Everything posted by goshan_che
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
கென் பாலேந்திரா என (பலேந்திரா என வீரகேசரி எழுத்து பிழை விட்டுள்ளது) கேள்விபட்டிருப்பீர்கள்? ஜோன்கீல்ஸ், பிரண்டிக்ஸ் இரெண்டுமே இலங்கையின் முதன்மை வர்த்த நிறுவனங்கள். அனுர ஜனாதிபதியாக முன்னர், என் பி பி பக்கம் ஆதரவுகரம் நீட்டிய முதல் வர்தக பிரமுகர்களில் ஒருவர்.
-
சந்ததிப் பெருக்கமும் இன்மையும்
நான் 10 பிள்ளை பெறவும் ரெடி…. ஆனால் பிள்ளைகளை வளர்க்க என்னை கூப்பிட கூடாது 🤣. நான் கவனிக்கவில்லை என்பதால் அதில் ஒன்று கஞ்சா குடுக்கியாயும், மற்றது முடிச்சவிக்கியாயும் வந்தால் அதற்கும் நான் பொறுப்பல்ல. ஒரே பெண்ணை 10 தரம் செத்து பிழைக்க வைக்காமல், பத்தும், வேறுபட்ட 10 பெண்களுடம் என்றால் இன்னும் சிறப்பு.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
இது சம்பந்தமான மேலதிக தகவல்கள், ஆதாரம் இருப்பின் பகிரவும்🙏.
-
தையிட்டி விகாரை விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திசைதிருப்பியதும், ஏனையவர்கள் அமைதியாக இருந்ததும் வேதனையளிக்கிறது
பொறகு அனுர பார் சிபாரிசு லிஸ்டை வெளியிட்டால் நீங்களா பொறுப்பு?
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
சங்கி-தம்பிகள் உளறுவதில் ஓரளவு லாஜிக் உள்ள தர்க்கம் இது மட்டுமே. ஆனால் 2009 க்கு பின் புலிகள் என எவரும் இல்லை. எனவே சமயம், திராவிடம் சம்பந்தமாக புலிகளின் நிலைப்பாடு என்றால் அது மேலே கேணல் கிட்டு கூறியதே. ———— 2009 க்கு பின் கருணாநிதி என்ற ஒற்றை மனிதனின், திமுக என்ற ஒற்றை அமைப்பின் தவறை - ஒட்டு மொத்த திராவிட கொள்கையின் தவறாக சித்தரித்து அதன் மூலம் இந்திய மத்திய அரசு, இந்தியா மீதான விமர்சனத்தை மடை மாற்றுபவர்கள்தான் இப்படி சொல்வார்கள். 2009 இல் நடந்ததற்கு திராவிட கொள்கையோ, பெரியாரோ எந்த வகையிலும் பங்களிக்கவில்லை. அப்படி சொல்பவர்கள் - மடைமாற்றிகள்.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
இந்த கேள்விக்கு பதில். இலங்கை சட்டப்படி (இந்தியாவிலும் என நம்புகிறேன்) தமிழர் மரபுவழி திருமணம் (கோவிலில் வைத்து தாலி கட்டுவது) பதிவு திருமணத்துக்கு நிகராக ஏற்று கொள்ளப்படுவது. ஆகவே ஒரு தமிழர் பதிவு திருமணம் செய்ய முடியாதவிடத்து இந்த முறையில் திருமணம் செய்தாலும் அது சட்டபடி செல்லும். போரும் சமாதானமும் புத்தகம் இந்த திருமண சூழலை விபரிக்கிறது. மேலே கேணல் கிட்டுவிடம் கூட தலைவரின் மத நம்பிக்கை பற்றி கேட்கப்படுகிறது. ஜெகத் கஸ்பரிடம் கூட தலைவர் அவரே என்ன சொன்னார் என்பது நமக்கு தெரியும். எத்தனையோ சந்தர்பங்கள் இருந்தும் - அவர் ஒரு போதும் தன்னை இந்து/சைவர் என அடையாளப்படுத்தியதோ, ஒரு நாள் தன்னும் கோவிலுக்கு போய் அதை படம் பிடித்து வெளியிட்டதோ இல்லை. இது அவரின் தனிப்பட்ட மதம் சம்பந்தமான நிலைப்பாடு. ஆனால் அமைப்பாக இதைவிட சமயம் சாரா நிலையில்தான் புலிகள் இருந்தார்கள். மீண்டும் கேணல் கிட்டு சொல்வதை கேளுங்கள் - எனக்கு நம்பிக்கை குறைந்து கொண்டு போகிறது, ஆனால் நான் இப்போதும் சாமி கும்பிடுகிறேன், புலிகளில் உறுப்பினருக்கு தனி மனித மத சுதந்திரம் உள்ளது. ஆனால் ஒரு அமைப்பாக, எமக்கு கிறிஸ்தவமும், இந்து/சைவமும் அடக்குமுறையாளர் புகுத்திய மதங்கள். சுதந்திர தமிழீழத்தில் தனி மனித மதசுதந்திரம் மதிக்கப்படும் ஆனால் பிரச்சாரம் மூலம் அறிவூட்டல் நிகழ்த்தப்படும். இதுதான் ஒரு அமைப்பாக மதம் பற்றிய புலிகளின் நிலைப்பாடு. எப்போதும். பிகு இந்த பதில் உங்களுக்கும். தான் வாழ்நாள் பூராக ஆதரித்த இயக்கத்தின் அடிப்படை கொள்கை ஒன்றை பற்றிய தெளிவு இல்லாத நன்றி குறியிட்ட அண்ணைக்கும்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஆமென். மிளகு தூக்கலாக.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
சம்பந்தருக்கு சற்றும் சளைக்காத கள்ளந்தான் மாவை. தன் மகனுக்கு சீட் கேட்டு கட்சியை சீரழிச்சதும், மாவிட்டபுரத்தில் மாட மாளிகை கட்டியதும், மட்டும் அல்லாது சாகும் வயசிலும் பதவி ஆசையில் நொடிக்கு ஒரு கதை, நொடிக்கு ஒரு பக்கம் தாவி, தமிழரசு கட்சியை நாசம் பண்ணியதில் மாவையின் பங்கு மிக பெரியது. மாவை இந்தியாவில் பல சொத்துக்களை உடையவர் அதனால் இந்தியா கிழித்த கோட்டை தாண்டதவர் என்பதும் உண்மையே. இங்கே சுமந்திரனை (பார் சிறி சார்பாக) தாக்குவதற்காக பார் சிறி அடிபொடிகள் மாவையை ஏதோ மாமனிதர் ரேஞ்சுக்கு உயத்தினம்🤣. இதே ஆட்கள் இதே யாழில் மாவையை பற்றி எழுதினதை தூக்கி போட்டால் - ஊர் சிரிக்கும். பிகு அடிப்படை மாண்பு கருதி மாவையின் சாவு வீட்டின் பின்பே அவர் பற்றிய விமர்சனம் எழுதப்படுகிறது. சம்பந்தன் சாவு பற்றிய திரியிலேயே வந்து கிரியை செய்த சவகிரிகை குருக்கள்கள்மார் எவரும் எனக்கு அட்வைஸ் பண்ண நினைக்க வேண்டாம் 🙏.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
கூடவே நிற்பது பார் ஆளு மன்ற உறுப்பினர் சிறியா? யோக்கியனுக்கு நாமலோட என்ன வேலை?
-
மாவையின் மரணம் தொடர்பில் கொட்டித் தீர்க்கப்படும் ஆதங்கங்கள்
மாவையின் சாப்பாட்டில் சுமந்திரன் எலி மருந்து கலந்தார்!!! - கிளிநொச்சி பார் முரசு-
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
பதிலுக்கு நன்றி. நான் உங்கள் இன்றைய நிலைப்பாட்டை பற்றி எழுதவில்லை அண்ணை. நமக்கிடையான உரையாடல்களில் புலிகளின் சமயம், திராவிடம் சம்பந்தமான நிலைப்பாடு இதுவாகவே (கேணல் கிட்டு கூறியது) இருந்தது என நான் கூறிய போது நீங்கள் இல்லை என மறுத்துள்ளீர்கள். அதைத்தான் கூறினேன். தனிமனிதராக நீங்கள் எந்த நிலைப்பாட்டிலும் இருக்கலாம் ஆனால் உங்களை போல ஒருவர் சமயம், சைவம் என சொல்லி கேள்வி எழுப்பியபோது அதை ஆணித்தரமாக கேணல் கிட்டு மறுப்பதை நீங்கள் வீடியோவில் கண்டிருப்பீர்கள். இதுதான் புலிகளின் நிலைப்பாடாக எப்போதும் இருந்தது. இதோடு நீங்கள் உடன்பட வேண்டியதே இல்லை. ஆனால் இதுவல்ல புலிகளின் நிலைப்பாடு என எழுதுவது உண்மைக்கு புறம்பானது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
குறித்து வைத்து கொள்ளுங்கள். வரப்போகும் தேர்தலில் ஏதோ ஒரு வகையில் அதிமுக+பிஜேபி+ நாதக நேரடியாக கூட்டணி அல்லது…. அதிமுக வை அதன் தொகுதியில் நாதக எதிர்க்காது, என்ற உடன்படிக்கை… அல்லது வேறு ஏதோ ஒரு பொறிமுறை… மூலம் நேரடியாக அல்லது மறைமுகமாக இந்த மூன்று கட்சி வாக்குகளையும் சேர்க்கும் திட்டத்தின் வெள்ளோட்டம்தான் இந்த தேர்தல். அமித் ஷா சொல்படி அதிமுக, பிஜேபி இந்த தேர்தலை புறக்கணிக்க, முழு சங்கியாக சீமான் மாறி பரப்புரை செய்வது…. கடுமையாக பெரியாரை எதிர்ப்பது மக்கள் இந்த கூட்டை ஏற்பார்களா என நாடி பிடித்து பார்க்கவே. சீமானுக்கு கிடைக்கும் வாக்கு வீதத்தை பொறுத்து, அதிக சேதாரம் இல்லாமல் மூன்று கட்சியும் இணையலாமா இல்லையா என முடிவெடுப்பார் அமித் ஷா.
-
இதற்காக மட்டுமே நாம் தமிழரை கழுவி ஊத்துவதில் கலந்துகொள்வதில்லை.
யார் சொன்னால் என்ன. சொல்வது சீமான் என்ற நஞ்சை பற்றி. நஞ்சை விதை என நான் நம்பபோவதில்லை. யார் சொன்னாலும். நேற்றைய சபேசன் பேட்டி + இன்று பகிரப்பட்ட கேணல் கிட்டு பேட்டி - இரெண்டையிம் பார்த்த பின்னும், நஞ்சை நாம் ஏன் நஞ்சு என சொல்கிறோம் என்பது புரியாவிட்டால், ஜி போல டொட் எல்லாம் போட மாட்டேன். புரியும் வரை எழுதுவேன்.
-
த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்கம்: தலைவர்களின் சிலைகளை விஜய் இன்று திறந்து வைக்கிறார்
உங்களுக்கு என்று ஒரு இமேஜ் இருக்கிறது. தயவு செய்து நாம் தமிழர் போட்டோஷாப்பை நம்பி உங்கள் இடையில் இருக்கும் துண்டை நீங்களே உருவி விட வேண்டாம். அண்மையில் பையன் சீமான் வீட்டுக்கு முன் பெரியார் படத்தை திகவினர் செருப்பால் அடித்ததாக ஒரு போட்டோஷப்பை பகிர்ந்தார். அதில் சீமான் படத்தை, பெரியார் படம் என போட்டோஷாப் பண்ணி இருந்தார்கள். அதை நான் திருத்த கூட முயலவில்லை. ஏன் என்றால் it’s so obvious. அதை பகிர்பவர்கள்தான் மொக்கேனப்படுவார்கள். ஆகட்டும் என விட்டு விட்டேன். பிகு சீமானுடன் சேர்ந்தால் அல்லது ஆதரித்தாலே - ஏதோ ஒரு வகையில் - நாம் மொக்கேனப்படும் படி ஆகும் என்பது யாழ்கள வரலாறு. சீமானுக்காக வாயை விட்டு தாமாகவே வெளியோரியோர் லிஸ்டில் நீங்கள் சேரக்கூடாது. பொறகு பொன்னம்பலத்துக்கு ஆர் துணை 🤣
-
இதற்காக மட்டுமே நாம் தமிழரை கழுவி ஊத்துவதில் கலந்துகொள்வதில்லை.
கோபுரத்தில் விதையை வைக்காமல் நஞ்சை வைத்தால்?
-
இதற்காக மட்டுமே நாம் தமிழரை கழுவி ஊத்துவதில் கலந்துகொள்வதில்லை.
காளியம்மாள், ரஜீவ்காந்தி, கல்யாணசுந்தரம் இன்னும் எத்தனையோ பேர் இப்படியான உண்மையானவர்கள் நா த கவில் இருப்பதால், இருந்ததால்தான் …… அவர்கள் எவரையும் கழுவி, கழுவி ஊத்துவதில்லை. உங்களை போலவே புலிக்கொடி, தலைவர் படத்தை காட்டி சீமான் இவர்களையும் கட்டி போட்டுள்ளார். கழுவி, கழுவி உற்றுவது சீமானை மட்டுமே. இப்படியான நல்ல உள்ளங்களை எல்லாம் ஏமாற்றி, கட்டிப்போட்டு, மடை மாற்றுகிறார் என்ற கோபமே சீமானை கொஞ்சம் எக்ஸ்டிராவாக கழுவி ஊத்த காரணம்.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
@island தலைப்பை புலிகளின் மதம், பெரியார், திராவிடம் சம்பந்தமான பார்வை என மாற்றுவதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். கேணல் கிட்டு மிக தெளிவாக இங்கே சொல்லபடுவது அமைப்பின் கொள்கை என்பதை சுட்டுகிறார். போகட்டும்… இனி யாரும் சருவசட்டியை தூக்கி கொண்டு வந்தால் இந்த லிங்காலே அடிக்கலாம்தானே🤣
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
நன்றி….. இது ஒரு வரலாற்று ஆவணம். @நன்னிச் சோழன் பார்வைக்கு. ————- இங்கே இரு வருடங்கள் முன் புலிகளின் மதம் சாரா கொள்கை நிலைப்பாட்டை நான் கருத்தாக எடுத்து சொல்லியபோது @குமாரசாமி அண்ணை உட்பட பலர் அது அப்படியில்லை என்றார்கள். புலிகள் இனவாத அரசுக்கு எதிராக மட்டுமே போராடினார்கள், சாதி மதம் இட்டு போராடவில்லை என அவர்களின் பல்பரிமாண போராட்டத்தை ஒற்றை பரிமாண போராட்டமாக சுருக்கினார்கள். குறிப்பாக தலைவரின் மத நம்பிக்கை அற்றதன்மையை, அவர் இயற்கையைதான் எப்போதும் உயர் சக்தியாக சுட்டினார் என சொன்ன போது @MEERA அதை மறுத்தார். அதே போல் புலிகள் பெரியார் மீதும் அவர் சாதித்த விடயங்கள் பற்றியும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்கள் என நான் எழுதியபோதெல்லாம், @Nathamuni போன்றோர் அதை மறுத்துரைத்தனர். இந்த பாதி-உண்மைகள், பொய்கள் எல்லாவறின் மீதும் சம்மட்டியடிகாக வீழ்ந்துள்ளது கேணல் கிட்டுவின் இந்த பேட்டி. 1989 இல் இந்தியாவிடனான போருக்கு பின், இலண்டனில் கொடுத்த பேட்டி இது. இதில் இந்து/சைவ மதம் எமது எதிரி, பெரியார் அதை மெட்டிராசோடு தடுத்தார் என சொல்லி விட்டு. நாம் திராவிடர்கள் எனவும் சொல்கிறார் கேணல் கிட்டு. அவர் இருக்கும் வரை தலைவருக்கு அடுத்து புலிகளின் குரல் என்றால் அது கேணல் கிட்டுதான். மேலே அவர் சொல்லியுள்ளதுதான் மதம், திராவிடம் பற்றிய புலிகளின் நிலைப்பாடு தொடக்கம் முதல் முடிவு வரை. கேணல் கிட்டுவை விட கொள்கை விடயத்தில் தாம் தான் புலிகளின் பேச்சாளர்கள் என கிளம்பி வரும் துணிவு இங்கே எவருக்கும் இல்லை என நினைக்கிறேன் (சொல்ல முடியாது). ——— @வீரப் பையன்26 உங்கள் புலிகளின் கொள்கை நிலைப்பாடு பற்றிய தேடலை வளர்க்க இது உதவலாம்.
-
த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்கம்: தலைவர்களின் சிலைகளை விஜய் இன்று திறந்து வைக்கிறார்
அப்படியே காளியம்மாளையும் கூப்பிடு தல, பாவத்த, நல்ல இன உணர்வாளர், சீமானால அரசியல் எதிர் காலமே சூனியமாகிடும் போல இருக்கு. ஆதவ் திருமாவ மீட் பண்ணுறாரு, இன்னிக்கு விழாவுக்கு வராம நேபாளம் போறாரு… பாத்து தல நா.த.க ல உதயகுமாருக்கு ஆகினமேரி தவெக ல உனக்கும் ஆயிடப்போது🤣
-
தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
இந்த ஆளுனர் ஒரு இனவாத-மாமா என நான் எழுதிய போது பலர் இல்லை இல்லை நேர்மையானவர் அது இது என தூக்கி பிடித்தார்கள். அதே போல் அருச்சுனா, ஆளுனரை குறை சொல்லும் அனுர காவடி தூக்குவோர், அனுர சொல்லித்தான் இவர்கள் இப்படி உளறுகிறார்கள் என்பதையும் மறைத்து, ஏதோ இவர்களில் மட்டுமே பிழை என்பது போல் முழு பிலாப்பழத்தை சோற்றுகோப்பைக்குள் மூடிவிடப்பார்கிறார்கள்.
-
ஶ்ரீ விக்ரம இராஜசிங்க மன்னனின் வழித் தோன்றல்களினால் கண்டியில் விசேட நிகழ்வு
வரலாற்று புனைவாளர்களை காணோம்👀
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
மத்திய தரவர்க்கதின் கனவுகளில் ஒன்றான கார் வாங்குவதை இது மேலும் கடினமாக்குகிறது. இந்தியன், சீன கம்பெனிகள் பல எலெக்ரிக் கார்கள் செய்கிறன. இவற்றில் ஒன்றை வைத்து ஒரு உள்ளூர் எலெக்ரிக் தயாரிப்பை உருவாக்கலாம். ஏற்கனவே micro என்ற ஒரு உள்ளூர் கம்பெனி உள்ளது. https://en.m.wikipedia.org/wiki/Micro_Cars
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
ஜென்மத்தில் அதிஸ்ட்டத்தை கொண்டுள்ள ஜேர்மன் வாசிக்காரருக்கு, நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க போகிறது. இதுவரை கவனமாக செலவு செய்த நீங்கள், இனி கணக்கின்றி வரப்போகும் இலாபத்தால், செலவு செய்ய நேரம் இல்லாமல் திண்டாடப்போகிறீர்கள். ஆனால் கணக்கு வழக்கில் கொஞ்சம் அதிக சிரத்தை எடுக்கவும். குறிப்பாக 12, 24 எண்கள் வரும் விடயங்களிம் மிக அவதானமாக இருக்கவும்🤣.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
ஐ…சீண்டிப்பாக்கிறியள் போல🤣. எனக்கென்னமோ இந்த திமிர் வீரம் விளைந்த மண் வாழைச்சேனையில் புடம்போட பட்டதாகவே படுகிறது🤣
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
சில வேளை பெரியார், தலைவர் இருவர் சொன்ன தத்துவங்களயும் உள்வாங்கியதால் - இந்த சில்லறை நியூமராலஜி தகவலை மிஸ் பண்ணி இருக்கலாம் 🤣. நியுமராலாஜியை பார்த்தவர்கள் தத்துவத்தை மிஸ் பண்ணி இருக்கலாம்.