Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இனவாதத்தை பொறுத்தவரை….. தமிழருக்கு எதுவும் கொடுக்க கூடாது என்ற நிலைப்பாட்டில்…..மகிந்தவுக்கும் அனுரவுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை. இப்படி சிந்தித்த ஒரே சிங்கள தலைவர் டாக்டர் விக்ரமபாகு கருணாரட்ன மட்டுமே. ஆனால் அவரை சிங்களவர்கள் ஒரு மாநகரசபை உறுப்பினராகா கூட ஆக்கவில்லை. இதுதான் மாறாத சிங்கள பேரினவாதம். இது மாறிவிட்டது…. அல்லது அனுர மாற்ற முயல்கிறார் என்பதற்கு ஒரு குண்டு மணி அளவு கூட ஆதாரம் இல்லை. நீங்கள் சும்மா கற்பனையில் அடித்து விடும் கதைகள் மட்டுமே.
  2. ப்ரோ… அந்த இனவாதத்தை ஊட்டி வளர்த்த மேய்பன்களில் நீங்கள் நம்பும் ஜேவிபியும், அனுராவும் அடக்கம் ப்ரோ. ஜே ஆரும், சந்திரிகாவும், மகிந்தவும், ரணிலும் கொடுக்க இசைந்த, கொடுத்த மாகாண சபையை கூட தமிழருக்கு கொடுக்க கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக நின்று, அதற்காக ஒரு இரத்த களரியையே உருவாக்கியவர்கள் ஜேவிபி. நீதி மன்று போய் வடக்கு கிழக்கை பிரித்தவர்கள். சந்திரிக்காவோடு சேர்ந்து நோர்வே சமாதான முயற்சியை, PToMS ஐ குழப்ப முழு மூச்சாக முன்னின்றவர்கள். அனுர, டில்வின் இருந்த அதே தலைமைபீடத்தில் இருந்து சோமவன்ச, வீரவன்ச, முசமில் யுத்த நேரம் சொன்னவை உள்ளதே? அதுதான் எப்போதும் ஜேவிபியின் நிலைப்பாடு. மேற்கின் அழுத்தத்துக்கு பணிந்து முள்ளிவாய்க்கால் அவலத்தை நிறுத்த கூடாது, விரைந்து முடிக்கவும் என மகிந்தவுக்கு கெடு வைத்தவர் அனுர. நீங்கள் இவர்கள் இனவாதத்தை இலங்கையில் களைவார்கள் எண்டு இங்கே பேயோட்ட பார்கிறீர்கள்🤣 அனுர காவடி என்பது பொருத்தம் என்றாலும், நீங்களாகவே பதவி உயர்வு கேட்பதால்… அனுர தூக்கு காவடி … பிடித்திருக்கிறதா?
  3. தனிப்பட்டு உங்கள் மீதும் இல்லை அனுர மீதும் வெறுப்பு இல்லை. ஆனால் இனப்பிரசனை விடயத்தில் அனுரா மாத்தி யோசிக்கிறார் என பச்சை உருட்டை உருட்டும்…கருத்துக்கள் மீது நிச்சயம் வெறுப்பு உண்டு. ஜேவிபி பற்றி நிக்சன் எழுதியதை வாசிக்கவும்.
  4. நிக்சனுக்கு வயசு போட்டுது 🤣. அத்தனை வடக்கு-கிழக்கு தமிழர் பிரதிநிதிகளும் ஒரே குடையில் வந்து, மக்களும் 80% ஆதரித்து, இன்னுமொரு வட்டுகோட்டை தீர்மானம் நிறைவேற்றினாலும் ——— சிங்களவர் மட்டும் அல்ல…. இந்தியாவோ…. வேறு எவருமோ இதை இன்றைய நிலையில் ஆதரிக்க போவதில்லை. நாம் சிறுவராக இருந்த போது எத்தனையோ விடயங்களை எமது பெற்றாரிடம் மிகவும் ஆணித்தரமாக கேட்டிருப்போம்….ஆனால் அவர்கள் தருவதில்லை என முடிவு எடுத்தால் அவ்வளவுதான். நாம் கேட்பதை எம்மால் அடித்து பறிக்க முடியாது. அடங்கி விடுவோம். இங்கேயும் அதுவே நிலமை. தமிழர் ….கேட்கலாம்… எவ்வளவும் கேட்கலாலம்…. ஆனால் பலன்? கேளுங்க, கேளுங்க….கேட்டுகிட்டே இருங்க என்பது மட்டுமே. சில சமயம் யோசித்தால்… எப்படி, இப்படி ஒட்டு மொத்த இனமும் யதார்தத்தை புரிந்து கொள்ளாத கற்பனைவாதிகளாக இருக்கிறார்கள் என வியப்பாக இருக்கும். ஆனால் அனுரவின் உண்மை முகத்தை சும்மா டர்….என கிழித்துள்ளார் நிக்சன். அனுர செவ்வந்தியை பிடிக்கிறார், செண்பகத்கை பிடிக்கிறார், இராமராஜனை பிடிக்கிறார் என காவடி தூக்குபவட்கள் கவனத்துக்கு. இங்கே குறிப்பிடப்படும் முன்னாள் மண்டையன் குழுவினர் மீது எனக்கு எந்த நல்ல அபிப்பிராயமும் இல்லை. ஆனால் 13 ஐ முழுமையாக அமல் படுத்த கேட்பதே இப்போ எடுத்து போட கூடிய ஒரே துரும்பு. காலம் அப்படியே நின்று விடாது. ஒரு நூறு வருடத்தில் இந்த மாகாணசபையை ஒரு பெடரல் மாநிலமாக, ஒரு சுயநிர்ணய கொன்பெடரல் தேசமாக நாம் மாற்றி அமைக்கலாம், சூழமைவும் கெட்டித்தனமும் இருந்தால். ஆனால் நிக்சன் சொல்வது போல், இப்போ 13 ஐ காலால் உகைத்து விட்டு மணந்தால் சுயநிர்ணயதேவன் இல்லையேல் மரணதேவன் என நாம் இருந்தால்….. நமக்கு மாவட்ட சபை கூட தரக்கூடாது என்ற ஜேவிபி உட்பட்ட அத்தனை இனவாதிகளிம் வேலையும் மிக இலகுவாக, விரைவாக முடிந்து விடும்.
  5. எனது அரசியல் அபிலாசை மிகவும் சின்னது. ஈழத்தமிழர் - கெளரவமான, தமது அலுவல்களை தாமே நிர்வகிக்கும், அவர்களின் நில உரிமை பறிபோகாத, மொழி உரிமை பாதுகாக்கபட்ட, இன ஒதுக்கலுக்கு உள்ளாகாத வாழ்வை இலங்கை தீவில் வாழ வேண்டும் என விரும்புகிறேன். இதை தராத எந்த சிங்கள அரசும் எனக்கு ஒன்றே. தவிர போதை பொருள், சட்சம் ஒழுங்கு போன்ற அனைவருக்கும் பயந்தரக்கூடிய நடவடிக்கைகளை சிங்கள அரசுகள் எடுத்தால் அதை பாராட்டலாம். ஆனால் அப்படியே உச்சி குளிர்ந்து போய்…இது ஆரம்பம்…அடுத்தது தமிழருக்கு உரிமைதான் என காவடி எடுத்தல் ஆகாது. இதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். இவர்கள் போதைக்கு எதிராக செயல்படுகிறார்கள். சுக அரசில் மகிந்த தொழில்துறை அமைசராக பல நல்ல தொழிலாளலர் திட்டங்களை கொண்டு வந்தார். நாட்டை திறந்த பொருளாதாரம் ஆக்கி சுதந்திர வர்த்க வலையங்களை, ஆடை தொழில்சாலைகளை ஜே ஆர் கொண்டு வந்தார். கம் உதாவ - பிரேமதாச… இப்படி சிங்கள அரசுகள் முன்பும் நல்ல விடயங்கள் செய்துள்ளன. 2005 க்கு முதல் இருந்த அத்தனை அரசுகளும் போதை பொருளை நன்கு கட்டுப்படுத்தினர். ஆகவே இது பத்தோடு பதினொன்று. இதை போற்றலாம். ஆனால் நீங்கள் தூக்கும் காவடி… ஜஸ்ட் டூ மச்
  6. அது மட்டுமே செய்கிறார். மிச்சம் எல்லாம் ஒரு நாடு ஒண்டறை தேசம் என 2009க்கு முன்பே கூட சாத்தியப்படாத கொள்கைகள்தான். இவை ஒரு நாளும் கைகூடாது என்பது கஜனுக்கும் தெரியும் ஆனால் உங்களை போல் இருக்கும் 15% யாழ் மாவட்ட வாக்காளரை கவர் பண்ணினால் தனக்கு ஒரு கதிரை நிச்சயம் என கணக்கு போட்டு அதை மட்டுமே செய்கிறார். மக்கள் அனுராவிடம் போக கூட்டமைப்பு, மான், மீன் போலவே கஜனும் சம காரணி. ஒரு எம்பி கதிரையை தவிர 2009 இல் இருந்து கஜன் சாதித்தது என்ன? கேள்வி வேறு ஆட்களை பற்றி அல்ல. கஜன் கட்சியின் அறிவிக்கப்படாத யாழ்கள அமைப்பாளர் என்ற வகையில், அந்த கட்சி பற்றி உங்களிடம் கேட்கிறேன்.
  7. கேள்வி நல்ல கேள்வி என்பதால் கேட்டேன்🤣 (பொதுவாக இண்டர்வியூக்களை நான் நடத்தும் போது எவராவது it’s a good question என சொன்னாலே - பதில் தெரியவில்லை, பதில்போல் எதையாவது எப்படி சடையலாம் என யோசிக்க டைம் எடுக்கிறார்கள் என்பதே அர்த்தம்🤣). ஆனால் நான் தமிழ் காங்கிரசை பற்றி கேள்வி கேட்க நீங்கள் கூட்டணி, கூட்டமைப்பு பற்றி பதில் ஏன் எழுதுகிறீர்கள். அவர்கள் பிஸ்கோத்துகள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கேள்வி காங்கிரசார் பற்றியது. மீள முயலவும்🤣 அதுக்கு கனவானாக இருக்க வேண்டுமே🤣. என்னதான் இருந்தாலும் ஜிஜி கெட்டிக்காரன். கோர்ட்டு பக்கம் தலைவைத்தும் படுக்காத பாரிஸ்டருக்குத்தான் கனவான், குணவான், தட்டி வான் எந்த அரசியலும் செய்யத்தெரியாதே🤣
  8. அப்போ கஜேஸ் ஏன் போன மாகாணசபை தேர்தலை புறக்கணித்தனர்? அதனால் அவர்கள் ஈட்டிய அரசியல் இலாபம்தான் என்ன? பொன்னம்பலம் குடும்பத்தின் வாரிசு அரசியலுக்காகவும் கஜனின் ஒற்றை எம்பி கதிரைக்காகவும் நடத்தபடும் கம்பெனிதான் காங்கிரஸ். வாரிசு அரசியலை ஒழிப்பதாயின் முதலில் எமது நாட்டில், எமது ஊரில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
  9. நான் ஒரு விடயத்தில் மட்டும் அவர்களின் நடவடிக்கையை போற்றி உள்ளேன். ஆனா தமிழர் உரிமைக்கு ஜேவிபி ஏனையோரை விட அல்லது நிகரான ஆபத்து என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எனது நிலைப்பாடு - மாற்றான் தோட்டம் முழுவதும் நாற்றம் எடுத்தாலும் அதில் ஒரு மல்லிகை இருப்பின் மணக்கும். நீங்கள் அனுர காவடி. இரெண்டும் ஒன்றல்ல.
  10. தெரிந்தால் ஏன் யாழில் வந்து எழுதி, நேரத்தை பாழாக்கும் வீண் பேச்சுகாரர் என்ற பழிக்கு ஆளாகி இருக்க மாட்டேனே வசி 🤣. அண்மையில் இந்தியாவில் உழைத்த கறுப்பை, எப்படி மொரொசியஸ் வழியாக மீண்டும் இந்திய பங்கு வர்தகத்தில் இறக்கி, கறுப்பை வெள்ளை ஆக்குவதோடு, இலாபமும் பார்கிறார்கள் என ஒரு வீடியோ பார்த்தேன். அப்படி பல வழிகள் இருக்கலாம். அச்சொட்டாக தெரியவில்லை ஆனால் ஏதோ ஒரு வகையில் செய்கிறார்கள். மொமட் அல்பாயிட், டயனாவின் காதலர் டோடியின் தகப்பன். ஆரம்பத்தில் கோலமாவு, மற்றும் லெதர் வியாபாரம் அதில் வந்ததை வெள்ளையாக்கி பெரும் செல்வந்தரானார். ஆனால் ஹை கோர்ட் வரை போயும் பாஸ்போர்ட் கொடுக்கவில்லை. எந்த குற்றவியல் வழக்கிலும் குற்றம் தீர்க்கவில்லை - அதாவது அரசால் நிறுவ முடியவில்லை ஆனால் செய்கிறார் என தெரிந்திருந்தது.
  11. இரும்பு…. தேவைப்பட்டால் துருப்பிடிக்கும் 🤣 நல்ல ராணி காமிக்ஸ் புத்தகங்கள் போல பெயர் வைத்துள்ளார்கள்… இரும்பு மனிதன்… மாயாவி… மங்கயர்கரசி அம்மா என்ன லேடி ஜேம்ஸ்பாண்டா🤣
  12. இரெட்டை வரி ஒரே அடி ஹைக்கூ —-கவிஞர் அல்வாயான்—
  13. குற்றவாளிகள், பாலியல் விடயங்களில் ஈடுபடுவோர், அரசியல்வாதிகள் இந்த மூவரும் தமக்கு தேவைப்படின் இனபேதம் பார்ப்பார்கள். தேவைப்படின் இணைந்தும் செயல்படுவார்கள். அன்றும் இன்றும். முன்பும் கொழும்பின் பல குடு காங்சிகள் மூவின பிரதிநிதிதுவத்தை கொண்டிருந்தன.
  14. அருமை கோபி, அருமை. குறிப்பாக, ஐஸ், நஞ்சாகும் உணவு, புதைகுழிகள் பற்றிய கவிதைகள் அபாரம். ஆனால் இவை ஹைகூவின் வரைவிலக்கணத்துள் பொருந்துமா என்பது தெரியவில்லை, இதை ஒத்த சென்ரியு வகை கவிதை போலவே இருக்கிறது.
  15. இந்த விடயத்தில் அனுரா ஜேவிபி அரசை நானும் போற்றுகிறேன். வரும்….ஆனா வராது.
  16. இதுதான் வெள்ளைகாரன் அடிக்கடி சொல்லும் thin line வாதா. மெல்லிய கோட்டுக்கு இந்த பக்கம் நிற்கும் வரை நகைச்சுவை, அந்தபக்கம் போனால் கெட்டவார்த்தை🤣.
  17. இதுவும் நாட்டுக்கு நாடு வேறுபடும் ஒன்றே. யூகேயில் 135, ஆனால் அயர்லாந்தில் 150 என்கிறது ஜெமினி. அவுசில் 145 போல் உள்ளது. அதே போல் சில வாகனங்களில் 135 உயரமான பிள்ளையின் பாதம் முழுவதுமாக தரையில் பதியாது. நான் மேலே சொன்ன வரைவிலக்கணத்தை கடைப்பிடித்தால்- சீட்பெல்ட் போட்டாலும் வழுக்கி கொண்டு போய் அடிபடுவதில் இருந்து தவிர்க்கலாம். கொசுறு நாம் இப்போ பாவிக்கும் மூன்று புள்ளி இணைப்பு சீட் பெல்டை கண்டுபிடித்தது சுவீடனை சேர்ந்த என் அபிமான நிறுவனம் வொல்வோ. அதற்கு புலமைசார் உரிமை கோரி ஒரு பெரிய தொகையை பார்திருக்கலாம், ஆனால் இந்த தொழில்நுட்பத்தை மானிட பாதுகாப்புக்கென இலவசமாக கொடுத்தனர்.
  18. இது நாட்டுக்கு நாடு வேறு படுவதாக இருக்கலாம். யூகேயில் குழந்தைகளை முன்னிருக்கையில் அமர்த்தலாம். ஆனால் குழந்தைகள் இருக்கை கட்டாயம். அதிலும் குழந்தை-இருக்கை பின்னோக்கியது எனில் ஏர்பேக் தற்காலிக செயழிழப்பு செய்யதல் வேண்டும். ஆனால் சிறந்த வழி, பின்னிருக்கையில் அமர்த்துவதே.
  19. ம்ம்ம்… இந்தியா அல்லவா…. அப்படித்தான் இருக்கும். சடுதியாக பிரேக் போடுவது என்பது வாகனம் ஓட்டும் போது எதிர்பார்க்க வேண்டிய ஒன்று. அதுதான் டிரைவிங் டெஸ்டில் இதையும் சோதிப்பார்கள். யூகே சட்டப்படி ஒரு வாகனத்தை பின்னால் இருந்து அடித்தால் அடித்தவர் மீதுதான் பிழை. மிக, மிக அரிதாக சிசிடிவி போன்ற சாட்சிகள் இருந்தால் மட்டுமே அடிவாங்கியவர் மீது குற்றம் காணப்படும். அப்போது கூட 50:50 என்றே முடியும்.
  20. கார் முன் இருக்கைகளில் குறித்த வயதுவரை குழந்தைகளை உட்கார வைத்தல் ஆகாது. பின் இருக்கையில் கூட, இருக்கையின் அடித்தளத்தில் பயணியின் பிட்டம், தொடை பகுதி சமாந்தரமாக பதிந்து, முழங்கால் மூட்டு 90 பாகை வளைந்து, பாதம் தரையில் சமாந்தரமாக பதியும் அளவு உடல் உயரம் வளரும் வரை பூஸ்டர் சீட் எனும் துணை இருக்கை பயன்படுத்த வேண்டும். முன்னிருக்கையில் சில கார்களில் ஏர் பேக் கை தற்காலிகமாக செயலிழிக்க செய்யும் வசதி உள்ளது. இது குழந்தைகளை பூஸ்டர் அல்லது சைல்ட் சீட்டில் வைத்து முன் இருக்கையில் அமர்த்த உதவினாலும். பின் இருக்கையில் இவற்றை போட்டு அமர்துவதே மிக பாதுகாப்பானது. இதை எல்லாம் விட்டு விட்டு, குழந்தையை டிரைவரின் மடியில் வைத்து ஓடி விட்டு, ஏர் பேக்கை குறை சொல்ல முடியாது.
  21. அவர்: இந்தாய்யா…உண்மையை சொல்லு….நீ பிட்பாக்கெட் அடித்தாயா? இல்லையா? இவர்: நான் ஐநா சபையை பார்த்து கேட்கிறேன்… ஓ ஐ நா சபையே உனக்கு வெட்கம் இல்லையா? எத்தனை கொடுமைகளை நீ கவர் எடுத்து மறைக்கிறாய்…. நான் வத்திக்கனை நோக்கி சவால் விடுகிறேன்…. ஓ …வத்திக்கனே….🤣
  22. யாழ்பாணம்…. படகு….. தமிழ் நாடு….. வட இந்தியா… நேபாளம்…. ஐரோப்பா…. 1991 இல் இன்னொரு முற்றிலும் வேறுபட்ட காரணங்களுக்காக தேடப்பட்ட இன்னொரு இலங்கையை சேர்ந்த குழுவும்…. இதே பாதையில் தப்பலாம் என நம்பவைத்து ஏமாற்றப்பட்டதாக சொல்வார்கள். இதை வாசிக்க அன்றைய பத்திரிகை செய்திகள் நினைவுக்கு வந்தது.
  23. நன்றி. இவ்வாறு யாழ்க்களத்தில் இன்பம் துய்ப்பதை அனுமதிக்கும் தகுதிகாண் அதிகாரியாகியமைக்கு வாழ்த்துக்கள்🤣. நோ…நோ….சீமானை எதிர்ப்பது என்பது மனைவி மாதிரி மாறாது. விஜை பக்கத்து வீட்டில் புதிதாக குடி வந்த நல்ல பிகர் மாதிரி. பார்க்கலாம்…ரசிக்கலாம்…என்னதான் இப்படி வீட்டுக்குள்ளே அடைஞ்சு கிடப்பதா என ஆதங்கப்படலாம்… இவ்வளவு ஏன்…. பாஜகவோட பைக்கில் ஏறி சுற்றினால் சீமானை திட்டுவது போலவே ஏசலாம். இரெண்டையிம் ஒப்பிடவே முடியாது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.