Everything posted by goshan_che
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
இந்த முறை மாத்தும் போது டெஸ்லாவில் மனம் போய், மொடல் 3 டெஸ்ட் டிரைவும் செய்து பார்த்தேன், ஆனால் வாங்கிற காசுக்கு உள்ளே ஒன்றும் இல்லை. சரியான minimalistic, அத்தோடு இன்னும் எலக்டிரிக் பெற்றோல் போல் இலகுவாக வரவில்லை. கூடவே ஒவ்வொரு வருடமும் போன் பட்டரி போல் பேட்டரி ஸ்டோரேஜ் 4% ஆல் குறையுமாம். இந்த 4 மில்லியன் இலங்கை ரூபாய் - ஐரோப்பாவில் அந்த காரின் விலை. இதை இலங்கைக்கு கொண்டு போய் வரி, வட்டி, கிஸ்தி எல்லாம் கட்டி முடிய சிம்பிளாக 10 மில்லியன் தாண்டும். இதை ஒத்த Wagon R ஒரு கோடிக்கு போகும் என்கிறது மேலே செய்தி.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ஸ்கெண்டிநேவியன், ஜேர்மன், பிரிட்டிஷ்… இந்த ஒழுங்கில்தான் என் விருப்பம். இத்தாலியன் சிலதில் மனம் போவது உண்மைதான்…ஆனால் நம்பிக்கை, உதரவாதம் இல்லை….அல்லது எமக்கு கட்டுபடியாகாது 🤣. இன்னும் காரை பற்றித்தான் கதைக்கிறன்🤣.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
விளங்கவில்லை அண்ணை. நான் சொல்வது இலட்சம் அல்ல, லாட்சம். காணி அளவிடும் அலகு. இலங்கையில் ஓடும் கன, மத்திய ரக வாகனங்கள் பலதும் இந்தியந்தான். கார்கள் ஜப்பான் ஆதிக்கம் கூட. ஆனால் அதிலும் இப்போ இந்தியன் ஹொண்டா, இந்தியன் டொயோட்டா இறங்குது. வான் - இன்றுவரை ஜப்பாந்தான்.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
பத்மினி மாரி… Fiat Padmin வேற ஏதும் நினைக்க வேண்டாம்🤣. பிகு எனகு long wheel base saloon அல்லது convertible - இலண்டன் வந்ததும் வாங்க பட்ட சத்தியங்களில் ஒன்று மோட்டார் சைக்கிள் ஓட மாட்டேன். இதுதான் அடுத்த தெரிவு. ஓம் என் மகனின் நண்பனின் தாய் ஒரு Sandreo வச்சிருக்கிறா…மிகவும் basic ஆனால் நகர்புற ஓட்டத்துக்கு நல்லாகத்தான் போகுது. Jogger Extreme கொஞ்சம் வசதியாயும், விலை குறைவாயும் தெரிகிறது. 7 சீட்கள் வேறு.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
🤣 சிரிக்க வைத்த உதாரணம். காணி அளவீடு பற்றி கேட்டால் தலை சுத்தும். 1 பரப்பு =1.2 லாட்சம் ஆ? அல்லது 1 பரப்பு = 1 லாட்சம் ஆ? பல பேரிடம் கேட்டு விட்டேன். ஆளுக்கு ஒரு கதை.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
தகவல்களுக்கு நன்றி. சமாதான காலத்தில், பத்திரிகையாளர் ஞானி ஒரு பேட்டியில் சொன்னதை என் மனதில் நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். அது இதுதான். 30 வருடங்களில், அப்பழுக்கற்ற தலைவரான பிரபாகரன் தன் மக்களுக்கு கொடுத்த நற் பெறுபேறுகளை விட, மோசமான ஊழல்வாதியான கருணாநிதி தன் மக்களுக்கு கொடுத்த நற்பெறுபேறுகள் அதிகம். திராவிட நாடு கோரிக்கை கைவிடலை, சொந்த நாட்டு விடுதலை போரில் பங்கெடாமல் ஓடி வந்த நாம் பரிகாசிப்பது ஒரு முரண்நகை என்பதற்கும் அப்பால்…. அதன் பின்னால் உள்ள சிக்கலான அரசியலையும், அந்த கைவிடலை ஏற்று கொண்ட மக்களையும் black or white பார்வையுடய நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
தகவல்களுக்கு நன்றி. BYD இங்கேயும் முழு வீச்சில் இறங்கியுள்ளார்கள். 0% உம் உண்டு. ஆனால் எனக்கு ஷேப் பிடிக்கவில்லை. JAECOO என ஒண்டு புதுசா வருது. டெஸ்ட் டிரைவ் கேட்டிருக்கிறேன்.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ரணில் காலத்தில் குருநாகலவில் VW ஒரு அசெம்பிள் பண்ணும் ஆலை உருவாக்கியே விட்டது என்றார்கள். அது அப்படியே போய்விட்டது. மிக வினோதமான வாகனசந்தை இலங்கையுடையது. 1988 ஆம் ஆண்டு டொயோட்டா டொல்பின் வான் வாங்கும் காசுக்கு இலண்டனில் 2025 புத்தம் புது Dacia Jogger 7 seater வாங்கலாம். வாகன விலைகளை இந்த சைட்டில் போய் பாருங்கள். https://riyasewana.com
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
இல்லை. இலங்கை காசு 5 மில்லியன் எண்டால் அண்ணளவாக £13,000. யூகேயில் ஒரு யாரிஸ் £23,000 க்கு மேல்தான். ஜப்பானில் கூட ஒரு யாரிஸ் கார் brand new இந்த விலைக்கு வாங்க முடியாது என நினைக்கிறேன். இந்தியாவில் இந்திய சந்தைக்கென தயாரிக்கப்படும் டொயோட்டா கிலன்சா 700,000 இந்திய ரூபாய் (£7000, 2.6 மில்லியன் இலங்கை ரூபாய்). https://www.toyotabharat.com/pricelist/
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ஒரு இலட்சம் = 100,000 Rs ஒரு கோடி = 100 இலட்சம். ஒரு மில்லியன் = 10 இலட்சம். ஒரு கோடி = 10 மில்லியன் ஒரு கோடி = 100x100,000=10,000,000 Rs ஒரு கோடி 10,000,000 Rs = 100 இலட்சம் = 10 மில்லியன். கணக்கு பிழை எண்டால் @ரசோதரன் அண்ணை திருத்துவார்🤣
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
வணக்கம் மஹாராஜா, புது உறவோ நல்வரவு வைப்பம் எண்டு பார்த்தால் 2019 இல் இருந்து யாழில் உள்ளீர்கள். ஆனால் இரெண்டு கருத்து, ஒன்று ஜேசு நாதர் பற்றி மற்றையது இது மட்டும்தான் பதிந்துள்ளீர்கள். மஹாராஜா என்பது சொந்த பெயரோ? மேலும் கருத்துக்களோடு இணைந்திருங்கள். விச செடிகளை முளையிலேயே கிள்ள வேண்டும். இல்லாவிட்டால் வளரும் நிலத்தையே நஞ்சாக்கி போடும்.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
செய்து தரலாம். ஆனால் உங்கள் target audience 90% க்குமேல் சிட்டுகுருவி அல்ல நீல திமிங்கில லேகியம் கூட பயன்படா வகுப்பினர் 🤣.
-
யாழ். சிறைச்சாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்!
நல்ல விடயம். ஆனால் ரத்ததானம் கொடுப்பவர்கள் ஏதும் தொற்று இல்லாதவர் என செக் பண்ணும் வழமை இலங்கையிலும் இருக்கும் என நினைக்கிறேன். ஒருக்கா இப்படித்தான் ரத்தம் கொடுக்க போய், கேள்வி கேட்ட போது டயபடீஸ் இருப்பதாக சொல்ல, அது தொற்றும் நோயல்ல எனிலும் எம் கொள்கைபடி உம்மிடம் எடுக்க முடியாது என திருப்பி அனுப்பிவிட்டார்கள். ரத்தம் கொடாமல் திரும்பி வரும் போது ஏனையோர் என்னை பார்த்த பார்வை இருக்கே🤣 ——— கல்யாணம் ஆகாத 90ஸ் கிட்சை கேட்டால் கன்னிகாதானம் என்கிறார்கள்🤣
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
அன்ரியோடும், தம்பியோடும் நான் எவ்வளவு தன்மையாக நட்போடு பழகுகிறேன் என்பதும், அவர்கள் கலைக்கபட கூடியவர்கள் அல்ல, கலைக்கபடவும் இல்லை என்பதும் நீங்கள் அறியாததல்ல. ஆனால் - என்னை பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கு பிரிவினையை அது எழும் சமயங்களில் எல்லாம் தலையில் ஒரு போடு போட்டே ஆக வேண்டும். அது வடக்கில் இருந்தோ கிழக்கில் இருந்தோ எழுந்தாலும். இதே சாக்கை யாழ் மையவாதிகளுக்கும் பாவித்துள்ளேன். ஆணி வேரை புடுங்கி விட்டு மரம் வளர்க்கமுடியாது. ஒற்றுமையின் பெயரில் பிரிவினைவாதத்தை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இதே போல ஒரு ஆபத்துதான் ஈழ/தமிழக தமிழர் இடையே சிண்டு முடிந்து விடுவதும்.
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
போராட்டத்தின் பின் அவர்களின் செயலற்றதன்மையால் நட்டு கழண்ட அரசு என்ற பதத்தை அவர்களுக்கு கொடுத்தவன் நானே. ஆனால் 2009 க்கு முன் உருத்திரகுமாருக்கு கணிசமான பங்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் பேச்சுவார்த்தை குழுவில் இருந்தார், TGTE வரைபை தயாரித் experts இலும் ஒருவர். கார்த்தி 2009 க்கு முன் பங்களிக்கவில்லை, ஆனால் போலிக்காவை இனம் காட்டியதில் மிக பெரிய பங்கை வகித்தார். இங்கே நீங்கள் இரெண்டு விடயத்தில் தவறு விடுகிறீர்கள். இங்கே யாரும் தாமாக பெரியார் புகழ்பாடி திரி திறப்பதில்லை. கருத்து கூட எழுதுவதில்லை. சீமான் எம் பின்னால் ஒழிந்து கொண்டு பெரியாரை, திராவிட கொள்கையை தாக்கும் போது, அது எமக்கு பாதகமானது என்பதால் சீமான் மீது தாக்குதல் நடக்கிறது. இரெண்டாவது கீழே உள்ள பதிலில்.
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
இதில் ஒரு பின்ணனியையும் நான் காணவில்லை. அப்படி ஏதும் பின்ணனியில் இயங்கினால் பெரியாரை பற்றி சீமான் முதலில் மோசமாக கதைக்க தொடங்கிய போதே எதிர்திருப்பார்கள். காலதாமதமாகவேனும் சீமான் முடிந்து விடும் சிண்டு எமக்கு எவ்வளவு பாதகமானது என்பதை கண்ட பின்பே இப்போ எதிர்கிறார்கள். ஈரோடு கிழக்கில் அல்ல அதற்கு முன்பே சீமான் பெரியாரை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்.
-
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
இது உண்மையில் வேலை செய்யுமா? சிலர் சொல்லிறார்கள் - பெற்றோல் மீளவும் நிரப்பிக்கு போய்விடுமாம், காரின் பெற்றோல் டாங்கில் நிரம்பாதாம். வீண் செலவு மட்டுமே என்று. அதனால் முன்பு குறைந்த விலை எண்டால் நானும் உப்பிடி ஆட்டுவதுண்டு, இப்போ நிறுத்தி விட்டேன்.
-
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்
ஒம்…இப்போதைக்கு இது conspiracy theory தான். சந்தர்ப சாட்சியம் கூட இல்லை. ஆனால் நடக்கும் ஒவ்வொரு விடயமும் இதை confirm பண்ணுவதாகவே என் மனதில் படுகிறது. தனியே நாடுகளை சீண்டுவது மட்டும் அல்ல. 1. காசாவை அமரிக்கா எடுக்கும் என்பது பற்றி இன்று சொன்னது - அமெரிக்க இஸ்லாமிய மோதலை இன்னும் கூர்மையாக்கும் 2. எப் பி ஐ முடக்கம் - பட்டேல் நியமனம் - நேரடியாக அமெரிக்க உள்ளக பாதுகாப்பை முடக்கும் செயல். 3. யூ எஸ் எயிட் முடக்கம் - அமெரிக்காவின் உதவி மூலம் உலக நல்லெண்ணத்தை வாங்கும் செயலுக்கு அடி. இலங்கையில் பல செயல்திட்டங்கள் மூடுவிழா காணும். கோவம் அமெரிக்கா மீதே போகும். உலக அளவில் இது நீண்டகால ராஜதந்திர பின்னடைவை தரும். அடுத்து அரச சேவையில் செலவீன குறைப்பு என ஸ்டேர்ட் டிபார்மெண்ட், சி ஐ ஏ யை முடக்குவார் மஸ்க் என நினைக்கிறேன். அதேபோல் நேட்டோ, ஈயூவை உடைக்கும் அல்லது பலமிழக்க செய்யும் நடவடிக்கைகள். நான் சொல்வதை ஒரு சதி கோட்பாடு என நானே ஏற்கிறேன். 4 வருடத்தில் ரஸ்யாவின் உலக ஆளுமை கூடி இருந்தால் நான் சொல்வது சரி, இல்லை எண்டால் பிழை. பிகு 4 வருடத்தின் பின்னும் பதவியில் தொடர டிரம்ப் விரும்புவார், முயல்வார் எனவும் நான் நினைக்கிறேன்.
-
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
டிரம்ப்பின் இந்த நடவடிக்கைகள் எல்லாமுமே smokescreen. அவர் அதிரடி காட்டப்போவது ரஸ்யா-ஐரோப்பா விடயத்தில்தான். அதற்கான முனோட்டமே கிரீன்லாந்து, கனடா, மெக்சிகோ மிரட்டல்கள்.
-
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்
அதுதான் அவருக்கு புட்டின் இட்ட கட்டளை.
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
உங்கள் வகுப்பில் மோகன் எனும் ஒரு பிரளிகாரர் படித்தாரா?
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
இது உண்மை கண்டறியும் வழி என நான் எப்போதும் கூறவில்லையே அண்ணை? முன்பே சொல்லி உள்ளேன் - இங்கே ஒரு அன்ரி வருவா - கருணாவுக்கு ஆதரவாக எழுதுவா - மிச்சம் எல்லாரையும் குறைசொல்லி விட்டு சாக்கோடு சாக்காக கருணாவின் அரசியலை முன் தள்ளுவா - அவவிடமும் அந்த விடயத்தில் சாக்குத்தான் என் பதில், இன்னுமொரு நல்ல தம்பி வருவார் - தேசிக்காய்கள், புரொக்சிகள் என்பார் ஆனால் - பிள்ளையான் கருணாவை முன் நிறுத்துவார் - இந்த விடயத்தில் என் அவர் சார்பான அணுகுமுறை சாக்குத்தான், இந்த இரெண்டு இடத்திலும் நான் எழுதியவை உங்களுக்கு இனித்தது. ஆனால் சீமான் விடயத்தில் அதே அணுகுமுறை கசக்கிறது. ஆனால் என் அணுகுமுறை எப்போதும் ஒன்றேதான். ஈழத்தமிழர்களின் நீண்டகால இருப்புக்கு - ஈழத்தில் வடக்கு, கிழக்கு என எம்மை பிரிப்பதும், இந்தியாவில் தமிழ்நாட்டு மக்களுக்கும் எமக்கும் சண்டையை மூட்டி விடுவதும் மிக ஆபத்தானது. இவ்விரு விடயங்களை யார் செய்தாலும், செய்வதை ஆதரித்தாலும் நானும், சாக்கும் தயாராகவே இருப்போம்.
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
இது ஒரு டெலிகேற் பொசிசன் அண்ணை… எல்லாரையிம் சாக்கில் போட கூடாது என்பது சரிதான், ஆனால் இதை பயன்படுத்தி கள்ளரும் சாக்கில் இருந்து தப்பி விடுவார்கள். ஆகவே இதற்கு நான் ஒரு பொறிமுறையை கண்டு பிடித்துள்ளேன். அதுதான் விடயம்-சார் அணுகுமுறை. Issue based approach. உதாரணமாக சீமான் ஆதரவு - என்பது விடயம். அதில் யார் சீமான்-ஆதரவு நிலை எடுத்தாலும் - முதலில் விளக்கி பார்ப்பது, இல்லை எண்டால் சாக்கில் போட்டு வெளுக்க வேண்டியதுதான்.
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
2009 முந்திய விடயங்கள் தவறாக எழுதபட்டால் அவை முடிந்தளவு திருத்தப்பட்டுள்ளன. நீங்களும் “நேரம் மிச்சம்” என லைக் போட்டுள்ளீர்கள். மே 2009 ற்கு பின் எனக்கே யார் கள்ளன், யார் நல்லவன் என தெரியாத நிலை -குறிப்பாக புலத்தின் முன்னைநாள் செயற்பாட்டாளர் இடையே. இதில் எவருக்காகவும் பேச முடியாத நிலையில்தான் என்னை போன்ற பொது மக்கள் உள்ளார்கள்.
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
எப்படி அதை கண்டு கொள்வது… யார் கள்ளன்…யார் நல்லவன் என தெரியாத அளவுக்கு…. குழப்பியடித்து வைத்துள்ளார்கள்…. ஒரு சிலரை நம்பிக்கையானவர் என நீங்களே எழுதினீர்கள்…பிறகு பார்த்தால் அவர்களே போலிகாவை முன் தள்ளிய கள்வர்கள் என தெரிய வருகிறது…. நீங்கள் முகத்தில் வழிந்த ஒரு லோடு சாணியை வழித்து விட்டு வெள்ளையிம் சொள்ளையுமாக வலம் வருகிறீர்கள். இதே களத்தில் போலிக்கா நேரம் பலர் உங்களையே சந்தேகப்பட்டு எழுதினரா இல்லையா? (நான் இன்றும் நீங்கள் மோசமானவர் என நம்பவில்லை, ஆனால் மிக மோசமாக நம்பி ஏமாறுபவர்). இப்படி ஒரு எவரையும் நம்பமுடியாத நிலையில் - நாம் எப்படி பரிதிக்காகவோ, குருதிக்காகவோ கதைக்க முடியும்? 2009 க்கு முன் நடந்த நிகழ்வுகளை திரித்தால், பொய்யாக எழுதினால் - அதை சுட்டலாம், சுட்டியுள்ளோம்.