Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. கஜன் கூட்டிய கூட்டத்தால் வந்த விளைவை ஏதோ தான் வெட்டி, விழுத்தியது போல போஸ்ட் போடும் பார் சிறி. இதுவரை யாரோடும் பேசமாட்டேன் எனா இருந்த கஜன் இப்போ இராஜதந்திரிகளை சந்திப்பதும், பிரதமைரை சந்திப்பதும் நல்லதொரு முன்னேற்றம்.
  2. நானறிய இவருக்கு “தூஷண பிக்கர்” என்ற பட்டத்தை வழங்கியவர் யாழ்கள கருத்தாளர் நாதம்ஸ். பவித்திரா வன்னியாராச்சியை பவித்திரம் அற்ற வார்தைகளால் இவர் அர்ச்சித்த வீடியோ வந்த நேரம் இந்த பெயர் சூட்டல் இடம்பெற்றது.
  3. வந்தார், வரத்தார் என்பது வசைவு சொல் அல்ல. நான் இப்போ வசிக்கும் ஊரில் பத்து தலைமுறைகளாக இருந்தவர்கள் இருக்கிறார்கள். இந்த ஊரின் சேர்ச் இரும்பு கதவு அவர்களின் முப்பாட்டனின் கொல்லையில் செய்யப்பட்டது. அவர்களின் குடும்பத்து வாய் வழி வரலாறாக 100 வருடங்களுக்கு முன் வந்த கடும் பனி பொழிவு பற்றி தெரிகிறது. அந்த ஊரில் எது வழக்கம், எது புதிதாக வந்த பழக்கம் என தெரிகிறது. நல்ல வேலை அல்லது பள்ளிகூடம் என்பதற்காக இங்கே வந்து குடியேறிய வந்தான் வரத்தானாகிய நான் - இந்த ஊரின் வழமைகள், வரலாறு பற்றி அறியாமல் இருப்பது இயல்பானது. இதில் எந்த வலியும் இல்லை. அப்படி இருப்பதாக நீங்கள் சொல்வது வெறும் பாசாங்கு. Playing the victim card. ஆதாரம் - யாழ்பாணம் என நான் சொல்லவில்லை. நல்லூரில் இப்போ இருப்பவர்கள் பலர் தீவகத்தில் இருந்து 50 வருடத்தில் குடியேறியோர் என்றே கூறினேன். இது என் வாழ்க்கை அவதானத்தின் பால் எழுந்த கருத்து. நல்லூரை ஓரளவு அறிந்தோருக்கு நான் சொல்வது புரியும். இலங்கை குடிசன மதிப்பீட்டில் கூட இந்த கேள்வி கேட்கப்படாத போது, இதற்கு நீங்கள் கேட்கும் வகையில் ஆதராம் எங்கும் இராது. கடை முதலாளி சுமந்திரனின் ஆள் எண்ட கதையை நம்பி சோல்டர் பேக்கோடு விமானத்தில் இருந்து குதித்தாகிவிட்டது… இனி கால் முறிந்தாலும், கழுதெலும்பே உடைந்தாலும் வலிக்காத மாரி நடிப்பதை தவிர வேறு வழியில்லை. மற்றையவர் கொஞ்சம் மேலால் தண்ணி ஊற்றியதற்கே, சசி வர்ணம் கரைந்து, உள்ளே இருக்கும் சங்கி-வர்ணம் புலப்பட்டு விட்டது. அவரும் Google street view ஆதாரத்துக்கு அவதூறை பதிலாக கக்கி விட்டு ஓடியவர், ஓடியதுதான்🤣.
  4. குறித்த கடை நல்லூர் குறுக்கு தெரு பருத்திதுறை வீதி சந்தியில், கோவில் வெளி வீதியில் இருந்து 300 மீட்டருக்கும் அப்பால் உள்ளது. இதை மறைத்து கோவிலில் திருவிழா நேரம் வளைவு கட்டும் இடத்தில் இருப்பது போல் பொய்யை பரப்பினார் சசி வர்ணம். அதை Google street view ஆதாத்துடன் கேள்வி கேட்டதும் டென்சன் ஆகி விட்டார். ஆரம்பத்தில் இதை சுமந்திரன் ஆளின் கடை என்றார்கள். பின்னர் சிங்களவர் கடை என்றார்கள். முதலில் மொக்கன் கடை போல் மாட்டு எலும்பை வீதியில் போடுவார்கள் என்றார்கள். இல்லை இது ஒரு கோப்பி கடை என மெனுவை எடுத்து போட்டதும் அந்த கதை அப்படியே அமுங்கி விட்டது. இது யாரோ வியாபார போட்டியில் வேலன் போன்ற திருட்டு சாமியாருக்கு காசை கொடுத்து தூண்டிவிட்ட விடயம் என்ற சந்தேகம் எனக்கு வலுக்கிறது. வழமை போல சுமந்திரன், சைவம் என்ற உசுப்பேத்தும் காரணிகளை இணைத்து விட மொக்கராசுகளும் சோல்டர்பேக்கை கொழுவிகொண்டு விமானத்தில் இருந்து குதித்து விட்டனர் என நினைக்கிறேன்.
  5. யாழ்பாணத்தில் விளம்பர உதவி தேவையா? உடனே அணுகுங்கள்! வேலன் & மொக்கராசுஸ் கிளைகள் நல்லூர்:பெர்லின் பாரிஸ்:டொராண்டோ
  6. அதே… யாருக்கும் யாழ்பாணத்தில் மார்கெட்டின் பக்கேஜ் தேவைபட்டால் வேலனை அணுகவும்🤣. வேலனுக்கு கொஞ்சம் செலவாகும். யாழ்கள சங்கிகள் சம்பளம் இல்லாமலே வேலை பார்ப்பார்கள் 🤣.
  7. இது எந்த தனி நபருக்குமான கருத்து அல்ல. உண்மையிலே உங்களை எல்லாம் பார்க்க பரிதாமாக இருக்கிறது. சுமந்திரன் பார் வைக்கிறார், பாறிஸ்டா வைக்கிறார் என பொய்களை காவி திரிகிறீர்கள், அவர் அரசியல்வாதி அதையாவது அரசியல் எதிர்ப்பு என விளங்கி கொள்ளலாம். சசி வர்ணம் கருத்து வறுமை ஏற்பட்டதும், கருத்தாண்மை அற்ற தனமாக நான் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்ல, அந்த பச்சை பொய்யை காவி திரிவதும் மட்டும் இல்லாமல், என் மீது பிரதேசவாத முத்திரை குத்தி அதனால் மனம் புண்பட்டதாக வேறு சொல்கிறீர்களே? வெட்கமாக இல்லையா? உண்மைக்கு நன்றி. அபாய அறிவிப்பு நல்லூரில் எனது அக்கா வீட்டில் மச்சம் சமைக்க மாட்டார்கள், அல்லது எனது அண்ணா வீட்டில் மாதம் ஒரு முறைதான் மச்சம் சமைப்பார்கள் ரீதியில் எழுதும் நல்லூரின் வந்தான், வரத்தானுகள் உங்களுக்கும் பிரதேசவாத முத்திரை குத்த கூடும்.
  8. மன்னிக்க வேண்டும். நீங்களும் சசி வர்ணம் கிளப்பிய அவதூறு புயலில் சிக்கி கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன். நான் எங்கும் “தீவார்” என குறிப்பிடவில்லை. தீவு பகுதி மக்கள் என்றே குறிப்பிட்டுள்ளேன். மற்றும் முன்பே ஒரு முறை யாழில் சொன்னது போல் என் தாய் வழி பாட்டனார் பல தலைமுறைக்கு முன் நெடுந்தீவு, அதேபோல் என் அம்மம்மாவின் அம்மா, பிறந்தது நாரந்தனை. ஆகவே நான் தீவார் என சொல்லவில்லை, அப்படி சொன்னால் அதை என்னை நானே சொல்வது போல் ஆகும். ஆனால் நான் சொன்ன கருத்தில் - நல்லூரில் இப்போ இருக்கும் பலர் கடந்த 50 வருடத்துள் தீவுபகுதியில் இருந்து வந்து குடியேறியோர் எனவே அவர்களுக்கு ஊரின் வரலாறு தெரியாது இருக்ககூடும் என்பதில் மாற்றம் இல்லை. அது ஒரு பாகுபாடான கருத்தும் இல்லை. அதேபோலத்தான் ஒருவர் சொல்லாததை சொன்னதாக பாசாங்கு செய்யும் இந்த போலியான நானும் பாதிக்கப்பட்டென் என்ற நடிப்பும், தமிழரின் சொத்து என்பதற்கு நீங்கள் ஒரு வாழும் உதாரணமாக இருக்கிறீர்கள்.
  9. ஊமைக்குத்து என கூகிளில் தேடினேன், லிங் - இந்த பக்கத்தில் கொண்டு வந்து விட்டுள்ளது.
  10. “தமிழ் தாலிபானில்” என்ன தரம் குறைகிறது? தலிபான்கள், சங்கிகள் போல மதவெறி தலைக்கேறிய தமிழர்களை அப்படி குறிப்பிட்டேன். “வந்தான் வரத்தான்” - இது ஒரு ஊரில் வந்து குடியேறிவர்களை குறிக்க பாவிக்கப்படும் வார்த்தை. “தீவார்” - இதை நீங்கள்தான் பாவித்தீர்கள். நான் மிக கண்ணியமாக தீவக மக்கள் என்றே அழைத்தேன். அவர்கள் நல்லூரில் பெரும் எடுப்பில் வந்து குடியேறி (அவர்கள் ஊரில் வீடுகளில் ஆட்கள் இருக்காமல் மாடு மேய்கிறது) உள்ளார்கள். அதை நான் தப்பென கூறவில்லை, ஆனால் அவர்களுக்கு நல்லூரின் வரலாறு தெரியாமல் இருப்பது வியப்பல்ல என்றே கூறினேன். “ஐயரின் கை ஜுஸ்” - பஞ்சாமிர்தத்தை ஐயர்தானே கையால் பிசைகிறார், அதில் அவரின் கை வியர்வையும் சேரும் அல்லவா, அப்போ அது ஐயரின் கை ஜுஸ் தானே? நீங்கள் உங்கள் மலின புத்தியால் வேறு வகையில் விளங்கி கொண்டீர்கள் போலுள்ளதே சகோ🤣
  11. உண்மைதான். புணர்ச்சி-ஊக்க நீக்கம் சரியான பதமோ? இப்போதைக்கு குற்றவாளிகள் ஓம்பட்டால் மட்டுமே இதை செய்வார்களாம். பிரச்சனை என்னெவெண்டால் யூகேயில் சிறைகள் 99% நிரம்பி விட்டது. இந்த தண்டனைக்கு ஓம்படும் ஆட்களை வெள்ளனவாக வெளியில் விட திட்டமிடுகிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் இவை 60% மட்டுமே வினைதிறனானவையாம். 40% இல ஒருவர் யாரும் பிள்ளையள் மீது கைவத்த்தால் - வெளியால விட்ட அமைச்சர் (பாகிஸ்தானி வம்சாவழி பெண்) கதி அதோ கதிதான்.
  12. நாங்கள் மொக்கன் கடை மாட்டு ரோல்சை டேக் எவே எடுத்து, பாரிஸ்டாவில் போய் ஒரு சுகர் ப்ரீ காப்பாச்சீனோ வை வாங்கி, அங்கே இருந்து அருகே இருக்கும் கற்பகத்தில் வாங்கிய பனங்கட்டியை நக்கி நக்கி கூட குடிக்க முடியும்…ஏன்னா நாங்க நடுநிலை நக்கிகள் 🤣. ஆனால் வன்போக்கு நக்கிகள் (அட அதுதாங்க extremists) கோவிலில் கிடைக்கும் ஐயரின் கை ஜூசை (அதாங்க பஞ்சாமிர்தம்) மட்டுமே நக்க முடியும்.
  13. நன்றி நல்ல வேளை உங்கள் சந்ததி தப்பியது. கோவில் கள்ளர் கனபேருக்கு அடுத்த சந்ததியில் தீர்ப்பு எழுதபட்டதை கண்டுள்ளேன். எப்பவும் எங்கட ஆட்கள் சிலருக்கு மலையாளிகள் மீது ஒரு தனிப்பாசம்தான்🤣.
  14. இப்பவும் செம்பக பெருமாள் என்ற யாழ்பாணத்தை சூறையாடிய சிங்கள மன்னன் சபுமல்குமாரயா எனப்படும் புவனேகபாகு (6ம்?) மன்னனுக்கு கட்டியம் கூறித்தான் திருவிழாவே தொடங்குவது என கேள்விப்பட்டேன். நல்லூரில் இப்போ ஒரு 50 வருடமாக இருப்பது எல்லாம் வந்தான், வரத்தாந்தானே? பெரும்பாலும் தீவக மக்கள். அவர்களுக்கு நல்லூரின் வரலாறு அதிகம் தெரியாது இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
  15. நன்றி. பொட்டம்மான் ரத்தத்தை கண்டு மயங்கி விழுந்தார் என எழுதி, அது ரகசியம், ஜெயராஜுக்கு தெரியக்கூடாது என்பதையும் ஜெயராஜ் வாசிக்க கூடிய தளத்தில் எழுதியபோது…. யோசித்தேன்…. இதை மறுக்க, பொட்டம்மானின் வீரத்தை பறைசாற்ற யாழில் ஒரு மீசை வைத்த புலி ஆதரவாளராவது வருவார்களா இல்லையா என. நீங்கள் மட்டுமே தேறி உள்ளீர்கள்.
  16. 100% உண்மை. கோவிலில் இருந்து கணிசமான தூரத்தில் இருக்கும் கடை என தெரிந்தும், தகவல் கூகிளில் இருந்தும், கனடாவாழ் பரந்த மனது கருத்தாளர் கூட, தண்ணீர்பந்தல் போடும் இடத்தில் உள்ளது, சைக்கிள் பார்க் வைக்கும் இடத்தில் உள்ளது என்ற ரேஞ்சில் எழுதியது… இவர்களின் முற்போக்கு எல்லாம் வெறும் மேற்பரப்ப்பில் படிந்து கிடக்கும் superficial தூசி என்பதையும், உள்மனதில் இவர்கள் அனைவரும் தமிழ் தாலிபான்கள்தான் என்பதையும் காட்டி நின்றது.
  17. அண்மையில் இதே போல் இன்னொரு திரியில் உங்களுடனும் ஏராளனுடனும் இப்படியானோருக்கு “ஆண்மை நீக்கம்” செய்வது பற்றி கருத்து பரிமாறி இருந்தேன். யூகேயில் ஒரு பரீட்சார்த்தமாக (pilot scheme ) மருந்துகள் மூலம் ஆண்மை அகற்றும் (chemical castration) திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்துகிறார்கள். BBC NewsChemical castration for sex offenders to be trialled in 2...Justice Secretary Shabana Mahmood is also exploring whether chemical castration could be made mandatory.
  18. எனது ஓய்வுக்காலத்தில் என் வீட்டு மொட்டை மாடி + மாடியில் ஒரு பகுதியை சேர்த்து, கொஞ்சம் ஏசி, ஒரு கொபி மிசின், சில லெதர் சோபாக்கள், நிறைய புத்தகங்கள், என ஒரு ambiance உள்ள கோப்பி கடையை போடும் ஐடியா இருந்தது. பாவியள் 300 மீட்டர் தூரத்தில் ஒரு பிரசித்தமான பிள்ளையாரை வைத்துள்ளார்கள்🤣. பிள்ளையாரை எப்படி கிளப்புவது எண்டு இப்ப யோசிக்கிறன் 🤣.
  19. வேம்படி அருகில் என்றால் ஓக்கே… ராட்சசிகளுக்கு ரத்தமும் சதையும்தான் பிரியம்🤣 அடுத்த முறை போகும் போது அருகில் உள்ள கடைகளில் முட்டை, டின் மீன் விற்கிறார்களா என நோட்டம் விட உள்ளேன்… வித்தால் வேலனுக்கு ஒரு போனை போட்டு விட வேண்டியதே🤣
  20. இந்த முறை தேரர் என்ன உத்தியை பாவித்திருப்பாரோ🤣
  21. நேரடியாக களத்தில் இறங்கி, நாகரீகமான முறையில் விடயத்தை அணுகி உள்ளீர்கள்👏. பரிஸ்டா நிறுவனமும் ஒரு காப்பரேட்டுக்குரிய reputational damage awareness உடன் செயல் பட்டுள்ளனர். Beef, chicken இற்கு பதிலாக vegan beef, vegan chicken ஐ அவர்கள் பரிமாறலாம். விலையை கொஞ்சம் கூட்டியும் விற்கலாம். இதை ஒரு விளம்பர உத்தியாகவும் பாவிக்கலாம். இந்த திரியை வாசித்த பலர் ஒருதரமேனும் ஊருக்கு போகும் போது இங்கே போவார்கள். பார்ட்டிகள், பார்பிகியூக்களில் இது மேலும் அலசப்பட்டு இன்னும் பிரபலமாகும். இது யாழ்பாண தமிழரின் பிற்போக்குத்தனத்தை காசாக்கி கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பம் பாரிஸ்டாவுக்கு. சுமந்திரனுக்கும் இதற்கும் சம்பந்தமிருப்பதாஅன ஊகத்தின் அடிப்படையில் இந்த விடையத்தில் குறுக்கு சால் ஓடியோருக்கு பரிஸ்டாவின் நெகிழ்வு போக்கும், கடை தொடரப்போவதும், மேலதிக விளம்பரமும் பாரிய மன உழைச்சலை தரும் என்பதில் ஐயமில்லை🤣. ஒரு மார்கெட்டிங் ஏஜெண்டை வைத்து கூட அடைய முடியாத பப்ளிசிட்டியை பாரிஸ்டாவுக்கு கொடுத்துள்ளனர் வேலனும் மொக்கராசுகளும். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காவது இவர்களுக்கு எப்போதும் நடப்பதுதானே🤣.
  22. இது தவறான தகவல். கீழே இந்த கடையின் கூகிள் இணைப்பை தந்துள்ளேன். நல்லூர் குறுக்கு தெருவுக்கு எதிராக உள்ள உயர்ந்த மதிலுக்கு பின்னால் உள்ள வீட்டில்தான் கடை இருப்பதாக காட்டுகிறது. இந்த குறுக்கு தெரு சந்தியில் வைத்து நீங்கள் சொன்ன நடவடிக்கைகள் நானறிய இடம்பெறுவதில்லை. அதே கூகிள் ஸ்டீர்ட் வியூவில் நல்லூர் கோவில் பக்கமாக பருத்திதுறை வீதியில் உருட்டி போனால், நல்லூர் பிரதேச சபை வரும் அதற்கும் அப்பால்தான் நீங்கள் சொன்னன ஓலையால் வேயப்பட்ட வளைவு வரும். இந்த கூகிகிள் ஸ்டிர்ரீட் வியூவில் அந்த வளைவுக்கு ஓலை வேய்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்தில்தான் திரு விழா நாட்களில் மட்டும் பரியர் போட்டப்பட்டு, நீங்கள் சொன்ன நிகழ்வுகள் நடக்கும். இந்த கடை இருக்கும் இடம் எந்த வகையிலும் கோயில் சுற்றாடல் என்று சொல்லவே முடியாத இடம். https://maps.app.goo.gl/j6B5Xka2XdNfNcLD7?g_st=com.google.maps.preview.copy பிகு படங்களை பார்த்தால் நல்ல அழகாக உள்ளது. அடுத்த முறை போய் ஒரு கபே லாத்தே வித் ஓட் மில்க் அடிக்க வேண்டும். முதலிலேயே கந்தனுக்கு ஒரு சலூட்டை போட்டு விட்டு வந்தால் பிளக் பெப்பர் பீப்பையும் ஒரு வெட்டு வெட்டலாம். யாழ்கள உறவுகளுக்கு படத்துடன் பயண கட்டுரை கரண்டீட்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.