Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. ஆனால் நேற்று முந்தினம் கும்பகோண மண்டல மாநாட்டுக்கு ஏகபட்ட சனமாம் என்கிறார்கள்.
  2. அப்படித்தான் தெரிகிறது. அதுவும் ஒரு மகன் பிறந்து அவரும் கிரிகெட் மட்டையோடு அலையும் போது… கிரிகெட் சரிவராவிட்டால் 25 வயசுக்கு மேல் இவன் என்ன செய்யபோகிறான் என்ற யோசனை எமக்கு தொற்றும் போதுதான் அதிகம் உறைக்கிறது 😂. ஆனாலும் எனக்கு பேச்சுவார்த்தைகள் முடிவில் “முடிவெடுக்கும் சுதந்திரம்” பெயரளவிலாவது இருந்தது என்பதும் உண்மையே. நான் விரும்பி இருந்தால் 12ம் ஆண்டில் திரும்ப விளையாட போய் இருக்கலாம். போகவில்லை. அந்தளவுக்கு “மண்டையை கழுவி”விட்டார்கள். ஆனால் இதற்கு முன்பே அவருக்கு நான் இப்படி மண்டையை கழுவிய சம்பவம் ஒன்று உள்ளது. பின்னொருநாளில் எழுதலாம்.
  3. இன்றைக்கும் இதே நிலமை என்றே நினைக்கிறேன். எனக்கு நன்றாக நியாபகம் உள்ளது, மட்டினில் வீசி விட்டு, முதன் முதலாக டிரெர்பில் ஒரே ஷோர்ட் போலாக போட்டு அடிவாங்கியது. யாழ் அணிகளும், கொழும்பு அணிகளும் மோதுகிறன என வாசிக்கும் போது, யோசிப்பேன் கிட்டதட்ட இரு வேறு விளையாடுகள் போல வித்தியாசம். எப்படி சாத்தியமாகிறது என. உண்மைதான் ஆனால் தடைகள் உள்ளும், புறமுகாக இருந்தன. கடைசிவரை பள்ளி கூட அணியில் சி டீமை தாண்ட முடியவில்லை. இதற்கு இனவாதம் அதை விட மேலாக மேட்டிமை (elitism)மற்றும் nepotism காரணம் என கருதுகிறேன். போன தடவை ஊருக்கு போன போது நண்பர்களின் பிள்ளைகள் இப்போ இதே பிரச்சனையை எதிர்கொள்வதாக கூறினர்.
  4. எனக்கு உண்மையில் திறமை இருந்ததா என்பதும் இன்றுவரை ஐயமே. அப்போதே ஆறடியை நெருங்கி விட்டேன் ஆகவே கோச்கள் டீமில் எடுப்பது இலகுவாக இருந்தது. இலண்டன் வந்து முதல் 6 வருடம் - மூச்சு விட நேரமில்லாத காலம். பிறகு இங்கே ஒரு கிராமபுற அணியின் 1st XI இல் 4 சீசன் ஆடினேன். அதே போல் எனது வேலையிடத்தில் ஒரு 6 a side அணியை உருவாக்கி, எமது வருடாந்த போட்டிகளில் மூன்று முறை சாம்பியன் சிப் வென்றோம். தமிழர் விளையாட்டு விழாவில் என் நண்பர்கள் தமது பள்ளியில் என் பெயரை பதிந்து ரெண்டு அல்லது மூன்று வருடம் ஆடியுள்ளேன். அதே போல் தமிழ் லீக் என ஒண்டை தொடங்கினார்கள் அதிலும் ஒரு அணிக்காக பெயரை கொடுத்தேன், இரெண்டு சீசன் சில ஆட்டங்கள். கடந்த 6/7 வருடமாக எதுவும் இல்லை. எனது சகாக்கள் 3 + மகன்கள் -இணைந்து நெட்ஸ் புக் பண்ணி பிராக்டிஸ் பண்ணுவது மட்டுமே. மகன்களுக்கு தான் பிராக்டிக்ஸ். எங்களுக்கு எக்சசைஸ் 😂.
  5. சதீசனின் தலமையில் நடந்த பிக் மேட்சில்தான் சுரேன்குமார் 132 அடித்தாரா? குகன் இப்போ இலண்டனில் இருப்பவர் எனில் - தெரியும். புரூடி நிச்சயமாக தெரியும். தெரியும் எண்டால் - அவர்களை எனக்கு தெரியும், அவர்களுக்கு என்னை நினைவிராது (விவேக்கின் எனக்கு ஐஜியை தெரியும் ஜோக் போல😀). இன்று வரை அதில் யார் பக்கம் நியாயம் என்பதில் எனக்கு தெளிவில்லைத்தான். ஆனால் வயசு போக போக, அப்பாவின் பக்கம் தராசு மேலும் தாழ்கிறது என்பது உண்மை.
  6. பிரஜா உரிமை எப்போதும் சமம்தான். பிரிதானியாவில் மட்டும் அல்ல. மேற்கு முழுவதும். வெள்ளை பிரஜா உரிமை, கறுப்பு, பழுப்பு பிரஜா உரிமை என வேறுபாடுகள் இல்லை. அதே போல் பெற்றாரின் பிறந்த இடம், இங்கே பிறந்த பிள்ளைகளின் பிரஜா உரிமையை தரம் குறைக்கவும் மாட்டாது. ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே உள்ளது பெற்றார் அல்லது திருமணம் அல்லது வேறு எந்த வழியிலாவது உங்களுக்கு இன்னொரு நாட்டின் பிரஜா உரிமை இருந்து, நீங்கள் இந்த நாட்டின் பாதுகாப்பு நலனுக்கு விரோதமாக செயல்படின், உங்களின் பிரித்தானிய பிரஜா உரிமை மீளப்பெறப்படலாம். ஷைமைமா பேகம் வழக்கு போல. ஆனால் இதுவும் கூட எல்லாருக்கும் பொதுவானதே, ஒரு அமெரிக்கா குடியுரிமைக்கு உரித்துள்ள, வெள்ளை பிரிதானிய குடிமகன், பேகம் போல ஐசிஸ் உடன் சேர்ந்தால், பேகத்துக்கு நடந்தது அவருக்கும் நடக்கும்.
  7. இது ஒரு அதிகாரி வாய்மூலம் சொன்னார், என சதி, உளவுபார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் , குற்றம் தீர்க்கப்பட்டவர். தனது குற்றத்தை இல்லை என சொல்ல, சொல்லிய கதை. இதை நீதி மன்றமே நம்பவில்லை. அப்படித்தான் இருந்தாலும் அது ஒரு இனவாத அதிகாரியால் சொல்லபட்டாதவே இருக்கும். ஒழிய அது ஏற்று கொள்ளபட்ட நடைமுறை அல்ல. எனக்கு UK MoD யில் DV எனப்படும் developed vetting பாஸ்பண்ணி, பலவருடம் எஞ்சினியாராக வேலை செய்த இலங்கையில் பிறந்த தமிழரை தெரியும். இப்போதும் இலண்டனில் தமிழ் மொழி முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறார். இந்த ஒற்றை உதாரணமே போதும். இன்னொன்றும் சொல்கிறேன் கேளுங்கள் - எனக்கு வேலை செய்த பம்பாயில் பிறந்த ஒரு பெண்மணிக்கு, DV க்கான referee யாகவும் நானே இருந்துள்ளேன். அவவும் DV பாஸ்பண்ணி புது வேலை எடுத்தும் போய்விட்டா. நீங்கள் அடியும் தெரியாமல், நுனியும் புரியாமல் உங்கள் வியாக்கியாத்தை கொடுக்கிறீர்கள். இந்த DV பற்றிய Guidance கீழே. இதிலும் நான் சொன்னபடிதான் உள்ளது. எந்த இடத்திலும் நீங்கள் சொன்னபடி இல்லை. https://www.gov.uk/government/publications/united-kingdom-security-vetting-clearance-levels/dv-guidance-pack-for-applicants யதார்த்தம் என நீங்கள் தப்பாக புரிந்து வைத்துள்ளது. இதுவரை நீங்கள் சொல்லியதற்கு (ஒரு நாள் முழுக்க கூகிள் பண்ணிய பின்னும்) ஒரு எழுத்து மூல ஆதாரத்தை, policy document ஐ தன்னும் உங்களால் காட்ட முடியவில்லை. உங்கள் முழு அறிவை முடிந்தால் ஆவணங்கள் மூலம் நிறுவுங்கள்😀. உங்களின் assumptions எல்லாம் யதார்த்தம் ஆகாது. அறிவும் ஆகாது. இல்லை அவர் ஈரானுக்கு உளவுபார்த்த குற்றவாளி. நான் எம் பிள்ளைகளை இப்படி செய்ய சொல்லவில்லை. அவர்கள் நாட்டுக்கு விசுவாசமாக வேலை செய்ய பெற்றார் வெளிநாட்டில் பிறந்தது ஒரு தடையே அல்ல.
  8. எப்படியாவது basement dungeon க்க இருந்து மேல வரமாட்டமா எண்டு ஒரு நப்பாசை😀
  9. முரளி (செஞசோன்ஸ்? நெட்டை),ப்ருடி நியாபகம் உள்ளது. ப்ருடி அப்போ கொழும்பு இந்துவில் பயிற்றுவிப்பாளர் ஆகி இருந்தார் என நினைக்கிறேன். ஏனையோரை கண்டால் தெரியலாம். அப்போ நான் ரொம்ப சின்ன வயது. அங்கே தொத்தி கொண்டு இருப்பேன். அநேக நாட்கள் பீல்டிங் மட்டும் கிடைக்கும் 😀.
  10. காளியம்மாளுக்கு 39 வயதுதான். விஜைக்கு 52?
  11. இருக்கலாம்…ஆனால் கட்சியில் இருந்த படியே, ஒரே மேடையில் வைத்து அண்ணன் 10 நிமிடம் தலைவரை சந்தித்தார் என போடு போட ஒரு கெத்து வேணும். அந்த கெத்து காளியம்மாளிடம் நிறையவே இருக்கிறது. தமிழ் தேசியத்தின் மீது உண்மையான பற்று. கெத்து இவை இரெண்டும் அடிப்படையான மூலப்பொருட்கள். ஏனைய பிழைகளை, உடான்சு கதைகள் சொல்லாத ஒரு தலைமையின் கீழ் திருத்திகொள்ளலாம்.
  12. கல்யாணசுந்தரமும், ரஜீவ்காந்தியும் விலகியபோது - அவர்கள் தனி இயக்கம் காண வேண்டும் என்றே நான் யாழில் எழுதினேன். அதே போல் அவர்கள் திமுக, அதிமுகவில் சேரும் போது கடுமையாக விமர்சித்தும் உள்ளேன். நீங்கள் அவர்கள் நாதகவில் சேரும் போதே, கழகங்களுக்கு மாறும் தீய எண்ணத்தில் சேர்கிறார்கள் என்கிறீர்கள். நான் அப்படி நினைக்கவில்லை. சேரும் போது தூய எண்ணத்தில்தான் சேர்கிறார்கள். ஆனால் காலம் அவர்களுக்கு நாதகவும், கழகங்களும் ஒரே குட்டைதான் என்பதை உணர்த்தும் போது - அம்மணமாக திரியும் ஊரில் கோவணம் கட்டுபவன் முட்டாள் - என நினைத்து - தாமும் சுயநலமாக செயல்பட ஆரம்பிக்கிறனர். கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தியில் பிழை இல்லை என நான் சொல்லவில்லை. என்று அவர்கள் திமுக, அதிமுக வில் இணந்தார்களோ அன்றே அவர்கள் சரசரி கோக்குமாக்கு அரசியல்வாதிகள் ஆகிவிட்டனர். ஆனால் இதற்கு எல்லாம் அடிப்படை சீமானின் பேச்சு ஒன்று செயல் ஒன்று என்ற நிலை. நீங்கள் வெளியில் பிரபலமான இருவரை பற்றி மட்டுமே கதைக்கிறீர்கள். இன்னும் பெருந்தொகையானோர், மாவட்ட செயளாலர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எல்லாமும் கூட கட்சியை விட்டு விலகியுள்ளனர். இவர்களில் பலர் அரசியலை விட்டே ஒதுங்கி விட்டனர் (இப்போ கல்யாணசுந்தரமும் ஒதுங்கிவிட்டார் என கேள்விப்பட்டேன்). இன்னும் பலர் தமிழ் தேசிய பரப்பில் ஒன்றிணைந்து செயல்படுகிறனர். உண்மையில் நாதக வில் கிடைத்த வெளிச்சத்தை பயன்படுத்தி மாற்று கட்சியில் மேலே வந்தது ரஜீவ்காந்தி மட்டுமே. மிகுதி எல்லோரும் தமது வேட்கையை, இலட்சியத்தை, இளமையை, உழைப்பை தொலைத்து விட்டு அரசியல் அநாதைகள் ஆகிவிட்டனர். அவர்கள் உழைப்பில் சீமான் நீலாங்கரையில் ஆறு கோடி பங்களா கட்டியதுதான் மிச்சம். இதுதான் தமிழ் தேசியத்தின் எழுச்சியை காயடிப்பது என்பது. ஆனால் இப்போ அப்படி இல்லை, காளியம்மாள் போன்றோருக்கு தவெக ஒரு மாற்றாக இருக்கிறது.
  13. மழை யாருக்கு ஆப்பு? யாருக்கு வரம்? புள்ளிபட்டியல் மாறாது என நினைக்கிறேன். யார் 1, யார் 2 என்பது நெட் ரன்ரேட்டில் தீர்மானிக்கும் படி ஆகலாம்? பிகு வேர்க்கிங் ப்ரொம் ஹோம் எடுத்தது வீணா போய்டும் போல இருக்கே.
  14. 😛 ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை 🤣
  15. நீங்கள் சொல்வது மிக சரி. விகிதாசார பிரநிதிதுவத்தில் உள்ள பாதகங்களில் ஒன்று - இனவாதிகள், இதர சமூகவிரோதிகளுக்கும் ஒரு களம் அமைத்து கொடுக்கும்.
  16. இதில் மாறுபட முடியாது. ஆனால் கல்யாணசுந்தரத்தை நான் 2008 இல் சென்னையில் சந்தித்துள்ளேன். கம்யூனிஸ்டில் இருந்தார் என நினைக்கிறேன். கொழுத்தும் வெய்யிலில் - கருணாநிதி போகும் வரும் வழியில் ஒரு குழுவாக நின்று போரை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம் செய்வார்கள். நிச்சயமாக அப்போ மாசற்ற மனிதராகத்தான் இருந்தார். இங்கேதான் ஒரு தலைமை உண்மையானதாக இருக்க வேண்டியது மிக அவசியமாகிறது. 1980 களின் ஆரம்பத்தில் புலிகளின் சேர்ந்தவர்களும், டெலோவில் சேர்ந்தோரும் ஒரே நல்லெண்ணத்துடந்தான் சேர்ந்தார்கள். 2009 இல் இவர்களில் புலிகளாக இருந்தபலர் கடைசிவரை கொள்கைவாதிகளா சாவடைந்தனர். ஆனால் டெலோவில் சேர்ந்தோர்? ஒன்றில் காடைகளாக அல்லது சிவாஜி, செல்வம், சிறிகாந்தா போல அரசியல்வாதிகள் ஆகினர். இங்கே வித்தியாசம் தலைவரின், சபாரத்தினத்தின் தலைமையே. புளொட்டில், டெலோவில் அன்று நடந்ததுதான் பல துடிப்புள்ள, இணையும் போது உண்மையாக இருக்கும் தம்பிகளுக்கு இன்று நாதகவில் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அண்ணனே ஒரு முழு திருடன் என புரியும் போது, 25 வயதாகி இருக்கும், வாழ்க்கை பயம் தொற்றி கொள்ளும், சரி நாம் எம் பங்குக்கு என்ன களவை செய்யலாம் என்றே மனம் ஓடும். இது காளியம்மாளுக்கு நடக்க கூடாது என்பதே என் விருப்பு.
  17. அப்போ அதிகம் ஒன்றும் தெரியாது. சொல்லி கொடுப்பதை செய்வதுதான். ஆங்கிலமும் அப்படி இப்படி, ஸ்போர்ட்ஸ்ஸாரை வாங்கி படம் பார்ப்பதே அதிகம் 😛. இங்கிலாந்து வந்த பின் லெஷர் கிரிகெட் விளையாடும் போது நுணுக்கங்கள் சிலது புரிந்தது.
  18. இனப்பிரச்சனை வேறு பல தொல்லைகளை தந்தது ஆனால் விளையாட்டை விட அது காரணம் இல்லை. ஒரு கட்டத்தில் விளையாட்டுத்தான் வாழ்க்கை, ஓ எல் மட்டும் படித்தால் போதும், அதன் பின் விளையாட்டில் முழு நேரக்கவனம் - ஏதாவது ஒரு நிறுவனத்தில் சேர்வது மேர்கண்டையில் கிரிகெட், கிளப் கிரிகெட் ஆடுவது. என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தேன். இதோடு பேச்சு, விவாத போட்டிகள், புதிதாக ஆரம்பித்த அரசியல் என ஒரு 15/16 மாதம் புத்தகத்தை தொட்டு கூட பார்க்கவில்லை. ஆண்டு 11 முதல் தவணை பரிட்சையில் சராசரி 42%!!! கணிதத்துக்கு நூற்றுக்கு ஐந்து 😜. அப்போ யுத்த பகுதியில் இருந்த தந்தையார் உடனடியாக கொழும்பு வந்து வெள்ளவத்த கடற்கரையில் பாறைகளில் அமர்ந்து பேச்சுக்கள் ஆரம்பமாகின. அநேகமாக தன்னோடு ஊருக்கு கூட்டி போவதே அவர் தெரிவாக இருந்தது. பேச்சுவார்த்தை முடிவில், டிசெம்பர் சோதனை வரை கிரிகெட்டை தள்ளி வைப்பது என்றும் அதன் பின் மீள விளையாடுவது என்றும் முடிவாகியது. அடுத்து துரதிஸ்டவசமாக அல்லது அதிஸ்டவசமாக ஓ எல் பரிட்சையில் மிக திறமான பெறுபேறுகளை எடுத்தேன். தமிழ் பட ஹீரோ ஒருபாட்டில் பணக்காரன் ஆவது போல. பிறகென்ன..புறச்சூழல், நிலமையின் அழுத்தம், இன்னபல காரணிகள் சேர்ந்து, கிரிகெட்வீரனை அப்படியே அமிழ்த்தி ஏல் எல் டியூசன், பாஸ்பேப்பர், என வாழ்க்கையின் ஓட்டம் மாறி விட்டது. உண்மையை ஒத்து கொள்ளத்தான் வேண்டும் - ஆண்டு 11 முடிவில் எனக்கு கூட எனக்கு விளையாட்டை விட படிப்பு கொஞ்சம் இலகுவாக வருகிறது என்பதும், ஒரு சராசரிக்கும் மேலான வாழ்க்கையை அமைக்க படிப்பே இலகுவான வழி என்பதும் ஓரளவு புரியத்தொடங்கியது. ஆண்டு 12 இல் நான் கிளப்புக்கு திரும்பி போகவே இல்லை. வாவ்…நான் ஆர்னோல்டுடன் மென்பந்து விளையாடி இருக்கிறேன். தெகிவளை பிரேசர் கிரவுண்டிற்கு அருகில் அவர் வீடு, 1994 சென் பீட்டர்ஸ் கேப்டன் அவர். பிரெசிடென்ஸ் கப் வென்றார்கள். அப்போ, வார இறுதியில் அவர் விளையாடும் அணியில் ஆள் போதாது என்றால் சேர்த்துக் கொள்வார்கள்.
  19. யாழ்கள சுமந்திரன் லவ்வர்சுக்கு, கணேமுல்ல சஞ்சீவவையே தூக்கிட்டார் நம்ம குடத்தனே சுமந்திரன்….😂. பின்னாடி பத்திரம்😁
  20. வேணும் எண்டா நானும் சாரா டெண்டுல்காரும் பீச்சில் இருப்பது போலவும் செய்துதரலாம் 😁.
  21. புலவருக்கே உந்த கெதி எண்டால்…நான் சொன்ன கதையளுக்கு😜. அப்போ படம் எடுப்பதென்றால் அப்பாவிடம் கமெராவை கேட்டு வாங்க வேண்டும், அதில் ஒரு கீறல் பட்டாலும் வீட்டை போக ஏலாது 😀. ஏனோ ஆட்டோகிராப் வாங்க தோன்றவில்லை. ஆனால் கிளப் மெம்பர்சிப் கார்ட்டை இன்றளவும் பாதுகாத்து வைத்துள்ளேன். நாளைக்கு கோஷானும் டேவிட் வார்னரும் கதை சொல்கிறேன் 😂. இப்ப எல்லாரும் அச்சா பிள்ளையா போய் தூங்குவீங்களாம்😁.
  22. ஒவ்வொரு செவ்வாயும் மயூரபதி வருவார். ஆரம்பத்தில் தெகிவளையில் ஒரு தமிழ் பையனுடன் சேர்ந்து ரூமில் தங்கி இருந்தார். பின்னர் மோட்டார் சைக்கிள், பின் யூனியன் அசுரன்சில் வேலை, கார்…அப்படியே எங்கோ போய்விட்டார். ஒரு ஜாவா சுந்தரேசன்😁
  23. நானும் இப்போ தெ.ஆ வுக்கு வாய்ப்பு கூட என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை உங்களது👏.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.