Everything posted by goshan_che
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
AI மூலம் எதிர்காலத்தை அறிய நாடவேண்டிய ஒரே நபர்…… ஜோதிகா…சை…ஜோதிட சிகாமணி… கைரேகை கலாநிதி….. உடான்ஸ் சாமியார் MaMa ( master of astrology master of astronomy). இடம்: கிங்ஸ் கிராஸ் ஸ்டேசன் எதிரில், “வடக்கன்ஸ் குட்கா & பீடா கடை” அருகாமையில்.
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
அப்போ நீங்கள் ஏன் யாழுக்கு வந்து எழுதுகிறீர்கள்? நீங்கள் நாட்டு கத்தல் கத்துவதாலும் எதுவும் மாறாதுதானே? அல்லது ஒரு சில கள உறவுகள் சொல்லுவதற்கு எதிர் கருத்தை எழுதி அவர்களை சீண்டும் ஒரே காரணத்துக்காக யாழில் எழுதுகிறீர்களோ? நீங்கள் செஞசோன்ஸ், மொரட்டுவ அலும்னி, ஆகவே இப்படியான காரணமாய் இராது என நம்புகிறேன். பிகு எறும்பூர கல் தேயும். சிறு துளிதான் பெரு வெள்ளமாகும். இத்தனை வருடங்களாக நாம் ஒரு நாலு பேர்தான் காட்டு கத்தல் கத்தினோம்….ஆனால் அதுதான் இன்று புலம்பெயர் அமைப்புகள் அறிக்கை விடும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. புலம்பெயர் இலக்கியவாதிகள், புலிகளின் நியாத்தை பேசியவர்கள், தமிழகத்தில் அறியப்பட்டவர், தமிழக ஊடகங்களுக்கு உண்மையை சொல்லும் நிலையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சீமான்-றோ கூட்டு சதியை முறியடிக்க ஒரு கதவு திறந்துள்ளது. கட்டையில் போகும் போது நமக்கு யாரும் எந்த கொடியையும் போர்த்த போவதில்லை, அதற்கு நாம் தகுதியானவரும் இல்லை…… ஆனால் ஒரு நச்சு விதைதை இனம் காட்ட, நசுக்க எம்மால் முடிந்ததை செய்தோம் என்ற நிம்மதியில் கண்மூடுவோம்.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
புத்தி ரேகை கிழிஞ்சு தொங்குதாம்🤣
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
இந்த கோணத்தில் நான் சிந்திக்கவில்லை. இருக்கலாம்.
-
த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்கம்: தலைவர்களின் சிலைகளை விஜய் இன்று திறந்து வைக்கிறார்
நியாயம்தான்
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
மிக மோசமான வரலாற்று திரிப்பு. மூன்றரை ஆண்டுகளுக்கு முன் இதை பற்றி நான் யாழில் எழுதியது இன்னும் இருக்கிறது - தேடி வாசிக்கவும். நா.த.க குப்பாடிகளும், இன்னும் கொஞ்சம் பகிடி சொல்லும் “முள்ளம் பன்றி தலை” புலம்பெயர் குப்பாடிகளும் சேர்ந்து கருணாநிதி நினைவுநாளில் தேவையில்லாமல் கருணாநிதி தெலுங்கன், பிரபாகரந்தான் தமிழின தலைவன் என எழுதி… ஒரு வலிந்த சண்டையை மூட்டினர்… அதன் பிரதிபலனாக தேவையில்லாமல் புலிகளை பற்றிய விமர்சனமும், விமர்சன காணொளிகளும் இதுவரை அது பற்றி அறியாத தமிழ்நாட்டு மக்களிடம் எடுத்து செல்லப்பட்டது. இது சீமான்+ரோ விற்கு பலத்த வெற்றி. புலிகளை, போராட்டத்தை நேசிப்பவர்களுக்கு பலத்த தோல்வி. சீமான்+ரோ செய்யும் எதிர் புரட்சி மிக நூதனமானது …இதை இன்னும் சில அண்ணைமார் விளங்கி கொள்ளவில்லை என்பது புரிகிறது. எனக்கும் ஒரு அட்வான்ஸ் சிவப்பு பிளீஸ். நான் இன்னும் ஒரு படி மேலே போவேன்…. ஆதாரத்தோடு சீமான்+ரோ உறவை எடுத்து சொன்ன பின்னும், கார்த்தி, உருத்திரகுமார் இன்னும் பல சம்பந்தமில்லாதவர்கள் குரல் கொடுத்த பின்னும்… இன்னும் சீமானுக்கு முட்டு கொடுக்கும் இப்படியானவர்கள்… மூடர்கள் அல்ல… Addicts - போதைக்கு அடிமையானவர்கள்…. சீமான் புலிகொடியையிம், தலைவர் படத்தையிம் போட்டால் - இவர்கள் addiction க்கு அதுபோதும்.
-
பெரியாருக்கும் எம்ஜிஆருக்கும் சீமான் விழா எடுத்தது ஏன்?'-ஈரோட்டில் புகழேந்தி கேள்வி
பெரியாருக்கும் எம்ஜிஆருக்கும் சீமான் விழா எடுத்தது ஏன்?'-ஈரோட்டில் புகழேந்தி கேள்வி பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி ஈரோடு பெரியார் அண்ணா நினைவு இல்லத்தில் பிப்ரவரி 3 மூன்றாம் தேதி இன்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரோடு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ''சீமான் என்பவர் 2008 எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்ததாகவும் அப்போது அவர் உபதேசம் வழங்கியதாகவும் அதற்குப் பின்னர் தான் திராவிடர்கள் திருடர்கள் என தெரிய வந்ததாகவும் அதுவரை தெரியாமல் போனதாகவும் மேடைகளில் பேசி வருகிறார். 2008இல் பிரபாகரன் உபதேசம் கூறிய பின்னர் 2010 ஆம் ஆண்டு பெரியார், எம் ஜி ஆர் கட்டவுட்டுகளை மேடையிலே வைத்து மாபெரும் விழா எடுத்தது ஏன்? உபதேசத்திற்கு பின்னால் அவர்கள் திருடர்களாக தெரியவில்லையா? எப்படி எல்லாம் மக்களை சீமான் ஏமாற்றுகிறார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு'' என அந்த விழா எடுத்த படத்தை நிருபர்கள் மத்தியில் காட்டி அவர் பெரியாரை புகழ்ந்து பேசியதையும் ஒலிபெருக்கி மூலம் போட்டு காண்பித்தார். ''எல்டிடிஇ பிரபாகரன் கடவுளை நம்புவதில்லை. இயற்கையை தான் நம்புகிறோம் என்று சொல்கிறார். அவரின் வலது கரமாக இருந்த கிட்டு அவர்கள் நாங்கள் அனைவரும் திராவிடர்கள் தான். ஆரியர்கள் எங்கள் எதிரிகள். ஆரியர்களை ஒழித்த தந்தை பெரியார் தான் திராவிட இயக்கத்தையும் தமிழர்களையும் வாழ வைத்தவர்' என்று கூறிய ஒலி நாடாவையும் போட்டு காண்பித்தார். மேலும் சீமான் அவரது உயிர் உள்ளவரை பார்ப்பனர் யாரும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக முடியாது என மேடையில் பேசியதையும் ஒலி பெருக்கி மூலம் போட்டு காண்பித்தார். ''தேர்தல் முடிந்த பின்னால் தமிழக முதல்வர் சீமான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகிய தலைவர்கள் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்காக செயல்பட்ட ஈரோட்டு மண்ணில் அவர் வாழ்ந்த வீட்டில் இருந்து உங்களை சந்தித்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெரியாரை இழிவு படுத்தும் சீமானுக்கு ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்'' என்றார். அப்போது குறுக்கிட்ட நிருபர் 'எப்பொழுது சீமான் நாம் தமிழர் கட்சியை தடை செய்வார்கள்' என கேட்டார். ''அமைதி பூங்காவாக விளங்கும் ஈரோடு மண்ணில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வெடிகுண்டு வீசுவதாகவும் தலைவர் கொடுத்த வெடிகுண்டு கையில் இருப்பதாகவும், வீசிய பின்னர் புல் கூட அந்த இடத்தில் முளைக்காது என்றும் தமிழக முழுவதும் தீப்பற்றி எரியும் என்றும் கொலை வெறியில் இருக்கிறேன் என்றும் அவர் பேசிய பேச்சுகளில் இருந்து தப்பவே முடியாது. ஆகவே விசாரணை நடத்தி தேர்தல் ஆணையம் அவர் கட்சிக்கு கொடுத்திருக்க அங்கீகாரத்தை திரும்ப பெரும். தடை செய்யும். நிச்சயமாக அது நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்'' என கூறினார். 'எடப்பாடி பழனிசாமி ஏன் பெரியாரை தாக்கி பேசியதற்கு சரியான கண்டனத்தை தரவில்லை' என நிருபர்கள் கேட்டதற்கு ''அவருக்கு பெரியாரைப் பற்றி தெரியாது. பெரியாரைப் பற்றி தெரிந்த செல்லூர் ராஜு, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்'' என்றார். மேலும் 'ஓபிஎஸ் ஏன் இதை பற்றி பேசவில்லை' என்று கேட்டதற்கு ''அவருக்கு டெல்லியில் இருந்து அனுமதி வந்தால் இதனைப் பற்றி பேசுவார். அதுவரை பேசமாட்டார்'' எனக் கூறினார். ''பாரதிய ஜனதா கட்சி ஆதரவு சீமானுக்கு இருந்தால் ஏன் வெளிப்படையாக அண்ணாமலை ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆகவே எந்த கட்சி ஆதரவும் சீமானுக்கு இடைத்தேர்தலில் இல்லை. அனாதையாக நிற்கின்ற காட்சியை தான் பார்க்கிறோம்'' எனவும் கூறினார். ''விஜய் அரசியலுக்கு வந்த பின்னால் ஏற்பட்ட பயம்தான் சீமானுடைய இன்றைய நடவடிக்கைகள் அவர் அரசியலுக்கு வருவதை நாம் தடுக்க முடியாது. அவர் பெரியார் வழியில் வருவதால் அவரை நான் பாராட்டுகிறேன். சீமானுக்கு விஜய்யை பார்த்து நடுக்கம் ஏற்பட்டு விட்டது .அதன் எதிரொலியாக தான் இப்படி உளறிக் கொண்டிருக்கிறார். சீமான் விஜயைப் பார்த்து பயப்பட ஆரம்பித்து விட்டார்'' என்றார். https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/why-seeman-did-take-festival-periyar-and-mgr-erode-popular-question?amp
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
தில்லை ஐயாவின் அசாத்தியமான எழுதுதும் வீதம் கண்டு நான் வியக்காத நாளில்லை. எனக்குள் நான் ஒரு speed reader என்ற தற்பெருமை இருந்தது - என் வாசிக்கும் கதியை விட தான் வேகமாக எழுதுவேன் என காட்டி அதை சுக்கலாக்கியவர், எழுதும் இயந்திரம் ஐயா. யாழுக்கு அண்மையில் வந்து சேர்ந்த இன்னுமொரு பொக்கிசம்.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
சம்பந்தருக்கு அவரின் ஊரில் தக்க மரியாதை கிடைத்தது. மாவைக்கு அவரின் ஊரில் தக்க மரியாதை கிடைத்தது. ஒருக்கால் மாவையின் சடலத்தை கிழக்கில் வச்சு பார்த்திருந்தால் நிலமை தெரியும். தமது வசதிக்கு ஏற்ப்ப செத்த வீட்டு கணக்கை காட்டி மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார்கள் சிலர். பிகு 1. 1994 தேர்தல் என நினைக்கிறேன் (88 ஆகவும் இருக்கலாம்) வடக்கில் எலக்சன் கேட்டால் புலிகள் சுடுவார்கள் என கூறி, அம்பாறையில் கேட்டு தமிழ் பிரதிநிதிதுவத்தை கெடுத்த சுயநலமிதான் மாவை 2. மாவை சிறை இருந்ததால் புனிதர் என்றால் - சிறை உடைத்து மாவையை மீட்ட டக்கிளஸ்? 3. அதே போல் சிறை இருந்த நிர்மலா நித்தியானந்தா? 4. ஊரில் ஒன்று சொல்லுவார்கள். முகத்துக்கு அஞ்சி விலைமாது ஆகக்கூடாது என. அப்படி எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக இருக்கும் நசியல் அரசியல் மாவையுடையது. இப்படி நசிந்தது தன் சுயநலத்துக்காக. இன நலனுக்காக அல்ல.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
புதுவையிடமோ, தமிழ் செல்வனிடமோ கூட அமைப்பின் கொள்கை என்ன? என கேட்டால் இதே பதில்தான் வந்திருக்கும். தமது விடுதலைபாடல்களில் உருவகமாக கூட வீரத்தின் அடையாளமான தெய்வங்கள் கலக்காமல் பார்த்து கொண்டவர்கள் அவர்கள்.
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
சொந்த நிறுவனங்கள் அல்ல, பங்குதார நிறுவனங்கள். அது முந்தி … இப்ப சரியா மானிப்பாய் சந்தியில இருக்கு பொஸிஸ்ஸ்டேசன்🤣
-
சுயலாபத்திற்காக தேசிய தலைவரை அணுகும் சீமான் : எழுந்துள்ள கண்டனம்
காலம்தாழ்தியேனும் …. வரவேற்கப்பட வேண்டிய செய்கை.
-
யாழின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள்!
சென் ஜோன்ஸ் பெடியள் சப்பாத்தோட பிறந்தவங்கள்🤣. மாட்டு வண்டியும் சப்பாத்து போட்டுத்தான் ஓடினார்களோ🤣
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
உங்கள் பொறுப்பு-துறப்பை ஏற்று கொள்கிறேன்🤣. மில்க்வைற்/அண்ணா கோப்பி ரெண்டும் அமரர் கனகராஜாவினது என நினைக்கிறேன். பெற்றார் யாழ்பாணம் இவர் கொழும்பு. றோயல் கல்லூரி பழைய மாணவர். அது சரி கொழும்பில் பாதி மேட்டுகுடி எல்லாம் உங்கட மானிப்பாய் பீப்பிள்தானே🤣
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
புலிகள் பகுத்தறிவாளர்கள் என யாரும் எப்போதும் கூறவில்லை. அவர்கள் மதசார்பின்மையாளர்கள். Rationalism வேறு secularism வேறு. இது மீண்டும் நான் என்ன ஆயுத்தை எடுப்பது என்பதை என் எதிரி தீர்மானிக்கிறான் என்ற தலைவரின் விருப்பமான மேற்கோளின் படி அமைகிறது. பெரியாரின் எதிரி - பிராமணியம் அது மதத்தை, வேதத்தை தன் ஆயுதமாக்கியது. அதை எதிர்க்க பெரியார் கடவுள் மறுப்பை கையில் எடுத்தார். தலைவரின் எதிரி - பெளத்த-சிங்கள பேரினவாதம் - அதன் ஆயுதம் சமயம்சேர்-இன அடையாளம் - எனவே அதன் எதிர் ஆயுதமாக தலைவர் சமயம் சாரா தமிழ் இன அடையாளத்தை நிறுத்தினார். பிகு கடவுள் விடயத்தில் என்னை விபரிக்க ஓரளவு தோதான வார்த்தை agnostic . நிச்சயமாக நான் கடவுள் மறுப்பாளனோ, பகுத்தறிவுவாதியோ அல்ல. இந்த நிலைப்பாடு கூட பெரியாரை அல்லது தலைவரை பார்த்து வந்தது அல்ல. அது தானாக வந்தது.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
தலைவர் கோவிலுக்கு போனார் என்ற ஊக கதைகளுக்கு அப்பால் (அவரிடம் நேரடியாக கஸ்பர் கேட்ட போது அவர்தான் ஒரு இயற்கைவாதி என்பதை மட்டுமே கூறினார் / நான் தாந்தோறி ஈஸ்வரனின் பக்தன் என கூறவில்லை) புலிகள் இயக்கத்துள் தனி மனித மத வழிபாட்டு சுதந்திரம் இருந்தது. ஆனால் அமைப்புக்குள் மதம் இருந்ததில்லை. பல சண்டை கொப்பிகள் பார்த்திருபீர்கள் - எந்த சண்டைக்கும் முன் உறுதிமொழி எடுத்தல், தாக்குதல் திட்ட விளக்கம் தளபதிகள் பேச்சு மட்டுமே இருக்கும். கோவிலில் போய் அர்ச்சனை செய்வதும் இல்லை ஐயர் வந்து நூல் கட்டுவதும் இல்லை. ஆனால் இலங்கை படைகள் பிக்குவை கூப்பிட்டு பிரித் ஓதுவார்கள். தளபதிகள் கையில் ஒரு நூல் கடையையே சுத்தி கொள்வார்கள்.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
மன்னிக்கவும். இது நீங்கள் புலிகள் அமைப்புக்கு செய்யும் பாதகம் (disservice). மேலே மிக தெளிவாக தனது கருத்து, இயக்கத்தின் நிலைப்பாடு என இரெண்டையும் கேணல் கிட்டு வேறுபடுத்தி காட்டுகிறார். எது இயக்க்கத்தின் நிலைப்பாடு என்பதை மட்டும் அல்ல, சுதந்திர தமிழரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை கூட சொல்கிறார். ஆகவே இதை கேணல் கிட்டுவின் பார்வை என சுருக்குவது - புலிகளின் வரலாற்றை திரிப்பதற்கு சமம் என நான் கருதுகிறேன். இது கேணல் கிட்டு தன்னை பற்றி கதைத்த நண்பர்கள் சந்திப்பு அல்ல. இயக்கம் இலண்டனில் நிகழ்த்திய நிகழ்வு. இதில் பங்குபற்றிய ஒருவரை நேரில் சந்திக்க உள்ளேன்.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
@Nathamuni யின் இனத்தூய்மை ஆராய்ச்சி கூடத்தில் ரைட் நவ்….. நாதம்ஸ்: கிருஸ்ண தேவராயர் தெலுங்கர்…. கேணல் கிட்டுவின் பெயர் கிருஸ்ணகுமார் சதாசிவம்….. யுரேக்கா! யுரேக்கா!
-
2010 இல் கருணாநிதியை புகழ்ந்து மேடை நாடகம் போட்ட சீமான்
இனி தம்பிகள், தம்பி-இராமையாவை கொல்டி என்பார்கள்🤣.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
👆இப்படி சங்கி-தம்பிகள் சொல்லுவது பொய். ஏன் என்றால் சங்கி-மானே 2009 க்கு பின் கருணாநிதியை, அண்ணாவை, பெரியாரை புகழ்ந்து மேடை நாடகம் எழுதியுள்ளார். (தம்பி இராமையா பேட்டியில் கடைசி 5 நிமிடங்களை பார்க்கவும்) நாடகம் இந்த திரியில். நிகழ்சியின் பெயர் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா 🤣🤣🤣. இதெல்லாம் மே 2009 க்கு பின்…. 2011 இல் சுப முத்துகுமார் ரோவினால் படுகொலை செய்யப்பட்டு…. சங்கிமான் ரோவின் பிடிக்குள் போவதற்கான இடைபட்ட காலத்தில் நடந்த கூத்துகள்.
-
2010 இல் கருணாநிதியை புகழ்ந்து மேடை நாடகம் போட்ட சீமான்
அண்மையில் தம்பி இராமையா ஒரு பேட்டியில் கூறி இருந்தார், 27/02/2010 அன்று நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற கருணாநிதிக்கான பாராட்டு விழாவில், கருணாநிதியை ஆகோ, ஓகோ, வாழும் பெரியார் என புகழும் இந்த மேடை நாடகத்தை எழுதியவர் சீமான் என்று. முள்ளிவாய்க்கால் நடந்து கிட்டதட்ட ஓராண்டுக்கு பின் சீமான் கருணாநிதியை, அண்ணாவை, பெரியாரை எப்படி பாராட்டியுள்ளார் என பார்க்கவும். இதே சீமான் சொல்கிறார்ர் - 2008 முதல்தான் திராவிட எதிர்ப்பாம்.
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
https://en.m.wikipedia.org/wiki/Kandiah_Balendra ஆர்ப்பாட்டம் இல்லைத்தான், ஆனால் இலங்கையில் 1990 க்கு பின் இருந்தோர் கட்டாயம் இவரை பற்றி கேள்விபட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.
- சேனாதி : மார்ட்டின் ரோட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே தத்தளிக்கும் ஆவி? - நிலாந்தன்
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
கென் பாலேந்திரா என (பலேந்திரா என வீரகேசரி எழுத்து பிழை விட்டுள்ளது) கேள்விபட்டிருப்பீர்கள்? ஜோன்கீல்ஸ், பிரண்டிக்ஸ் இரெண்டுமே இலங்கையின் முதன்மை வர்த்த நிறுவனங்கள். அனுர ஜனாதிபதியாக முன்னர், என் பி பி பக்கம் ஆதரவுகரம் நீட்டிய முதல் வர்தக பிரமுகர்களில் ஒருவர்.
-
சந்ததிப் பெருக்கமும் இன்மையும்
நான் 10 பிள்ளை பெறவும் ரெடி…. ஆனால் பிள்ளைகளை வளர்க்க என்னை கூப்பிட கூடாது 🤣. நான் கவனிக்கவில்லை என்பதால் அதில் ஒன்று கஞ்சா குடுக்கியாயும், மற்றது முடிச்சவிக்கியாயும் வந்தால் அதற்கும் நான் பொறுப்பல்ல. ஒரே பெண்ணை 10 தரம் செத்து பிழைக்க வைக்காமல், பத்தும், வேறுபட்ட 10 பெண்களுடம் என்றால் இன்னும் சிறப்பு.