Everything posted by goshan_che
-
தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி லண்டனில் போராட்டம்!
1. நல்ல விடயம். 2. ஆனால் நடந்த முடிந்த பின் போராட்டம் பற்றி தெரிய வருவதால் என்ன நன்மை? 3. காசை வாங்கி கொண்டு, கொடியோடு போட்டோ எடுத்து, ஆதரவு கடிதமும் வழங்கி, அகதி விண்ணப்ப பாவங்களிடம் பணம் பார்க்கும் வியாபாரமாக இல்லாமல் நல்ல நோக்கில் நடந்த போராட்டம் என நம்புவோம். 4. ஏன் கிழமை நாளில் வைக்கிறார்கள்? 5. எது எப்படியோ எமக்கு குழிபறிக்கும் “பிறப்பும், வளர்ப்பும் நேர்த்தியில்லாத” இலண்டன் நாம்தற்குறிகளை விட இவர்கள் ஆயிரம் மடங்கு திறம்.
-
பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
அண்மையில் @பகிடி சீமானை ஆதரிக்கும் புலம் பெயர் நாம்தற்குறிகள் யார் என்பதை… பெற்றதாயை தூசணத்தால் பேசும் தற்குறிகள்…என ஆரம்பித்து ஒரு நீண்ட லிஸ்ட் போட்டிருப்பார். தேடி தேடி பார்த்தேன் காணவில்லை. இங்கே அதை இணைப்பது சாலப்பொருத்தமாக இருக்கும். எவருக்கும் முடிந்தால் இணைத்து விடவும்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
இதற்கு கொஞ்சம் விரிவாக விளக்கம் எழுத வேண்டும். யாழ் அகவை பக்கத்தில் ஒரு கதையாகவே எழுதுகிறேன். Inspiration ற்கு நன்றி.
-
பெரியார் மண்ணில் பெருவெற்றி… ஈரோடு கிழக்கு வெற்றியை வர்ணித்த ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு கொஞ்சம் முதிர்வான தம்பிகளை கொஞ்சம் அல்ல நல்லாகவே ஏமாத்தி போட்டுது. அமித் ஷா அனுகிரகத்தில் சீமான் தனியாக திமுகவை எதிர்கிறார்…லம்பாக அள்ளுவார் என போட்ட கணக்கெல்லாம் பொய்கதையாய் போய்விட்டது. புண்பட்ட மனதை புகையை விட்டு ஆத்துவதுபோல்….கொஞ்சம் வீடியோவை ஏத்தி ஆறுதல் அடைவது மட்டும்தான் ஒரே வழி.
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
அன்றைக்கு சேர் மக்களை சந்தித்து குறை கேட்கும் பார்வை நேரம். அதனால் பார்ஆளுமன்றம் போகவில்லை.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
1. விளக்கம் பத்தாது. 2. முத்துகுமாரை கொலை செய்து சீமானை கண்டிரோலில் எடுத்தது றோ/பிஜேபி அல்ல. 3. அப்போ இதில் முக்கிய பங்காற்றியவர் -ஜாபர் சேட். திமுக எடுபிடி. 4. ரோவின் பிடியில் இருக்கும் சீமான், மத்திய அரசில் யார் ரோவை கண்டிரோல் பண்ணுகிறார்களோ அவர்கள் பிடியில். 5. பிஜேபி ஆட்சிக்கு வந்தபின் சீமான் பிஜேபியால் திராவிட கொள்கையை எதிர்க்க பாவிக்கபடுகிறார். சீமான் மட்டும் அல்ல. இதே நோக்கில் பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்த பின் தமிழ் நாட்டில் இறக்கப்பட்டவர்கள்தான், மாரிதாஸ், கிசோர், பாண்டே, ஶ்ரீதர் வேம்பு, செளதாமினி போன்றோர். பிஜேபி ஆட்சிக்கு வரமுன் இவர்கள் எவரும் (சீமானை தவிர) அரசியலில் இல்லை. எப்படி இவர்களை பாவித்து திராவிட கொள்கையை, பெரியாரை தமிழ் நாட்டில் பிஜேபி உடைக்க முயல்கிறதோ…. அதே போலத்தான் ஏலவே ரோவின் பிடியில் இருந்த சீமானையும் பிஜேபி ஆட்டுவிக்கிறது. இது புதுக்கதை அல்ல. இதை பற்றி யாழில் பல வருடங்களாகவே எழுதபட்டுள்ளது. 2016 இல் யன்னலால் பாய்ந்து பம்பாய்க்கு ஓடியவர், இப்போ திரும்பி வந்து பார்க்கும் போது அவருக்கு எல்லாம் புதிதாக தெரிகிறது 🤣.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
1. ம்ம்ம்….தட்டை உலகம் என நம்புபவர்கள்தான் 2016 இல் நாம் தமிழர் சீட் எடுக்கும் என்று நம்பி வாய்சவாடல் விட்டு விட்டு, தேர்தல் முடிவின் பின் அப்படியே யன்னல் பாய்ந்து ஓடியவர். இப்போ தமிழ் படத்தில் பம்பாய்க்கு ஓடிய சிறுவன் திரும்பி வருவது போல் வந்து….. 2. இன்னொரு தட்டை உலக கதை சொல்கிறார். அது என்ன? 2026 இல் நாம் தமிழர் தனித்து நின்று சீட் எடுக்குமாம். இப்படி ஒரு hallucination இல் தான் வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு, நா த க டெபாசிட் காலியாகும் என கணிப்பவர்களை பார்த்தால் தட்டையாகத்தான் தெரியும் 🤣. 1. அண்ணன் விஜை கூட்டணிக்கு நாக்கை தொங்கப்போட்டு காத்திருந்தார். விஜை நோஸ் கட் பண்ணி விட்டார். 2. விஜி அண்ணி இப்போதும்தான் வீடியோ விடுகிறார். 3. சலிப்பு வரும்தான். 15 வருடமா டெபோசிட் காலி பண்ணுவதே வழமை என்றால் எப்பேற்பட்ட ஜோம்பிக்கும் சலிப்பு வரும்தானே.
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
ஏற்கனவே செவ்வியன், வைரவன், காத்து கறுப்பன், சுடலைமாடசாமி, முத்தவெளி முனி என பலபெயர்களில் வருவது நான்தான் என @Nathamuni சொல்லுவார். அவர் களத்தில் இல்லாத நேரம் அவரின் ஜால்ரா ஒண்டு, நாதமுனி என்ற பேரில வருவதே நான்தான் எண்டு ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். இப்ப புலவர் கோணான் என்கிறார் 🤣. பத்தொட்டு பதினொன்று அத்தோடு இதுவொன்று.
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
தேங்காய் தட்டுப்பாடு - குரங்குகள்தான் காரணம். மின்சாரம் தடை - குரங்குகள்தான் காரணம். உது அனுமார் காலத்து நெருப்பு கண்டியளோ…🤣 #பின்னரிட்ட தீ தென்னிலங்கையிலே
-
பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
இது மகிந்தவை மாட்டி விட்டு…. கேஸ் ஆக்கி… அதன் மூலம் நாமல் அனுதாப வாக்கு தேடும் நாடகமாய் இருக்குமோ? சாகடித்து விட்டு அதை இப்படி மாற்றி பயன்படுத்த ஒரு சைக்கோவால் மட்டும்தான் முடியும். கிரொஸ் பயரிங்ல கூல் டிரிங்ஸ், பிஸ்கெட் எல்லாமுமா கொடுபார்கள். படம் எடுப்பார்கள்களா.
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
மக்கள் வெண்நிற ஆடை மூர்த்தி, வி கே ராமசாமி போன்ற ஆபாச நகைசுவை நடிகர்களை ரசிப்பார்கள். ஆனால் வாக்கு எம் ஜி ஆர், விஜயகாந்த் போல நம்பிக்கைக்குரியவருகே போடுவார்கள். சீமானின் மொழியாடலின் ஈர்ப்பு எத்தகையது என்பதை கட்டுரையாளருக்கு ஈரோடு கிழக்கு தெளிவுபடுத்தி இருக்கும் என நம்புகிறேன்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
இவர்களைதான் @பகிடி முள்ளம்பண்டி தலையனுகள் என்றார்🤣. ஆனா எல்லாருக்கு மேல வெளிச்சிட்டு, தாடியில்தான் உரோமம் இருக்குது….. முழுவதும் கஞ்சா கூட்டம். எத்தனை சிங்கள இனபடுகொலையாளிகள் தமிழர் வாழும் பிரதேசத்திலே வந்து நடந்து திரிகிறார்கள். இந்த பேடிகளில் ஒருவர் கூட அவர்களை ஒரு வார்த்தை கேட்பாரா? யாரோ ஒரு பெண்ணுடனும், வயசான இருவரிடமும் வீரத்தை காட்டும் பேடிகள். இந்திய தமிழில் சொன்னால் - பொ***ட பசங்க 🤣.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
இவ்வளவு வாசித்தோம் அதை வாசிக்காமலா…யாழில் அதை நக்கல் அடித்து அவர் சிரிப்பு குறி கூட போட்டுள்ளார். ஆனால் எப்போதும் அவர் தமிழ் தேசிய, திராவிட கொள்கைகள் எதிரிகள் என்றோ, புலிகளுக்கும் திராவிட இயக்க கொள்கைகள், ஆட்களுக்கும் இடையான தொடர்பை மறுதலித்தோ எழுதவில்லை. ஆகவே இது பற்றிய அவர் இன்றைய கருத்தில் ஒரு வழுவும் இல்லை. இதெல்லாம் பெருமை இல்லை…கடமை😎
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
டூ லேட் ப்ரோ…டு லேட்… இந்த அறிவுரையை சீமான் தலைவரை அங்கே இழுத்து போன போது…. அல்லது பிரபாகரன் vs கருணாநிதி என ஆரம்பித்த போது…. குறைந்த பட்சம் பிரபாகரன் vs பெரியார் என இறங்கிய போதாவது சீமானை நிறுத்த சொல்லி சொல்லி இருக்க வேண்டும். (நீங்கள் இதை போன் போட்டு சீமானிடம் சொல்லி இருந்தால் - போனை வைடா புதிய மகனே என்றுதான் அவர் சொல்லி இருப்பார்). இந்த ஒப்பீட்டை செய்வது நான் அல்ல. தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவு சக்திகள். சீமானின் நச்சு கருத்தை ஒழிக்க அவர்கள் பெரியாரும் பிரபாகரனும் சமாந்திர சக்திகளே என்பதை மக்களிடம் எடுத்து போகிறார்கள். சபேசன் பேட்டி பார்திருப்பீர்கள். இது உண்மை. ஆகவே இதை நான் வரவேற்கிறேன். ஓம்…அதனால்தான் ரோவினால் இயக்கப்படும் சீமானுக்கு இத்தனை எதிர்ப்பு காட்ட வேண்டி உள்ளது. எனில் முட்டுகொடுக்காமல் இருக்கலாம். நான் உங்கள் நிலைப்பாடு என்றால் அப்படித்தான் செய்வேன். ஓம்… ஒரு உத்தரவாதமும் தருகிறேன். 2026 இல் தனித்து நின்று சீமான் 16% அல்லது கூட எடுப்பின், இன்றை உங்கள் கணிப்பு சரி என்பதை அப்போ ஏற்பேன்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
ம்ம்…இதைத்தான் நீங்கள் விளங்காதது போல் நடிக்கவில்லை என மேலே குறிப்பிட்டேன் அண்ணை. இது என் கருத்தல்ல. அடிப்படை தேர்தல்-கணிதம். Electoral arithmetic. சீமான் 14, 000 மேலதிக வாக்குகளை ஒரு நான்முனை போட்டியில் எடுத்திருப்பின், திமுக, அதிமுகவுடன் மும்முனை போட்டியில் எடுத்திருப்பின் கூட அதை வளர்ச்சி என கொள்ளலாம். இது இரு முனை போட்டி. இதில் மேலதிகமாக சீமான் எடுத்த வாக்குகள் “ கடவுளே திமுக வேட்பாளர்” எனிலும் எதிர்த்து போடும் ஆட்களின் வாக்குகள் மட்டும்தான். இந்த முறை வேறு தெரிவு இல்லாததால் இந்த பச்சை குத்திய திமுக எதிர் வாக்காளர் நா த கவுக்கு போட்டுள்ளனர். இதை தவிர இங்கே வாக்கு வளர்ச்சி ஏதும் இல்லை. இந்த இரு முனை போட்டியில் நா த க வாக்கு வளர்ந்துள்ளது என கருத அவர் 50,000 க்கு கிட்ட போயிருக்க வேண்டும்.
- IMG_1951.jpeg
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
சீமான் நா த க மேல் ஆர்வம் இருந்தால் அப்படித்தான் செய்திருப்பார். ஆனால் அவர் செய்யுமாறு பணிக்கப்பட்டது ஒரு experiment. சகல எதிர்கட்சிகளையும் விலக்குவோம், சீமானை கடுமையாக பெரியாரை தாக்கி அரசியல் செய்ய வாக்கு கேட்க சொல்வோம். அவர் 50,000 தாண்டினால் அதுதான் 2026 இல் பிஜேபியிம் பார்முலா. ஆனால் சீமான் 24,000 ஓடு முக்கியதால், நோட்டா மிக பெரிய வளர்ச்சி கண்டது, experiment விரும்பிய முடிவை தரவில்லை என்பதை காட்டுகிறது. இதனால்தான் நேற்று அண்ணாமலையின் சுருதி மாறியது. ஈரோடு கிழக்கில், அதீத பெரியார் எதிர்ப்பு வேலை செய்யுமா இல்லையா என்பதை சீமானை சோதனை எலியாக்கி டெஸ்ட் பண்ணியுள்ளது பிஜேபி. ——— சீமானின் விசத்தை முறியடிக்கும் எளிய விசமருந்துகள்.👇 நன்றி உறவுகளே ❤️❤️❤️😘
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
டிஸ்கி மீண்டும் ஒரு தடவை சொல்கிறேன். தலைவரை இகழ்ந்து ஈழத்திலும், பெரியாரை இகழ்ந்து தமிழ் நாட்டிலும் அரசியல் செய்ய முடியாது. சீமான் பெரியாரை மூர்கமாக எதிர்த்த்தது அவரது அரசியல் வாழ்க்கையின் முடிவை விரைவாக்கியுள்ளது. இது எனக்கு மிகவும் சந்தோசமான விடயம். சீமான் மேலும் மேலும் பெரியாரை தூற்றி - காணாமலே போக வேண்டும் என்பதே என் அவா. ஆனால் இதில் தலைவரை இழுத்து எம்மோடு தமிழக மக்களை சிண்டு முடியும் ஆபத்து கனமானது. இதை திருமுருகன் காந்தி, குடந்தை அரசன் போன்ற ஈழ ஆதரவு சக்திகள் சீமானை எதிர்ப்பது ஓரளவுக்கு சமம் செய்கிறது. இப்படி சீமானை வச்சு செய்யும் ஈழ ஆதரவு சக்கிகளுக்கு ஈழதமிழர் சார்பாக நன்றி. சீமான் இந்த தேர்தலில் பெரியார் பற்றி கதைக்காமல்…. சொத்து வரி, வாழ்க்கை செலவு கூடல், மின் தடை, ஊழல், அண்ணா பல்கலை விவகாரம், இத்யாதிகளை சுட்டி வாக்கு கேட்டிருந்தால் 50,000 நெருங்கி இருப்பார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
திருமுருகன் காந்தியின் கீச்சு 👇 ———————- அதிமுக, பாமக, அமமுக தேமுதிக, பாஜக ஆகியவை போட்டியிடாத போதிலும் கட்டுத்தொகையை சீமானால் பெறமுடியாமல் போனதற்கும், குறைவான வாக்குகளை பெறுவதற்கும் காரணியாக களத்தில் இயங்கிய அனைத்து பெரியாரிய தோழர்களுக்கும், பெரியரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்களுக்கும் வாழ்த்துகள். திமுகவின் எதிர்கட்சியாக, எதிரியாக தன்னை காட்டவிரும்பிய சீமானின் அரசியல் தோல்வியில் முடிந்துள்ளது. எதிர்கட்சியாக இயங்க வேண்டுமெனில் மக்களை அணிதிரட்டுவதும், அரசியல்படுத்தி அரசை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவம் முக்கியமானது. ஊடக சந்திப்பில் மட்டுமே திமுக அரசை விமர்சிப்பதாக நாடகமாடி வந்தவர் சீமான் என்பதை மே17 தொடர்ந்து கூறியுள்ளது. பல முக்கிய அரசியல் கோரிக்கைகளை சீமான் முன்னெடுக்காமல் வாய்சவடாலோடு நிறுத்திக்கொண்டாரென அவரது சமரச அரசியலை அம்பலப்படுத்தியது மே17 இயக்கம். ஈரோடு தேர்தலில் அதிமுக போட்டியிடாத நிலையில், எதிர்கட்சியாக தம்மால் உருவாக முடியாததால், பாஜகவோடு சமரசமாம் செய்து,அதன் வாக்குகளை பெறமுனைந்தார். இதற்காகவே பெரியாரை இழிவு செய்யதார். பாஜக வாக்குகள், இந்துத்துவ மனநிலை கொண்ட சாதிய வாக்குகள், அதிமுகவின் உதிரி வாக்குகளை பெற்றுவிடலாம் என்ற அவரது திட்டம் தோற்றது. ஆனால், பெரியாரின் மீதான அவதூறும், பெரியாரிய தோழர்களின் அயராத களப்பணியும் அவரை வீழ்த்தியது. 22 சுயேட்சை வேட்பாளர்கள் மேடையை பெரியாரிய தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள். தனது ஆதரவு சக்திகளின் மூலம் 50,000 வாக்குகளை கடக்கலாம் எனும் சீமானது கனவை பெரியாரிய எதிர்ப்பு தகர்த்தது. கடந்த தேர்தலை விட அதிக வாக்குகளை வாங்கியுள்ளோம் என சீமான் தனது தம்பிகளுக்கு ஆறுதல் அளிக்கலாம், அல்லது சுயேட்சைகள் வாக்கு வாங்கவில்லையென எள்ளல் செய்யலாம். சுயேட்சைகள் தமக்கான இலக்கான சீமானை வீழ்த்துவதில் வெற்றிபெற்றுள்ளனர். அதிக வாக்குகள் பெறும் சீமானின் வாய்ப்பை தகர்த்தனர். குறைந்தபட்சமாக 20,000-30,000 வாக்குகளை இழந்துள்ளார். அதிமுக, தேமுதிக, பாமக, அமமுக, எஸ்.டி.பி.ஐ என பல்லாயிரம் திமுக எதிர்ப்பு வாக்குகளில் சிறுவிகிதம் மட்டுமே சீமானுக்கு கிடைத்துள்ளது. திமுக எதிர்ப்பாளர்கள், திமுக மீதான அதிருப்தி கொண்டவர்கள், திமுகவின் எதிர்கட்சியாளர்கள் என எவரும் சீமானை திமுகவின் எதிர்க்கட்சியாக கருதவில்லை. அதிமுக-பாஜக பிரமுகர்கள் சிலரை தோழர்கள் பிரச்சாரத்தில் சந்தித்தபோது தெரிவித்த எதிர்பார்ப்பில், ஊடகவியலாளர்கள் தெரிவித்த இலக்கில் பாதியளவு வாக்குகளை கூட அவர் பெறவில்லை. சொத்துவரி உயர்வு, மின்சார கட்டணம் போன்றவற்றினால் திமுகவின் மீதான எதிர்ப்பு மனநிலை மக்களிடம் வெளிப்பட்டது. இவை ஏன் சீமானுக்கான வாக்குகளாக மாறவில்லை? அவருக்கு ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை? சீமான் மீதான அவநம்பிக்கை, அவரது நிலைப்பாடற்ற அரசியல், அநாகரீகமான அரசியல் பேச்சுகள், அவதூறுகள் மக்களிடம் கசப்புணர்வை உண்டாக்கியிருந்தன. இதில் உச்சபட்சமாக பெரியார் மீதான சீமானின் அவதூறுகள் மக்களை அவருக்கு எதிராக மாற்றியது. பிற கட்சிகளும் போட்டியிட்டிருந்தால் சீமானின் வாக்கு விகிதம் பலமடங்கு குறைந்திருக்கும். பெரியாரின் ஆதரவாளர்களாக 22பேர் சுயேட்சையாக பரப்புரை மேற்கொண்டவர்கள் மொத்தமாக 6000-7000 வாக்குகளை பெற்றுள்ளனர். எவரும் தமக்கான வாக்கு சேகரிப்பை செய்யவில்லை. சம்பிரதாயமாக சின்னங்களை தெரிவித்து, சீமானின் அவதூறுகளை அம்பலப்படுத்தினார்கள். சீமான் நடத்திய பெரியார் எதிர்ப்பு எடுபடவில்லை என்பதை அண்ணாமலையின் பேச்சே உறுதிசெய்துள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டணி தனது எதிர்ப்பு போராட்டத்தை ஈரோட்டிற்கும் கொண்டு சென்றது. சீமானை ஈரோடு மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் களம் இறங்கியது. மக்களிடத்தில் சீமானின் பொய்களை அம்பலப்படுத்தி தோற்கடித்துள்ளனர். இந்த வெற்றிக்கு காரணாமாக விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், அவரது கட்சி தோழமைகள், தோழர் கே.எம்.சரீப் ஆகிய இருவருமே சாத்தியப்படுத்தியவர்கள். பெரியாரிய தலைவர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள், தோழர் சுந்தரவள்ளி, தோழர் பாண்டியன் மற்றும் எண்ணற்ற பெரியாரிய தோழமைகள் களத்தில் இயங்கி அம்பலப்படுத்தினர். வன்முறைகளை தபெ.திக தோழமைகள் எதிர்கொண்டனர். இப்பரப்புரை நிகழவில்லையெனில் சீமான் பெரியாரை இழிவு செய்தது பெரும்பகுதி மக்களுக்கு சென்று சேராமலேயே போயிருக்கும். இவ்வகையில் பெரியார் மீதான சீமானின் அவதூறு நாம்தமிழரின் அரசியலுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. பெரியாரை இழிவு செய்யவேண்டும் எனும் நோக்கமுடைய பிறருக்கும் இது பாடமாக அமையும். பாஜக எனும் இனதுரோகியோடு கைகோர்க்கும் எவரையும் தமிழர்கள் நிராகரிப்பார்கள் என்பதை தமிழர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள். ஈரோடு மக்களுக்கு எமது மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
பிக் ப்ரோ, நான் உங்களை விளங்கி கொண்டே நடிக்கிறீர்கள் என எண்ணியது தவறோ என யோசிக்கவைக்கிறீர்கள்.
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
நீண்ட கால நோக்கில் பார்த்தால் - தமிழ் கிறிஸ்தவம், தமிழ்-இந்துவை விட தொன்மையானது தமிழ்-பெளத்தம். இந்துவோ, பெளத்தமோ, கிறிஸ்தவமோ எம் அடையாளங்கள் இல்லை. தமிழ் மொழியும், எம் மொழி சார்-இனப் பண்பாடுமே நாம் தொலைக்க கூடாதன. எப்படியோ விகாரை இடிக்கப்படாது. ஆகவே நாம்…. 1. அதை பெளத்த சிங்கள விகாரையாக இருக்க சம்மதிக்கிறோமா 2. அல்லது இதில் உள்ளூர் மக்கள் பங்கு வேணும், உள்ளூர் மொழியில் பிரார்தனை வேணும் என கூறி - விகாரையை தமிழ் படுத்த முயல்வோமா? இதை சிங்கள் ஒத்துகொள்ளுமா தெரியாது ஆனால் தெற்கில் இது நியாயமான கோரிக்கை போல பலருக்கு தெரியலாம். மிச்ச ஆறு நாளும் லுலு லு லா…🤣 மாற்று கருத்தில்லை. இவர்கள் நிச்சயம் எதிர்பார்கள். ஆனால் ஈரச்சாக்கு அனுரவால் இந்த கோரிக்கையை இலகுவில் புறம்தள்ள முடியாது. எதிராளி ஈரச்சாக்கோடு வந்தால் - நாம் அதை விட ஈரமான சாக்கை எடுக்க வேண்டும்.
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
🤣 இல்லை. கொஞ்சம் பெட்டிக்கு வெளியால் போய் சிந்தித்து பார்போம் என முயன்றேன். 1. இலங்கையில் கட்டிய விகாரையை இடிப்பது என்பது நடவாத காரியம். 2. எமக்கு (நிச்சயமாக எனக்கு) மதம் ஒரு பொருட்டே அல்ல. என்னை பொறுத்தமட்டில் எனக்கு முக்கியம் இன அடையாளம், மொழி. 3. தேவ நம்பிய திஸ்ச ஒரு தமிழன், அவரின் தந்தை பெயர் மூத்த சிவன். எனவே இலங்கையின் முதல் பெளத்தன் ஒரு தமிழனே. 4. சிங்களம்=பெளத்தம் என்பது பேரினவாதத்தின் உத்தி. அதை முறியடிக்க இப்படியான இயலாகட்டங்களில், நாம் ஏன் பெளத்தம், சிங்களம் என்ற அணுகுமுறையை எடுக்க கூடாது. இதன் அர்த்தம் வடகிழக்கு எங்கும் தமிழ் பெளத்த மடலாயங்களை நிறுவ வேண்டும் என்பதல்ல. இருப்பவற்றை, இடிக்க முடியாதனவற்றை தமிழ் வழி மடாலயமாக்க வேண்டும் என்றகோரிக்கையை வைக்கலாம்.
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
இங்கே நாம் ஒரு வித்தியாசமான கோரிக்கையை முன்வைக்கலாம்… விகாரையை இடிக்க தேவையில்லை. அதை உள்ளூராட்சி சபையிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் தமிழ் மொழி பேசும் பிக்குகளை வைத்து அதை நடத்துவர்.
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
மிக நியாயமான விமர்சனம். கருத்து. ஆனால் 👇 இதுவும் உண்மை எல்லோ?
-
ரஷ்ய ஜனாதிபதியை ‘முட்டாள்’ என விமர்சித்த பாடகர் உயிரிழப்பு!
இதில் என்ன மர்மம் இருக்கிறது. ஜன்னல் கம்பிகள் வலுவில்லாது இருந்திருக்கும்…. அதில் சாயும் போது….தவறி… இது வழமையாக நடப்பதுதானே… குளிரால் பொலிசார் எட்டி பிடித்தாலும்…க்ரிப் இல்லாது கை வழுக்கி இருக்கும். எப்பவும் எல்லாவற்றையும் விகல்பமாகவே பார்த்து கொண்டு இருக்க கூடாது.