  12. மேற்கத்தைய நாடுகள் எவையும் ஒட்டு மொத்தமாக ஈழதமிழரை திருப்பி அனுப்பவில்லை. 1951 ஆம் ஆண்டு அகதிகள் சாசனத்தின் படி பல்லாயிரகணக்காணோருக்கு அகதி அந்தஸ்தும், ஐரோப்பிய மனித உரிமை சாசன அடிப்படையில் இன்னும் பல்லாயிரம் பேருக்கும் வதிவிட உரிமை கொடுத்துள்ளன. ஆனால் இந்தியா அப்படி அல்ல - அது அகதிகள் சாசனத்தின் ஒப்பந்ததாரி இல்லை. எந்த இலங்கை அகதிக்கும் அங்கே நிரந்தர உரிமை இல்லை. உதவி கூட தமிழ்நாடு அரசுகள் மனமிரங்கி கொடுப்பதுதான். அதற்கு நாம் எப்போதும் நன்றியாக இருக்க வேண்டும். தமிழருக்குத்தான் இந்த நிலை. ஒரு இந்து, அல்லது சீக்கிய, அல்லது ஜைன வங்காளியோ, பஞ்சாபியோ, சிந்தியோ பாக்கிஸ்தானில், ஆப்கானிஸ்தானில், பங்களாதேசில் இருந்து வந்து கேட்டால் CAA குடியுரிமையே கொடுக்கும். இதுதான் ஒன்றிய இந்தியாவின் குணம். யாரிடம் கடவுளிடமா? 😂 மேன்முறையீடு செய்ய முடியாது, ஆனால் உச்சநீதிமன்றையே மீள் பரிசீலனை (மறு சீராய்வு) செய்ய சொல்லி கேட்கலாம். அதற்கும் அனுமதி கிடைப்பது குதிரைகொம்பு. கிடைத்தாலும், தீர்ப்பு மாறாது. இந்த வழக்கை போட்டதே பிழை. நீதிமன்றம் இருக்கும் சட்டத்தைதான் வியாக்கியானம் செய்யும். இந்த விடயம் இந்திய சட்டத்தில் மாறுதலை கொண்டு வருவதன் மூலம் மட்டுமே சாதிக்கபட கூடியது. தர்க்கம் நியாயமானதே. ஆனால் இந்த வெறுப்பு நிலையை இந்தியா விரும்பினால் அப்படியே விருப்பு நிலையாக மாற்றலாம்.
  13. எனக்கு இரெண்டு நிலைதான். பல ஈழ தமிழர் நிலையும் இதுவே என நினைக்கிறேன். 1 . இந்தியா எமக்கு ஒரு தமிழ்நாடு மாடல் தீர்வை பெற்று தரின் - நான் ஜெய்கிந்த் சொல்ல ரெடி இல்லை எண்டால் இந்தியா உடைந்தாவது எமக்கு ஒரு விடிவு கிடைக்கட்டும்.
  14. நான் முன்னைநாள் இந்திய ஜனாதிபதி கலாம் சொன்னதை பின் பற்றியே கனவு காண்கிறேன்🤣. உங்கள் தர்க்கம் நியாயமானதே. சீனாவின் மிகபெரிய பலமும், பலவீனமும் அதன் சர்வாதிகார-முதலாளிதுவ கட்டமைப்பு. அதேபோல் உகிர் பிரச்சினை, தென் சீனக்கடலில் ஜப்பான், பிலிப்பீன்ஸ் உடன், அவுட்டர் மங்கோலியாவில் ரஸ்யாவுடன் எல்லை தகறாறு என சீனாவுக்கும் பல சிக்கல்கள் உள்ளன - ஆனால் இவற்றை தன் நலனுக்காக பயன்படுத்தி கொள்ளும் இடத்தில் கூட இந்தியாவோ அதன் வெளி உறவு கொள்கையோ இல்லை. திபெத்தில் மட்டும் அதுவும் திபெத்தின் எல்லைக்கு வெளியே முயல்கிறார்கள். மிகவும் மெலிதாக. ஆப்கானிஸ்தானில் சாலே யை முந்தள்ளி - அது கிழிந்து போய் விட்டது. ஏற்கிறேன் ஆனால் இந்த நிலையையும் தாண்டி இந்தியா போய்விட்டது என்கிறேன். நெருப்பு உருவாக சகலதும் இப்போ இருக்கிறது. ஆக்சிசன் மட்டும் இல்லை. அதை சீனா ஊதுமாயின் பத்திகொள்ளும்.
  15. தவறான ஒப்பீடு என நினைக்கிறேன். டிரம்பின் populism மோடியின் மதவாதம் போன்றதல்ல. டிரம்பிற்கு கலிபோர்னியாவில் பல லத்தினோ பகுதிகளில் அமோக வெற்றி கிடைத்தது. ஜோர்ஜ் புஷ்சின் முதலாவது வெற்றி ஊசலாடிய பாம் பீச் கவுண்டியில் கூட, டிரம்ப் கணிசமான வெற்றியை பெற்றார் என நினைக்கிறேன். அதேபோல் கறுப்பர் வாழும் பெரு நகரங்களில் கூட இந்த முறை அவர் மோசமான தோல்வியை காணவில்லை. ஆனால் இந்திய முஸ்லிம்கள் ஏதோ ஒரு பிராந்திய கட்சியின் பின்னால்தான். மிக அரிதாகவே பிஜேபியோடு. டிரம்ப் மோடி இருவருமே populist என்றாலும் டிரம்பின் பின்னால் ஒரு நிறுவனமயப்பட்ட சித்தாந்தம் இல்லை. பலர் சொல்வது போல் அவர் அரசியல் transactional - உனக்கு என்ன நன்மை, எனக்கு என்ன நன்மை என்பதே அங்கே முக்கியம் பெறுகிறது. ஆனால் மோடி அரசியல் அப்படி அல்ல, வருணாசிரமத்தின் வழி வந்த, பல ஆயிரம் ஆண்டுகால சித்தாந்தம் அதன் பின்னே இருக்கிறது. டிரம்ப் ஒரு passing cloud. ஆர் எஸ் எஸ் அப்படி அல்ல. அடுத்து அமெரிக்கவை பிரிக்கும் எண்ணம் வரும் அளவுக்கு கூட எதிரிகள் அமெரிக்காவுக்கு இல்லை. ஆனால் உடையும் நிலையை உருவாக்க வல்ல காரணிகள் பல உள்ளும், புறமுகாக இந்தியாவுக்கு உள்ளன.
  16. இப்படி ஒரு உடைவை தடுக்க… சீனா, பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு, இலங்கை என சூழவும் எதிரிகளையும், பூட்டான், நேபாள் போல பட்டும் படாமலும் இருக்கும் நண்பர்களையும் கொண்டு உள்ள இந்தியா - தமது பல ஆயிரம் ஆண்டு கால வரலாற்று கூட்டாளிகளான உலகளாவிய, குறிப்பாக ஈழ தமிழர்களோடு உறவை நன்நம்பிக்கை அடிப்படையில் புதுபிக்க வேண்டும். இந்தியாவுக்கு அதன் அருகே vassal states அவசியமாகிறது. இதை இந்தியாவை விரைந்து உணரவைத்தால் அது இந்தியாவுக்கும், தமிழருக்கும் நன்மை. இதுதான் ஈழத்தமிழருக்கு விழைய கூடிய நன்மை.
  17. அண்மையில் ஒரு பங்களேதேஷ் அமைப்பு அகண்ட பங்களதேஷ் என ஒரு மேப் வெளியிட்டுள்ளது. பல பகுதிகள் பங்களதேசோடு இணைப்பின் அந்த பிராந்தியமே முஸ்லிம் பெரும்பான்மையாக மாறும். அது மட்டும் அல்ல, சிலிகூரி காரிடோர் என கேள்வி பட்டிருப்பீர்கள். India’s chicken neck என்பார்கள். ஒரு சின்ன நிலப்பாதைதான் இந்தியாவை அதன் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கிறது. இதை சீனாவோ, பங்களாதேசோ பிடித்து கொண்டால் - இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் அத்தனையும் பறிபோய்விடும். அருணாச்சலை சீனா எடுத்து கொண்டு, ஏனையவற்றில் “சுதந்திர குடியரசு சிற்றரசுகளை” தாபிக்க வேண்டியதுதான். தென் ஒசேசியாவிலும், அபகாசியாவிலும் ரஸ்யா செய்யவில்லையா? சீனா இன்னும் இறங்கவில்லை. இறங்கினால் செய்யலாம். அதே போலத்தான் காலிஸ்தானும். இப்போதே அது நீறு பூத்த நெருப்புத்தான். கனடாவில் வைத்து கொல்லும் அளவுக்கு இந்தியா ரிஸ்க் எடுக்கிறது. அவ்வளவு பெரிய ஆபத்து இவர்கள். பாகிஸ்தானின் பஞ்சாபில் தளம் அமைத்து, ஆதரவு கொடுத்தால்… வட கிழக்கு இந்தியாவை துண்டாடி, சுந்தந்திரம் கொடுத்தல். பின்புலமாக பர்மா, சீனாவை பாவித்தல். உத்தர் பிரதேசம், மே வங்கம், பீகாரில் பகுதிகளை இணைத்து இன்னொரு முஸ்லிம் நாடு கோரல். பின்புலமாக பங்காலதேசை பாவித்தல். காலிஸ்தான் - பாகிஸ்தானி பஞ்சாப் பின்புலம். சீனா இப்படி இறங்கினால், இந்திய பொருளாதாரம் படுக்கும். இந்தியா திணறும். தென்னிந்தியா போராடாது. ஆனால் சோவியத் உடைந்த போது மத்திய ஆசிய நாடுகள் தாமாக கிளம்பி போனதை போல, வட இந்தியா உடையும் போது, தெற்கு தாமாக விலகி போகும் ஒரு நிலை வரலாம். அனைத்துமே எனது வெறும் wargaming தான். அல்லது ஆசை, பேராசை, நப்பாசை🤣. #கனவு
  18. கொஞ்சம் கொஞ்சமாக, வெக்கத்தை கக்கத்துள் வைத்துக்கொண்டு, சீனா விமானங்களை, கருவிகளை மட்டும் அல்ல, ஒட்டு மொத்த தாக்குதல் சூழலியல்லையும் (eco system) பாக்குக்கு வழங்கியதை ஏற்று கொள்ளும் இந்திய பாதுகாப்பு அமைச்சால் வழி நடத்தப்படும் அமைப்பினர். இதில் இவர் இன்னும் ஒன்றையும் ஒத்து கொள்கிறார் இப்போ பாகிஸ்தான்-சீனா எல்லை ஒரே எல்லைதான், 7000 கிமி யை இந்தியா பாதுகாக்க வேண்டி உள்ளது என்பதை. இதைதான் 2019 இல் ராகுல் காந்தி இந்திய பாராளுமன்றிலேயே எச்சரித்தார். இந்தியாவின் பல தசாப்த கஸ்மீர் கொள்கையை மாற்றி, ஆர் எஸ் எஸ் சின் கஸ்மீர் கொள்கையை இந்தியா கொள்கையாக பிஜேபி அரசு வரித்து கொண்டதன் பின் விழைவே இந்த 7000 கிமி ஒருங்கிணைந்த பாக்-சீனா போர்டர். இப்படி விழ வட கொரியாவுக்கு வாய்புண்டு - ஆனால் அவர்களில் கைவைக்கவே அமேரிக்காவுக்கே பயம். ஆனால் பாகிஸ்தானில் அரசுகள் விழும், எழும் ஆனால் நிழல் அரசு (இராணுவம்) அப்படியேதான் இருக்கும். இந்தியா, இந்தியாவாக இருக்கும் வரை பாக்கிஸ்தானில் என்ன பஞ்சம் வந்தாலும், ஆமியை மக்கள் எதிர்க்கமாட்டார்கள் (புலிகள் இருக்கும் வரை அறகளவும் வந்திராது என்பதை போல).
  19. இப்படி ஒட்டு மொத்த கிரிகெட்டையும் இந்தியா புறக்கணித்தால் விளையாட்டு தப்பும்🤣. அவர்கள் தங்கள் தரக்குறைவா ஐ பி எல் லில் மாறி மாறி விளாசி இன்பம் அடையட்டும்🤣.
  20. எப்படி இராணுவ வல்லமையில் சீனாவை அமேரிக்காவுடன் ஒப்பிடல் தப்போ, அதே போலத்தான் பாக்கை இந்தியாவிடன் ஒப்பிடுவதும். சீனாவின் பலத்த ஆதரவு இல்லாவிட்டால், பாக்கை இந்தியா ஊதி தள்ளிவிடும். ஆனால் வடகொரியா போல பாக்கையும் பாதுகாக்க சீனா முடிவெடுத்து விட்டது. அக்‌ஷய் சின் பை பாக், சீனாவுக்கு பரிசாக கொடுத்ததில் இருந்து இந்த நல்லுறவு இருக்கிறது. ஆனால் பாக் இதுவரை காலமும் அமெரிக்க, சீனா என இரெட்டை குதிரை சவாரி செய்தமையால் சீனா ஒரு அளவுக்கு மேல் பாக்குக்கு ஆதரவாக இறங்கவில்லை. ஆர் எஸ் எஸ் சின் கொள்கை வழிப்படி, மோடி-அமித்ஷா கஸ்மீரில் எடுத்த நடவடிக்கைகள், பாக்கை அமெரிக்க சுற்றில் இருந்து கணிசமாக விலக்கி, சீனாவிடம் அடைக்கலாமாக்கி விட்டது. சீனாவுக்கும் உலக நாடுகள் எல்லாவற்றிகும் தண்ணீர் முக்கியம். ஆகவே கஸ்மீரின் களயதார்த்தத்தை இந்தியா தன்னிச்சையாக மாற்ற முனைவதை சீனா தனக்கான ஆபத்து என்றே பார்க்கும். கொரிய தீபகற்பத்தில், இந்து சமுத்கிரத்தில் மேற்கின் பரவலை தடுக்க வட கொரியா, இமாலயத்தில் சீன நலனை பேண பாகிஸ்தான். இரெண்டுமே சீனாவின் சிற்றரசுகள் (vassal sates) தான். பிகு இந்த vassal state இல் வரும் வாசல் தமிழில் இருந்து போயிருக்க கூடும். கருத்து ஒற்றுமை உள்ளது.
  21. மாற்று கருத்து இல்லை. ஆனால் சாப்பிட வழி இல்லாவிட்டாலும் அணு குண்டை வைத்திருப்பார்கள். காரணம் இந்தியா. நான் பல கட்சிகளின் ஆதரவு பாகிஸ்தானிகளிடம் பேசியவகையில் - அனைவரும் ஒன்று படும் புள்ளிகள் இரெண்டு. ஒன்று இஸ்லாம். அடுத்தது - நாட்டின் தவிர்க்கவியாலாத பாதுகாப்பு கவசம் இராணுவம் என்ற நிலைப்பாடு. இந்தியா ஒரு நாடாக இருக்கும் வரை, பாகிஸ்தான் ஒரு மறைமுக அல்லது நேரடி இராணுவ ஆட்சி நாடாகவே இருக்க முடியும் என்பது பெரும்பான்மை பாகிஸ்தானிகளின் நிலைப்பாடு.
  22. இந்த இந்தியன் என்ற உணர்வு இப்போதைக்கு அபரிமிதமாக உள்ளது என்பதும், அது சுயவிருப்பின் பேரிலானது என்பது உண்மையே. நீங்கள் சொல்லும் கட்சிகள் மட்டும் அல்ல, ஓமர் அப்துல்ல்லாவும், அசாடுடீன் ஓவைசியும் கூட இந்திய சார்பு நிலை எடுத்ததும் நாம் கண்டதே. அதுவும் பிஜேபியின் பரம வைரியான அல்லது அப்படி காட்டி கொள்ளும் ஓவைசி இந்திய வர்ணத்தில் சால்வை போட்டதும், ஜெய்ஹிந்த் என மேடையில் முழங்கியதும்…புதிசு கண்ணா, புதிசு… ஆனால்…. இதைவிட பலமான ஓர்மத்தோடு இணைந்து இருந்த நாடுகளாக தென்பட்டவை, சோவியத் யூனியனும், யூகோஸ்லாவியாவும். அங்கே ஜனநாயக வழியில் தேர்தல் நடக்கவில்லை என்பது ஒரு பாரிய வேறுபாடுதான், ஆனால் நாட்டினை பிளவுபடாமல் காக்க, அவையும் இந்தியாவை போலவே கடும் சட்டங்களை இயற்றி இருந்தன. அதேபோல்… பிரிவினை குரல்கள் இந்தியாவுக்கு புதிதல்ல. ஓமர் அப்துல்லாவின் பாட்டா சேய்க் அப்துல்லா காஸ்மீரை விட்டு ஊட்டிக்கும் ஏனைய பகுதிகளுக்கும் நாடுகடத்தப்பட்டு, வீட்டுகாவலில் வைக்கப்பட்டார், சர்வஜனவாக்கெடுப்புக்கான இயக்ககம் தடை செய்யப்பட்டது, பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது, சீனப்போர் காலத்தில் அரசியலமைப்பு பிரிவினையை தடை செய்த பின் அண்ணா திராவிடநாடு பிரிவினையை கைவிட்டார். இன்னும் போர்ர்டோலாண்ட், நாகலாந்து என பிரிவினை குரல்கள் கேட்டவண்ணம்தான் உள்ளன. இதுவரைக்கும் மட்டுப்பட்ட உள்ளக சுயநிர்ணயம், இந்திய உணர்வு, மதச்சார்பின்மை இந்த மூன்றையும் பாவித்து - இந்தியா பிரிவினையை தடுத்து வருகிறது. ஆனால் ஆர் எஸ் எஸ் வழி நடக்கும் மோடி அரசு இதை போட்டுடைக்கிறது. மாநில சுயாட்சியில் கைவைத்து… ஜெய்சிறீராம் என கூவுவதே இந்திய அடையாளம்… அப்பட்டமாக முஸ்லீம்களை ஒதுக்கும், கஸ்மீர் சிறப்புரிமை நீக்கம், துண்டாடல், முத்தலாக், வக்கப் சட்டம் மாற்றம் இப்படி பலதை செய்கிறது. மறுவழமாக முஸ்லிம்கள் ஒரு நாட்டில் குறித்த ஒரு அளவை தாண்டியவுடன், தமக்கு சிறப்பு சலுகை கேட்பார்கள். போராடுவார்கள். இலங்கை, லெபனான் என பல உதாரணங்கள் உள்ளன. பாக்கிஸ்தான் + பங்களேதேஷ் ஐவிட இந்தியாவில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகம். ஆகவே என்றோ ஒருநாள் இந்தியாவில் இந்து எதிர் முஸ்லிம் என ரத்த ஆறு ஓடுவது நிச்சயம். அது எப்போ என்பதுதான் கேள்வி. இதில் பாலூசிஸ்தானை உடைக்க ஓரளவுக்கு மேல் இந்தியா முயன்றால் - குவாடரில் இருந்து தம் நாட்டுக்க்கு கக்கோரம் ஹைவேயை கட்டிய சீனா அதை சும்மா வேடிக்கை பார்க்காது. இப்போதே தமிழ் உட்பட தென் இந்தியாவின் மொழி, கலாச்சாரத்தை சீனர் நன்கு கற்று, உறவு வளர்க்கும் நிலைக்கு வந்துள்ளர்ர்கள். வெறும் கொக்கு சுடும் துவக்கோடு இருந்த வீரப்பனையே பிடிக்க முடியாமல் பல வருடம் திண்டாடியவர்கள் இந்தியர். சீனா மூன்று மத அல்லது, இன வழி பிரிவினைவாதிகளுக்கு மறைமுக ஆயுத ஆதரவு, பின்புல வசதி கொடுத்தாலே இந்தியா பொல, பொல என உதிர்ந்து விடும். என்னை பொறுத்தவரை, இந்தியா உடையும், அல்லது உடைய வேண்டும் என நான் சொல்லுவது இப்படி ஒன்றை மனதில் வைத்தே.
  23. இல்லை INFOGRAPHIC - Comparison between...INFOGRAPHIC - Comparison between Chinese and Indian milit...Both countries engaged in a border face-off, saw bloody clash first time in 45 years recently killing 20 Indian soldiers - Anadolu Ajansı

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.