Everything posted by goshan_che
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
Slow release medicine என கேள்விபட்டிருப்பீர்கள். அதைபோல்ல ஸ்லோ ரிலீஸ் முறையில் உண்மையை தம் நாட்டு மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பருக்கும் இந்திய ஊடகங்கள்👇😂. இது கூட தென்னிந்தியாவில்தான், பானி-பூரி பெல்ட்டில்…மோடி ஜி அடித்து நிமித்தி விட்டார் என்றே இன்னும் நம்புகிறார்கள்🤣. எதிர்பார்த்ததை விட ஆழம்.. இந்தியா - பாகிஸ்தான் போரில்.. சீனா ஆடிய சீக்ரெட் ஆட்டம்.. ஷாக் பின்னணி Shyamsundar IUpdated: Friday, May 16, 2025, 10:53 [IST] பாகிஸ்தான் ராணுவத்திடம் சீனாவின் ஜே ரக போர் விமானங்கள், PL-15 வகை ஏவுகணைகள் என்று பல உள்ளன. பாகிஸ்தானின் 80 சதவிகித போர் உபகரணங்கள் சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டது. இதெல்லாம் இந்திய ராணுவத்திற்கு தெரிந்ததுதான். இதில் அதிர்ச்சி தரும் தகவல் இந்தியா பாகிஸ்தான் போரில் Chinese PL-15 வகை ஏவுகணைகளை சீனர்களே இயக்கியதாக கூறப்படுகிறது. அதாவது சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டெக்னீஷியன்களை களமிறக்கி பணிகளை செய்துள்ளனர். அதாவது இந்தியாவிற்கு எதிராக ஏவப்பட்ட ஏவுகணைகளை பாகிஸ்தானில் இருந்து இயக்கத்து சீனர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனாவின் சாட்டிலைட் இமேஜ்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. அதேபோல் சீனா சார்பாக பாகிஸ்தானுக்கு நிறைய உளவு தகவல்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. அதாவது சீனா ஆயுதங்களை அனுப்பி, அதை இயக்க சாட்டிலைட்டை இமேஜ்களை அனுப்பி.. அதை சரியாக பயன்படுத்த உளவு தகவல்களை அனுப்பி கூடுதலாக இடத்தி எல்லாமே இயக்க ஆட்களையும் அனுப்பியதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. அதாவது இந்தியா பாகிஸ்தான் போரில் எதிர்பார்த்ததை விட ஆழமாக சீனா தலையிட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிப்பதாக தகவல்கள் வருகின்றன. சீனா நிழல் யுத்தம் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த போரை வைத்து சீனா போர் பயிற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வருகின்றன. அதாவது சில ஆயுதங்களை சீனா சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த போர் விவகாரத்தில் உலக நாடுகளின் தீவிரமான சப்போர்ட் பாகிஸ்தானுக்கு இருந்தது. உதாரணமாக துருக்கி , சீனா ஆகியவை பாகிஸ்தானை நேரடியாக ஆதரித்தது. ராணுவ ரீதியாக அரசியல் ரீதியாக பாகிஸ்தானை சப்போர்ட் செய்தது. வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது. இதிலேயே பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா ஆதரவு இருப்பது உறுதியானது. பாகிஸ்தான் தனது தாக்குதலில் சீன ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட நிலையில், சீன ட்ரோன்களுடன் சேர்த்து துருக்கி ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியது. 36 இடங்களைக் குறிவைத்து சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தியப் பாதுகாப்புப் படை கைனடிக் (kinetic) மற்றும் நான் கைனடிக் (non-kinetic) முறையில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவை துருக்கி மற்றும் சீனாவின் டிரோன்கள், என்று இந்திய ராணுவம் தெரிவித்தது. இந்த டிரோன்களை பாகிஸ்தானிடம் தந்து சீனா சோதனை செய்ததாகவும், சீனாவின் சில ஏவுகணைகளையும் சீனா பாகிஸ்தான் வழியாக சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது. எக்ஸ் பக்கம் இந்த போருக்கு சில நாட்களுக்கு முன்பே பாகிஸ்தானில் எக்ஸ் பக்கம் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு காரணம் சீனா என்கிறார்கள். அதாவது இந்தியாவிற்கு எதிராக போடப்பட்ட போஸ்டுகள் எல்லாம் பாகிஸ்தான் வழியாக சீனர்கள் செய்த போஸ்ட் என்று கூறப்படுகிறது. அதாவது இந்தியாவின் இமேஜை அழிக்க சீனர்கள் களமிறக்கப்பட்டு ஆன்லைன் போரை சீனா நிழல் யுத்தமாக நடத்தி இருக்கலாம். எதிர்காலத்தில் போர் வந்தால் ஆன்லைனில் எப்படி narrative உருவாக்குவது என்பதை பாகிஸ்தான் வழியாக சீனா இந்த முறை கற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த போரை எதிர்கால போருக்கான பயிற்சியாக மேற்கொண்டு இருக்கலாம் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. https://tamil.oneindia.com/news/chennai/role-of-china-in-the-india-vs-pakistan-war-might-be-deeper-than-we-think-704557.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards#google_vignette
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
இப்படி பட்ட கொடுமைகளை, தூத்துகுடி கொலையை செய்த எடப்பாடியை அவரின் பிறந்த தினத்தில் வல்லவர், நல்லவர் என புகழ்ந்தார் அண்ணன் சீமான். அதிமுக, நாதக கட்சிகள் கருத்து எங்கே?
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நான் ஆதாரபூர்வமாக, அல்லது லொஜிக்கலாக வாதாடும் எவரையும் கடந்து செல்ல விரும்புவதில்லை. ஆனால் கவுண்டமணி வாழைப்பழ ஜோக் போல எழுதுபவர்களோடு விவாதித்தால் அயர்ச்சிதான் மிஞ்சும்.
-
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து
அரைநிர்வாண பக்கிரி என அழைத்த காந்தியை, பயங்கரவாதி என அழைத்த மண்டேலாவை பங்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைக்கவில்லையா? அதுபோலத்தான் இதுவும். அநேகமாக சகல “தீவிரவாதிகளுக்கும்” வாழ்வில் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே மிகுதி அமையும்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கஞ்சா கப்ஸா கதைகளை ஏனைய உறுப்பினர்களும் இனம் கண்டு கேள்வி கேட்ப்பதால் கொஞ்சம் அமைதியாக இருக்க எண்ணுகிறேன். ஆனால் வழமை போல் ஆதாரம் எதையும் கொடுக்காமல், நான் வாசித்த அறிவின் படி, அல்லது நீங்களே வாசித்து அறியுங்கள் போன்ற பதில்களும், அதை சுற்றி கருத்தாளரின் கற்பனையில் உருவாக்கிய பத்திகளும், கதைகளும் நீட்டி வளத்தபடுவது கண்கூடு. # விக்கிராமாதித்தன் போல் முயலும் கருத்தளர்களுக்கு வாழ்த்துக்களும், அனுதாபங்களும் ஒரு சேர🤣.
-
தமிழ் நாடு எப்படி இவ்வளவு விரைவாக வளர்கிறது? வைரல் ஆகும் டிவிட்டர் கேள்வியும், பதிலும்
ஏன் தமிழ்நாடு அனைத்திலும் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது தெரியுமா? – வைரலாகும் எக்ஸ் பதிவு.. Devika ManivannanUpdated: Wednesday, May 14, 2025, 17:54 [IST] 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் வாயிலாகவே அவர்களுக்கு தேவையான ஜாதி சான்றிதழ், குடியிருப்புச் சான்றிதழ் ,வருமானச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர மலை பாங்கான பகுதிகளில் வசிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஸ்வெட்டர்கள், பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி ஆகியவை கல்வித்துறையில் வழங்கப்படுகிறது என கூறியுள்ளார். போக்குவரத்தை பொருத்தவரை இந்தியாவிலேயே சிறந்த போக்குவரத்து வசதி கொண்ட மாநிலமாக இருக்கிறது. 1971 ஆம் ஆண்டிலேயே அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு ,1990 இலே அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. பொதுவாக பெண் குழந்தைகளை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்ப தயங்கிய காலகட்டத்தில் அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு பள்ளிகளில் காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தது . இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், இலவசமாக சைக்கிள் வழங்கும் திட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டது. அதேபோல மூவலூர் ராமாமிர்தம் அம்மா நினைவு திட்டத்தின் கீழ் 1989 ஆம் ஆண்டிலேயே மணமகள் எட்டாம் வகுப்பு முடித்தவராக இருந்தால் திருமணத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இது 1996 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த மணமகள் என்றால் பத்தாயிரம் ரூபாயாகவும் 2010 ஆம் ஆண்டில் இருபத்தைந்தாயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1973 ஆம் ஆண்டு இந்தியாவிலே முதன்முறையாக பெண்கள் காவல்துறையில் இணைக்கப்பட்டது தமிழ்நாட்டில் தான். 1990இல் அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு இங்கு தான் வழங்கப்பட்டது. பெண்களுக்கு பள்ளிகளில் நாப்கின் வழங்கும் திட்டம், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டன. 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர் . பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், சுய உதவி குழுக்களை மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்டவையும் தமிழ்நாட்டில் தான் வெற்றிகரமாக கொண்டுவரப்பட்டது பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கிய முதல் மாநிலமும் தமிழ்நாடு தான் என தமிழ்நாட்டின் முன்னோடியான திட்டங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது எக்ஸ் தள பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையையும் லைக்கையும் பெற்றுள்ளது. https://tamil.goodreturns.in/news/why-tamilnadu-is-growing-so-fast-a-doctor-s-x-post-063905.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards&_gl=1*1avjvjz*_ga*OTY4NDU2NDEyLjE3NDU1MzE4MTQ.*_ga_09Y63T23W1*czE3NDcyMzc5MzMkbzEwMiRnMSR0MTc0NzIzODEyNiRqMCRsMCRoMA..
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
மன்னிக்க வேண்டும். நான் பிழையாக விளங்கி கொண்டுள்ளேன். நீங்கள் மேலே எழுதியை வாசித்து…புலிகள் முஸ்லீம்களை யாழ்பாணத்தில், வடமாகாணத்தில் இருந்து 1990இல் இனசுத்தீகரிப்பு செய்தபோது, கொலையும் செய்து அடித்து விரட்டினார் என கூறுகிறீர்கள் என பிழையாக புரிந்து கொண்டேன். புலிகள் அப்பாவி, அப்பாவி-அல்லாத முஸ்லீம்களை கொன்றார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதுவும் இந்த மக்பூல் படுகொலை - யாழ்பாணத்தை சேர்ந்த ஒரு வங்கி அதிகாரி கிழக்கில் முஸ்லிம் காடையர்களால் கொல்லப்பட்டதற்கு பதிலாக நிகழ்ந்தது. அதற்கும் மக்பூலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இக்கொலைகள் நிகழ்ந்த போது, கொல்லப்பட்ட தமிழ் வங்கி அதிகாரி மகளும், மக்பூலின் மகளும் யாழில் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் படித்தனர் என்பது துன்பியலின் உச்சகட்டம். பிகு விரிவான பதிலுக்கு நன்றி.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சீனாக்காரன் recycled plastic ல பத்து ரூபாய் இருபது என டம்மி டிரோன்களை பாக்குக்கு கொடுத்திருப்பான். அதை எதிர்க்க பலகோடி செலவழிச்சு பிரம்மோஸ்சை பஸ்பமாக்கி உள்ளார்கள் போலும்🤣.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உறவே… இந்தியாவுக்கு எதிராக மகிந்த, கோட்டாவை கூட ஆதரிக்கும் அளவுக்கு இருக்கிறது தற்போது ஈழத்தமிழர் மத்தியில் இந்திய வெறுப்பு உறவே.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அதே.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அப்போ பாகிஸ்தானிகள் சிலர் லாகூர்.கொம்மில் எனக்கு பயங்கரவாதிகள் என்றாலே நினைவுக்கு வருவது ஈழத்தமிழர்கள்தான் என எழுதுவார்களோ என்னமோ😎.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
எப்போ?
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கிட்டதட்ட குணா கமல் போல… அதை சொல்ல நினைக்கையில்… வார்த்தை முட்டுது….. சதாம் உசேனின் பேச்சாளர்…கெமிக்கல் அலி, பின்னாளில் கொமிக்கல் அலி என மாறி, அமெரிக்க படைகளை நாம் வெளுக்கிறோம்….என இருபது சொச்ச வருடத்துக்கு முன் செய்த கோமாளிதனத்துக்கு பிறகு …இப்போதான் ஒரு இராணுவ பேச்சாளர் இப்படி கோமாளித்தனம் பண்ணுவதை இந்த உலகம் காண்கிறது. உலகமே இந்தியாவை பார்த்து கெக்கெட்டம் விட்டு சிரிக்கிறது. இந்தியாவை எதிர்ப்பது = பாகிஸ்தானை ஆதரிப்பது என்பது எளியதும், தவறானதுமான சமன்பாடு. பாகிஸ்தானி தலிபான், பலூச்சி போராளிகள் என அவர்களும் இதை எதிர்கொள்கிறார்கள். கஸ்மீர் போராளி குழுக்கள், சீக்கிய போராளி குழுக்கள் போன்றவற்றை பாகிஸ்தான் ஆதரிப்பதை வைத்து இந்தியா பலருக்கு இப்படி ஒரு மூளைசலவையை செய்துள்ளது.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நேற்று ஒரு பாகிஸ்தான் ஆளின் விபரிப்பை வாசித்தேன். அவரது தியரிப்படி இந்தியா முதலில் அணு ஆயுதத்தை ஏற்றி செல்ல கூடிய பிரம்மோசில் அணு ஆயுதத்தை ஏற்றாமல், வழமையான வெடிபொருளை நிரப்பி அனுப்பியாதம். இதில் வருவது அணு ஆயுதமா இல்லையா என தெரியாத நிலையில் - இந்த வெருட்டுக்கு பதில் சொல்ல… இந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏவப்படும் வலையமைப்பை பாக்கிஸ்தான் ஜாம் பண்ணியதாம். இவைதான் அணு ஆயுதத்தை காவி செல்ல கூடிய இந்திய ஏவுகணைகள். இதை ஜாம் பண்ணி முடக்கி விட்டால் இந்தியாவிடம் அணுகுண்டு இருந்தாலும் அதை பிரயோகிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் - ஜெய்சங்கரும், தோவால் வாசிங்டனுக்கு போனை போட்டார்களாம். பாகிஸ்தான் ஆளின் விபரிப்பு. கஞ்சா கப்ஸா கதையாகவும் இருக்கலாம். தனக்கு இந்திய இராஜதந்திரிகளிடம் தொடர்பும் இருப்பதாக அவர் முன்பே யாழில் எழுதி இருக்கிறார். ஒரு குண்டு மணி அளவு கூட இந்த தாக்குதல்தாரிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க ஆதாரம் காட்டவில்லை. சகல வெளிநாட்டு ஊடகங்களும் இதை கேட்டன. ஆனால் இந்தியா எந்த ஆதாரத்தையும் கொடுக்காமல் தன்னிச்சையாக தாக்கியது.
-
பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்
வாழ்துக்கள் கரி.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
அந்த மனு, இந்த மனு என தண்டனை குறைக்காமல், மேல்முறையீட்டில் விடுதலை செய்யாமல் - வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழிக்குமாறு உறுதி செய்ய வேண்டும். வெளியில் வரும் போது தொங்கி போய் இருக்க வேண்டும். தலை.
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
பிகு பிரிட்டனில் friends of Israel என எம்பிகள் கூட்டு, கட்சி தாண்டி உள்ளது. அதேபோல் ஒன்றை கனடாவில் ஸ்தாபிக்க முயலலாம்.
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
ஆர்மீனியா? நானும் அப்படித்தான் எழுதி இருப்பீர்கள் என நினைத்தேன். சும்மா தேடிபார்த்ததில் - மார்ச் 31 அசர்பைஜானிகளால், அவர்களின் இனவழிப்பு நாளாக கொண்டாடப்படுகிறதாம்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நான் அறிந்தவரை நெய்தல் படையணி கராச்சி துறைமுகத்தை முற்றுகைக்கு உள்ளாக்கி விட்டதாம். அடுத்த அரைமணியில் பாகிஸ்தானை உலக மேப்பில் இருந்து அழிக்கவே போகிறார்கள் என்பதை அறிந்து, பாகிஸ்தான் டிரம்பை கெஞ்சி, டிரம் அண்ணனின் காலை பிடித்து அதன் பிந்தான் போர் நிறுத்த அறிவிப்பு வந்ததாம்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
என்ன நடக்கும்…. எக்ஸ்ராவா மூணு ரபேலையும் சேர்த்தே கொடுப்போம்…ஆங்🤣 ஏற்கனவே இரெண்டு முறைக்கு அப்பால் ஒருவர் பிரதமராக கூடாது என ஆர் எஸ் எஸ் மோடிக்கு சொல்லி விட்டதாம். அமித்தை அடுத்த பிரதமர் என மோடி முன் தள்ள அதையும் ஆர் எஸ் எஸ் ரசிக்கவில்லையாம். தளபதி பட வில்லன் போல இருக்கும் யோகி ஆதிநாத்தை விரைவில் பட்டாபிஷேகத்துக்கு தயாராக்கிறரதாம் கான்பூர்.
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
என்னுடைய வண சிங்கராயர் + மன்னார் கொனெக்சன், குரொஸ் கொனெக்சந்தான் என்பது கிட்டதட்ட நிருபணமாகி விட்டது. சவாககச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில் காயம் அடைந்த போராளிகள் சீலன், குண்டப்பா, புலேந்தி அம்மானை காப்பாற்ற மருந்து வாங்கிய வகையில் வண பிதா ஆ சிங்கராயர் யாழில் கைதாகியுள்ளார். புலிகளுக்கு உறுதுணையாக இருந்த மரு ஜெயகுலராஜா பற்றிய குறிப்பில் இருந்து 👇 (27-10-1982 )ஆம் திகதி அன்று நடைபெற்ற சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் சீலன், புலேந்திரன், ரகு (குண்டப்பா) ஆகிய போராளிகள் காயமடைந்தனர். முப்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ். குடாநாட்டில் காயமடைந்த இவர்கள் மூவரையும் காப்பாற்றுவது இலகுவான விடயமல்ல. மேலதிக சிகிச்சைக்காக தமிழகத்துக்கு அனுப்பும்வரை தேவையான வைத்தியத்தை மேற்கொள்ள வேண்டும். இப்பணியில் டாக்டர் ஜெயகுலராஜா, அவரது சகோதரர் போதகர் ஜெயதிலகராஜா, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மு. நித்தியானந்தன் அவரின் துணைவியாக விளங்கிய நிர்மலா ஆகியோர் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டனர். போராளிகள் காயமடைந்ததால் அதற்குத் தேவையான மருந்துகளைப் பெற முயற்சிப்பர் எனக் கருதிய உளவுத்துறையினர் மருந்தகங்களை கண்காணித்தனர். குறிப்பிட்ட வகை மருந்துகளை கொள்வனவு செய்தவர் யார் என ஆராய்ந்தனர். அந்த வகையில் வண. பிதா சிங்கராயர் கைதானார். அதன் தொடர்ச்சியாக வண. பிதா சின்னராசாவும் மேற்குறிப்பிட்ட அனைவரும் கைதாகினர். https://www.battinatham.com/2024/06/blog-post_671.html?m=1
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
ஜஸ்டின் அண்ணா சொன்னதை போல் வண. ஆ சிங்கராயர் மாரடப்பால் மரணமானதை செய்தியாக வெளியிட்டுள்ளது “களத்தில்”.
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
தியாகதீபம் திலீபனின் ஈகை பற்றிய நேரடி குறிப்பில் வண. ஆ சிங்கராயர் பற்றி இப்படி வருகிறது. கிறிஸ்தவ பாதிரியாரும், பல வருடங்காய் சிறையில் அடைபட்டுத் தாங்க முடியாத சித்திரவதைகளை அனுபவித்தவரும், 1983 ஜூலையில் வெளிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழ்க் கைதிகள் சிங்கள இனவாதப் பூதங்கால் கொல்லப்பட்ட சமயம் எதிர்பாராத விதமாகத் தம்பியவரும் ஆகிய, வண, பிதா சிங்கராயர் அவர்கள், திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வந்தார். https://thodarum.com/thileepan-unnanilai-arapporaattam-6/ ஒருவேளை வண சிங்கராயர் மன்னாரில் கைதாகி, தள்ளாடியில் கொடுமைப்படுத்த பட்டபின் மட்டகளப்பு, வெலிக்கடை என மாறி இருப்பாரோ? மேலும் தேடிப் பார்க்கலாம். இந்த மன்னார் கதையை எனக்கு சொன்னவர் என் அம்மா. அவர் இப்போ உயிருடன் இல்லை.
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
நன்றி. இவர் சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளானாரா. நகங்களை பிடுங்கினர் என கேள்விபட்டேன்.
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
தகவலுக்கும் பிழையை திருத்தியமைக்கும் நன்றி. நான் கேள்விப்பட்ட அல்லது வாசித்த இரு சம்பவங்களின் நியாபக வயர்கள் குறுக்கால் ஓடிவிட்டது என நினைக்கிறேன். வெலிக்கடை சிறை உடைக்கப்படவில்லை? முடிந்தால் இந்த தகவலை சரிபார்க்கவும். கடுமையான சித்திரவதைக்கு உள்ளானார் என கேள்விபட்டது நல்ல நினவு இருக்கிறது. இயற்கையாக மரணம் என்பது ஆறுதலான செய்தி. நாம் இருவேறு சிங்கராயர் பற்றி கதைக்கிறோமோ? ஒருவர் தாவீது அடிகளார் - யாழ் நூலகம் எரிந்த செய்தியோடு படுக்கைக்கு போய் அப்படியே சாவடைந்த தமிழ் அறிஞர். இன்னொருவர் ஆ. சிங்கராயர்? மட்டகளப்பு சிறை உடைப்பில் தப்பி போகாமல் இருந்தவர்.