Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. சீமான்: 3 மாத விசாரணைக்கு உத்தரவிட்ட ஹைகோர்ட்- 2 மாதத்தில் இழப்பீடு தர ஆர்டர் போட்ட சுப்ரீம் கோர்ட்! Mathivanan MaranUpdated: Monday, March 3, 2025, 16:30 [IST] சென்னை: நடிகையின் பலாத்கார புகாரை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை டிஸ்மிஸ் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றமோ, சென்னை உயர்நீதிமன்றத்தின் 'விசாரணை' உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. நடிகை தம் மீது கூறிய பலாத்கார புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் டிஸ்மிஸ் செய்திருந்தார். அப்போது நீதிபதி கூறியிருந்ததாவது: சீமான் மீதான நடிகையின் பாலியல் பலாத்கார புகார் தீவிரமானது; சீமான் மீது நடிகைக்கு எந்த காதலுமே இல்லை. குடும்ப சிக்கல் காரணமாகவே சீமானை நடிகை சந்தித்தார். ஆனால் சீமானோ, திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகையுடன் உறவு வைத்துள்ளார்; நடிகையே வழக்கை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது; ஆகையால் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்வதற்கு முகாந்திரமும் கிடையாது; பலாத்கார புகார் மீதான விசாரணையை முடித்து 12 வாரங்களுக்குள் போலீசார் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி இளந்திரையன் கூறியிருந்தார். Also Read சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகவே உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். சீமானின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா இன்று விசாரித்தனர். இந்த விசாரணைக்குப் பின் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு: 2 மாதங்களுக்குள் சீமான், நடிகை தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும். சீமான் மீது விசாரணை நடத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்வழக்கின் விசாரணை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. சீமானின் மேல்முறையீட்டு மனு மீது தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரிகிறதா? அமித் ஷாவின் பணிப்பில், உச்சநீதிமன்றம் “மாமா” வேலை பார்க்கிறது. அதாவது சீமான் தன்வாயால் பாலியல் தொழிலாளி என அழைத்தவருக்கு சீமான் சட்டப்பிரகாரம் இழப்பீடு கொடுக்க வேண்டுமாம்🤣. அண்ணனுக்கு 2 மாதகால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பூலோக வரலாற்றிலேயே பாலியல் தொழிலாளியோடு குடும்பம் நடத்தி, இழப்பீடும் கொடுக்க போகும் முதல் அரசியல் ஆளுமை அண்ணனாகத்தான் இருக்கும். அண்ணன் அப்படிதான் இழப்பீடு கொடுக்க மாட்டேன் என வாய் ஜம்பம் அடித்துள்ளாராம். எப்படியும் டெல்லியில் வைத்து கேசை முடக்கி விடலாம் என்ற எதிர்பார்ப்பு
  2. பரபரப்பாக போன வழக்கு.. வடஇந்தியாவின் பிரபலமான வழக்கறிஞரை களமிறக்கி.. ஆட்டத்தை மாற்றிய சீமான் Shyamsundar IUpdated: Monday, March 3, 2025, 16:15 [IST] நடிகை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு தடைக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு இன்று விசாரிக்கப்பட்டது. Also Read சீமானுக்கு எதிராக நடிகை கொடுத்த பாலியல் வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பும் கலந்து பேசி உடன்பாடு காண அறிவுறுத்தி, 12 வாரத்தில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Seeman விஷயத்தில் Vijayalakshmi-க்கு ஆதரவாக Tweet போட்ட Kajal Pasupathy | Oneindia Tamil இந்த வழக்கில் சீமானுக்கு சாதகமாக உத்தரவு வர அவரின் வழக்கறிஞரின் வாதம் முக்கிய காரணம் ஆகும். வடஇந்தியாவில் பிரபலமாக இருக்கும் வழக்கறிஞர்களில் ஒருவரை களமிறக்கி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த வழக்கின் போக்கை மாற்றி உள்ளார். சீமான் வழக்கறிஞர் இந்த வழக்கு, ஜஸ்டிஸ் பி.வி. நாகரத்னா மற்றும் ஜஸ்டிஸ் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் முன் பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கில் சீமானுக்கு ஆதரவாக மிக முக்கியமான வழக்கறிஞரான நிர்நிமேஷ் துபே ஆஜராகி உள்ளார். Recommended For You பாலியல் குற்ற வழக்கில் சீமானுக்கு ஆஜராகும் நிர்நிமேஷ் துபே இதற்கு முன் ஆஜரான ஆன வழக்குகள் அர்னாப் கோஸ்வாமி வழக்கு, ஒரு கிரிக்கெட் லீக் அணி ஒன்றின் வழக்கு, இன்னும் சில பாஜகவினர் தொடர்புடைய வழக்குகள் ஆகும். அர்னாப்பிற்கு அவசர அவசரமான ஜாமீன் வாங்கி தந்தது இவர்தான். அதிக பீஸ் வாங்க கூடிய பிரீமியர் வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வடஇந்தியாவின் பிரபலமான வழக்கறிஞர்களில் ஒருவர். என்ன வழக்கு பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனக் கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய சீமான் தாக்கல் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. You May Also Like நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த அந்த உத்தரவில், வழக்கை ஆராய்ந்த போது நடிகைக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை, குடும்ப பிரச்சினை திரைத்துறை பிரச்சனை காரணமாக சீமானை அந்த நடிகை குடும்பத்தினர் அணுகி உள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை உடன் சீமான் உறவு வைத்துள்ளது தெரிய வருவதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சட்டப்படி அனைவரும் அறியும் வகையில் திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியிருந்தார் என்றும் அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆறு ஏழு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், விஜய லட்சுமியிடம் பெருந் தொகையை பெற்றிருப்பதாகவும் நடிகை புகாரில் தெரிவித்துள்ளதாக உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பிதாகவும் நடிகை கூறியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான், புகாரை நடிகை திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது எனத் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. விஜய லட்சுமி, சீமான் மீது தெரிவித்த புகார்கள், அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகிறது எனக் கூறிய நீதிபதி, சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக்குத்தான் உச்ச நீதிமன்றம் ஸ்டே வழங்கி உள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-seeman-statement-against-sc-judgement-may-cause-him-problem-684585.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards பாஜகவின் ஆஸ்தான வக்கீல்களில் ஒருவரை அண்ணனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் அமித் ஜி.
  3. ஒரு சின்ன தன்னிலை விளக்கம் என்மீதான தனிமனித தாக்குதல்களின் இன்னொரு வடிவமாகவே நான் இந்த சதிகோட்பாடு, conspiracy theorist என்ற அவதூறையும் பார்க்கிறேன். சதி கோட்பாடு என்றால் ஒரு சிறு உண்மையை வைத்து ஒரு பொய்யை கட்டுவது. இங்கே அப்படி அல்ல, சுப முத்துகுமார் மரணம், அவர் இடுகல் உடைப்பு, சீமானின் மறுதலிப்பு தொட்டு, 15 வருடமாக, இப்போ army wing வரை சீமான் ரோவின் கையாள் என்பதற்கு நான் ஒரு சந்தர்ப சாட்சியங்களின் கோவையையே யாழில் பதிந்துள்ளேன் (வேறுபட்ட திரிகளில்) (dossier of circumstantial evidence). ஆனால் கோஷானை தர்க்கத்தில் வென்று விட வேண்டும், அல்லது சீமானை தப்பாக எண்ண முடியாமல் உள்ளது போன்ற காரணங்களால் இவற்றை எப்போ, புலவர், குசா அண்ணை, ஓணாண்டி, ஏராளன் என பலர் ஏற்க மறுக்கின்றனர். விசுகு அண்ணா ஒரு படி மேலே போய் கோஷான் சொல்வதால் சில உண்மையை கூட நான் ஏற்பதில்லை என எழுதுகிறார். அதன் தொடர்ச்சிதான் இந்த “சதிக்கோட்பாடு” சேறடிப்பும். என்றோ ஒரு நாள், அது சீமான் முதலமைச்சர் ஆன பின்பாக கூட இருக்கலாம், நான் சொன்னது உண்மை என நீங்கள் அனைவரும் உணர்ந்தே ஆவீர்கள். அப்போ, சீமான் என்ற நச்சை வளர நீங்கள் செய்த செயல்கள் இட்டு, ஒரு ஈழத்தமிழனாக உங்கள் மனச்சாட்சிக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும். ஆனால் நான் உங்கஊக்காக காத்திருக்க போவதில்லை. சீமான் வெளுப்பு தொடரும்.
  4. நீங்கள் மேலே தந்த ஆங்கில பந்தியே சொல்கிறது இப்படி👇 இதைதான் நான் 2ம் பக்கதில் விளக்கி எழுதினேன். சீமான் வீட்டில் துவக்கோடு பிடிபட்டவருக்கு ஏன் இவை பொருந்தாது என. நிச்சயமாக பிடிபட்டவர் ரோவின் ஆள்தான். உங்களை யோசிக்க வைக்க மேலும் சில விடயங்கள். நாம் தமிழர் அதிகார பூர்வ இணையதளத்தில் Ex Army Wing. என்று எதுவுமே இல்லை. இதுவரை அப்படி ஒரு பாசறை வெளிவந்ததும் இல்லை. துப்பாக்கி பிடிபட்டதும் அவசர அவசராம இட்டு கட்டபட்டதுதான் இந்த விங். நாதக பாசறைகள் எல்லாம் தமிழில்தான் இருக்கும். இவர்கள் மட்டும் ஆங்கிலத்தில் பெயர்? இதுவும் ரோ அவசர கோலத்தில் அள்ளி தெளித்த கோலம் இது என்பதையே காட்டுகிறது. இன்னொரு வரலாற்று சான்று. தலைவர் தமிழ் நாட்டில் கைதானபோது துவக்கோடுதான் பிடிபட்டார். ஆனால் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து இதை அமுக்கினர். 9
  5. இதற்கான விளக்கம் 2ம் பக்கதில் உள்ளது. பிகு இன்னும் ஒரு விடயம். இந்த துப்பாக்கியோடு பிடிபட்டவர் கேஸ் என்னாயிற்று? ஏதாவது செய்தி வந்ததா? நான் காணவில்லை (வந்திருக்கலாம்). ஒன்றில் அவரில் பிழை என வழக்கு போட வேண்டும் அல்லது, பொலிஸ் பிழை என மன்னிப்பு கேட்டு துப்பாக்கியை மீள கொடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், சீமான் எல்லோரும் சேர்ந்து அப்படியே இதை அமுக்கிவிட்டார்கள் ?. இவரை பிடித்த பொலிஸ்காவலர் மீது பழைய வழக்கு ஒன்றை தட்டி எடுத்து சம்மன் அனுப்பி உள்ளார்கள். For god’s sake கொஞ்சம் கண்களை திறந்து என்ன நடக்கிறது என்பதை உய்தறியுங்கள். இடமும், வலமும் புலானாய்வாளர்கள் மத்தியில் வளர்ந்தவர்கள் நாம் இப்படி கண்ணை மூடி கொண்டா இருப்பது?
  6. டிஸ்கி இந்த வழக்கை இழுத்தடிப்பது சீமாந்தான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மடியில் கனம் இல்லை எனில் ஏன் வழக்கை சென்னை ஹைகோர்ட்டில் சந்தித்திருக்க முடியாது ? ஏன் டெல்லி வரை போய் தடை உத்தரவு வாங்க வேண்டும்? இதில் கோர்ட்டுக்கு வெளியே இருதரப்பும் பேசி தீர்க்க கூடிய வாய்ப்பை பற்றி உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது - ஒரு பாலியல்தொழிலாளியுடனா பேசி தீர்க்க சொல்கிறது உச்ச நீதிமன்றம்? ஆகவே சீமான் விஜி அண்ணியை பாலியல் தொலிலாளி என்றது கேள்விக்குள்ளாகிறது. உண்மையில் அரசியல் ரீதியில் சீமான் இப்படி தடையுத்தரவு பெற்றது அவரின் அரசியல் எதிரிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் - திமுகவுக்கு விஜி அண்ணிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதல்ல நோக்கம். இனி ஒவ்வொரு நாளும் விஜி அண்ணி வீடியோ போடுவார், சிமானிடம் அதை பற்றி கேட்க சீமான் உளறுவார், அதை வைத்து இன்னும் அரசியல் செய்வார்கள். சீமான் ஒரு ரோ ஏஜெண்ட் என கண்டு கொண்டு எதிர்க்கும் என்போன்றோருக்கும் இது சீமானை அம்பலபடுத்த, மேலதிக சந்தர்ப்பம்.
  7. நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன? நடிகை ஒருவரின் புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் 12 வார காலத்துக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 27-ம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டிய சீமான் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரின் வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தில் ஆஜராகி விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கடிதம் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, காவல்துறை, சீமான் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது காவல்துறை. அதை அகற்றிய சீமானின் வீட்டு உதவியாளருக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட விவகாரமும், அதைத் தொடர்ந்த சீமானின் பேச்சுகள் அரசியல் அரங்கில் விவாதமானது. உச்ச நீதிமன்றம் இந்த நிலையில், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து சீமான் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சீமான் தரப்பு, ``இந்த வழக்கு ஏற்கெனவே மூன்றுமுறை தொடரப்பட்டு திரும்பப்பெறப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. புதிய அரசு ஆட்சியமைத்ததும்தான் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் இருக்கிறது" என்ற வாதங்களைப் முன்வைத்திருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``எதிர்மனுதாரர் தங்களின் தரப்பு விளக்கம் என்ன என்பதற்கு பதிலளிகக் நோட்டீஸ் வழங்கப்படும். இரு தரப்புக்கு இடையே நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே, எதிர்மனுதாரர் பதிலளித்தப் பிறகு இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரித்தப் பிறகே காவல்துறை சீமானை விசாரிக்க வேண்டும். அதுவரை இந்த விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டிருக்கிறார். https://www.vikatan.com/amp/story/government-and-politics/interim-stay-on-trial-against-seeman-case-by-supreme-court
  8. இல்லை… ஆதாரம் 1 மேலே ஏராளன் இந்தியாவில் தனிநபர் துப்பாக்கி வைத்திருக்கும் சட்டம் பற்றி இணைப்பை தந்தார். அதை விளக்கி நான் எழுதி உள்ளேன். எந்த வகையிலும் தனிநபர் துப்பாக்கி பாதுகாப்புக்கு ஏற்புடையவர் அல்ல சீமான். ஆதாரம் 2 அவர்களே நாதகவில் Ex Indian Army Wing இருப்பதை ஒத்து கொண்டதும். ஒரு தமிழ் தேசிய கட்சிக்கு, தமிழ் நாட்டில் ஏன் இப்படி ஒரு பிரிவு என்ற கேள்வியும். இது அதிமேதாவித்தனம் இல்லை. மிக சாதாரணமாக கண்ணை உறுத்தும் விடயங்கள். ஓம் - சீமானுக்கு ரோ பாதுகாப்பு கொடுக்கிறது என்பதை என்னால் - அச்சொட்டாக நிறுவ முடியாதுதான். ஆனால், சீமான், றோ, மத்திய அரசு - ஒரு அச்சில் இயங்குகிறன என்பதற்கு - தேவைக்கும் அதிகமாக ஆதாரங்கள் தந்துள்ளேன். கண்களையும், மனசையும் திறந்து வைத்தால் போதும்.
  9. சீமானுக்கு நாவடக்கம் வேண்டும் என ஏற்றமைக்கு நன்றி. மீண்டும் சொல்கிறேன். விஜி அண்ணி சீமானை பிரிந்த பின் பாலியல் தொழில் செய்தே இருந்தாலும் - சீமான் அவரை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றினாரா இல்லையா என்பதை அதை வைத்து தீர்மானிக்க முடியாது. பாலியல் தொழிலாளியோ இல்லையோ, அது சீமானுடன் வாழ முன்போ, இல்லையோ - சட்டம் சகல பெண்களுக்கும் ஒரே பாதுகாப்பைத்தான் தருகிறது. ஒரு பாலியல்தொழிளாலியிடம் பெரியார் அவரின் 20 வயதுகளில் போனது போல் போய், பெற்ற சேவைக்கு பணத்தை கொடுத்திருந்தால் அது பாலியல் வன்கொடுமை அல்ல. ஆனால் ஒரு பாலியல் தொழிலாளியை, உன்னை திருமணம் செய்வேன் என ஏமாற்றி ஓசியில் உறவு கொண்டால் - அது வல்லுறவு. இதில் சீமான்-விஜி உறவு என்ன வகையானது என்பதையும் சாட்சி அடிப்படையில் கோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும்.
  10. மீண்டும் நீங்கள் திரி நெடுக மட்டும் அல்ல, சில வருடங்கள் முன் நான் எழுதியதை கூட வாசிக்காமல் கேள்வி கேட்பதாக தோன்றுகிறது எப்போ. நீங்கள் எஞ்சினியர் என்பதால் சூத்திரம் போல எழுதுகிறேன்😃. பாலியல் வன்கொடுமை = இசைவு (consent) இல்லாமல் உறவு கொள்ளல். Obtaining consent through deception, இசைவை ஏமாற்றி பெறுதல் மூலம் உறவுகொள்ளலும் = பாலியல் வல்லுறவு (ரேப்). இங்கே குற்றசாட்டு இசைவை “திருமணம் செய்வேன்” என்ற ஏமாற்றின் அடிப்படையில் அல்லது கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டேன் என ஏமாற்றி சீமான் பெற்றார் என்பதும், ஆகவே அவர் செய்தது பாலியல் வல்லுறவு என்பதும். இதை சாட்சிய அடிப்படையில் கோர்ட் முடிவு செய்ய வேண்டும். நிச்சயதார்தம் - இதை நிச்சயம் கோர்ட் கவனத்தில் எடுக்கும். ஆனால் ஒருவருக்கு நிச்சயம் ஆனபின், இன்னொருவருடன் காதல் ஏற்பட்டு, அவருடன் திருமணம் செய்யும் நோக்குடன் கூடி வாழ்வது கூட நடக்க கூடியதே. இது நீங்கள் நினைப்பது போல் - ஒரு smoking gun சாட்சி (விஜி அண்ணிக்கு எதிராக) இல்லை. பெரியார் மீது வழக்கு இல்லை ஏன் என்றால் அவர் போனது பாலியல் தொழிலாளியிடம் என்பதை ஏற்கிறேன். ஆனால் சீமான் மீது வழக்கு வந்து விட்டது? ஏன்? அவர் குடும்பம் நடத்தியது பாலியல் தொழிலாளியிடம் அல்ல. மாறாக காதலியிடம் என்பதுதான் விஜி அண்ணி வாதம்.
  11. எதற்கு ஆதாரம் கேட்கிறீர்கள்? இந்த விடயத்தில் நீங்களும் வைரவனும் கட்டி பிரண்டதுதான் பக்கம் பக்கமாக உள்ளதே? துவாரகா வீடியோ வந்தபின் அது அவர் என நீங்கள் சொல்லவில்லை. ஆனால் வரமுதல், அருணாவை நம்பலாம், நல்ல செய்தி வரும், என வரப்போவது துவாரகாதான் என்ற தொனியில் நீங்கள் எழுதவில்லையா? அதைத்தான் சொன்னேன்.
  12. அதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் கதிர்காமரை போட்டதும். “அடியின்” ஒரு அங்கம்தானே தவிர நாய் குலைத்தது என்பதால் திருப்பி அவர் ஒரு போதும் குலைத்ததில்லை. உதாரணம் - பிரிந்த பின் கருணா குலைத்த எந்த குலைப்புக்கும் அவரோ, இயக்கமோ ஏட்டிக்கு போட்டியாக பதில் சொல்லவில்லை. நேற்றே எதிர்வு கூறி இருந்தேன். குற்றம் அற்றவர் எனில் ஏன் சீமான் டெல்லி வரை போய் தடை பெற வேண்டும்?
  13. ரோவின் ஈழத்தமிழர் விடய தலையீடுக்கு முடிவு திகதி என்று ஒன்றில்லை. யார் போலிகாவை இறக்கினார்கள் - அப்பட்டமான இந்தியன் டெலி டிராமா அது இதே யாழ்களத்தில் குசும்பை காட்டவில்லையா? நான் முன்பே பலதடவை மிக தெளிவாக எழுதிவிட்டேன், சுப முத்துகுமார் கொலை முதல் எப்படி சீமான் மிரட்டலுக்கு பயந்து ரோவின் கைக்கூலி ஆகினார் என்பதை. நான் இதுவரை எழுதிய அத்தனை சந்தர்ப சாட்சி கோர்வையையும் விட்டு விடுங்கள். நேற்று நாம் தமிழர் கட்சியில் Ex-Indian Army Wing என ஒரு விங் இருப்பதும், அவர்கள் சீமானுக்கு துப்பாக்கி பாதுகாப்பு வழங்குவதும், இப்படி வழங்க இந்திய சட்டத்தில் இடம் ஏதும் இல்லை என்பதையும் நான் ஆதாரபூர்வமாக எழுதினேன். ஒரு தமிழ் தேசிய கட்சியில் ஏன் Ex Indian Army Wing? அவர்களை பார்த்தால் எவரும் ரிட்டையர் ஆன ஆட்கள் இல்லை. முடி நரைக்காத கட்டுமஸ்தான ஆபீசார்கள். இராமதாஸ்களுக்கு, திருமாவுக்கு, இன்னும் எத்தனையோ பேருக்கு இல்லாத இந்த பாதுகாப்பு படை ஏன் சீமானுக்கு மட்டும்? ஏன் என்றால் சீமான் ரோவின் ஏஜெண்ட். ஒரு அளவுக்கு மேல் ஸ்டாலின் கூட சீமான் மீது கைவைக்காமைக்கு இதுவே காரணம். இதுமட்டும் அல்ல சுப முத்துகுமார் கொலையை ரோ செய்ய அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், சீமானும் அன்றை திமுக அரசும், குறிப்ப்பாக ஜாபர் சேட். இதுதான் சீமானின் ரோ பின்ணணி. 👆நாதகவின் ex Indian Army wing என்ற பெயரில் சீமான், வீடு, குடும்பத்தை சூழ நிறுத்தபட்டிருக்கும் “ ஆயுதம் தாங்கிய அதிகாரிகள்”
  14. இதை கருத்து வெற்றிக்காக எழுதாமல் விடவில்லை. இது மிகவும் வெளிப்படையாக தெரியும் விடயம் என்பதால் இதை எழுதவில்லை. நிச்சயமாக இதை பாவித்து சீமான் விமர்சிக்கும் அத்தனை பேரும் அரசியல் செய்கிறனர். பிஜேபி அதன் கூட்டணி கட்சியான பாமக ஆதரவு கொடுக்கிறது. அதிமுக விஜை நழுவலில் உள்ளார்கள் இந்த கால தாமததிற்கு அனைவரையும் விட மிக முக்கிய காரணம் சீமான். ஒவ்வொரு முறை இந்த வழக்கு மேலே எழும் போதும் தன் அரசியல் சக்தியை பாவித்து அதை முடக்கியவர் சீமான். ஜெ - காலத்தில் இந்த வழக்கை அதிமுக கையில் எடுக்கும் என பயம் காட்டியவுடன் - அவருக்கு ஆதரவு வழங்கி வழக்கை முடக்கினார். எடப்பாடி காலத்திலும் கனிம மணல், தூத்துகுடி, என பலதில் “சித்தப்பா” எடப்பாடி ஆதரவு நிலையை எடுத்து வழக்கை முடங்க செய்தார். திமுக வந்து விஜி அண்ணி திரும்பி வந்ததும், அவருடன் ஜீவனாம்சம் பேச்சு, உதயநிதியிடம் நள்ளிரவில் போன் பேச்சு என வழக்கை முடக்கினார்… மிக முக்கியமாக நீங்கள் எல்லோரும் கவனிக்க தவறும் விடயம் ஒன்று - இப்போதும் கூட இந்த வழக்கு பொலிஸ் ஸ்டேசனில் முடங்கித்தான் கிடந்தது. ஆனால் சீமான் தானே ஹைகோர்ட் போய் வழக்கை தள்ளுபடி செய்யும் படி கேட்டார். அவரின் கெட்ட காலம் ஒரு நேர்மையான நீதிபதி முன் வழக்கு போக - அவர் வழக்கை துரிதபடுத்த ஆணையிட்டார். இப்போதும் வழக்கை துரிதமாக நடத்த உதவுகிறாரா? இல்லையே. விசாரணைக்கு போகமாட்டேன் என உதார்விட்டு பின் போனார். நாளை டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு போய், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை தடை செய்ய கோருகிறார் (நிச்சயமாக இது அமித்ஷா ஏற்பாடுதான்). இப்போ சொல்லுங்கள் - இந்த வழக்கை இழுத்தடிப்பது சீமானா இல்லையா?
  15. மேலே எழுதியது எனக்கான நினைவூட்டலும்தான். அது யாவரும் அறிந்த உண்மைதான் எனிலும் கயல் அண்னியின் தாய், காளிமுத்துவின் இரெண்டாம் தாரம் என்பதை நான் எழுதினேன். அது தேவையில்லாதது.
  16. மீண்டும் நினைவுபடுத்துகிறேன். பாலியல் தொழிலாளியே ஆனாலும் அவர்களுக்கும் சட்ட பாதுகாப்பு உள்ளது. ஒரு பாலியல் தொழிலாளியிடம் காசு கொடுத்து சேவையை பெற வேண்டும். இல்லாமல் நான் உன்னை கட்டி கொள்கிறேன் என ஏமாற்றி சேவையை மட்டும் பெற்றதோடு நில்லாமல் அவரின் பணத்தில் சாப்பிட்டும் இருந்தால் - அது குற்றமே. பிகு இது என் அப்பம்மா எனக்கு சொன்னது. நானும் பலருக்கு யாழுக்கு வெளியே சொல்வது. ஒரு பெண்ணின் உள்வீட்டு விடயங்கள் பற்றி நாம் கண்ணால் கண்டால் ஒழிய - கதைக்ககூடாது. நமக்கு பெண்பிள்ளைகள் இல்லாது கூட இருக்கலாம், ஆனால் நாளை மருமக்கள் வருவார்கள், பேரப்பிள்ளைகள் வருவார்கள். #பழிப்பு படலையில் ஏதோ சொல்ல வேண்டும் போல் இருந்தது.
  17. சும் இப்போ சேர்ந்து போட்டி என சொன்னது இதனால்தான். மாவை இல்லாதவிடத்து கிளிநொச்சி தவிர ஏனைய இடங்களில் பலரை சேர்த்து சும் ஒருவழியா முதலவர் ஆகப்பார்கிறார். அப்படி வந்தால் சிறியை விட பதவியில் மேலே போய்விடுவார்.
  18. உங்கள் விஜயலட்சுமி வந்து போகும் டைம்லனையும், சீமான் அரசியல் ஜம்ப் அடிக்கும் டைம்லைனையும் ஒப்பிட்டு பாருங்கள் உண்மை உறைக்கும். நீங்கள் உங்கள் “ஆண்கள் சங்கம்” கண்ணோட்டாதில் (பழைய ஐடி காலத்தில் இருந்து) இதை பார்பதால் பலதை தவறவிடுகிறீர்கள். விஜி அண்ணி இங்கே தான் தான் முதல் மனைவி, கோவிலில் மாலை மாற்றினோம் என்கிறார். கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாற்றினார் ஆகவே அவர் என்னுடன் வைத்த உறவு பாலியல் வல்லுறவு என்பது அவர்வாதம். இன்னொரு விசயம். உங்களுக்கும் இதே போல் எழுதிய ஏனையோருக்கும் - பாலியல்தொழிலாளி என்றாலுமே கூட அவர்களும் மனிதர்கள்தான். எமக்குரிய சட்டம் தான் அவர்களுக்கும். ஒரு பாலியல்தொழிலாழியை திருமணம் செய்வதாக பொய்சொல்லி ஏமாற்றி, உறவு வைப்பதும் குற்றம்தான். சீமான் முதலில் எதுவும் இல்லை என மறுத்து விட்டு இப்போ வெறும் பாலியல்தொழிலாளியுடனா உறவே அது என்கிறார். இதில் விஜயலட்சுமி ஆணாலவும், சீமான் பெண்ணாகவும் இருந்தால் என்ற உங்கள் கேள்விக்கு விடை - அப்படியே இருந்தாலும் - இது விசாரிக்கப்பட வேண்டிய வழக்குத்தான். இங்கே நாம் எப்போதும் வலியுறுத்தியது - நியாயமான விசாரணையை மட்டுமே. இப்போ அரிதாக ஒரு நீதிபதி - ஏன் இத்தனை ஆண்டு தாமதம் என கேட்டு வழக்கை துரிதப்படுத்தி உள்ளார். சீமான் குற்றம் ஏதும் இழைக்காவிடில் இதற்கு சந்தோசப்பட்டு, கேட்டவுடன் பொலிஸுக்கு போய், விசாரணைக்கு ஒத்துழைத்து, வழக்கை வெல்ல அல்லவா முயலவேண்டும்? ஏன் டெல்லிக்கு ஓடி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் நேர்மையான தீர்ப்புக்கு, டெல்லி உச்ச நீதிமன்றத்தை தடை போட கோருகிறார்? தமிழ்தேசியத்தை சீமான் தூக்கி நிற்பதால் அவரின் மீதான பாலியல் வன்புணர்வு குற்றசாட்டை நாம் மழுங்கடிக்க வேண்டும் என்பது மிக கீழ்தரமான நிலைப்பாடு. சீமான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, வழக்கை டெல்லி போய் முடக்காமல், சென்னை ஹைகோர்ர்டில் தான் நிரபராதி என்பதை நிறுவ வேண்டும். அப்போ நீங்கள் போலிக்காவை முந்தள்ளி அவர் துவாரகாதான் என சொல்லியது - அருணா ரோவின் கையாள் என்பதை வெளிகொணர? அதேபோல் இப்போ சீமானை ஆதரிப்பதும் - அவர் ரோவின் ஆள் என இனம் காட்ட? நாங்கள்தான் அவசரடுகிறோம்😂? அப்படியா அண்ணை? பிகு நண்பா..ஓ…நண்பா.. என் காதென்ன punchbag ஆ? இந்த குத்து குத்துகிறீர்களே? காதுகள் பாவம் இல்லையா? (இதன் ஒரிஜினல் வேர்ஷனில் கெட்டவார்த்தை இருப்பதால் மாற்றியுள்ளேன்).
  19. அவர் பாலியல் தொழிலாலிகளிடம் போனார் உண்மைதான் - இங்கே சீமான் பாலியல் தொழிலாலிகளோடு போனார் என்பது அல்ல வழக்கு. வழக்கு சீமான் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார் என்பது. புகார் அந்த பெண் கூறியது. பெரியார் மீதோ வேறு எவர் மீதோ இப்படி ஒரு பெண் புகார் கூறவில்லை. இதுதான் வித்தியாசம். இப்போ சீமான் அவரோடு கணிசமான காலம் கூடி வாழ்ந்த பெண்ணை - பாலியல் தொழிலாளி என்கிறார். அப்போ சீமான் யார்? Pimp ஆ? பெரியார் மட்டும் அல்ல, எனது பாட்டனர், காந்தி உட்பட அநேகர் அப்போ பால்ய திருமணம்தான். அது 80 வருடம் முந்திய உலகு.
  20. அதை இங்கே சுட்டிகாட்டியது. உங்களை தாக்க அல்ல. மாறாக நீங்கள் ஒரு சமூக பிரமுகர். உங்கள் சொல்லை கேட்பவர் பலர் இருப்பார்கள். போலிக்கா, அருணா, சீமான் போன்றவர்களிடம் நீங்களும் ஏமாந்து ஏனையோரும் ஏமாற துணை போகாதீர்கள் என்பதை சொல்லவே. நீங்களே பலதடவை எழுதியுள்ளீர்கள் உங்களுக்கு சீமானில் நல்ல அபிப்பிராயம் இல்லை என. கன விடயங்கள் தெரியாது என. அப்போ ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்? ஏன் சீமான் ex Indian Army wing ஒன்றை வைத்துள்ளார் என யோசித்து கூட பார்க்காமல் அதை ஏதோ தமிழர் இராணுவம் என்ற பீடிகையோடு பகிர்கிறீர்கள். நீங்கள் ஏமாந்தால் ஓக்கே. மக்களையும் கூடவே அழைத்து சென்று கிணத்தில் தள்ளி விடாதீர்கள்🙏. இப்படி சொன்னது விஜி அண்ணி விவகாரத்துக்கு அல்ல. தாயை புணருமாறு பெரியார் கூறினார் என சீமான் ஆதரமில்லாத ஒன்றை கூறினார். மனோதத்துவத்தின் படி projection என்ற ஒரு விடயம் உள்ளது. தம் மனதில் இருக்கும் செக்ஸ் சைக்கோ எண்ணங்களை, இப்படி இன்னொருவர் செய்தார் அல்லது கூறினார் என “சுமத்துவதுதான்” இந்த projection. அப்படி சொல்லிய திரியிலே இது பற்றிய விளக்கத்யும் கொடுத்தேன். நீங்கள் எப்போதாவது யாழுக்கு வருவதால் அது கண்ணில் படவில்லை போலும்.
  21. இரெண்டு வித்தியாசங்களை கவனிக்க தவறுகிறீர்கள். இதே போல் எந்த தமிழ் நாட்டு அரசியல்வாதியின் மீதும் எந்த ஒரு பெண்ணும், பொலிஸ் முறைப்பாடு, கோர்ட் எண்டு போகவில்லை. அப்படி போனால் அவர்கள் நடத்தையும் தூக்கி பிடிக்கப்படும். சீமான் ரோவின் பணிப்பில், ஈழதமிழர்-தமிழக தமிழர் இடையே பகைமூட்டும் ஒரு ஏஜெண்ட் என்பது என் நம்பிக்கை. ஆகவே அவரை அடிக்க கிடைக்கும் சந்தர்பத்தை எல்லாம் பயன்படுத்தி கொள்வேன். இது என் நிலைப்பாடு மட்டுமே.
  22. பாபர் மசூதி புகழ் உச்ச நீதிமன்றம் அமித் ஷா கையில் என்பதும் சீமான் அங்கே விசாரணை இன்றி விடுவிக்கபட வாய்ப்பு அதிகம் என்பது யதார்த்தம். ஆனால் என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு வடிவில் தீர்ப்பு கிடைக்கும்.
  23. அமித்ஷா வழிப்படி நாளைக்கு சுப்ரீம் கோர்ட் என்ன சொல்லும் என்பதை நீங்கள் இருவரும் ஊகித்து விட்டீர்கள் போலுள்ளது. அரசியல் தரகுவேலை செய்து நீதிமன்றில் இருந்து தப்பலாம். ஆனால் மக்கள் மன்று 2026 இல் என்ன தீர்ப்பு கொடுக்கும் என பார்ப்போம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.