Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நானும் 10 ஓவர் முடிவில் 300 நெருங்க கூடும் என்றே நினைத்தேன். பிட்சில் எதுவும் இல்லை. போலர்களும் பெரிதாக மிரட்டவில்லை. விக்கெட்டுகளை தானம் கொடுக்கிறார்கள். பிரேஸ்வெல்லை யாரும் அதிக விக்கெட் எடுக்கும் வீரர் என போட்டார்களா?
  2. ஆங்கிலத்தில் stingy, frugal என இரு வார்த்தைகள் உள்ளன. தமிழில் கஞ்சத்தனம், சிக்கனம் எனலாம். Stingy எண்டால் கஞ்சதனம். எதற்கும் செலவழிக்காமை. Frugal என்றால் முடிந்தளவு தேவைக்கு ஏற்ப செலவழித்து கடும் சிக்கனம் பேணல். 2ம் எலிசபெத் மகாராணியின் படுக்கை அறையில் கடைசிவரை ஒரு ரேடியோவும், கறுப்புவெள்ளை டிவியும் மட்டுமே இருந்ததாக சொல்லுவார்கள். எனது தந்தையாரும் மிகவும் சிக்கனமான பேர்வழி. எனக்கு அதில் பாதியளவுதான். அதில் பத்து வீதத்தையாவது என் மகனுக்கு கடத்தி விட படாதபாடு படுகிறேன்😂. பங்களாதேஷ் எல்லாரும் நல்லா தொடங்கி விட்டு அவசரப்படு அவுட் ஆகிறார்கள். காசு கீசு வாங்கீட்டாங்களோ🤔
  3. இதுவரைக்கும் பிரித்தானியாவில் இல்லை. இங்கே AfD யுடன் ஒப்பிட கூடியவர்கள் Britain First, BNP, National Front, English Defense League போன்றவை. இவர்களுக்கு ஒரு உள்ளாட்ட்சி மன்ற சீட் கூட இல்லை. அண்மையில் உருவாக்க பட்ட பராஜின் ரிப்போர்ம் பாராளுமன்றில் 3 சீட் எடுத்தது - ஆனால் இவர்கள் கூட வலதுசாரிகள் (டிரம்ப் போல) ஒழிய அதி தீவிர வலதுசாரிகள் என இதுவரைக்கும் சொல்ல முடியாது. மஸ்கு அண்மையில் பராஜ் “இந்த வேலைக்கு சரிவரார்” என கூறி இனவாதியான டாமி ரொபின்சனை ஆதரித்தார். கனடா, அவுஸ், நீயூசிலாந்து ஏனைய உதாரணங்கள். நான் பிரான்சையும் இந்த பட்டியலில்தான் சேர்ப்பேன். AfD, நேசனல் ரலி மிக வேறுபட்டவர்கள். இன்று ஒரு AfD தலைவரை பேட்டி கண்டார்கள். யார் ஜேர்மனியர் என்பது கேள்வி. பதில்: ஜேர்மன் பாஸ்போர்ட் உள்ளவர் எல்லாம் ஜேர்மன் பிரஜைகள். ஆனால் இனவழி ஜேர்மனியர் மட்டுமே - ஜேர்மனியர். பதில் சொன்னவர் பிபிசியிடம் உங்கள் நாட்டின் பாகிஸ்தானிகளும் இப்படித்தானே என மறு கேள்வி கேட்டார். பிபிசி காரர் சொன்னார் - இல்லை, ரிசி சுனாக் ஒரு ஆங்கிலேயன், பிரித்தானியன், இந்திய வம்சாவழியினன். பிரிதானியாவில் பாராளுமன்றத்தில் இருக்கும் எந்த கட்சியில் யாரை கேட்டாலும் இதுதான் பதிலாக வரும். மேலே சொன்ன நிலைப்பாட்டை நான் கூறிய உதிரி அமைப்புகள்தான் எடுக்கும். இது ஒரு பாரிய வித்தியாசம். இதனால்தான் ஜேர்மனியில் AfD உத்தியோகபூர்வ எதிர்கட்சியானது ஏனையவை சகலதையும் விட ஆபத்தானது.
  4. பிரான்சில் நிலைமை சற்று வேறுபாடானது. அங்கே AfD யுடன் ஒப்பிடுகூடிய கட்சி என்றால் லிபென்னின் நேசனல் ரலிதான். ஆனால் செனெட்டில் இவர்கள் பலம் 3/348. கீழ் சபையில் 126/577. மிகுதி இருப்பவர்கள் எல்லாம் ஒன்றில் வலதுசாரிகள், அல்லது நடுவாதிகள், அல்லது நடுவிற்கு அருகான வலதுசாரிகள். இந்த பகிர்வு கிட்டதட்ட 20 வருடமாக பிரான்ஸில் தொடர்கிறது என நினைக்கிறேன். அங்கே ஆபத்து இருப்பது அதிபர் தேர்தலில். அங்கே டிரம்பை/ஜோன்சனை போல் ஒருவர் வந்தால் - அதி தீவிர வலதுசாரிகள் கை ஓங்கலாம். ஆனால் ஜேர்மனி, இத்தாலியில் நாஜி/பாசிசம் உள்ளே ஊறிய நஞ்சு. கிட்டதட்ட தென்னமரிக்காவில் கம்யூனிசம் போல. இன்றைய AfD தலைவர்களின் பாட்டன்கள் பலர் ஹிட்லரின் நெருங்கிய சகாக்கள், அமைச்சர்கள். இத்தாலியிலும் இன்னும் முசோலினியின் பிடி இருக்கிறது. பிரான்சில் அப்படி அல்ல. குடியேற்றத்தை கட்டுபடுத்த வேண்டும் என்பது பிரான்சில் மட்டும் அல்ல, மேற்கு முழுவதும் அடுத்த 50 ஆண்டுக்கு தவிர்க்க முடியாத அரசியல் கொள்கை.
  5. AfD வாக்கு வீதம் 2021 உடன் ஒப்பிடுகையில் இரு மடங்கால் கூடியுள்ளது. ஏனைய எதிர்கட்சிகள் புறக்கணித்த இடைத்தேர்தலில் அல்ல, நாடளாவிய பொதுத்தேர்தலில். இதுதான் ராக்கெட் வேக அசுர வளர்ச்சி. நான் வளர்கிறேனே மம்மி குழந்தை இல்லை. டீன் ஏஜ் ஆண்பிள்ளைகள் வளரும் “பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஒவ் மை எனர்ஜி” வளர்ச்சி இது. இன்று புதிய ஜேர்மன் அதிபர், அமெரிக்கா தமது தேர்தலில் ரஸ்யா அளவுக்கு தலையிட்டது. அமெரிக்காவுக்கு இப்போ ஐரோப்பா பற்றிய கவலை இல்லை, கைவிட்டு விட்டது, நம்பாட்டை நாம்தான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இனிமேல் டிரம்ப் நேரடியாக ஜேர்மனியின் அதிகாரபூர்வ எதிர்கட்சியான AfD சார்பு நிலை எடுப்பார் என நினைக்கிறேன். இது இவர்கள் வளர்ச்சியை கூட்டும். புதிய அதிபர் AfD யுடன் கூட்டு இல்லை என்றுள்ளார். ஆனால் இன்று AfD தலைவி கூறியது - எமது குடியேற்ற கொள்கைகளை வரித்து கொண்டு, எம்முடன் கூட்டு இல்லை என்கிறார், நிராகரிக்கபட்ட SDU வுடன் கூட்டு வைத்து எதை சாதிப்பார் என. இது உண்மையும் கூட. பல விடயங்களில் CDU அளித்த வாக்குறுதிகள், SDU வுடன் கூட்டுக்கு போனால் நீர்த்து போகும் என்றே நானும் நினைக்கிறேன். குறிப்பாக 1 மில்லியன் அளவு சிரியர்கள், ஆப்கானிகள், உக்ரேனியரை மீள அனுப்புவது. ஜேர்மன் மக்கள் எதிர்பார்ப்பது, கிட்டதட்ட இப்போ டிரம்ப் செய்வது போல் நாடு கடத்தல்களை. ஐரோப்பிய சட்டங்களோடு இப்படி செய்வது மிக கடினம். எனது எதிர்வுகூறலில் - புதிய அரசாலும் குடிவரவு விடயத்தில் எதையும் பெரிதாக சாதிக்க முடியாமல் போகும். அப்போது மேலும் வாக்காளர் AfD நோக்கி உந்தபட வாய்ப்பு அதிகம்.
  6. History doesn’t repeat itself but it rhymes என்கிறார் மார்க் டுவைன். அன்று யூதர்கள், நாளை கறுப்பு, மண்நிற தோல் மனிதர்களாக இருக்கலாம். குறிப்பாக - மஸ்கின் வெளிப்படையான AfD ஆதரவு, டிரம்ப்-மஸ்க்-புட்டின் உறவு - ஜேர்மனி வாழ் வெள்ளியினமல்லாதோருக்கு நல்ல சகுனம் அல்ல.
  7. எதிர்பார்த்ததுதான். மேர்ஸ் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை அவர் SDU, Greens இன் ஆதரவைக் கோரியபடி செய்ய முடியாது. ஆகவே இதுவரை ஜேர்மனியில் சகல முண்ணனி கட்சிகளும் கடைப்பிடித்த Brandmauer எனப்படும் மறைமுக நாஜிகளிடம் கூட்டணி இல்லை என்ற கொள்கையை இவர் உடைக்கக்கூடும். இந்த பாராளுமன்றில் இரு குடியேற்ற சட்டமூலங்களை AfD துணையுடன் நிறைவேற்ற முயன்றவர் இவர். அத்துடன் மஸ்கின் நேரடி AfD ஆதரவு, அமெரிக்காவின் உதவி தேவை எனில் AfD க்கு தகுந்த இடம் கொடுக்க வேண்டும் என டிரம்ப் மேர்சை நெருக்க கூடும். ஜேர்மனி மிக விரைவில் ரஸ்யாவின் உற்ற தோழனாக போகிறது எனவும் நான் நினைக்கிறேன். வழுக்கு பாறைதொடர் ஒன்றின் முதலாவது பாறையில் ஏறிவிட்டீர்கள் என்பதை உணர்கிறீர்களா?
  8. புதியவரானாலும்…எல்லாமும் தெரிந்ததிருக்கிறது😜
  9. ஜேர்மனி ஜெர்மனியில் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆட்சியில் இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில், கூட்டணிக் கட்சியை சேர்ந்தவரான நிதி அமைச்சரை சான்சலர் ஒலாப் ஸ்கால்ஸ் திடீர் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியுற்றதை தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், ஒலாப் ஸ்கால்ஸின் சமூக ஜனநாயகக் கட்சிக்கும், முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி, கட்சியும் கடும் போட்டியை அளித்து வருகிறது. ஆளும் கட்சி சார்பில் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU-CSU) சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர், சான்சலர் பதவிக்கான தேர்தலில் மோதுகின்றனர். பசுமை கட்சியின் ராபர் ஹபெக்கும் களத்தில் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் சான்சலர் ஆவதற்கே வாய்ப்புள்ளதாகவும், அவரது கன்சர்வேடிவ் கட்சியே முன்னணியில் இருப்பதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகளில் தெரியவந்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகளின்படி, பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சி (CDU/ CSU) கூட்டணி தேர்தலில் 28.9% வாக்குகளையும், தீவிர வலதுசாரி கட்சியான AFD (Alternative for Germany) 19.9% வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்து எதிர்க் கட்சியாக உருவெடுக்கும் என தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் தற்போதைய சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸின் SPD கட்சி 16% வாக்குகளுடன் 3வது இடம் பிடிப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஜெர்மனி சான்சலர் பதவிக்கான தேர்தலில் பிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி உறுதியானதை தொடர்ந்து, ஒலாஃப் ஸ்கால்ஸ் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு பிரெட்ரிக் மெர்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தேர்தல் முடிவுகளானது SPD கட்சியினருக்கு கசப்பானது என்றும் தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/international/germany-election-conservative-alliance-wins-elections-show-exit-polls-682517.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards பிந்திய நிலவரம் - தோல்வியை ஏற்று கொண்டார் நடப்பு அதிபர். வெற்றியை கோரியது மெர்சின் கட்சி. அதி தீவிர வலது, மறைமுக நாஜிகள் AfD இரெண்டாம் இடம். 20.6% வெற்றியீட்டிய சி எஸ் யூ -28.5%
  10. அல்வாய் தந்த அடெலேறு… அஞ்சா நெஞ்சன்…. நிரந்தர முதல்வர் மாண்புமிகு அல்வாயான் அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் 🤣 கோஷான் சே (கொ.ப.செ)
  11. பிகு மேலே சொல்லி உள்ளது அண்மையில் தமிழக செய்திகள் பகுதியில் நீங்கள் இணைத்த காணொளிகள் சம்பந்தமாக. இந்த வீடியோவை நீங்கள் சரியான இடத்தில்தான் பதிந்துள்ளீர்கள். ஆனால் இந்த வீடியோவை அறிமுகபடுத்திய உங்கள் சிறு குறிப்பை வாசித்த நான் - வீடியோவை பார்க்கவில்லை. தயவு செய்து மாறி வரும் வேகமான புது உலகில் உக்காந்து 20, 30 நிமிட வீடியோ பார்க்கும் இயலுமை பலருக்கு இல்லை என புரிந்து கொள்ளுங்கள். இந்த யூடியூப் சமாச்சாரம் எல்லாம் அதர பழசு. இப்போ வீடியோ shorts தான். அல்லது ஒரு நிமிடத்தில் வாசிக்க கூடிய கருத்துகள்.
  12. கோஷான் ஆகிய நான் எனது கருத்துக்களை செய்தி பகுதியில் தனித் திரி திறந்து பதிகிறேனா? அல்லது எவரும் எங்கோ எழுதிய கருத்துக்களை செய்தி பகுதியில் தனி திரி திறந்து பதிகிறேனா? இல்லை. இதுதான் நீங்கள் செய்தி பகுதியில் பதியும் வீடியோக்களுக்கும், அதே பகுதியில் ஒரு செய்தியின் கீழ் நான் பதியும் கருத்துக்கும் உள்ள வித்தியாசம். நீங்கள் ஒரு செய்திதளத்தின் (ஐபிசி) வீடியோ செய்தி அறிக்கையை அல்லது செய்தி துணுக்கை பதியலாம். தப்பில்லை. ஆனால் நீங்கள் செய்தி பகுதியில், தனிநபர்களின் கருத்து-வீடியோக்களை பதிகிறீர்கள். இவற்றை இணைக்க - செய்தி அலசல், இதர பகுதிகள் உள்ளன. நுணாவிலான் போன்றோர் அங்கேதான் இணைக்கிறனர். புலவரும் வீடியோக்களை இணைப்பார் - ஆனால் செய்திபகுதியில் தனித்திரியாக அல்ல. நீங்கள் மட்டும்தான், விதியாவது ஹைகோர்ட்டாவது என நடக்கிறீர்கள். இது பொறாமையோ, புதியதை ஏற்காமையோ அல்ல, மாறாக இது அடிப்படையில் இது ஒழுங்கு சம்பந்தபட்ட விடயம். எல்லாரும் சாப்பாட்டு மேசையில் சாப்பிட்டுகொண்டிருக்கும் போது நீங்கள் வேறு எதையோ அதே மேசையில் செய்கிறீர்கள்.
  13. கில்லுக்கு… சச்சினும்.. லக்கும்… திறமையும்… (இந்த ஒழுங்கில்) கைகொடுக்கிறன. எனக்கும் பாகிஸ்தான் வெல்வதே விருப்பம். ஆனால் இந்தியா என கணித்துள்ளேன். அதுதான் நடக்கும் போல படுகிறது.
  14. காணொளியை நானும் பார்க்கவில்லை. இப்போ ஓணாண்டி இணைக்கும் பெரும்பாலான காணொளிகள் இப்படித்தான் இருக்கிறது - ஒரு அரிசி அளவு உண்மையை வைத்து கொண்டு, ஒரு பானை அளவு தவறான தவகவல்களை (misinformation) பொங்கிவிடுகிறன. செய்தி அலசல் என்ற பெயரில் உலாவும் பிரச்சார வீடியோக்கள். ஜேர்மனியில் இப்போ இருக்கும் சட்டபூர்வ வெளிநாட்டார் பற்றிய போக்கில் இந்த தேர்தல் ஒரு திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும் என நானும் நம்பவில்லை. ஆனால் இது ஒரு வழுக்கு பாறை. மஸ்கின், டிரெம்பின் ஆளுமை இன்னும் நாலு வருடங்கள் மட்டும் அல்ல. டிரம்ப் 3 முறைக்கு தயாராகிறார் என்றே நான் நினைக்கிறேன். அப்படி இல்லை எனிலும், இப்போதைக்கு குடியரசு கட்சி இவர்களிடம் இருந்து விடுபட வாய்ப்பில்லை. இது AfD யை மேலும் மேலும் வலுப்படுத்தும். அப்படி ஒரு நிலைவரின் - இப்போ சட்டபூர்வமாக இருப்போரும் ஜேர்மனியை விட்டு வெளியேற்றப்படலாம். (இது சம்பந்தமாக ஜேர்மனியின் மக்கள் சபை, மாநிலங்கள் சபை, அரசியல் சட்ட பாதுகாப்புகள் பற்றியும் இவை அனைத்ததியும் எப்படி தூக்கி விடலாம் என்பது பற்றியும் இன்னொரு திரியில் கந்தையா அண்ணையோடு கதைத்திருந்தோம்).
  15. ஒரு சதிக்கொள்கை கீழே: டொலருக்கு பதில் தங்கத்தால் தாங்கப்படும் (gold backed) கிரிப்டோ கரன்சி ஒண்டை அமெரிக்கா வெளிவிடும் போது அதிக தங்கம் தேவைபடும் என்பதால் இது நிகழ்கிறது.
  16. ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்கள் செய்தவைக்கு எல்லாம் நன்றி அக்கா. உங்களுக்கு பின் பிபிசி ரோவின் கைக்குள் போய்விட்டது.
  17. இப்பவே நம்பிக்கையில்லா பிரேரணை ரெடி 🤣
  18. இங்கே ஜெட் வேகம், ராக்கெட் வேகம், ஒளியின் வேகம் என்றெல்லாம் கற்பனையில் உருட்டுபவருக்கும் தனியே நின்றால் 2026 இல் அத்தனை தொகுதியிலும் டெபாசிட் காலி என்பது தெரியும். 2026 வரைக்கும் டைம் இருக்கு - அது வரை உருட்டுவோம். 2026 க்கு பின் நடப்பதை அப்போ பார்த்துகல்லாம் என்பதுதான் இவர்கள் பலரின் நிலைப்பாடு. இல்லை…பேரறிஞர் எச் ராஜா, தம்பி அண்ணாமலை, அக்கா தமிழிசை என பல நாக்பூர் பயணிகள் பஸ்சை நிரப்பி இருப்பார்கள். காளியம்மாள் - அவர் பரம்பரை திமுக என நினைக்கிறேன் - ஆனால் திமுகவுக்கு போகக்கூடாது என்பதே என் விருப்பம். ஊழல் இல்லாத, நடைமுறை சாத்தியமான தமிழ் தேசியத்தை முன் தள்ளும் ஒரு கட்சி - த வெ க இருக்கிறது. அங்கே ஒரு பெண் ஆளுமைக்கு வெற்றிடமும் உள்ளது. அவர் அங்கே போகவேண்டும். தமிழ் நாட்டின் ஒரு பெரும் ஆளுமையாக வரவேண்டும் என்பதே என் அவா.
  19. இப்போ— டிரம்ப் புட்டினின் கையாள் என்ற என் தத்துவத்தை இங்கே அப்பிளை பண்ணி பாருங்கள். ஒரு சதிக் கோட்பாடு நிஜமாகும் தருணம் இது. அமெரிக்காவினை நேரே எதிர்த்து உடைக்க முடியாது என்பதால், உள்ளே இருந்து உடைக்கிறார் புட்டின். கிரேக்க இதிகாசத்தில் Trojan குதிரை எனப்படும் ஒரு மரக்குதிரை வரும். ஒரு அரசை போரில் வெல்ல முடியாத எதிரி அரசு, ஒரு பெரும் மரகுதிரையை செய்து அதனுள் போர்வீரர்களை பதுக்கி அனுப்பி வைக்கும். அந்த நாட்டினரும் பெரும் குதிரையை சுற்றி ஆடி பாடி மகிழ்ந்து, இரவில் தூங்க சென்ற பின், வீரர்கள் வெளிவந்து, அனைவரையும் போட்டு தள்ளுவார்கள். இப்படியான நகர்வுகளை ஆங்கிலத்தில் Trojan Horses என்பார்கள். IT யில் பின்னாளில் இப்படியான வைரஸ்சுகளை Trojan என அழைக்கவும் இதுவே காரணம். புட்டின் அமெரிக்காவுள் அதன் மூலம் மேற்குக்குள் அனுப்பி உள்ள Trojan Horse நாசகாரி தான் டிரம்ப். டென்மார்க்கோடு, கனடாவோடு, உக்ரேனோடு - டிரம்ப் எடுக்கும் நிலைப்பாடு எல்லாம் அமெரிக்காவை பலவீனப்படுத்தவே. ஆனால் டிரம்பும், வான்சும், மஸ்கும் அதிதீவிர ஆமெரிக்க வலது தேசியவாதம் என்ற Trojan குதிரைக்குள் பதுங்கி இருந்து இதை செய்கிறார்கள். இது அதி தீவிர வலதுசாரி கொள்கை போல இன்னுமொரு பேய்காட்டும் கதை. அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் என்ன வித்தியாசம்? அமெரிக்காவின் இராணுவ பலம். இராணுவ பலம், ஐரோப்பாவில் இருக்கும் கூட்டுக்கள், இவை எல்லாமும்தான் அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஒரு அசுரனாக்கி வைத்துள்ளன. இதேபோல் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆளுமையும். இவற்றை படிப்படியாக உடைத்தால் -அமெரிக்காவின் பொருளாதாரமும் அடி வாங்கும். ஆனால் இது உடனடியாக நடக்காது.
  20. வாழ்த்துக்கள் முதல்வர் அல்வாயான் அவர்களே..
  21. தமிழ் நாட்டு மருமகன்னா சும்மாவா🤣 ஷொகீப் பசீர் ஐ கொண்டுவந்திருக்கலாம். ஆர்ச்சர்…கவுண்டி விளையாட முன்னமே அவசர அவசரமாக பெற்றார் வழியாக கடவுசீட்டு கொடுக்கப்பட்டு இங்கிலாந்து டீமுக்குள் வந்தவர். வந்தது முதலே காயம்தான். இதில கவுண்டி சீசனும் முழு வீச்சில் விளையாடினால் ஆஸ்பத்திரியில்தான் மேட்ச் வைக்க வேணும்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.