Everything posted by goshan_che
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
சீச்சீ அப்படி அல்ல.. இதெல்லாம் சூட்சுமான விடயம். இதை புரிய ஒரு உணர்திறன் அவசியம் கிட்டதட்ட emperor’s clothes போல… அம்மணமாக நின்று கொண்டு…அருமையான உடை உடுத்துள்ளேன் பாருங்கள் என்பார்…. வாவ் அந்த பொத்தான் ரொம்ப அழகாக இருக்கிறது என நீங்கள் சொல்லத்தான் வேணும்😀. இல்லை என்றால் நீங்கள் தியரிபடி கதைக்கிறீர்கள், அல்லது பொத்தாம் பொதுவாக மேலோட்டமாக எழுதுகிறீர்கள்😂. 40,000 ஆண்டுக்கு முன் துறைமுகம் கட்டிய ஆள்… நாம்தான் மூளை கருகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
சில மாதங்களின் பின் சும்: நாம் யாழ் மண்ணில் கால்வைக்க விட மாட்டோம் என சொன்னதை செய்துகாட்டியுள்ளோம். எமக்கு பயந்து அனுர சப்பாத்து போட்டுத்தான் யாழ் மண்ணில் இறங்க கூடியதாக இருந்தது. அவருக்கு செல்வாக்கு ஏறுதோ இல்லையோ… நீங்கள் எழுதியதை வாசித்து இங்க பலருக்கு பிளட் பிரசர் ஏறப்போது.
-
இலங்கையில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம் - சுரேஷ் பிரேமச்சந்திரன்
எப்படி ப்ரோ? 1987-89 காலப்பகுதியில் மக்கள் அச்சமின்றி வாழ மண்டையன் குழு என்ற தர்மஸ்தாபனத்தை உருவாக்கி உழைத்தீர்களே, அப்படி ஏதும் செய்யும் உத்தேசமா ப்ரோ😀.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
பின்ன என்ன செய்பது… எல்லா தர்க்கமும் உடைந்து போனா…சம்பந்தமே இல்லாமல் பத்தி பத்தியாக நான்சென்சை எழுதி தப்பிக்கும் திறமை எம்மிடம் இல்லையே😀.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
அரைகுறை புரிதல், அரைகா போத்தல் ஆங்கில புலமையோடு - கோமாளிதனம் பண்ணும் நீங்களே கருத்து எழுதும் போது, நான் ஏன் தள்ளி நிற்க வேண்டும்😀.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
நிச்சயம் யோகசங்கரி இல்லை. அவர் 90 இலேயே இறந்து விட்டார். விக்கியின் சான்றுப்படி, வீரசிங்கம் என்ற பருத்திதுறையை சேர்ந்த பிரின்சிப்பலுக்கு 6 ஆண் பிள்ளைகள். அனைவர் பெயரும், அவர்களின் ஆண் பிள்ளைகளின் பெயரும் சங்கரி என முடியும். 6 பேரில் மூத்தவர் இராஜ சங்கரி, ஈபியால் கொல்லப்பட்டுள்ளார். 1988 இல் இன்னொரு ஆனந்தசங்கரியின் சகோதரரான ஞான சங்கரியும், 1990 இல் ஞானசங்கரியின் மகனான யோகசங்கரியும் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். வீரசிங்கம் பிரின்சிப்பலுக்கு பிறகு அந்த குடும்பத்தில் பிறந்த ஆண்கள் அனைவரின் பெயரும் சங்கரி என முடிவதால் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. முறைப்படி மார்க்கானி 5 வருடம் பூர்த்தி செய்த பின் naturalization மூலம் பிரிதானிய பிரஜை ஆனவர் என ஆதராம் மூலம் நிறுவியவன் நான். Registration, honorary citizenship என எங்கோ கேள்விபட்டதை எல்லாம் வாயில் வந்த கோலத்தில் எழுதியவர் நீங்கள். யார் பொத்தாம் பொதுவில் எழுதுபவர் என்பதும், ஆதாரபூர்வமாக தான் எழுதியதை பிழை என இன்னொருவர் நிறுவியதும், அது தியரி நான் சொல்வது நடைமுறை என சடைபவர் யார் என்பதும் களம் அறியும்.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
இண்டைக்கு பாவம் பார்த்து இன்னொரு 😀 கொஞ்சம் பொறுங்கோ… மகாவம்சம் மாரி இப்பதான் கார்னி வம்சம் கதை எழுதி கொண்டிருக்கிறம். அதுக்கே கற்பனை கையிருப்பு தீர்ந்து விடும் போல உள்ளது. இதை எழுதி முடித்த பின், கற்பனை மிச்சம் இருந்தால் - சோழ வம்சகதையோடு, சங்கரிக்கு எத்தனை சகோதரம் என்பதையும் எழுதுவோம்.
-
மகன் வாங்கிய சீன வெடியை கடித்து பார்த்த பெண் பல் வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதி!
மாதன முத்தாவின் மகள்😀
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
அது பிரெஞ் மொழி பேசும் கியூபெக் மாகாணத்தில் (மொண்டிரியல் தலைநகர்). அல்பேர்ட்டா, வான்கூவர் (மேற்கு), ரொடெண்டோ (கிழக்கு) இடையே இருக்கும் மத்திய கனடா மாநிலம், தெற்கு எல்லை அமேரிக்கா. அண்ணேய் உங்களுக்கு பேய் பிசாசு சகவாசம் இருக்கோ😂. யோகசங்கரியை ஜூன் 1990 இல் சென்னையில் வைத்து நாபாவோடு இன்னும் பலரோடு புலிகள் போட்டுதள்ளி விட்டார்கள்.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
அப்படியா? அப்போதே அதிகம் பழக்கமில்லை. என்னை நியாபகம் இருக்குமோ தெரியவில்லை. அவர்களின் இன்னொரு உறவான யோகசங்கரி எம்பியான பின் இவர் பள்ளியில் வந்து சேர்ந்தார் என நினைக்கிறேன். மிகவும் சாதுவான குணம். அப்போ அதிகம் கதைப்பவராக நியாபகம் இல்லை. நானும் விரைவிலேயே பள்ளி மாறி விட்டேன். நிச்சயமாக. புலம் பெயர்தேசத்தில் அமைதியாக ஆனால் வினைத்திறனாக ஈழத்தமிழர் விடயத்தில் ஆமான காரியம் செய்பவர்களில் இவரும் ஒருவர். தந்தையை இரு தடவை மட்டும் சந்தித்தாதாலோ என்னமோ அவரினை போல் இவர் இல்லை.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
அவர் வீட்டில் படுத்திருந்து விட்டைத்தை பார்த்து கதை சொல்லுகிறார் என்றால் அதை எல்லாம் சீரியசா எடுத்தா கேள்வி கேட்பீர்கள்😀. மார்க்கானி பேங் ஆப் இங்கிலாந்தின் கவர்னர் ஆகும் போது அவரிடம் கனேடிய பிரஜாஉரிமை, மற்றும் பாட்டன்/பாட்டி வழி மூலம் கிடைத்த ஐரிஷ் பிரஜா உரிமை இருந்தன. அதன்பின் அவர் யூகேயில் 5 வருடங்களை பூர்த்தி செய்து, ஏனையோரை போல citizenship வழிமுறை படி பிரித்தானிய பிரசை ஆனார். ஆதாரம் கீழே: Honorary citizenship எல்லாம் நம்ம கடஞ்சா, கடைந்த பருப்பு துவையல் 😀. The StandardThe Londoner: Carney to become a British citizenMark Carney to receive citizenship / Labour figures fail to add up / Michael Caine's hazy memories / Christopher Meyer makes speedy recoveryகொசுறு கார்னியின் மனைவி பலகாலமாக (பிறப்பில் இருந்தாக இருக்கலாம்) பிரிதானியர். கார்னியின் மகள் தஜ்தையை போல ஹாட்வர்ட்டில் படிக்கிறாராம்.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
உங்கட ஆளும் அதிகம் மோசம் இல்லை. சொன்னது போல் ஜேர்மனியை மீண்டும் ஒரு இராணுவ தன்னிறைவு நாடாக மாற்றினால் ஆள் கெட்டிக்காரன் என சொல்லலாம். பலாலியில் கைவிலங்கோடு இறங்கல் - இப்படி வரலாம் என சொன்ன போது பலர் இங்கே அதை மிகை கற்பனை என்றார்கள். ஆனால் டிரம்ப் அண்மையில் ஒரு அமெரிக்கன் சிட்டிசன் குழந்தையை இப்படி நாடு கடத்தியுள்ளார். இன்னொரு கொலம்பியனை நீதி மன்ற ஆணையை மீறி அனுப்பி விட்டு, நேற்று ஏ பி சி நிருபர் பேட்டியில் - போட்டோஷாப் படம் ஒன்றை காட்டி அவன் கையில் ஒரு கிரிமினல் பாதாள உலக குழு முத்திரை இருந்தது என மொக்குதனமாக பொய் சொல்கிறார். எதிர்த்த இரெண்டு ஜட்ஜுகளை கைது செய்துள்ளார். அமெரிக்காவை கிட்டதட்ட முகாபேயின் சிம்பாப்வே போல ஆக்கிவிட்டார் டிரம்ப். AfD ஜேர்மனியில் ஆட்சி அமைத்தால், இதை விட பல மடங்கு நடக்கும்.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
அதென்ன உடான்ஸ் சாமியார் சொன்னா மட்டும் நம்பமாட்டியள்😂. பிகு ஓம் கரி, கிளிநொச்சி உடும்பரின் மகந்தான். கரி சிறுவனாக இருக்கும் போதே தாய் மனகசப்பில் பிரிந்து விட்டதாயும். 80 களின் முற்பகுதியில் (83 கலவரதோடாக இருக்கலாம்) தாயும் மகனும் சிலகாலம் அயர்லாந்தில் வசித்து பின் கனடா போயினராம். உடும்பருக்கும் அவரின் இரெண்டாம் மனைவி யோகம் என்பவருக்கும் பிறந்த பிள்ளைதானாம், கரி எனப்படும் சத்தியசங்கரி. இவர்களின் உறவான இன்னொரு சங்கரியுடன் நான் இரு வருடம் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தேன். விக்கியின் footnotes இல் நான் சொன்னதற்கு முதன்மை ஆதாரம் உள்ளது. Anandasangaree, born in Jaffna in 1973, is the son of V. Anandasangaree, a leading Sri Lankan Tamil politician,[2] by his second wife, Yogam.[3] His parents separated in 1980 and he and his mother moved to Ireland, where she had relatives.[4] They had planned to return to Sri Lanka in July 1983; but when the Black July anti-Tamil riots broke out,[4]Anandasangaree and his mother travelled to Canada on August 31, 1983.[4][5] Anandasangaree is estranged from his father and has only met him twice since 1983.[4][5] https://en.m.wikipedia.org/wiki/Gary_Anandasangaree
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
சும்மா….லுலுலுலா…
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
நம்புவது நம்பாதது உங்கள் விருப்பம். ஹரி ஆனந்தசங்கரி சோழ அரச வம்ச வாரிசு. ஓலைசுவடியில் நான் படித்து அறிந்தது.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
உங்களை போல டுருடோ காலத்தில் மிக கடுமையாக லிபரலை எதிர்த்த பலர், டிரம்பின் வருகை, கோமாளித்தனத்தின் பின் அதற்கு கானி ஆற்றிய எதிர்வினையின் பின் மாறி வாக்கு போட்டுள்ளனர் என்பதைதான் கடந்த மாதங்களில் ஏபட்ட கருத்துகணிப்பு, நேற்றைய தேர்தல் முடிவுகள் காட்டுகிறன. ஜி 7 நாடுகளி கார்னியும், மேர்ஸும் டிரம்ப்பை டீல் பண்ணும் விதமே சரியானது. மெக்ரொனும் கொஞ்சம் இந்த வழிக்கு வருகிறார். ஸ்டாமர் கழுவிற நீரில் நழுவுற மீனாய் இருந்து சாதிக்க முயல்கிறார். ஆனால் டிரம்ப் ஒரு playground bully. அவரது மட்டையை வாங்கி அவருக்கே மண்டையில் ஒண்டு போட்டால்தான், எதிராளியை மதிப்பார். பழைய உறவு ஓவர் என துணிந்து மேர்சை, கார்னியை போல சொன்னால்தான் டிரம்புக்கு உறைக்கும். புத்தி கூர்மை வேறு, எந்த விதத்திலும் கார்னிக்கு கிட்டவும் நிற்க முடியாத ஆள் டிரம்ப். கார்னியை கையாள டிரம்ப் கஸ்டப்படுவா.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
ஓம்…கனேடியன் கன்சேவேடிவ் கட்சியை ஒரு கைபார்ப்பார் போலத்தான் இருக்கு. இத்தனைக்கும் கனேடியன் கன்சேவேடிவ் கூட 51ம் மாநில கூத்துக்கு எதிர்ப்புத்தான்.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
மன்னிக்கவும்….. சிரிப்புகுறி தருவேன் என்பதை நம்பி மீண்டும் மீண்டும் கோமாளித்தனம் செய்வதை ஊக்குவிக்க கூடாது என்பதால் இன்றைக்கு சிரிப்புகுறி நிவாரணம் கட்🤣. இந்த லப்பர் பந்தை மிக இலகுவாக திருப்பி அடிக்கலாம். தமிழ் நாடு வளர்ந்தமைக்கு திராவிட கொள்கைக்கு/ கட்சிகளுக்கு credit குடுக்க விரும்பாமல் இப்படி கற்பனாவாத கதைகள் எழுதுபவர்கள்தான்…. Wait for it …டாஸ்மார்க் இதர கொள்கைகளால்…திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் எழுதுவார்கள் 🤣. தமிழ்நாட்டு பொருளாதாரம் வாழ்ந்தால் -ஐ ஏ எஸ் அதிகாரிகளால், அதுவே வீழ்ந்தால் - திராவிட கட்சி அரசியல்வாதிகளால் 🤣🤣🤣 இதைதான் தாம் ஒரு அரசியல் முடிவில் இருந்து கொண்டு அதற்கு ஏற்ப வியாக்கியானம் எழுதுவது என்பது.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
பிக்கரிங் இல் ஜுனித்தா நாதன் எனும் தமிழ் பெண்ணும் வெற்றி. டிரம்பின் புண்ணியத்தில் மீண்டும் ஆட்சியில் அமர்கிறது லிபரல் கட்சி. நிழலி, வாலி செம அப்செட்டில் இருப்பார்கள் என நினைக்கிறேன்🤣. ரிருடோ வைவிட கார்னி கெட்டிக்காரன் நாட்டை வளப்படுத்துவார் என நினைக்கிறேன். இங்கிலாந்து வங்கியின் ஆளுனரக இருந்த போது நன்றாக செயல்பட்டார்.
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
ஆண்டு திவசம் கொண்டாடினாலும் ஆச்சரியம் இல்லை 🤣.
-
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
மிகவும் விளக்கமான பதில், பல புதிய தகவல்களுடன். இளையராஜா, அவர் நிலைப்பாடு பற்றிய என் கணிப்பீட்டில் ஒரு10% அளவு மாற்றத்தை உங்கள் கருத்துகள் ஏற்படுத்தி விட்டன 🙏. நன்றி. இதில் எதிலும் மாற்றுக்கருத்து இல்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னது நான் 16 ஆவது இடத்திலா😱. இதன்பிறகாவது ஐபிஎல் பூராவும் மேட்ச் பிக்சிங் என்பதை நம்புங்கப்பா🤣. அப்பவே சாத்திரக்காரன் சொன்னவர் - பத்தில வியாழன் பதிய விட்டு கிளப்புமாம்🤣.
-
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
இந்த கதையை நானும் கேள்விபட்டுள்ளேன். இதன் உண்மைதன்மைக்கான ஆதாரம் என்ன? இராஜா பொதுவெளியில் நலிந்தோரை போட்டு மிதிப்பதையே முட்டு கொடுக்க முரட்டு ரசிகர் உள்ளார்கள். இப்படி ஒரு கதையை அவர்களே ஜோடித்தும் இருக்கலாம் அல்லவா.
-
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
பல தெரியாத தகவல்களை தந்துள்ளீர்கள் நன்றி. மேடையில் பாடுவது பற்றி நான் எழுதியதை கொஞ்சம் தெளிவில்லாமல் எழுதிவிட்டேன் என நினைக்கிறேன். மேற்கத்திய பாடல்களை மேடைகளில் பாடும்போது அதற்கு ராயல்டி செலுத்தி பாடுவது போல் தமிழிலும் ஒரு வழமை இருக்கிறதா? உதாரணமாக ஜிம்மில் ஒலிக்க விடும் பாடலுக்கு இப்படி ராயல்டி செலுத்த வேண்டும் எனில் ஊரில் பஸ்சிலும், வீடியோ கடைகளிலும் ஒலிக்கும் பாடலுக்கும் செலுத்த வேண்டி வரும் அல்லவா? அதே போல் எஸ்பிபிக்கு பொருந்தும் அதே சட்டம், லக்ஸ்மன் சுருதி, ஏனைய சின்ன சின்ன டுரூப்புகள், மாரி அம்மன் கோவில் கூழ் ஊத்தும் நிகழ்வில் “ஆடல் பாடல்” செய்யும் திண்ட்டுகள் ரீட்டா குழுவினர் அனைவருக்கும் பொருந்துமா? ஆகவே தமிழில், இந்தியாவில் எதற்கு ராயல்டி கோரலாம், கோராமல் விடலாம் என்பதில் ஒரு சமச்சீர் இன்மையை நான் காண்கிறேன். அல்லது அனைவரிடமும் கோரலாம், ஆனால் உரிமையாளர் கொழுத்த ஆடுகளாகப்பார்த்து அவற்றிடம் மட்டுமே கோரும் உரிமை உள்ளவரா? இதை அப்படி பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. அது ஒப்பந்தத்தில் என்ன கூறி உள்ளது என்பதை பொறுத்து மாறுபடும் என நினைக்கிறேன். குட் பேட் அக்லி தயாரிப்பாளர் - நாம் இசையை உண்மையான உரிமையாளரிடம் வாங்கி விட்டோம் என்றே கூறி உள்ளனர். ஆகவே இளையராஜ இசை அமைத்த அத்தனை பாடல்களும் அவருக்கு சொந்தமா என்பதை கோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும். பொதுவாக ஒரு படத்தின், படைப்பின் கதை, வசன, இசை முழு உரிமையும் தயாரிப்பாளரிடமே இருக்கும். மத்திய, பிற்காலங்களில் ராஜா இதற்கு மாறாக ஒப்பந்தம் போட்டிருக்கலாம். அப்படி எனில் அந்த பாடல்கள் மட்டும் அவருக்கு சொந்தமாகலாம். நடந்தது இதுதான் எனில் - எஸ்பிபி பக்கம் தவறு உள்ளது. ஆனால் யூடியூப் இல்லை என்ற துணிவில், உலகம் முழுவதும் இருந்து மெட்டுக்களை எடுத்து பாடல் போட்டு விட்டு ஒரு இலவச கிரெடிட் கூட போடாத “உருவல் ஞானி” க்கு இதை தட்டி கேட்கும் வர்த்தக உரிமை இருப்பினும் தார்மீக உரிமை இல்லை என்பதே என் வாதம்.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
முயலுக்கு மூணேகால் கால்தான். சந்தேகமேயில்லை. இத்துணை நீட்டி முழக்கி உள்ளீர்கள் - பாவமாக இருப்பதால் இரெண்டு சிரிப்புகுறி இலவசம்.