Everything posted by goshan_che
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நாங்கள் மொக்கன் கடை மாட்டு ரோல்சை டேக் எவே எடுத்து, பாரிஸ்டாவில் போய் ஒரு சுகர் ப்ரீ காப்பாச்சீனோ வை வாங்கி, அங்கே இருந்து அருகே இருக்கும் கற்பகத்தில் வாங்கிய பனங்கட்டியை நக்கி நக்கி கூட குடிக்க முடியும்…ஏன்னா நாங்க நடுநிலை நக்கிகள் 🤣. ஆனால் வன்போக்கு நக்கிகள் (அட அதுதாங்க extremists) கோவிலில் கிடைக்கும் ஐயரின் கை ஜூசை (அதாங்க பஞ்சாமிர்தம்) மட்டுமே நக்க முடியும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நன்றி நல்ல வேளை உங்கள் சந்ததி தப்பியது. கோவில் கள்ளர் கனபேருக்கு அடுத்த சந்ததியில் தீர்ப்பு எழுதபட்டதை கண்டுள்ளேன். எப்பவும் எங்கட ஆட்கள் சிலருக்கு மலையாளிகள் மீது ஒரு தனிப்பாசம்தான்🤣.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இப்பவும் செம்பக பெருமாள் என்ற யாழ்பாணத்தை சூறையாடிய சிங்கள மன்னன் சபுமல்குமாரயா எனப்படும் புவனேகபாகு (6ம்?) மன்னனுக்கு கட்டியம் கூறித்தான் திருவிழாவே தொடங்குவது என கேள்விப்பட்டேன். நல்லூரில் இப்போ ஒரு 50 வருடமாக இருப்பது எல்லாம் வந்தான், வரத்தாந்தானே? பெரும்பாலும் தீவக மக்கள். அவர்களுக்கு நல்லூரின் வரலாறு அதிகம் தெரியாது இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?!
நன்றி. பொட்டம்மான் ரத்தத்தை கண்டு மயங்கி விழுந்தார் என எழுதி, அது ரகசியம், ஜெயராஜுக்கு தெரியக்கூடாது என்பதையும் ஜெயராஜ் வாசிக்க கூடிய தளத்தில் எழுதியபோது…. யோசித்தேன்…. இதை மறுக்க, பொட்டம்மானின் வீரத்தை பறைசாற்ற யாழில் ஒரு மீசை வைத்த புலி ஆதரவாளராவது வருவார்களா இல்லையா என. நீங்கள் மட்டுமே தேறி உள்ளீர்கள்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
100% உண்மை. கோவிலில் இருந்து கணிசமான தூரத்தில் இருக்கும் கடை என தெரிந்தும், தகவல் கூகிளில் இருந்தும், கனடாவாழ் பரந்த மனது கருத்தாளர் கூட, தண்ணீர்பந்தல் போடும் இடத்தில் உள்ளது, சைக்கிள் பார்க் வைக்கும் இடத்தில் உள்ளது என்ற ரேஞ்சில் எழுதியது… இவர்களின் முற்போக்கு எல்லாம் வெறும் மேற்பரப்ப்பில் படிந்து கிடக்கும் superficial தூசி என்பதையும், உள்மனதில் இவர்கள் அனைவரும் தமிழ் தாலிபான்கள்தான் என்பதையும் காட்டி நின்றது.
-
7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!
அண்மையில் இதே போல் இன்னொரு திரியில் உங்களுடனும் ஏராளனுடனும் இப்படியானோருக்கு “ஆண்மை நீக்கம்” செய்வது பற்றி கருத்து பரிமாறி இருந்தேன். யூகேயில் ஒரு பரீட்சார்த்தமாக (pilot scheme ) மருந்துகள் மூலம் ஆண்மை அகற்றும் (chemical castration) திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்துகிறார்கள். BBC NewsChemical castration for sex offenders to be trialled in 2...Justice Secretary Shabana Mahmood is also exploring whether chemical castration could be made mandatory.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
எனது ஓய்வுக்காலத்தில் என் வீட்டு மொட்டை மாடி + மாடியில் ஒரு பகுதியை சேர்த்து, கொஞ்சம் ஏசி, ஒரு கொபி மிசின், சில லெதர் சோபாக்கள், நிறைய புத்தகங்கள், என ஒரு ambiance உள்ள கோப்பி கடையை போடும் ஐடியா இருந்தது. பாவியள் 300 மீட்டர் தூரத்தில் ஒரு பிரசித்தமான பிள்ளையாரை வைத்துள்ளார்கள்🤣. பிள்ளையாரை எப்படி கிளப்புவது எண்டு இப்ப யோசிக்கிறன் 🤣.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
வேம்படி அருகில் என்றால் ஓக்கே… ராட்சசிகளுக்கு ரத்தமும் சதையும்தான் பிரியம்🤣 அடுத்த முறை போகும் போது அருகில் உள்ள கடைகளில் முட்டை, டின் மீன் விற்கிறார்களா என நோட்டம் விட உள்ளேன்… வித்தால் வேலனுக்கு ஒரு போனை போட்டு விட வேண்டியதே🤣
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
சிரித்தவுடன் கிழித்து விடவும்.
-
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
இந்த முறை தேரர் என்ன உத்தியை பாவித்திருப்பாரோ🤣
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நேரடியாக களத்தில் இறங்கி, நாகரீகமான முறையில் விடயத்தை அணுகி உள்ளீர்கள்👏. பரிஸ்டா நிறுவனமும் ஒரு காப்பரேட்டுக்குரிய reputational damage awareness உடன் செயல் பட்டுள்ளனர். Beef, chicken இற்கு பதிலாக vegan beef, vegan chicken ஐ அவர்கள் பரிமாறலாம். விலையை கொஞ்சம் கூட்டியும் விற்கலாம். இதை ஒரு விளம்பர உத்தியாகவும் பாவிக்கலாம். இந்த திரியை வாசித்த பலர் ஒருதரமேனும் ஊருக்கு போகும் போது இங்கே போவார்கள். பார்ட்டிகள், பார்பிகியூக்களில் இது மேலும் அலசப்பட்டு இன்னும் பிரபலமாகும். இது யாழ்பாண தமிழரின் பிற்போக்குத்தனத்தை காசாக்கி கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பம் பாரிஸ்டாவுக்கு. சுமந்திரனுக்கும் இதற்கும் சம்பந்தமிருப்பதாஅன ஊகத்தின் அடிப்படையில் இந்த விடையத்தில் குறுக்கு சால் ஓடியோருக்கு பரிஸ்டாவின் நெகிழ்வு போக்கும், கடை தொடரப்போவதும், மேலதிக விளம்பரமும் பாரிய மன உழைச்சலை தரும் என்பதில் ஐயமில்லை🤣. ஒரு மார்கெட்டிங் ஏஜெண்டை வைத்து கூட அடைய முடியாத பப்ளிசிட்டியை பாரிஸ்டாவுக்கு கொடுத்துள்ளனர் வேலனும் மொக்கராசுகளும். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காவது இவர்களுக்கு எப்போதும் நடப்பதுதானே🤣.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இது தவறான தகவல். கீழே இந்த கடையின் கூகிள் இணைப்பை தந்துள்ளேன். நல்லூர் குறுக்கு தெருவுக்கு எதிராக உள்ள உயர்ந்த மதிலுக்கு பின்னால் உள்ள வீட்டில்தான் கடை இருப்பதாக காட்டுகிறது. இந்த குறுக்கு தெரு சந்தியில் வைத்து நீங்கள் சொன்ன நடவடிக்கைகள் நானறிய இடம்பெறுவதில்லை. அதே கூகிள் ஸ்டீர்ட் வியூவில் நல்லூர் கோவில் பக்கமாக பருத்திதுறை வீதியில் உருட்டி போனால், நல்லூர் பிரதேச சபை வரும் அதற்கும் அப்பால்தான் நீங்கள் சொன்னன ஓலையால் வேயப்பட்ட வளைவு வரும். இந்த கூகிகிள் ஸ்டிர்ரீட் வியூவில் அந்த வளைவுக்கு ஓலை வேய்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்தில்தான் திரு விழா நாட்களில் மட்டும் பரியர் போட்டப்பட்டு, நீங்கள் சொன்ன நிகழ்வுகள் நடக்கும். இந்த கடை இருக்கும் இடம் எந்த வகையிலும் கோயில் சுற்றாடல் என்று சொல்லவே முடியாத இடம். https://maps.app.goo.gl/j6B5Xka2XdNfNcLD7?g_st=com.google.maps.preview.copy பிகு படங்களை பார்த்தால் நல்ல அழகாக உள்ளது. அடுத்த முறை போய் ஒரு கபே லாத்தே வித் ஓட் மில்க் அடிக்க வேண்டும். முதலிலேயே கந்தனுக்கு ஒரு சலூட்டை போட்டு விட்டு வந்தால் பிளக் பெப்பர் பீப்பையும் ஒரு வெட்டு வெட்டலாம். யாழ்கள உறவுகளுக்கு படத்துடன் பயண கட்டுரை கரண்டீட்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கடை இன்னும் இருக்கிறது என நினைகிறேன். பெயர் பலகைதான் அனுமதி இன்றி இருந்தமையால் தூக்கி போயுள்ளனர்?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அப்ப வேலனோடு வந்த பத்து மொக்கராசுகளுக்கு பயந்து பொலிஸ் இறங்கவில்லை? 🤣 பெயர் பலகையா, கடையா அகற்றப்பட்டது?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இந்த உரிமையாளரை முதலிலேயே அணுகி இதை செய்திருக்கலாம். இதில் மக்கள் அதிகம் அலட்டவில்லை என்பது “வேலனும் பத்து மொக்கராசுகளும்” நிற்கும் படத்தை பார்தாலே புரியும். அத்துகிரிய பரிஸ்டாவின் மெனு கீழே. ஒரே ஒரு ஐட்டம் மட்டுமே மாடு. அதை மாற்றுவதில் அதிக சிக்கல் இருக்காது என நினைக்கிறேன். மூன்று சிக்கன் அயிட்டம் உள்ளது. https://barista.lk/menu/ மாட்டும் வரை விவேகானந்தா.. மாட்டினா நித்யானந்தா🤣. அண்மையில் இதே போல் இன்னொரு மதிப்புக்குரியவரை இலண்டன் கோர்ட் பாலியல் வன் புணர்வு குற்றவாளி என உள்ளே போட்டது. பாப்பம் வேலனுக்கும் ஒரு லெனின் இருப்பார்தானே🤣.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
எனது தாயாரிடம் ஒரு தவில் அடிப்பவரின் மகன் படித்தார். பேச்சுவாக்கில் ஒரு நாள் எங்கள் வீட்டில் நேற்று குடல் கறி என சொல்லி விட்டான்🤣. அவனின் அப்பாதான் எங்கள் ஊர் கோவிலில் தினமும் மேளம். அப்பா நேற்று கோவிலுக்கு போகவில்லையா என கேட்க, போனவர். எங்கள் வீட்டில் வழமையாக நாங்கள் மச்சம் சாப்பிட்டு விட்டே கோவிலுக்கு போவோம், அப்போதுதான் உசாராக மேளம் அடிக்கலாம் எண்டு வேறு சொல்லிவிட்டான். அடுத்த நாள் காலை அவனோடு அவன் தாயும் வந்து, மகன் நேற்று சோயா மீட்டை, இறைச்சி என தவறாக சொல்லி விட்டார் என ஒரு விளக்கம் கொடுத்தார்🤣. இது எங்கும் நடப்பது என நினைக்கிறேன். மேற்கு வங்க பிராமணர் மீனை சைவம் என சொல்லி அடிப்பார்கள்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இவர் தமிழர் சுமன் தோழர் என யாழில் இன்னொரு திரியில் கூறப்பட்டதே? அவனவன் சுமந்திரனை எதிர்கிறேன் பேர்வழி எண்டு தன் தன் வியாபார கறளை எல்லாம் தீர்த்து கொள்கிறார்கள் போல உள்ளது.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நான் என்ன செய்வது என்றால்…இப்படி சொல்லி…ஒரு அறை நிமிட கேப் விட்டு… ஆனாலும் சீனா இல்லை எண்டால் இந்தியா உங்களை ஊதி தள்ளி இருக்கும் எண்டும் சொல்லி விடுவன். கோல் அடிப்பது எண்டு முடிவாகிவிட்டால் இரெண்டு பக்கமும் அடிக்கவேண்டும் 🤣 ஆள் வர பிந்துகிறது… பாரிஸ்டாவில் கோப்பி குடித்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
இதில் இன்னொரு விடயமும் உள்ளது. அதுதான்…வாக்கு. ஜனநாயகம் என்பதே ஏதோ ஒருவகையில் வாக்குக்காக கையூட்டு கொடுப்பதே. அதை பணமாக அல்லது லேப்டாப்பாக கொடுக்கும் போது நம்மில் பலருக்கு கண்ணை உறுத்தும். ஆ..ஊ..என கத்துவோம். ஆனால்…நாம் வாழும் நாடுகளில், நரை-வாக்கு எனப்படும் grey vote ஐ பெற அரசியல்வாதிகள் என்ன பாடு படுகிறார்கள் என்பதை நாம் காண்கிறோம். ஓய்வூதிய வயதினாரகிய இவர்கள் வாக்கு போடும் நிகழ்தகவு அதிகம் என்பதால் - இவர்களுக்கு சாதகமாகவே (அதிகம் வாக்கு போடாத இளையோருக்கு பாதகமாக) கட்சிகளின் கொள்கை முடிவுகள், செலவீன முடிவுகள் இருக்கும். இதேதான் தமிழ்நாட்டிலும் நடக்கிறது. ஆனால் - இந்த ஈழத்தமிழர் எண்ணிக்கையும் மிக சொற்பம், வாக்கும் இல்லை. ஆகவே இவர்களுக்கு கட்சிகள், தலைவர்கள் மனமிரங்கி ஏதாவது செய்தால் மட்டுமே சாத்தியம். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஓங்கோல் கருணாநிதி தெலுங்கன் என டிவிட்டரில் அலப்பறை கிளப்பும் புலம்பெயர் மொக்கராசுகள் தலைவர்கள் மனமிரங்க தம்மாலானதை செய்கிறார்கள் என்பதும் உண்மைதான்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நல்லூர் எனும் குடும்ப சொத்து மீது எனக்கு எந்த பெரிய பிரமிப்பும் இல்லை. கோவண ஆண்டியிடமும், அன்னதான கந்தனிடமும் இருக்கும் ஈர்ப்பு இந்த “காட்டாப்பு” கந்தனிடம் என்றும் இருந்ததும் இல்லை. ஆனால் ஏனையோரின் நம்பிக்கை என்ற அளவில், கோவில் வெளி வீதியில் இதை அனுமதிக்க முடியாது என்பதை ஏற்கிறேன். பிகு எந்த கோவில் எண்டால் என்ன, சுடுகாடு என்றால் என்ன, சோறு போடுவதாயின் அதுவும் கறி சோறு - நான் தயாரே🤣.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நல்லூர் கோவில் அண்மை என்பது கோவிலில் இருந்து 300, 400 மீட்டர் என நீள முடியாது. டெம்பிள் ரோட்டில், கோவில் வெளி வீதி முடிந்து வீதி தொடங்கும் புள்ளியில் இருந்து, சங்கிலியன் ஒழுங்கை (முன்பு அது ஒரு பெயரில்லாத ஒழுங்கை) தொடங்கும் இடம் வரையான பகுதி கோவில் வெளிவீதியில் இருந்து 150 மீட்டர், 200 மீட்டர்தான் . இங்கே பல வீடுகளில் நானே நல்ல மச்ச கறி சாப்பிட்டுள்ளேன். கோவிலில் இருந்து 300, 400 மீட்டர் தொலைவில் கூட ஒரு கோப்பிக்கடை போடக்கூடாது என்பது சுத்த கோமாளித்தனம். அவர்கள் செய்ய நினைப்பது என்ன? வியாபாரம். Beef panini யை அங்கே வசிக்கும் மக்கள் வாங்கினால்தானே விற்க முடியும்🤣. ஒரு கிழமை யாரும் வாங்காவிட்டால் அடுத்த கிழமை முதல் கிழங்கு ரொட்டி போடுவார்கள்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. கோத்தும்பீ - அரச வண்டே! கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு - கண்ணப்பருடைய அன்புக்கு ஒப்பான அன்பு, இன்மை கண்டபின் - என்னிடத்தில் இல்லாமை அறிந்தும், என் அப்பன் - என் தந்தை, என் ஒப்பில் - எதனோடும் ஒப்பில்லாத, என்னையும் ஆட்கொண்டருளி - என்னையும் அடிமையாகக் கொண்டருளி, வண்ணம் பணித்து - யான் ஒழுக வேண்டிய வகையைத் தெரிவித்து, என்னை வாவென்ற - என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய, வான் கருணை - மேலாகிய கருணையையுடைய, சுண்ணம் - பொடியாகிய, பொன் நீற்றற்கே - அழகிய திருநீற்றையணிந்தவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக. பிகு இந்த யாழ்பாணத்து சங்கிகள், 10 வகுப்பு சைவ சமயம் கூட ஒழுங்கா படிக்கவில்லை என நினைக்க்கிறேன். படித்திருப்பின் இந்த திருகோத்தும்பீ செய்யுளும் அதன் பொருளும் விளங்கி இருக்கும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
பச்சை தீர்ந்து விட்டது. சுமந்திரனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக…வேலன்… (எதுகை மோனையில் எழுதாலாம் சபை நாகரீகம் கருதி தவிர்க்கிறேன்)…. போன்ற குடுகுடுப்பைகாரர்களை எல்லாம் களத்தில் இறக்கி விட்டுள்ளார்கள்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இந்த பாரிஸ்டா என்ற சொல் பற்றி ஒரு துணுக்கு. பலருக்கு தெரிந்திருக்கும். Barista - பாரிஸ்டா - ஒரு கபேயில் கோப்பி போட்டுத்தருபவர். டீ மாஸ்டர் போல கோப்பி மாஸ்டர். Barrister - யுகே போன்ற நாடுகளில் கோர்ட்டுக்கு போய் வாதாடும் வழக்குரைஞர். சொல்லும் போது, குறிப்பாக இலண்டன் நகர பேச்சு வழக்கில் ஒரே மாதிரி தொனிக்கும்.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
தீர்க்கமான பார்வை, தெளிவான கருத்து. அப்படியே மாடு மேய்ப்பதை அரச தொழிலாக்கவேண்டும்🤣