Everything posted by goshan_che
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
பந்தை மாற்றுகிறார்கள். அவுஸ்சுக்கு கடைசி ஆயுதம்?
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஹெட்டின் முதல் பந்து செங்குத்தாக திரும்பியது🤣. இந்த பந்து வீச்சு மாற்றம் அல்லது நாளை காலை முதல் 10 ஓவரில் அவுஸ்ரேலியா நாலு விக்கெட் எடுக்காவிட்டால் தெ ஆ வெல்லும்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இப்போதும் என் கணிப்பு ஆஸி வெல்லும் என்பதே. ஆனால் எப்போதும் விரும்பியது தெ ஆ வெல்வதையே. நாளைக்கு 14 வது ஓவரில் வெற்றியை எட்டினால் மிகவும் மகிழ்வேன்🤣.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஆடுகளம், தட்பவெட்ப காரணிகளை போலவே - ஸ்கோர் போர்ட் அளுத்தமும் ஒரு பெரிய காரணி. இது தெ ஆ வுக்கு எதிராக உள்ளது. முதல் மூன்று இனிங்சில் அடிக்காத எண்ணிக்கையை நாலாவது இனிங்சில் அடிப்பது மிக கடினம், அரிதிலும் அரிதாகவே நடக்கும். வழமை போல் இது 5ம்/4ம் நாளில் நடக்கும் நாலாவது இனிங்சில் இல்லை எனிலும்…1ம், 2ம் நாளில் இருந்த தட்பவெப்ப காரணிகள் குறைவு எனிலும், ஆடுகளம் இப்போதும் பந்து வீச்சுக்கு சார்பாகவே உள்ளது. 10ம் விக்கெட்டை வீழ்த்த தெ ஆ திணறியது, ஆஸியின் கூட்டு மனோதிடத்தை, அதுவே தெ ஆ விடம் குறைவு என்பதையே காட்டி நின்றது, ஆடுகள நிலையை விட. இனி இது தனியே மனோதிடம் சம்பந்தபட்ட ஆட்டமாகவே இருக்கப்போகிறது. லஞ்சுக்கு போன போது உடல்மொழியை வைத்து பார்க்கின், ஆஸியிடம் உத்வேகமும், தெ ஆ விடம் சோர்பும் தென்பட்டன.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஆரிடம் கேட்டனியள் வாக்கரிடமோ? டேனியலிடமோ🤣
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
- இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
விமானத்தில் இருந்தோரில் ஒருவர் நீங்கலாக ஏனையோர் பலி. தப்பியவரின் சகோதரரும் பலி. கீழே கட்டிடத்தில் இருந்தோரில் பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். ஆழ்ந்த அஞ்சலிகள்.- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
தெம்பா…அவருக்கா…பாவம்யா🤣- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
தலைவர் வேலை களைப்பு தீர சோமபானத்தை அருந்தி விட்டு…தென்னாபிரிக்கா என்னா, அந்தாட்டிக்கா கூட நாளைக்கு வெல்லும் எண்டு சொல்லுவார்…அதை எல்லாமுமா நம்புவது🤣.- பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
இவ்வாறு கூறி விட்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்…..- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நாளைக்கே முடியும் போலத்தான் இருக்கு. 80+உள்ளே சாப்பாடு, நீகாராகாரம் =50, போக்குவரத்து 15. ஒரு £150 பவுண் தப்பியது என விட்டு விட வேண்டியதுதான். பெர்மிங்ஹாம், மான்செஸ்டரில் இங்கிலாந்து - இந்தியா 3ம் நாள் டிக்கெட்டுகள் வாங்கி வைத்துள்ளேன். அதாவது ஒழுங்கா நடக்க வேணும் கடவுளே.- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
2ம் நாள் ஆட்ட முடிவில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகள் தலை கீழ் மாற்றத்தை தந்து விட்டிருந்தன. முன்னாள் முதல்வர் பதவி இழக்க அவர் இடத்தை கெட்டியா பிடித்து கொண்டு சத்தமில்லாமல் முதல்வர் கதிரையில் அமர்ந்து கொண்டார் நேற்றைய துணைமுதல்வர் சுவி அவர்கள். ஆனால் இன்றைய துணை முதல்வரோ, இது நிரந்தரமில்லை, நாளை தானும் அதையே செய்வேன் என தன் ஆதரவாளர்களிடம் சூளுரைத்ததாக தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளன. இவ்வாறு பலரும் பலவாறு தடுமாறிய போதும், எதற்கும் கலங்காத உறுப்பினர் செம்பாட்டான் தொடர்ந்து இரெண்டாம் நாளாக கேண்டீனில் உட்கார்ந்து ஹாயாக முட்டை கோப்பி குடித்துகொண்டிருந்தார் என்பது மேலதிக செய்தி. சுவி 30 🪑 வாதவூரான் 30 ரசோதரன் 30 வீரப்பையன் 20 ஏராளன் 20 கிருபன் 20 புலவர் 20 ஈழப்பிரியன் 20 வசி 20 வாத்தியார் 20 அல்வாயான் 20 எப்போதும் தமிழன் 20 கோஷான் 20 கந்தப்பு 20 நுணாவிலான் 10 பிரபா 10 செம்பாட்டான் 00 🐥 இப்போ இருக்கும் 218 ஐ அடிக்க வே திணற வேண்டி வரும். ஆனால் பிட்சில் எந்த பிழையும் இல்லை. தெ. ஆ - இதை ஒரு ஒருநாள் ஆட்டம் போல அணுகினால் வெல்லலாம். எதிர் மறை அணுகுமுறை பலந்தராது.- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
5ம் கேள்வி சுவி அண்ணா, ரசோ அண்ணா க்களிடையே தீர்மானிக்கும் கேள்வியாக இருக்கும்.- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ரசோ அண்ணாவை தவிர வேறு யாரும் 6ம் கேள்விக்கு கமிண்சை தெரியவில்லை.- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
கேள்விகள் அப்படி 🤣- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
பவுமா வை அவுட்டாக்க லாபுஷேஞ் பிடித்த கேட்ச் “வாவ்” ரகம். பெடிங்டன் ஒருத்தர்தான் டெஸ்ட் மேட்ச் போல ஆடுகிறார். பவுண்டரி அடிகள் கலக்கலாக இருந்தாலும்…அடிக்கடி லைனை கடந்து ஆடுகிறார். எப்போவேணும் எண்டாலும் எல்பி ஆகலாம். கடைசி ஓவரில் பெடிங்டன் handling the ball முறையில் அவுட் ஆகி இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால் அம்பயர்கள் கொடுக்கவில்லை.- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
மோனுக்கும் சேர்த்து 80 ரூபாய் பாஸ். கஸ்டப்பட்டு உழைச்ச காசு 🤣. ஆனால் இப்பவெல்லாம் app தானே. ஆட்டம் நடக்காவிடில் (மினிமம் 15 ஓவர் full refund க்கு, 30 ஓவர் 50% refund க்கு) அவர்களாகவே refund ஐ பாங்கில் போட்டு விடுவார்கள். அலைய வேண்டி வராது. என்ர லக்குக்கு 4ம் நாள், 16 ஓவர் அல்லது 31 ஓவர் விளையாட்டு நடக்கும் என நினைக்கிறேன்🤣. இப்படித்தான் போன WTC final, 5ம் நாள், ஒவல் ஹாஸ்பிடாலிட்டி டிக்கெட் இலவசமாக கிடைத்தது. இந்தியாவின் 6 விக்கெட்டை லஞ்சுக்கு முன்பே ஊதி தள்ளி விட்டது அவுஸ். வார நாட்களில் மகனை ஸ்கூல் கட் அடித்து கூட்டி போகலாம், ஆனால் வீட்டில அவன் என்ன பிழை விட்டாலும், கால் தடக்கி விழுந்தாலும் அதைத்தான் காரணம் என்பார்கள் 🤣.- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நான் சொன்னது தெளிவா விளங்காமல் பேசும் ஆழ்வார்பேட்டை ஆண்டவரை🤣- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
பிந்திய தகவல் 3ம் நாள் இரவு இடியுடன் கூடிய மழைக்கு வாய்புண்டாம். நான் 4ம் நாள் டிக்கெட் வாங்கும் போதே நினைத்தேன்🤣. ஒன்றில் மழை குழப்பும் அல்லது 3ம் நாளே நேட்ச் கிட்டதட்ட முடிந்து விடும் போல உள்ளது😔- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஓம்…பொதுவாகவே லோர்ட்சில் முதல் நாள் முதல் பேட்டிங் விரும்பபடுவதில்லை. அத்தோடு இன்று மேகமூட்டம் வேறு. ஆனாலும் ஆரம்ப ஆட்டக்காரர்கள், 1 டவுனை தவிர அடுத்து வீழந்த 3 விக்கெட்டும் shot selection தவறியதாலே அவுட் ஆகின. இரெண்டாவதாக பேட்டிங் எடுத்ததின் பிரதிகூலம், 4 வதாக பேட் பண்ண வேண்டி வரும். முதல் இனிங்சில் சறுக்கினாலும், அவுசின் பேட்டிங் வரிசை, தென்னாபிரிகாவினதிலும் வலிமையானகாக தெரிகிறது. குறைந்த பட்சம் முதல் இனிங்சில் 300 ஐ நெருங்காவிடில் தெ.ஆ 4ம் இனிங்சில் 250+ அடித்து வெல்ல வேண்டி வரலாம். கஸ்டமாய் இருக்கும். அநேகமாக முடிவு வருவது உறுதி என நினைக்கிறேன். 3 ம் நாள் சில சமயம் மழை தூறலாக பெய்யலாம். ஆனால் பாதிக்காது. போட்டி சம நிலை என போட்டவர்களுக்கு 20 புள்ளிகள் லம்பாக போக போகுதோ? பயத்தில ஆள் இந்த பக்கம் வரவே இல்லை🤣- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஆண்டவரே எண்டு சொல்லி போட்டு விளக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கலாமா🤣 ஐயோ நம்ம மனம் வேற அங்கேயே போகுதே🤣- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
தன்ர பெயரை லிஸ்டில தானே கீழ கொண்டு போய் போட்ட மனசு இருக்கே… அதான் கடவுள் 🤣- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஓம்… ஆனால் ஹெட்டும், ஸ்மித்தும், கேரியும் விக்கெட்டை தானமாக வழங்கி இராவிட்டால் நாளை லஞ்ச் வரை அவுஸ் ஆடி இருக்கலாம்.- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
முதலாவது நாள் ஆட்டத்தின் முடிவில் யாழ்கள வேட்பாளர்களது தரநிலை பட்டியல். பலத்த ஆறுமுனை போட்டிக்கு இடையே - சபாநாயகர் கிருபன் ஜி யை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். வீரப்பையன் 10 (7) ஏராளன் 10 (8) கிருபன் 20 (1) 🪑 புலவர் 10 (9) சுவி 20 (2) நுணாவிலான் 00 (16) 🐥 ஈழப்பிரியன் 20 (3) வசி 10 (10) வாத்தியார் 10 (11)) செம்பாட்டான் 00 (17) 🐥 அல்வாயான் 10 (12) வாதவூரான் 20 (4) ரசோதரன் 20 (5) பிரபா 10 (13) எப்போதும் தமிழன் 20 (6) கோஷான் 10 (14) கந்தப்பு 10 (15)- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இதை தகவலறிந்த வட்டாரங்கள் ஆமோதிக்கின்றன🤣. மேலும் இருவர் double omelette சாப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன 🤣. - இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
Important Information
By using this site, you agree to our Terms of Use.