Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by goshan_che

  1. நாளின் முடிவில் புள்ளிகள் வெளிவரும். அடியார்கள் அமைதி காக்கவும்🤣. என்னதான் வெய்யில் அடித்தது எண்டாலும் லோர்ட்ஸ் ஆடுகளம் வழமைபோல் ஆரம்பநாளில் முதல் செசனில் பந்து வீசும் அணிக்கு சார்பாகவே அமைந்துள்ளது.
  2. ஐ பி எல்லில் விட்டதை இங்கே பிடிக்கும் ஐடியா🤣 ஆ தள்ளு…தள்ளு…🤣 பிறகென்ன வாங்கோ…பழகலாம்🤣 மானாஸ் மானஸ்தனுக்கு இது முக்கியமான போட்டி, அடித்தால்தான் டீமில் நிலைக்கலாம் என்ற நிலையில் அடிக்கவும் கூடும். 1 டவுனாக இறங்கும் பச்சையப்பனும் வெளுக்க கூடும்🤣
  3. வாழ்த்து கந்தப்பு டெஸ்ட் போட்டி அல்லவா அப்படித்தான் இருக்கும் 🤣
  4. எனக்கு அப்போதே அன்பே சிவம் பிடித்திருந்தது. எனக்கு மிக பிடித்த படங்களில் ஒன்று. அதே போல் ஆயிரத்தில் ஒருவனும் - பார்த்து விட்டு வந்து சூப்பர் படம் என பேஸ்புக்கில் எழுதினேன் ஆனால் படம் ஊத்திகிச்சு. ஒரு வேளை எனக்கு தக் லைபும் பிடிக்குமோ? இருக்கலாம். ஆனால் பொன்னியின் செல்வன் 2 இல் ஆடியன்ஸை வச்சு செஞ்சது “மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே”🤣.
  5. மேலை நாடுகளில் ஒரு படத்தில் பிரபலம் ஆகி விட்டால் - அடுத்த பதினைந்து வருடத்தில் 5 படம் இயக்குவார்கள். அதுவே அதிகம். இவர்கள் வருடம் 2 ஆவது. ஆகவே விரைவில் உக்திகள் முடிந்து விடும். மேலும் மேற்கில் டைரக்டர் டைரக்சன் மட்டும்தானே - ரைட்டர்களுக்கும் கிட்டதட்ட அதே பங்கு உண்டு. இவர்களோ ஆல் இன் ஆல் அழகுராஜாக்கள். கதை இல்லாத போது சொதப்ப ஆரம்பிக்கிறார்கள் என நினைக்கிறேன். அனந்து இறந்த பின் பாலச்சந்தரும், சுஜாதாவின் பின் சங்கரும் அதிகம் சோபிக்கவில்லை.
  6. யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள் நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) ஆஸி முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) ஆஸி முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) ஆஸி இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) ஆஸி போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) டிராவிஸ் ஹெட் போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) கெகீஸோ ரபாடா போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) ஆஸி போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) ஆஸி
  7. ஐ பி எல் எல்லாம் கல்யாண சாப்பாடு மாதிரி அதுக்கு ஜி கூகிள் ஷீட்டோடு வந்தாத்தான் முடியும். நமக்கு இப்படி டிப்பி டிப் மாரி கொறிக்கிற விசயம்தான் சரி வரும். வாழ்த்து பிரபா. வாழ்த்து எபோத. மன்னிக்கவும் பிரபா, பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம் என்பது விதி. அதாவது எடி செய்யப்பட்ட பதில்கள் நிராகரிக்கபட வேண்டும். ஆனாலும் அப்படி செய்வது கொஞ்சம் ஓவராக தெரிவதால், உங்கள் பதிலை மஹாராஜ் என்றே கருதுவதாக உள்ளேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்🙏. பிகு பிரபா மஹாராசன் என்னையும் போட்டானே என மஹராஜ் வாழ்துவதாக கேள்வி 🤣.
  8. அதே போல் இந்த சரக்கு தீர்ந்து போன தாத்தா இயக்குனர்களின் கொடுமைக்கு முடிவு வைக்க, தாத்தா நடிகர்களும் தேவை🤣.
  9. இரும்பு டுசல்டோர்ப் என்டாலும் கட்டின கொத்தனார் தூத்துகுடி எல்லோ🤣🤣🤣… “இதுவரை சுட்டு வீழ்த்தப்படாத” ரபேலுக்கும் நடந்தது தெரியும்தானே🤣.
  10. சில நாடுகளில் திருமணத்தின் பிந்தான் உறவு வைக்க முடியும் என உள்ளது. சில நாடுகளில் திருமணத்தின் பின் கணவனுடன் மட்டுமே வைக்க முடியும் என உள்ளது. ஆனால் அநேகமாக அனைத்து நாடுகளிலும் திருமணத்தின் பின் இன்னொருவருடன் உறவு வைப்பது கிரிமினல் குற்றம் இல்லை எனிலும், விவாகரத்துக்கு போதிய காரணமாக கொள்ளப்படும்.
  11. மீண்டும் சொல்கிறேன் - மனைவி இப்படி திருமணத்துக்கு அப்பாலான உறவு கொண்டாரா இல்லையா என்பது இன்னும் அறியப்படவில்லை. ஆனால் அப்படியே நடந்து இருந்தாலும் - கணவர் நடந்து கொண்ட முறை மிக மோசமானது. மனைவி செய்ததாக சொல்லப்படும் ஒழுக்க கேட்டிற்கு இதுவல்ல தண்டனை. இதை செய்த கணவனுக்கு கூட, ஆத்திர மிகுதியால் இப்படி நடந்து கொண்டார் என்பதை ஒரு mitigating factor (குற்ற குறைப்புக்கான காரணி) ஆக (நியாயப்படுதலாக ஆக அல்ல) எடுத்தாலும்…. கலரியில் இருந்து விசிலடிக்கும் கூட்டம்….தமிழ் தலிபான்களே. தீர்ப்பு எழுதும் போது ஒரு விசாரணை இவை எல்லாவற்றையும் ஆய்ந்தே தீர்ப்பு வர வேண்டும். அந்த விசாரணை முடிவு வரும் வரை எம் பதில்கள் எல்லாம் “லாம்” விகுதியில்தான் இருக்க முடியும். இலங்கையில் தீர்ப்பு சரியாக வராது என்ற கணிப்பில், நாம் குறை தரவுகளை வைத்து முடிவுக்கு வரக்கூடாது.
  12. கணவர் கொழும்பில்தானே. வந்து போயிருப்பார் அல்லவா? வவுனியா 4 மணி பயணம்தானே. நீங்கள் பார்த்து விட்டீர்களா? இல்லைத்தானே. ஆகவே இதில் என்ன நடந்தது என நாம் சொல்ல போதிய தரவுகள் இன்னும் இல்லை. பிகு இப்படி மனைவியில்தான் பிழை இருக்க வேண்டும் என்ற முடிந்த முடிவில் இருந்தபடி, விடயத்தை அணுகுவதைத்தான், மேலே “கொலையாளி சொல்வதை அப்படியே நம்புகிறார்கள்” என சில கருத்தாளர்கள் விமர்சித்துள்ளனர். அது சரியானதே.
  13. இப்போ கிடைத்துள்ள பத்திரிகை தகவல் அடிப்படையில், எனது ஊகமானது: கொலையாளி சொன்ன கொலைக்கான சூழமைவு உண்மையாக இருக்க வாய்புகள் உள்ளது. அல்லது அவர் அந்த 21 வயது இளைஞனின் பொய்கதையை கேட்டு மனைவி மேல் சந்தேகம் பட்டும் இருக்கலாம். இங்கே அந்த இளைஞன் ஏன் இவருக்கு அப்படியான மெசேஜ் அனுப்பினார் என்பது மிக முக்கியமான கேள்வி. வழமையாக இப்படியான உறவில் இருக்கும் ஆண்கள் அதை ரகசியமாக வைத்து ஓசியில் இன்பம் அடைந்து விட்டு, வேறு ஒரு பெண்ணை கலியாணம் கட்டி செட்டில் ஆகி விடுவார்கள். அல்லது இந்த பெண்ணுடன் ஊரை விட்டு ஓடி வாழ தலைப்படுவார்கள். இவை இரெண்டும் இல்லாமல் இந்த இளைஞன் கணவருக்கே போட்டோவை அனுப்பி, அத்தோடு வயிற்றில் உள்ள சிசுவும் தனது என்பதாக சொல்லியதாக தெரிகிறது. ஏன் ? தன் ஆசைக்கு இணங்காத இந்த அப்பாவி பெண் மேல் பழி போடுவதற்காக இருக்கலாம் அல்லவா? ஆகவே எதையும் தீரவிசாரிக்காமல் சொல்ல முடியாது.
  14. அப்போ இந்திராணி - அமரனின் சொந்த சகோதரியா? இந்திராணியை கண்டுபிடித்து சக்திவேல் தன் துணைவியாக வைத்து கொள்ள, அவர் மீது யாரெனெ தெரியாமல் அமரன் மையல் கொள்கிறார்? இது இருவருக்கும் தெரிய வருகிறதா? முடிவு எப்படி கையாளப்படுகிறது? இதுதான் கதை என்றால் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், அல்லது பழைய பாலசந்தர் இயக்கத்தில் பழைய ரஜனி பின்னி இருப்பார்கள். விமர்சனங்களை பார்த்தால் இந்த நெருடலான கதையை பக்குவமாக கையாளாமல், சில்பா ஷெட்டி கணவன் எடுக்கும் “இந்தியன் ஆண்டியும் காலேஜ் பையனும்” ரேஞ்சில் எடுத்துள்ளார்கள் போலுள்ளது🤣.
  15. விசாரணயின் பின்பே எதையும் சொல்ல முடியும் என்பது சரியே. ஆனால் தலையோடு பொலிஸ் நிலையம் போய் கொலையை ஒப்பு கொண்டதால் - கொலையை இன்னார், இன்ன காரணதுக்காக செய்தார் என்பது வெள்ளிடமலை ஆகவே அந்த கொலையை கண்டிப்பதில் தவறில்லை என நினைக்கிறேன். அந்த இளைஞர் இப்படி போட்டோக்களை அனுப்பி சீண்டி இருந்தால் கொலையில் அவரின் பங்கும் உள்ளது. ஆனால் அவர் கொலையாளியை கொலை செய் என நேரடியாக தூண்டியிராத விடத்து, அவர் வழக்கில் ஒரு சாட்சியே ஒழிய குற்றவாளி அல்ல. நீங்கள் கூறியது போல் அவருக்கு அறிவுரை செய்ய மட்டுமே முடியும். வாசித்த சம்பவங்கள் உண்மையானல் - திருமணம் முடித்து விட்டு கொழும்பில் தனியாக போய் இருந்த கணவன் கணவனிடம் மணவிலக்கு பெறாமல் அவர்களை விட வயது குறைந்த இளைஞரிடம் உறவு வைத்து, கருவையும் உருவாக்கி கொண்ட மனைவி அப்படி ஒரு உறவில் இருந்தது மட்டும் அல்லாமல் கணவனுக்கே போட்டோ அனுப்பி சீண்டிய காதலன் இவர்கள் யாருமே சுத்தம் இல்லை. ஆனால் கணவன் பல நாட்களாக திட்டமிட்டு கொலை செய்தது இதை வேறு கட்டத்துக்கு கொண்டு போய்விட்டது. ஒரு நல்ல நண்பன் இருந்து - அவனிடம் மனம் விட்டு பேசி இருந்தால் கூட “தூக்கி போட்டு விட்டு, உன் வாழ்க்கையை பார்” என அவன் சொல்லி இருந்தால் கொலையை தடுத்திருக்கலாம். ஆனால் சமூகமே “வெட்டுடா, கொல்லுடா, உன் மானத்தை மீள பெறுடா” என பினூட்டம் இடுகிறதெனில் அந்த சமூகத்தில் இப்படி ஒரு அறிவுரை கணவனுக்கு கிடைக்கவும் வாய்ப்புகள் குறைவு. பிகு இங்கே பலர் சொல்வது போல இந்த மனைவி முழு அப்பாவியாகவும் இருக்கலாம். இவை எல்லாம் கணவனின் கட்டுகதைதாகவும் இருக்கலாம்.
  16. இங்கேதான் ஆணவ கொலைகளின் (dis-honour killings) இன் இயங்கு விதியே இருக்கிறது. மனைவி இன்னொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததால் - இவரின் தன்மானம் பாதிக்கப்பட்டதல்லவா? மனைவியை கொலை செய்து அந்த தன்மானத்துக்கு ஏற்பட்ட அழுக்கை, மனைவியின் ரத்தத்தால் கழுவி நீக்கி உள்ளாராம். இதே கான்செப்ட்தான் தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளிலும் பயன்படுகிறது. அல்பேனியாவில் இரத்த- சண்டை blood feud என பரம்பரை பரம்பரையாக மாறி மாறி கொல்லுவார்கள். ஒரு குடும்பத்தின் உறுப்பினரை மறு குடும்பம் கொன்றதால் அந்த அகெளரவத்தை போக்க, மறு குடும்ப ஆணில் ஒருவரை கொல்வது. இப்படி சங்கிலி போல் மாறி மாறி கொல்வது. இதை நடைமுறை செய்ய அங்கே கானூன் எனும் மரபுவழி சட்டம் கூட உள்ளது. மாபியாங்கள், காங்குகள் மாறி மாறி கொல்வது கூட இப்படி ஒரு அடிப்படையில்தான். இப்படி ஒரு தனிநபர் கொல்லுவது அவரின் மனநிலை சம்பந்த பட்ட விடயம் என கருதி கடந்து போனாலும், இதை சமூகமாக பெருமளவில் ஆதரிக்கும் போக்கு - அந்த சமூகம் தாலின்பானிய படுத்தபடுகிறது என்பதன் அறிகுறியே.
  17. செம்பா, அல்வாயான், வாதவூரானுக்கு வாழ்த்து.
  18. எனக்கு தெரிந்த ஒருவருக்கு 2000 ம் ஆண்டு, ஜனவரி 1 இல் குழந்தை பிறந்தது. எல்லோரும் பையன் பின்னுவான் பாருங்களேன் எண்டு சொன்னார்கள். சின்ன வயதில் இருந்த அவரிடம் இதற்கான அறிகுறியை நானும் தேடிப்பார்த்தேன் காணவில்லை. இப்போ இளந்தாரி - வாழ்க்கையில் ஒரு விடயத்தில் மட்டும் உச்சமடைந்துள்ளார். அது என்னத்தில் என்பதை சொல்லாமலே விளங்கும் என நினைக்கிறேன்.
  19. அவசியம் என்று நானும் சொல்லவில்லை😎. பொய் சொன்னார் எனவும் சொல்லவில்லை 🤣. ஓம்
  20. யாரு டீ யா? அவர் ஒரு உயிரியல் விஞ்ஞான பாடத்தில் எம் எஸ் சி வைத்துள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.