Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. சும்மா எழுதிதள்ளலாம்… ஆனால் கோரிக்கை வைப்பதை தவிர வேறு எதையும் செய்ய முடியாது. ஒண்டு செய்யலாம் - போராட்டங்களை தூண்டி விட்டு, தாமே நடத்தி, கலவரம் பண்ணலாம். தமிழ் நாடு இன்னொரு கஸ்மீராகும். இங்கே பலர் விரும்புவதும் அதைத்தானே🤣. நாங்கள் அழிஞ்சுவிச்டோம், அவங்கள் எப்படி ஜாலியா இருக்க முடியும்🤣.
  2. இந்திய அரசியல் சட்டம் என்ற அடிமை சாசனத்தில் கடிதம் மட்டும்தான் எழுத முடியும். Back to ஈ வே ரா - ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது. நீங்கள் கதைப்பது அமெரிக்கன் அரசை பற்றி அல்ல. தமிழ்நாட்டு அரசு. மாதம் ஒன்றுக்கு ஒரு குடும்பம் £100 அண்ணளவாக பெறுகிறது. ஏனைய மகளீர் உதவி தொகை போன்றவற்றோடு ஒப்பிடுகையில் இது அதிகபடியனது. இல்லை முடியாது. எந்த இந்தியாவுக்கு அப்பாலனான சட்ட நடவைக்கையையும் மத்திய அரசினூடுதான் மாநில அரசு முன்னெடுக்கலாம். எந்த சர்வதேச சட்டமன்றுக்கு மீனவர் போகலாம்? சொன்னால் தொடர்ந்து பதில் இடுகிறேன்.
  3. பூரணமாக அல்ல, அறவே வெற்றி பெறவில்லை. ஏன் என்றால் டெல்லிக்கு தெரியும் பிழை தமிழக மீனவர் மீது என்பது. கொலை செய்யவேண்டாம் என ஒரு மிரட்டல் டெல்லி ஒழுங்காக விட்டால், கொழும்பு கேட்கும். ஆனால் அதை கூட செய்ய மாட்டார்கள். மீண்டும் வெறும் வார்த்தைகளின் கோர்வை மட்டுமே. என்ன செய்யலாம் என்ற பரிந்துரை இல்லை.
  4. ஏன் சொல்ல முடியாது. கடலில் ஒரு துரும்பை நகர்த்தும் அதிகாரம் கூட இல்லாத மாநில அரசு எதுவும் செய்ய முடியாது. ஓணாண்டி சொல்லிற்றார் என்பதால் மாநில அரசுக்கு இந்திய அரசியலமைப்பை மீறி அதிகாரத்தை யாரும் கொடுக்க மாட்டார்கள் என்ன மோடி வீட்டுக்கு கல் எறிவோம் என்ற மிரட்டலா? Concurrent list இல் உள்ள கல்வி ஒதுக்கீட்டை கூட தரமாட்டோம் என்கிறார்கள். எமது வரியைதானே கேட்கிறோம் என சொன்னால் - வரி தாறதை நிப்பாட்டினால் ஜனாதிபதி ஆட்சி என மிரட்டுகிறார்கள். தமிழ்நாட்டை விட பலமடங்கு அதிகாரம்மிக்க கஸ்மீரை எப்படி காயடித்தார்கள். இதுதான் இந்திய அரசியலமைப்பின் கட்டுப்பாடு. மீறினால் அடிதான். யாராயினும். எப்படி அணுகுவது? கொஞ்சம் விளக்கமாக ஒரு செயல்முறையை பரிந்துரைக்கவும். இதை ஏன் சீமானோ வேறு ஒரு தலைவரோ செய்ய கூடாது?
  5. என்ன கைய பிடிச்சு இழுத்தியா டைப், விதண்டாவாதம். இதே திரியில் நீங்கள் மேலே எழுதியதை இப்போ மறுதலித்து எழுதுகிறீர்கள்🤣. அத்தோடு உதாரணங்களை அப்படியே literal ஆக பிரயோகிக்கிறீர்கள். எல்லாமுமே இயற்கையின் அடிப்படையில்தான் தீர்க்கப்படுகிறன. ஆணுக்கு ஆண் சமம் எனவே என்னை இங்கிலாந்து கிரிகெட் டீமில் விளையாட விடுங்கள் என்பது சமத்துவம் அல்ல. எனது அளவு திறமை உள்ள ஒரு வெள்ளைகாரர் விளையாடும் போது நானும் விளையாட கூடியதாக இருக்க வேண்டும். அதுதான் சமத்துவம். மிக முக்கியமான குறிப்பு ஐரோபிய மனித உரிமை சாசனம் - போலந்திலும் சட்டம். இது பாலின சமத்துவத்தை மீறாமையை உறுதி செய்கிறது. நீங்கள் சொல்வதுதான் சமத்துவம் என்றால் - டுஸ்க் சொன்னது சட்ட மீறல். ஆனால் அப்படி யாரும் சொல்லவில்லை.
  6. அதுதான் சொன்னேன்… நீங்கள் சமத்துவம் என நம்பி கொண்டு, எதிர்ப்பது “பிரா போடாதமைதான் பெண்ணியம்” என கதைக்கும் கூட்டத்தின் interpretation ஐ. ஆனால் சமத்துவம் என்பது அது அல்ல. ஆணுக்கு பெண் சமம் எனவே ஆண்கள் எல்லாரும் பிள்ளை பெறுங்கள் என்பது எப்படி பட்ட மொக்கு கதையோ அதே போலத்தான், எடுத்த எடுப்பில் பெண்களையும் முன்னரங்கு அனுப்புங்கள் என்பது. இந்த மொக்குகதை அல்ல சமத்துவம். உடலியல், உளவியல் அடிப்படையில் உள்ள வேறுபாட்டை புறந்தள்ளுவது அல்ல சமத்துவம். இல்லை ஆம்பிளை பிள்ளை பெற வேண்டும் என வலியுறுத்துவதுதான் சமத்துவம் என நீங்கள் நம்பினால் - அது உங்கள் புரிதல் பிழை.
  7. குடும்பங்களுக்கு இப்போ நாளுக்கு 250 தமிழக அரசு கொடுக்கிறது. இதை 300 ஆக மாற்றியுள்ளதாக திமுக அதிகாரபூர்வ கணக்கு சொல்கிறது. https://www.facebook.com/share/16VSFkvsyg/?mibextid=wwXIfr வழக்கறிஞர் - இது diplomatic services வழங்குவது. மத்திய அரசு லிஸ்ட். இருவரின் பெயரும் ஜோசப் என்பதால். உங்களுக்கு ஏன் எரியுது?
  8. ஸ்டாலின் மோடிக்கு எழுதிய கடிதம் எல்லாம் லீவு லெட்டரா அல்லது லவ் லெட்டரா? கடிதம் மூலம் தலையிடுங்கள் என கேளாமலே மத்திய அரசு தலையிடலாம் ஏன் என்றால் இந்திய சட்டப்படி நிலம் மட்டுமே மாநிலத்தின் ஆளுகை, Indian territorial waters எனப்படும் கடல்பகுதி முழுக்க முழுக்க மத்திய அரசின் கீழ், இதை navy, coast guard, customs போன்ற மத்திய அரசு ஏஜென்சிகள்தான் பராமரிக்கும். அப்படி இருந்தும், தமிழகமுதல்வர் (எந்த கட்சியாயினும்) கடிதம் மூலம் கேட்டும் மத்திய அரசு தலையிடுவது இல்லை. இதை திமுக, அதிமுக அரசுகள் தவறாமல் செய்தே வந்தனன்வருகிறன. இதுக்கு மேல் என்ன மோடி வீட்டு கூரையில் ஏறி நின்றா கத்த முடியும்.
  9. பையா… நான் கிருஸ்ணாவுக்கு ஆதரவு இல்லை. நான் எழுதியது நான் எப்போ கருத்து எழுதினாலும் அது யார் மேலாவது எனக்கு உள்ள பொறாமையால் எழுதிய கருத்து என எழுதும் ஓணாண்டிக்கான பதில்.
  10. அங்க குளறுபடியே இல்லை. தூக்கி உள்ளே வைத்துவிடுவார்கள் 🤣
  11. இந்த யூடீயூப்பர் மேல் ஓணாண்டிக்கு அழுக்காறு …. தான் வெளிநாட்டில் கஸ்டப்பட்டு உழைத்து இப்போ ஊரில் வாழும் வாழ்வை, சின்ன பெடியன் எங்கேயும் போகாமல் வீடியோ போட்டு சுளுவாக சம்பாதிச்சு வாழ்கிறான் என்ற காழ்புணர்ச்சி… கவலை வேண்டாம்…நீங்கள் இப்படி அல்ல என்பது தெரியும். ஆனால் இந்த காழ்புணர்ச்சி கத்தியை யாரும் சுத்தலாம் என்பது புரிந்திருக்கும். இனிமேலாவது அழுக்காறு, வழுக்கையாறு, காழ்புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி என சக கருத்தாளருக்கு வர்ணம் தீட்டாமல் - கருத்தை கருத்தால் எதிர்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
  12. இல்லை அண்ணை. இது தனியே இயலுமை சம்பந்தபட்ட விடயம் மட்டும் இல்லை. ஏன் எந்த சமூகமும் (புலிகளும்) எடுத்த எடுப்பில் பெண்களை போருக்கு அனுப்புவதில்லை என்பதற்க்கான காரணங்களை மேலே சொல்லி உள்ளேன். உலகில் பெரும்பாலான ஆண்களிடம் நீ போருக்கு போகிறாயா, உன் மனைவி மகள் போகட்டுமா? என கேட்டால் அநேகரின் பதில் என்னவாக இருக்கும்? அந்த பதிலின் அடிப்படைதான் அரசுகள் முதலில் ஆண்களை கூப்பிடுவது. ஆனால் தேவை வரும் போது இருபாலாரும் அழைக்கப்படுவர். புலிகளும், இஸ்ரேலும் உதாரணங்கள். நீங்கள் சொன்ன மிகுதியில் முழு உடன்பாடே. யானை மரத்தை முறிக்கும். குரங்கு மரம்தாவும். குரங்கால் மரத்தை முறிக்க முடியாது. ஆனால் யானையால் மரம்தாவ முடியாது. ஆகவே சமமின்மை உள்ளது. ஆனால் ஒரு குழுவில் இல்லாதது, மற்ற குழுவில் இருக்கும். அதே போல் சில குரங்குகளுக்கு மரத்தை முறிக்க வேண்டும் என்றால் அதை பொதுமையை காட்டி தடுக்க கூடாது. இதுதான் சமத்துவம்.
  13. இது யாரோ தலையில் பெயிண்ட் டப்பாவை கவிழ்த, பிரா போடாமைதான் பெண்ணியம் என சொல்லும் ஆளிடம் கற்று கொண்ட, சமத்துவம் பற்றிய மிக தவறான புரிதலும் அதன் பால் ஏற்பட்ட விமர்சனமும். சமத்துவம் என்பது அனைவரையும் ஒரே விதமாக நடத்த வேண்டும் என்பதால், கொக்கு தேனீர் கொடுக்கும் நீண்ட குவளையில், நாய்க்கும் தேனீர் கொடுப்பதல்ல. சிம்பிள் கணிதம். 10 பெண்களும் ஒரு ஆணும் இருந்தால் அத்தனை பெண்களும் கர்பவதி ஆகலாம். 10 ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தால் ஒரு பெண்மட்டுமே கர்பவதி ஆகலாம். இது ஒவ்வொரு இனமும்/நாடும் தன் இருப்பை பேண செய்வது. இது பாலின சமத்துவத்தை விட பெரிய, இருப்பு சம்பந்தபட்ட விடயம். மூச்சுவிடாமல் எழுதிய இத்தனைக்கும் பதில் மேலே உள்ள இலகு கணிதம்.
  14. உங்களுக்கு சுதந்திர பறவைகள் வரலாறு அது எப்படி பெண்புலிகளாக மாறியது என்பது மறந்து விட்டதா? 1987 இல் காட்டுக்குள் போன பின் தான் புலிகள் இயக்கம் முதன்முதலாக ஆள்பற்றாகுறை அனுபவித்தது. அதன் போதே பெண்களை போருக்கு அனுப்புவதில்லை என்ற முடிவை அவர்கள் தளர்த்தி கொண்டார்கள். Necessity is the mother of all inventionச். தேவையே சகல மாற்றங்களினதும்/கண்டுபிடிப்புகளினதும் தாய். போலந்திலும் இந்த தேவை உணரப்படும் போது இந்த நிலமை மாறும். *பெண்களை சண்டைக்கு முதலில் அனுப்பியது ஈபி. காரைநகர் முகாம் மீதான தோல்விதாக்குதல். அதில் ஒரு பெண் போராளி சாவு என நினைக்கிறேன். அப்போ அந்த முடிவை புலிகள் விமர்சித்தார்கள் (கேணல் கிட்டு). உங்களுக்கு நான் சொன்னது விளங்கவில்லை. சமத்துவம் - தனிநபராக தேரும் உரிமை. Societal division of labour சமூகத்தின் வேலை பங்கு பிரிப்பு - நாட்டுக்கு நாடு, கலாச்சாரத்து கலாச்சாரம் வேறுபடும். இந்த பொதுமைக்குள், அதற்கு எதிராக போகும் தனி நபர்களை போகவிடுவதே சமத்துவம்.
  15. கிரெடிபிலிட்டி காற்றில் போய்விட்டது என வேலிபாய்ந்தோடியவர்கள் யார் என்பது யாழ்களத்துக்கு வாசகருக்கு என்றும் நினைவில் இருக்கும்🤣. ஆகவே யாருக்கு, யார், யாரை இனங்காட்டுவது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்🤣. மேலே சீமான் மேலே சொல்லியது சடையல் அல்ல. நான் சீமான் பிஜேபி ஏ டீம் என சொல்லவில்லையே? அவர் பி டீம். அவர் அடிப்பதுமாரி அடிப்பார், பிஜேபி அழுவதுமாரி அழும். சீமானை பார்த்து அழுக்காறு நான் அடைய தேவையில்லை. ஏன்? நான் சொந்த உழைப்பில் சாப்பிடுகிறேன். சீமானை போல (சினிமா) எனது துறையில் தோல்வி அடைந்து விட்டு இன்னொரு துறைக்கு நான் பாயவில்லை. திருமணம் ஒன்றுதான் எந்த பெண்ணும் என்னை ஏமாற்றிவிட்டார் என சொல்ல இடமில்லாமல் வாழ்கிறேன். என்னை ஒத்த தோற்றமுடைய 15 வயது பையனை மனைவியின் வளப்பு மகன் என நான் திடீரென அறிமுகம் செய்யவில்லை. போன தேர்தலில் இல்லாத 8 கோடி நீலாங்கரை பங்களா என்னிடம் இல்லை. எனது உற்ற தோழன் இறந்தபின் அவன் சாவுகட்டை இடிப்பித்து, அவன் யாரென்றே தெரியாது என பொய் கூறும் வஞ்சகன் நான் இல்லை. இன்னும் பல காரணங்கள் உளன. தேவைபட்டால் கேட்கவும். என்னை கேவலப்படுத்துவது யாழில் எழுதுவதோடு கூடவே வரும் occupational hazard அதை நான் கிஞ்சித்தும் கனம் பண்ணுவதில்லை. ஆனால் இப்படிபட்ட கேவலமான மனிதனோடு எனக்கு அழுக்காறு என கேவலப்படுத்துவது ஓவர் 🤣. அண்டைக்கு 100 லைக்ஸ் யூடியூபரோடு அழுக்காறு எண்டீர்கள். இப்போ இது🤣
  16. இதைதான் எந்த தமிழ் நாட்டு கட்சியும் செய்யாது என மேலே நிழலிக்கு எழுதினேன். சீமான் தமிழ் நாட்டு அரசை குறைகூறுவதும் இப்படி செய்யவில்லை என்றல்ல. மாறாக மீனவர்களை காப்பாற்றாமல்விடுகிறார்கள் என்றே. முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் இந்தியர்கள். நீங்கள் நினைப்பது போல் அங்கே எவரும் இதில் நியாயத்தை பார்ப்பதில்லை. எமது இந்திய மீனவர் மீன்பிடிப்பதை இலங்கை தடுக்கிறது. இந்தியா தட்டி கேட்கவேண்டும் என்பதே அங்கே மக்கள், அரசியல்வாதிகள் அனைவரினும் நிலைப்பாடு. அதிலேயே ஏன் சீமானினை உள்ளே கொண்டுவந்தேன் என்ற விளக்கமும் இருக்கும் போது அது நோயின் அறிகுறி அல்லவே அண்ணை🤣.
  17. நீங்கள் கேட்டது இதற்குள் ஏன் சீமான் என. அதற்கான விளக்கம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது அண்ணை.
  18. சீமான் போராடுவார்…. ஆனால் மத்திய அரசை பத்து வரி விமர்சித்து விட்டு, மாநில அரசை பெளந்து கட்டுவார். இது 100% மத்திய அரசு எல்லைக்குட்பட்ட விடயம். இதில் மாநில அரசை விமர்சிப்பது பம்மாத்து அரசியல்.
  19. ஏன் என்றால் முழுக்க முழுக்க மத்திய அரசு சம்பந்தபட்ட விடயத்தில் மாநில முதல்வர்தான் பிழை விட்டார் என்பது போல் அண்ணன் வாயை வாடகைக்கு விட்டதால். ஆதாரம் கீழே 👇 அடங்காமல் அத்துமீறும் இலங்கை.. கடிதம் மட்டுமே எழுதும் முதல்வர்! விடிவு காலம் எப்போது? சீமான் நறுக்! Rajkumar RUpdated: Monday, March 10, 2025, 18:51 [IST] சென்னை: இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும், பறித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், கடமைக்கு கடிதம் மட்டுமே எழுதுவதைக் கைவிட்டு, இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். Also Read வழக்கம் போலத் திராவிட மாடல் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், இந்திய ஒன்றிய அரசிற்கு கடிதம் மட்டுமே எழுதி தம்முடைய கடமையை முடித்துக்கொண்டது வன்மையான கண்டனத்துக்குரியது. தஞ்சையில் 35 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் | Oneindia Tamil திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு 74 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு 143 மீனவர்களும், 2022 ஆம் ஆண்டு 229 மீனவர்களும், 2023 ஆம் ஆண்டு 220 மீனவர்களும், 2024 ஆம் ஆண்டு 528 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். நடப்பு 2025 ஆம் ஆண்டில், தற்போது வரை 9 முறை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை மட்டும் 75 ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1250க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது, மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும். நாட்டை ஆளும் ஆட்சியாளர் பெருமக்கள் தற்போது இலங்கை சிறையில் வாடும் 107 மீனவர்களையும், பிடித்து வைக்கப்பட்டுள்ள 227 படகுகளையும் எப்போது மீட்கப்போகிறீர்கள்? இன்னும் எத்தனை காலத்திற்கு மீனவர்கள் இப்படித் துயரக்கடலில் தத்தளிக்கச் செய்யப் போகிறீர்கள்? மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிலைத்த தீர்வு காணப்போவது எப்போது? தமிழ்நாட்டு மீனவர்கள் இந்த நாட்டின் குடிமக்களா இல்லையா? இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசிற்கு குஜராத் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் வரும் பரிவும், பற்றும், ஆத்திரமும், அக்கறையும் அணுவளவாவது தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும்போது வராதது ஏன்? Recommended For You அகண்ட பாரதம் பேசும் பாஜக, காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சொந்தமான கட்சத்தீவை மீட்க எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வைத்துள்ள திமுக கூட்டணி, நாடாளுமன்றத்திற்கு உள்ளே போராடாமல் வெளியே வந்து குரல் எழுப்புவதால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு விளைந்த நன்மை என்ன? நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பிற்காக பதறி துடித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிய திமுக அரசு, கட்சத்தீவை மீட்கவும், தமிழ்நாட்டு மீனவர்கள் நலனைப் பாதுகாக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் ஒருமுறை கூட அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டாதது ஏன்? தமிழ்நாட்டு மீனவர் நலனைப் பாதுகாக்கவும், இலங்கை இனவெறி கடற்படையால் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் பேரவலத்துக்கு கட்சத்தீவை மீட்டு நிலைத்த தீர்வை காணவும் இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி வருகின்ற பங்குனி 8 ஆம் நாள் (22.03.2025) அன்று இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் - தங்கச்சி மடத்தில் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், கடமைக்கு கடிதம் மட்டுமே எழுதுவதைக் கைவிட்டு, இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, தற்போது இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும், பறித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவை மீட்கும் வழக்கை விரைவுபடுத்தி, தமிழ்நாட்டு மீனவர் சிக்கலுக்கு நிலையான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/seeman-demands-immediate-action-to-rescue-tamil-fishermen-jailed-in-sri-lanka-686515.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards திருத்தம்: அண்ணனும் ஒரே ஒரு போராட்டம் தங்கச்சி மடத்தில் செய்ய போகிறாராம்.
  20. இது எம் தரப்பு நியாயம் மட்டும் அல்ல இதுதான் நடுநிலை நியாயமும் கூட. ஆனால் விஜையின் பெயர்தான் ஜோசேப். அவரே யேசுநாதரின் தகப்பன் அல்ல. விஜை ஒரு சாம்ன்ய அரசியல்வாதி. சாமன்ய அரசியல்வாதி அப்படித்தான், தன் வாக்காளர் நலன் பற்றியே சிந்திப்பான். நியாயத்தை விட நடப்பதை கதைப்பதுதான் சமான்ய அரசியல், இதைத்தான் பிரெஞ்சுகாரார் real politik என்பார்கள். இது எல்லோரும் எல்லா நாட்டிலும் செய்வதுதான். ஆனால் - அதிகாரம் இல்லாத தமிழக அரசை விமர்சித்து, நெய்தல் படை அமைப்பேன் என விஜை பம்மாத்து அரசியல் செய்யவில்லை. அரசியல் தற்கொலை செய்யும் துணிச்சல் அற்றவர்கள். விளக்கம் மேலே.
  21. அது சென்றிக்கு நிக்காமல் ஊரை விட்டு கிளம்பிய ஆட்கள் புரிந்து கொள்ள முடியாத ரகசியம்🤣
  22. சீமானை போல் - அதிகாரம் இல்லாத தமிழக அரசின் மீது வீண்பழியை போட்டு விட்டு, திரள்நிதியில் கவனம் செலுத்தாமல்…. விஜை இந்த விடயத்தில் ஒரு தமிழ் நாட்டு கட்சி செய்ய கூடிய அதிகபட்ச நடவடிக்கை -மக்களை கூட்டி போராடுவது - அதை செய்ய விழைகிறார். அதிமுக, பிஜேபி, சீமான் இப்படி போராடினால் அது மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக அமையும் என்பதால் செய்ய மாட்டார்கள்.
  23. தேர்தல் நேரம் நானும், ரசோ அண்ணாவும் எழுதினோம்…எடப்பாடி செய்த மிக பெரிய பிழை - சீமான் போட்டியிட அதிமுக போட்டியிடாமல் போனது. இப்போ அதைவைத்தே ஏதோ அதிமுகவை விட சீமான் பெரிய ஆள் என்ற விம்பத்தை உருவாக்க்கி, செங்கோட்டையன், தினகரன், வேலுமணி, சசி, சீமான் என பலராலும் எடப்பாடியை அடிக்கிறார்கள். அதிமுக+பிஜேபி+நாதக+ஏனையோர் அல்லது அதிமுக+பிஜேபி+ஏனையோர் (சீமான் வாக்கு பிரிப்பு -வழமையான பார்முலா) அல்லது அதிமுக உடைப்பு +பிஜேபி+சீமான்+ஏனையோர் (எடப்பாடி-அதிமுக தனித்து) இவ்வாறே பிஜேபி காய் நகர்த்த போகிறது. இப்போதும் காலம் கெட்டுவிடவில்லை. ஜெ செய்தது போல் செங்கோட்டையன், வேலுமணி அனைவரையும் கட்டம் கட்டி, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கி விட்டு, அதிமுக தலைமையில் விஜையுடன் கூட்டணி என போவதே, எடப்பாடிக்கும், அதிமுகவுக்கும், தமிழ் நாட்டுக்கும் நல்லது. பிஜேபி உள்ள கூட்டணி வெற்றிக்கு கிட்ட வந்தாலே - ஆளுனரை கொண்டு ஆட்சியை பிடிப்பார்கள். அதன் பின் மும்மொழி கொள்கை, ஹைடிரோகாபன், இன்னும் சகலதையும் கொண்டு வருவார்கள்.
  24. எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லை.. சீமான்தான்.. பாஜக மாஸ்டர்பிளான்.. ரவீந்திர துரைசாமி பளீர் Shyamsundar IUpdated: Monday, March 10, 2025, 15:00 [IST] சென்னை: பாஜக அதிமுக கூட்டணி வைத்தால்.. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருக்க மாட்டார். மோடி அப்படி யோசிக்க மாட்டார். மோடி என்ன முட்டாளா? சீமானிடம் பலவீனம் ஆனவர் எடப்பாடி. அவரை பற்றி உளவுத்துறைக்கு தெரியாதா? மோடிக்கு இது தெரியாதா? அப்படி இருக்க எடப்பாடி எப்படி முதல்வர் வேட்பாளர் ஆவார்?, என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். மீண்டும் சேரும் அதிமுக - பாஜக பாஜக, அதிமுக இரண்டும் மாறி மாறி கூட்டணிக்கு தூதுவிட தொடங்கி உள்ளன. திமுகதான் எதிரி; வேற எந்த கட்சியுமே எதிரி இல்லை; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவே கூடாது என அதிரடியாக யோசிக்க முடியாத அளவிற்கு பல்டி அடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்னொரு பக்கம் அண்ணா திமுக எங்களுக்கு எதிரியே இல்லை..திமுகதான் எங்கள் ஒரே எதிரி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார். இதனால் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அண்ணா திமுக- பாஜக கூட்டணி அமையும் என்றே கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேச்சு இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அதிமுக பாஜக கூட்டணி வர சான்ஸ் இல்லை. அப்படி வந்தாலும் ஒரே உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்தால் எடப்பாடிக்கு சிக்கல். இன்னும் 1 வருடம் இருக்கிறது. தினகரன் பாஜக கூட்டணிக்கு வருவார். அது எடப்பாடிக்கு சிக்கலாக மாறும். அண்ணாமலை கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். அண்ணாமலை பெரிய ஆள் ஆகிவிட்டார். டெல்லி சப்போர்ட் உள்ளது. அதனால் அவரை பகைக்க எடப்பாடி விரும்பவில்லை. இதனால் எடப்பாடி பாஜக கூட்டணிக்கு இறங்கி வந்துள்ளார். அண்ணாமலைக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். அண்ணாமலையின் ஜாதி பின்புலம் இதற்கு முக்கியம் காரணம். அண்ணாமலை கவுன்சிலர் கூட இல்லை என்றாலும்.. அவருக்கு ஜாதி பலம் பெரிதாக உள்ளது . அதனால்தான் அதிமுக தலைகள்.. எடப்பாடிக்கு பதிலாக அண்ணாமலையை திருமண விழாவிற்கு அழைக்கிறார்கள். அண்ணாமலை கவுன்சிலர் இல்லையே. ஏன் அழைக்கிறார்கள். இதுதான் காரணம். அவருக்கு பலம் இருக்கிறது. அவர் பெரிய ஆள் ஆகிவிட்டார். எடப்பாடி பலவீனம் ஆகிவிட்டார். சீமானிடம் ஏற்கனவே எடப்பாடி பலவீனமாகிவிட்டார். பாஜக அதிமுக கூட்டணி வைத்தால்.. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருக்க மாட்டார். மோடி அப்படி யோசிக்க மாட்டார். மோடி என்ன முட்டாளா? சீமானிடம் பலவீனம் ஆனவர் எடப்பாடி. அவரை பற்றி உளவுத்துறைக்கு தெரியாதா? மோடிக்கு இது தெரியாதா? அப்படி இருக்க எடப்பாடி எப்படி முதல்வர் வேட்பாளர் ஆவார்? செங்கோட்டையன் முதல்வர் வேட்பாளர் ஆகலாம்.. சீமான் கூட முதல்வர் வேட்பாளர் ஆகலாம்.. வேலுமணி ஆகலாம்.. அண்ணாமலை ஆகலாம். சீமான் பெரிய ஆள் ஆகிவிட்டார். அவரை அதிமுக ஏற்றுக்கொள்ளுமோ கொள்வதோ.. டெல்லி அவரை கருத்தில் கொள்ளலாம். மோடி அவரை டிக் அடிக்கலாம். இன்னும் 1 வருடம் இருக்கிறது. அதற்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்று பார்க்கலாம். சீமான் வளர்ந்து நிற்கிறார். அதனால் அவரை ஊர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கில் சீமான் வளர்ந்து இருக்கிறார். https://tamil.oneindia.com/news/chennai/edappadi-palanisamy-will-not-be-the-cm-candidate-of-aiadmk-nda-says-raveendran-duraisamy-686433.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி யாரிந்த ரவீந்திரன் துரைசாமி? ஊடகவியளாலர் என்ற போர்வையில் உலாவும் ஒரு பிஜேபி ஏஜெண்ட். அதை வெளிப்படையாக சொல்பவர். அண்மைகாலமாக சீமான் ஆதரவாளர். ரஜனி-சீமான் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்.
  25. எல்லாம் ஒண்டரை நாளை மழை தின்னும் என்ற இங்கிலாந்தின் மீதான நம்பிக்கைதான் 🤣. நன்றி. #பொதுவாக என் மனசு தங்கம்…ஒரு போட்டியின்னு வந்துபுட்டா சிங்கம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.