Everything posted by goshan_che
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் சொன்ன ஆண்டை யும் பின் குறிப்பையும் கவனித்தீர்களா? (Wink, wink).
-
ராணுவ ரகசியம்
எங்கள் பகுதிக்கு சுழற்சியில் வந்துள்ளார்கள். அப்போ நான் ஸ்கொலர்சிப் காலம். மெட்டிராஸ் ரெஜிமெண்ட் இருக்கும் நாட்களில் எப்போதும்…கோவில்…பட்டம் விடும் இடம்…கிரிகெட் விளையாடும் இடத்தில் என் வயது பையன்களுடன் பேச்சு கொடுத்தபடி இருப்பார்கள். அவர்கள் கேள்விகள் அநேகம் - புலனாய்வு தகவல் திரட்டல் என்பது பின்னாளில் உறைத்த விடயம். அதே போல் இன்னொரு விடயம் - பெண்கள் பாலியல் வன்கொடுமை வெளியே தெரிந்த அளவுக்கு கூட ஆண் சிறார்கள் மீது இவர்கள் செய்தது வெளி வரவில்லை. கொழும்பிலும், இந்தியாவிலும், இலண்டனிலும் சில கதைகளை கேட்டபோது - நான் தெய்வாதீனமாக தப்பி கொண்டேன் என்பதும், படித்தவராக இருந்தும் என் பெற்றார் எவ்வளவு அப்பிராணிகளா இருந்துள்ளனர் என்பதும் உறைத்தது. இராணுவம், இராணுவம்தான். ஆனால் அதிலும் கேடு கெட்டது இந்திய இராணுவம்.
-
ராணுவ ரகசியம்
நீங்கள் யாழில் நிலைப்பீர்கள் என்ற நம்பிக்கை துளிர்கிறது. அந்த மணம் (வாசமா கடவுளே) வருவது - சப்பாத்தியில் சப்பாத்து பொலிஷில் உடுப்பு தோய்க்கும் சவர்காரத்தில் குளிக்கும் சவர்காரத்தில் கடலை என்ணையில் பாமாயிலில் தலைக்கு வைக்கும் எண்ணையில்… என பல ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன🤣. அவர்கள் ஓடும் வாகனத்தின் புகையில் கூட இது இருப்பதையும், அவதானித்துள்ளேன். ஆனால் ஒரு தரம் சென்னை-பம்பாய் ரயில் பயணத்தில் ஒரு கூட்டம் இந்திய ஆமிகாரருடன் பயணித்தேன். மணம் இல்லை. இலங்கையில் தம் பிரசன்னத்தை அறிய, இரவு வேளைகளில், இதர இடங்களில், ஏதோ ஒரு மணத்தை கலந்தார்களோ? நாய்கள் உச்சா போவது போல.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அரையிறுதிக்கு போகும் 4 அணிகளையும் சரியாக கணித்தும். ஓடர் மாறியதால் எனக்கு அரையிறுதியில் எந்த புள்ளிகளும் இல்லை. ஆனால் யாரும் 1,2 அணிகளை சரியான ஓடரில் கணித்தால் அவர்களுக்கு புள்ளிகள் கிடைக்கும். இதைதான் விதி விளையாடியது என்பார்கள் போலும் 🤣. எப்போதும் தமிழன் இப்போது வெல்லலாம்….ஆனால் 2026 இல் புலவர்தான் ஆட்சி அமைப்பார். பிகு T20 WC 2026 🤣
-
என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ
உண்மை.
-
என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ
இந்த கோணத்தில்தான் சீமானின் அரசியல் எதிரிகள் இதை அணுகுவார்கள். நீங்கள் சொல்வது போது இது சீமான் வாழ்வில் ஒரு தீராத வடுவாகவே இருக்கும். சீமான் குற்றவாளி, குற்றமற்றவர் என தீர்ப்பு வருவதை விட, இப்படி முடிவதே சீமானின் எதிர்களுக்கு மிகவும் சாதமகானது. இதை வைத்து வாழ்நாள் பூராவும் சீமானை வெளுப்பார்கள். நானும் எந்த நிலைக்கும் இறங்கி சீமானை வெளுக்க தயார்தான். ஆனால் இது மிக அநீதியானது. பிகு விஜி அண்ணி உயிருக்கு ஆபத்து ஏதும் வந்து விடக்கூடாது என்பதே சீமானின் இப்போதைய பெருங்கவலையாக இருக்கும். திமுக காரனே போட்டு தள்ள கூடும். அப்படி ஏதும் நடந்தால் சீமானின் அரசியல் வாழ்வுக்கு சங்குதான்.
-
என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ
என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ Mani Singh SUpdated: Tuesday, March 4, 2025, 14:24 [IST] இனி எந்த கம்ப்ளைண்டும் கொடுக்க மாட்டேன்.. கம்ப்ளைண்ட் கொடுத்தாலும் எந்த ஆக்ஷனும் யாரும் எடுக்கப்போவதில்லை. இதனால் எந்த போராட்டமோ.. எந்த வித கம்ப்ளைண்டோ கொடுக்கப்போவதில்லை.. இது தான் என் கடைசி வீடியோ.. எனக்கு நியாயம் கிடைக்காது.. எனக்கு நியாயம் கிடைக்கவும் விடமாட்டாங்க என்று பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகை கொடுத்த புகாரின் பேரில் சீமானுக்கு எதிராக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 2 மாதங்களுக்குள் இந்த விவகாரத்துக்கு பேசி முடிவு காண அறிவுறுத்திய நீதிபதிகள், மேலும் இது தொடர்பாக புகார்தாரரும், தமிழ்நாடு அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். புது வீடியோ வெளியிட்ட நடிகை இதற்கிடையே இது தான் என் கடைசி வீடியோ என்றும், எனக்கு நியாயம் கிடைக்காது.. கிடைக்கவும் விடமாட்டாங்க.. இதை தாண்டி இனி எந்த வித போராட்டமும் நான் பண்ண மாட்டேன்.. இதுவரை மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி என்று நடிகை புது வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது:- நேற்று உச்ச நீதிமன்றத்தில் என்னாச்சு என்பதை மக்களுக்கு சொல்வதற்கு விருப்பப்பட்டேன். ஏனென்றால் நேற்று வந்த தீர்ப்பை வைத்து, செட்டில்மெண்ட் என்று சொல்லி எல்லாரும் எழுத ஆரம்பித்துவிடுவார்கள். நடிகைக்கு இரவோடு இரவாக சீமான் ரூ.10 கோடி செட்டில்மண்ட் பண்ணிட்டாரு என்று.. ஈழத்தமிழர்களோடு கஷ்டப்பட்ட பணத்தை எல்லாம், அவளுக்கு தான் கொடுத்துக்கொண்டு இருக்கிறார் என்று அபாண்டமாக என் மீது பழியை போட்டுவிடுவார்கள். அதனால் நான் இப்போது இதற்கு ஒரு தெளிவினை சொல்லிவிடுகிறேன். என் தரப்பில் யாருமே ஆஜர் ஆகவில்லை சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்ஐஆர் தள்ளுபடி செய்ய சொல்லி வழக்கு தொடர்ந்திருந்தபோது, என் சார்பில் ஒரு வழக்கறிஞர் வாதாடினார். அவர் என் தரப்பு பாதிப்புகளை எடுத்து சொல்லி, அதற்கு பிறகு தான் நீதிபதி உத்தரவு கொடுத்தார். நேற்று உச்சநீதிமன்றத்தில் சீமான் ஒரு வழக்கை கொடுத்திருந்தார் இல்லையா.. அந்த வழக்கில் என் சார்பாக யார் ஆஜரானார்கள். என் சார்பாக யாராவது சென்று, இந்த பெண் இந்த மாதிரி பாதிக்கப்பட்டிருக்கு. சும்மா சும்மா எல்லாம் வழக்கு போடல.. ரொம்ப துன்பப்படுத்தியிருக்கிறார்கள். அந்த பெண் சாகும் அளவுக்கு போயிருக்கிறார்.. நேற்று வரைக்கு அந்த பெண்ணை பாலியல் தொழிலாளி என்று தான் சொல்கிறார்கள் என்று என் தரப்பில் யாராவது சொல்லியிருக்க வேண்டும் அல்லவா.. ஆனால் யாருமே சொல்லவில்லை.. இதனால் சீமான் சொன்ன கோரிக்கையை வைத்து அதனை ஏற்று கோர்டில் ஜட்ஜ்மெண்ட் கொடுத்து இருக்கிறாங்க.. Also Read நீதியும் கிடைக்காது.. நியாயமும் கிடைக்காது இப்போது நான் என்ன கேட்கிறேன் என்றால், நான் ஏதோ சீமானிடம் பேசிவிட்டால், பார்த்தீங்களா காசுக்காக பண்றா.. காசுக்காக பண்றா.. என்று சொல்லி எல்லாரும் கத்துறீங்களே.. நேற்று ஏன் என் சார்பாக யாருமே போயி உச்ச நீதிமன்றத்தில் போராடவில்லை. இந்த கேள்வி கேட்கும் போது, நான் எல்லாருக்கும் என்ன புரிய வைக்கின்றேன் என்றால், முந்தாநாள் நான் கதறி அழுதேன்ல.. அது ஏன் என்று தெரியுமா.. எனக்கு எந்த நீதியும் கிடைக்காது.. எந்த நியாயமும் கிடைக்காது இந்த வழக்கில்.. கிடைக்கவும் விடமாட்டாங்க.. இத புரிஞ்சிக்கிட்டேன்.. சரியா.. இதை தாண்டி இனி எந்த வித போராட்டமும் நான் பண்ண மாட்டேன். சீமானிடம் போய் யாரும், இந்த பெண் ரொம்ப கஷ்டப்படுது.. இந்த பெண்ணின் சாபத்தை கட்டிக்காத.. என்று சொல்லமாட்டாங்க.. எல்லாரும் அவள எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப்படுத்து.. அசிங்கப்படுத்து, கஷ்டப்படுத்து என்ற ரூட்டில் தான் எடுத்து செல்வதால், அந்த அசிங்கத்துக்குல்ல இறங்கி நான் போராட வேண்டும் என்று அவசியம் எனக்கு கிடையாது. Recommended For You இனி எந்த கம்ப்ளைண்டும் கொடுக்க மாட்டேன் இதுவரைக்கு எனக்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி.. நடிகை இப்போது கூட ஏமாற்றப்பட்டுவிட்டார் என்று மக்கள் நன்கு புரிந்துகொண்டு இருப்பாங்க.. எல்லாரும் புரிஞ்சுக்குவாங்க.. இனி எந்த கம்ப்ளைண்டும் கொடுக்க மாட்டேன் என்று நான் சொல்லிவிட்டேன். கம்ப்ளைண்ட் கொடுத்தாலும் எந்த ஆக்ஷனும் யாரும் எடுக்கப்போவதில்லை. இதனால் எந்த போராட்டமோ.. எந்த வித கம்ப்ளைண்டோ கொடுக்கப்போவதில்லை.. இது தான் என் கடைசி வீடியோ.. எனக்கு நியாயம் கிடைக்காது.. எனக்கு நியாயம் கிடைக்கவும் விடமாட்டாங்க.. இவ்வளவு தான்.. இதுதான் என்னுடைய இரண்டு வார்த்தை.. இது தான் என் கடைசி வீடியோ.. இவ்வாறு அந்த நடிகை கூறினார். https://tamil.oneindia.com/photos/oscar-win-anora-movie-tamil-review-oi122188.html?ref_source=OI-TA-Home-Page&ref_medium=Display&ref_campaign=News-Cards#photos-7 வாழ்த்துக்கள் சீமான்…. இரெண்டு மாதம் டைம் கொடுத்தது சுப்ரீம் “மாமா” கோர்ட். நீங்கள் 24 மணிக்குள் சாட்சியை பின்வாங்க வைத்து விட்டீர்கள். இப்படி விஜி அண்ணி பின்வாங்க வைக்கப்படுவது இத்தோடு 3ம் முறை. தமிழ்நாடு அரசு பேசாமால் வழக்கை முடிச்சு வைத்து விடலாம். சுப்ரீம் கோர்ட்டை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
இதை செய்தாலும் தப்பி இருக்க முடியாது. ஏன் என்றால்…கலியாணம் முடிப்பதாக ஏமாற்றித்தான், லிவிங்டு கெதர், கொஞ்சி குலாவுதல் சகலதுக்கும் இசைவு பெறப்பட்டது, அதாவது obtained consent through deception என்பதே விஜி அண்ணி வாதம். இதையும் முன்பே எழுதிவிட்டேன் விளங்காத மாதிரி நடிக்கிறீர்கள். சீமானை ரோ கையில் எடுத்தது, தமிழ் தேசிய அரசியல் இந்திய ஒருமைப்பாட்டுக்கு தீங்காகாமல் தடுக்க. இந்திய மத்திய அரசின் கீழ்தான் றோ. றோவின் கைப்பாவை எவரோ, அவரை மத்திய அரசில் இருக்கும் கட்சி தன் தேவைக்கும் பயன்படுத்தி கொள்ளும். நாளைக்கு ஆட்சி மாறினால் - அந்த கட்சியும் சீமானை பயன்படுத்தும். இப்போ எச் ராஜாவை பேறறிஞர் என்றவர் அப்போ ப சிதம்பரத்தை மூதறிஞர் என்பார்😃.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
இது சட்ட நடைமுறைதான். Ex parte அல்லது without notice application என சொல்வார்கள். ஒரு வழக்கில் மறு பகுதியின் நியாயத்தை கேட்காமல் ஒரு தடையுத்தரவு (injunction) கொடுப்பது. இங்கே தமிழ் நாடு அரசுக்கு - பதில் கூற பத்து நாள் கழித்து ஒரு தவணை கொடுக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். ஆனால் இங்கே கூட உச்சநீதி மன்றம் சீமானுக்கு அனுகூலமாக நடந்துள்ளது. சீமானின் அப்ளிகேசனை பத்து நாள் தள்ளிவைத்து, தமிழ்நாடு அரசின் பதிலையும் பெற்று முடிவெடுக்காமல் - நேரடியாக 2 மாத அவகாசம் வழங்கி உள்ளனர். இந்த 2 மாச அவகாசம் மத்திய அரசின் துணையுடன் மீண்டும் ஒரு தடவை பெங்களூரில் இருக்கும் விஜி அண்ணியை மிரட்டி வாபஸ் வாங்க வைக்கவே. நிச்சயமாக…. இப்போதே எதிர்வு கூறுகிறேன்… விஜி அண்ணி மீண்டும் மிரட்டி வழக்கை வாபஸ் வாங்க வைக்கப்படுவார், அல்லது பணத்தை கொடுத்து கோர்ட்டுக்கு வெளியே இருதரப்பும் சமாதானம் ஆகி விட்டனர் என முடிப்பார்கள். இதனால்தான் இந்திய உச்சநீதிமன்றம் மாமா வேலை பார்க்கிறது என எழுதினேன்.
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
நட்ட ஈடு, அரசு பொய் வழக்கு தொடுத்தால் அல்லது சாட்சிகளை பொய்யாக உருவாக்கினால் மட்டுமே கொடுக்கப்படும். மிக, மிக, மிக அரிதாக. வெல்லும் நிகழ்தகவு - prospect of success என்ன என்பது வழக்கு போடும் பக்கத்தின் முடிவு. இங்கே விஜி அண்ணி ஏறுக்குமாறாக கதைத்ததால் இந்த வெல்லும் நிகழ்தகவு குறைந்துள்ளது. அவர் வாபாஸ் பெற்றால் இன்னும் குறையும். ஆனால் அவர் வாபஸ்சுக்கு தகுந்த காரணம் காட்டினால் -கூடும். ஆனால் இவை எதுவுமே இங்கு கருதுபொருள் இல்லை. ஏன் தெரியுமா? இங்கே விசாரணையை முடித்து வழக்கு போட்டது தமிழ் நாடு அரசு அல்ல. இந்த வழக்கு வளசரவாக்கம் பொலிஸ் ஸ்டேசனில் தூங்கி கொண்டிருந்தது. அதை சென்னை உயர் நீதிமன்றம் தானாக போய் தட்டி எழுப்பியவர் அண்ணன் சீமான். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிதான் விசாரிக்க சொன்னார். அவரின் தீர்ப்பு ஏன் மிக நியாயமானதும், பக்கசார்பற்றதும் என்பதை இந்த பதிலில் விளக்கியுள்ளேன். 👇👇👇👇👇 ஆனால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கொடுத்த தீர்ப்பில் ஒரு அநியாயமும் இல்லை. ஒரு பாலியல் வழக்கை, மனுதாரர் வாபாஸ் வாங்கி, பின் இப்போ தொடர்கிறார் என்பதால் மட்டும், அடித்து நூப்பது அநீதியானது. குறிப்பாக, தான் அளுத்தத்துக்கு உள்ளாகி வாபாஸ் வாங்க வைக்கப்பட்டேன் என அவர் சொல்லும் போது. அதே போல் குற்றம் சாட்டபட்டவரை வழக்கை நிலுவையில் வைத்து - அதை ஒரு மிரட்டல் கருவியாக பாவிப்பதும் கூடாது. ஆகவே இரு தரப்புக்கும் அநீதியாக நடக்காமல் - விசாரணையை முடிக்க குறுகிய ஆனால் போது
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
ஆனால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கொடுத்த தீர்ப்பில் ஒரு அநியாயமும் இல்லை. ஒரு பாலியல் வழக்கை, மனுதாரர் வாபாஸ் வாங்கி, பின் இப்போ தொடர்கிறார் என்பதால் மட்டும், அடித்து நூப்பது அநீதியானது. குறிப்பாக, தான் அளுத்தத்துக்கு உள்ளாகி வாபாஸ் வாங்க வைக்கப்பட்டேன் என அவர் சொல்லும் போது. அதே போல் குற்றம் சாட்டபட்டவரை வழக்கை நிலுவையில் வைத்து - அதை ஒரு மிரட்டல் கருவியாக பாவிப்பதும் கூடாது. ஆகவே இரு தரப்புக்கும் அநீதியாக நடக்காமல் - விசாரணையை முடிக்க குறுகிய ஆனால் போதுமான அவகாசம் வழங்கி தீர்ப்பளிதார்.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அப்படி சொல்லி 1991 இல் மசூதியை இந்து மத வெறியர்கள் இடித்துவிட்டார்கள். ஆனால் அப்படி இடித்தவர்கள் மனது புண்பட கூடாது, ஆகவே இப்போ அந்த இடத்தில் இராமர் கோவில் கட்ட அனுமதிக்கிறோம். இதுதான் பிஜேபியின் இரும்பு பிடிக்குள் இருக்கும் இந்திய உச்சநீதிமன்றின் நடுவுநிலமை. இவர்களிடம் நான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
முதலில் விஜி அண்ணி பொலிஸ் முறைப்பாடு செய்ததும் சீமான் தன் அதிமுக மீதான செல்வாக்கை பாவித்து விசாரானையே இல்லாமல் பார்த்து கொண்டார், பின்னர் பலர் மூலம் தூது பேசினார், விஜிஅண்ணி கணக்கில் சீமான் சார்பில் பணம் கூட போட்டார் என்கிறார் விஜி அண்ணி. இப்போ வழக்கு விசாரணை ஆரம்பமானவுடன் டெல்லி போய், 2 மாதம் வாய்தா வாங்குகிறார். என் மீது எவராவது பொலிஸில் போய் பாலியல் குற்ற முறைப்பாட்டை செய்தால், நான் அந்த விசாரணைக்கு முகம் கொடுத்து, முடிந்த விரைவில் அதை கோர்ட்டுக்கு கொணர்ந்து, நான் குற்றம் அற்றவன் என நிரூபிப்பேன். எந்த நிரபராதியிம் இப்படித்தான் செய்வார்.
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
ஈ வே ரா இதற்குள் வருவார்… ஆனால் அக்னி அவரை ஆதரிப்பதில்லை. ஈவேரா வை நானும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில்லை, குறிப்பாக அவரின் பாலியல் சுதந்திரம், கடவுள் குறித்த நிலைப்பாட்டில். அப்படி என்றால் உச்ச நீதி மன்றம் வழக்கு விசாரணைக்கு பூரண தடை அல்லவா போட்டிருக்கும்? ஏன் சீமானை விஜி அண்ணியோடு இழப்பீடு தொடர்பாக பேச 2 மாதம் அவகாசம் கொடுத்தது? குற்றவியல் வழக்குகள் எப்போதும் state vs Individual தான். யூகேயில் அரசரை குறிக்கும் முகமாக R என்பார்கள். உதாரணமாக R vs Goshan. Individual vs Individual அல்ல (அவை சிவில் வழக்குகள்). ஆகவே புகார் கொடுத்தவர் வாபஸ் வாங்கினாலும் ஒரு குற்றவியல் வழக்கை அரசு தொடர்ந்து நடத்தலாம். ஆனால் பாதிப்புக்கு உள்ளானவர் சாட்சியம் கொடுக்காவிடின் குற்றத்தை நிறுவுவது கஸ்டமாகும்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
ஓம்… ஒட்டியது, கிழித்தது எல்லாம் வெறும் noise. நான் அதை பற்றி இந்த திரியில் மினகெடவில்லை. முக்கியமான விடயம். அந்த துப்பாக்கிதாரி…. அவர் விடுதலையா? துப்பாக்கி மீள கொடுக்கப்பட்டதா? அல்லது எல்லோரும் சேர்ந்து இந்திய ஒருமைபாட்டுக்குள் அமுக்கிவிட்டார்களா?
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
விளக்கத்துக்கு நன்றி. இரெண்டு வேறு பட்ட விடயங்களை அழைப்பாணை என எழுதுவதால் வந்த குழப்பம்.
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
இந்த விஜி அண்ணி கேஸ் மட்டும் இல்லை எண்டால் - ஓணாண்டி எப்போதோ சீமானை எதிர்க்க ஆரம்பித்திருப்பார்….🤣
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
அழைப்பாணை summons என்றாலே அது ஒரு கோர்ட் ஆடர் தானே?
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
நடிகர் வடிவேலுக்கு இதை விட கூட்டம்🤣. ஆனா அம்மஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லை… ஒரு டெப்பாசிட்…சை….மனுசனங்களடா நீங்க🤣 தமிழ் நாட்டு வாக்காள பதருகளா🤣
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
2026 இல் தனித்து நின்று ஒரு சீட் ஆவது என…🤣
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
கறுப்பன் குசும்பன்… இன்னொரு புது லுமாலா சைக்கிளுக்கு ரூட் போடுறான்🤣 Johnny English 🕵️♂️
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
நீங்கள் என்ன சாது… நவீனன் என்ற ஒருவர் இருந்தார் …முன்னர் அவர்தான் செய்திகள் வெட்டி ஒட்டுவார். ஒரு கடமை போல் செய்வார். செய்தி திரியில் அவர் மருந்துக்கும் கருத்து எழுதி நான் காணவில்லை. தாம் இணைக்கும் பக்கசார்பான செய்திகளை அவர் இணைக்கும் செய்திகள் பின்னே தள்ளி விடுகிறது அவர் அவதாராக சங்ககாராவை வைத்தார் அவருக்கு ஏறு நெத்தி, தெத்தி பல்லு என எதையோ சொல்லி விரட்டியே விட்டார்கள் 🤣. இதை போல் Tulpen என ஒருவர். நான் முன்னர் எல்லாம் இதைவிட 100% கடுமையாக இவர்களுடன் டீல் பண்ணுவேன். அந்த மனிசன் என்னை அமைதியாக இருக்க சொல்லும், சமாதானமாக எழுதும்…கடைசியில் அவர் என்னை விட கடுமையாக இவர்களை கிழித்து தொங்க போட்டு விட்டு போய்விட்டார் 🤣. அர்ஜூன், ஜூட், ஜீவன் சிவா…சாதுவாக வந்து சேதுவாக போனோர் பலர் 🤣. ஆனால் முன்னர் போல் இப்போ குழுவாதம் இல்லை. முன்னர் மாபியா போல் இருக்கும் ஒவ்வொரு நகர்வும். நான் தேடிய போது இது கிடைத்தது👇. நீதிமன்றம் நியமித்த 3வது நீதிபதியே - நீதிபதி சுவாமிநாதன் சொன்ன “அந்த இருவர்” கதை ஒரு கஞ்சா கப்ஸா கதை என சொல்லாமல் சொல்லுகிறார். சுவாமிநாதனின் நெற்றி பட்டையை நான் காணவில்லை🤣 சவுக்கு சங்கர் வழக்கு: “நீதிபதி சுவாமிநாதன் பாரபட்சமாக தீர்ப்பளித்திருக்கிறார்” - 3வது நீதிபதி! Published:11th Jun, 2024 at 12:53 PM நீதிபதி ஜெயச்சந்திரன் - சவுக்கு சங்கர் - நீதிபதி சுவாமிநாதன் புதிய தலைமுறை தமிழ்நாடு “நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பு பாரபட்சமானது” என்று, சவுக்கு சங்கர் வழக்கில் மூன்றாவது நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவருடைய தாய் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி இருந்தார்கள். Also read:சவுக்கு சங்கர் விவகாரம்; நீதிபதிக்கே அழுத்தம் கொடுப்பவர்கள் யார்? CBI விசாணைக்கு கோரி கடிதம் இதை தொடர்ந்து மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், 'இரண்டு நீதிபதிகளும் கொடுத்த தீர்ப்பு முழுமையானது அல்ல' என கடந்த வியாழன் அன்று தெரிவித்து இருந்தார். சவுக்கு சங்கர் - சென்னை உயர் நீதிமன்றம் இந்நிலையில், 3 வது நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த தீர்ப்பின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில், “சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வந்தபோது, அரசு தரப்பிற்கு பதில் அளிக்க கால அவகாசம் வழங்காமல் குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு பாரபட்சமானது” என அவர் குறிப்பிட்டுள்ளார். Also read:சவுக்கு சங்கர் விவகாரம்; நீதிபதிக்கே அழுத்தம் கொடுப்பவர்கள் யார்? CBI விசாணைக்கு கோரி கடிதம் மேலும், “எதிர்தரப்பினருக்கு பதில் அளிக்க கால அவகாசம் வழங்காமல் அவசரகதியில் இந்த வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார். ஒரு வழக்கில் இரண்டு தரப்பினருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கிய பிறகே வழக்கில் முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் சட்ட கல்லூரியின் அடிப்படை பாடம். நீதிபதி சுவாமிநாதன் இந்த வழக்கு தொடர்பாக இரண்டு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அனுகியதாலேயே, அரசின் விளக்கத்தை கேட்காமல் நீதிபதி சுவாமிநாதன் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது என்பது ஒரு தரப்பினருக்கு போதிய வாய்ப்பு அளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. அவ்வாறு அவரை சிலர் அணுகி இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். அல்லது இது குறித்து பொறுப்பு தலைமை நீதிபதியிடம் புகார் அளித்திருக்க வேண்டும். அல்லது இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும். ஆனால், நீதிபதி சுவாமிநாதன் இந்த நடைமுறையை கடைப்பிடிக்காமல் உத்தரவு பிறப்பித்தது பாரபட்சமானது” என குறிப்பிட்டுள்ளார். சவுக்கு சங்கர் இதையடுத்து இந்த வழக்கை மீண்டும் இரண்டு நீதிபதி கொண்ட ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றிய நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கின் விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். Puthiyathalaimuraiசவுக்கு சங்கர் வழக்கு: “நீதிபதி சுவாமிநாதன் பாரபட்சமாக தீ...சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவருடைய தாய் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புக
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
நன்றி இதை கொஞ்சம் கிண்டி பார்கிறேன். நீதிபதி இப்படி சொன்னனால் அது கட்டாயம் விசாரணைக்கு ஆளாகும் என்றே நினைக்கிறேன். இங்கே “தகுதி அடிப்படை” என எதை சொல்கிறார்கள் என தெரியவில்லை. மர்ம நபர்கள் சவுக்கு சார்பாகா ஆஜரானார்களா? அல்லது மாநில அரசு சார்பாகவா? தேடி பார்க்கிறேன். ஆனால் சுவாமிநாதன் அளுத்தத்துக்கு படியவில்லை. என தெரிகிறது.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
இரெண்டு விடயம். இங்கே சென்னை நீதிபதி எந்த விதத்திலும் அநியாயமாக நடக்கவில்லை. மிக நியாயமாக - வழக்கை இழுத்தடிக்காமல், 12 கிழமை அவகாசம் கொடுத்து பூர்வாங்க விசாரணையை முடிக்க சொல்லி உள்ளார். இந்த வழக்கு என்றாவது விசாரிக்கப்பட்டால் - அது சென்னை உயர் நீதி மன்றில்தான் விசாரிக்கப்படும். இங்கே சீமான் கூட சென்னை நீதிபதி மேல் புகார் ஏதும் கூறவில்லை. பொலிஸ் விசாரிக்கும் வேகத்தை பற்றியே புகார் கூறி உள்ளார். பிரதிவாதியாக தமிழ் நாடு அரசுதான் உள்ளது. உச்சநீதிமன்று அல்ல. சீமானே சொல்லாத விடயத்தை சீனியர் அட்வகேட் மருதும் அவரது ஜூனியர் லாயர் ஓணாண்டியும் சொல்லி அழுகிறீர்கள் 🤣. உங்களுக்கு விரைவில் டின்னு கட்ட போகிறார்கள் 🤣
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
நீதிதுறை முழுக்க முழுக்க செண்டிரல் லிஸ்டுக்கு கீழேதான் வருகிறது. நியமனம், இடமாற்றம் எல்லாமும். மாநில அரசுக்கு எந்த உத்தியோக பூர்வ அதிகாரமும் நீதித் துறைமீது இல்லை. சந்தித்து பேசலாம். அதை மீறி எதுவும் செய்ய முடியாது. ஆனால் மத்திய அரசின் நீதி துறை மீதான பிடி அப்படி அல்ல. சவுக்கின் நீதிபதி - இதை பற்றி நான் அறியவில்லை. இந்த நீதிபதி இப்படி கூறிய ஆதாரம் இருந்தால் தாருங்கள். ஏன் என்றால் இதை உண்மையில் ஒரு மாநில அரசியல்வாதி/அதிகாரி செய்து நீதிபதி அதை தக்க இடத்தில் முறையிட்டால் - அவர்கள் பல வருடம் சிறை செல்ல நேரிடும். சும்மா கதைத்தமைக்கே. (வீடியோ ஆதாரம் எனில் - நீதிபதி பேசியதை இணையுங்கள், 3ம் நபர்களின் வியாக்கியானனக்களை அல்ல).