Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நான் முழுதாக நம்புவோர் லிஸ்டில் வரவில்லை. ஆனாலும் பதில் சொல்ல முயற்சிக்கிறேன். நான் அறிந்தவரை எண் சோதிடம் என இப்போ பார்க்கப்படுவதே - ஐரோப்பிய இறக்குமதிதான். தமிழர்களிடம் இருந்த தமிழ் எண்கணித முறை ஐரோப்பா போய், அங்கே ஆங்கில எண் கணிதமாகி மீண்டும் எம்மிடையே பரவியது. இங்கே முக்கியம் நாட்களின் எண்தான். ஆகவே கிரெகேரியன் கலண்டரில் 3 திகதி பிறந்தவர் தமிழ் காலண்டரில் 7ம் திகதி பிறந்தால் - கணிப்பும் மாறும். ஆனால் இப்படியான குழப்பங்கள் சோதிடத்துக்கு புதிதல்ல. இந்த முறை வாக்கிய பஞ்சாங்கப்படி சனி 2025 மேயில் மாறி விட்டது. திருக்கணிதப்படி 2026 மேயில்தான் மாறும்! கிட்டதட்ட ஒரு வருட வித்தியாசம். இதே போல் எமது ராசிப்படி ஒரு ராசியில் இருக்கும் நபர் ஆங்கில ராசிப்படி வேறு ராசியில் இருப்பார். சாத்திரம் கலையே தவிர, விஞ்ஞானம் அல்ல. கலைக்குரிய முரண்கள் இதிலும் இருக்கும். அதை பொழுதுபோக்காக பார்த்து விட்டு நகர்ந்து விடல் வேண்டும்.
  2. இன்றும் கூட பேச்சுவார்தை மூலம் தமிழ் ஈழம் அடைந்து விடலாம் என்ற புதிய நம்பிக்கை எனக்கு பிறக்கிறது. எமது தரப்பில் ஒரே ஆள் மட்டும் போவார். சிங்களவன் எத்தனை குழுவை அனுப்பினாலும் - ஒவ்வொரு குழுவாக மண்டைகாய வைத்து முல்லேரியாவுக்கு அனுப்புவார் தமிழர் பிரதிநிதி. ஈற்றில் சிங்களவனுக்கு பேச்சுவார்த்தைக்கு அனுப்ப ஆள் இராது. அவனாகவே தமிழ் ஈழம் அறிவிப்பான்.
  3. என்னை பொறுத்தமட்டில் நான் ஒரே ஒரு விடயத்தை மட்டும்தான் பொய் என ஐயம் திரிபற நம்புகிறேன். அது மதம். கடவுள் எனும் ஒரு சூப்பர் பவர் இருக்கிறதா இல்லையா என்றால் என்பதில் தெரியவில்லை என்பதே - ஆனால் நிச்சயமாக அப்படி ஒரு கடவுள் இருப்பின் அவரின் மார்க்கமாக, ஏஜென்சிகளாக இப்போ நாம் அறியும் எந்த மதமும் இல்லை. சகல மதங்களும் மனிதரால், மனிதரை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட செயன்முறைகளே என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. நானாக தேடிப்போவதில்லை ஆனால் கோவில்கள், சர்சுகள், மசூதிகள், விகாரைகள் போக வாய்ப்பு வரும் போது போகாமல் தவிர்ப்பதும் இல்லை. கண்மூடுவதும் உண்டு, கை கூப்புவதும் உண்டு. ஆனால் எல்லாமுமே எந்த இலயிப்பும் இல்லாமல்தான். மனதில் பிரார்தனைகள் வைப்பதும் மிக குறைவு. இப்போதெல்லாம் இல்லை என்றே சொல்லலாம். எந்த மத குருவையும் பார்த்து 1% கூட பக்தியோ, பயமோ, மரியதையோ வருவதில்லை. அதே போல் ஒரு அணுகுமுறைதான் சாத்திரம், பிதிர்கடன், குறித்த நாட்களில் மரக்கறியாய் இருப்பது, போன்றவற்றிலும். சிலதை பெற்றோர் சொல்லியபடி செய்ய வேண்டியது கடமையாகிறது. சிலது பழக்கதோசமாக தொடர்கிறது. சிலது கொஞ்சம் open minded ஆகத்தான் இருந்து பார்ப்போமே என்ற எண்ணத்தால் ஆர்வம் காட்டுவது. இதே போல் சில மூடபழக்கம் என தெரிந்தும் கைவிடாதவை உண்டு, எவர் கையாலும் நல்லெண்ணை வாங்க தயங்குவது, மாலை மங்கிய பின் பணத்தை கொடுக்காமல் விடுவது இப்படி சில. ஆனால் இவை எதையும் உண்மைதான் என முட்டு கொடுத்து என்னால் வாதாட முடியாமல் இருக்கிறது. இவை உண்மையா, புரட்டுக்களா என சொல்லியே ஆக வேண்டும் என நிர்பந்தித்தால் - புரட்டு என்பதே என் பதிலாக வரும். அநேகமாக சிறுவயதில் இருந்து என்னை condition படுத்தியதால் இவற்றை கைவிட முடியாது ஒரு ஆழ்மன பயத்தால் தொடருகிறேன் என்றே நினைக்கிறேன். ஆனால் இப்படி வாழ்வது இலகுவாக இருக்கிறது. நாம் அனைவரும் ஏற்கும் உண்மை நம் காலம் மட்டுப்பட்டது என்பதே - அதை கொஞ்சம் இலகுவாக கழித்து விட்டு போனால்தான் என்ன?
  4. அப்படி இருக்கவில்லை. இருப்பின் அவை என்ன என பட்டியல் இடுங்கள் என்றேன். உங்களால் முடியவில்லை. ❤️🙏
  5. புள்ளிகளை அறிவிக்காமல் விட்டு, அனைவரும் வெற்றியாளர் என அறிவித்தாலும் எனக்கு உடன்பாடே.
  6. ஒரு வேளை நடிகர் கமலஹாசந்தான் இப்படி ஒரு பெயரில் வந்து யாழ் கள உறுப்பினர்களுக்கு மண்டைகாய வைக்கிறாரோ என நான் சந்தேகிக்கிறேன்🤣. நுனிப்புல் மேய்வதும்… அதைவைத்து கொண்டு மேதாவி போல காட்ட முனைந்து மூக்குடை படுவதும்…. தனக்கென புதிய மொழி ஒன்றை உருவாக்கி கொள்வதும்…. பத்து பொருத்தமும் பொருந்துகிறதா இல்லையா?
  7. நானும் நீங்களும் தமிழர்கள் அல்லவா? ஆகவே உங்கள் மனநிலைதான் எனதும். உங்களை போலவே, நானும் நேரடியாக கண்டும், அனுபவித்ததுமான அடிப்படையில் உருவான மனநிலை இது. ஆனால் சிங்கள மக்களில் மிக பெரும்பான்மையானோருக்கு ஆமியுடன் இந்த அனுபவம் இல்லை. அவர்கள் அறிந்தது எல்லாம், அறந்தலாவ, அனுராதபுரம், புறக்கோட்டை, மத்திய வங்கி போல சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களை செய்பவர்கள் புலிகள், அவர்களிடம் இருந்து சிங்கள இனத்தையும், சிங்கள நாட்டையும் காப்பாவர்கள் ஆமி. கொஞ்சம் சிங்களவர்களுக்கு ஜேவிபி காலத்தில் தமக்கு என்ன நடந்தது என்பது நினைவிருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் அனுரா. உண்மையில் அவர் ஆமியை ரணவிரு என அழைக்காமல் இட இதுவும் (நாடகம் ஆடுவதும்) ஒரு காரணம். தன் தோழர்களை, சகோதரனை கொண்ட ஆமியை ரணவிரு என அழைக்க அனுர விரும்பவில்லை. எம்மை கொண்டதால் அல்ல.
  8. அது அவர் சுமந்திரனுக்கு எவ்வளவு நெருக்கம், தூரம் என்பதை வைத்து மட்டுமே தீர்மானிக்கப்படும். அவர் சுமந்திரனின் எதிரி எனில் மதிப்புக்குரிய சேபால ஜி என எழுதுவோம். எப்போதோ ஒரு தரம் சுமன் பயணித்த பஸ்சில் கூட பயணித்தவர் என்றாலும் போதும் - ஆளை மாறுகால், மாறுகை வாங்கி விடுவோம்🤣. Short term, long term என கிட்டதட்ட லீசில் எடுப்பது போல் ஒப்பந்தங்கள் உள்ளன. பலர் லோங் லீசில்…சை…. டேர்ம் அடிப்படையில் மாத, வருட கணக்கில் வீடு எடுத்து தங்குவது, தாய்லாந்தை சுற்றி டூர் போவது, அண்மைய நாடுகளுக்கு போவது என பலவகையில் “வாழ்வார்கள்”.
  9. சிங்களவர் மனநிலையில்: புலிகள் காட்டு மிருகங்கள். ஆமி பாதுகாவலர்கள்.
  10. ஒரு மாபெரும் எதிரியை எதிர்க்க துணிந்த பின், தனித்து நிற்காமல், ஏனைய நாடுகளின் நலனினை தமது நலனுடன் சமாந்திரபடுத்த, இடைவிடாது உழைப்பதே, ஒரு அசாத்திய திறமைதான். குறிப்பாக டிரம்பின் அத்தனை தகிடுதத்தங்களுக்கு பின்னும் - இந்த சமாந்தரப்படுத்தலை உந்திதள்ளுவது, உக்ரேனின் சகல இராணுவ நகர்வுகளையும் விட பிரமிக்கதக்க விடயம். ஆனால் உக்ரேன் ஐரோப்பாவில் இருப்பதும், அதன் எதிரியால் பாதிக்க படக்கூடிய ஏனைய பலமிக்க நாடுகள் அதை சூழ இருப்பதும் உக்ரேனின் அமைவிட-அதிஸ்டம்தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.
  11. இந்த திரியில் இது போன்ற ஒரு கருத்தை யாருமே எழுதவில்லை. நீங்கள் கற்பனையில் கத்தி சுத்துகிறீர்கள் என நினைக்கிறேன். செல்லக்கிளி அம்மானின் பிஸ்டல் தொடங்கி, இறுதிவரை இயக்கமும், அதற்கு நிதி வழங்கியமக்களும் எப்போதும் போதியளவு நிதி இல்லாமல்தான் இருந்தார்கள் என்பது 2000 க்கு முன் பிறந்த ஈழ தமிழர் அனைவருக்கும் தெரியும். மேலே ரஞ்சித், புலிகள் கரும்புலிகளையும், உக்ரேன் டிரோன்களையும் மட்டும் பயன்படுத்துகிறது என்ற வேற்றுமையை மட்டுமே எழுதினார். அதுதான் உண்மை. நீங்கள்தான் டிரோன்களை பாவிக்கும் கருத்தை ஒட்டி, புலிகளுக்கு பணம் வழங்க மக்களுக்கு மனம் இருந்திருந்தால் அவர்களும் கரும்புலிகளை அனுப்பி இருக்க வேண்டி வராது என எழுதினீர்கள். அப்படி அல்ல. மக்கள் தம் இயலுமைக்கு மேலாகவே, ஒரு குழுவாக பணம் கொடுத்தனர். ஆனால் சந்தையில் அப்போ கரும்புலிகளுக்கு நிகரான ஒரு கருவி இருக்கவில்லை என்பதுதான் உண்மை.
  12. இல்லை. அப்போ இராணுவத்திடம் புலிகளை விட மேலதிகமாக இருந்தது சியாமாசெட்டி, அவ்ரோ ரக விமானங்களும், ஹெலிகாப்டர்களும், ராடார் கருவிகளும், ரன்வேக்களும், முக்கியமாக வெளிநாட்டு உள்நாட்டு இராணுவ கல்லூரிகளில் கிடைத்த பயிற்சியிம். இதில் பலதும் இனாமாக வேறு நாடுகள் கொடுத்தவை. இவை எதையும் வாங்கும் திறன் எந்த ஈழத்தமிழரிடமும் அப்போ இருந்ததில்லை. புலம்பெயர்ந்தோரே மிக சொற்பம் அவர்களும் கூட நிரந்தரமற்ற நிலையில்தான் இருந்தனர். அதே போல் பணம் இருந்திருந்தாலும், அதை மனமுவந்து கொடுத்திருந்தாலும் - நான் மேலே சொன்ன வளங்கள எதையுமே வெளியார் சந்தையில் வாங்க முடிந்திராது, அப்படி வாங்கி இருந்தாலும் அதை இலங்கக்கு கொண்டு வர முடிந்திராது, அப்படி கொண்டு வந்திருந்தாலும் அதை பாதுகாத்திருக்க முடியாது, அப்படியே பாதுகாத்து விட்டாலும் தனியே கேணல் சங்கரை மட்டும் வைத்து கொண்டு ஒரு விமான படையணிதை அமைத்திருக்க முடியாது. புலிகள் ஏன் கரும்புகளில் நம்பி இருக்கும் நிலை வந்தது என்பதற்கு பல புறச்சூழல் காரணிகளே முக்கிய பங்காற்றின. பணம்/மனம் இல்லை. புலிகள் கடைசிவரை ஒரு சமச்சீர் அற்ற நிலையில் இருந்து கொண்டே - ஒரு வலுசமநிலை தோற்றப்பட்டை உருவாக்கினார்கள். அதுதான் அவர்களின் பெரும் சாதனைகளில் ஒன்று. அதை அவர்களே நம்ப ஆரம்பித்தது வீழ்சியின் காரணிகளில் ஒன்று.
  13. 🤣 மோடிக்கு பாக்கிஸ்தான் வைச்ச செந்தூரப்பொட்டையே நம்பாமால் தாம் வென்று விட்டதாக மனப்பால் கிடைக்கும் ஆட்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். போரில் பின்வாங்கும் கட்டளை வரும் வரை முன்னேறி தாக்குவதுதான் படையினன் முறை. ஆகவே போரில் முன்னேறி தாக்கி அதன் போது சாவடைந்த அனைவரும் கரும்புலிகள் என ஆகிவிடும் என நினைக்கிறேன். கப்டன் மில்லர் அதிஸ்டவசாமாக வாய்ப்பு வரின் தப்பிப்பேன், இல்லை என்றால் சாவு என்ற நிலையில், நிலைப்பாட்டில் உள்ளே போனதால்தான் அவர் முதல் கரும்புலி என நினைக்கிறேன்.
  14. மில்லர் நெல்லியடி மவி யில் இருந்த முகாமை தகர்தார். அந்த முகாமை தகர்க்க ஒரு லாரி நிறைந்த வெடிமருந்து தேவைப்பட்டது. ஒரு கரும்புலியை அனுப்பாமல் வேறு என்ன வகையில் அந்த முகாமை தகர்திருக்கலாம். 1987 இல் புலிகள் வாங்கி பாவித்திருக்க கூடிய, சந்தையில் இருந்த அந்த ஆயுதம் அல்லது கருவி என்ன என்பதை சொல்வீர்களா? தகவலுக்கும் பிழை திருத்தத்துக்கும் நன்றி. வீடியோவை டிலீட் பண்ணி உள்ளேன். அனைவரும் அசெளகரியத்துக்கு மன்னிக்கவும்.
  15. கரும்புலிகள் உருவான போது புலிகளிடம் சீருடையே இருக்கவில்லை அண்ணை. அந்த சமயத்தில் அவர்களிடம் இருந்தது கடற்புறா எனும் இரு அதிவேக அவுட் போர்ட் மோட்டார் பூட்டிய படகு மட்டுமே. அப்போ விமானத்தை எதிர்க்க 50 கலிபர் கொடு என பூரியையிம் நட்வர் சிங்கையும் கேட்டு கொண்டிருந்த காலம். அந்த காலத்தில் விமானம் வாங்கவில்லை என்பது தவழும் குழந்தை ஒலிம்பிக் 100மீட்டரில் தங்கம் வெல்லவில்லை என ஆதஙப்படுவது போல். இங்கே ஒப்பிட கூடிய காலம் - அனுராதபுர, கட்டுநாயக்கா தாக்குதல் காலங்கள் மட்டுமே. இரெண்டு காலத்திலும், மனம், பணத்துக்கு அப்பால்…. கீழ் கண்ட காரணங்களே பெரிதும் பங்களித்தன அப்போ கிளைடர், இலகு ரக விமானம், கனரக போர்/சரக்கு விமானம் என்பனவே இருந்தன. இதில் கிளைடர் ஆனையிறவு காலத்தில் வன்னியில் ஒன்றாவது இருந்தது. இலகு விமானம் இரெண்டாவது அதன் பின் வந்தது. கனரக விமானங்களை வாங்கும், பேணும், மறைத்து வைக்கும் இயலுமை எப்போதும் இருக்கவில்லை. பேச்சுவார்த்தையின் பின் இவற்றிர்கான வழங்கல் கூட பெரிதும் முடக்கப்பட்டது. ஆகவே புலிகளும் விமானம் வாங்கி ஓட்டி இருப்பார்கள் மக்களிடம் மனம்/பணம் இருக்கவில்லை என்பது சரியான காரணம் இல்லை.
  16. ஆங்கிலத்தில் sitting ducks என்பார்கள் அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல், வரிசையில் விமானங்கள் அடி வாங்கியுளன. இந்த மூலோபாய விமான இழப்பு ரஸ்யாவின் அணு ஆயுத மிரட்டலை கூட கேள்விக்குள்ளாக்கி உள்ளதாம். ஏன் என்றால் தொலைதூர நாடுகளை அணு ஆயுதம் கொண்டு தாக்க இப்படியான விமானங்கள் வேண்டுமாம். ஆப்(பு)ரேசன் சிந்தூரில் பாக் இந்திய விமானங்களை மேலே எழும்பவிடாமல் ஆக்கிய போது இந்தியாவுக்கும் இப்படி ஒரு இக்கட்டு ஏற்பட்டது நினைவிருக்கலாம். அதனால்தான் ஜெயாங்கரும், அஜித் தோவாலும் வாசிங்கடனுக்கு போனை போட்டு அணுயுத்தம் (பிரம்மோஸ் மூலம்) வர வாய்புண்டு என சொல்லி ஒரு வழியாக டிரம்ப்மூலம் தாம் தொடங்கிய போரை தாமே முடிவுக்கு கொண்டு வந்தனர். விடுதலை புலிகளுக்கு வந்த முதலாவது ஆயுத கப்பல் சர்வதேசபரப்பில் வைத்து எப்போ மூழகடிக்கபட்டது? ஏவுகணை வாங்க அமெரிக்கா போய் பிடி பட்டவர்கள் எப்போ பிடிபட்டார்கள்? இந்த திகதிகளை மீட்டு பார்த்தால் - சமாதான ஒப்பந்தத்தோடு வழங்கல் முற்றாக தடுக்கப்பட்டு விட்டது என்பது தெளிவாகிறது.
  17. சிறிய அளவிலான தந்திரோபாய அணு ஆயுத பாவிப்பு கூட இருக்கும் என பல மேற்கில் இருக்கும் புட்டின் ஆதரவு ஆட்கள் எழுதுகிறார்கள். அதேபோல் இஸ்தான்புல் பேச்சுகளும் இன்று தொடருமாம்.
  18. அப்போது டிரோன்கள் இல்லை. உள்ளதில் சிறியது எனில் கிளைடர்கள். அதனை அடுத்து சிறிய ரக விமானங்கள்தான் வான்வழி போரின் கருவிகள். அவற்றை புலிகள் வாங்கி இருந்தார்கள். புலிகள் வன்னியில் வைத்திருந்தது சியாமாசெட்டி விமானங்கள் இரெண்டு என நினைக்கிறேன். இதை 1986 இல் இலங்கை பயன்படுத்தியது. முன்னர் ஒரு திரியில் இலங்கை கிபிர்களை, மிக்குகளை வைத்து கொண்ட போது, புலிகள் “ அவிஸ்ரேலிய விவசாயிகள் மருந்தடிக்கும் விமானங்களினை” வைத்து கொண்டு தம் சக்திக்கு மேலாக இலங்கைக்கு போக்கு காட்டினர் என எழுதினேன். அப்போ மருதர் தலைமையில் ஒரு குரூப் எனக்கு ஒண்டும் தெரியாது எண்டும், புலிகள் அதைவிட பெரிய விமானங்களை எல்லாம் வாங்கி இருந்தனர். என கூறினர். மருதர் ஏர்கிராப்ட் மெயிண்டனன்ஸ் வேலை என்பதால் - நான் அடக்கி வாசித்தேன். ஆனால்… அப்படி வாங்கியமைக்கு எந்த ஆதாரமும் இதுவரை வெளி வரவில்லை. 9/11 பின்னான காலத்தில் அது சாத்தியமாயும் தெரியவில்லை.
  19. வாசிப்பதில் பிரச்சனையா? கிரகிப்பதில் பிரச்சனையா? எமது பிரச்சனையை உக்ரேனோடு ஒப்பிடவில்லை ( ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கி ஒரு ஒப்பிலக்கணம் எழுதலாம் - ஆனால் அதுவல்ல இங்கே எழுதப்பட்டது). இங்கே இரு வேறு காலங்களில் நடந்த தாக்குதல் வியூகங்களே ஒப்பிடபட்டன. புலிகளின் பிரசுரங்களிலேயே நோமண்டி, குடாரப்பு தரையிறக்கள் ஒப்பிட பட்டுள்ளன. அதன் அர்த்தம் ஈழ யூத்தமும் இரண்டாம் உலக யுத்தமும் ஒருமாதிரியான பிரச்சனைகள் என்பதல்ல. இது உண்மைதான். ஆயுத பற்றாகுறை ஒரு பெரிய காரணி. ஆனால் அது வாங்குதிறன் இன்மையை விட , வாங்க முடியாமை, வாங்கியதை வழங்க முடியாமைதான் ஏற்பட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.