Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by goshan_che

  1. உங்கள் விஜயலட்சுமி வந்து போகும் டைம்லனையும், சீமான் அரசியல் ஜம்ப் அடிக்கும் டைம்லைனையும் ஒப்பிட்டு பாருங்கள் உண்மை உறைக்கும். நீங்கள் உங்கள் “ஆண்கள் சங்கம்” கண்ணோட்டாதில் (பழைய ஐடி காலத்தில் இருந்து) இதை பார்பதால் பலதை தவறவிடுகிறீர்கள். விஜி அண்ணி இங்கே தான் தான் முதல் மனைவி, கோவிலில் மாலை மாற்றினோம் என்கிறார். கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாற்றினார் ஆகவே அவர் என்னுடன் வைத்த உறவு பாலியல் வல்லுறவு என்பது அவர்வாதம். இன்னொரு விசயம். உங்களுக்கும் இதே போல் எழுதிய ஏனையோருக்கும் - பாலியல்தொழிலாளி என்றாலுமே கூட அவர்களும் மனிதர்கள்தான். எமக்குரிய சட்டம் தான் அவர்களுக்கும். ஒரு பாலியல்தொழிலாழியை திருமணம் செய்வதாக பொய்சொல்லி ஏமாற்றி, உறவு வைப்பதும் குற்றம்தான். சீமான் முதலில் எதுவும் இல்லை என மறுத்து விட்டு இப்போ வெறும் பாலியல்தொழிலாளியுடனா உறவே அது என்கிறார். இதில் விஜயலட்சுமி ஆணாலவும், சீமான் பெண்ணாகவும் இருந்தால் என்ற உங்கள் கேள்விக்கு விடை - அப்படியே இருந்தாலும் - இது விசாரிக்கப்பட வேண்டிய வழக்குத்தான். இங்கே நாம் எப்போதும் வலியுறுத்தியது - நியாயமான விசாரணையை மட்டுமே. இப்போ அரிதாக ஒரு நீதிபதி - ஏன் இத்தனை ஆண்டு தாமதம் என கேட்டு வழக்கை துரிதப்படுத்தி உள்ளார். சீமான் குற்றம் ஏதும் இழைக்காவிடில் இதற்கு சந்தோசப்பட்டு, கேட்டவுடன் பொலிஸுக்கு போய், விசாரணைக்கு ஒத்துழைத்து, வழக்கை வெல்ல அல்லவா முயலவேண்டும்? ஏன் டெல்லிக்கு ஓடி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் நேர்மையான தீர்ப்புக்கு, டெல்லி உச்ச நீதிமன்றத்தை தடை போட கோருகிறார்? தமிழ்தேசியத்தை சீமான் தூக்கி நிற்பதால் அவரின் மீதான பாலியல் வன்புணர்வு குற்றசாட்டை நாம் மழுங்கடிக்க வேண்டும் என்பது மிக கீழ்தரமான நிலைப்பாடு. சீமான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, வழக்கை டெல்லி போய் முடக்காமல், சென்னை ஹைகோர்ர்டில் தான் நிரபராதி என்பதை நிறுவ வேண்டும். அப்போ நீங்கள் போலிக்காவை முந்தள்ளி அவர் துவாரகாதான் என சொல்லியது - அருணா ரோவின் கையாள் என்பதை வெளிகொணர? அதேபோல் இப்போ சீமானை ஆதரிப்பதும் - அவர் ரோவின் ஆள் என இனம் காட்ட? நாங்கள்தான் அவசரடுகிறோம்😂? அப்படியா அண்ணை? பிகு நண்பா..ஓ…நண்பா.. என் காதென்ன punchbag ஆ? இந்த குத்து குத்துகிறீர்களே? காதுகள் பாவம் இல்லையா? (இதன் ஒரிஜினல் வேர்ஷனில் கெட்டவார்த்தை இருப்பதால் மாற்றியுள்ளேன்).
  2. அவர் பாலியல் தொழிலாலிகளிடம் போனார் உண்மைதான் - இங்கே சீமான் பாலியல் தொழிலாலிகளோடு போனார் என்பது அல்ல வழக்கு. வழக்கு சீமான் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார் என்பது. புகார் அந்த பெண் கூறியது. பெரியார் மீதோ வேறு எவர் மீதோ இப்படி ஒரு பெண் புகார் கூறவில்லை. இதுதான் வித்தியாசம். இப்போ சீமான் அவரோடு கணிசமான காலம் கூடி வாழ்ந்த பெண்ணை - பாலியல் தொழிலாளி என்கிறார். அப்போ சீமான் யார்? Pimp ஆ? பெரியார் மட்டும் அல்ல, எனது பாட்டனர், காந்தி உட்பட அநேகர் அப்போ பால்ய திருமணம்தான். அது 80 வருடம் முந்திய உலகு.
  3. அதை இங்கே சுட்டிகாட்டியது. உங்களை தாக்க அல்ல. மாறாக நீங்கள் ஒரு சமூக பிரமுகர். உங்கள் சொல்லை கேட்பவர் பலர் இருப்பார்கள். போலிக்கா, அருணா, சீமான் போன்றவர்களிடம் நீங்களும் ஏமாந்து ஏனையோரும் ஏமாற துணை போகாதீர்கள் என்பதை சொல்லவே. நீங்களே பலதடவை எழுதியுள்ளீர்கள் உங்களுக்கு சீமானில் நல்ல அபிப்பிராயம் இல்லை என. கன விடயங்கள் தெரியாது என. அப்போ ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்? ஏன் சீமான் ex Indian Army wing ஒன்றை வைத்துள்ளார் என யோசித்து கூட பார்க்காமல் அதை ஏதோ தமிழர் இராணுவம் என்ற பீடிகையோடு பகிர்கிறீர்கள். நீங்கள் ஏமாந்தால் ஓக்கே. மக்களையும் கூடவே அழைத்து சென்று கிணத்தில் தள்ளி விடாதீர்கள்🙏. இப்படி சொன்னது விஜி அண்ணி விவகாரத்துக்கு அல்ல. தாயை புணருமாறு பெரியார் கூறினார் என சீமான் ஆதரமில்லாத ஒன்றை கூறினார். மனோதத்துவத்தின் படி projection என்ற ஒரு விடயம் உள்ளது. தம் மனதில் இருக்கும் செக்ஸ் சைக்கோ எண்ணங்களை, இப்படி இன்னொருவர் செய்தார் அல்லது கூறினார் என “சுமத்துவதுதான்” இந்த projection. அப்படி சொல்லிய திரியிலே இது பற்றிய விளக்கத்யும் கொடுத்தேன். நீங்கள் எப்போதாவது யாழுக்கு வருவதால் அது கண்ணில் படவில்லை போலும்.
  4. இரெண்டு வித்தியாசங்களை கவனிக்க தவறுகிறீர்கள். இதே போல் எந்த தமிழ் நாட்டு அரசியல்வாதியின் மீதும் எந்த ஒரு பெண்ணும், பொலிஸ் முறைப்பாடு, கோர்ட் எண்டு போகவில்லை. அப்படி போனால் அவர்கள் நடத்தையும் தூக்கி பிடிக்கப்படும். சீமான் ரோவின் பணிப்பில், ஈழதமிழர்-தமிழக தமிழர் இடையே பகைமூட்டும் ஒரு ஏஜெண்ட் என்பது என் நம்பிக்கை. ஆகவே அவரை அடிக்க கிடைக்கும் சந்தர்பத்தை எல்லாம் பயன்படுத்தி கொள்வேன். இது என் நிலைப்பாடு மட்டுமே.
  5. பாபர் மசூதி புகழ் உச்ச நீதிமன்றம் அமித் ஷா கையில் என்பதும் சீமான் அங்கே விசாரணை இன்றி விடுவிக்கபட வாய்ப்பு அதிகம் என்பது யதார்த்தம். ஆனால் என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு வடிவில் தீர்ப்பு கிடைக்கும்.
  6. அமித்ஷா வழிப்படி நாளைக்கு சுப்ரீம் கோர்ட் என்ன சொல்லும் என்பதை நீங்கள் இருவரும் ஊகித்து விட்டீர்கள் போலுள்ளது. அரசியல் தரகுவேலை செய்து நீதிமன்றில் இருந்து தப்பலாம். ஆனால் மக்கள் மன்று 2026 இல் என்ன தீர்ப்பு கொடுக்கும் என பார்ப்போம்.
  7. தலைவர் அடிக்கு மட்டுமே அடியை பதிலாக கொடுத்தார். அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை, அவர் அதே பாணியில் கையாளவில்லை. ஒரு கேவலமான மனிதரின் பாலியல் ஒழுங்கீனம் குறித்த திரியில் தேவையில்லாமல் தலைவரை செருகியவர் நீங்கள். ஆகவேதான் அந்த பதில்.
  8. விஜி அண்ணிக்கான நீதி கிடைக்காமல் போகவே வாய்ப்பு அதிகம். நாளை அமித்ஷா கட்டளைபடி டெல்லி நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க தடை போடுவார்கள் என்றே நினைக்கிறேன். விஜி அண்ணி விடயத்தில் நான் எப்போதும் கோரி நின்றது, நேர்மையான பொலிஸ் விசாரணை, வழக்கு என்பன மட்டுமே. மசூதி இருந்த இடத்தில் - ராமர் கோவில் இருக்கவில்லை, ஆனால் மசூதியை உடைத்த இந்துக்கள் மணம் புண்படும் எனவே இப்போ இராமர் கோவில் கட்ட வேண்டும் என தீர்ப்பு கொடுத்த இந்திய உச்ச நீதிமன்றம் இதில் நீதியை காப்பாற்றும் என நான் நம்பவில்லை. ஆனால் நீதி தோற்கிறது என்பதால் மட்டும் அதை பேசாமல் இருக்க முடியாது. எனக்கு உள்ள வழி யாழில் - அதிலாவது பேசினேன் என்ற மனநிறைவு இருக்கும். கருணா, பிள்ளையான், சீமான் என பாலியல் ஒழுக்கம் கெட்டவர்களை தேடி தேடி போய் ஆதரிக்கும் உங்களுக்கு என் செண்டிமெண்ட் விளங்க கஸ்ட்மாயிருப்பது வியப்பல்ல.
  9. சந்திரிக்கா மீது ஒரு பாடல் வரி கொஞ்சம் விகல்பமாக இருந்தமைக்கே அதை மாற்ற சொல்லி ஓடர் போட்ட கண்ணியவான் தலைவர். தனது நடத்தையால் - பாலியல் அவதூறு சொல்ல கூட முடியாத இடத்தில் அவர் இருந்தார். ஆனால் பிள்ளைகளை வெளியே படிப்பிக்கிறார், அரண்மனையில் வாழ்கிறார், ஸுவிமிங் பூல் கட்டினார் என அவர் மீது சொல்லபட்ட அவதூறுகள் எதையும் அவர் தானோ, தான் சார்ந்தோரோ பதில் அவதூறால் எதிர்கொள்ளவில்லை. இது யாரின் ஸ்டைல் தெரியுமா? நீங்கள் வாக்கு சேகரித்த கருணாவின் ஸ்டைல் - அவர்தான் போகும் இடமெல்லாம் கிளை போடுபவர்🤣. பாலியல் ஒழுக்ககேட்டால் அமைப்பில் இருந்து துரத்தப்பட்டவர். அல்லது நீங்கள் ஆதரித்து எழுதிய பிள்ளையானின் ஸ்டைல் -அவர்தான் TRO சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்து கொலையும் செய்தவர்.
  10. உங்கள் லிஸ்டில் அண்ணன் லேட்டஸ்டாக சொன்னதையும் 4வது பொயிண்டாக சேர்த்து கொள்ளுங்கள். செத்து போன தடா சந்திரசேகரனுடன் (மாவீரரை கேவலபடுத்தியவர்) - விஜி அண்ணி தனக்கு துணைவியாக வர டீல் பேசினாராம் 👇. இந்த ஜென்மத்தின் கேவலம்கெடும் தன்மைக்கு எல்லையே இல்லை. கொசுறு இப்போ சீமான்-விஜி பற்றிய சில விடயங்கள் புதிதாக அறிந்து கொண்ட கயல் அண்ணி செம அப்செட்டாம். அதனால்தான் வழமைபோல் இந்த முறை போலிஸ் விசாரணக்கு சீமானுடன் வரவில்லையாம். மாதம் ரூ.30,000..'சின்ன வீடாக' வைத்துக் கொள்ள பேரம்.. நடிகையின் புது வீடியோவுக்கு சீமான் சூடான பதில் Mathivanan MaranUpdated: Sunday, March 2, 2025, 16:51 [IST] தூத்துக்குடி: தம் மீது பலாத்கார புகார் கூறிய நடிகை ஒரு ப்ளாக் மெயில் பேர்வழி; பாலியல் தொழிலாளி; மாதம் ரூ.30,000 கொடுத்து தம்மை சின்ன வீடாக வைத்துக் கொள்ள பேரம் பேசியவர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தம்மை பாலியல் தொழிலாளி என சீமான் விமர்சித்ததைக் கண்டித்து நடிகை வீடியோ வெளியிட்டதற்கு பதிலடியாக சீமான் இதனைத் தெரிவித்துள்ளார். அவ (நடிகை) என்னிடம் வைத்த அதிகபட்ச கோரிக்கை என்ன தெரியுமா? என் மூத்தவரிடம்.. அவர் இறந்துவிட்டார்.. மாதம் ரூ.30,000 கொடுத்து என்னை மெயின்டெயின் செய்ய சொல்லுங்க என்பதுதான் அந்த நடிகை பேசிய பேரம்.. அதாவது தன்னை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ள சொல்லி பேரம் பேசினார். அப்போது எங்கப்பா பாரதிராஜா கேட்டார்..டே மகனே! என்னதான் வேணும் அவளுக்கு என கேட்டார்.. அதற்கு, ஒன்றுமில்லை.. ரூ.30,000 கொடுத்து என்னை வைத்துக் கொள் என்கிறாள்.. நான் வைத்துக் கொள்ளவா? உன் மருமகள் என்னை சோற்றில் விஷத்தைப் போட்டுக் கொல்வா.. பரவாயில்லையா? என்றேன். உடனே, அப்படியா சொல்றாடா? என கேட்டவர் பாரதிராஜா. Also Read இதை அவ (நடிகை) சொன்னாளா இல்லையா? என கேளுங்க..நானும் கண்ணியம் காத்து 15 ஆண்டுகள் வாயை மூடினேன். இனி எல்லாம் முடிவுக்கு வந்துருச்சு இல்லையா..அவ என்னைக்கு மரியாதை கொடுத்தா? நீ என்னை, என் குடும்பத்தை எல்லாம் மரியாதை இல்லாமல் பேசுற.. அப்ப நீ என்னை காதலித்தது என்பது எல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று? ஆங்கிலத்தில் ப்ளாக் மெயில் என்போம் இல்லையா. பணம் பறிக்கிறது..இடை மறித்து இடை மறித்து பணம் பறிக்கிறவருக்கு பெயர் என்ன சொல்லுவீங்க? Recommended For You என்னை எல்லோரும் சேர்ந்து பாலியல் குற்றவாளி என சொல்வதற்கு காரணம்.. ஒரு பாலியல் தொழிலாளிக்காக.. அதை எப்படி ஏற்பது? மானங்கெட்ட நீங்களே அப்படி பேசும்போது தன்மானத்துக்காக போராடும் மகன் எப்படி பேசனும்? மானத்துக்காக உயிரை விட்டவன் கூட்டத்தில் வந்த நான் எப்படி பேசனும்? எல்லோரும் கொஞ்சம் கவனமாக பேச வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார். https://tamil.oneindia.com/news/tuticorin/seeman-claims-actress-is-a-blackmailer-alleged-rs-30-000-deal-684359.html
  11. ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனால் கருணாநிதியோ வேறு எந்த தமிழக சினிமாகாரரோ, அரசியல்வாதியோ கீழ்கண்ட நரகல் வேலையை செய்யவில்லை👇. Living/earning off the proceeds of prostitution அதாவது ஒரு பாலியல் தொழிளாலி, பாலியல் தொழிலை செய்து கொண்டுவரும் பணத்தில் வாழ்வது - இந்திய சட்டப்படி இதுவும் குற்றம்தான். ஒரு பாலியல் தொழிளாலியுடன் குடும்பம் நடத்தி, அவர் உழைத்து கொண்டு வரும் பணத்தில் வாழ்ந்த கேவலம் கெட்ட பிறப்புகள் எல்லாம் பிரபாகரனின் மகனாம் - அதுக்கு முட்டு கொடுக்க ஆட்கள் வேறு.
  12. என்னத்தை சொல்லி என்ன அண்ணை… நீங்கள் போலிகளை நம்பி ஏமாறுபவர் என்பது யாழில் தெள்ள தெளிவாக நிறுவப்பட்ட ஒரு விடயம். போலிகா மட்டும் அல்ல, அண்மையில் போஸ்கோ, கிருபா விடயத்திலும் நீங்கள் கிருபாவை பற்றி முரண்பாடாக எழுதியதை சுட்டி இருந்தேன். அதைத்தான் நான் மேலே சுட்டி காட்டினேன் தவிர தூற்றல் அல்ல. இப்படியான உங்கள் வேலைகள் மூலம் நீங்கள் மேலும் மேலும் நச்சுகளை ஊக்குவிக்குறீர்கள். இதற்கு நீங்கள் கொடோனிலேயே இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கும். வறுத்தல் - நிச்சயமாக, கருணா, கேபி, பிள்ளையான், சீமான் இவர்களுக்கு ஆதரவாக எந்த கருத்து எழுந்துதாலும், அதை என்னால் முடிந்தவரை திரத்தி அடிப்பேன். கோஷான் எழுதுவதால் உண்மையை கூட நான் கண்டுகொள்வதில்லை என்பதில் பல்லிளிக்கிறது உங்கள் மெச்சூரிட்டி🤣. உண்மை யார் சொன்னாலும் உண்மைதான். முடிந்தால் சீமான் பற்றிய என் விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள், பேடித்தனமாக கீழே உள்ளது போல் “இவர்கள் எல்லாம் தமிழின துரோகிகள்” என எழுதாமல். நீங்கள் போலிக்கா, அருணாவுக்கு முட்டு கொடுத்து, அது உண்மை என முன் தள்ளி இந்த இனத்துக்கு செய்த துரோகம் போல் நான் ஒரு போதும் செய்ததில்லை.
  13. மாகாணசபை முதல்வர் order of precedence அடிப்படையில் ஒரு கபினெட் அமைச்சருக்கு நிகரானவர். அதன் பின் மூன்று படி கீழேதேன் பா.உ. சிறிதரனுக்கு முதலவர் ஆசை இருப்பதாகத்தான் கேள்வி. சிறி முதல்வர் வேட்பாளர் ஆனால், சும் எம்பி ஆகி விடுவார். இல்லை எண்டால் சும் முதல்வர் வேட்பாளர் ஆகி விடுவார். சிறிதரனின் நிலைமை டெலிகேட் பொசிசன்🤣.
  14. "சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல் Vishnupriya RUpdated: Sunday, March 2, 2025, 14:36 [IST] இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகை, நான் பாலியல் தொழிலாளியா, எனது கண்ணீர் உன்னை சும்மா விடாது. சீமான் இனி நன்றாகவே இருக்க மாட்டார். இனி நிம்மதியாகவும் இருக்க முடியாது. என்னுடைய கண்ணீர் என்ன செய்ய போகிறது என பார் என கண்ணீருடன் அந்த வீடியோவை நடிகை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். India-க்கு போட்டியாக China களம் இறக்கும் Pakistan வீரர் அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். சீமான் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு அவரது கட்சியில் பெண்கள் எப்படித்தான் இருக்கிறார்களோ? என திமுக எம்பி கனிமொழி கூறியிருப்பது குறித்து நிருபர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "என்னை பாலியல் குற்றவாளி என சொல்வதற்கு நீங்கள் (கனிமொழி) யார், நீங்கள் என்ன நீதிபதியா, என் மீது புகார் கொடுத்துள்ள நடிகை ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர்தான் பெண், அவருக்கு மட்டும்தான் மனமிருக்கிறதா, அவருக்கு மட்டும்தான் காயம்படுமா? என் வீட்டில் பெண்கள் இல்லையா, என் தாய், என் சகோதரிகள் எல்லாம் இல்லையா, என்னை நேசிக்கும் மனைவி இல்லையா? அவருக்கெல்லாம் காயம்படாதா? நான் கேட்டதில் உங்களுக்கு கண்ணியம் குறைந்துவிட்டது என்றால் நீங்கள் செய்யும் செயலுக்கு என்ன பெயர், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பயந்து என்னை பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள். வழக்கு விசாரணையில் இருக்கும் போது என்னை எப்படி குற்றவாளி என கூற முடியும்? என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே தொடர்ந்து அவதூறு பரப்பி செயல்பட்டு வருகிறார்கள். Enjoyment without responsibility என்று உங்களது தலைவர் பெரியார்தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன். அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில்தான் நான் நடந்துள்ளேன். இது எப்படி தவறு, இதற்கு கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? என சீமான் கேள்வி எழுப்பியிருந்தார். நடந்தது என்ன: திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் உறவு வைத்துக் கொண்ட சீமான், பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டார் என நடிகை ஒருவர் 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் 376 ஆவது பிரிவின்படி வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை முடித்து வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சீமானுக்கு அந்த நடிகை முதல் மனைவியா என கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் சீமான் மீதான வழக்கை விசாரித்து 12 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என வளசரவாக்கம் போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்க போகிறது, என்ன மாதிரியான கண்டனங்களை தெரிவிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/am-i-a-prostitute-seeman-you-have-to-answer-my-tears-says-actress-684309.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards அண்ணன் in self destruction mode 🤣. பாலியல் தொழிலாளியோடு வருடகணக்கில் குடும்பம் நடத்துபவருக்கு என்ன பெயர்? டபுள் MA? 🤣 பிகு இந்த வழக்கு வெல்லலாம், தோற்கலாம். சீமான் இதை எதிர்கொண்ட, கொள்ளும் வகையில் தனக்கு தானே ஆப்புகள் பலதை சொருகி கொண்டுள்ளார்.
  15. அன்னார் பிஜேபி தலைமையிலான NDA யின் ராஜ்யசபா உறுப்பினர் ஆவார். இவரின் ராஜ்ய சபா பதவி காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிகு இந்த தடவை நேராக அண்ணாமலையை இறக்கினால் பாரதீய ஜல்சா பார்ட்டி என்பது மேலும் உறுதியாகும் என்பதால் மணியை அடித்துள்ளார்கள் 🤣 ஆகவே திமுக=நாதக, கருணாநிதி=சீமான் என ஒத்து கொள்கிறீர்கள்! நன்றி. உங்களை எமது அணிக்கு வரவேற்பதில் பெருமை அடைகிறேன்😃.
  16. மானஸ்தன் சீமான் அமித்ஷா காலில் வீழ்ந்த தருணம். #மண்டியிடாத மானம்🤣
  17. இதில் மாற்று கருத்து எதுவும் எனக்கு இல்லை. எனக்கு மட்டும் அல்ல, எவருக்கும் இருக்க முடியாது. இதனால்தான் நான் எந்த தமிழ் நாட்டு அரசியல்வாதியையும், இன்னொரு தமிழ் நாட்டு அரசியல்வாதியை விட திறம் என முந்தள்ளுவதில்லை. சிலர் பெரிய கருணாநிதிகள், சிலர் சின்ன கருணாநிதிகள்.
  18. சீமானுக்கு குட்நியூஸ்? நடிகை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு.. மார்ச் 3ல் விசாரணை Nantha Kumar RUpdated: Saturday, March 1, 2025, 20:02 [IST] நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவர் சீமான். இவர் மீது கடந்த சில ஆண்டுகளாக நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். திருமணம் செய்வதாக கூறி சீமான் ஏமாற்றிவிட்டார். கருக்கலைப்பும் செய்தேன் என்று நடிகை கூறி வருகிறார். மேலும் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு சீமானை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதுதொடர்பாக நடிகை புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் சீமானின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். அதோடு பாலியல் புகார் தீவிரமானது.இதனை விசாரிக்க போலீசாருக்கு உரிமை உள்ளது. போலீசார் விசாரித்து 12 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு சீமானுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து பெங்களூரில் வசிக்கும் நடிகையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதேபோல் நேற்று இரவு சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சீமானிடம் போலீசார் 1 மணிநேரம் 15 நிமிடங்கள் வரை விசாரித்துவிட்டு அனுப்பினர். இதற்கிடையே தான் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைக்கோரியும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ‛‛இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் முன்வைத்த வாதங்களும், அனைத்து அம்சங்களும் முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை. எனவே இந்த விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இதுதவிர விசாரணையை போலீசார் 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சீமானின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி சீமானின் மேல்முறையீட்டு மனு என்பது நாளை மறுநாள் (மார்ச் 3) ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிபி நாகரத்தினா, சதிஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு என்பது விசாரணைக்கு வர உள்ளது. இதனால் வரும் 3ம் தேதி சீமானுக்கு குட்நியூஸ் வருகிறதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
  19. அண்ணைமார் மைன்ட் வாய்ஸ்: இந்த திரி பற்றி எரிகிறது. சீமான் வளர்வதன் அறிகுறி இது 🤣
  20. ஏரிப்தே அண்ணனைதான். றோவின் அதிகாரிகள் வந்து நிற்பதை கூட உணரமுடியாத “போலிக்கா” ஆதரவு, அருணா அண்ணி ஆதரவாளருக்கு அடியும் நுனியும் விளங்காமை வியப்பல்ல. வீடு ஏரிகிறது, நல்ல கத கதப்பாக இருக்கிறது என சந்தோசப்படும் நிலைதான்🤣. உங்களை போன்ற போலிக்காவுக்கும் துவாரகாவுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க தெரியாத கெட்டிக்காரர்கள் இந்த இனத்தின் சாபக்கேடுகளில் ஒன்று.
  21. ஐ!!! அதே பழைய “திமுக செய்யலாம், நாங்க செய்ய கூடாதா” இத்து போன லாஜிக்🤣. நாளைக்கு சீமான் 2 ஆயிரம் கோடி ஊழலை மறைக்க இனப்படுகொலைக்கு ஆதரவளித்தாலும் - திமுக செய்யலாம் நாம் செய்யகூடாத என்பார்கள். திமுக ஆபாசத்தை பற்றி கதைக்க முடியாது - நாங்கள் கதைக்கலாம்… ஏன் என்றால் இந்த ஆபாச ஆமைகுஞ்சு பயன்படுத்துவது எங்கள் மாவீர செல்வங்களின் பெயரை, தியாகத்தை. ஒருத்தர் நீண்ட நித்திரையில் இருந்து எழும்பி வந்து ஆஜர்🤣
  22. நாளைக்கு யார் வென்றாலும் முதல்வர் பதவியில் மாற்றம் இல்லை. மழையே, மழையே என் செய்ய நினைத்தாய் கோஷானை 🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.