Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. கொஞ்சம் கொஞ்சமாக, வெக்கத்தை கக்கத்துள் வைத்துக்கொண்டு, சீனா விமானங்களை, கருவிகளை மட்டும் அல்ல, ஒட்டு மொத்த தாக்குதல் சூழலியல்லையும் (eco system) பாக்குக்கு வழங்கியதை ஏற்று கொள்ளும் இந்திய பாதுகாப்பு அமைச்சால் வழி நடத்தப்படும் அமைப்பினர். இதில் இவர் இன்னும் ஒன்றையும் ஒத்து கொள்கிறார் இப்போ பாகிஸ்தான்-சீனா எல்லை ஒரே எல்லைதான், 7000 கிமி யை இந்தியா பாதுகாக்க வேண்டி உள்ளது என்பதை. இதைதான் 2019 இல் ராகுல் காந்தி இந்திய பாராளுமன்றிலேயே எச்சரித்தார். இந்தியாவின் பல தசாப்த கஸ்மீர் கொள்கையை மாற்றி, ஆர் எஸ் எஸ் சின் கஸ்மீர் கொள்கையை இந்தியா கொள்கையாக பிஜேபி அரசு வரித்து கொண்டதன் பின் விழைவே இந்த 7000 கிமி ஒருங்கிணைந்த பாக்-சீனா போர்டர். இப்படி விழ வட கொரியாவுக்கு வாய்புண்டு - ஆனால் அவர்களில் கைவைக்கவே அமேரிக்காவுக்கே பயம். ஆனால் பாகிஸ்தானில் அரசுகள் விழும், எழும் ஆனால் நிழல் அரசு (இராணுவம்) அப்படியேதான் இருக்கும். இந்தியா, இந்தியாவாக இருக்கும் வரை பாக்கிஸ்தானில் என்ன பஞ்சம் வந்தாலும், ஆமியை மக்கள் எதிர்க்கமாட்டார்கள் (புலிகள் இருக்கும் வரை அறகளவும் வந்திராது என்பதை போல).
  2. இப்படி ஒட்டு மொத்த கிரிகெட்டையும் இந்தியா புறக்கணித்தால் விளையாட்டு தப்பும்🤣. அவர்கள் தங்கள் தரக்குறைவா ஐ பி எல் லில் மாறி மாறி விளாசி இன்பம் அடையட்டும்🤣.
  3. எப்படி இராணுவ வல்லமையில் சீனாவை அமேரிக்காவுடன் ஒப்பிடல் தப்போ, அதே போலத்தான் பாக்கை இந்தியாவிடன் ஒப்பிடுவதும். சீனாவின் பலத்த ஆதரவு இல்லாவிட்டால், பாக்கை இந்தியா ஊதி தள்ளிவிடும். ஆனால் வடகொரியா போல பாக்கையும் பாதுகாக்க சீனா முடிவெடுத்து விட்டது. அக்‌ஷய் சின் பை பாக், சீனாவுக்கு பரிசாக கொடுத்ததில் இருந்து இந்த நல்லுறவு இருக்கிறது. ஆனால் பாக் இதுவரை காலமும் அமெரிக்க, சீனா என இரெட்டை குதிரை சவாரி செய்தமையால் சீனா ஒரு அளவுக்கு மேல் பாக்குக்கு ஆதரவாக இறங்கவில்லை. ஆர் எஸ் எஸ் சின் கொள்கை வழிப்படி, மோடி-அமித்ஷா கஸ்மீரில் எடுத்த நடவடிக்கைகள், பாக்கை அமெரிக்க சுற்றில் இருந்து கணிசமாக விலக்கி, சீனாவிடம் அடைக்கலாமாக்கி விட்டது. சீனாவுக்கும் உலக நாடுகள் எல்லாவற்றிகும் தண்ணீர் முக்கியம். ஆகவே கஸ்மீரின் களயதார்த்தத்தை இந்தியா தன்னிச்சையாக மாற்ற முனைவதை சீனா தனக்கான ஆபத்து என்றே பார்க்கும். கொரிய தீபகற்பத்தில், இந்து சமுத்கிரத்தில் மேற்கின் பரவலை தடுக்க வட கொரியா, இமாலயத்தில் சீன நலனை பேண பாகிஸ்தான். இரெண்டுமே சீனாவின் சிற்றரசுகள் (vassal sates) தான். பிகு இந்த vassal state இல் வரும் வாசல் தமிழில் இருந்து போயிருக்க கூடும். கருத்து ஒற்றுமை உள்ளது.
  4. மாற்று கருத்து இல்லை. ஆனால் சாப்பிட வழி இல்லாவிட்டாலும் அணு குண்டை வைத்திருப்பார்கள். காரணம் இந்தியா. நான் பல கட்சிகளின் ஆதரவு பாகிஸ்தானிகளிடம் பேசியவகையில் - அனைவரும் ஒன்று படும் புள்ளிகள் இரெண்டு. ஒன்று இஸ்லாம். அடுத்தது - நாட்டின் தவிர்க்கவியாலாத பாதுகாப்பு கவசம் இராணுவம் என்ற நிலைப்பாடு. இந்தியா ஒரு நாடாக இருக்கும் வரை, பாகிஸ்தான் ஒரு மறைமுக அல்லது நேரடி இராணுவ ஆட்சி நாடாகவே இருக்க முடியும் என்பது பெரும்பான்மை பாகிஸ்தானிகளின் நிலைப்பாடு.
  5. இந்த இந்தியன் என்ற உணர்வு இப்போதைக்கு அபரிமிதமாக உள்ளது என்பதும், அது சுயவிருப்பின் பேரிலானது என்பது உண்மையே. நீங்கள் சொல்லும் கட்சிகள் மட்டும் அல்ல, ஓமர் அப்துல்ல்லாவும், அசாடுடீன் ஓவைசியும் கூட இந்திய சார்பு நிலை எடுத்ததும் நாம் கண்டதே. அதுவும் பிஜேபியின் பரம வைரியான அல்லது அப்படி காட்டி கொள்ளும் ஓவைசி இந்திய வர்ணத்தில் சால்வை போட்டதும், ஜெய்ஹிந்த் என மேடையில் முழங்கியதும்…புதிசு கண்ணா, புதிசு… ஆனால்…. இதைவிட பலமான ஓர்மத்தோடு இணைந்து இருந்த நாடுகளாக தென்பட்டவை, சோவியத் யூனியனும், யூகோஸ்லாவியாவும். அங்கே ஜனநாயக வழியில் தேர்தல் நடக்கவில்லை என்பது ஒரு பாரிய வேறுபாடுதான், ஆனால் நாட்டினை பிளவுபடாமல் காக்க, அவையும் இந்தியாவை போலவே கடும் சட்டங்களை இயற்றி இருந்தன. அதேபோல்… பிரிவினை குரல்கள் இந்தியாவுக்கு புதிதல்ல. ஓமர் அப்துல்லாவின் பாட்டா சேய்க் அப்துல்லா காஸ்மீரை விட்டு ஊட்டிக்கும் ஏனைய பகுதிகளுக்கும் நாடுகடத்தப்பட்டு, வீட்டுகாவலில் வைக்கப்பட்டார், சர்வஜனவாக்கெடுப்புக்கான இயக்ககம் தடை செய்யப்பட்டது, பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது, சீனப்போர் காலத்தில் அரசியலமைப்பு பிரிவினையை தடை செய்த பின் அண்ணா திராவிடநாடு பிரிவினையை கைவிட்டார். இன்னும் போர்ர்டோலாண்ட், நாகலாந்து என பிரிவினை குரல்கள் கேட்டவண்ணம்தான் உள்ளன. இதுவரைக்கும் மட்டுப்பட்ட உள்ளக சுயநிர்ணயம், இந்திய உணர்வு, மதச்சார்பின்மை இந்த மூன்றையும் பாவித்து - இந்தியா பிரிவினையை தடுத்து வருகிறது. ஆனால் ஆர் எஸ் எஸ் வழி நடக்கும் மோடி அரசு இதை போட்டுடைக்கிறது. மாநில சுயாட்சியில் கைவைத்து… ஜெய்சிறீராம் என கூவுவதே இந்திய அடையாளம்… அப்பட்டமாக முஸ்லீம்களை ஒதுக்கும், கஸ்மீர் சிறப்புரிமை நீக்கம், துண்டாடல், முத்தலாக், வக்கப் சட்டம் மாற்றம் இப்படி பலதை செய்கிறது. மறுவழமாக முஸ்லிம்கள் ஒரு நாட்டில் குறித்த ஒரு அளவை தாண்டியவுடன், தமக்கு சிறப்பு சலுகை கேட்பார்கள். போராடுவார்கள். இலங்கை, லெபனான் என பல உதாரணங்கள் உள்ளன. பாக்கிஸ்தான் + பங்களேதேஷ் ஐவிட இந்தியாவில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகம். ஆகவே என்றோ ஒருநாள் இந்தியாவில் இந்து எதிர் முஸ்லிம் என ரத்த ஆறு ஓடுவது நிச்சயம். அது எப்போ என்பதுதான் கேள்வி. இதில் பாலூசிஸ்தானை உடைக்க ஓரளவுக்கு மேல் இந்தியா முயன்றால் - குவாடரில் இருந்து தம் நாட்டுக்க்கு கக்கோரம் ஹைவேயை கட்டிய சீனா அதை சும்மா வேடிக்கை பார்க்காது. இப்போதே தமிழ் உட்பட தென் இந்தியாவின் மொழி, கலாச்சாரத்தை சீனர் நன்கு கற்று, உறவு வளர்க்கும் நிலைக்கு வந்துள்ளர்ர்கள். வெறும் கொக்கு சுடும் துவக்கோடு இருந்த வீரப்பனையே பிடிக்க முடியாமல் பல வருடம் திண்டாடியவர்கள் இந்தியர். சீனா மூன்று மத அல்லது, இன வழி பிரிவினைவாதிகளுக்கு மறைமுக ஆயுத ஆதரவு, பின்புல வசதி கொடுத்தாலே இந்தியா பொல, பொல என உதிர்ந்து விடும். என்னை பொறுத்தவரை, இந்தியா உடையும், அல்லது உடைய வேண்டும் என நான் சொல்லுவது இப்படி ஒன்றை மனதில் வைத்தே.
  6. இல்லை INFOGRAPHIC - Comparison between...INFOGRAPHIC - Comparison between Chinese and Indian milit...Both countries engaged in a border face-off, saw bloody clash first time in 45 years recently killing 20 Indian soldiers - Anadolu Ajansı
  7. பாக்கிஸ்தான் போரை தொடங்கவில்லை. இந்தியாவை பிடிப்பதும் அவர்கள் எண்ணமுல்லை. அடித்த அடியில் கேட்காமலே இந்தியா தண்ணீரை திறந்து விட்டது🤣 பாக்கிஸ்தானின் நீரில் இந்தியா கைவைத்தால், இந்தியாவுக்கு திபெத் பீடமேடையில் இருந்து வரும் பெரும்பகுதி நீரை சீனா தடுக்கலாம். எல்லாமுமே சர்வதேச ஒப்பந்த அடிப்படையில் பகிரப்படுவனதான். தோற்கடிக்கப்பட்டு, பல இனவழி தேசிய நாடுகளாக உடைக்கப்படவேண்டும். அப்போ எமக்கு நன்மை வரும்.
  8. இந்தியர்கள் ஒப்பாரியே வைப்பார்கள்🤣 இதுவரை போரில் மட்டும் அல்ல ஒரு சின்ன கைக்கலப்பில் கூட சீனாவை இந்தியா வெல்லவில்லை. சீனாவை சீண்டினால் இந்தியா நினக்கமுடியாத வழியில் எல்லாம் அடி விழும்.
  9. சொந்த செலவில் சூனியம் வைத்து விட்டு, இப்போ அதை எடுக்க பூசை செய்கிறார்கள்🤣.
  10. லேட்டஸ்ட் அப்டேட்ஸ்: பாகிஸ்தான் இன்னும் இரெண்டாகவில்லை. இந்தியா அப்பிளை, நிறுத்தினாலும், சாம்சுங்கை நிறுத்தினாலும் துருக்கிக்கு அதிக தேசாரம் இல்லை. இந்தியா துருக்கியிடம் வாங்குவதை விட துருக்கிக்கு விற்பது அதிகம். ஒவ்வொரு வருடமும் இந்திய மொத்த ஏற்றுமதியில் துருக்கிக்கு போவது 1.5% ஆம்.
  11. அண்ணை கிட்டடியில பானிப்பூரி ஏதும் சாப்பிட்டனியளோ? அல்லது கொசு கடித்து தொற்று ஏற்பட்டுவிட்டதோ🤣.
  12. ஓம்… நானும் யோசிச்சனான். எத்தனை வீரர் 5 wickets எடுப்பார்கள், முதல் இனிங்சை ஏதாவது அணி டிக்லேர் பண்ணுமா? இப்படியும் கேள்விகளை யோசித்தேன். ஆனால் 5 நாள் போட்டிக்கு 8 கேள்வி காணும் என விட்டு விட்டேன்🤣.
  13. போட்டியில் கலந்து கொண்ட கிருபன் ஜி, புலவர், நுணா, சுவி, ஈழப்பிரியன் அண்ணாக்களுக்கு வாழ்த்து. வாங்கோ…வாங்கோ… செம்பா…எகிறி குதிச்சு ஓட வேண்டும்😎. பையன் தட்டி தூக்குவார் எண்டுறியள்? முதல் ஆளாக வந்ததில் ஒரு அனுகூலம் இருக்கு - ஆனால் கடைசி நேரத்தில் காயம் ஏதும் ஏற்பட்டால் - அணி தெரிவு மாறினால் அதுவே பிரதிகூலமாகவும் போக கூடும்.
  14. ஓம்… மேலே பையன் சொல்லி இருப்பது போல் அதிஸ்டம் மட்டும் அல்ல, மாறிகளையும் (variables) கணிக்க கஸ்டமான விளையாட்டு அல்லவா டெஸ்ட்? ஆகவே நீங்கள் சொன்ன உதாரணத்தின் படி, வெல்லும் அணிக்கு அன்றி தோற்கும் அணியை தேர்வு செய்தோருக்கே புள்ளி போகும். போட்டியில் இதுவரை கலந்து கொண்ட, வீரப்பையன், ஏராளனுக்கு வாழ்த்து. ஈழபிரியன் அண்ணனுக்கு தகவல்களை கொடுத்தனைக்கு நன்றியும்🙏.
  15. Ecstasy என்ற போதைபொருளினைதான் (MDMA என்றும் சொல்வார்கள்) இப்படி நேரடியாக மொழிபெயர்த்துள்ளார்கள் 🤣. அதையும் எக்ஸ்டசி என்றே எழுதியிருக்கலாம். (ecstasy என்ற ஆங்கில சொல்லின் அர்த்தம் பரவசம்). போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களை அள்ளுங்கள். பிகு பரிசில் என்ன? ஆறுதல் மட்டுமே🤣
  16. இதென்ன இந்த ஐ பி எல்லை இன்னும் வச்சு ஜவ்வு மாரி இழுத்துகொண்டு நிக்கிறியள்🤣. அங்கால ஒரு இரெண்டு நிமிச போட்டி தொடங்கீட்டு…. ஓடுங்கோ…ஓடுங்கோ🤣
  17. வீரப்பையன், தமிழ் சிறி அண்ணா, ஈழப்பிரியன் அண்ணா, போட்டியை தண்டோரா போட்டு அறிவிக்கும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன் 🙏. பிகு இப்போ என்னால் @ போட முடிவதில்லை.
  18. ஒரு டெஸ்ட் கிண்ணத்துக்கான கணிப்பு போட்டி, வெறும் 8 கேள்விகளுடன் 5 ஓவர் போட்டி போல அமைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான கேள்விகளை வெறும் 2 நிமிடத்தில் பதிந்து விடலாம். மேகி நூடில்ஸ் துரித உணவு போல, இது துரித கணிப்பு போட்டி. வெறும் இரெண்டே நிமிடத்தில் வெற்றியை தட்டிச்செல்லுங்கள். போட்டி முடிவு - ஜூன் மாதம் 10ம் திகதி ஐக்கியராச்சிய நேரம் 23:59. பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம். யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள் நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)
  19. யாழ்கள கணிப்பு போட்டி… இன்னும் சில நொடிகளில்… ஆவலோடு காத்திருங்கள்!!!
  20. அண்மையில் பிரிதானியாவில் பீட்டர் சலவன் எனும் ஒருவர் 38 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். இப்போ 70 வயதை நெருங்கி உள்ள இவர், அவரின் இருபதுகளில் ஒரு 19 வயது பென்ணை, வன்புணர்ந்து, சித்திரவதை செய்து கொலைசெய்தார் என சிறைக்கு அனுப்பப்பட்டார். 38 வருடம் கடந்து டின் என் ஏ சாட்சி இதை செய்தது இன்னொருவர் என நிறுவியாதால் வெளியே வந்துள்ளார். நினைத்துப்பாருங்கள் இது எந்த பெரிய அநியாயம்? 38 வாழ்வின் முக்கியமான வருடங்களை சிறையில் அநியாயமாக வீணடித்துள்ளார். ஆனால்….. இவருக்கு மரண தண்டனை கொடுத்திருந்தால்? இப்போ அவரை மீள கொண்டுவந்திருக்கவா முடியும்? அல்லது ஆண்மை பறிப்பு போல மீட்க முடியாத தண்டனையை கொடுத்திருந்தால்? உலகின் முதல்தர குற்றவியல் நீதி அமைப்பு உள்ள இங்கிலாந்திலேயே இப்படியான தவறுகள் நடக்கும் போது, இந்தியா இலங்கையில் ? ஆகவேதான் இப்படியான தண்டனைகளை பெரும்பாலும் கொடுப்பதில்லை. இன்னும் பல காரணங்கள் உள்ளன. https://uk.news.yahoo.com/peter-sullivan-victim-longest-running-141720495.html?guccounter=1&guce_referrer=aHR0cHM6Ly93d3cuZ29vZ2xlLmNvbS8&guce_referrer_sig=AQAAAMrP_qR2PangmUiNQwTTlrAfP9x-Twx44jpSfe4VwxyNorqNopkznGLj8N8pFWH8ZtNqL5PCM2ovuQBKQHDhp0odXPju-dEuYCQid6StxlOb3oyzYi0cDf7g3ZOTqbn7V7o-YYeH6dpX9PRyjSYgi_RXV14sHoKAob5eRbjz_d1-
  21. அநேகமா நாலாவது ஐடி மாறும் நிலை விரைவில் உருவாகும் என நினைக்கிறேன்🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.