Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. போகும் போதே அது விளங்கும் 🤣 🤣 அட ஆமாம் தம்பி. மாத்தி விடுகிறேன். நன்றி🙏 அதாவது…. பாஜக…. அதிமுக….. மிகுதி இருக்கும் அத்தனை திமுக கூட்டணி எதிர் வாக்கு வங்கியில் இருந்தும் ….. நா த க வால் வெறும் 10,000 வாக்கை மட்டுமே திரட்ட முடிந்துள்ளது. இந்த 10,000 மேலதிக வாக்கில் அநேகம் பிஜேபி வாக்காளராகத்தான் இருக்கும். தமது பரம வைரியான திமுக வென்றாலும் பரவாயில்லை….சீமானுக்கு வாக்கு போடக்கூடாது என்று பெரும்பான்மை அதிமுக வாக்காளரும்…. திமுகவுக்கு போடாமல் விட்டாலும் நா த க வுக்கு போடுவதில்லை என பெரும்பான்மையான நடுநிலை வாக்காளரும் முடிவு செய்துள்ளனர்.
  2. Erode East: விதை ஒன்னு போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்? நாதக சீமானுக்கு பாடம் கற்றுதந்த பெரியார் மண்! Vishnupriya RUpdated: Saturday, February 8, 2025, 19:08 [IST] பொதுவாக இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவான சூழலே நிலவும் என்றாலும் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களை காட்டிலும் அதிக வாக்குகளை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதே போல் 24 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் நாதகவுக்கு தோல்வியிலும் வெற்றி என்ற நிலைப்பாடுதான் ஏற்பட்டுள்ளது. பகுத்தறிவு பகலவன் பெரியாரை எந்த அளவுக்கு அவதூறாக பேச முடியுமோ அந்த அளவுக்கு சீமான் கடுமையாக விமர்சித்துவிட்டார். இதனால் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அப்போது முதலே முடிவுரை எழுதப்பட்டுவிட்டதாக திராவிட கட்சிகள் விமர்சித்து வந்தன. மேலும் தமிழகமே பெரியார் மண் என்றாலும் அதில் உள்ள ஈரோடு தொகுதி என்பது பெரியார் பிறந்த ஊர் ஆகும். தமிழகத்திலேயே பெரியாருக்கு அத்தனை மதிப்பும் மரியாதையும் இருக்கும் போது அவருடைய சொந்த ஊரில் கேட்கவே வேண்டாம். அந்தளவுக்கு பெரியாரின் சீர்திருத்தங்களால் பெரும்பாலானோர் பயனடைந்து வருகிறார்கள். ஏற்கெனவே சீமான் பெரியாரை பேசிவிட்டார் என தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் பெரியார் மண்ணான ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருந்தது. தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த சீமானுக்கு எதிராக பலர் கொந்தளித்தனர். மேலும் வேட்பாளர் சீதாலட்சுமியிடமும் பலர் "பெரியாரை உங்கள் தலைவர் (சீமான்) இழிவாக பேசிவிட்டு இங்கேயே வந்து வாக்கு கேட்பாரா என கோபப்பட்டனர். அவர்களை வேட்பாளர் சமாதானப்படுத்தினார். இந்த நிலையில் இந்த முறை நடக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே போட்டியிடுவதால், நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. கடந்த தேர்தல்களில் அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதத்தை பார்க்கலாம். அதாவது 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கோமதி 11,629 வாக்குகளை பெற்றார். அவருடைய வாக்கு சதவீதம் 6.98 ஆகும். 2023 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் போட்டியிட்டார். அவர் 10,827 வாக்குகளை பெற்று, 6.35 வாக்கு சதவீதத்தை பெற்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் 2023 இல் நாதகவுக்கு வாக்கு சதவீதமும் வாக்குகளும் குறைவுதான். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளும் பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு 24 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. ஆயிரத்து சொட்சம் வாக்குகளில் டெபாசிட் இழந்தாலும் நாதகவின் வாக்கு சதவீதம் இந்த முறை அதிகரித்திருக்கும். இதற்கு காரணம் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க விரும்பும் அதிமுக, தேமுதிக, பாஜக, உள்ளிட்ட கட்சிகளும் திமுக எதிர்ப்பாளர்களும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்திரு்கக வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது. அதாவது வழக்கமாக கடந்த தேர்தல்களை போல் இந்த முறையும் நாதகவுக்கு எப்போதும் வரவேண்டிய 10 ஆயிரம் ஓட்டுக்களுடன் அதிருப்தியாளர்களின் ஓட்டுக்கள் 10 ஆயிரமும் கிடைத்துவிட்டது என்றே கருதப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/will-naam-tamilar-ntk-perform-more-than-last-elections-in-erode-east-678239.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
  3. அமித் ஷா அத்தனை கட்சிகளை விலக செய்தும்…. திமுக மீது கடும் அதிருப்தி இருந்தும்…. டெபாசிட் கூட தேறவில்லை…. ஏன்? 50 வருசத்துக்கு முன் செத்து போன ஒரு கிழவன்…..🤣🤣🤣 பெரியாரை தூற்றி விட்டு ஒரு ஹை கோர்ட்டையும் பிடுங்க முடியாது என்பது இப்போ அமித் ஷாவுக்கு விளங்கி இருக்கும். வாங்க…வந்து… வண்டில ஏறுங்க… பேசிகிட்டே போகலாம்🤣🤣🤣
  4. Feb 08, 2025, 10:53 Am IST தபால் வாக்குகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி தபால் வாக்குகளில் திமுகவுக்கு 197 வாக்குகள் கிடைத்தன; நோட்டாவுக்கு 18-ம் நாம் தமிழர் கட்சிக்கு 13 வாக்குகளும் கிடைத்தன. Feb 08, 2025, 10:42 Am IST 18,712 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை திமுக வேட்பாளர் சந்திரகுமார் 22,682 வாக்குகளையும் நாதக சீதாலட்சுமி 3970 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 18,712 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது Feb 08, 2025, 10:27 Am IST 19,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை திமுக சந்திரகுமார் 21,481; நாதக சீதாலட்சுமி 2,278 வாக்குகளைப் பெற்றுள்ளனர். வாக்கு வித்தியாசம் 19,203 Feb 08, 2025, 10:15 Am IST நோட்டாவுடன் நாம் தமிழர் கட்சி போட்டி ஈரோட்டில் 2,278 வாக்குகளைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு போட்டியாக நோட்டாவுக்கு 578 வாக்குகள் கிடைத்துள்ளன. Feb 08, 2025, 9:58 Am IST நோட்டாவுக்கு 517 ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 சுற்றுகள் முடிவில் நோட்டாவுக்கு 517 வாக்குகள் கிடைத்துள்ளன Feb 08, 2025, 9:39 Am IST 13,694 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை திமுக வேட்பாளர் சந்திரகுமார் 15,972; நாதக சீதாலட்சுமி 2,278 வாக்குகளைப் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் சந்திரகுமார் 13,694 வாக்குகள் வித்தியாசததில் முன்னிலை வகிக்கிறார் Feb 08, 2025, 9:35 Am IST அதிமுக, பாஜக வாக்குகள் ஈரோடு இடைத்தேர்தலைப் புறக்கணித்த அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவில்லை என்பதையே வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளிப்படுத்தி வருகிறது. Feb 08, 2025, 9:16 Am IST திமுக அமோக முன்னிலை திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியை விட 10,050 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார் Feb 08, 2025, 9:02 Am IST 7100 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 7,100 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார் Feb 08, 2025, 9:00 Am IST முதல் சுற்று முடிவுகள் முதல் சுற்று முடிவு: திமுக விசி சந்திரகுமார் 8113 வாக்குகள்; நாதக சீதாலட்சுமி 1,013 வாக்குகள் Feb 08, 2025, 8:53 Am IST திமுக 5567 வாக்குகள் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 5568 வாக்குகளையும் நாதக சீதாலட்சுமி 489 வாக்குகளையும் பெற்றுள்ளார் Feb 08, 2025, 8:48 Am IST தபால் வாக்குகளில் திமுக 935 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குகள் விவரம்: திமுக- 935; நாம் தமிழர் கட்சி 137 Feb 08, 2025, 8:37 Am IST மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வாக்குகள் எண்ணும் பணி தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிவடைந்த நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது Feb 08, 2025, 8:36 Am IST திமுக 50; நாதக-1 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குகளில் தற்போது வரை திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 50 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 1 வாக்கையும் பெற்றுள்ளார். Feb 08, 2025, 8:26 Am IST திமுக முன்னிலை தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் முன்னிலை வகிக்கிறார் Feb 08, 2025, 8:02 Am IST வாக்கு எண்ணும் பணி தொடக்கம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. Feb 08, 2025, 7:48 Am IST பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் சற்று நேரத்தில் தொடங்குகிறது. Feb 08, 2025, 7:34 Am IST 2011-ல் தேமுதிக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக வென்றது. தற்போது திமுக வேட்பாளராகப் போட்டியிடும் விசி சந்திரகுமார், 2011-ல் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்டு திமுகவை தோற்கடித்தார். Feb 08, 2025, 7:11 Am IST பாதுகாப்பு அறை திறக்கப்படுகிறது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை சற்று நேரத்தில் திறக்கப்பட உள்ளது. Feb 08, 2025, 7:09 Am IST தேமுதிக,, அதிமுக, காங்கிரஸ் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 2011-ம் ஆண்டு முதலில் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் தேமுதிக வென்றது. 2016-ல் அதிமுக, 2021-ல் காங்கிரஸ், 2023 இடைத்தேர்தலில் காங்கிரஸ் வென்றது. Feb 08, 2025, 6:46 Am IST 56 பேர் நியமனம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குகளை எண்ணுவதற்காக 56 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்; 76 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன Feb 08, 2025, 6:13 Am IST 600 போலீசார் பாதுகாப்பு ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிகை மையம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் 600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். Feb 08, 2025, 6:02 Am IST டெண்டர் ஓட்டுகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உரிய ஆவணங்கள் இருந்தும் தம்மால் வாக்கு செலுத்த முடியவில்லை என சில இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார்களின் உண்மைத்தன்மை அடிப்படையில் 'டெண்டர்' ஓட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த டெண்டர் ஓட்டுகளும் எண்ணப்படும். Feb 08, 2025, 6:01 Am IST காலை 7.30 மணிக்கு தபால் வாக்கு அறை திறப்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் இருப்பு அறை காலை 7.30 மணிக்கு திறக்கப்படும். இதன் பின்னர் 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். Feb 08, 2025, 5:44 Am IST 14 மேஜைகள் 17 சுற்றுகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது 14 மேஜைகளில் 17 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் 51 அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர். Feb 08, 2025, 5:44 Am IST வாக்கு எண்ணிக்கை எங்கு? ஈரோடு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளின் 246 தபால் வாக்குகளும் முதலில் எண்ணப்படும். இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் 78 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. Feb 08, 2025, 5:44 Am IST 72,889 பேர் வாக்களிக்கவில்லை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 1,54,657 வாக்களித்தனர்; 72,889 பேர் வாக்களிக்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 67.97% வாக்குகள் பதிவாகி இருந்தன. 7 Hours Ago 4 ஆண்டுகளில் 2-வது இடைத்தேர்தல் 2021-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸின் திருமகன் ஈவெரா வென்று எம்.எல்.ஏ.வானார். அவர் காலமானதைத் தொடர்ந்து 2023-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றார். ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் மறைந்ததால் 4 ஆண்டுகளில் 2-வது இடைத்தேர்தலை ஈரோடு கிழக்கு எதிர்கொண்டது அதிமுக புறக்கணிப்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்தது. இதேபோல அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிக, பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. https://tamil.oneindia.com/news/tamilnadu/erode-east-by-election-2025-vote-counting-results-live-news-in-tamil-dmk-vs-ntk-who-will-win-678143.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
  5. நிர்வாகி…நிர்வாகி எண்டு சொன்னான் சார்….. ஆனால் கடைசி வரைக்கும் எந்த நிர்வாகின்னு சொல்லவே இல்லை சார்🤣
  6. தட்டச்சில் ஓணான் என்று வரவில்லை என்ற மட்டில் ஆசுவாசம் அடைகிறேன்🤣.
  7. இல்லை இல்லை அவர் phd. பனியன் ஒவ் த ஹையஸ்ட் டிகிரி. Paniyan of the highest degree🤣.
  8. அப்ப சிவிகே கொம்பிளைண்ட் கொடுத்துள்ளார். செத்த வீட்டில் அப்படி ஒரு பதாகை வைத்தவன் அரை கிறுக்கன் எண்டால்… இந்த சீவிகே முழு கிறுக்கர் 🤣
  9. மும்மூர்திகள் என்றால் பிரம்மா, விஷ்ணு, சிவன் - இப்படி சொல்லலாம் என பரிந்துரைத்த @நிலாமதி அக்கா இந்துக்கள் மனதை புண்படுத்தி இருப்பாவோ🤔🤣
  10. அருச்சுனா மிகவும் நெஞ்சுரம் கொண்டவர் என்பதால் தான் செய்யும் ஊழலை தானே அம்பலப்படுத்துகிறார் என்கிறீர்களா ஐயா? அப்படியா அக்கா? நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் கொஞ்சம் woke/politically correct ஆக சிந்திக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன். ஒன்று செய்யுங்கள் - எனது கருத்து மேல் உள்ள பட்டனை தட்டி report அடித்து விடுங்கள். நிர்வாகம் என்ன முடிவு எடுக்கிறதோ நான் கட்டுபடுவேன். அத்தோடு நிர்வாகம் என் கருத்தை நீக்கினால் நீக்கப்பட்ட கருத்துக்கு மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளேன். பிகு பிதா மகன் என்பது இந்து இதிகாசத்தில் பீஷ்மரை குறிக்கும். கருணாநிதியை ஊழலின் பிதாமகன் என எழுதிய @தமிழ் சிறி அண்ணாவின் கவனத்துக்கு 🤣.
  11. டிரம்ப்: என் தலைவன் புட்டின் மீதா பிடியாணை போடுகிறீர்கள்…. உங்களுக்கு இஸ்ரேலை சாட்டி வைக்கிறேன் பார் ஆப்பு.
  12. அதே. எழுத நினைத்தேன். பிறகு சிலர் டிரிகர் ஆகி விடுவார்கள் என்பதால் விட்டு விட்டேன்🤣 இந்தா எழுதாமலே ஆயிட்டார் அண்ணை 🤣. ——- ஓம் கருணாநிதிதான் தமிழ் நாட்டில் ஊழலின் பிதா, சுதன்,பரிசுத்தாவி, பேரன், பூட்டன் எல்லாமே 🤣. அதில் மாற்று கருத்தே இல்லை. ஆனால் தமிழ் நாட்டுக்கு அப்பால் ஊழல் இந்தியாவின் ஒவ்வொரு படி நிலையிலும் வியாபித்து இருப்பதற்கு அவர் பெரிய காரணம் இல்லை.
  13. இது பார் சிறியின் அடிப்பொடிகளால் காவித்திரிய படும் பொய் செய்தி போல் தெரிகிறது…. படத்தை போட்டு தன்னும், பதாகை வைப்பது என்ன பொலிஸ் தேடும் விடயமா? பொலிஸ் வேறு விடயமாக போயிருக்க கூடும். இதை பற்றி பொலிசோ, மாவை குடும்பமோ ஏதும் சொல்லி உள்ளதா? பிகு மாவையின் பிணத்தை வைத்து பார் சிறி கூட்டமும், பொன்னம்பலவானேர்சர்களும் பிண அரசியல் செய்கிறார்கள்.
  14. அமெரிக்கா வெளி ஏறினால் என்ன? ரஸ்யா இலங்கையை பொறுப்பு கூற வைக்கும் 🤣.
  15. ஹசாரேயை விட கிரண் பேடி அடித்த யூ டர்ன் இன்னும் மெய்சிலிர்க்க வைத்தது. பிரசாந்த் பூஷணும் பின்னர் ஏதோ சிக்கலில் மாட்டி கொண்டார் என நினைக்கிறேன். இப்பொ கேஜ்ரிவால் மீதும் ஊழல் வழக்கு. ஒரு காலத்தில் தான் கறுப்பு பணமாகத்தான் சம்பளம் வாங்கினேன் என்பதை மேடையில் ஏற்று கொண்ட ரஜனி, ஷிஷ்டம் சேஞ் பற்றி இஷ்டம் போல் கதைக்கவில்லையா🤣. இலங்கையில் இனவாத ஒழிப்பும், இந்தியாவில் ஊழல் ஒழிப்பும் வெறும் கோசங்கள் மட்டுமே. பா உ க்கள் தங்கள் பிரேத்தியேக செயலாளராக உறவினரை வைப்பது இலங்கையிலும், யூகேயிலும் கூட ஏற்று கொள்ளபட்ட நடைமுறைதான். ஆனால் ஆய்வு அலுவலகராக நியமிப்பது தக்க வழிமுறைகள் வழி வர வேண்டும். அதைவிட அரச ஊழியர் ஒருவருக்கு அரசு கொடுக்கும் சம்பளத்தை, அவரின் மேலதிகாரி ஸ்தானத்தில் உள்ளவர் பெறக்கூடாது. அவருக்கு experience தான் வேணும், சம்பளம் வேண்டாம் என்றால் அதை திறைசேரிக்கு மீள கொடுக்க வேண்டும். இது ஊழல்தான். ஆனால் மிக சின்ன ஊழல்.
  16. இறக்குமதி தடை ஒரு முக்கிய காரணம். ஆனால் 2019 ற்கு முன்பே இலங்கை ரூபாய் மதிப்பில் அநேகமான என் நண்பர்கள் வாங்கிய விலையை விட கூடிய விலைக்குத்தான் கார்களை விற்றுள்ளார்கள். பணவீக்கம் மற்றும் அதிகரித்து செல்லும் இறக்குமதி வரி காரணமாக. மேலே நான் சொன்ன பவுண்சுக்கு மாற்றி பார்ப்பது வெளிநாட்டவர் நோக்கில் மட்டும்தானே. அநேகமான இலங்கை கார் நுகர்வோர் வாங்குவதும், விற்பதும் இலங்கை காசில்தானே.
  17. இல்லை - கார் 15 வருடம் பாவனை, மைல்லேஜ்ஜுக்கு பிறகும் வாங்கிய விலையை விட (2011 நாணய மாற்று வீத அடிப்படையில்) அண்ணளவாக 1. 5 இலட்சத்தால் (£1000) கூடியுள்ளது. ஏனைய நாடுகளில் முதல் 3 வருடத்தில் ஷோ ரூம் விலையில் 45-50% போய்விடும். மேலே அக்னி சொன்ன இன்றைய மதிப்புக்கு இலங்கையில் £30,000 பெறுமதியான கார் யூகேயில் £500-1000 தான் போகும்.
  18. அடப்பாவமே…எப்படி புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டுமாம்.
  19. ஊழல்வாதிகளை விட ஊழலை புடுங்குவோம் என வெளிக்கிடுபவர்கள் மீது மிக அவதானமாக இருக்க வேண்டும். அன்னா ஹசாரே மூலம் நான் கற்ற பாடம் இது. பெரிசு ஊழலை எதிர்க்குது எண்டு நானும் சப்போர்ட் பண்ணினா, சைக்கிளை அப்படியே கொண்டு போய் மோடி வீட்டு போர்ட்டிகோவில் நிப்பாட்டி விட்டார் 🤣. இதே போலத்தான் இன்னொருவர் தமிழ்நாட்டில், 18 வயதில் தன் முகசாயலில் ஒரு புதிய மகனை அறிமுகம் செய்தார். அவரும் ஊழல் எதிர்ப்பாளர் என தொடங்கியவர்தான். இப்போ இவர்.
  20. கணக்கீட்டில் வாகனத்தை பொதுவாக depreciating asset விலை தேய்மானம் அடையும் பொருள் என படிப்பிப்பார்கள். ஆனால் இலங்கையில் அது ஒரு appreciating asset. மேலே அக்னி சொல்லி உள்ளார் பாருங்கள் - 2011 இல் 55 இலட்சத்துக்கு போன கார் இப்போ 110 இலட்சம். அப்போ ஒரு பவுண் 190 ரூபாய், இப்போ 370 ரூபாய். ஆனால் கார் விலை டபிளாகி கூடியுள்ளது.
  21. இந்த முறை மாத்தும் போது டெஸ்லாவில் மனம் போய், மொடல் 3 டெஸ்ட் டிரைவும் செய்து பார்த்தேன், ஆனால் வாங்கிற காசுக்கு உள்ளே ஒன்றும் இல்லை. சரியான minimalistic, அத்தோடு இன்னும் எலக்டிரிக் பெற்றோல் போல் இலகுவாக வரவில்லை. கூடவே ஒவ்வொரு வருடமும் போன் பட்டரி போல் பேட்டரி ஸ்டோரேஜ் 4% ஆல் குறையுமாம். இந்த 4 மில்லியன் இலங்கை ரூபாய் - ஐரோப்பாவில் அந்த காரின் விலை. இதை இலங்கைக்கு கொண்டு போய் வரி, வட்டி, கிஸ்தி எல்லாம் கட்டி முடிய சிம்பிளாக 10 மில்லியன் தாண்டும். இதை ஒத்த Wagon R ஒரு கோடிக்கு போகும் என்கிறது மேலே செய்தி.
  22. ஸ்கெண்டிநேவியன், ஜேர்மன், பிரிட்டிஷ்… இந்த ஒழுங்கில்தான் என் விருப்பம். இத்தாலியன் சிலதில் மனம் போவது உண்மைதான்…ஆனால் நம்பிக்கை, உதரவாதம் இல்லை….அல்லது எமக்கு கட்டுபடியாகாது 🤣. இன்னும் காரை பற்றித்தான் கதைக்கிறன்🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.