Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்

Everything posted by goshan_che

  1. தேர்தல் நேரம் நானும், ரசோ அண்ணாவும் எழுதினோம்…எடப்பாடி செய்த மிக பெரிய பிழை - சீமான் போட்டியிட அதிமுக போட்டியிடாமல் போனது. இப்போ அதைவைத்தே ஏதோ அதிமுகவை விட சீமான் பெரிய ஆள் என்ற விம்பத்தை உருவாக்க்கி, செங்கோட்டையன், தினகரன், வேலுமணி, சசி, சீமான் என பலராலும் எடப்பாடியை அடிக்கிறார்கள். அதிமுக+பிஜேபி+நாதக+ஏனையோர் அல்லது அதிமுக+பிஜேபி+ஏனையோர் (சீமான் வாக்கு பிரிப்பு -வழமையான பார்முலா) அல்லது அதிமுக உடைப்பு +பிஜேபி+சீமான்+ஏனையோர் (எடப்பாடி-அதிமுக தனித்து) இவ்வாறே பிஜேபி காய் நகர்த்த போகிறது. இப்போதும் காலம் கெட்டுவிடவில்லை. ஜெ செய்தது போல் செங்கோட்டையன், வேலுமணி அனைவரையும் கட்டம் கட்டி, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கி விட்டு, அதிமுக தலைமையில் விஜையுடன் கூட்டணி என போவதே, எடப்பாடிக்கும், அதிமுகவுக்கும், தமிழ் நாட்டுக்கும் நல்லது. பிஜேபி உள்ள கூட்டணி வெற்றிக்கு கிட்ட வந்தாலே - ஆளுனரை கொண்டு ஆட்சியை பிடிப்பார்கள். அதன் பின் மும்மொழி கொள்கை, ஹைடிரோகாபன், இன்னும் சகலதையும் கொண்டு வருவார்கள்.
  2. எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லை.. சீமான்தான்.. பாஜக மாஸ்டர்பிளான்.. ரவீந்திர துரைசாமி பளீர் Shyamsundar IUpdated: Monday, March 10, 2025, 15:00 [IST] சென்னை: பாஜக அதிமுக கூட்டணி வைத்தால்.. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருக்க மாட்டார். மோடி அப்படி யோசிக்க மாட்டார். மோடி என்ன முட்டாளா? சீமானிடம் பலவீனம் ஆனவர் எடப்பாடி. அவரை பற்றி உளவுத்துறைக்கு தெரியாதா? மோடிக்கு இது தெரியாதா? அப்படி இருக்க எடப்பாடி எப்படி முதல்வர் வேட்பாளர் ஆவார்?, என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். மீண்டும் சேரும் அதிமுக - பாஜக பாஜக, அதிமுக இரண்டும் மாறி மாறி கூட்டணிக்கு தூதுவிட தொடங்கி உள்ளன. திமுகதான் எதிரி; வேற எந்த கட்சியுமே எதிரி இல்லை; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவே கூடாது என அதிரடியாக யோசிக்க முடியாத அளவிற்கு பல்டி அடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்னொரு பக்கம் அண்ணா திமுக எங்களுக்கு எதிரியே இல்லை..திமுகதான் எங்கள் ஒரே எதிரி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார். இதனால் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அண்ணா திமுக- பாஜக கூட்டணி அமையும் என்றே கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேச்சு இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அதிமுக பாஜக கூட்டணி வர சான்ஸ் இல்லை. அப்படி வந்தாலும் ஒரே உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்தால் எடப்பாடிக்கு சிக்கல். இன்னும் 1 வருடம் இருக்கிறது. தினகரன் பாஜக கூட்டணிக்கு வருவார். அது எடப்பாடிக்கு சிக்கலாக மாறும். அண்ணாமலை கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். அண்ணாமலை பெரிய ஆள் ஆகிவிட்டார். டெல்லி சப்போர்ட் உள்ளது. அதனால் அவரை பகைக்க எடப்பாடி விரும்பவில்லை. இதனால் எடப்பாடி பாஜக கூட்டணிக்கு இறங்கி வந்துள்ளார். அண்ணாமலைக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். அண்ணாமலையின் ஜாதி பின்புலம் இதற்கு முக்கியம் காரணம். அண்ணாமலை கவுன்சிலர் கூட இல்லை என்றாலும்.. அவருக்கு ஜாதி பலம் பெரிதாக உள்ளது . அதனால்தான் அதிமுக தலைகள்.. எடப்பாடிக்கு பதிலாக அண்ணாமலையை திருமண விழாவிற்கு அழைக்கிறார்கள். அண்ணாமலை கவுன்சிலர் இல்லையே. ஏன் அழைக்கிறார்கள். இதுதான் காரணம். அவருக்கு பலம் இருக்கிறது. அவர் பெரிய ஆள் ஆகிவிட்டார். எடப்பாடி பலவீனம் ஆகிவிட்டார். சீமானிடம் ஏற்கனவே எடப்பாடி பலவீனமாகிவிட்டார். பாஜக அதிமுக கூட்டணி வைத்தால்.. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருக்க மாட்டார். மோடி அப்படி யோசிக்க மாட்டார். மோடி என்ன முட்டாளா? சீமானிடம் பலவீனம் ஆனவர் எடப்பாடி. அவரை பற்றி உளவுத்துறைக்கு தெரியாதா? மோடிக்கு இது தெரியாதா? அப்படி இருக்க எடப்பாடி எப்படி முதல்வர் வேட்பாளர் ஆவார்? செங்கோட்டையன் முதல்வர் வேட்பாளர் ஆகலாம்.. சீமான் கூட முதல்வர் வேட்பாளர் ஆகலாம்.. வேலுமணி ஆகலாம்.. அண்ணாமலை ஆகலாம். சீமான் பெரிய ஆள் ஆகிவிட்டார். அவரை அதிமுக ஏற்றுக்கொள்ளுமோ கொள்வதோ.. டெல்லி அவரை கருத்தில் கொள்ளலாம். மோடி அவரை டிக் அடிக்கலாம். இன்னும் 1 வருடம் இருக்கிறது. அதற்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்று பார்க்கலாம். சீமான் வளர்ந்து நிற்கிறார். அதனால் அவரை ஊர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கில் சீமான் வளர்ந்து இருக்கிறார். https://tamil.oneindia.com/news/chennai/edappadi-palanisamy-will-not-be-the-cm-candidate-of-aiadmk-nda-says-raveendran-duraisamy-686433.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி யாரிந்த ரவீந்திரன் துரைசாமி? ஊடகவியளாலர் என்ற போர்வையில் உலாவும் ஒரு பிஜேபி ஏஜெண்ட். அதை வெளிப்படையாக சொல்பவர். அண்மைகாலமாக சீமான் ஆதரவாளர். ரஜனி-சீமான் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்.
  3. எல்லாம் ஒண்டரை நாளை மழை தின்னும் என்ற இங்கிலாந்தின் மீதான நம்பிக்கைதான் 🤣. நன்றி. #பொதுவாக என் மனசு தங்கம்…ஒரு போட்டியின்னு வந்துபுட்டா சிங்கம்.
  4. அதை விட முக்கியமான கேள்வி… பாலியல் தொழிலாளி என தெரிந்தும் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் அறிவார்ந்தவர்கள் யாரும் களம் இறங்குவார்களா? ஷொகேப் அக்தார் bowlingக்கு pads கட்டாமல் பேட் பண்ணபோகலாமா எண்டு பழமொழி கூட உள்ளது. பிகு இங்கே சீமானியர்களை நான் கேட்ட கேள்விக்கு அவர்கள் கொடுத்த பதிலை வைத்து ஒரு சின்ன விளக்கம் கொடுக்க வேண்டும். இன்னும் ஓணாண்டியார் மட்டும் மிசிங். அவரும் பதிலை சொல்லி விட்டால், சாம்பலை கரைத்து விடலாம்🤣.
  5. அப்ப நாங்கள் எல்லாம் என்ன தக்காளி தொக்கா🤣… நீங்கள் paper correction கேட்டதால நான் 4ம் இடத்தில் இருந்து 12 க்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளேன்🤣… ஏற்கனவே மழையால் பயிரெல்லாம் அழிஞ்சு போச்சு…🤣 உங்க paper correction ல கொள்ளிய வைக்க…🤣. பிகு போட்டியை கலகலப்பாக கொண்டு போன அனைவருக்கும் நன்றி. செம்பாட்டான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக கலக்கினார். எனக்கு ஐபில் அறவே பிடியாது. 1st class ஐ விட தரம் குறைந்த (டோனியை எந்த 1st class அணி எடுக்கும் 2025 இல்) போட்டி அது. அதை பார்ப்பதால் - சர்வதேச ஆட்டம் பார்க்கும் ஈர்ப்பு கூட குறைகிறது. ஆகவே அந்த போட்டியில் நான் இல்லை. வாய்ப்பை பயன்படுத்தி கிருபன் ஜி அதிலும் என் பெரிய வீட்டை எடுக்க வாழ்த்து🤣. WTC finals SA v AUS - 10க்கும் குறைவான கேள்விகளோடு ஒரு போட்டி வைக்கலாம் என நினைக்கிறேன். 4ம் நாள் போட்டியை நேரில் பார்க்கவும் டிக்கெட் புக்பண்ணி விட்டேன். யாழிலும் ஒரு மினி போட்டிக்கு ஆர்வம் இருந்தால் - செய்யலாம். நன்றி. வணக்கம்.
  6. இல்லை பையா இனி வாய்ப்பிலை. பையனுக்கு அவர் அமைச்சரவைக்கும் வாழ்த்து.
  7. போட்டியை நடத்தியமைக்கு நன்றி ஜி. புலவர், நீர்வேலியான், நியாத்துக்கு வாழ்த்து💐💐💐 பையனுக்கும் வாழ்த்துக்கள். இந்திய வடமாநில சட்டசபைகள் மாரி முதல்வர் பதவியில் இத்தனை குழறுபடியா… அப்படியே எங்களுக்கும் வாய்ப்பு இருக்கா எண்டு கேட்டு சொல்லவும்🤣
  8. Escort என்பதற்கு நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் பொருள் இல்லவே இல்லை என நான் சொல்லவில்லை. மூன்று அர்த்தங்களில் அதுவும் ஒன்று என்றே சொல்கிறேன். மூன்றும் சம அளவு பாவனையில் உள்ள சொற்கள். உதாரணம் ஒருவருக்கு கொடுக்கபடும் பொலிஸ்பாதுகாப்பை, police escort என சர்வசாதாரணமாக சொல்லுவார்கள். அந்த முடிவுக்கு நான் வர காரணம் - தான் ஒரு பாலியல் தொழிலாளி என டிவி பேட்டியில் வெளிப்படையாக யாரும் ஒத்து கொள்ள வாய்ப்பு குறைவு, அப்படி அந்த பேட்டியில் ஒத்து கொண்டிருந்தால் -அத்தோடு வழக்கு ஒன்றும் இல்லை என ஆகி விட்டிருக்கிம். நெறியாளரும் அப்படியே விட்டிருக்க மாட்டார். விஜி அண்ணி அப்படி வேறு எங்கும் சொல்லவில்லை, அண்மையில் அண்ணன் அப்படி சொன்ன போது கெம்பி எழுந்தார். அந்த “ரைட் ஹாண்ட்” சொற்பதம். அதுவும் நான் எஸ்கோர்ட்டுக்கு எடுக்கும் அர்த்தத்தோடுதான் ஒத்து போகிறது. அதே போல் loyal escort என்ற பதமும். விசுவாசமான-பாலியல் தொழிலாளி, என்பதை விட, விசுவாசமான-உதவியாளர் என்பதே ஒத்துபோகிறது. ஆகவே சூழவைமை பார்க்கும் போது நான் சொல்லும் அர்த்தத்தில் அமையத்தான் வாய்ப்பு மிக அதிகம். நான் எடுக்கும் அர்த்தத்தில்தான் சொன்னார் என்பதை விட, நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் சொல்லி இருக்க வாய்பில்லை என்பதே என் நிலைப்பாடு. ஆம் ரைட்ஹாண்ட் டாக இருந்தேன் = மாலை மாற்றினேன் என கொள்ளமுடியாது. ஆனால் என்ன நடந்தது என்பதை கோர்ட்தான் தீரவிசாரிக்க வேண்டும். தமிழில் “எல்லாமுமாக இருந்தேன்” என்பார்கள். ஒரு காலத்தில் ஜெ-எம்ஜிஆர் போல பின் ஜெ-சசி போல. அப்படி இருந்தேன் என்பதைதான் இந்த பேட்டிகளில் விஜி குறிப்பிடுகிறார். அது உண்மையா, பொய்யா என்பதை கோர்ட் மட்டுமே முடிவு செய்யலாம்.
  9. என்னை பொறுத்தவரை ஆணுக்கு, பெண் சமம் என்பதை நான் அதன் literal meaning இல் பார்ப்பதில்லை. எல்லாமனிதர்களும் சமம் என்பதை நாம் ஏற்றாலும் சாதி வேறுபாட்டை களைய நாமே இட ஒதுக்கீடு எனும் positive discrimination ஐ ஆதரிக்கிறோம். பால் சமநிலை என்பது தனிமனிதராக ஒரு ஆண் செய்வதை பெண்ணும், ஒரு பெண் செய்வதை ஆணும் செய்யும் செய்யவிரும்பின், அதற்குரிய சுதந்திரத்தை கொடுப்பது. இதை பொது வேலை பகுப்புகளான பிள்ளை பெறல், யுத்தத்துக்கு போதல் போன்றனவற்றோடு போட்டு குழப்பி அடிக்க தேவையில்லை. பிள்ளை பெறுவதில் 99.9% பெண்கள்தான் ஈடுபடுவர். யுத்தத்துக்கு போவதில் >90% ஆண்கள்தான் ஈடுபடுவர். இதை காரணம் காட்டி field engineer ஆக, அல்லது artillery gunner ஆக ஒரு பெண் பிள்ளை வர விரும்பினால் -அதை தடுக்க கூடாது. இதுதான் பால் சமநிலை.
  10. ஒரு வைத்தியரான நீங்களா இப்படி எழுதுவது. சீ செக்சன் புண் ஆற வரும் வேதனை கொஞ்ச நஞ்சமா? எபிடியூரல் கொடுக்கும் முதுகு வலி உட்பட்ட பிரச்சனைகள்? அத்தோடு post natal, pre natal depression ? எமக்கு 50 வருடத்துக்கு ஒருக்கா யுத்தம் வரும் சண்டைக்கு போக வேணும். அவர்கள் பிறப்பதே பிள்ளைபேறு எனும் யுத்தத்துக்காகவே. ஆனால் பெண்களை ஆட்சேர்ப்பில் முதல் ரவுண்டில் சேர்க்காமைக்கு பல காரணங்கள் உள. ஒரு ஆண் இறப்பதை விட, ஒரு பெண் இறந்தால் அது அந்த நாட்டி சனத்தொகை வளர்ச்சியில் பல மடங்கு தாக்கத்தை தரும். யுத்தத்தில் இறக்கும் ஒரு பெண்ணுடன் 3,4 எதிர்கால சிப்பாய்களும்/ பிரசைகளும் சாகிறார்கள். முன்னரங்கை விட, பின்னரங்கில் பெண்கள் வினைதிறனான செயல்படுவர். இந்த வித்தியாசம் கட்டாயமாக சேர்க்கப்படும் காலாட்படையினருக்கு மட்டுமே. தாதிகள், வைத்தியர், பைலட், மாலுமிகள் பெண்களும் முன்னரங்கு போவார்கள்.
  11. அப்ப புலம்பெயர் மொக்கர் வெளிபேச்சுக்கு மயங்கி,… காசை அள்ளி கொடுத்து வளர்த்து விட்ட… இன்னொரு திரள்நிதியில் வயிறு வளர்க்கும் விச செடி எண்டுறியள்…🤣.
  12. இதை பற்றி எழுத மறந்து விட்டேன். பாலா அண்ணையை எப்போதும் தலைவரின் ரைட்ஹாண்ட் மேன் என்றே விபரிப்பார்கள். அதாவது ஒரு மனிதரின் வலது கரம் எப்படி அவருக்கு ஒத்தாசையாக இருக்கிறதோ அப்படி இருக்கும் ஒரு நெருங்கிய உறவு. மேலே விஜி சொன்னது எல்லாமுமே ஒன்றுதான் - நான் சீமானுக்கு ரைட்ஹாண்டாக, ஒரு ஒத்தாசையாளராக (எஸ்கோர்ட்) இருந்தேன் என்பதே அது. இதை நான் பாலியல் தொழிலாளியாக இருந்தேன் என அர்த்தம் கொள்ளமுடியாது.
  13. இல்லை நீங்கள் விஜியை பற்றி கண்ணால் காணாததை, அங்கே போனார் இங்கே போனார் என பட்டியல் இடவில்லை. ஆகவே விஜி சாபம் உங்களை தாக்காது🤣. நீங்கள் அவர் சொன்ன ஒன்றை உங்களுக்கு புரிந்த வகையில் முன் வைத்தீர்கள். உங்கள் விளக்கம் தவறானது. ஆனால் இதில் தார்மீக கேடு ஏதும் இல்லை.
  14. இது நமது டிசைன் என நினைக்கிறேன். எமக்கிடையான தர்கங்கள் பலதை போல இதுவும் ஆங்கிலத்தில் ஒரு சொல், பல அர்த்தத்தில் வந்து முடிகிறது. நான் இந்த வீடியோவை பார்க்கவில்லை. ஆனால் escort எந்த சொல்லுக்கு பல அர்த்தம் உள்ளது. அதில் ஒன்று உற்ற துணை அல்லது பாதுகாவலர். குறிப்பாக விசுவாசமான எஸ்கோர்ட் ஆக இருந்தேன் (loyal escort) எனும் போது அது பாலியல்தொழிலாளி என்ற அர்த்தத்தில் வராது. Dictionary Definitions from Oxford Languages · Learn more noun noun: escort; plural noun: escorts /ˈɛskɔːt/ a person, vehicle, or group accompanying another for protection or as a mark of rank. "a police escort" Similar: guard bodyguard protector safeguard defender custodian attendant guide chaperone retainer aide assistant personal assistant right-hand man right-hand woman lady in waiting duenna equerry squire entourage retinue suite train cortège attendant company caravan protection defence convoy minder a man who accompanies a woman to a particular social event. "Louise and her escort were given the best table" Similar: companion partner beau attendant date a person who may be hired to accompanysomeone to a social event. "an escort agency" Similar: paid companion hostess male escort gigolo geisha (girl) sing-song girl courtesan a sex worker who arranges to meet clients by appointment rather than working in a brothel or on the street. verb verb: escort; 3rd person present: escorts; past tense: escorted; past participle: escorted; gerund or present participle: escorting /ɪˈskɔːt,ɛˈskɔːt/ accompany (someone or something) somewhere as an escort. "he escorted her back to her hotel" இரெண்டு விடயம் மேலே தெளிவாக escort என்ற சொல்லின் 3 வேறுபட்ட அர்த்தங்களில் ஒன்றுதான் பாலியல் தொழிலாளி என்பதை சொல்லி உள்ளேன். ஆகவே இதை வைத்து - நீங்கள் சொன்னது போல டிக் அடிக்க முடியாது. அப்படியே ஆயினும் - இந்த விளக்கத்தை சீமான், கோர்ட்டில் சொல்ல வேண்டும். அதை கோர்ட் ஏற்பின் அவரை விடுதலை செய்யும். ஆக கோர்ட் விசாரிக்க வேண்டும்.
  15. நிச்சயமாக அதற்கு வழக்கு நடக்க வேண்டும். நான் ஒரு போதும் விஜி அண்ணி முழுக்க முழுக்க உண்மை சொல்வதாகவோ, அவரின் கதையில் குழப்பங்கள் இல்லை என்றோ சொன்னதில்லை. ஆனால் இவை எல்லாமும் வழக்காடு மன்றில் விசாரித்து தீர்க்கபட வேண்டியன. மீடியாவில் அல்ல. Trial by media அல்ல. Trial by a court of law தான் தேவை. என் அதிகபட்ச கோரிக்கை இதுதான்.
  16. ஏன்… இந்த முறை நம்பியார்….வீரப்ப்பா…ராதாரவி….ரகுவரன்….இப்படி வேறு யாரும் வில்லன் நடிகர் குடும்ப உறவுகள் பற்றி அவதூறு பரப்ப போகிறீர்களா 🤣
  17. ஓணாண்டி அவர்கள் முதலில் பத்துமாதம் கரு சுமந்து சுக பிரசவம் ஒன்றை நடத்தி காட்ட்டுவார். அதன் பின் பெண்களையும் கட்டாய இராணுவத்தில் சேர்க்கலாம்.
  18. யோவ் சீமான் திரிக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை ஐயா. நீங்கள் மேலே கொடுத்த கொட்டை எழுத்தில் உள்ள விளக்கத்தை பெறவே அந்த கேள்வியை கேட்டேன். What is a public place, is a matter of fact, not a matter of law and it’s very fact-specific. ஒரு இடம் பொது இடமா இல்லையா என்பது குறித்த சம்பவத்தின் தரவுகள் அடிப்படையானது. சட்ட விதிகள் அடிப்படையிலானது அல்ல. உண்மையில் நீங்கள் இந்த கேள்விக்கு விடை தேடப்போய் பல primary sources இல் வாசித்துள்ளீர்கள் 👏. கீழே ஒரு கட்டுரை கொடுக்கிறேன், caselaw உதாரணத்தோடு. பத்திரபடுத்தி வைக்கவும். யூகேயில் drink driving, driving without insurance, MOT. Parking போல விடயங்களில் ஏதும் பிரச்சனை வந்தால் இது உதவும். Stephen Oldham SolicitorsRoad or other public place: Where do driving laws apply?Super market car park – is it a road or other public place You have to be in a road or other public place to commit most driving offences. There are a few exceptions like keeping a vehicle with no...இங்கே பாடசாலை பொது இடமா? அநேக நாட்களில் இல்லை. ஆனால் ஒரு விளையாட்டு போட்டியன்று கதவுகளை திறந்து விட்டு, அனைவரும் வருக, ஆதரவு தருக என போஸ்டர் ஒட்டி இருந்தால் - அந்த நிகழ்வுக்கு மட்டும் அது பொது இடமாகலாம். அப்போதும் மைதானம் மட்டும்தான். கழிப்பறை அல்ல.
  19. பாடசாலை, வங்கி பப்ளிக் பிளேசில்லை ஓக்கே…. அப்போ நீங்கள் முதல் கொடுத்த உதாரணத்தில் உள்ள அகதிகள் ஹோட்டல் எப்படி பப்ளிக் பிளேஸ் ஆகியது? ஒரு வங்கிக்கும் ஹோட்டலுக்கும் என்ன வித்தியாசம்?
  20. அண்மைய அனுரகுமாரவின் சீன விஜயத்தில் அவருடன் எந்த மொழி பெயர்பாளரும் இல்லை. காதில் ஒரு புளூடூத் போல AI powered simultaneous translation device ஐ செருகிகொண்டார். சீன பிரதிநிதிகள், ஏனையோர் சீன மொழியில், இவரும் விஜித ஹேரத்தும் சிங்களத்தில், ஒரே மொழி பேசுவது போல் பேசி கொண்டார்கள். டீமூவில் ஒண்டை வாங்கிபார்த்தேன். அது ஒரு அப்பை டவுண்ட்லோட் பண்ண சொல்லியது. வேண்டாம் என விட்டு விட்டேன்
  21. சட்டம் மிக அரிதாகவே black and white ஆக இருக்கும். இதுவும் அப்படி நிறைய grey areas உள்ள விடயம்தான். எது public place என்பதில், என்னத்துக்காக எடுக்கப்படுகிறது (intention) என்பதில் நிறைய தங்கி உள்ளது. அத்தோடு, upskirting போட்டோ எடுப்பது நிச்சயமாக குற்றம். இன்னொரு விடயம் வீடியோ எடுப்பதற்கு உள்ள சுதந்திரம் அதை பகிர இல்லை. அங்கே reasonable expectation of privacy யையும் கருத்தில் எடுக்க வேண்டும். இங்கேதான் பெண்பிள்ளைகளின் ஸ்போர்ட்ஸ் மீட்டில் போய் படம் எடுத்தது பிரச்சனையாகலாம். Intention அதை விட மோசமானது என நிறுவினால் - சிறுவர் பாலியல் வழக்கும் ஆகலாம். உதாரணமாக ஒரு வங்கியில் போய் 20x ஆப்டிகள் சூம் லென்சை பாவித்து ஒவ்வொருவருடைய பாங் பலன்சையும் ஸ்கீரீனில் போட்டோ எடுக்க முடியுமா? ஆகவே இடம் பொருள் ஏவல் முக்கியம். இங்கே இவர் செய்வது யூடியூப் லைக்சுக்காக video auditors என்பவர்கள் எடுக்கும் வீடியோக்கள். இப்படி போய் வீடியோ எடுத்து, சர்ச்சையாக்கி லைக்ஸ் அள்ளுவது. யூகேயில் விடுற சேட்டையை ஊரில் விட்டிருக்கிறார்…சேட்டை கிழிச்சு போட்ட்டானுவோ🤣. பிகு ஆள் லண்டன் ரிட்டேர்ன்னாம் எண்டதும் எனக்கு திக் என்றாகிவிட்டது. இப்ப எல்லாம் ஓகே யா🤣
  22. D கோடி பேர் இருக்காங்க வெளில.. ராயப்பேட்டையில் மாஸ் காட்டிய விஜய்! பதறிப் போன பவுன்சர்கள்.. என்னா அடி! Rajkumar RPublished: Friday, March 7, 2025, 22:12 [IST] சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டார். முன்னதாக எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் திரண்ட நிலையில் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள் திணறினர். ஒரு கட்டத்தில் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அவர்களே அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 15க்கும் மேற்பட்ட ஜமாத் நிர்வாகிகள், தமிழக அரசின் தலைமை காட்சி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. Also Read இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி, உலர் பழங்கள் ஆகியவை தயார் செய்யப்பட்டு தயாராக இருந்தது தொடர்ந்து. ஒய்சிஎம்சிஏ மைதானத்தில் ஏராளமான நிர்வாகிகளும் இஸ்லாமியர்களும் குவிய ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல அதிக அளவில் ரசிகர்களும் குவிந்தனர். சரியாக 5.20 மணிக்கு விஜய் அங்கு வந்தார். இஸ்லாமியர்களை போல தலையில் தொப்பி அணிந்து கைலி அணிந்து படி ரசிகர்களையும் கட்சியினரையும் பார்த்து உற்சாகமாக கையசித்தபடி வந்த விஜய் இஸ்லாமியர்கள் அழைத்துச் சென்றனர். இன்று விஜய் ரமலான் நோன்பு இருந்ததாகவும் 6:15 மணிக்கு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 5000க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். Recommended For You இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல ராயப்பேட்டை ஒய்எம்சிஏ பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட அளவில் ஐந்து நிர்வாகிகள், அதுமட்டுமல்லாது ஜமாத் நிர்வாகிகள், சென்னை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர்கள் என சுமார் 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் விஜய் வருகிறார் என கேள்விப்பட்டவுடன் அப்பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். விழாவிற்கு வருபவர்களை கட்டுப்படுத்த காவல்துறை மட்டுமல்லாது விஜய் தரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பவுன்சர்கள் தயார் செய்யப்பட்டிருந்தனர். ஆனால் விஜய் வந்தவுடன் அவ்வளவு நேரம் அமைதி காத்த கூட்டம் விழா நடக்கும் ஒய்எம்சிஏ அரங்குக்கு தடுப்புகளை தாண்டி எகிரி குதித்து சென்றது. இதை அடுத்து அவர்களை சமாளிக்க முடியாமல் பவுன்சர்கள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூட்டத்தில் புகுந்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. You May Also Like எவ்வளவோ முயன்றும் அவர்களை சமாளிக்க முடியாததால் பவுன்சர்கள் திணறிப் போயினர். ஒரு கட்டத்தில் ஆளை விட்டால் போதும் என அவர்களும் ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே விஜயை படம் பிடிக்க வந்த ஒளிப்பதிவாளர்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. நிகழ்ச்சி முடிவடைந்த உடன் திறந்த பிரச்சார வேனில் விஜய் கையசைத்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் ராயப்பேட்டை பகுதியில் இருந்து அண்ணா சாலை வரை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், சாலையிலும், மேம்பாலங்கள் உள்ளிட்டவற்றில் நின்று கொண்டு விஜயை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக கையை அசைத்தனர். இதனாஅல் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதன் முறையாக சென்னையில் மையப்பகுதியில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சிக்கு விஜய் வந்திருந்த நிலையில் மக்கள் ஆதரவு அதிகம் இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் தள்ளுமுள்ளு என ஒரு சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது தவெக.
  23. அதிபர் தவறுக்கு வருந்தி அறிக்கை விட்டுள்ளாராம். இங்கே நடந்தது என்னவென்றால் - செந்தோமஸினுடனான பிக் மேட்சுக்கு முன் ஒரு சவபெட்டியை தயார் செய்து, அதன்மேல் குருசெல்லாம் வைத்து, ஒப்பாரி வைத்து தூக்கி வருவார்கள். யாரோ ஒரு அதிகபிரசங்கி அதில் இருந்த குருசை தூக்கி வைத்து ஆடி இருக்கு. பாடசாலை பையனுகள் செய்த சேட்டையை ஆண்டகை கண்டிப்பதெல்லாம் ரொம்ப ஓவர். அதுவும் தமிழ் தேவாலயங்கள், கிறிஸ்தவர்கள் அழிக்கப்படும் போது வாய்மூடி இருந்த ஆண்டகைழ்
  24. இல்லை….உண்மையிலேயே சீமான் விஜியோடு வெறும் உடல் இச்சையை தீர்க்கும் casual sex தான் வைத்தார் என்றால் அது rape (obtaining consent through deception - promise of marriage) குற்றசாட்டை தவிடுபொடியாக்கும். சீமான் செய்ய வேண்டியதெல்லாம் இதை கோர்ர்ட்டில் வந்து வெளிப்படையாக சொல்வதுதான். அப்படி சொன்னால் நீதிபதி ஈவேரா வோ அல்லது எபொத வோ சீமானை விடுவிக்கத்தான் வேண்டும். ஆனால் அப்படி சொல்ல மாட்டார்… ஏன்? ஏன் எண்டால் ஈவேரா போல் ஆமா நான் அப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தேன் என சொல்லும் கெத்து சீமானிடம் இல்லை. அத்தோடு தான் உள்ள ஊத்தை வேலை எல்லாத்தையும் செய்து போட்டு நான் பிரபாகரன் பிள்ளை, என அந்த கண்ணியவானின் பின்னால் ஒழிந்து கொள்ள முடியாது.
  25. என்ன பொசுக்குன்னு பெரியார் என்னுடீங்க🤣. ஈ வே ரா… அல்லது அவர் சாதி/கன்னட-தெலுங்கர் என்பதை குறிப்புணர்த்த வேண்டின்… ராமசாமி நாய்க்கர்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.